Jump to content

தீபாவளிக்கும் EID MUBARAK (Fête de Mouton)ம் ஏதும் தொடர்புண்டா...??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்கள்  கொண்டாடும்

தீபாவளிக்கும்

இசுலாமியர்கள் கொண்டாடும் EID MUBARAK (Fête de Mouton) ஆடுவெட்டும் விழாவுக்கும் 

ஏதாவது  தொடர்புண்டா???

கிட்டத்தட்ட ஒரே மாதத்தில்  இரண்டும் வருகிறது....

 

 

 

 

images_1.jpgimages.jpgt_l_chargement.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இவர்கள் ஆட்டின்ர ரத்தத்தை மண்ணில விடுறாங்க,நாங்க வாயில விடுவம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! அவங்கள் ஓதி வெட்டுவாங்கள்!

நாங்கள் எண்ணைய் முழுக்குப் போட்டூட்டு வெட்டுவம் (தின்னுவம்).    :o  :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
 

10533316_10152395475902944_135302496699010153249_10152395476087944_4962109240049

 

மேற்குநாடுகளில் கொண்டாடப்படும்.. இருள் (பேய்) விலக்கும் பண்டிகையான ஹலோவினின் (Halloween)  இன்னொரு கீழத்தேய வடிவம் தான் தீப ஒளித் திருநாள். இரண்டும் ஒரே மாதத்தில்.. இருள் அதிகம் கவ்வும் மார்கழிக் (கார்) காலங்களில் வருவதும் இங்கு கூர்ந்து நோக்கப்பட வேண்டியது ஆகும்.

 

அந்த இருள் நீங்க.. ஒளி ஏற்றும் தீப ஒளித் திருநாளே.. தீப ஒளி.. தீபாவளி என்று மருவி வந்திருக்க வேண்டும்.

 

அதனை பிற்காலத்தில்.. தமிழர் விரோத ஆக்கிரமிப்புச் சக்திகள்.. உலகாண்ட தமிழர்களை எல்லாம் அரக்கர்களாக சித்தரித்து அவர்களை போரில் வென்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் விசேட தினங்களில் காரணம் சொல்லி.. இன்று அவை எல்லாம்.. இப்படி திருநாள் ஆகியுள்ளது. நாமே நம்மினத்தின் அழிவை அதன் உட்பொருள் அறியாது..மகிழ்ச்சியோடு அசுரக் கதை பேசி.. கொண்டாடிக் கொண்டும் இருக்கிறோம்.

 

இன்று சிங்களவர்கள் முன்னெடுக்கும்.. முள்ளிவாய்க்கால் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் கூட காலப்போக்கில்.. மே திருநாள் என்று எம்மவராலேயே கொண்டாட்டப்படும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!!

 

===================

 

இப்படி ஒரு தொடர்பிருக்கலாம்.. அப்படி இருக்க வாய்ப்புக் குறைவு..!! :):icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னமா யோசிக்கிறாங்கப்பா பெரிய விஞ்ஞானியாக வருவாங்களோ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வருகிற ஞாயிற்றுக்கிழமை நேரம் மாறுகிறது.அதாவது தற்போதைய நேரத்திலிருந்து 1 மணித்தியாலம் முன்னோக்கி(குறைத்து)வைக்கிறார்கள். ஏன் தெரியுமா? இது ஒக்ரோபர் மாதக்கடைசி.கார்காலம்(குளிர்காலம்) இந்த நேரத்தில் நேரத்துக்கு இருட்டி விடும்.(நாளை அமாவாசை வேற)இருட்டினால் என்ன செய்ய வேண்டும்?விளக்கு ஏற்ற வேண்டும்.ஒரு விளக்கை விட பல விளக்குகளை ஏற்றினால் வெளிச்சம் கூடுதலாக இருக்கும்.அதனை முன்பின்னாக வைத்தால் ஒன்றின் நிழல் மற்றையதின் மேல் விழும்.ஆகவே வரிiசையாக வைத்தால் அழகாககவும் இருக்கும். நிழல் பிரச்சனையும் இல்லை.தவுபம் என்றால் விளக்கு ஆவளி என்றால் வரிசை தீபங்களின் வரிசை தீபாவளி.இதையே தமிழர்கள் கார்த்திகை தீபம் எற்றி இருளை அகற்றுகிறார்கள்.மேற்குநாடுகளில் ஹலோவீன் என்று பூசணிக்காயை இடைவெளி விட்டு வெட்டி(காற்றுக்கு தீபம் அணையாமல் இருப்பதற்கு)தீபத்தை ஏற்றுகிறார்கள்..ஆக மொத்தம் இருளகற்றும் செயற்பாடுதான் இது.அதை விட்டு இராவணைனைக் கொன்றதற்கு என்று கொண்டாடுவது ம் நரகாசுரனைக் கொன்றதற்கு என்று கொண்டாடுவதும் அபத்தம்.நாளை முள்ளிவாய்க்காலில் அரக்கர்களை அழித்த நாள் என்று மே 19 ஐக் கொண்டாடுவார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்கள்  கொண்டாடும்

தீபாவளிக்கும்

இசுலாமியர்கள் கொண்டாடும் EID MUBARAK (Fête de Mouton) ஆடுவெட்டும் விழாவுக்கும் 

ஏதாவது  தொடர்புண்டா???

கிட்டத்தட்ட ஒரே மாதத்தில்  இரண்டும் வருகிறது....

 

 

இஸ்லாமிய நாட்காட்டி 354 நாட்களை கொண்டது. அதனால் அடுத்த ஆண்டு இதே நிகழ்வு கிட்டத்தட்ட 11 நாட்கள் முன்னே வந்துவிடும். தொடர்ந்து அவதானித்தால் எல்லாமாதங்களிலும் (கிரகோரியன் படி ) Eid வரும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.