Jump to content

அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்


Recommended Posts

அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்
 

 

download%2B(2).jpg
 
அமெரிக்காவில் உள்ள தென்  கரோலின பல்கலையில்
 
ஆய்வுக்குள்ளான 6  பாடல்கள்
 
அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு 
 
காண்க:-
 
 
 
திருமூலர்  இயற்றிய  திருமந்திரத்தில்,  பாயிரம்  துவங்கி  ஒன்பதாந்  தந்திரம் வரை  30047  பாடல்கள்  உள்ளன. நோயற்ற வாழ்விற்கு  வழி சொல்லும்  நூல். ஆணும்  பெண்ணும் எப்படியெப்படிச்  சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச்  சவால்  விடும் அற்புதத்  தமிழ்நூல்.ஆடிற்கு ஒரு  பாடல்வீதம்  பாடப்பட்டதாகவும், திருமூலர்  3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் சைவர்களின் நம்பிக்கை. பூலோக கைலாசமாம் திருவாடுதுறையில் ஜீவசமாதி அடந்தவர் திருமூலர்..  
 
 
 மூன்றாம் தந்திரமானது,  அட்டாங்க யோகம்,  இயமம்,  நியமம்,  ஆதனம்,  பிராணாயாமம்,  பிரத்தியாகாரம்,  தாரணை,  தியானம்,  சமாதி,  
 இயமம் ( தீது  அகற்றல் ),  நியமம் ( நன்றாற்றல் )  ஆதனம்  ( இருக்கை ) பிராணயாமம்  ( வளிநிலை )  பிரத்தியாகரம்  ( தொகைநிலை )  
 தாரணை  ( பொறைநிலை ) தியானம்  ( நினதல் )  சமாதி  ( நொசிப்பு ), அட்டமா சித்தி,  அணிமா ( நுண்மை )  இலகிமா ( மென்மை )  மகிமா ( பருமை )  
 பிராத்தி  ( விரும்பியது  எய்தல் )  கரிமா ( விண் தன்மை )  
 பிராகாமியம்  ( நிறைவுண்மை  ),  ஈசத்துவம்  (  ஆட்சியன்  ஆதல் )  
 வசித்துவம்  (  கவர்ச்சி  )  கலை  நிலை,  சரீர  சித்தி  உபாயம்,  காலச்  சக்கரம்,  ஆயுள்  பரீட்சை,    வார  சரம்  வார  சூலம்,  கேசரி  யோகம்,  பரியங்க  யோகம்,  அமுரி  தாரணை,  சந்திர  யோகம்,   என்ற  பகுதிகளைக் கொண்டு  திகழ்கின்றது.
 
 
இவ்வாறாக  மூன்றாம்  தந்திரத்தில்  பாடல்  எண்  549-ல்  துவங்கி  883 வரை    234  பாடல்கள்  உள்ளன.
 
 
அவற்றுள், 5.பிராணயாமம் பகுதியில், வருகின்ற பாடல்களில், வரிசை எண் 568  முதல்  573 வரை உள்ள  பாடல்களே  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்குக்க்காணம் ஓர் பழந்தமிழ்ப்பாடல் என்றும் ஆய்வர்  குறிப்பிட்டுள்ளனர். ஆனால்  அந்தப்பாடல்  எது  என்பதை  வெளிப்படுத்தவில்லை.  
 
இங்கு வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் எடுத்தாளப்பட்டுள்லது.
அதில் கடைசியாகக் குறிப்பிடும் பாடல் எண் 573 சில பதிப்புகளில் இடம்பெறவில்லை என்ற குறிப்பும்  கணப்படுகிறது.   
 
568.  ஏறுதல்  பூரகம்  ஈரெட்டு  வாமத்தால்  
 
        ஆறுதல்  கும்பம்  அறுபத்து  நாலதில்
 
         ஊறுதல்  முப்பத்து  இரண்டது  ரேசகம்
 
       மாறுதல்  ஒன்றின்கண்  வஞ்சகம்  ஆமே.- 3-ஆம் தந்திரத்தில் 5-ஆம் பாடல் 
 
 
569.  வளியினை  வாங்கி  வயத்தில்  அடக்கில்
 
         பளிங்கொத்துக்  காயம்  பழுக்கினும்  பஞ்சாம்
 
         தெளியக்  குருவின்  திருவருள்  பெற்றால்
 
         வளியினும்  வேட்டு  அளியனும்  ஆமே.  - 6- ஆம்  பாடல்
 
 
570.   எங்கே  இருக்கினும்  பூரி  இடத்திலே
 
           அங்கே  அதுசெய்ய  ஆக்கைக்கு  அழிவில்லை
 
           அங்கே  பிடித்துஅது  விட்டள  வும்செல்லச்
 
           சங்கே  குறிக்கத்  தலைவனும்  ஆமே.        -  7-ஆம்  பாடல்
 
 
571.    ஏற்றி  இறக்கி  இருக்காலும்  பூரிக்கும்
 
           காற்றைப்  பிடிக்கும்  கணகறி  வாரில்லை
 
           காற்றைப்  பிடிக்கும்  கணக்கறி  வாளர்க்குக்
 
           கூற்ற்றை  உதைக்கும்  குறியது  வாமே.     -  8-ஆம்  பாடல்
 
 
572.   மேல்கீழ்  நடுப்பக்கம்  மிக்குறப்  பூரித்துப்
 
          பாலாம்  இரேசகத்  தாலுட்   பதிவித்து
 
          மாலாகி  உந்தியுள்  கும்பித்து  வாங்கலே
 
          ஆலாலம்  உண்டான்  அருள்பெற  லாமே.  --- 9-ஆம்  பாடல்
 
 
573.   வாமத்தில்  ஈரெட்டு  மாத்திரை  பூரித்தே
 
          ஏமுற்ற  முப்பத்து  இரண்டும்  இரேசித்துக்
 
          காமுற்ற  பிங்கலைக்  கண்ணாக  இவ்விரண்டு
 
          ஓமத்தால்  எட்டெட்டுக்  கும்பிக்க  உண்மையே.  -- 10-ஆம்  பாடல்
 
 
அமெரிக்கப்  பல்கலைக்கழகம்  ஆய்வுக்கு  எடுத்துக்கொண்ட  6  பாடல்களை
,மேலே பார்த்தோம். 
 
பொருள் விளக்கம் :-
 
568.  பதினாறு  மாத்திரை  காலாளவு  இடப்பக்கமுள்ள  நாசித்  துவாரத்தில்  காற்றை  உள்ளுக்கு  இழுத்தால்  பூரகமாம்  அறுபத்துநான்கு  மாத்திரை  அளவு  இழுத்த  காற்றை  உள்ளே  நிறுத்தல்  கும்பகமாம்.  முப்பத்திரண்டு  மாத்திரை  காலஅளவு  வலப்பக்கம்  நாசித்துவாரத்தில் காற்றை  மெல்ல  விடுதல்  ரேசகமாம்.  முன்னே  சொல்லிய  முறைக்கு  மாறாக  வலப்பக்கம்  நாசித்  துவாரத்தில்  காற்றை  இழுத்து  நிறுத்தி  இடப்பக்கம்  நாசித்  துவாரத்தில்  விடுதல்  வஞ்சனையாம்.
 
569.  சாதகர்  காற்றை  இழுத்துத்  தன்  வயப்படுத்தி  அடக்கியிருந்தால்,  உடம்பு  பளிங்குபோன்று  மாசின்றித்  தூயதாய்  அது  முதுமை  எய்தினும்  இளமைத்  தன்மை  உண்டாகும்.  இதனைத்  தெளிய  குருவின்  அருளையும்  பெற்ருவிட்டால்  அவர்  உடம்பானது  காற்றைவிட  மென்மை  உடையதாகி ,  எங்கும்  செல்லும்  ஆற்றல்  பெற்று  மேன்மையடைவர்.
 
570.  நீ  எங்கே  இருந்தாலும்  இடப்பாக  நாசியாகிய  இடைகலை  வழியாகவே  பூரகம்  செய்வாயாக. அங்கே  அவ்வாறு  பூரிக்க  உடம்புக்கு  அழிவில்லை.  அங்கே  கும்பகம்  செய்து  அப்பிராணன்  செல்லும்  அளவு  மேற்செல்ல  சங்கநாதம்  உண்டாகி  மேன்மை  அடையலாம்.
 
571.  இடைகலை  பிங்கலை  வழியாக  இழுத்துப்  பூரித்து,  காற்றை  உள்லே  கும்பகம்  செய்யும்  முறையைத்  தெரிந்தவர்  இல்லை.  அவ்வாறு  காற்றைக்  கும்பகம்  செய்யும்  முறையைத்  தெரிந்தவர்  காலனைக்  கடக்கும்  இலட்சியத்தை  உடையவராவர்.
 
572.  முறையான  காற்று  தொண்டை  மூலாதாரம்,  விலா  ஆகியவற்றில்  நிரம்பும்படி  செய்து,  மறுபகுதியான  இரேசகத்தால்  ( விடுதலால் )  அவயவயங்களை  ஒன்றோடு  பதியும்படி  செய்து,  விருப்பத்தோடு  வ்பயிற்றில்  கும்பகம்  செய்து  இருக்கவே  திருநீலகண்டப்  பெருமான்  அருளைப்  பெறலாகும்.
 
573.  இடைகலை  வழியாகப்  பதினாறு  மாத்திரை  பூரகம்  செய்து,  விரும்பத்தக்க  பிங்கலையின்கண்  பாதுகாப்புற்ற  முப்பத்து  இரண்டு  மாத்திரை  இரேசகம்  செய்து,  ஒஊரித்தகும்  இரேசித்தலுமாகிய  வேள்வியால்  அறுபத்துநான்கு  மாத்திரை  கும்பகம்  செய்ய  உண்மை  விளையும்.
 
 
திருமூலர்  அருளிச்  செய்த  திருமந்திரம்,  சைவத்  திருத்தொண்டர்களால்  பத்தாம்  திருமுறையாகக்  கருதிப் போற்றப் படுகின்றது. மொத்தத் திருமுறைகள் 12.
 
12  திருமுறைகளையும் இராமானந்தா அடிகளார்  அறக்கட்டளையின்  தலைவராக,  நினைவில்வாழும்,  ‘அருட்செல்வர்’  டாக்டர்.  நா. மகாலிங்கம், பக்தி  வெள்ளம்  பரவுக  என்னும்  நோக்கோடு, முன்வெளியீட்டுத் திட்டத்தில், 1995,  1998 ஆகிய  ஆண்டுகளில்  வெளியிட்டார்.  வெளியிடும்  பொறுப்பினை   வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை- 600 017  ஏற்றுக்கொண்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர், வித்துவான்  M.  நாராயண  வேலுப்பிள்ளை  பதிப்பாசிரியராகத்  திகழ்ந்தார்.  அருட்செல்வரின்  அருட்திறத்தால், பன்னிரு திருமுறைகள் 24  தொகுதிகளாக  வெளிவந்தன. விலை ரூ.2500/-  மட்டுமே.
 
1998-இல்  வாங்கிய  நுல்களிலிருந்துதான்  மேற்படி  பாடல்களும் விளக்கமும் எடுத்தாளப்பட்டுள்ளன. எல்லோரும் நன்றிகள் பற்பல.
 
வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை-600 017. 
 
 
download%2B(4).jpg
 
திருமந்திர  நூலினைத்  தேடிப் படிக்கத்தூண்டிய
 
மேற்கண்ட
 
பல்கலைக் கழகத்தாருக்கு
 
மனமார்ந்த நன்றி.
 
.           
       பாடல்களைப் பற்றிய பதிவுக்கு நன்றி. சில திருத்தங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 
 
நான் ஆய்வுக்குப் பயன்படுத்திய பாடல்கள் இரண்டு. 568 மற்றும் 573. ஏனென்றால் இவை இரண்டிலும் குறிப்பிடப்படும் முறை ஒன்றே. பிராணாயாமத்தில் மொத்தம் 14 பாடல்கள் உண்டு. நான் 6 பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே ஒரு பயிற்சி மட்டுமே. அந்தப் பயிற்சி 568வது பாடலிலும் 573வது குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
//அவற்றுள், 5.பிராணயாமம் பகுதியில், வருகின்ற பாடல்களில், வரிசை எண் 568  முதல்  573 வரை உள்ள  பாடல்களே  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்குக்க்காணம் ஓர் பழந்தமிழ்ப்பாடல் என்றும் ஆய்வர்  குறிப்பிட்டுள்ளனர். ஆனால்  அந்தப்பாடல்  எது  என்பதை  வெளிப்படுத்தவில்லை//
 
- இவ்வாறு கூறியிருப்பதை நான் மேலே குறிப்பிட்ட உண்மையின் அடிப்படையில் தயவு செய்து மாற்றி எழுதவும். நான் மூலக் கட்டுரையிலும், செய்திக் குறிப்பிலும் 568 மற்றும் 573 என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 568 முதல் 573 என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் வசதிக்காகக் கீழே திருத்தியுள்ளேன். இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
//திருமந்திரத்தில் பிராணாயாமம் என்ற பகுதியில் 14 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் மூச்சுப் பயிற்சியின் பலன்களை வலியுறுத்துகின்றன. இவற்றுள் பாடல் எண்கள் 568 மற்றும் 573 ஆகிய இரண்டும் ஒரு பயிற்சி முறையைக் கூறுகின்றன. அப்பயிற்சி முறைகளைப் பின்பற்றியே இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.//
 
30047 அல்ல 3047. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம். உதாரணமாக - திருவாடுதுறை. 
 
தங்கள் அன்புக்கும், இதனைப் பரப்பத் தாங்கள் மேற்கொண்ட உழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி பல! 
 
அன்புடன்
பா.சு 
 

 http://kanichaaru.blogspot.in/2014/10/6.html#sthash.5V5oNdzY.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.