Jump to content

இவனை என்ன செய்யலாம் ??????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன்.

என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச் சென்று காதைக் கடித்தான். கணவர் தலையை ஆட்டிக்கொண்டு உமக்கு சாப்பாட்டுச் சாமான் ஏதும் வேணுமெண்டால் எடுத்துக்கொண்டு போட்டு பிறகு காசு தாரும். சிகரெட் கடனுக்குத் தரமாட்டன் என்று சொல்வது கேட்டது. என்ன என்று நான் கேட்க மனிசன் ஒன்றும் இல்லை என்றுவிட்டு முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.

அவன் ஒரு நிமிடம் நின்றுவிட்டுப் போய் விட்டான். பாவம் அவன் இண்டைக்கு மட்டும் குடுத்திருக்கலாம் என்றேன் நான் இரக்கத்துடன். ஏற்கனவே அவன் இருபது பவுன்ஸ் தரவேண்டும் என்று கணவர் கூற, ஏன் அவ்வளவு கடன் குடுத்தீர்கள் என நான் மனிசனைத் திட்டினேன்.

அவன் மாலை நேரம் வந்து வாங்கிவிட்டு அடுத்தநாள் கொண்டுவந்து தருகிறதால் அவனுக்குக் கொடுக்கிறனான். இப்ப இரண்டு வாரங்களாக திருப்பித் தரவில்லை என்றார். அப்ப இனிமேல் அவனுக்கு ஒன்றும் கடன் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கணவருக்குக் கூறிவிட்டுப் போய்விட்டேன். 

அதன் பின் ஆரம்பித்தது வினை. ஒவ்வொரு  நாளும் மாலையில் வந்து இரண்டு பியர்களை பணம் தராமல் எடுத்துக்கொண்டு போவது அவனது வாடிக்கையானது. கணவரும் அவனுக்கு எவ்வளவோ தன்மையாகச் சொல்லியும் அவன் கேட்காது தொடர்வதுமாக இருக்க ஒருநாள் நாம் பொலிசுக்குச் சொல்லப் போகிறோம் என்றதற்கு போலிஸ் என்னை என்ன செய்வான் என்று கூறியபடியே மீண்டும் இரண்டைத் தூக்கிக்கொண்டு செல்ல உடனே கணவர் போலிசுக்கு போன் செய்தார்.

பொலிஸ் ஆடிப்பாடி ஒரு மணி நேரம் கழிய வந்து விபரம் கேட்டு CCTV யில் அவனையும் பார்த்துவிட்டு தாம் அக்சன் எடுக்கிறோம் என்றுவிட்டுப் போனார்கள். அடுத்தநாளும் அவன் வர, நேற்றே நான் பொலிசுக்குச் சொல்லிவிட்டேன். தயவு செய்து கடைக்கு நீர் வரவேண்டாம் என்று கணவர் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

ஏற்கனவே, கஸ்டமர் களவெடுத்தாலும் நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது என்று பொலிஸ் சொன்னதாலும் எம்மூர் பெடியன் என்பதாலும்அவனைத் தடுக்கவும் முடியேல்லை. அப்பிடியிருந்தும் கணவர் ஒருநாள் அவனை மறிக்கப்போக அவன் கடைக்குள்ளேயே மனிசனோட சடுகுடு விளையாடத் தொடங்கீர்றான். சுத்திச் சுத்தி கடைக்குள்ள ஒடோட ஒவ்வொரு பொருளா எடுத்து பொக்கற்றுக்கை வச்சதுமில்லாமல் இப்ப என்ன செய்வியள் ஏன்டா கேள்வி வேற. மனிசன் அவனைக் கலைச்சபடி எனக்குப் போன் செய்து இவனை என்ன செய்யிறது எண்டு கேட்க கோவத்தில அடிச்சுக் கிடிச்சுப் போடாதேங்கோ என்றுவிட்டு நான் போலிசுக்கு அடிச்சால் வழமைபோல் பொலிஸ் வந்து கமராவைப் பார்த்துச் சிரிச்சும் போட்டு funny என்றுவிட்டு வீட்டு இலக்கத்தையும் கேட்டுக்கொண்டு போனதுதான். இனி பொலிஸ் அவனை உறுக்கி வைக்கும் எண்டு ஒரு நின்மதியில இருந்தால் திரும்பவும் இரண்டு நாளில அவன்.

இப்பிடியே அவன் வாறதும் இரண்டு பியரைத் தூக்கிறதும் அவன் போனபிறகு போலீஸ் வந்து சாட்டுக்குக் கதைச்சிட்டுப் போறதுமா நாலு மாதம் முடிஞ்சுது. அவன் யாலியா தன்பாட்டில் களவெடுத்துக் கொண்டு திரிய எனக்கு வந்த எரிச்சலில் அவனின் படத்தைப் பெரிதாக்கி கடையின் முன்கதவில ஒட்டி கள்ளன் கவனம் என்று ஆங்கிலத்தில் எழுதியும் விட்டன்.

வந்து பாத்தா மனிசன் உனக்கு என்ன விசரோ?? அவன் கல்லாலையோ அல்லது போத்திலாலையோ எறிஞ்சா கதவு போட நூறு இருநூறு ஆகும். பேசாமல் இரு என்றுவிட்டார். எல்லாமா பத்தாவதுதடவையும் அவன் வர நான் இந்தத் தடவை போலிசுக்கு போன் செய்யாமல் MP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான். உடன MP தான் போலீசுடன் கதைப்பதாகக் கூற ஒரு நின்மதி பிறந்தது.

அன்று மாலையே திரும்ப வாறான் பியருக்கு பொடியன். அவரின் காலத்துக்கு அன்று நான் கடையில் அவரைக் கண்டதும் உள்ள வராதை. வந்தியோ வீண் பிரச்சனை வரும் என்று நான் சொல்ல, ரண்டு பியர் தாங்கோ அக்கா என்று சுரனையின்றிக் கேட்பவனை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. தம்பி நாங்கள் ஏற்கனவே போலிசுக்கு உம்மைப் பற்றிச் சொல்லியாச்சு. உமக்கு நல்ல காலம் இன்னும் உம்மைப் பொலிஸ் பிடிக்கேல்லை. இதோட விட்டுவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே முன்னால கிடந்த யூஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டான். நான் உடன போலிசுக்கு போன் செய்து நீ ஒரு அக்சனும் எடுகாட்டில் நான் லோக்கல் பேப்பர்ல போடப் போறன் என்றுவிட்டு வைத்துவிட்டேன்.

நேற்று பொலிஸ் என் கணவரை கூப்பிட்டு அவனுக்கு எதிரா வழக்குப் போட சாட்சியாக விசாரித்து வாக்குமூலம் எடுத்ததன் பின்னர், அவனைக் கைது செய்திட்டம். இன்னும் இரண்டு நாளில் கோட்டுக்குக் கொண்டுவருவம் என்றும் சொன்னார்கள். இன்று காலை மீண்டும் பொலிஸ். என்ன என்று பார்த்தால்  தான் அவன் இல்லை என்று அவன் வீடியோச் சாட்சியையே இல்லை என்கிறான். நாளை நீயும் கோட்டுக்கு வா என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

இதுவே மற்றைய ஐரோப்பிய நாடுகள் என்றால் ஒருதடவை திருடிய உடனேயே தண்டப்பணம் அல்லது சிறை என்று கடுமையாக இருப்பதனால் களவுகளும் இப்பிடியான கொடுமைகளும் இல்லை. ஆனாலும் என்ன செய்து என்ன. இந்த நாட்டில் இருக்க வேண்டி இருக்கிறதே. நீங்களே சொல்லுங்கோ இவனை என்ன செய்யலாம் ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.

உங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே. :lol::D

அதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..??! நம்பவே முடியல்ல..! :D

Link to comment
Share on other sites

ரொம்ப நல்ல போலீஸ் ஆக இருக்கே லண்டன் போலீஸ் :lol: எதுக்கும் உங்கள் கடை முகவரியைம் இதில் போட்டு விடுங்கோ சுமோ :o:D  கள உறவுகள் பக்கத்தில் இருந்தால் வந்து அவர்களும் ஏதாவது எடுத்து போவார்கள் :D:lol: 

Link to comment
Share on other sites

பெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.

Link to comment
Share on other sites

இந்த வழக்கு சரிவராிட்டால் ஒரு தனியார் தடயவியல் நிறுவனத்தை நியமிக்கலாம். ஆள் வந்து போவதை அதி உயர் தரத்தில் படம் பிடிப்பதோடு கைரேகைகளையும் எடுக்க ஆவன செய்யலாம்.

அதை வழக்கில் பயன்படுத்தி ஓரளவுக்கு தீர்வு எடுக்கலாம். அதனோடு Restraining order பெறலாம் என நினைக்கிறேன். ஆனால் இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். :unsure:

அதுக்குப் பதிலா பெடிக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு பியரும், இனிப்பும் குடுத்து அனுப்பலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ. 

பிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும். 

உங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.
என்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல் :D

போலிசுக்கு போன் செய்யாமல் EP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான்.
ஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ
Link to comment
Share on other sites

பாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...

அக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ. 

பிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும். 

உங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை  :lol:

அட இது நல்ல ஐடியாவா இருக்கே

இது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.

உங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே. :lol::D

அதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..??! நம்பவே முடியல்ல..! :D

ஏன் இருபது பவுன்ஸ் காசில்லையோ ???? கடன் குடுப்பது என்னைப் பொறுத்தவரை தவறுகளை மீளும் செய்யத் தூண்டும் ஆதலால் நான் எவருக்கும் கடன் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை

பெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.

அவனுக்கு முப்பத்திரண்டு வயது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே...

ஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்

ஆனால் அவர்கள்  முதலாளிகள் அல்ல

இதைப்புரிந்து கொள்ளணும்

அவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...

இன்றைய  உங்களது நிலை இது தான்...

கடன் என்பது

தங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்

அத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்.. :(

என்ன  செய்யலாம் எனக்கேட்டிருப்பதால்...

ரொம்ப லேற்...

நீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க

அவன் உங்கள் பலவீனங்களை  கணக்கெடுத்துவிட்டான் :lol:

ஒரே ஒருவழிதான்

வெள்ளை வான்... :D

Link to comment
Share on other sites

நல்ல அனுபவம் சுமே .

ஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .

அத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க 

சதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல் :D

ஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ

எழுத்து மாறீட்டுது நான் என்ன செய்ய ???

பாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...

அக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ  :D

ஏற்கனவே சுப்பர் மாக்கற் ஒண்டில வேலை செய்து களவெடுத்தபடியால் நிப்பாட்டிப் போட்டாங்கள். உவனுக்கு நான் எப்பிடி சிபாரிசு செய்யிறது. ????

சுமே...

ஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்

ஆனால் அவர்கள்  முதலாளிகள் அல்ல

இதைப்புரிந்து கொள்ளணும்

அவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...

இன்றைய  உங்களது நிலை இது தான்...

கடன் என்பது

தங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்

அத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்.. :(

என்ன  செய்யலாம் எனக்கேட்டிருப்பதால்...

ரொம்ப லேற்...

நீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க

அவன் உங்கள் பலவீனங்களை  கணக்கெடுத்துவிட்டான் :lol:

ஒரே ஒருவழிதான்

வெள்ளை வான்... :D

உங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா :lol:

நல்ல அனுபவம் சுமே .

ஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .

அத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க 

சதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .

இன்று இரண்டு புதுக் கள்ளர். பத்துப் பவுன்ஸ் வைனை எடுத்துப்போட்டாங்கள். பினால விட்டுக் கலைச்சும் பயனில்லை. எங்கள் கடையில் வேலை  செய்யும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான் :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான் :lol:  :lol:

அதென்ன பியர் ???உடையார்  சொன்னாத்தானே தெரியும்.

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

உங்களிடம் இருந்தால் கொஞ்சம் கொண்டு வந்து தாங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ:Dஅவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும்:lol::lol:

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

நந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனையுமில்லை சகோதரி..! அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.

இதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.

உங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.

அந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.

அவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.

இனி அவன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

சிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...!  :)

Link to comment
Share on other sites

உங்களின் ஒரு கதையை வாசிக்க குடுங்கோ அவன் பிறகு கடைபக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டான் .

(பகிடிக்கு மட்டும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா :lol:

நாங்கள் எல்லைகடந்து

பயங்கரவாதம் செய்வதில்லை......

அங்கே  அர்யூன் அண்ணாவின் குரூப் ஏற்கனவே நிலை கொண்டுள்ளது..... :lol:

எனவே நாம் வரமுடியாது

அவருடன் தொடர்பு கொள்ளவும்..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ :Dஅவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும் :lol: :lol:

நந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம் :)

நீங்கள் சொல்லுற ஐடியாவில நான் கடையை சும்மா ஆருக்கன் குடுத்திட்டுப் போகவேண்டியதுதான் :lol:

ஒரு பிரச்சனையுமில்லை சகோதரி..! அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.

இதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.

உங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.

அந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.

அவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.

இனி அவன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

சிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...!  :)

எல்லாரும் என்னைப் பிச்சைப் பாத்திரம் ஏந்த வைக்கிறதிலேயே இருங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.

யாழ்கள வாசகன் எண்டா கண்டிப்பா என் கதையைக் குடுத்துடவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

யக்கோவ் எனக்கு ஒரு ஜடியா இருக்கு சொல்லட்டுங்களா

அவன் வர முந்தியே ..முழு பியரையும் நீங்க அடிச்சிட்டீங்கள் என்றால் அவன் வரும் பொழுது பியர் இருக்காது   நீங்களும் கம்பு

 மாதிரி நிற்ப்பீங்கள் ஒரு தெம்பு இருக்கும் ..

.உங்களது அந்த 

காளி உருத்திர தாண்டவத்தில் பார்த்தவன்....வந்த பாதையிலே திரும்பி

ஓடிடுவான் ...இனிமேல் கடை பக்கம் வரவே மாட்டான் ....யக்கோவ் எப்படி ஜடியா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதிய விதம் வழக்கம் போல நன்றாக உள்ளது..!

சம்பவத்தை நேரில் காண்பது போல ஒரு 'பிரமை'!

பாவம்... இரண்டு பியர் தானே, விட்டு விடுங்கள்...! :D

நாளைக்கு உங்கட கடைக்கு வேற யாராவது பிரச்சனை குடுத்தால், நீங்கள் போலிசுக்குப் போன் போடத் தேவையில்லை!

பொடியனிடம் ஒரு ' வார்த்தை' சொன்னால்... உங்கட கடைக்காக இல்லை.. குடிக்கிற பியருக்காகவாவது.. பிரச்சனை குடுக்கிற ஆட்களுக்கு எதிராக 'நடவடிக்கை' எடுப்பான்! :icon_idea:

லண்டன் போலிஸ்....  ஹா...ஹா... ! ( அனுபவத்தை நினைச்சுப்பார்த்தேன்... சிரிப்பு தன்ர பாட்டில வருகுது! :D )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.