• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • சனல் 4 இவ்வாறான ஒரு அணுகுமுறையை கொண்டே ' நோ ப்யர் சோன்' ஒளிப்பதிவை ஒரு முன்னைய சிங்கள இராணுவ வீரனுடன் இருந்து பெற்றது. அது உட்பட பல ஆவணங்களை ஆதாரபூர்வமாக ஐ.நா., மனித உரிமைகளை பேணும் குழுக்கள், அரச தலைவர்களுக்கு காட்டப்பட்டு இருந்தது.   யூதர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று தமிழரிடம் இல்லை.  
    • அதி தீவிர புலி எதிர்ப்பாரர்களும், அதி தீவிர புலி ஆதரவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். அவர்களால் தாயக மக்களுக்கு ஒரு சத பிரயோசனமில்லை .
    • இவர்கள் உண்மையிலேயே இவ்வாறு நம்பினால் இவர்கள் செய்ய வேண்டியதும் செய்திருக்க வேண்டியதும் முற்றிலும் வேறானவை. தமது பிள்ளைகளை கண்டுபிடிக்க, இவர்கள் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை புலம்பெயர்ந்த தமிழரின் பண ஆதரவுடனும், இலங்கையில் வேலை வாய்ப்பு தேடும் முன்னாள் புலனாய்வாளர் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பணத்துக்கு பெறத்தக்க அறிவு, தொழில் செயற்பாட்டுடனும் நிறுவி இருக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக தங்கள் பிள்ளைகளை மேற்படி நிறுவனத்தின் ஊடக ஒவ்வொருவராக முழுமையாக கவனம் செலுத்தி கண்டுபிடித்து இருக்கலாம். இப்படித்தான் யூதர்கள் இரெண்டாம் உலகயுத்தத்தின் பின் தம் உறவுகளை தேடினார்கள். இனியும் இவர்கள் இதை செய்யலாம். தமிழ் தேசிய அரசியலும் சிவாஜிலிங்கமும் இவர்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் அற்றவை.
    • அண்ணளவாக 68 மில்லியன்கள் உறவுகள் என்றும் ஈழமக்களுக்கு பலமாக உறவாக இருப்பார்கள். !
    • ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆறு மொழிகள் பேசும் திறன்கொண்ட ரோஹனி, 2017ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வரப்பட்டு சமூக தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், கடந்த அக்டோபர் 15ம் தேதி தற்கொலை செய்துகொண்ட அவரின் உடலை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு உதவ மறுப்பதாகக் கூறப்படுகின்றது. . “இது போன்ற பல விவகாரங்களில் ஆஸ்திரேலிய அரசு (உடலை ஒப்படைக்க) பங்களிப்பு செய்திருக்கிறது. ஆனால் இம்முறை இக்குடும்பத்திற்கு உதவ மறுக்கிறது,” என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல். “இது போன்று ஆஸ்திரேலிய அரசு நடந்து கொண்டு நான் பார்த்ததே இல்லை. கடந்த 10 பத்தாண்டுளில் குடிவரவுத்தடுப்பில் நடந்த பல மரணங்களை பார்த்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ள தேசிய நீதி திட்டத்தின் வழக்கறிஞர் ஜார்க் நியூஹவுஸ் இதை தரம்தாழ்ந்த நிலையாக எண்ணுகிறார். இந்த சூழலில், Refugee Action Coalition என்ற அகதிகள் நல அமைப்பு சார்பாக 15,000 டாலர்கள் சேகரிக்க விடுவிக்கப்பட்ட இணைய கோரிக்கையின் மூலம் 15,372 டாலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலம், அகதியின் உடல் ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தின் ஒப்படைக்கப்படும் என நம்பப்படுகின்றது. http://eelamurasu.com.au/?p=23063&fbclid=IwAR0JTWFpfhKuNgIYDJglPYeuLTsroQDupfScG0k5zmbICRL5Gja5SsYISi4