Jump to content

கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல்


Recommended Posts

எனக்கென்னமோ இவ்வாறன நிகழ்வுகள் எல்லாம் அரசாங்கத்தினால் திட்டமிட்டு இல்லை கண்டும் காணததுபோல் நிகழ்த்தப்படுவனவோ  என்ற ஐயம் ஏற்படுவது உண்டு. அரசுகள் ஒரு புதுக் கொகையையோ / சட்டத்தையோ அறிமுகப்படுத்த, மக்களிடமும் சர்வதேச சமூகத்திடம் அதை ஒட்டிய ஒரு பொதுக் கருத்தை உருவாக்க இவ்வாறான  செயற்பாடுகளில் ஈடுபடுவது உண்டு. ஏனெனில் ஜனநாயகத்தில் நடப்பது எல்லாம் மக்களின் ஒப்புதலுடனே நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாகுவது ரொம்ப முக்கியம் அல்லவோ ??!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கு இப்படி இருந்தால் தான் தமிழர்களும் நாடாளுமன்றம்/ உள்ளூர் ஆட்சியமைப்புகளில் பிரதிநித்துவம் பெறமுடியும்.....இப்போது சொல்லுங்கள் அப்படி இருப்பது சரிதானே.......

 

முதலில்  நீங்கள் கனடா  பற்றி  பேசுகின்றீர்களா?

ஒவ்வொரு இனம் சார்ந்து பேசுகின்றீர்களா???

 

இவ்விரண்டும்

ஒரு பட்டிக்குள் இருக்கும் இரு கத்திகள்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடு நடாத்தியவர் மொன்றியலை சேர்ந்தவர் .இவர் கடந்த பத்துவருடங்களில் களவு ,கொள்ளை ,கஞ்சா கேசுகள் என்று பதின்மூன்று தடவைகள் பிடிபட்டவர் .இதில் பன்னிரண்டு கேசுகளில் குற்றவாளியாக காணப்பட்டவர்.ஒரு கொள்ளை கேசில் இருவருடங்கள் உள்ளே வேறு இருந்தவர் .

 

எனது நண்பர் ஒருவரை இந்தியாவில் சந்தித்தேன் .ஒரு சேரி போன்ற இடத்தில் வசித்துவந்தார். தமிழ்நாட்டுகாரர்களுக்கு எந்த வித அறிவும் இல்லை என்று குறைப்பட்டார்,அதில் அவர்களுக்கு ஆங்கிலம் வேறு தெரியாது என்று  சொன்னார் .அவர் பழகி வந்தது சேரி நண்பர்களுடனும் ஆட்டோகாரர்களுடன் தான் .

அவரில் பிழையில்லை அவரின் வட்டம் அந்த அளவுதான் .

 

அப்ப கனடா பொலிஸ் என்கவுண்டரில இவரை போட்டுதள்ளிட்டுதோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடு நடாத்தியவர் மொன்றியலை சேர்ந்தவர் .இவர் கடந்த பத்துவருடங்களில் களவு ,கொள்ளை ,கஞ்சா கேசுகள் என்று பதின்மூன்று தடவைகள் பிடிபட்டவர் .இதில் பன்னிரண்டு கேசுகளில் குற்றவாளியாக காணப்பட்டவர்.ஒரு கொள்ளை கேசில் இருவருடங்கள் உள்ளே வேறு இருந்தவர் .

 

எனது நண்பர் ஒருவரை இந்தியாவில் சந்தித்தேன் .ஒரு சேரி போன்ற இடத்தில் வசித்துவந்தார். தமிழ்நாட்டுகாரர்களுக்கு எந்த வித அறிவும் இல்லை என்று குறைப்பட்டார்,அதில் அவர்களுக்கு ஆங்கிலம் வேறு தெரியாது என்று  சொன்னார் .அவர் பழகி வந்தது சேரி நண்பர்களுடனும் ஆட்டோகாரர்களுடன் தான் .

அவரில் பிழையில்லை அவரின் வட்டம் அந்த அளவுதான் .

 

 

உங்களுக்கு மணி  கட்டிய  மாடு சொன்னால் புரியும்

இதோ

கோத்தபாய  சொல்வதைக்கேளுங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/147843-1980%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/

 

எனக்கொரு நண்பர் இருந்தவர்

நான்  எனது அப்பரின் கீழ் வளந்தனான் என்று சொன்னால்

அவர் தான்

ஒபாமாவால் வளர்க்கப்பட்டவன் என்பார்.......

Link to comment
Share on other sites

எந்த விடயத்தை இங்கு எடுத்தாலும் உன்னை விட எனக்கு அதிகம் தெரியும் என்று நிறுவுவதே சிலருடைய தேவையாய் போச்சு.

Link to comment
Share on other sites

யாருக்கு அதிகம் தெரியும் என்பதல்ல பிரச்சனை ,

 

பிற்போக்கான அல்லது பிழையான கருத்துக்கள் இருந்தால் சுட்டிக்காட்டத்தான் வேண்டும் .உதாரணத்திற்கு இந்த பதிவையே பாருங்கள் .

முதலில் எல்லோருமே செய்தியை தான் இணைத்தார்கள் .அதன் பின் வந்த பின்னோட்டம் இது .

 

"கனடாவின் வளர்ச்சியும்
ஆட்சேர்ப்பும்
கலப்பு மக்கள் கூட்டமும் 
என்றுமே கனடாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவை...
 
போகப்போகத்தெரியும்...... :(
இதை ஆரம்பத்திலேயே கிள்ளி  எறியாவிட்டால்.............? :("
 
முழு பிழையான பிற்போக்கான கருத்து .
அதன் பின்னர் பல பின்னூட்டங்கள் மீண்டும் அதே நபர் வைக்கும் கருத்து இது .
 
இந்த அனுபவத்தில் பார்க்கும் போது
கனடாவில் நான் பார்த்த கேட்ட அளவில்
அவரவர்  தத்தமது பகுதிகளை உருவாக்கி
அங்கே அரசியல் உட்பட எல்லாவற்றையும் தனித்தனியே  தொடங்கி
ஆட்சிகளையும்  தீர்மானிப்பவர்களாக வளர்ந்து
தற்பொழுது அந்தந்த இடங்களில் ஆட்சிகளை நடாத்துபவர்களாக வந்திருக்கிறார்கள்
 
இதேநிலை யேர்மனியில் சில இடங்களில் துருக்கி மக்கள் சார்ந்தும்
டென்மார்க்கில் இசுலாமியர்கள்  சார்ந்தும் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்....
டென்மார்க்கில்
அந்த பகுதிகளுக்கு காவல்துறையினர் செல்லமாட்டோம்
நாம் வேலைக்குத்தான் வந்தோம்
சாக அல்ல என ஒரு பேட்டியை  நானே பார்த்தேன்.......
ஒரு ஐம்பது வருடத்துக்குள்
டென்மார்க்
இசுலாமிய  நாடாக வாய்ப்புள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன....
 

இது அதை விட பிற்போக்கான கருத்து .மேற்குலகின் அரசியல் அடிப்படையே விளங்காமல் எழுந்தமானமாக எழுதகூடாது .புலம் பெயர்ந்து பெரு நகரங்களில் வசிக்கும் நாங்கள் அந்த நகரங்களை போலத்தான் முழு நாடும் இருக்கும் என்று நினைப்பதால் ஏற்படும் விளைவு .கனடா ,பிரான்ஸ் ,டென்மார்க் என்று எந்த நாட்டிற்கும் இது பொருந்தும் .டென்மார்க்கில்  தங்கள் அரசபரம்பரையை இப்பவும் உச்சத்தில் வைத்து தமது கலாச்சாரத்தை இறுக்கமாக கட்டிவைத்திருக்கும் ஒரு நாடு .இதற்குள் வந்து டென்மார்க் இஸ்லாமிய நாடாக வாய்ப்புள்ளதாக எழுதினால் அதை எப்படி பார்த்துக்கொண்டிருப்பது .அங்கு முஸ்லிம்கள் மூன்று வீதம் தான் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை புத்தகத்துக்குள்ள மட்டும் முகத்தை புதைப்பதால் இப்படித்தான்  எழுதுவார்..

80 களிலிருந்து இன்னும் வெளியில் வராதவர்

முற்பொக்கு

பிற்போக்கு என்று தான் புலம்புவார்

இதன் அர்த்தம் அவருக்கு மட்டுமே  வெளிச்சம்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.