Jump to content

கத்தி சர்ச்சை ஓரிரவில் அடங்கியது எப்படி.. ராஜபக்சவும் படம் எடுக்கலாம் சம்பாதிக்கலாம்.. ஆனால் பெயர் போடக்கூடாது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
விஜய் ஏன் ஜெயலலிதாவுக்கு 
நன்றி சொன்னார் : சுப.வீரபாண்டியன் கேள்வி
 
vijay-%20%20jaya.jpg
 
சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடந்த ஓரிரு மாதங்களாகவே ஒரு 'கத்தி'ச் சண்டை இங்கு நடைபெற்றது. சண்டையின் முடிவில், சண்டையில் கலந்து கொள்ளவே இல்லாத ஒருவர் கழுத்தில் வெற்றி மாலை விழுந்தது. அத்துடன் படத்திற்கு 'சுபம்' போட்டு முடித்துவிட்டார்கள்! நாம் திரையில் பார்த்த கதை இது. திரைக்குப் பின்னால் நடந்த முழுக் கதையையும் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டு ரசிக்கலாம்.
 
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில். நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம், சுபாஷ்கரன் என்னும் ஈழத் தமிழரால் தயாரிக்கப்படுகிறது என்றாலும், அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. 'செந்தமிழன்' சீமான்தான் முதலில் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர், முருகதாசும், விஜய்யும் தமிழர்கள் என்பதைக் கண்டுபிடித்து, தான் சண்டைக்கு வருவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
 
சீமான் எதிர்க்கவில்லை என்றால் படம் வெளிவந்துவிடுமா என்ன, இதோ நான் இருக்கிறேன் என்று எழுந்தார் பண்ருட்டி வேல்முருகன். அவர், தனியரசு, பூவை மூர்த்தி என ஆளும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து, தமிழ் அமைப்பினர் பலரையும் இணைத்து, 'தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு' என உருவாக்கி, கத்தியை முறித்துப் போட்டுவிட்டுத்தான் ஓய்வோம் என்றார்கள். பெரும் கத்திச் சண்டை நடக்கப் போகிறது, என்ன ஆகுமோ என்று பார்வையாளர்கள் பயந்துகொண்டே படம் பார்த்தார்கள்.
 
இதில் ஒரு நகைச்சுவைக் காட்சியும் தொடர்ந்து இடம்பெற்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான ராஜபக்ஷே ஆதரவாளர் சுபாஷ்கரன் என்பதால் அவர் தயாரிக்கும் படத்தை எதிர்க்கிறோம் என்றனர் நம் நண்பர்கள். ஆனால் ஈழத் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் சுபாஷ்கரன் மற்றும் அவரது லைக்கா நிறுவனத்தை எதிர்க்கவில்லை.
 
 ராஜபக்ஷேவுடன் உறவு வைத்திருந்தாலும் லைக்கா நிறுவனம் எங்களுக்கும் உதவியாகத்தான் இருக்கிறது என்கின்றனர் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். உண்மைதான்....அங்கிருந்து வெளிவரும் பல தமிழ் இதழ்களில் லைக்கா நிறுவன விளம்பரத்தை நான் பார்த்துள்ளேன். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களில் மிகப்பலர் லைக்கா நிறுவனத் தொலைபேசியைத் தான் பயன்படுத்து கிறார்கள். அண்மையில், அக்டோபர் முதல் வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற ஈழத் தமிழர்களின் கருத்தரங்கிற்கு விளம்பரதாரரும் (ஸ்பொன்சர் ) லைக்கா நிறுவனம்தான். ஆக, அவர் ராஜபக்ஷே, ஈழத் தமிழர்கள் எல்லோருக்கும் நல்லவர். இப்போது தமிழ்நாட்டுத் தமிழ் அமைப்புகளுக்கும் நல்லவராகி விட்டார்.
 
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எப்படி திடீரென்று தீபாவளிக்கு முதல் இரவு சமாதானம் அடைந்து, படம் வெளிவர இசைந்தது என்பது ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பானது.
 
தீபாவளிக்கு முதல் நாள் கூட, கூட்டமைப்பின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் காரசாரமாக ஒரு அறிக்கை விட்டார். அதில் சில ரகசியங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சுபாஷ்கரன் என்பவர் ராஜபக்சேவுக்கு வேண்டியவர் மட்டுமில்லை, லைக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹேஷ்டிங்ஸ் 2007 ஆம் ஆண்டே, ராஜபக்ஷேவின் அக்கா மகன் ஹிமல் லீலந்திர என்பவருக்கு விற்கப்பட்டுவிட்டது. அதனால், லைக்கா நிறுவனமே ராஜபக்சேவுடையதுதான். இந்த உண்மையை வெளியிட்ட காரணத்தால்தான் சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் வசந்த விக்கிரம துங்க படுகொலை செய்யப்பட்டார் என்கிறார் வேல்முருகன். அது மட்டுமல்லாமல் தமிழர்களாலும், தமிழக அரசினாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட காமன்வெல்த் மாநாட்டின் தங்க விளம்பரதாரரே சுபாஷ்கரந்தான் என்பதால், "கத்தி படத் தயாரிப்பிலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறும்வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்று திட்டவட்டமாக அவர் தன் அறிக்கையில் கூறியிருந்தார். வேல்முருகனின் உறுதி கண்டு நாடே புல்லரித்துப் போயிற்று.
 
அது மட்டுமின்றி,அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் "கத்தி படத்தை எதிர்த்து, எந்த வன்முறைக்கும் இடம் தராமல், அற வழியில் போராட வேண்டும்" என்றும் மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அன்று இரவே, சென்னையின் மைய்யப் பகுதில் உள்ள சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய இரண்டு திரையரங்குகளிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கண்ணா டிகள் உடைக்கப்பட்டன. தீபாவளி வெடி என்று நினைத்தோ என்னவோ காவல்துறையினரும் அமைதியாக இருந்துவிட்டனர்.
 
தாடியை வைத்திருப்பதா, எடுத்து விடுவதா என்ற கவலையில் மூழ்கியிருந்ததால், தமிழக அமைச்சர்களும் கத்திச் சண்டையில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையில், தே.மு.தி.க. அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் (தமிழ்த் திரைப்படத் துறையில் தொடர்புள்ளவர்கள்) வேல்முருகனிடம் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்ததாகச் சில 'விவரம் இல்லாதவர்கள்' கூறினார்கள். அது ஏதாவது உலக நாடுகள் பிரச்சினை குறித்ததாக இருக்கும், கத்தி பற்றியா அவர்கள் பேசப் போகிறார்கள் என்று பார்வையாளர்கள் எண்ணிக்கொண்டனர்.
 
ஆனால் திடீரென்று தீபாவளிக்கு முதல்நாள் இரவில் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது. படத்தின் 'டைட்டிலில்' லைக்கா நிறுவனம் பெயர் போடுவதில்லை என்று ஒப்பந்தம் ஆகிவிட்டதாம். போராட்டக் குழு தன் போராட்டத்தைக் கைவிட்டு விட்டது. அந்தப் படத்தைத் தயாரித்தது யார் என்று உலகுக்கெல்லாம் தெரியும் ஆனால் அந்த ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று போராட்டக் குழு கேட்டுக் கொள்ள, லைக்காவும் அதனை ஏற்றுக் கொண்டு விட்டது. வேறென்ன வேண்டும்? அந்தப் படத்தில் வரும் லாபம் எல்லாம் அந்த நிறுவனத்திற்குத்தான் போய்ச் சேரும். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. பெயர் போடக் கூடாது என்பதுதான் நமது லட்சியம்.
 
இதனை சாதாரணமாகக் கருதாதீர்கள், இது ஒரு அடையாள வெற்றி என்று தொலைக் காட்சியில் தியாகு சொல்லிவிட்டார். காரல் மாக்ஸின் மூலதனத்தையே மொழிபெயர்த்தவர் சொல்லிவிட்ட பிறகு, எதிர்த்துப் பேச நமக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?
 
இந்த கட்டத்தில்தான், புரியாத புதிராக ஒரு செய்தி வந்தது. அதுதான் கத்திச் சண்டைப் படத்தின் உச்சகட்டம். நடிகர் விஜய் "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்றி" என்று ஒரு அறிக்கை விட்டார். அம்மாவுக்கும், நடைபெற்ற கத்திச் சண்டைக்கும் என்ன தொடர்பு? ஏன் அம்மாவுக்கு அவர் நன்றி சொல்கிறார்? எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள். இது எங்கள் அம்மா குதிருக்குள் இல்லை என்பது போல் இருக்கிறதே என்று தோன்றிற்று.
 
தோழர் தியாகுவுக்குத் தொலைபேசியில் என் ஐயத்தைக் கேட்டேன். உலகச் செய்திகள் எதைப் பற்றிக் கேட்டாலும் உடனே விடை சொல்லக் கூடிய அவர், ' அவர் ஏன் அம்மாவுக்கு வாழ்த்து சொன்னார் என்று எனக்கும் தெரியவில்லை" என்று கூறிவிட்டார் ‘அப்பாவி' தியாகு.
 
சரி போகட்டும்......எல்லாம் 'நல்லபடியாக' முடிந்துவிட்டது. கத்தி கடைசியில் யாரையுமே குத்தவில்லை. எல்லோரும் 'உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி'யைக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
 
இருப்பினும் ஒரே ஒரு எச்சரிக்கையுடன் இந்தக் கட்டுரையை முடிக்க வேண்டியுள்ளது. ராஜபக்ஷே உள்பட யார் வேண்டுமானாலும் இங்கு படம் எடுக்கலாம், பணம் சம்பாதிக்கலாம். ஆனால் பெயரை மட்டும் போடவே கூடாது. மீறிப் பெயர் போட்டால், 150க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் மீண்டும் 'அற வழியில்' போராடும்’’என்று தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

ஏன் மாணவர் அமைப்பும் அடங்கிவிட்டது??

Link to comment
Share on other sites

இந்த கட்டுரையில் புதிதாய் என்ன இருக்கிறது ? ஊருக்கே தெரிந்த விசயத்தை திரும்ப ஒப்பாரி வைத்துள்ளார் தன் இருப்பை காட்டி கொள்ள கட்டுரை எழுதியவர். உணர்வுள்ளவர்கள் பார்க்காமலிருக்கட்டும், உணர்வில்லாதவர்கள் பார்க்கட்டும், பிழைக்க தெரிந்தவர்கள் அரசியல் செய்யட்டும், வேறென்ன செய்ய இருக்கு இதில்....

சரியான பார்வை

பொது நலன் சார்ந்த பொறுப்பான கருத்து

நன்றி  தம்பி..............

Link to comment
Share on other sites

இந்த கட்டுரையில் புதிதாய் என்ன இருக்கிறது ? ஊருக்கே தெரிந்த விசயத்தை திரும்ப ஒப்பாரி வைத்துள்ளார் தன் இருப்பை காட்டி கொள்ள கட்டுரை எழுதியவர். உணர்வுள்ளவர்கள் பார்க்காமலிருக்கட்டும், உணர்வில்லாதவர்கள் பார்க்கட்டும், பிழைக்க தெரிந்தவர்கள் அரசியல் செய்யட்டும், வேறென்ன செய்ய இருக்கு இதில்....

ராஜன் விஷ்வா,

தமிழகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக கத்தி ஓடிக்கொண்டு இருக்கின்றது.  முன்பதிவு செய்து பார்க்கின்றனர் இங்கு. இவ்வாறு 'கத்தி' பார்க்கின்ற அனைவரையும் உணர்வில்லாதவர்கள் என்று சொல்கின்றீர்களா? (நான் விஜய் / அஜித் வகையறாக்களின் படங்களை அரங்கம் சென்று பார்ப்பதில்லை என்பதால் இப்படத்தினை அரங்கம் சென்று பார்க்கும் எண்ணம் இல்லை)

இங்கு பிழைக்கத் தெரிந்தவர்களின் அரசியலாக கத்தி படத்தினை எதிர்த்தவர்களின் அரசியலையே கருதுகின்றேன். அதுவும், லைகா பெயர் அகற்றிய பின் படத்தினை வெளிவிடுவதில் தவறில்லை என்ற அவர்களின் முடிவு ஒன்றே போதும் இவர்கள் எந்தளவுக்கு நேர்மையாக போராடியிருக்கின்றார்கள் என்று அறிய. இறுதி வரைக்கும் எதிர்த்தும் தம்மால் பணமும் அதிகாரமும் கொண்ட பெரும் சக்திகளை மீறி வெற்றியடைய முடியவில்லை என்று ஒத்துக் கொண்டு இருந்திருந்தால் அவர்கள் மேல் மதிப்பும் நம்பிக்கையும் வந்து இருக்கும்.

இவர்களின் இச் செயல்களால் ஈழத்தமிழர்களின் மீது அக்கறை கொண்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழக மக்களையும் இழக்க வேண்டித்தான் வரும்.

சுபவீ யின் கட்டுரை மிகவும் சரியானதாகத் தான் எனக்கு தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி அண்ணா,

இங்கு கத்தி படத்தை எதிர்த்தவர்களை தான் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் எதிர்த்திருக்காவிடில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த கட்டுரையின் தலைப்பே ஒரிரவில் என்ன நடந்ததென்று. ஆனால் அதுபற்றிய தகவல் துளியுமில்லை. ஆரம்ப முதல் படம் வெளியானது வரை திரும்ப மீள் பதிவு செய்தியாகவே உள்ளது. இந்த கட்டுரை உரியவர்களுக்கு சென்று சேருமானால் எனக்கும் மகிழ்ச்சியே.

கத்தி படத்தில் பலரின் சாயம் வெளுத்து விட்டது. சீமான் விஜய் வேல்முருகன் ஐங்கரன் லைக்காகாரன் என.

ஏன் இவ்வளவு பிரச்சனை நடந்தபோது மெளனமாக இருந்த விஜய் பிரச்சனைகள் முடிந்ததும் நன்றி தெரிவித்து அறிக்கை விடுகிறார். எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி. கத்தி வெளியாகிருக்காவிடில் முருகதாஸ் விஜயின் பிழைப்பில் மண் விழுந்திருக்குமா என்ன?

முதல் நாளே படத்திற்கு சீட்டு எடுத்து அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அவர்களின் அறியாமையையும் சினிமா மாயையையும் குறை கூற இயலாது. எல்லாம் தெரிந்தும் போவோரைத்தான் உணர்வில்லாதவர் என்றேன். இதில் தொட்டதுற்கெல்லாம் தமிழ்நாட்டிலுள்ளவர்களை குறை கூறுகிறார்கள் இணைய வெளிகளில். தெரிகிறது தானே தமிழ்நாட்டில் ஈழத்தை அரசியல் செய்கிறார்களென்று ஒரு மாற்று தெரிவுகளை உருவாக்ககூடிய கூறுகளை முன்னெடுக்கிறார்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வை போலி அரசியல்வாதிகள் அணுகி லாபமடைந்து கொள்ளும் போது உரியவர்கள் ஏன் அதை அணுக கூடாது?

Link to comment
Share on other sites

ஏன் மாணவர் அமைப்பும் அடங்கிவிட்டது??

மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக முகநூலில் பார்த்திருந்தேன்.

Link to comment
Share on other sites

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் 147,148,341,294(b) IPC மற்றும் TNDPP(DL) ACT 1984 ஆகிய பிரிவுகளில்

சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Thirumurugan Gandhi

(Facebook)

Link to comment
Share on other sites

  • 11 months later...

விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படம் திரைக்கு வரும் முன்னர் ஏகப்பட்ட சர்ச்சையை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே..
.
தமிழ் அமைப்புகள் கிட்டத்தட்ட 234 அமைப்புகள் கத்தி படம் இலங்கையில் உள்ள தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது எனவும் மேலும் படத்தை திரையிட கூடாது என பெரும் போராட்டம் நடத்தினர்..
.
அப்போது தமிழ் அமைப்புகள் கூறியதாவது : தமிழ் உணர்வோடு உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றினைவோம் கத்தி தடைசெய்ய வேண்டிய படம் படத்திலிருந்து 1 ரூபாய் கூட இலங்கைதயாரிப்பாளர்கள­­ுக்கு போககூடாது என்றனர்.மேலும் அவர்கள் நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லை எனவும் லைகாவை மட்டும் எதிர்ப்பதாக கூறினர்.
.
ஆனால் ஆரம்பம்.அஜித் படத்தை வெளியிட்டதும் லைகாதான்..சேரன் நடிப்பில் வெளிவந்த பிரிவோம் சந்திப்போம் படத்தை வெளியிட்டதும் லைகாதான் இப்போது விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரெளடிதான் படம் indru ரிலிஸ் ஆக உள்ள அதுவும் லைகா வெளியீடுதான்..
.
ஒரு சராசரி மனிதனாக கேட்கிறேன் இப்போது தமிழ் உணர்விலே ஊ றிய 234 அமைப்புகள் இப்போது எங்கே சென்றுவிட்டன? இப்போத லைகாு வெளியிடும் படத்தை ஏன் தடைசெய்யவில்லை ? போராடவில்லை?
.
இப்போது 234 அமைப்பின் தமிழ் உணர்வு எங்கே? விஜய் ஒரு தமிழர் என்பதை மறந்து இலங்கையில் அப்பாவி.தமிழ்மக்கள் கொல்லப்பட்ட.போது ஒன்று கூடாத கூட்டம் கத்தி படத்தை மட்டும் எதிர்த்தது ஏன்?
.
ஒன்றுமட்டும் கூறுகிறேன் தமிழ் என வார்த்தையில் மட்டும் கூறிக்கொண்டு தமிழனயும் தமிழயும் இழிவுபடுத்தாதீர்கள்.­­.இதனை அனைத்து குருப்புகளுக்கும் பகிர்ந்துகொள்ளவும்..­­.

வணக்கம் நிழலி அண்ணா,

இங்கு கத்தி படத்தை எதிர்த்தவர்களை தான் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் எதிர்த்திருக்காவிடில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த கட்டுரையின் தலைப்பே ஒரிரவில் என்ன நடந்ததென்று. ஆனால் அதுபற்றிய தகவல் துளியுமில்லை. ஆரம்ப முதல் படம் வெளியானது வரை திரும்ப மீள் பதிவு செய்தியாகவே உள்ளது. இந்த கட்டுரை உரியவர்களுக்கு சென்று சேருமானால் எனக்கும் மகிழ்ச்சியே.

கத்தி படத்தில் பலரின் சாயம் வெளுத்து விட்டது. சீமான் விஜய் வேல்முருகன் ஐங்கரன் லைக்காகாரன் என.

ஏன் இவ்வளவு பிரச்சனை நடந்தபோது மெளனமாக இருந்த விஜய் பிரச்சனைகள் முடிந்ததும் நன்றி தெரிவித்து அறிக்கை விடுகிறார். எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி. கத்தி வெளியாகிருக்காவிடில் முருகதாஸ் விஜயின் பிழைப்பில் மண் விழுந்திருக்குமா என்ன?

முதல் நாளே படத்திற்கு சீட்டு எடுத்து அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அவர்களின் அறியாமையையும் சினிமா மாயையையும் குறை கூற இயலாது. எல்லாம் தெரிந்தும் போவோரைத்தான் உணர்வில்லாதவர் என்றேன். இதில் தொட்டதுற்கெல்லாம் தமிழ்நாட்டிலுள்ளவர்களை குறை கூறுகிறார்கள் இணைய வெளிகளில். தெரிகிறது தானே தமிழ்நாட்டில் ஈழத்தை அரசியல் செய்கிறார்களென்று ஒரு மாற்று தெரிவுகளை உருவாக்ககூடிய கூறுகளை முன்னெடுக்கிறார்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வை போலி அரசியல்வாதிகள் அணுகி லாபமடைந்து கொள்ளும் போது உரியவர்கள் ஏன் அதை அணுக கூடாது?

ஊளையிட்ட நரிகள் எங்கே/??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினித், படம் தயாரிப்பதற்கும் வெளியிடுவதற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

கத்தி லைக்காவின் நேரடி சொந்தப் படம் அந்த நேரத்தில் கத்தி வெளிவராமல் இருந்திருக்குமானால் நட்டம் லைக்காவிற்கே. ( எதிர் பார்த்தளவு இலாபம் வரவில்லை என்றே லைக்காவின் உள் தகவல்)

லைக்கா படம் வெளியிடுகிறது எனில் ஏனைய இந்திய வெளியீட்டார்களை விட அதிக விலைக்கே அந்த படத்தை வாங்குகிறது. இலாபம் இந்தியர்களுக்கே. ( லைக்காவிற்கும் கறுப்பை வெள்ளையாக்க வேண்டிய தேவை உள்ளது) 

லைக்கா மகி உறவு  2012(?) இற்கு பின்னர் பிரிவோம் சந்திப்போம் வெளிவந்தது 2008.

எந்திரன் படத்தை தயாரித்த ஐங்கரன் இடையில் கைவிட காரணம் புலிகளின் பணம் என்ற அழுத்தம். 2009 வரையும் புலி புராணம் பாடிய ஐங்கரன் 2010 இல் மகி புராணம் பாடினர். 

Link to comment
Share on other sites

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

சிங்கள மக்களுக்கு நாட்டின் பாதுகாலவனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பாசிட் ராஜபக்ச தமிழ் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மில்லியன்களைக் கொள்ளையடித்தார். இங்கே தான் சாதாரணமானவனின் கலர்க் கனவுகளில் வந்துபோகும் காட்சிகள் இடம்பெற்றன.

கங்லே, முரளிதரன், சுபாஸ், சிவசாமி
கங்லே, முரளிதரன், சுபாஸ், சிவசாமி

தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என சோக கீதம் இசைக்கும் நமது இனக்கொலைக் கலாநிதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தின் சகோதரர்களை மட்டும் அதிகாரத்தில் வைத்திருக்கவில்லை. ஒன்றுவிட்ட சகோதரர், இராண்டாம் மச்சான், மூன்றாம் மருமகன் என்று ஒரு பட்டாளமே இணைந்து இலங்கைத் தீவைக் கொள்ளையடிக்கிறது. அண்மையில் ஒரு நிகழ்வில் சமூகச் செயற்பாடாளர் சுகி என்ற தமிழ்ப் பெண் சிங்களப் பெண் ஒருவருடன் பேசும் காணொளியில் இலங்கை என்ற அழகான தீவில் ஏன் இவ்வளவு குத்துவெட்டுக்கள் என துயர்படிருந்தார்.

அந்தத் துயரத்தின் உச்சம் ராஜபக்ச என்றால், அதன் பங்குதாரர்கள் லைக்கா போன்ற பல தமிழ் நிறுவனங்களும் தேசியத் தமிழர்களும் கூடத்தான்.

லைக்கா திரைப்படத்திற்கு நமது இளைய தளபதி விஜய் கதாநாயகன் போல மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்களில் ஒருவரான லலிந்ரா ஹெட்டியாராய்ச்சி என்பவர் தான் லைக்கா ‘கதையாடல்களின்’ தளபதி.

WiMax (Worldwide Interoperability for Microwave Access) என்பது கைத் தொலைபேசியிலிருந்து இன்டர்னெட் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில் நுட்பம்.

இத்தொழில் நுட்பம் வெளியான போது உலகின் பல நாடுகளின் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மில்லியன்கள் செலவழித்து தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றுகொண்டன.

அவ்வாறு ஒப்பந்ததைப் பெற்றுக்கொள்வதற்கு நாடுகளின் தொலைபேசி ஒழுங்கமைப்பு நிறுவனம் (regulatory authority) அனுமதி வழங்க்க வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவில் பில்லியன் பெறுமதியான ஊழல் நடைபெற்றது தெரிந்ததே.

இதே ஊழல் இலங்கையில் லைக்காவும் இலங்கை அரச பாசிஸ்டுக்களும் கூட்டிணைந்து காதும் காதும் வைத்தமாதிரி நடத்தப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் ஏகதிபத்திய சார்பு அரசாங்கம் 150 வருட வரலாறுகொண்ட அரச நிறுவனமான சிறீ லங்கா ரெலிகொம் இன் பங்குகளை வெளி நாட்டுப் பல்தேசிய நிறுவனத்திற்கு விற்றது. வாங்கியவரோ ராஜபக்சவின் பரம எதிரி  இனமான தமிழ் இனத்தைச் சேர்ந்த மலேசியர்.  அவரது நிறுவனம் 55 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்ள மிகுதி 45 வீதம் சிறீ லங்கா ரெலிகொம்மிடம் இருந்தது. அதில் 50 வீதம் அரசிற்குச் சொந்தமானது.

தமிழன் என்றால் தனியான ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் என்ற அடிப்படையில் அணுகும் தமிழ் உணர்வாளர்களும் இனவாதிகளும் இவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

எது எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தின் பொன்முட்டை போடும் வாத்துக்களில் சிறீ லங்கா ரெலிக்கொம் உம் ஒன்று. இலங்கையில் ரெலிக்கொம் ஒழுங்குபடுத்தும் சேவை (Telecommunications Regulatory Commission (TRC))ராஜபக்சவின் கண்காணிப்பிலேயே இன்றும் உள்ளது. ஆக அனுமதிப் பத்திரங்களைப் வழங்குவதும் பறிப்பதும் ராஜபக்ச மட்டுமே.

இந்த வேளையில் வாய்மக்ஸ் சேவையை நடத்த சிறீ லங்கா செலிகொம் ரெலிகொம் ஒழுங்கமைப்புச் சேவையிடம் அனுமதி கோரியது. ஏனைய தொலைபேசிச் சேவைகளான சண்ரெல் மற்று,ம் டயலோக் ஆகியவற்றிற்கு வழங்கப்பட சிறீ லங்கா ரெலிகொம் இற்கு நிராகரிக்கபட்டது.

இலங்கை அரசு ஒரு பகுதியைச் சொந்தமாக வைத்திருக்கும் சிறீ லங்கா ரெலிகொமின் கோரிக்கை பல தடவைகள் நிராகரிக்கப்பட்டமை பலருக்குப் புரியாத புதிரானது. தனது சொந்த நிறுவனத்திற்கே அனுமதி வாங்க அரசு ஆழமாகப் பரிசீலிக்கிறது என்று மகிந்தவின் மைந்தர்கள் பலர் புழகாங்கிதமடைந்தனர்.

 இலங்கையின் ரியல் எஸ்டேட் முதலை கிருஷ்ணா செல்வநாதனுடன்(நடுவில்) ஹெட்டியாராய்ச்சி(வலது)
இலங்கையின் ரியல் எஸ்டேட் முதலை கிருஷ்ணா செல்வநாதனுடன்(நடுவில்) ஹெட்டியாராய்ச்சி(வலது)

இந்த நிலையில் ஸ்கை நெட்வேர்க் என்ற 20 ரூபாய் கொம்பனிக்கு நிறுவனத்திற்கு வாய்மாக்ஸ் சேவையை வழங்க அனுமதி வழங்க்கப்பட்டது.

இலங்கையில் தொலைபேசி சேவையை நடத்தாத இந்த நிறுவனம் உருவான கதையே தனியானது. இது ராஜபக்ச வடை சுட்டு விற்ற கதை.

20 இலங்கை ரூபாய்கள் பங்கு போட்டு ஸ்கை நெட்வேர்க் என்ற நிறுவனம் நுகேகொட என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் நடத்துனராக அஜந்தா குணதாச என்பவர் பதிவு செய்யப்பட்டார். பின்னர் சரியாக ஒரு வருடம் வரை ஸ்கை நெட்வேர்க் எந்த நெட்வேர்க்கும் செய்யாமல் உறங்கிக்கொண்டிருந்தது.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி 2007 இல் அதாவது வன்னிப் படுகொலைகள் நடைபெறுவதற்கு சரியாக இரண்டு வருடங்களின் முன்பதாக லைக்கா நிறுவனம் ஸ்கை இன் உறக்கத்தைக் கலைக்கிறது. போத்துக்கல்லில் லைக்கா நிறுவனத்தின் கிளை நிறுவனமான Hastings Trading E Services (Portugal subsidiary of Lyca Group) ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவழித்து ஸ்கை நெர்வேர்க்சின் 95 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்கிறது. இப்போது 20 ரூபா கம்பனி 950000 சக 20 ரூபா கம்பனியாகிவிட்டது.

(அட, போர் நடப்பதற்கு ஒரு வருடங்களின் முன்னரே லைக்கா இலங்கை அரசுடன் தொடர்பு வைத்திருந்தது என்றால், புலம்பெயர் நாடுகளிலிருந்து யார்யாரெல்லாம் என்ன தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற விபரங்கள் சுடச்சுட ராஜபக்ச அரசிற்குக் கிடைத்திருக்குமே! இதில் ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும்!!)

இது நடந்ததும்ஸ்கை நெட்வேர்க்கை ஆரம்பித்த  கருணதாச ஸ்கை இலிருந்து விலகிக் கொள்கிறார். அவர் விலகியதும் புதிய தலை ஒன்று ஸ்கை நெட்வேர்க்ஸின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. ஹிமால் ஹெட்டியாராச்சி என்ற இலங்கையின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அவர் நமது இனக்கொலை வைத்தியக் கலாநிதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்.

subas_kangle
லைக்கா தலைவர் சுபாஸ்கரனும் சிவசாமியும்

ஹெட்டியாராய்ச்சி ஸ்கையின் புதிய தலைவர் என்றாலும் அது ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட இடம் அவருக்கே சொந்தமானது. அதாவது 20 ரூபாய் கொம்பனியின் முகவரிக்கு உரியவர் ஹெட்டியாராச்சி!

ஹெட்டியாராச்சியுடன் இணைந்து லைக்காவின் சார்பாக அதன் பிரித்தானிய இயக்குனர்களில் ஒருவரான மிலின்ட் கங்லே ஸ்கையின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்கிறார். ஜுன் மாதம் 1ம் திகதி 2007 ஆம் ஆண்டு இக் கைங்கரியங்கள் நடைபெறுகிறது. இதற்காக லைக்காவின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் செய்து சினமன் ஹொட்டேலில் களியாட்ட விருந்து ஒன்றை நடத்திற்று.

இலங்கையின்தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை சிறீ லங்கா ரெலிகொம்மிற்குத் வழங்காது தடுத்துவந்த வாய்மக்ஸ் சேவைக்கான அனுமதிப் பத்திரத்தை இப்போது ஸ்கைனெட்வேர்க்கிற்கு வழங்குகிறது.

அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்கைனெட்வேர்க் என்ற 20 ரூபா கொம்பனி இப்போது சிறீலங்கா ரெலிகொம்மை அணுகி தம்மிடம் வாய் மக்ஸ் லைசன்ஸ் இருப்பதாகத் தெரிவிக்கிறது. தமது தொலைபேசி இன்டர்னெட் வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்ண்டிய நிலையிலிருந்த சிறீ லங்கா ரெலிகொம் என்ற அரை அரச நிறுவனம் வேறு வழியின்றி ஸ்கைனெட்வேர்க்கிடம் உள்ளை அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்கிறது.

2007 ஜூன் மாதம் 29ம் திகதி யிடப்பட்ட குறிப்பேடு இலக்கம் Pள்C /T /65/2007 இன் அடிப்படையில் ஸ்கைனெட்வேர்க்கிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடிவுக்கு வருகிறது. 100 மில்லியன் அமெரிக்க டோலர்களை கொடுத்து லைக்காவின் 40 வீதப் பங்குகளை வாங்க்கிகொள்கிறது 20 ரூபாய் நிறுவனம் இப்போது மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமாய் மிளிர்கிறது.

இதன் பின்னர் ஸ்கைனெற்வேர்கின் இயக்குனர் சபையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த நிறுவனத்தின் 70 வீதப் முதலீட்டை சிறீலங்கா ரெலிகொம் மேற்கொள்ள அதன் வருமானத்தில் 60 வீதம் ஸ்கைனெட்வேர்க் இற்கே வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது.

இது தான் 20 ரூபாய் நிறுவனம் இன்று மல்ரி மில்லியன் வருமானம் தரும் பல்தேசிய நிறுவனமாக மாறிய கதை. ராஜபக்ச மக்களின் தலையில் உளுந்தரைத்து லைக்காவுடன் சேர்ந்து வடைசுட்டு விற்ற கதை.

ஐயாத்துரை சிவசாமி
ஐயாத்துரை சிவசாமி

இதே காலப்பகுதியில், 16.03.2007 அன்று மிலின்ட் கங்லே ஸ்கை நெட்வேர்க்கின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்ள சரியாக 3 மாதங்களின் முன்னர் சென்னையில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. லைக்கா புரடக்ஷன் என்ற நிறுவனம் சென்னை அசோக் நகரில் கங்லே மற்றும் லைக்காவின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிவாசமி ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்படுகிறது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொப்புள் கொடி உறவின் கயிறுகளாக கங்லேயும் சிவசாமியும் திரைப்படம் தயாரிக்க இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆகின்றனர். 8 கோடி இந்திய ரூபாய்களை முதலீடு செய்வதாக இந்த நிறுவனம் பதிவு செய்யப்படுகின்றது. சிவசாமி பங்குதாரராக மற்றொரு நிறுவனமும் சென்னையில் பதிவு செய்யப்படுகிறது அதன் பெயர் ஞானம் பிலிம் பிரவேட் லிமிடட்.

இதே காலப்பகுதியில் சிவசாமி மற்றும் கங்லே ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு லைக்க லொஜிஸ்டிக், லைக்கா ஹொட்டேல்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் சென்னையில் ஆரம்பிக்கப்படுகின்றன.

சென்னையிலும் ஐயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான லைக்கா பிளையிலும் சிவசாமி இயக்குனர். லைக்கா பிளை இலங்கை அரச விமானச் சேவையான சிறீ லங்கன் ஏயர் லைன்சின் பிரித்தினியாவிற்கான பிரதிநிதிகள். பல்சோறும் கையுமாக சிறீ லங்கன் ஏயர் லைன்சில் பயணம் செய்யும் புலம் பெயர் தமிழர்கள் லைக்காவின் விளம்பரங்களை பயணத்தின் நடுவே விமானத்தின் தொலைக்காட்சியில் பார்த்து மகிழலாம்.

pirivom-santhippomதமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த  சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் ஞானம் பிலிம்ஸ் இன் தயாரிப்பே. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்துடன் டீலை முடித்த கையோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற ‘பெருமையை’ இது பெற்றுக்கொள்கிறது. ‘ஞானம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் அ.சுபாஸ்கரன் தயாரிக்க.. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கரு.பழனியப்பன்’ என்ற செய்திகளை தமிழ் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இப்போது லைக்கா புரடக்ஷன் நிறுவனம் மற்றொரு புலம் பெயர் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கத்தி. தலைப்பிலேயே இரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட இத்திரப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பிரபல இயக்குனர் இயக்கிவருகிறார்.

kaththisoonநமது இளைய தளபதி விஜய் உடன் ராஜபக்ச குடும்ப நண்பர்களான லைக்கா குழுமமும் இணைந்து வன்முறைக் கலாச்சாரத்தை விற்பனை செய்யும் திரைப்படம் கத்தி! கத்திக் கத்தியே தொண்டை வரண்டு போன தமிழக உணர்வாளர்கள் தாக்குதல் பட்டியலில் கத்தி இணையுமா என்பது கேள்விக்குறி.

சேரன் இடம்தெரியாது மறைந்து விட்டார். விஜய் அவ்வப்போது அரசியல் முத்துக்க்ளை உதிக்கிறார். பாலியல் வக்கிரங்களையும், சமூக விரோத வன்முறைகளையும் இணைந்து சாம்பார் போட்டு விற்பனை செய்வதையே எதிர்காக தமிழ்க் கலாசாரக் காவலர்கள் ராஜபக்ச சுட்ட வடை தமிழ் நாட்டில் மூக்கைத் துளைக்கும் போது என்ன செய்யப்போகிறார்கள்?

http://inioru.com/ராஜபக்ச-வடைசுட்ட-கதையும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நரிகளை கேட்டவர் ...இவ்வாறு கொதித்தெழுவது எதற்க்காக ....விஜயின் படத்தை தடை செய்ய கேட்டார்கள் என்பதற்காகவா ....?
இல்லை லைக்கா மீதுள்ள அபிமானமா ......எனக்கென்னவோ இவர்  விஜய் அண்ணாவின் வேலை மினக்கட்ட   ரசிகர் என்பதால் கத்தியில் கடுப்பாகிவிட்டார் போல படுது 
என்னை பொறுத்தவரை அஜித் ,விஜய் ரசிகர் என்று வெளிகாட்டிக்கொள்பவரை பார்க்கவே பிடிப்பதில்லை ....அவர்கள் படம் நடிக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள் .....இவர்கள் எதோ கூடப்பிறந்த அண்ணனை ஏதோ சொன்னது கணக்கா முகப்புத்தகம் ,சினிமாப்பக்கம் முழுதும் நாறுகிறார்கள்  ...
சொந்த அண்ணனையே டேய் போட்டு கூப்பிடுபவர்கள்  இதற்குள் விஜய் அண்ணாவாம்  தமிழனையும் தமிழினத்தையும் தூக்கி நிறுத்தியவர்களா இந்த விஜயும்...அஜித்தும்  ....இவர்களும் இவர்களது இத்துப்போன சண்டைகளும் ஒரு பைசா பிரயோசனமற்றவை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 'கோவை பிரதர்ஸ்' படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும் நானும் அண்ணன் தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு மார்கெட் வழியா வருவாரு சத்யராஜ்  ...அப்போ அங்க மார்க்கெட்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் சத்தியராஜ் பின்னாடி டான்ஸ் ஆடுவாங்க....உடனே சத்தியராஜ் டான்ஸ் நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ் ஆடினவங்கள பார்த்து....
'ஏண்டா டேய்....நடிக்கிறது என்னோட தொழில். அதனால நான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிட்டு வரேன்....நீங்க ஏண்டா உங்க வேலைய விட்டுட்டு என் பின்னாடி வந்து ஆடுறீங்க...?' 'தலைவா..நீங்க கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான் உங்க கூட ஆடினோம்...' 'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான் 'நீயும் நாணும் அண்ணன் தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய் பணம் கேளு' 'தலைவா...ஒரு 2000 ரூபாய் பணம் கொடு தலைவா...' (சத்தியராஜ் அவனை பளார்னு அறைஞ்சிட்டு) 'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக் பேசுறதும், கருத்தா பாட்டு பாடுறதும் எல்லாம் கார் வாங்கவும் பங்களா வாங்கவும் தான்...இதுல உனக்கு போய் காசு தரனுமா...நீங்கலாம் திருந்தவே மாட்டிங்களா...'? இப்படி ஓப்பனா தன்னோட சக நடிகர்களின் உண்மை முகத்தையும் ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும் பட்டுனு உடைச்சி சொல்வார்...
# இதையே தான் நானும் சொல்றேன்...நீங்க யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..? யாரை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...? நடிகர்களுக்கு என்ன இல்ல...?? ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்..ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். 25 வயசிலிருந்து 60 வயசு வரைக்கும் சம்பாதிக்கும் பணம் 84 லட்ச ரூபாய். சரி, இடையில் சம்பள உயர்வு இருந்தாலும் கூட 1 கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்...
ஆனா, அந்த ரசிகனின் தலைவன் ஒரு படத்திற்கு(5 மாதங்களில்) வாங்கும் சம்பளம் 15 டூ 20 கோடி. அதாவது, நீங்க ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை, உங்க தலைவன் 5 மாதத்தில் 20 மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறார்...அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...? இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன் அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...நடிகர்களை ரசிக்கனும் பாராட்டுனும்...
ஆனா அவர் தான் எல்லாம்னு மன்றங்கள், இயக்கங்கள்னு உங்க வேலைய விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா #முட்டாள்த்தனம்- அப்பாவி தமிழன்
- ப.பி.......

முக நூலில் படித்ததில் பிடித்தது 

Link to comment
Share on other sites

வினித், படம் தயாரிப்பதற்கும் வெளியிடுவதற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

கத்தி லைக்காவின் நேரடி சொந்தப் படம் அந்த நேரத்தில் கத்தி வெளிவராமல் இருந்திருக்குமானால் நட்டம் லைக்காவிற்கே. ( எதிர் பார்த்தளவு இலாபம் வரவில்லை என்றே லைக்காவின் உள் தகவல்)

லைக்கா படம் வெளியிடுகிறது எனில் ஏனைய இந்திய வெளியீட்டார்களை விட அதிக விலைக்கே அந்த படத்தை வாங்குகிறது. இலாபம் இந்தியர்களுக்கே. ( லைக்காவிற்கும் கறுப்பை வெள்ளையாக்க வேண்டிய தேவை உள்ளது) 

லைக்கா மகி உறவு  2012(?) இற்கு பின்னர் பிரிவோம் சந்திப்போம் வெளிவந்தது 2008.

எந்திரன் படத்தை தயாரித்த ஐங்கரன் இடையில் கைவிட காரணம் புலிகளின் பணம் என்ற அழுத்தம். 2009 வரையும் புலி புராணம் பாடிய ஐங்கரன் 2010 இல் மகி புராணம் பாடினர். 

நல்லா சாமாளிக்கிறிங்கள்

மேலே நரிகளை கேட்டவர் ...இவ்வாறு கொதித்தெழுவது எதற்க்காக ....விஜயின் படத்தை தடை செய்ய கேட்டார்கள் என்பதற்காகவா ....?
இல்லை லைக்கா மீதுள்ள அபிமானமா ......எனக்கென்னவோ இவர்  விஜய் அண்ணாவின் வேலை மினக்கட்ட   ரசிகர் என்பதால் கத்தியில் கடுப்பாகிவிட்டார் போல படுது 
என்னை பொறுத்தவரை அஜித் ,விஜய் ரசிகர் என்று வெளிகாட்டிக்கொள்பவரை பார்க்கவே பிடிப்பதில்லை ....அவர்கள் படம் நடிக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள் .....இவர்கள் எதோ கூடப்பிறந்த அண்ணனை ஏதோ சொன்னது கணக்கா முகப்புத்தகம் ,சினிமாப்பக்கம் முழுதும் நாறுகிறார்கள்  ...
சொந்த அண்ணனையே டேய் போட்டு கூப்பிடுபவர்கள்  இதற்குள் விஜய் அண்ணாவாம்  தமிழனையும் தமிழினத்தையும் தூக்கி நிறுத்தியவர்களா இந்த விஜயும்...அஜித்தும்  ....இவர்களும் இவர்களது இத்துப்போன சண்டைகளும் ஒரு பைசா பிரயோசனமற்றவை   

மிக கேவலாமான  சமாளிப்பு

மீரா அக்கா...

நானும் ரவுடி தான்  இந்த கிழமை தானே வெளியானது/???

இப்ப போராடலாமே/???

நல்ல சமாளிக்கிறிங்கள்

 'கோவை பிரதர்ஸ்' படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும் நானும் அண்ணன் தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு மார்கெட் வழியா வருவாரு சத்யராஜ்  ...அப்போ அங்க மார்க்கெட்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் சத்தியராஜ் பின்னாடி டான்ஸ் ஆடுவாங்க....உடனே சத்தியராஜ் டான்ஸ் நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ் ஆடினவங்கள பார்த்து....
'ஏண்டா டேய்....நடிக்கிறது என்னோட தொழில். அதனால நான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிட்டு வரேன்....நீங்க ஏண்டா உங்க வேலைய விட்டுட்டு என் பின்னாடி வந்து ஆடுறீங்க...?' 'தலைவா..நீங்க கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான் உங்க கூட ஆடினோம்...' 'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான் 'நீயும் நாணும் அண்ணன் தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய் பணம் கேளு' 'தலைவா...ஒரு 2000 ரூபாய் பணம் கொடு தலைவா...' (சத்தியராஜ் அவனை பளார்னு அறைஞ்சிட்டு) 'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக் பேசுறதும், கருத்தா பாட்டு பாடுறதும் எல்லாம் கார் வாங்கவும் பங்களா வாங்கவும் தான்...இதுல உனக்கு போய் காசு தரனுமா...நீங்கலாம் திருந்தவே மாட்டிங்களா...'? இப்படி ஓப்பனா தன்னோட சக நடிகர்களின் உண்மை முகத்தையும் ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும் பட்டுனு உடைச்சி சொல்வார்...
# இதையே தான் நானும் சொல்றேன்...நீங்க யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..? யாரை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...? நடிகர்களுக்கு என்ன இல்ல...?? ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்..ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். 25 வயசிலிருந்து 60 வயசு வரைக்கும் சம்பாதிக்கும் பணம் 84 லட்ச ரூபாய். சரி, இடையில் சம்பள உயர்வு இருந்தாலும் கூட 1 கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்...
ஆனா, அந்த ரசிகனின் தலைவன் ஒரு படத்திற்கு(5 மாதங்களில்) வாங்கும் சம்பளம் 15 டூ 20 கோடி. அதாவது, நீங்க ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை, உங்க தலைவன் 5 மாதத்தில் 20 மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறார்...அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...? இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன் அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...நடிகர்களை ரசிக்கனும் பாராட்டுனும்...
ஆனா அவர் தான் எல்லாம்னு மன்றங்கள், இயக்கங்கள்னு உங்க வேலைய விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா #முட்டாள்த்தனம்- அப்பாவி தமிழன்
- ப.பி.......

முக நூலில் படித்ததில் பிடித்தது 

சத்தியராஜின் படத்தை பார்த்விட்டு சினிமாவை கூறை கூறி ஒரு பதிவு

Link to comment
Share on other sites

இங்கை பார்ரா ......

 பட்டினியில் களவெடுத்தவனையும்  சும்மா   மாற்றுக் குழுக்களோடு பேசிய பெண்களையும்  வீதியில் சுட்டு போட்ட காட்டுமிராண்டி கூட்டம் சினிமாவில் வரும் வன்முறை பற்றி வகுப்பு எடுக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினித் இன்னமும் உங்களுக்கு விளங்கவில்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே நல்ல விலைக்கு விற்கப்பட்ட படத்திற்கு எதிராக ஏன் இந்தியர்கள் போராடப் போகிறார்கள் ? உங்களின் விஜய் தீவிர ஆதரவு ரசிகர் நிலை சில யதார்த்தங்களை மறைக்கின்றது.

இனியொரு இணையம் யாருடைய பின்புலம் என்று நினைக்கிறீர்கள் ?  

Hidden Content

இங்கை பார்ரா ......

 பட்டினியில் களவெடுத்தவனையும்  சும்மா   மாற்றுக் குழுக்களோடு பேசிய பெண்களையும்  வீதியில் சுட்டு போட்ட காட்டுமிராண்டி கூட்டம் சினிமாவில் வரும் வன்முறை பற்றி வகுப்பு எடுக்கிறார்கள்

Link to comment
Share on other sites

நான் விஜய் ரசிகர் என்பது உண்மை தான் ஆனால்  கத்தி  படத்தில் நான் தொங்கி கொண்டு இருப்பது , கத்தியை காட்டி காசு கொள்ளையடிக்கும் கூட்டத்தின் சுயநலமே லைக்கா எதிர்ப்பு போராட்டமும் நம்புறதும் நம்பாததும் உங்கள் விருப்பம்....

கத்தி எதிர்ப்பு முழுக்க முழுக்க  காசு பறிக்கவும்  தொழில் போட்டியும்  தான்

இனியெரு  வந்த கட்டுரையில்  கத்தி படத்தின் பெயரே வன்முறையாம்    நான் நினைக்கிறேன்  கட்டுரையாளருக்கு தமிழ்ச்சின்மாவின்  வரலாரு சரியாக தெரியவில்லை .. சரி விடுங்க  கத்தியும் வெற்றி யோடு ஓடி முடிந்து ஒருவருடம் ஆகிவிட்டது  என்ன   திருமுருகன் போன்றோருக்கு வருமானத்துக்கு தான்  வழிகள்  கிடைக்கவில்லை ஏதாவது கிடைக்காமல போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
மிக கேவலாமான  சமாளிப்பு

மீரா அக்கா...

நானும் ரவுடி தான்  இந்த கிழமை தானே வெளியானது/???

இப்ப போராடலாமே/???

நல்ல சமாளிக்கிறிங்கள்

சத்தியராஜின் படத்தை பார்த்விட்டு சினிமாவை கூறை கூறி ஒரு பதிவு

மிகவும் கேவலமாக இருக்கிரதெல்லவா ...இருந்தாலும் அதுதான் உண்மை 
இந்த ரசிக மா ஜனங்கள் படும் பாடு தாங்க முடியவில்லை.......

திருமுருகன் காந்தி வருமானத்திற்கு கத்தியை தூக்கினாரா ......எங்கே போய் முட்டுவது ..அவர் யார் என்று தெரியுமா ...அவரது கல்வி மற்றும் தொழிற்தகைமைகள் பற்றி தெரியுமா ...எங்கே தொழில் செய்கிறார் என்றாவது தெரியுமா ....அடிப்படையில் அவர் ஒரு மென்பொருள் பொறியியலாளர் 
ADMAN எனும் நிறுவனத்தை இரண்டயிரத்தின் நடுப்பகுதியிலேயே ஆரம்பித்தவர் இப்போது அவர் இருக்கும் உயரம்  மென்பொருள் துறையில் சாமானியமானதல்ல . இவரது தகுதிக்கு இவர் தமிழர்களுக்காக வீதியில் இறங்க வேண்டிய அவசியமே இல்லை 
விஜய் அண்ணாவை போல ஒரு பஞ்சை (punch) ஐ எடுத்து விட்டு பின்பக்கத்தை தட்டிவிட்டு விட்டு போய்க்கொண்டேயிருக்கலாம் 

பணத்திற்காக திரைக்கு முன் கூத்தாடும் கூத்தாடிகள் விஜய்,அஜித்  அண்ணாக்கள்  போன்று இவரை நினைத்து விட்டீர்களா ....?

Link to comment
Share on other sites

படித்தவன் தான் மக்களை ஏமாற்றுகிறான்

உங்கட நிலைப்பாடு புரிந்து விட்டது பேசி பயன் இல்லை

இப்ப லைக்கா தமிழ்நாட்டில் படம் எடுக்கலாம  /?? இதுக்கு மட்டும் பதில்

Link to comment
Share on other sites

ஊளையிட்ட நரிகள் எங்கே/??

வணக்கம்,

புரிதல் என்பது ஒவ்வொருவரது குண/இருப்பு/சார்பு/விருப்பு/எதிர்ப்பு சார்ந்து பொருள்படும். நீங்கள் எனது கருத்தை எங்ஙனம் உள்வாங்கி கொண்டீர்கள் என்று தெரியவில்லை. எனது இந்த பதிவு உங்களை புண்படுத்துமாயின் மன்னித்தருள்க... இங்கு எனது பதிவை மீண்டும் மேற்கோள் காட்டவே விரும்புகிறேன்..

"இங்கு கத்தி படத்தை எதிர்த்தவர்களை தான் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் எதிர்த்திருக்காவிடில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

 தெரிகிறது தானே தமிழ்நாட்டில் ஈழத்தை அரசியல் செய்கிறார்களென்று ஒரு மாற்று தெரிவுகளை உருவாக்ககூடிய கூறுகளை முன்னெடுக்கிறார்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இன உணர்வை போலி அரசியல்வாதிகள் அணுகி லாபமடைந்து கொள்ளும் போது உரியவர்கள் ஏன் அதை அணுக கூடாது?"

Link to comment
Share on other sites

கத்தி படத்தில் அஜித் நடித்து இருந்தாலும் படம் பார்க்காவிட்டாலும்   லைக்காவின் பெயரால் கத்தியை எதிர்த்ததை ஏற்றுக் கொண்டுருக்க ம்மாட்டேன்

லைக்க எதிர்ப்பு முழுக்க முழுக்க  அரசியல் எதிர்ப்பு அது  விஜய் நடித்ததால் லைக்கா எதிர்ப்பாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கு இலகுவாக போய்விட்டது ஆனால் தோல்வியில் முடிந்த போராட்டம் என்பட்து வேறு கதை.. அஜித் நடித்து இருந்தால் ஏன்  எதிர்ப்பு போராட்டம் வந்து இருக்காது என்றால் அஜித் ஒரு மலையாளி தமிழ்நாட்டு சினிமாவில்  மலையாளிகள் தான் கூட பவரில் இருக்கிறார்கள் ஏன் அரசியலிலும் தான்....

விஜயைக்கு  நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியவில்லை அது தான் அவருக்கு  பலத்த எதிர்ப்புக்களை சம்பாதித்து விட்டது ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.