Jump to content

விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா?


Recommended Posts

விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா?

[12 - October - 2006] [Font Size - A - A - A]

-சங்கரன் சிவலிங்கம்-

சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன.

பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்று இறுக்கமான தொனியுடன் ஜனாதிபதி மகிந்தருக்கு தெரிவித்து விட்டார். "போன மச்சான் திரும்பி வந்தான் வெற்றுக் கையோட" என்பதற்கு இணங்க அறுபது பரிவாரங்களுடன் ஆறு கோடி ரூபா மக்களின் பணத்தினை செலவிட்டு பேரின வாதத்தின் நியாயப்பாடுகளை உலகத்திற்கு கூற வெளிக்கிட்ட மகிந்தர், அமெரிக்க, ஐரோப்பிய இந்திய சக்திகளின் சமாதானப் போதனைகளை மட்டும் பெற்றுக் கொண்டு நாடு திரும்பி வந்திருக்கின்றார். கூடவே மனித உரிமைக்காரர்களையும் முதுகில் சுமந்து வரவேண்டிய இக்கட்டான நிலை அவருக்கு.

மகிந்தர் சமாதானப் போதனைகளோடு திரும்பி வர சிங்கள தேசமோ யுத்தப் பேரிகையை முழக்கிக் கொண்டிருக்கிறது. போரில் வென்று கொண்டிருக்கின்றோம் என்ற போலித்தோற்றப்பாட்டை அரசும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் சிங்கள தேசத்திற்கு அள்ளிக்கொடுத்ததால் வெற்றிப்போதை தலைக்கேறி ஆனையிறவை கைப்பற்றும் கனவில் அது மிதந்து கொண்டிருக்கின்றது. இந்தக் கனவில் மிதக்கச் செய்வதில் முற்போக்கு ஊடகவியலாளர்கள் எனக்கூறிக் கொள்பவர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை. புலிகளிடம் தோற்றுப்போய்விட்டோம் என்ற வெப்பெரிச்சலில் இருந்தவர்கள் தமது விருப்பங்களையே கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர். இதற்கு குமார் ரூபசிங்க தொடக்கம் விக்டர் ஐவன் வரை விதிவிலக்காக இருக்கவில்லை. உலகிற்கு தங்கள் இனவாத முகத்தை மறைப்பதற்காக "தமிழ் மக்களை ஆதரிக்கின்றோம், ஆனால், புலிகளை எதிர்க்கின்றோம்" எனக்கூறி வார்த்தை ஜாலங்களினால் தமது உண்மை முகத்தை மறைக்கப்பார்க்கின்றனர்.

புலிகள் இயக்கம் என்பது தமிழ்த் தேசிய அரசியலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தலைமையேற்று நடாத்துவதற்காக தமிழ்த்தேசம் வன்மையாகப் பிரசவித்த இயக்கம் என்பதும் புலிகள் பலவீனம் அடைந்தால் தமிழ் மக்களும் பலவீனம் அடைந்து விடுவார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியாததல்ல. தெரிந்து கொண்டேதான் அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய உண்மையான விருப்பமெல்லாம் தமிழ்த் தேசம் பலவீனம் அடைய வேண்டும் என்பதுதான். இதுதான் வடிகட்டின இனவாதம். தமிழ் மக்களை அழிப்போம் எனக்கூறுவது பச்சை இனவாதம். தமிழ் மக்களை ஆதரிப்போம். ஆனால், புலிகளை அழிப்போம் எனக்கூறுவது வடிகட்டின இனவாதம். இரண்டினதும் நோக்கம் ஒன்றுதான். தமிழ் மக்களை அழிப்பதே அந்த நோக்கம். பச்சை இனவாத முகத்தினைக் காட்டினால் தமது முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதற்காக வடிகட்டின இனவாத முகத்தை அவர்கள் காட்டுகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு உள்ள ஆதரவுகளைப்பற்றி அண்மைக்கால கிழக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கறாராக நிரூபித்த பின்னர் கூட இந்தக் கூட்டம் உண்மைகளைத் தரிசிக்க மறுக்கின்றது. "விருப்பங்கள் உண்மைகளை தரிசிக்க விடாது" என்பது இயற்கை விதி.இவ்விதி இக்கூட்டத்திற்கு நன்றாகவே பொருந்துகின்றது.

வரலாற்றில் ஏ.ஈ.குணசிங்கா, என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, சந்திரிகா குமாரதுங்க, டியூ.குணசேகர, தயான் ஜயதிலக்க என பலரைச் சந்தித்ததால் இந்த முகமூடிகளைப்பற்றிய தமிழ்த் தேசம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தமிழ்த்தேசத்தின் அரசியல் நியாயப்பாடுகள் தொடர்பாக சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை கொள்கை நிலைப்பாடாகக் கொண்டு சிங்கள தேசத்தில் பணியாற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு இது தர்மசங்கடமான நிலையினை உருவாக்கியுள்ளது. "உது ஒரு தேவையற்ற வேலை" என தமிழ் மக்களில் பலர் அபிப்பிராயம் கொண்டிருந்தபோதும் சிவராம் போன்ற தமிழ்த்தேசத்தின் ஆய்வாளர்கள் தமிழ் மக்களின் அக்கருத்தினை வலியுறுத்திய போதும் விடாப்பிடியாக தமிழ் ஆர்வலர்கள் பலர் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றனர்.

"ஒரு மொழி இரு நாடு" எனக் கோஷமிட்ட சமசமாஜிகள் பின்னர் 1972 ஆம் ஆண்டு பேரினவாத யாப்பில் கரைந்து போனபோதும் தமிழ்த்தேசப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தலைமறைவு வாழ்க்கை நடாத்திய தயான் ஜயதிலக போன்றவர்கள் பின்னர் ஒடுக்குமுறை அரசாங்கத்தின் கருவிகளானபோதும் தடுமாறாமல் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றியவர்கள் இன்று சங்கடப்படுகின்றனர். ஆனாலும், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க, வாசன அஜித் பராக்கிரம, நிர்மல் ரன்ஜித் போன்ற கொள்கை நிலைப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிங்கள தேசத்தில் வாழ்வதால் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இனி நடைமுறை விடயத்திற்கு வருவோம். இன்று அனைவர் மத்தியிலும் எழுகின்ற பிரதான கேள்வி உண்மையில் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்களா என்பதேயாகும். புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்களென சிங்கள தேசமும் அவற்றுடன் கூடவே இந்திய பிராமணிய சக்திகளும் மாபெரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், மாவிலாறு பிரதேசங்களில் இருந்து புலிகள் பின் நகர்ந்து விட்டதனாலும், யாழ். குடாநாட்டில் முகமாலை பிரதேசத்தில் 800 மீற்றர் பின்னகர்ந்து விட்டதனாலும், ஒவ்வொரு பெரிய, சிறிய மோதல்களிலும் இறந்த புலிகளின் எண்ணிக்கையினை `ஷ்ரீ லங்கா அரசு பாரிய எண்ணிக்கை கணக்கில் பிரசாரப்படுத்துவதனாலும், (இவ்வெண்ணிக்கை கணக்கினை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புலிகளின் மொத்த எண்ணிக்கை 7000 எனக் கூறியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இதுவரை புலிகள் முழுமையாக அழிந்திருக்க வேண்டும்.) புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல், நேரடி விமானத்தாக்குதல் என்பவற்றை மேற்கொள்ளாததனாலும் வன் தாக்குதலிலிருந்து மென் தாக்குதலுக்கு அவர்கள் மீண்டும் இறங்கி விட்டதனாலும் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டனர் என்ற தோற்றம் கொடுக்கப்படுகின்றது.

ஒரு விடுதலைப் போராட்ட அரசியலின் அடிப்படை இயக்க விதிகளைப் புரிந்து கொள்ளாமையும் விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளிலுள்ள மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றை புரிந்து கொள்ளாமையுமே இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலை இயக்கம் இரு வழிகளில் மட்டுமே பலவீனமாகிவிட முடியும். ஒன்று விடுதலைப் போராட்டத்துக்கு காரணமாக இருக்கின்ற மக்களின் அபிலாஷைகளை ஒடுக்கும் அரசு தீர்த்து வைக்கின்றபோது அது சாத்தியமாக இருக்கும். மக்களின் அபிலாஷைகள் தீருகின்றபோது ஒரு விடுதலை இயக்கத்துக்கான தேவையில்லாமல் போவதனாலேயே இது சாத்தியமாகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கான எந்தவொரு முழுமையான முயற்சிகளிலும் சிங்கள தேசம் இதுவரை இறங்கவில்லை. அதற்கு எதிரான முயற்சிகளிலேயே இதுவரை இறங்கி வந்திருக்கின்றது. பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் தொடக்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மாகாண சபைகள் என்பவற்றினூடாக கடல்கோள் பொதுக்கட்டமைப்பு வரை இதுவே வரலாறாக இருந்திருக்கின்றது. சிங்கள தேசம் பேரினவாத கருத்து நிலைகளினால் பீடிக்கப்பட்டு இருக்கும் வரை சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்க முன்வரும் எனக் கூற முடியாது. இதனால் இன்றைய காலத்திலோ அல்லது அண்மைய எதிர்காலங்களிலோ அரசியல் தீர்வுகள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்நிலையில் போராடுகின்ற விடுதலை இயக்கம் பல வீனமடையும் எனக் கூற முடியாது. உலக வரலாறுகளிலும் அதற்கான சான்றுகள் இருக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதாயின், பேரினவாதம் நடைமுறையில் இருக்கும் வரை புலிகளை ஷ்ரீலங்கா அரசினால் சில பின் நகர்வினை செய்விக்க முடியுமே தவிர ஒரு போதும் அழிக்க முடியாது. பின் நகர்வுகள் கூட தற்காலிகமாக இருக்குமே தவிர அது ஒரு போதும் நிரந்தரமாக இருக்க முடியாது. இது விடயத்தில் அனுருத்த ரத்வத்தைக்கு ஏற்பட்ட அனுபவம் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்டு விடாது எனக் கூறி விட முடியாது.

இரண்டாவது வழியில் பல வீனம் என்பது வேறொரு விடுதலை இயக்கம் எழுச்சியடைவதாகும். அவ்வாறு எழுச்சியடைந்து புலிகளிலும் பார்க்கத் தீவிரத்துடன் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்கும் போதே புலிகளை அழிப்பது சாத்தியமாக இருக்கும். ஆனால், இன்றைய நிலையில் புலிகளுக்கு மாற்றாக எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பவை எல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் போராட்டக் குழுக்களே. ஒடுக்கும் அரசுடன் இணைந்து கொண்டு செயற்படுபவர்கள் ஒரு போதும் புலிகளுக்கு மாற்றாக வர முடியாது. எதிர்காலத்தில் அவ்வாறான இயக்கம் தோன்றுமென இப்போதைக்கு கூற முடியாது. புலிகள் எதுவித சமரசமும் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுப்பதால் புதிய இயக்கத்துக்கான தேவை இன்னமும் உருவாகவில்லை. புலிகளை ஏக இயக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறும் குரல்களெல்லாம் தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்துவதற்காக முன்வைக்கப்படுகின்ற குரல்களே. இக் குரல்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு எதுவும் இருக்கப் போவதில்லை. மக்களைப் பொறுத்தவரை தமது அபிலாஷைகளுக்காக யார் விடாப் பிடியாக போராடுகிறார்களோ அவர்களைத் தான் ஆதரிப்பர். இது உலக அரசியலின் பொது விதியாகும்.

இனி புலிகளின் அண்மைய பின்நகர்வினைப் பற்றி பார்ப்போம். புலிகளின் பின்நகர்வுகளில் முகமாலைப் பின் நகர்வு பெரிய பின் நகர்வு எனக் கூற முடியாது. தமது முன்னரங்க பிரதேசத்துக்கு வந்த படையினரை அழித்து விட்டு அடுத்த நிலையினை எடுப்பதற்காக அவர்கள் சிறிது தூரம் பின் நகர்த்திருக்கின்றனர். மாவிலாறு பின் நகர்வும் பெரிய நகர்வல்ல. ஏற்கனவே மாவிலாறு அணைப் பகுதி புலிகளின் முன்னரங்க காவலரணை ஒட்டியே இருந்தது. இங்கு குறிப்பிடத்தக்க பின்நகர்வு எனக் கூறக் கூடியது சம்பூர் பின்நகர்வே ஆகும். சம்பூர் பிரதேசம் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தினைத் தாக்கக் கூடிய கேந்திர இடத்தில் இருந்தமையினாலேயே சம்பூர் பின்நகர்வு முக்கிய பின் நகர்வாகப் பிரசாரப்படுத்தப்படுகின்றது. இங்கே தான் ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட வழிமுறைகள் பற்றிய சிந்தனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட அணுகு முறைகள் ஒரு போதும் நேர் கோட்டில் செல்வதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் வளைந்தும் நெளிந்தும் செல்வதே வழக்கமானதாகும். இந்தவளைவு நெளிவுகளைப் பார்த்து விடுதலை இயக்கம் பல வீனமடைந்துள்ளது என ஒடுக்கும் அரசும் ஆதிக்க சக்திகளும் கூக்குரலிடக் கூடும். அதைப் பற்றியெல்லாம் விடுதலைக்காக போராடும் மக்கள் அலட்டிக் கொள்வதில்லை.

புலிகள் சம்பூரில் பின் நகர்ந்தமைக்கு அரசியல் ரீதியான காரணங்களும் இராணுவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன. அரசியல் ரீதியான காரணங்களைப் பொறுத்தவரை யுத்தம் தொடங்கி முதற் சில நாட்கள் புலிகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். மூதூர் கிழக்கில் பல முகாம்களை தாக்கி அழித்ததோடு அல்லாமல் மூதூர் நகரப் பகுதியையும் கைப்பற்றி இரண்டு நாட்கள் தங்களது பூரணக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இதனை அச் சமயத்தில் முழுமையாக நிராகரித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் குற்றவாக்கு மூலம் அளிப்பது போல அதனை ஏற்றுக் கொண்டார். யாழ். குடாநாட்டிலும் புலிகள் பல வெற்றிகளைக் கண்டனர். புலிகளின் "மரைன் படை" மண்டைதீவிலும் கிளாலியிலும் தரையிறங்கித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. மண்டை தீவு ஆட்லறித் தளம் அழிக்கப்பட்டதோடு கிளாலியில் 25 இற்கும் மேற்பட்ட இராணுவக் கமாண்டோக்கள் இறந்ததாக சிங்கள இராணுவ ஆய்வாளர்கள் சிலரே கூறியிருந்தனர். புலிகள் முழுப் போராக இதனை நடத்தாமல் அரசின் தயாரிப்புகளை நிர்மூலம் செய்யும் போராகவும் களநிலையை பரிசீலனை செய்யும் போராகவுமே நடாத்தினர். அரசாங்கப் படைகள் நீண்ட நாட்களாகவே புலிகளின் பிரதேசங்களை நோக்கி பெரியதொரு படைநகர்வை நடாத்த திட்டமிட்டிருந்தனர். இந்த திட்டமிடல்களை நிர்மூலமாக்குவதோடு 5 வருடங்களாக போரில்லாமல் இருந்த சூழலில் களநிலைமையைப் பரிசீலிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கிருந்தது. எப்போதும் களநிலைமையை நடைமுறையில் பரிசீலித்தே முழுப் போரைத் தொடங்குவது புலிகளின் வழக்கமாகும். அதாவது, பல சிறிய போர்கள் நடைபெற்றே பெரிய போர் நடைபெறுவது வழக்கமானதாகும்.

(தொடரும்)

http://www.thinakkural.com/news/2006/10/12...s_page12778.htm

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா?

[13 - October - 2006] [Font Size - A - A - A]

-சங்கரன் சிவலிங்கம்-

(நேற்றைய தொடர்ச்சி)

இவ்வாறு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் போரை நிறுத்தும் படி பாரிய சர்வதேச அழுத்தம் புலிகளுக்கு வந்தது. இரு தரப்பும் போரை நிறுத்துங்கள் என வெளிப்படையாகக் கூறிய போதும் புலிகளுக்கே அதிக அழுத்தம் இருந்தது. அறிக்கை வடிவிலான அழுத்தங்களுக்கு அப்பால் நடைமுறை அழுத்தங்களிலும் அமெரிக்கா நேரடியாக இறங்கியது. பாகிஸ்தான் மூலமாக அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்ததுமல்லாமல் பாகிஸ்தான் விமானிகள் நேரடியாகவே விமானங்களை ஓட்டி மக்கள் மீது குண்டுகளை வீசினர். படைத் தளங்களில் பாகிஸ்தான் படையினர் நேரடியாகவே தங்கி நின்று வழிகாட்டல்களை மேற்கொண்டனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை "தான் மகிந்தரை மடக்கும் வரை பிரபாகரன் மேலெழக்கூடாது" என்பதே கருத்தாக இருந்தது. இதை விட இந்தியாவைத் தனது நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொண்டு வருகின்ற நோக்கமும் இருந்தது. பாகிஸ்தான் பிரசன்னத்தை இந்தியா ஒரு போதும் விரும்பாது. எனவே அதனைத் தடுக்க இந்தியா தானாகவே பெரிதாக முரண்டு பிடிக்காமல் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வரும் என்பது அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

சர்வதேச ஆதிக்கச் சக்தியின் இந்தப் போக்கு பற்றி புலிகள் விழித்துக் கொண்டனர். இதனால் இவ்வாதிக்க சக்திகள் கூறும் பாதையூடாகவே சென்று அரசாங்கத்தை பொறிக்குள் மாட்ட அவர்கள் தீர்மானித்தனர். அதன் விளைவே சம்பூர் பின் நகர்வாகும். இன்னோர் பொறிக்குள்ளும் மாட்டுவதற்காக முகமாலையிலும் 800 மீற்றர் பின் நகர்ந்தனர். தொடர்ந்து பயங்கரவாதம் பற்றி பிரசாரம் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில் பேச்சு வார்த்தைக்கும் தயார் என்றனர். பேச்சு வார்த்தை என வருகின்ற பொழுது யுத்த நிறுத்த உடன்படிக்கையே அதற்கு அடித்தளமாக இருக்கும். இரு தரப்பும் உடன்படிக்கை விதிகளுக்குள் வர வேண்டும். அவ்வாறு வருகின்ற போது சம்பூரிலிருந்தும் முகமாலையிலிருந்தும் படையினர் பின் வாங்க வேண்டிய நிலையே ஏற்படும். ஏற்கனவே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு சம்பூர், முகமாலை ஆக்கிரமிப்புகளை மாபெரும் யுத்த நிறுத்த மீறல்களென அறிக்கையிட்டுள்ளது. முகமாலையைப் பொறுத்தவரை ஏ-9 பாதையைப் பற்றியும் உடன் படிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, அதனைத் தடுப்பதும் பாரிய யுத்த நிறுத்த மீறலாகும். இதனையும் கண்காணிப்புக் குழு அறிக்கையிட்டுள்து. ஆனால், இப்பின் வாங்குகைக்கு படையினரோ, பேரினவாதிகளோ இலகுவில் உடன்படப் போவதில்லை. இதனால் அரசாங்கத்துக்கும் சர்வதேச சக்திகளுக்குமிடையில் மோதல் வரப்போகிறது. உண்மையில் தற்போது அது வந்து விட்டது என்றே கூற வேண்டும். சர்வதேச சக்திகள் படையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இது விடயத்தில் சர்வதேச சக்திகள் பேரினவாதத்திடம் தாங்களாகவே தோற்றுப் போய் விட வேண்டும் என்பதே புலிகளின் எதிர்பார்பாக உள்ளது. இந்தியா பேரினவாதத்திடம் தோற்றது மல்லாமல் தற்போது அவமானப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கின்ற போது, புலிகளின் பின்நகர்வு என்பது அரசாங்கத்துக்கு வைக்கப்பட்ட சர்வதேசப் பொறி என்றே கூற வேண்டும். தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தவரை சிங்கள அரசு என்பது ஒரு பொருட்டல்ல. அதனை வெல்வதும் சிரமமானதல்ல. ஏற்கனவே தமிழ்த் தேசிய அரசியல் இலங்கைமட்டம், பிராந்தியமட்டம் என்பதைத் தாண்டி சர்வதேச மட்டத்துக்கு வந்திருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச ஆதிக்க சக்திகளும் அவர்களின் நடவடிக்கைகளும் தான் தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற பிரதான பிரச்சினை. இச் சர்வதேச சக்திகளை எப்படி வெல்வது என்பது தான் தமிழ் மக்கள் தற்போது முன்னெடுக்கின்ற மூலோபாயத்தின் பிரதான அம்சமாகும். சர்வதேச சக்திகளை மீண்டும் மீண்டும் பேரினவாதத்திடம் தோற்கச் செய்வதன் மூலமே சர்வதேச சக்திகள் தரும் அழுத்தங்களிலிருந்து மீளெழும்ப முடியும். சர்வதேச சக்திகளின் நகர்வுகள் தற்போதைய நிலையில் ஒரு படி முறை நகர்வாகவே உள்ளது. புலிகளை மேலெழும்ப விடாமல் தடுப்பது முதலாவது படியாகும். இந்தியாவை தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வருவது இரண்டாவது படியாகும். தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளையும் இணைப்பது மூன்றாவது படியாகும் சமாதான பேச்சுவார்த்தையை நோக்கிச் செல்வது நான்காவது படியாகும். இப்படி முறை வேலைத்திட்டத்தில் முதல் இரண்டு படிகளையும் சர்வதேச சக்திகள் தாண்டி இருக்கின்றன. தற்போது மூன்றாவது படிக்கான வேலைத்திட்டத்தினை நகர்த்தத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன முன்னணியும் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் நகர்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களினூடாக தனது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதே சர்வதேச சக்திகளின் இலக்காகும். ஆனால், படையினரும் பேரினவாத சக்திகளும் இதனை அனுமதிக்கப் போவதில்லை.

பிரேமதாஸ ஆட்சியின் போதே படையினர் ஒரு அரசியல் சக்தியாக மேலெழுப்பி விட்டனர். தற்போது மகிந்தர் ஆட்சியில் படையினரே அரசாக உள்ளனர். இது இலங்கையின் அரச கட்டமைப்பை பொறுத்த வரை தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பண்பு மாற்றமாகும். அரசியல் தலைமை படையினருக்கு கட்டளையிடுவதற்குப் பதிலாக, படையினரின் விருப்பங்களை நிறைவேற்றும் நிறுவனங்களாக அரசாங்க நிறுவனங்கள் மாறியுள்ளன. அரசியல் தலைமைகள் படையினரின் விருப்பங்களுக்காக குரல் எழுப்பும் சக்திகளாக மாறியுள்ளன. சட்டமும் ஒழுங்கும் படையினரின் தேவைக்கு ஏற்றவாறே மாற்றப்பட்டுள்ளது. சட்ட வாட்சிக் கோட்பாடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்கள் படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றன. நீதிமன்றங்கள் படையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் தீர்ப்புகளை வழங்குகின்றன. படையினரின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவின் தீர்ப்பினையே உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.

இந்நிலையில் சர்வதேச சக்திகளின் விருப்பங்களை படையினர் ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லை. இதனால் சர்வதேச சக்திகள் தங்கள் முயற்சிகளில் தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவப் போகின்றனர். இத்தோல்விகள் தமிழ்த்தேசம் தன்னுடைய பாதையில் செல்வதற்கான வழிகளை திறக்கக் கூடியதாக இருக்கும். இராணுவத் தந்திரோபாயத்தைப் பொறுத்தவரை புலிகளின் அடிப்படைப் பலம் வன்னிப்பிரதேசமேயாகும். வன்னிக்கு நெருக்கடிகள் வருகின்ற போதே புலிகள் மூர்க்கமாகப் போரிடுவர். ஏனைய இடங்களில் களநிலைமைக்கு ஏற்றவாறு அவர்கள் பின்வாங்கி முன்னேறுவர். சம்பூரிலும் இதுவே நடைபெற்றுள்ளது.

இராணுவத்தைப் பரவவிட்டு தாக்குதல் என்ற தந்திரோபாயமும் இதற்குள் அடங்கியிருக்கலாம் `ஜெயசிக்குறு' போரிலும் இத்தந்திரோபாயத்தையே புலிகள் பின்பற்றினர். அங்கு அகலக் கால் வைத்த படையினருக்கு பின்னர் ஆனையிறவையும் விட்டு விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. புலிகள் விடயத்தில் சிங்கள தேசத்துக்குப் புரியாத உண்மை ஒன்று தமிழ் மக்களுக்கு நன்றாகவே புரியும். "புலிகள் பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஒரு போதும் போக மாட்டார்கள்" என்பதே அவ்வுண்மையாகும். கடந்த 2002 உடன் படிக்கையின் போதும் புலிகள் வலிமையான நிலையிலேயே உடன்படிக்கைக்குச் சென்றனர்.

இங்கு இன்னொரு உண்மையுமுண்டு. புலிகளின் தோல்வி என்பது வெறுமனே புலிகள் என்ற இயக்கத்தின் தோல்வி அல்ல மாறாக அது தமிழ் மக்களின் தோல்வி.

http://www.thinakkural.com/news/2006/10/13...s_page12805.htm

Link to comment
Share on other sites

"தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தவரை சிங்கள அரசு என்பது ஒரு பொருட்டல்ல. அதனை வெல்வதும் சிரமமானதல்ல. ஏற்கனவே தமிழ்த் தேசிய அரசியல் இலங்கைமட்டம், பிராந்தியமட்டம் என்பதைத் தாண்டி சர்வதேச மட்டத்துக்கு வந்திருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச ஆதிக்க சக்திகளும் அவர்களின் நடவடிக்கைகளும் தான் தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற பிரதான பிரச்சினை. இச் சர்வதேச சக்திகளை எப்படி வெல்வது என்பது தான் தமிழ் மக்கள் தற்போது முன்னெடுக்கின்ற மூலோபாயத்தின் பிரதான அம்சமாகும். சர்வதேச சக்திகளை மீண்டும் மீண்டும் பேரினவாதத்திடம் தோற்கச் செய்வதன் மூலமே சர்வதேச சக்திகள் தரும் அழுத்தங்களிலிருந்து மீளெழும்ப முடியும். "

இதை எத்தினபேர் எத்தனை தடவை பல கோணங்களில் சொன்னாலும். எங்கடை பன்னாடையளுக்கு தெரிவுது எல்லாம் 75 சிறீலங்கா இராணுவ உடல்கள், 53 டிவிசன், 4 டாங்கி, 2 டோரா, இராணுவ சமநிலை ஓங்கியிருக்கு இறங்கியிருக்கு பக்கவாட்டில போகுது கருணா குழு ஈபிடிபி. இன்னமும் இந்த 1980 கள் 1990களிற்குரிய குறுகிய (தாழ்வு?) மனோபாவத்தோடு சர்வதேச மட்டத்திலை தமிழீழ போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நியாயப்படுத்தும் கடமையை செய்ய போயினம். :? :roll:

தாக்குதல்கள் சமர்கள் நடந்தால் அதை ஊடகங்களில் "போர்" ஆரம்பம் "யுத்தம்" ஆரம்பம் என்ற தலையங்கங்கள். ஏதோ ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒன்று தொடங்கிவிட்ட மாதிரி. இவையள் எப்ப திருந்தி தேவையான விடையங்களில் கவனம் செலுத்த போகினம் சரியான மனோபாவத்தோடு. :roll:

Link to comment
Share on other sites

இது எந்த காலத்து தலைப்பு மேனா....நேற்ற தான் தங்கட பலத்தை காட்டினவங்கள் மகிந்தருக்கு....

எந்த உலகத்தில நிக்றியள்...

எங்கட சம் இப்படித்தான்...இன்டைக்கு வெற்றி எண்டோன புலிகளை போற்றும்....சற்று தந்திரம விலத்தின....தோத்துட்டாங்கள் எண்டு தூற்றும்....அரசியல் தெழிவு காணது....

இன்னும் விழிப்படைய வேண்டும்...அப்ப தான் புரன விடுதலை கிடைக்கும்....

என்று புரியப் போதோ....???

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தகாலத்திலை நிக்கிறீங்கள் அண்ணை.. இரண்டுமாத பழைய கட்டுரைக்கு இப்ப கருத்து எழுதுகிறீர்கள்..????

இது எந்த காலத்து தலைப்பு மேனா....நேற்ற தான் தங்கட பலத்தை காட்டினவங்கள் மகிந்தருக்கு....

எந்த உலகத்தில நிக்றியள்...

எங்கட சம் இப்படித்தான்...இன்டைக்கு வெற்றி எண்டோன புலிகளை போற்றும்....சற்று தந்திரம விலத்தின....

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

"தமிழ்த் தேசத்தினைப் பொறுத்தவரை சிங்கள அரசு என்பது ஒரு பொருட்டல்ல. அதனை வெல்வதும் சிரமமானதல்ல. ஏற்கனவே தமிழ்த் தேசிய அரசியல் இலங்கைமட்டம், பிராந்தியமட்டம் என்பதைத் தாண்டி சர்வதேச மட்டத்துக்கு வந்திருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச ஆதிக்க சக்திகளும் அவர்களின் நடவடிக்கைகளும் தான் தமிழ் மக்கள் எதிர் கொள்கின்ற பிரதான பிரச்சினை. இச் சர்வதேச சக்திகளை எப்படி வெல்வது என்பது தான் தமிழ் மக்கள் தற்போது முன்னெடுக்கின்ற மூலோபாயத்தின் பிரதான அம்சமாகும். சர்வதேச சக்திகளை மீண்டும் மீண்டும் பேரினவாதத்திடம் தோற்கச் செய்வதன் மூலமே சர்வதேச சக்திகள் தரும் அழுத்தங்களிலிருந்து மீளெழும்ப முடியும். "

இதை எத்தினபேர் எத்தனை தடவை பல கோணங்களில் சொன்னாலும். எங்கடை பன்னாடையளுக்கு தெரிவுது எல்லாம் 75 சிறீலங்கா இராணுவ உடல்கள், 53 டிவிசன், 4 டாங்கி, 2 டோரா, இராணுவ சமநிலை ஓங்கியிருக்கு இறங்கியிருக்கு பக்கவாட்டில போகுது கருணா குழு ஈபிடிபி. இன்னமும் இந்த 1980 கள் 1990களிற்குரிய குறுகிய (தாழ்வு?) மனோபாவத்தோடு சர்வதேச மட்டத்திலை தமிழீழ போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நியாயப்படுத்தும் கடமையை செய்ய போயினம். :? :roll:

தாக்குதல்கள் சமர்கள் நடந்தால் அதை ஊடகங்களில் "போர்" ஆரம்பம் "யுத்தம்" ஆரம்பம் என்ற தலையங்கங்கள். ஏதோ ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒன்று தொடங்கிவிட்ட மாதிரி. இவையள் எப்ப திருந்தி தேவையான விடையங்களில் கவனம் செலுத்த போகினம் சரியான மனோபாவத்தோடு. :roll:

பன்னாடை பன்னாடை என்கிரீரே உமக்கும் பன்னாடைக்கும் என்ன சம்பந்தம் சற்று நாகரிகமாக கதைக்கலாமே.நிர்வாகத்தினர் கவனித்தால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தச் சண்டையில ஈடுபட்டது கெமுனு வோட்ச் படைப்பிரிவு தானெண்டு சில முந்திரிக்கொட்டைகள் முந்திப்போட்டுதுகள்.

இல்லாட்டி அருமையான இராணுவ ஆய்வுகள் ஒவ்வொரு பக்கத்தால வெளிக்கிட்டிருக்கும்.

53ஆம், 54 ஆம் டிவிசன், சிறப்புப் படைகள் எண்டு எழுதித்தள்ளியிருப்பின்.

சே!... அருமையான சந்தர்ப்பத்தைக் கெடுத்துப் போட்டாங்கள்.

அதுசரி, கையளிக்கப்பட்ட சடலங்கள் அனைத்துமே இராணுவச் சப்பாத்துக்களோடு கையளிக்கப்பட்டுள்ளன. புலிகள் இப்படிக் கையளிப்பது இதுதான் முதன்முறை. இதில் பெரிய செய்தி அடங்கியுள்ளது.

ஏன் அப்படிக் கையளித்தார்கள் என்று நானோர் "ஆய்வுக்கட்டுரை" எழுத உள்ளேன். அதற்கான முயற்சியில் இருப்பதால் இங்கு நடக்கும் விவாதங்களில் அவ்வளவாக ஈடுபட முடியாது என்பதை முற்கூட்டியே அறியத் தருகிறேன்.

Link to comment
Share on other sites

ஈழவன், பன்னாடையின் குணம் தேவை அற்ற கழிவுகளை கெட்டித்தனமாக பிடித்து வைத்திருக்குமாம். அது தான் காலத்தின் தேவைக்கு ஏற்ற விடையங்களை விட்டுவிட்டு தேவை அற்ற விடையங்களை தூக்கி வைத்து ஆய்வு செய்வது ஆர்ப்பரிப்பது கொக்கரிப்பவர்கள் பன்னாடைகளே. அதுவும் நாடற்ற அங்கீகாரம் அற்ற பரதேசியாக இருந்து கொண்டு பன்னாடையாக இருப்பதை கொஞ்சம் நினைத்துப்பாரும்.

இனி சொல்லும் தொடர்பு எப்படி யாருக்கு இருக்கும் எண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன், பன்னாடையின் குணம் தேவை அற்ற கழிவுகளை கெட்டித்தனமாக பிடித்து வைத்திருக்குமாம். அது தான் காலத்தின் தேவைக்கு ஏற்ற விடையங்களை விட்டுவிட்டு தேவை அற்ற விடையங்களை தூக்கி வைத்து ஆய்வு செய்வது ஆர்ப்பரிப்பது கொக்கரிப்பவர்கள் பன்னாடைகளே. அதுவும் நாடற்ற அங்கீகாரம் அற்ற பரதேசியாக இருந்து கொண்டு பன்னாடையாக இருப்பதை கொஞ்சம் நினைத்துப்பாரும்.

இனி சொல்லும் தொடர்பு எப்படி யாருக்கு இருக்கும் எண்டு?

"பாம்பின் கால் பாம்பறியும்" என்பது போல பன்னாடையின் குணாதிசையம் பன்னாடைதான் அறியும் :lol::lol:

Link to comment
Share on other sites

இவோன், எல்லாம் தமிழ்நெற்றாலை வந்த வினை. நல்லதொரு கூத்தை கெடுத்துப்போட்டாங்கள்.

சப்பாத்து விடையம்... :lol:

இந்தமுறை சிறீலங்கா அரசாங்கமும் இராணுவத்தரப்பும் 140 எண்டு ஒத்துக் கொண்டால் அதைவிட கூடவா இருக்க வேணும்... 410 இருக்குமோ என்ற கற்பனையில் தவழுவதில் தான் கவனம்.

புலிகளை பலவீனப்படுத்த சிறீலங்காவை பலப்படுத்த என்று தான் 2002 இல் உடன்படிக்கை வந்தது. அது நடைபெறவில்லை என்றதற்கு ஒரு சிறு ஆதாரம் தற்பொழுது வெளிப்படையாக கிடைச்சிருக்கு. இதை வச்சு யார் யார் என்ன என்ன உதவிகளை குடுக்காப்போறாங்கள் என்பது தான் எமது கவனமாக இருக்க வேணும். ஒரு பயங்கரவாத அரசிற்கு அவ்வாறான உதவிகள் கிடைப்பதை தடுப்பது எப்படி என்ற ஆய்வுகள் எப்ப வரப்போகுது எம்மவர்கள் மத்தியில்?

உந்த ஒளிப்பதிவுகளை வைச்சு ஆய்வு செய்து மாவீரர் தின உரை வரை காலத்தை போக்கட்டாமல் ஏதாவது உருப்படியா :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.