Jump to content

பத்து வருடங்களுக்கு முன் பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை

Recommended Posts

10%20yers_CI.jpg

யாழ். மாவட்டத்தில் தற்போது பியர் கலாச்சாரமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான கலாச்சாரத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என சர்வமத குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
யாழ். மாவட்ட சர்வமத குழுவின் மாதாந்த ஒன்று கூடல் யாழ். கிறிஸ்துராசா தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அதன்போதே குழுவினர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளனர். 
 
மேலும் தெரிவிக்கையில், 
 
யாழ். மாவட்டத்தில் இளைஞர்கள் பியர் போத்தல்களுடன் சர்வசாதாரணமாக நடமாடும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நாம் நேரடியாக காண்கின்றோம். 
 
அதுமட்டுமல்ல இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதும் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 
 
இவ்வாறான கலாச்சார சீரழிவான விடயங்களும் குற்றச் செயல்களும் எல்லை மீறிப் போய்க் கொண்டு இருக்கின்றது. இதனை யார் தடுத்து நிறுத்துவது? இதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? மாற்று நடவடிக்கைகளை யார் மேற்கொள்வது? இவற்றைத்தடுத்து நிறுத்த எவ்வாறு திட்டமிடுவது? 
 
இதற்கும் மேலாக 60 வீதமான பெண் பிள்ளைகள் சாதாரண தரத்துடன்  வீட்டில் நின்று விடுகின்றனர் மீதமாக உள்ள 40 வீதம் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர வீட்டில் நின்ற பெண்பிள்ளைகள் என்ன ஆனார்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்பு என்ன என்று கூட தெரியாத நிலையில் உள்ளோம்.
 
அத்துடன் முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்கும் அதிகாரிகளின் பிள்ளைகளே பெரும்பாலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்றனர். அதனால் அவர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை. 
 
எனினும் கிராமப்புற பாடசாலைகளில் சித்தியடையும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும் இருப்பினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடைவதில்லை. கலாச்சாரம் கல்வி என கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தை இன்று நாம் காணவில்லை.அது அழிந்து போய்விட்டது.  
 
எனவே இவ்வாறு பேசிக் கொண்டிருக்காது நாம் என்ன செய்ய முடியும் என்ற முடிவினை விரைவில் எட்ட வேண்டிய தேவை உள்ளது என குழுவினர் மேலும் தெரிவித்தனர். 
 
Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலபெயர்ந்த பூணைகள் மணி கட்ட முடியாது.......லொக்கல் தான் கட்ட வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலபெயர்ந்த பூணைகள் மணி கட்ட முடியாது.......லொக்கல் தான் கட்ட வேண்டும்...

புலம்பெயர்ந்த பூனைகள் போய் லோக்கலில் நின்று மணி கட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியர் குடிப்பதனால் கலச்சாரம் கெடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடத்துக்கு முந்திய பாரிஸ், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய லண்டன், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய கொழும்பு , இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய சென்னை, இப்போ இல்லை

ஆனால் யாழ்ப்பாணம் மட்டும், 45 வயசிலும் கல்யாணம் ஆகாத முதிர் கன்னி போல் அப்படியே இருக்கோணும்.

எங்க மனிசிமார் புலத்தில் சம்பெயின், வைன் அடிக்கலாம்,

பிள்ளையள் லிவிங் டி கெதர் ஸெய்யலாம்

சிங்கிள் மதர்ஸ் ஆக இருக்கலாம்

ஆனால் யாழ்ப்பாணத்தில் யாராவது ஊறுகாய்தண்ணி, மோர்த்தண்ணி தவிர வேறு என்ன குடித்தாலும் டென்சனாயிடுவோம். ஜாக்கிரதை

Link to comment
Share on other sites

யாழ்பாணம் அபிவிருத்தி அடைந்துவிட்டது !!

Link to comment
Share on other sites

கள்ளும் கசிப்பும் வேலிபாய்தலும் வன்புணர்வுகளும் எப்போதும் இருந்தே வந்துள்ளது. தற்போது குறிப்பாக பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் கொலை செய்வது தற்போது அதிகரித்துள்ளது.

காலத்துக்கேற்ப மாற முடியாத காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் கணனி நெற்வேர்க் கூடவே பல விதமான பாலியல் கண்டுகளிக்கும் வசதியும் வந்துள்ளது. பார் ரசி ருசிக்காதே என்ற கத்திமேல் நடக்கும் விழையாடையே கலாச்சாரம் என்னும் தக்கவைக்கப்பார்க்கின்றது. பார் ரசி ருசிக்காதே என்ற புலிகளின் கட்டுப்பாடு ருசி என்ற மூன்றாவது கட்டத்திற்குப்போனவர்களை மண்டையில் போட்டது. இப்போது அதிகாரமுள்ளவன் தானே ருசித்து மண்டையில் போடும் அதிகாரத்தையும் தானே எடுத்துக்கொள்கின்றான்.

பார்க்கில் இரண்டு காதலர்கள் முத்தம் கொடுத்தால் அதை உடனே களவாக படமெடுத்து இணையதளங்களில் போட்டு குய்யோ முறையோ என்று கத்தும் காட்டுமிராண்டிகள் தனி மனிதர்களது விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக மூக்கை நுழைப்பதுமில்லாமல் கலாச்சாரத்தை காமம் கவடு என்பதற்குள் மட்டும் தக்கவைக்க முற்படுகின்றனர். இவற்றுக்குள் எவ்வளவு இறுக்கம் வருகின்றதோ அதன் எதிர் விழைவு கொலை தற்கொலையில் வந்து முடிகின்றது.

உணர்வுகளை தூண்டுகின்ற கலாச்சாரங்கள் வடிகால்களை தடுக்கின்றது.

வடிகால்கள் தடுக்கப்படுகின்றபோது வன்புணர்வுகள் இயல்பாகின்றது

போலிக் கலாச்சாரம் தக்கவவ்க்கப்பட வன்புணர்வுகள் எல்லை மீறல்கள் சம்பவங்கள் மறைக்கப்பட வேண்டும்

மறைக்கப்படுவதற்கு கொலைகள் அவசியமாகின்றது.

இருபது முப்பது வருடங்களுக்கு முன்புவரை அதிகமாக பாலியல் இன்பத்தை அனுபவித்தவர்கள் கள்ளு இறக்கும் சீவல் தொழிலில் ஈடுபட்டவர்களே. இதில் சில ஆண்களுக்கு இருபது முப்பதுக்கும் மேற்பட்ட கள்ள உறவுகளும் இருந்துள்ளது. கட்டுமஸ்தான உடம்பும் இன்றய பெண்கள் மோகிக்கும் சிக்‌ஸ் பாக உடம்பும் அப்போது அவர்களுக்கே இருந்தது. இரவு புருசனுக்கு கள்ளுக் கொடுத்து மட்டையாக்கவும் கருக்கலில் மனைவிமார்களை உசார் பண்ணுவதிலும் கில்லாடிகளாக இருந்தார்கள். இப்போதய நிலையை விட அது மோசமாக இருந்தது காரணம் சாதீய இறுக்கம். இருந்தபோதும் இவைகள் கொலை வரை சென்றதில்லை. அப்போது நடந்த கொலைகள் வாள் வெட்டுகள் எல்லாம் இவர்களுடன் ஓடிப்போய் கலியாணம் செய்ய முற்பட்ட சம்பங்களின் பின்னணியிலேயே நடந்தது.

கலாச்சாரம் என்ற போர்வையில் சாதியமும் மத இறுக்கங்களும் அதை தக்க வைக்க மானுட இயல்புக்குப் புறம்பான போலியான தூய்மைவாதத்தையும் புனிதத்தையும் முன்நிறுத்திக்கொண்டிருக்கும் வரை கள்ள உறவுகளும் வன்புணர்வுகளும் அதன் நீட்சியான கொலைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இவைள் அறிவால் சரிசெய்ய முடியுமேயன்றி  சாதிய கலாச்சார பழமைவாதத்தால் சரிப்பண்ண முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கருத்துக்கு விமா்சனம் எழுதலாம் விதாண்டா வாதம் பேசக் கூடாது. யாழ்பாணத்தில் 10 வருடத்துக்கு முன்னா் இருந்ததிலும் என்ன முன்னேற்றம் என்று பாருங்கள். புலம்யொ் நாடுகளில் நீங்கள் வகைப்படுத்தியுள்ள நகரங்களில் 10 வருடங்களில் வளா்ச்சியும் கண்டுள்ளன. அதே போல் அடிப்படையில் வேலை வெட்டியின்றி பீா் குடித்து விட்டு பெண்களோடு சேட்டை செய்பவா்களின் தொகை அதிகாிக்கவில்லை. வேலை வாய்ப்பின்றி  ரோட்டில் சுற்றித்திாிந்து குழுக்களாக நிற்கவில்லை.

இன்னும் செல்லப்போனால் புலம்பெயா்ந்து வாழும் எம்மவா்களை எடுத்தக்கொண்டால் கூட முன்னேற்றகரமான வளா்ச்சியே ஏற்ப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன் கனடாவில் நடைபெற்ற குழுச்சண்டைகள் இன்று இல்லை. இனியும் இருக்க போவதில்லை. 

யாழ்பாணத்து இளைஞா்கள் யுவதிகள் குடிப்பது தவறு என்று வாதிடுவதற்கு வரவில்லை அதே நேரம் தம்மை அறியாது தமது நிலையறியாது குடிப்பது தவறு.  இங்கு 16 வயதிலிருந்து பகுதி நேர வேலைக்கு செல்லுவோா் பலா் ஆனால் 25 வயதாயிலும் பெற்றவா்களின் பணத்தில் குடித்து கும்மாளம் அடிப்பவா் அங்கு பலா்.

புலபெயர்ந்த பூணைகள் மணி கட்ட முடியாது.......லொக்கல் தான் கட்ட வேண்டும்...

யாழ்ப்பாணத்து இளைஞா்களின் மாற்றத்துக்கு காரணம்.. புலம்பெயா்ந்த அவா்களின் உறவினா்கள் தான் என்பது எனது கருத்து.  வேலை  வெட்டிக்கு போகாத இளைஞா்களுக்கு பணத்தினை அனுப்பி  மோட்டாா் சைக்கிள் எடுக்க வைத்ததும் அவா்கள் தான் மாதம் மாதம் மரத்தில புடுங்கி அனுப்புவது போல பணத்தை அனுப்பி பொறுப்பற்ற இளைஞா்களை உருவாக்கியதும் அவா்கள் தான்.

இன்னும் படித்துக் கொண்டிருக்கும் இளைஞா்களுக்கு வெளிநாட்டு ஆசையை காட்டி அவா்களை படிப்பில் அக்கறை செலுத்தாமல் ஆக்கியதும் புலம்பெயா்ந்து வாழும் உறவுகள் தான். 

நாங்கள் மணி கட்டவேண்டாம் மணி கட் பண்ணினாலே பாதிப்பிரச்சினை தீரும்...

ஆனாலும், கொள்ளையும் கூட சந்தா்ப்பம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தின் ஒரு முகம்தான் பெரும்பாலானோரின் கண்களுக்கு தெரிகிறது. யுத்த காலத்தில் ட்ரெயின்கூட ஓடாத யாழ்ப்பாணத்தில் விமான நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பயிற்சியும் ஒரு பக்கமாக நடக்கிறது. அதெல்லாம் பலரது கண்களில் படாது. பட்டாலும் அதற்கும் ஒரு நொட்டை சொல்ல சான்ஸூம் உள்ளது. இதோ இதுவும் யாழ்ப்பாணம்தான்-

AA-20141022-01.gif

AA-20141022-09.gif

AA-20141022-04.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளும் கசிப்பும் வேலிபாய்தலும் வன்புணர்வுகளும் எப்போதும் இருந்தே வந்துள்ளது. தற்போது குறிப்பாக பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் கொலை செய்வது தற்போது அதிகரித்துள்ளது.

காலத்துக்கேற்ப மாற முடியாத காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் கணனி நெற்வேர்க் கூடவே பல விதமான பாலியல் கண்டுகளிக்கும் வசதியும் வந்துள்ளது. பார் ரசி ருசிக்காதே என்ற கத்திமேல் நடக்கும் விழையாடையே கலாச்சாரம் என்னும் தக்கவைக்கப்பார்க்கின்றது. பார் ரசி ருசிக்காதே என்ற புலிகளின் கட்டுப்பாடு ருசி என்ற மூன்றாவது கட்டத்திற்குப்போனவர்களை மண்டையில் போட்டது. இப்போது அதிகாரமுள்ளவன் தானே ருசித்து மண்டையில் போடும் அதிகாரத்தையும் தானே எடுத்துக்கொள்கின்றான்.

பார்க்கில் இரண்டு காதலர்கள் முத்தம் கொடுத்தால் அதை உடனே களவாக படமெடுத்து இணையதளங்களில் போட்டு குய்யோ முறையோ என்று கத்தும் காட்டுமிராண்டிகள் தனி மனிதர்களது விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக மூக்கை நுழைப்பதுமில்லாமல் கலாச்சாரத்தை காமம் கவடு என்பதற்குள் மட்டும் தக்கவைக்க முற்படுகின்றனர். இவற்றுக்குள் எவ்வளவு இறுக்கம் வருகின்றதோ அதன் எதிர் விழைவு கொலை தற்கொலையில் வந்து முடிகின்றது.

உணர்வுகளை தூண்டுகின்ற கலாச்சாரங்கள் வடிகால்களை தடுக்கின்றது.

வடிகால்கள் தடுக்கப்படுகின்றபோது வன்புணர்வுகள் இயல்பாகின்றது

போலிக் கலாச்சாரம் தக்கவவ்க்கப்பட வன்புணர்வுகள் எல்லை மீறல்கள் சம்பவங்கள் மறைக்கப்பட வேண்டும்

மறைக்கப்படுவதற்கு கொலைகள் அவசியமாகின்றது.

இருபது முப்பது வருடங்களுக்கு முன்புவரை அதிகமாக பாலியல் இன்பத்தை அனுபவித்தவர்கள் கள்ளு இறக்கும் சீவல் தொழிலில் ஈடுபட்டவர்களே. இதில் சில ஆண்களுக்கு இருபது முப்பதுக்கும் மேற்பட்ட கள்ள உறவுகளும் இருந்துள்ளது. கட்டுமஸ்தான உடம்பும் இன்றய பெண்கள் மோகிக்கும் சிக்‌ஸ் பாக உடம்பும் அப்போது அவர்களுக்கே இருந்தது. இரவு புருசனுக்கு கள்ளுக் கொடுத்து மட்டையாக்கவும் கருக்கலில் மனைவிமார்களை உசார் பண்ணுவதிலும் கில்லாடிகளாக இருந்தார்கள். இப்போதய நிலையை விட அது மோசமாக இருந்தது காரணம் சாதீய இறுக்கம். இருந்தபோதும் இவைகள் கொலை வரை சென்றதில்லை. அப்போது நடந்த கொலைகள் வாள் வெட்டுகள் எல்லாம் இவர்களுடன் ஓடிப்போய் கலியாணம் செய்ய முற்பட்ட சம்பங்களின் பின்னணியிலேயே நடந்தது.

கலாச்சாரம் என்ற போர்வையில் சாதியமும் மத இறுக்கங்களும் அதை தக்க வைக்க மானுட இயல்புக்குப் புறம்பான போலியான தூய்மைவாதத்தையும் புனிதத்தையும் முன்நிறுத்திக்கொண்டிருக்கும் வரை கள்ள உறவுகளும் வன்புணர்வுகளும் அதன் நீட்சியான கொலைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இவைள் அறிவால் சரிசெய்ய முடியுமேயன்றி  சாதிய கலாச்சார பழமைவாதத்தால் சரிப்பண்ண முடியாது.

இந்த விடயங்கள் முன்னா் இருந்ததால் இப்போதும் இருந்து விட்டு போகட்டும் என்று சொல்ல வருகிறீா்களா? இல்லை எம்மால் இதை மாற்ற முடியாது... கட்டுப்பாடுகளை தளா்த்துங்கள்... அப்போது இவை தன் பாட்டில் மாற்றம் பெற்று விடும் என்கிறீா்களா?

மண்டையில் போடுவதால் மட்டுமே திருத்த முடியும் என்கிறீா்களா? 

நீங்கள் சொல்லும் எந்த விடயங்களும் 10 வருடத்துக்கு முன்னா் நடைபெற்றதாக நான் அறியவில்லை. அதே போல பெண்ணின் விருப்புடன் தொடா்பு பட்ட எந்த உறவு முறைக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவுமில்லை. 

கலாச்சார வளா்ச்சி கீழ்நோக்கி போவதன் அறிகுறியே இது. கலாச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்றவகையில் நல்ல முறையில் மாற்றமடைய வேண்டும் ஆனால் மாற்றம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த சமூகமே தீா்மானிக்க முடியும்.

இங்கு கருத்தை வெளியிட்டுள்ளவா்கள் புலம்பெயா் நாடுகளில் வாழும் மக்களோ, ஊடகங்களோ அல்ல அந்த மண்ணில் இருக்க கூடியவா்கள்.

இதற்கான தீா்வையும் அவா்களே காண வேண்டும், ஆனால் அடிப்படையில் இதில் எமது பங்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

கலாச்சார இறுக்கமே எல்லை மீறலுக்கும் வன்முறைக்கும் கொலைகளுக்கும் இட்டுச்செல்கின்றது. காலத்துக்கேற்ப அறிவுபூர்வமாக கலாச்சாரம் மாறுவதே இவற்றுக்கான தீர்வு.

முன்பு கள்ளும் கசிப்பும் இன்று பீர் அதே போல் முன்பும் கள்ள உறவுகள் வேலிபாய்தல் இருந்தது. இதை மூடி மறைக்க கொலைகளும் மண்டையில் போடுதலும் இருந்தது.

மானுட இயல்புக்கு குறுக்காக கட்டியமைக்கப்படும் கலாச்சாரங்கள் அந்தச் சமூகத்தை சிதைச்குமே தவிர மேம்படுத்தது.

இதற்கான தீர்வை அவரவர்தான் காணவேண்டும். எத் தீர்வையும் காண இந்தப் போலிக் கலாச்சாரங்கள் வரலாற்றில் இதுவரை அனுமதித்ததில்லை அதுபோல் இனியும் இல்லை.

மானுட இயல்புக்குப் புறம்பானனும் அறிவுக்கு முரணானதுமான பொய்யான வாழ்க்கைமுறைக்குள் சமூகத்தை தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருப்பதே இக்கலாச்சாரத்தின் அசைவியக்கம். இப் போலிக் கலாச்சாரத்தை உதறித் தள்ளுவதில் இருந்தே எதுவும் சாத்தியமாகமுடியும். அதுவரை இதே கதிதான்.

Link to comment
Share on other sites

10 வருடத்துக்கு முந்திய பாரிஸ், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய லண்டன், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய கொழும்பு , இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய சென்னை, இப்போ இல்லை

ஆனால் யாழ்ப்பாணம் மட்டும், 45 வயசிலும் கல்யாணம் ஆகாத முதிர் கன்னி போல் அப்படியே இருக்கோணும்.

எங்க மனிசிமார் புலத்தில் சம்பெயின், வைன் அடிக்கலாம்,

பிள்ளையள் லிவிங் டி கெதர் ஸெய்யலாம்

சிங்கிள் மதர்ஸ் ஆக இருக்கலாம்

ஆனால் யாழ்ப்பாணத்தில் யாராவது ஊறுகாய்தண்ணி, மோர்த்தண்ணி தவிர வேறு என்ன குடித்தாலும் டென்சனாயிடுவோம். ஜாக்கிரதை

உங்க வீட்டில ஆரும் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்... மற்றவங்களைக் கெடுக்காதீங்க!!  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சபேசன். பார்க்கவே சந்தோசமாயிருக்கு இதுக்கும் குட்டை பாவாடை போடலாமோ? லிப்ஸ்டிக் பூசலாமோ எனும் ரீதியில் தமிழ்த் தலிபான்கள் கருத்தெழுத்க்கூடும்.

நிதர்சன் - கடந்த பத்து வருடத்தில் விவாகரத்து, தனித்தாய்மை, நீலப்பட பார்வை லண்டன், பரிஸ் சென்னையில் எப்படி கூடியிருக்கு எண்டு பாருங்கள். இதுக்கு யாழ் மட்டும் எப்படி விதிவிலக்காகும்?

ஒரு லிபரல் சமூகம் என்றால் இது எல்லாம் இருக்கும். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே சட்டம் ஒழுங்கு பரிபாலனம்.

யுத்தத்தின் பிடியில் இருந்த யாழில், புலிகளின் பிடியில் இருந்த யாழில் இவற்றுக்கான வெளி முழுதும் அடை பட்டிருந்தது.

இப்போ கிடத்திருக்கும் வெளியில் இவை வெளிக்கிளம்புகிறன. யாழ்ப்பாணம் என்றால் என்னவோ கலாச்சாரத்தின் தொட்டில் என்றும், யாழ்ப்பாண பெண்கள் கற்பில் கண்ணகிக்கு டியூசன் எடுப்பவர் எனும் ரீதியில் பொய்யான கட்டுமானங்களை தாங்கி வாழ்பவர்களுக்கு இது பெரும் ஆச்சரியமாயிருக்கலாம். விடயம் தெரிந்தவர்களுக்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் உங்கள் லெவலுக்கு கீழ்தரமாக இறங்கி கதைக்க நான் தயாரில்லை - ஆனால் வெஸ்மினிஸ்டர் ஸ்குயாருக்கு போராட வந்துட்டு - அருகில் இருந்த மெக்டொனால்ட்ஸ் பாத்ரூமுக்க நடந்த கூத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.

பொத்தாம் பொதுவாக கதைக்க முடியாது. ஆனால் புலம்பெயர் சமூகத்தில் உங்கள் கட்டுப்பட்டித்தனம் வீசியெறியப்பட்டு பலநாட்ட்களாகிறது.

அம்மாமாரே பிள்ளைகளை கொல்லுவது, வேலிபாய்வது, இப்படி பல விடயங்கள் நடக்கிறது. நீங்கள்தான் பூனை போல கண்ணை மூடிக்கொண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சபேசன். பார்க்கவே சந்தோசமாயிருக்கு இதுக்கும் குட்டை பாவாடை போடலாமோ? லிப்ஸ்டிக் பூசலாமோ எனும் ரீதியில் தமிழ்த் தலிபான்கள் கருத்தெழுத்க்கூடும்.

நிதர்சன் - கடந்த பத்து வருடத்தில் விவாகரத்து, தனித்தாய்மை, நீலப்பட பார்வை லண்டன், பரிஸ் சென்னையில் எப்படி கூடியிருக்கு எண்டு பாருங்கள். இதுக்கு யாழ் மட்டும் எப்படி விதிவிலக்காகும்?

ஒரு லிபரல் சமூகம் என்றால் இது எல்லாம் இருக்கும். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே சட்டம் ஒழுங்கு பரிபாலனம்.

யுத்தத்தின் பிடியில் இருந்த யாழில், புலிகளின் பிடியில் இருந்த யாழில் இவற்றுக்கான வெளி முழுதும் அடை பட்டிருந்தது.

இப்போ கிடத்திருக்கும் வெளியில் இவை வெளிக்கிளம்புகிறன. யாழ்ப்பாணம் என்றால் என்னவோ கலாச்சாரத்தின் தொட்டில் என்றும், யாழ்ப்பாண பெண்கள் கற்பில் கண்ணகிக்கு டியூசன் எடுப்பவர் எனும் ரீதியில் பொய்யான கட்டுமானங்களை தாங்கி வாழ்பவர்களுக்கு இது பெரும் ஆச்சரியமாயிருக்கலாம். விடயம் தெரிந்தவர்களுக்கில்லை

ஏன் கட்டுபடுத்த வேண்டும் ?
மேலே எல்லாம் நல்லாய் முன்னேறி போவதாக எழுதினீர்கள். உங்கள்  கருத்தை பார்த்து நானும் பரவசபட்டேன். புலம்பெயர்ந்த பின்பு அங்கு என்ன நடக்கிறது என்பது உங்களைபோல ஒரு சிலர் எழுதும்போதுதான் வாசித்து அறிய கூடியதாக இருக்கிறது.
 
பாரிஸ் வளருது.....
லண்டன் வளருது ............
லாஸ் வேகாஸ் வளருது ...........
அப்படியே யாழும் வளருது என்று நீங்கள் எழுதியதை பார்த்து ஆனந்தம் அடைந்தேன். 2 மணி கூட ஆகவில்லை ............. கட்டுபடுத்த வேண்டும் என்று குண்டை தூக்கி தலையில் போடுகிறீர்கள்??
(இதுதானே மேலே செய்தியிலும் பட்டும்  படமால் இருக்கிறது. இப்பதான் செய்தியை வாசித்தீர்களா?)
 
நோ ... நோ .. தயவு செய்து முன்னேற்றங்களை தடுக்காதீர்கள்!
கட்டுப்பாடு அது இது என்று அடுத்த தலைமுறையை பாழ் படுத்தி விடாதீர்கள். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி,

கட்டுப்படுத்துவது என்றால் தடை செய்வதில்லை.

உதாரணதுக்கு சாராயத்தை யாரும் விற்க வாங்க கூடாது என்பது, தடை

கட்டுப்படுத்துவது - 16 வயதுக்கு மேல்தான் வாங்கலாம் என்பது.

ஆபாச படத்தை முழுவதும் தடுப்பது - தடை

வன்முறை காட்சிகள், துவேச காட்சிக்களை கட்டுப்படுத்துவது - கட்டுப்பாடு.

எந்தளவுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

Prohibition வேறு regulation வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடத்துக்கு முந்திய பாரிஸ், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய லண்டன், இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய கொழும்பு , இப்போ இல்லை

10 வருடத்துக்கு முந்திய சென்னை, இப்போ இல்லை

ஆனால் யாழ்ப்பாணம் மட்டும், 45 வயசிலும் கல்யாணம் ஆகாத முதிர் கன்னி போல் அப்படியே இருக்கோணும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் யாராவது ஊறுகாய்தண்ணி, மோர்த்தண்ணி தவிர வேறு என்ன குடித்தாலும் டென்சனாயிடுவோம். ஜாக்கிரதை

இத்துடன்  நீங்க நிறுத்தியிருக்கணும்...

அதுக்கு மேல  உங்க வக்கிரகம் தான் வெளியில் வருகுது.... :(

பொதுப்பிரச்சினை என்றுவிட்டு

நீங்க   எதைப்பேசுகின்றீர்கள்...........????  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி,

கட்டுப்படுத்துவது என்றால் தடை செய்வதில்லை.

உதாரணதுக்கு சாராயத்தை யாரும் விற்க வாங்க கூடாது என்பது, தடை

கட்டுப்படுத்துவது - 16 வயதுக்கு மேல்தான் வாங்கலாம் என்பது.

ஆபாச படத்தை முழுவதும் தடுப்பது - தடை

வன்முறை காட்சிகள், துவேச காட்சிக்களை கட்டுப்படுத்துவது - கட்டுப்பாடு.

எந்தளவுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

Prohibition வேறு regulation வேறு.

அப்பாடா ................ நெஞ்சுல பாலை வார்த்தீர்கள்.
எங்கே சமூக சீர்கேடான விடயங்களுக்கு யாழில் கட்டுபாடு வேண்டும் அப்படி என்று எழுதி விட்டீர்களே என்று ஒரு கணம் ஆடி போனேன்.
 
ஆனா அண்ணா திரும்பவும் என்னை குழப்புறீங்கள் ....
ஏன் நாட்டுக்கு நாடு வித்தியாச பட வேண்டும் .....?
 
பாரிஸ் வளர்ச்சி போல ............
மும்பை கிளர்ச்சி போல ......
அம்ஸ்டர்டாம் ஆனந்தம் போல .......... ஒரு பரலாக வளர்ச்சி இருப்பதுதானே நாடுகளுக்கு நல்லம்?
பண்ட மாற்றங்களில் சிக்கல் இல்லாமல் இங்கே இருப்பதை அங்கே ஏற்றலாம் .... அங்கே இருப்பதை இங்கே இறக்கலாம். 
 
ஏன் நாடுகளுக்கு நாடு வேறு பட வேண்டும்??  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்தும் பழக்கம் முதலில் அதை அருந்துபவர்களுக்கே ஆகாது.
அடுத்து மதுபோதையில் இருப்பவர்களால் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு.
குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மதுபோதையில் இருப்பவர்களால் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்றால் அது தடுக்கப்படுவதில் தப்பில்லை.

முந்திய காலங்களில் ஜேர்மனியில் எந்த இடத்திலும் மது அருந்தலாம்.
இப்போது அப்படியல்ல பொது இடங்களில் பூங்காக்களில் மது அருந்துவது புகைத்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.
காரணம் அதனால் பாதிக்கப்பட்ட மக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தமே.

கொழும்பில் பல இடங்களில் இந்த ஒழுங்குமுறை அமுலில் இருந்தும்
யாழில் மட்டும் பொது இடங்களில் ஒழுக்கயீனத்திற்கு அனுமதி இருப்பதில் சந்தேகம் உள்ளது. இளந்தலைமுறையினரைத் தவறான வழியில் செல்வதற்கு அனுமதித்து தமிழ்ச் சமுதாயத்தையே சீரழிப்பதற்கான முயற்சி நடைபெறுகின்றது.

பியர் போத்தல்களுடன் வீதிகளில் இளைஞர்கள்  உலா வருவதுதான் முன்னேற்றம் என்றால்.....
விவாகரத்து வீதம் அதிகரிப்பது தான் முன்னேற்றம் என்றால்....
பாலியல் கொடுமைகள் அதிகரிப்பது தான் முன்னேற்றம் என்றால்....
பூங்காக்களில் கட்டிப்பிடித்து முத்தமிட அனுமதிப்பது தான் முன்னேற்றம் என்றால்.... முன்னேற்றம் வந்துவிடும்     :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ஸே இதோ ஒரு சவால்?

1) உங்களில் எத்தனை பேர் சிகெரெட் மது அருந்துவதில்லை?

2) உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்கு மேல் எத்தனை பேர் இதை செய்யவில்லை?

3) அவர்களில் எத்தனை பேர் ஆண் பெண் சினேகிதன்/தி வைத்திருக்கிறார்கள்?

4) மணிக்கணக்கில் போனில், பேச்புக்கில், அரட்டை அடிப்பதில்லை?

5) ஆபாசப் படம் ஒருக்கா கூட பார்ததில்லை?

6) டேட்டிங் போகவில்லை?

7) கிளபிங் போகவில்லை?

8) 1 மணிக்கு பின் வீடு திரும்பவில்லை?

இப்படி நாமும் பிள்ளைகளும் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டு யாழில் உள்ளவன் மட்டும் சங்க காலத்தில் வாழ வேண்டும் எண்டு எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னால்

1) நீங்கள் எங்களுக்கு பொய் சொல்லுகிறீர்கள்

2) அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நல்லா பூச்சுத்துகிறார்கள். ;)

கேள்வியும்

பதிலும் நீங்களே..

எதைச்சொன்னாலும் பதிலை  வைத்திருக்கின்றீர்கள்

உங்கள்  எழுத்துக்கள் எல்லாமே  இப்படித்தான் உள்ளன....

எதை எழுத........???

Link to comment
Share on other sites

புலம் பெயர்ஸே இதோ ஒரு சவால்?

1) உங்களில் எத்தனை பேர் சிகெரெட் மது அருந்துவதில்லை?

2) உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்கு மேல் எத்தனை பேர் இதை செய்யவில்லை?

3) அவர்களில் எத்தனை பேர் ஆண் பெண் சினேகிதன்/தி வைத்திருக்கிறார்கள்?

4) மணிக்கணக்கில் போனில், பேச்புக்கில், அரட்டை அடிப்பதில்லை?

5) ஆபாசப் படம் ஒருக்கா கூட பார்ததில்லை?

6) டேட்டிங் போகவில்லை?

7) கிளபிங் போகவில்லை?

8) 1 மணிக்கு பின் வீடு திரும்பவில்லை?

இப்படி நாமும் பிள்ளைகளும் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டு யாழில் உள்ளவன் மட்டும் சங்க காலத்தில் வாழ வேண்டும் எண்டு எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னால்

1) நீங்கள் எங்களுக்கு பொய் சொல்லுகிறீர்கள்

2) அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நல்லா பூச்சுத்துகிறார்கள். ;)

சரி கோசான் உங்கள் கருத்தை ஏற்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி,நீங்கள் கேட்ட கேள்விகளில் எத்தனையை உங்கள் பிள்ளைகள் செய்தால் சரி என்று ஏற்பீர்கள்.

இதற்கு இரண்டாக சொல்லுங்கள்.

1.அளவோடு செய்தால்.

2.இன்னொன்று அளவில்லாமல் செய்தால்.

அளவுக்கு மீறி போகும்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கட்டுபடுத்தும் நடைமுறைகள் அல்லது காவல்துறை நடைமுறைகளில் எத்தனை வீதம் தாயகத்தில் இருக்கு.?

நான் கேட்பதால் உங்கள் கருத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால் உங்கள் கருத்தை மேலும் மெருகூட்ட நினைக்கிறேன்.

வளர்ச்சி வேற வீக்கம் வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி,

நாட்டுக்கு நாடு வேறு பட அங்கே வாழும் மக்கள் இந்த விடயங்களை பற்றி என்ன நினக்கிறார்கள் என்பது காரணமாகிறது. அதையே அன்நாட்டுச்சட்டங்கள் பிரதிபலிக்கிறன.

இலங்கையில் இதுக்கென்று சட்டங்கள் இருக்கிறது. நேரில் பார்த்த வகையில் யாழுக்கும், கண்டிக்கும், வவுனியாக்கும் மட்டுவிற்க்கும் ஒரு வித்யாசமுமில்லை.

யாழ்ப்பாணம் மட்டுமே இலங்கையின் கற்புக்கோட்டை என்பது போலவும் மற்றையவர்கள் எல்லாம் என்னவோ காட்டுமிராட்ண்டிகள் என்றும் கற்பனையில் ( ஹிட்லரின் ஆரிய இனம் பற்றிய ஒரு மேலாதிக்க கோட்பாடு போல) வாழும் சில தலிபான்களின் கூச்சல்தான் இது.

புலி இருந்தால் இப்படி ஆகுமா? எண்டு சப்புக்கட்டவும் இது காரணமாவதால் - புலத்திலும் இந்த கூச்சலுக்கு நல்ல கிராக்கி.

நீங்கள் நினைப்பது போல யாழ் ஒன்றும் குட்டிச்சிவரகவில்லை. அங்கே வாழும் இளைய சமுதாயம் ஒன்றும் மந்தைகளும் அல்ல.

நல்லதும் கெட்டதும் இப்போ அங்கே புழங்குது - இது ஒரு லிபரல் ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாதது - ஆனால் மிகப்பெரும்பாலா இளைஞர்கள் எல்லாத்தையும் அளவாக செய்பவராகவே இருக்கிறனர்.

எந்த ஊரில்தான் குடிகாரகளும் விபச்சாரிகளும் இல்லை, யாழ்ப்பாணம் என்ன கண்ணகிகள் மட்டும் வைக்கும் ஊரா? Please grow up :)

Link to comment
Share on other sites

புலம் பெயர்ஸே இதோ ஒரு சவால்?

1) உங்களில் எத்தனை பேர் சிகெரெட் மது அருந்துவதில்லை?

2) உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்கு மேல் எத்தனை பேர் இதை செய்யவில்லை?

3) அவர்களில் எத்தனை பேர் ஆண் பெண் சினேகிதன்/தி வைத்திருக்கிறார்கள்?

4) மணிக்கணக்கில் போனில், பேச்புக்கில், அரட்டை அடிப்பதில்லை?

5) ஆபாசப் படம் ஒருக்கா கூட பார்ததில்லை?

6) டேட்டிங் போகவில்லை?

7) கிளபிங் போகவில்லை?

8) 1 மணிக்கு பின் வீடு திரும்பவில்லை?

இப்படி நாமும் பிள்ளைகளும் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டு யாழில் உள்ளவன் மட்டும் சங்க காலத்தில் வாழ வேண்டும் எண்டு எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னால்

1) நீங்கள் எங்களுக்கு பொய் சொல்லுகிறீர்கள்

2) அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நல்லா பூச்சுத்துகிறார்கள். ;)

கோசான் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால் யாழ்ப்பாண தமிழர்கள் பழைய பஞ்சாங்கங்களாக இருப்பதற்கு புலம் பெயர் ஒரு காரணமல்ல. எதெற்கெடுத்தாலும் யோசிக்காது  புலம்பெயர்சை தாக்கும் தங்கள் மனோபாவம் தவறானது. எந்த காலத்திலும் யாழ் தமிழர்கள் ஒரு பழைய பஞ்சாங்கங்களாக இருப்பதை சரியாக அவதானிப்பவர்கள் கவனிக்கலாம். ஏதோ ஒரு சில புலம் பெயர் தமிழர்கள் இவ்வாறு  பழமைபேண் கருத்துகளை கூறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த மனப்பான்மையை ஊட்டியது யாழ்பாணத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதானேயொழிய வேறொன்றுமில்லை. உண்மையில் யுத்தம் கூட ஒரு காரணமல்ல. யுத்த நடைபெறாது விட்டிருந்தாலும் யாழ்பாண தமிழர்கள் அவ்வாறு தான் இருந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கோசான் உங்கள் கருத்தை ஏற்கிறேன். உங்களிடம் ஒரு கேள்வி,நீங்கள் கேட்ட கேள்விகளில் எத்தனையை உங்கள் பிள்ளைகள் செய்தால் சரி என்று ஏற்பீர்கள்.

இதற்கு இரண்டாக சொல்லுங்கள்.

1.அளவோடு செய்தால்.

2.இன்னொன்று அளவில்லாமல் செய்தால்.

அளவுக்கு மீறி போகும்போது புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கட்டுபடுத்தும் நடைமுறைகள் அல்லது காவல்துறை நடைமுறைகளில் எத்தனை வீதம் தாயகத்தில் இருக்கு.?

நான் கேட்பதால் உங்கள் கருத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால் உங்கள் கருத்தை மேலும் மெருகூட்ட நினைக்கிறேன்.

இது போன்ற பழக்கங்கள் தீயவை

உடல் நலத்துக்கு கேடானவை என்பதை சொல்லியே  வளர்க்கின்றேன்

அத்துடன் இவற்றில் எதையும் நான் தொட்டதில்லை...

நாம் முன்னுதாரணமாக இருக்கணும்

அப்பா இவற்றை தவிர்த்துள்ளார் என்பதை அவர்களுக்கு உணர்த்தணும்...

அடுத்து

எனக்கு இவர் எழுதிய  வயதில் 3 பேர் உள்ளனர்

பாடசாலையிலோ

நண்பர்கள் வட்டத்திலோ

குடும்ப உறவுகள் வட்டத்திலோ நல்ல பெயரே உள்ளது

இதுவரை இது பற்றிய  எதுவித அசுமாத்தமும்  இல்லை...

நான் பிரான்சில் உள்ளேன் யயா.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.