Jump to content

யாழுக்கு சமர்ப்பிக்கின்றோம்.


Recommended Posts

10153713_10152396113007944_3553973248613

 

மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது.

 

காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல.

 

தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன் மூலம் தேனீக்களுக்கு அச்சப்படும் எதிரி விலங்குகள்.. இந்த ஈக்களையும் கண்டு அஞ்சுகின்றன..!!

 

இது Myathropa florea என்ற உயிரியல் பெயரும்.... Hoverfly என்ற பொதுப்பெயரும் கொண்ட ஈ வகையாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழில் இதற்குரிய பெயர் என்ன என்று தெரியவில்லை..! தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நல்லம்.

 

மேற்படி படத்தை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிளிக் செய்திருந்தோம். யாழுக்காக முகநூலுக்காக இயற்கையை படம் எடுக்கும் ஆர்வம் வரப்போய்த் தான்.. இந்த ஈயை அதன் இயல்புகளை அடையாளம் காண நேரிட்டது. அவற்றை சஞ்சிகைக்கு அனுப்பி வைக்கவும் முடிந்தது. அந்த வகையில்.. குறித்த சஞ்சிகை எமக்களித்த.. இந்த சிறிய ஊக்குவிப்பை.. யாழுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

குறித்த சஞ்சிகையில்.. தனிப்பட்ட விபரங்கள் பகிரப்படும் ஆதலால்.. மேலதிக விபரங்களை இங்கு பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

 

519742656_0b2323bc8e.jpg

 

(நிஜ தேனீ)

 

honey-bee-wallpapers-3.jpg

 

மேற்படி படத்தில் உள்ள ஈ. (வேறு ஒரு புகைப்பிடிப்பாளரால்.. பிடிக்கப்பட்ட படம்.)

 

உருவ அமைப்பில் தேனீயைப் போலவே தோற்றமளிக்கும் ஈ.

 

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா.மேலும் உங்கள் முயற்சிகள்,கண்டுபிடிப்புக்கள் தொடர வேண்டும். :)

Link to post
Share on other sites

இதனை கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது.ஏலவே இந்த வகை ஈக்கள் உலகெங்கும் அறியப்பட்டுள்ளன. இது தேனீக்களின் வீழ்ச்சியோடு.. மகரந்தச் சேர்க்கையில் செலுத்தும்.. முக்கியத்துவம்.. தேனீக்களின் பிரசன்னம்.. தோட்டங்களில் குறைந்துள்ளமையும்.. இந்த ஈக்கள் மீதான கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதும்.. தான் முக்கிய விடயம். மேலும்.. இந்த ஈ வழமையான இதே இன ஈகளில் இருந்து சிறிது வேறுபட்டுள்ளது. அதற்காக இதனை கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. ஒரு புதிய ஆதாரமாக.. அவதானிப்பாக.. மேலதிக ஆய்வுக்குரிய ஒன்றாக மட்டுமே கருத முடியும். :):icon_idea:

 

நன்றி யாயினி.. உங்கள் வாழ்த்துக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து & நன்றி ஸார்.

அந்த சஞ்சிகையைக் கண்டுபிடிச்சுருவம்ல :D

Link to post
Share on other sites

ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. இதை அப்பிடியே உங்கட கூட்டாளிகளுக்கும் சொல்லிடுங்க.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவியல் சஞ்சிகையில், பிரசுரிக்கப் பட இருக்கும் உங்கள் படத்துக்கும், உங்களுக்கும்... வாழ்த்துக்கள், நெடுக்ஸ். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நெடுக்காலபோவான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.

Link to post
Share on other sites

வாழ்த்துச் சொன்ன.. விருப்புச் சொன்ன எல்லா உறவுகளுக்கும் நன்றி. உங்களின் முன்னைய ஊக்குவிப்புக்களே.. இப்படி ஒன்றை செய்யத் தூண்டுதலாகவும் இருந்துள்ளது. :)

Link to post
Share on other sites

நன்றிகள் உடையார் அண்ணா மற்றும் கறுப்பி. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், நெடுக்கர்!

 

காலம் காலமாக அப்பிள் பழங்கள் பூமியை நோக்கி விழுந்தாலும், அதற்கு விளக்கம் கொடுக்க ஒரு நியூட்டன் தேவைப்பட்டது!

 

அது போல எத்தனை ஈக்களைக் கண்டு இளித்து விட்டுப் போய்க்கொண்டிருப்போம்!

 

அதை எடுத்துக்காட்ட எங்களுக்கு ஒரு நெடுக்கர் கட்டாயம் தேவை!

 

யாழுக்கான உங்கள் சமர்ப்பணத்தினால் 'யாழ்'அன்னை நிச்சயம் பூரிப்படைவாள்!! நன்றிகள்!

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள், நெடுக்கர்!

 

காலம் காலமாக அப்பிள் பழங்கள் பூமியை நோக்கி விழுந்தாலும், அதற்கு விளக்கம் கொடுக்க ஒரு நியூட்டன் தேவைப்பட்டது!

 

அது போல எத்தனை ஈக்களைக் கண்டு இளித்து விட்டுப் போய்க்கொண்டிருப்போம்!

 

அதை எடுத்துக்காட்ட எங்களுக்கு ஒரு நெடுக்கர் கட்டாயம் தேவை!

 

யாழுக்கான உங்கள் சமர்ப்பணத்தினால் 'யாழ்'அன்னை நிச்சயம் பூரிப்படைவாள்!! நன்றிகள்!

 

இந்த ஈக்களின் நல்ல பக்கம்..

 

1. இவை மகரந்த சேர்க்கைக்கு உதவுவது.

 

2. தேனீக்கள்.. குளவிகள் போன்று காணப்படுவதால்.. அவை சார்ந்து அச்சப்படும்.. பீடைகளை கட்டுப்படுத்த இந்த ஈக்களை பாவிக்க முடியும். (biological pest control)

 

3. இவற்றை ஒப்பீட்டளவில் இலகுவாக.. மரபணு மாற்று தொழில்முறைக்கு உட்படுத்தி இன்னும் வினைத்திறனாக விவசாய நோக்கங்களுக்கு பாவிக்க முடியும்.

 

பாதகப் பக்கம்..

 

1. இந்த ஈக்கள் மூலம் பரவக் கூடிய தாவர நோய்கள்.

 

2. மற்றும் இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் உள்ள புழு நிலையில்.. அவை பயிர்களையே சாப்பிட நேரிடலாம் என்பது.

 

இவை குறித்த ஆய்வுகள் செய்யப்படுதல் அவசியமாகிறது..!

 

தேனீக்களின் குடித்தொகை வீழ்ச்சி என்பது உலக அளவில் விவசாய உற்பத்திகளில்.. பழங்களின் உற்பத்தியில் பாதிப்பை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய  நிலையில்.. இந்த ஈக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. என்றால் மிகையாகாது..!

 

அதனால் தான்.. இந்தப் படத்துக்கு முக்கியம் அளித்திருக்க வேண்டும். மேலும்.. இந்த ஈ இதே வகை ஈக்களில் இருந்து சிறிது மாறுபட்டுள்ளது. இதனை.. அவற்றின் உப இனமாக (sub- species) அடையாளம் காண முடியுமா.. அல்லது இந்த வகை ஈக்களில் தொடர்ந்து ஏற்படும் இயற்கையான மரபணு மாற்ற நிலை இந்த மாற்றத்துக்குக் காரணமா என்று ஆராய வேண்டி உள்ளது.

 

அறிவியல் என்பது அவதானங்களில் இருந்தும்.. ஆதாரங்களில் இருந்தும்..எழும் வினாக்களுக்கு.. சரியான விளக்கத்தை.. விடையை தேடுவது என்பதாகும்..! அந்த வகையில்.. இந்தப் படம் பல வினாக்களுக்கு வித்திடுவதால் முக்கியம் பெறுகிறது என்று தான் கருதி இருக்கிறார்கள்...போல. :):icon_idea:

Link to post
Share on other sites

கருத்துக்கு நன்றி புங்கை அண்ணா. :)

Link to post
Share on other sites

நன்றிகள் நந்து அண்ணா மற்றும் அன்புத்தம்பி. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி

 

உங்கள் ஒவ்வொரு படியும் எமக்கானது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்......

Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

Link to post
Share on other sites

நெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. :icon_mrgreen: என்ன நெடுக்கு நான் சொல்லுறது.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கிடம் அம்பிடுகிறவை எல்லாரும் வேடதாரிகள்போலை.. :icon_mrgreen: என்ன நெடுக்கு நான் சொல்லுறது.. :D

 

 

சரி

எண்ணெய் ஊற்றியாச்சா.... :lol:  :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.   சசிகலா, தினகரன் என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.   சசிகலா அறிக்கை     TAGS   நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். அன்புடன் வி.கே சசிகலா” எனக் குறிப்பிட்டுள்ளார். `நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா அறிவிப்பு | sasikala says, she will exit from politics (vikatan.com)  
  • கவலையில்லாத மனிதன்               சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.               நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.               சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?               இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.               24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.               கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.               வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.                                                                                                      - சுப. சோமசுந்தரம்                           
  • நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.