Jump to content

பத்து வருடங்களுக்கு முன் பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்தும் பழக்கம் முதலில் அதை அருந்துபவர்களுக்கே ஆகாது.

அடுத்து மதுபோதையில் இருப்பவர்களால் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மதுபோதையில் இருப்பவர்களால் மற்றவர்களுக்குத் தொந்தரவு என்றால் அது தடுக்கப்படுவதில் தப்பில்லை.

முந்திய காலங்களில் ஜேர்மனியில் எந்த இடத்திலும் மது அருந்தலாம்.

இப்போது அப்படியல்ல பொது இடங்களில் பூங்காக்களில் மது அருந்துவது புகைத்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

காரணம் அதனால் பாதிக்கப்பட்ட மக்களால் கொடுக்கப்பட்ட அழுத்தமே.

கொழும்பில் பல இடங்களில் இந்த ஒழுங்குமுறை அமுலில் இருந்தும்

யாழில் மட்டும் பொது இடங்களில் ஒழுக்கயீனத்திற்கு அனுமதி இருப்பதில் சந்தேகம் உள்ளது. இளந்தலைமுறையினரைத் தவறான வழியில் செல்வதற்கு அனுமதித்து தமிழ்ச் சமுதாயத்தையே சீரழிப்பதற்கான முயற்சி நடைபெறுகின்றது.

பியர் போத்தல்களுடன் வீதிகளில் இளைஞர்கள்  உலா வருவதுதான் முன்னேற்றம் என்றால்.....

விவாகரத்து வீதம் அதிகரிப்பது தான் முன்னேற்றம் என்றால்....

பாலியல் கொடுமைகள் அதிகரிப்பது தான் முன்னேற்றம் என்றால்....

பூங்காக்களில் கட்டிப்பிடித்து முத்தமிட அனுமதிப்பது தான் முன்னேற்றம் என்றால்.... முன்னேற்றம் வந்துவிடும்     :D:lol:

உங்களுக்கு விடயம் விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.
 
Regulation   வேற Probation வேற. (தலைவரிடம் இன்று  கற்று கொண்டது)
இப்போ அமெரிக்காவை பார்த்தீர்கள் என்றால் லாஸ் வெகா தவிர்த்து மற்ற எல்லா இடமும் விபச்சாரம் தடை செய்யபட்டிருக்கிறது. சமூதாயம் சீரழியும் இயல்பான குடும்ப வாழ்க்கை பாழ்படும் என்று பல காரணங்கள் சொல்கிறார்கள் அது தவறு (இது  probation).  காலை 7:30 மணியில் இருந்து பின்னிரவு 3;30 மட்டுமே விபச்சார விடுதிகள் திறக்கப்டும் (இது regulation) இதுதான் வரவேற்க படவேண்டும்.
 
இப்போ பார்த்தீர்கள் என்றால் ...... சமூதாயம் சீரழியும் என்று போதைவஸ்த்தை குறிப்பா எல்லா நாடும் தடை செய்து வைத்திருக்கிறது .... இது கூடாது.
ஒரு நாளைக்கு 5 கிராம் மட்டுமே வாங்கலாம் அப்படி என்று ரேகுலசன் கொண்டு வர வேண்டும்.
 
இன்னொரு விதமாக பார்த்தீர்கள் என்றால் .............
கொலை செய்வதை குற்றம் என்று எல்லா நாடும் தடை செய்து வைத்திருக்கிறார்கள்( இது probation) இது கூடாது.
ஒருவர் 5-10 கொலைகளை மட்டுமே ஒரு நாட்டில் செய்யலாம் (இது regulation) இது வரவேற்க பட வேண்டும்.
இதைதான் நாங்கள் சொல்கிறோம்.
 
யாழ் முன்னேற வேண்டும்!
Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

தலை சுத்துது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

என்பிள்ளைகள் இன்னும் அந்தநிலைக்கு (வயதால்) வரவில்லை. ஒரு கட்டுப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு இவை பெரும் சவால்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதையுமளவோடு moderation இல் செய்யுங்கள். அடிமையாக்கும் எதையும் தொடாதீர்கள் என்பதே என் அணுகுமுறை.

ஆனால் அதையும்தாண்டி அவர்கள் போகாமலிருக்க நல்ல பள்ளியும், வீட்டில் நல்ல வழிகாட்டலும், மனம் திறந்து பேணும் பெற்றோரும் உதவும் என்று நம்புகிறேன். It's all about educating young people. Not to buildup myths and lies about our culture in their mind but to tell them if you don't do this in moderation, it will harm you.

இவை எல்லாத்தையும் மீறி சிலது வழிதவறிப்போகும் - அது காலம் விட்ட வழியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். கேணி அது probation ல்லை. Prohibition. ( சனி மாற்றம் சரியில்லைபோல - இப்படி வந்து மாரடிக்க வேண்டிக்கிடக்கு).

இதைத்தான் இத்திரியில் எல்லோரும் சொல்கிறார்கள்

இவை அதிகரித்து

சூழல் அவ்வாறு அதிகம் மாறி

அதிகம் பேர் கெட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கம் தானையா..

அதை என் பொரிந்து தள்ளுகிறீர்கள்... :(

Link to comment
Share on other sites

சரி அப்படியானால்

அப்படியான வழிகாட்டல் இல்லாத, அல்லது வழிகாட்டத்தவறிய சமுதாயம் இப்போ தாயகத்தில் உருவாகிறது என்பதற்கு மேலே உள்ள செய்தியை ஒரு அறிகுறியாக நாங்கள் கருதலாமா ..??

வெறுமனே யாழ்ப்பாணம் என்ற வட்டத்துக்குள் தமிழ் சமுதாயத்தை அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த செய்தி யாழ்பாணத்தில் மட்டும் தான் கலாச்சாரம் பேணபட்டது போன்ற மறைமுக கருத்துருவாக்கம் செய்ய முனைகிறது.

உண்மையில் எங்களின் மூத்த சமுதாயம் moderation என்ற பதத்தை கூட அறியாதவர்கள் அல்லது அறிய விரும்பாதவர்கள். அது தான் இந்த நிலைக்கு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி நான் சொன்னது ஒரு மண்ணும் உங்களுக்கு புரியவில்லை என்பது உங்கள் பதிவை பார்க்க தெளிவா விளங்குது. பாருங்கோ, பாவம் விசுகு ஐயா,அவரையும் கொன்பியூஸ் பண்ணிப்போட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் - கடந்த பத்து வருடத்தில் விவாகரத்து, தனித்தாய்மை, நீலப்பட பார்வை லண்டன், பரிஸ் சென்னையில் எப்படி கூடியிருக்கு எண்டு பாருங்கள். இதுக்கு யாழ் மட்டும் எப்படி விதிவிலக்காகும்?

ஒரு லிபரல் சமூகம் என்றால் இது எல்லாம் இருக்கும். இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே சட்டம் ஒழுங்கு பரிபாலனம்.

யுத்தத்தின் பிடியில் இருந்த யாழில், புலிகளின் பிடியில் இருந்த யாழில் இவற்றுக்கான வெளி முழுதும் அடை பட்டிருந்தது.

இப்போ கிடத்திருக்கும் வெளியில் இவை வெளிக்கிளம்புகிறன. யாழ்ப்பாணம் என்றால் என்னவோ கலாச்சாரத்தின் தொட்டில் என்றும், யாழ்ப்பாண பெண்கள் கற்பில் கண்ணகிக்கு டியூசன் எடுப்பவர் எனும் ரீதியில் பொய்யான கட்டுமானங்களை தாங்கி வாழ்பவர்களுக்கு இது பெரும் ஆச்சரியமாயிருக்கலாம். விடயம் தெரிந்தவர்களுக்கில்லை

Goshan நீங்கள் சொல்வதைப் போல அவை அதிகாித்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்க்கு இல்லை. ஆனால் யாழ் விதிக்காகவே இருக்கிறது. நீங்கள் சொல்லும் அனைத்து விடயங்களும் அதிகாித்திருக்கும் நிலையில் இளைஞா்களிடமும், சமூகத்திடமும் இங்கு பல முன்னேற்றகரமான விடயங்கள் அதிகாித்திருக்கின்றன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதல் கருத்தில் கூறியது போல எதையும் எதிா்க்க வேண்டும் என்ற வகையில் எனது கருத்துக்களை முன் வைக்க விரும்பவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வளா்ச்சி பாதையை விடுத்து சமூகத்தின் வீழ்ச்சிப்பாதைக்கே கொண்டு செல்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிஞ்சு போச்சு பகலவன்.

1) யாழில் அப்படி ஒன்றும் பிரச்சினை பூதாகாரமில்லை, தெரு தெருவா பயணித்தேன், அப்படி ஒண்டும் அங்கே பியர் போத்தல் நிரம்பி வழியவில்லை.

2) இவற்றுக்கான தீர்வு வீட்டிலே காட்டும் அணுகுமுறையில் இருக்கு. வீட்டில் ஓவர் இறுக்கம் காட்டும் பிள்ளைகளே பின்னாளில் வழிதவறிப்போகிறார்கள். பெற்றோருக்கு பிள்ளைகளில் பொய் புரியும் போது - ரூ லேட்

துல்ஸ் - யாழின் பத்தாம் பசலித்தனம் உண்மைதான் - ஆனால் யாழ்ப்பாணமே மாறி வருகுது - ஆனால் புலத்துக்கு அதை காவி வந்த கூட்டம்தான் நிண்டு குத்தி முறியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ஸே இதோ ஒரு சவால்?

1) உங்களில் எத்தனை பேர் சிகெரெட் மது அருந்துவதில்லை?

2) உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்கு மேல் எத்தனை பேர் இதை செய்யவில்லை?

3) அவர்களில் எத்தனை பேர் ஆண் பெண் சினேகிதன்/தி வைத்திருக்கிறார்கள்?

4) மணிக்கணக்கில் போனில், பேச்புக்கில், அரட்டை அடிப்பதில்லை?

5) ஆபாசப் படம் ஒருக்கா கூட பார்ததில்லை?

6) டேட்டிங் போகவில்லை?

7) கிளபிங் போகவில்லை?

8) 1 மணிக்கு பின் வீடு திரும்பவில்லை?

இப்படி நாமும் பிள்ளைகளும் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டு யாழில் உள்ளவன் மட்டும் சங்க காலத்தில் வாழ வேண்டும் எண்டு எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னால்

1) நீங்கள் எங்களுக்கு பொய் சொல்லுகிறீர்கள்

2) அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நல்லா பூச்சுத்துகிறார்கள். ;)

கண்ணதாசன் சுயசரிதை எழுதியபோது யாரோ கேட்டார்களாம்.
பெரிய பெரிய தலைவர்கள் எழுதுகிறார்கள். அதை படித்து எப்படி வளர்வது என்பதை அறியலாம்.
நீங்கள் ஏன் சுயசரிசை எழுதுகிறீர்கள் என்று?
 
கண்ணதாசன் கோவ  படாமல் சொன்னாராம்.
அவர்கள் எப்படி வாழ் வேண்டும் என்பதற்கு எழுதிகிறார்கள்.
நான் எப்படி வாழ கூடாது என்பதற்கு எழுதுகிறேன் என்று.
 
புலம்பெயர்ந்தவர்கள் ............ எங்கே போவது என்பதையோ ... அங்கே கலச்சாரம் எப்படி இருப்பது என்பதையோ.
நிர்ணயிக்க முடியாதவர்கள்.
புதிய சூழலுக்குள் புகும்போது சில புதிய விடயங்கள் உள்வாங்க படலாம்.
பல தவறுகளுக்கு சூழ்நிலை காரணமாகிறது.
 
ஏன் சூழ்நிலையை பாழாக்க வேண்டும்?
ஒரு குறித்த சூழலில் சிலர் பாழ் ஆவதற்கும்.
ஒரு குறித்த சிலரால ஒரு சூழல் பாழ் ஆவதற்கும். உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாதவர்கள்.
இப்படியான சமூக சீர்திருத்தம் பற்றிய விடயங்களை பேசாது இருப்பதே சிறப்பு (இது என்னுடைய தனிபட்ட கருத்து. இதுக்கு வேறு விஞ்ஞான கருத்துக்கள் இருக்கலாம்) 
"மாடர்ன்" நவநாகரீகம் என்பதை சரியாக புரியபடாத இடங்களில் இது பல உயிர்களை கூட  குடித்திருக்கிறது.அழிவுகளே  மிஞ்சும்.
 
இங்கே இருக்கும் சிலர் ஆச்சரிய படலாம் ........ மேலை நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் அனைத்து ஆபாச  தளங்களும்  இணையத்தில் தடை செய்யபட்டிருகிறது.
1980 இல் இருந்த அமெரிக்கா இன்று இங்கே இல்லை. எல்லாம் உயரிய சட்டங்களால் கட்டுபாடுகள் விதித்து  தடை செய்யபட்டுள்ளது. 
நீங்கள் வசிக்கும் நாடுகளிலும் இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சமூதாய சீர்திருத்த சிந்தனைகள் எங்கும் அமுல்படுத்த பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
 
புரியாத சிலபேர்க்கு புது நாகரீகம்.............
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்???  

ம். கேணி அது probation ல்லை. Prohibition. ( சனி மாற்றம் சரியில்லைபோல - இப்படி வந்து மாரடிக்க வேண்டிக்கிடக்கு).

மன்னிக்கவும் உங்கள் கருத்தை திசை திருப்பும் எண்ணத்தால் அதை எழுதவில்லை.
அவசரத்தில் அப்படி எழுதிவிட்டேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நாகரீகம்? எது அநாகரீகம்? களப்பிரர்கள் வரும் வரைக்கும் தமிழர்க்கு மேலங்கி அணிவதே நாகரீகம்மாய் தெரியவில்லை என்கிறனர் சில ஆய்வாளர்கள்.

இங்கே சிலர் தம்மை தாமே கலாச்சாரக்காவலர்கள் போல பாவித்து கதையளக்கிறார்கள்.

ஒரு படத்துக்கு கலாச்சார காவலர் கிருஸ்ணசாமியால் பிரச்சினை வந்தபோது தண்ணியப் போட்டு கமல் நிள விடயங்களை சொல்லி இருப்பார். யூடியூப்பில் இருக்கு - இவர்களை பார்க்க அதுதான் நியாபகம் வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி நான் சொன்னது ஒரு மண்ணும் உங்களுக்கு புரியவில்லை என்பது உங்கள் பதிவை பார்க்க தெளிவா விளங்குது. பாருங்கோ, பாவம் விசுகு ஐயா,அவரையும் கொன்பியூஸ் பண்ணிப்போட்டியள்.

மேலே உள்ள கருத்தை தவிர்த்து ...எனது கருத்தாக நான் எதையுமே பதியவில்லை.
விளங்காத விடயங்களை உங்களிடம் கேட்டேன் அவளவுதானே??
 
நீங்கள் சொன்ன விளக்கங்களில் ஏதும் குழப்பம் இருக்குமோ?
நீங்கள் சொன்னதை தானே அப்படியே திருப்பி சொன்னேன். 
 
இப்போ நீங்கள் என்னை குழப்புறீங்கள்.
 
எனக்கு என்னமோ நாங்கள் இருவரும் அந்த செய்தியை அப்படியே விட்டிருக்கலாமோ என்றுதான் தோணுது.
உங்களின் பேச்சை கேட்டு ..... நானும் ஆனந்தத்தில் துள்ளி குதித்து எழுதிவிட்டேன்.
 
இப்போ மற்றவர்கள் .... நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் அப்படி என்று கேட்க போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம், நாகரீகம், என்பது நதிபோல ஓடிக்க்கொண்டே இருக்கும், மாறிக்கொண்டே இருக்கும்.

லாஸ் ஏஞசலீசோ, லா சப்பலோ, லண்டனோ - யாழ்ப்பாணமோ இதுதான் நியதி. இதை தடுத்த நிறுத்தலாம் 10 ஆண்டுகள் பிந்தள்ளலாம் என்பெதெல்லாம் மானுட வரலாற்றின் போக்கை அறியாதோர் சொல்லுவது.

முல்லா ஒமர் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்,

என்பிள்ளைகள் இன்னும் அந்தநிலைக்கு (வயதால்) வரவில்லை. ஒரு கட்டுப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு இவை பெரும் சவால்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதையுமளவோடு moderation இல் செய்யுங்கள். அடிமையாக்கும் எதையும் தொடாதீர்கள் என்பதே என் அணுகுமுறை.

ஆனால் அதையும்தாண்டி அவர்கள் போகாமலிருக்க நல்ல பள்ளியும், வீட்டில் நல்ல வழிகாட்டலும், மனம் திறந்து பேணும் பெற்றோரும் உதவும் என்று நம்புகிறேன். It's all about educating young people. Not to buildup myths and lies about our culture in their mind but to tell them if you don't do this in moderation, it will harm you.

இவை எல்லாத்தையும் மீறி சிலது வழிதவறிப்போகும் - அது காலம் விட்ட வழியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை மட்டுமில்லை. - எல்லா திரிகளையும் நீங்கள் சும்மா விட்டால் - அறிவுபூர்வ விவாதம் மேம்படும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

போர்த்தேங்காய் - மனிதனின் சிறந்த நண்பனை அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம், நாகரீகம், என்பது நதிபோல ஓடிக்க்கொண்டே இருக்கும், மாறிக்கொண்டே இருக்கும்.

லாஸ் ஏஞசலீசோ, லா சப்பலோ, லண்டனோ - யாழ்ப்பாணமோ இதுதான் நியதி. இதை தடுத்த நிறுத்தலாம் 10 ஆண்டுகள் பிந்தள்ளலாம் என்பெதெல்லாம் மானுட வரலாற்றின் போக்கை அறியாதோர் சொல்லுவது.

முல்லா ஒமர் போல.

இதுவும் நாமே.....

அதுவும் நாமே.....

எதுக்கு  ஆர்ப்பாட்டம்??

எது நடந்ததோ

அது

நன்றாகவே நடந்தது

எது நடக்கணுமோ

அதுவே நடக்கும்.. :(  :(

Link to comment
Share on other sites

பச்சை முடிஞ்சு போச்சு பகலவன்.

1) யாழில் அப்படி ஒன்றும் பிரச்சினை பூதாகாரமில்லை, தெரு தெருவா பயணித்தேன், அப்படி ஒண்டும் அங்கே பியர் போத்தல் நிரம்பி வழியவில்லை.

2) இவற்றுக்கான தீர்வு வீட்டிலே காட்டும் அணுகுமுறையில் இருக்கு. வீட்டில் ஓவர் இறுக்கம் காட்டும் பிள்ளைகளே பின்னாளில் வழிதவறிப்போகிறார்கள். பெற்றோருக்கு பிள்ளைகளில் பொய் புரியும் போது - ரூ லேட்

துல்ஸ் - யாழின் பத்தாம் பசலித்தனம் உண்மைதான் - ஆனால் யாழ்ப்பாணமே மாறி வருகுது - ஆனால் புலத்துக்கு அதை காவி வந்த கூட்டம்தான் நிண்டு குத்தி முறியுது.

இல்லை கோசான் யாழ்பாணத்தில் அந்த நிலை இன்றும் இருக்கிறது. நான் அங்கு சென்றவேளையில் அவதானித்த விடயங்க்கள் அவை.  தேவையில்லாமல்  கதைக்கபோய் அவர்களிடம் நான் வாங்கி கட்டினேன். இந்த பிரச்சனையை உங்களின் வழமையான கோவில்   மேளமான புலம் பெயர்ஸ் விடயமாக பார்க்கும் உங்கள் பார்வை தவறானது என்பதையே சுட்டிகாட்டினேன். யாழ்பாணத்தில் இருந்த பத்தாம் பசலித்தனம்  பல நூறு வருட பாரம்பரியத்தை  கொண்டது. 5 வருடமே புலிகளின் கட்டுபாடு அங்கு இருந்ததது.  இன்னும் கூறபோனால் யாழ்பாண தமிழர்களிடம் இருந்த பத்தாம் பசலித்தனம் தான் புலிகளை தொற்றி கொண்டயொழிய புலிகளிடம் இருந்து யாழ் தமிழர்களுக்கு இந்த பழைய பஞ்சாங்கம் காவி செல்ல படவில்லை.  இன்னமும் புலம் பெயர்ந்த நாடுகளில் முறையாக Integration ஆகவிடாம் தடுப்பதும் யாழ் பழமை பேண் பாங்கு அந்த மக்களில் தேங்கி இருப்பதே காரணம். அதனால் புலம் பெயர் தமிழ்மக்கள் இழந்தவிடயம் ஏராளம். சரியாக அவதானித்தால் இதனை உங்களாலும் உணரமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ஸே இதோ ஒரு சவால்?

1) உங்களில் எத்தனை பேர் சிகெரெட் மது அருந்துவதில்லை?

2) உங்கள் பிள்ளைகள் 16 வயதுக்கு மேல் எத்தனை பேர் இதை செய்யவில்லை?

3) அவர்களில் எத்தனை பேர் ஆண் பெண் சினேகிதன்/தி வைத்திருக்கிறார்கள்?

4) மணிக்கணக்கில் போனில், பேச்புக்கில், அரட்டை அடிப்பதில்லை?

5) ஆபாசப் படம் ஒருக்கா கூட பார்ததில்லை?

6) டேட்டிங் போகவில்லை?

7) கிளபிங் போகவில்லை?

8) 1 மணிக்கு பின் வீடு திரும்பவில்லை?

இப்படி நாமும் பிள்ளைகளும் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டு யாழில் உள்ளவன் மட்டும் சங்க காலத்தில் வாழ வேண்டும் எண்டு எப்படி எதிர்பார்க்க முடியும்?

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் என் பிள்ளைகள் அப்படி இல்லை என்று நீங்கள் சொன்னால்

1) நீங்கள் எங்களுக்கு பொய் சொல்லுகிறீர்கள்

2) அல்லது உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நல்லா பூச்சுத்துகிறார்கள். ;)

Goshan உங்களின் நியாயமான கேள்வி... ஆனாலும் ..

1. சிகெரட்  பிடித்தல் மது அருந்துததல் தவறென்ற வாதம் இங்கு வைக்கப்படவி்ல்லை. இருப்பினும் நான் வாழும் கனடாவில் 19 வயதுக்கு மேற்டோா் மட்டுமே இவற்றை தாங்களாக பெறமுடியும்.  குறிப்பாக ஒன்ராாியோவில் இந்த நடைமுறை இறுக்கமாகவே உள்ளது. யாரும் குடிக்கலாம் என்ற தாராளவாத கொள்கையில் நானும் உடன் படுகின்றேன். அது மட்டுமன்றி, இலங்கையில் இப்படியானதொரு கட்டுப்பாடு இருந்தாலும் யாரும் எந்த வயதினரும் இலகுவாக இவற்றைப் பெறமுடியும். 

2. இதற்கு முதலாவது பதிலே

3. ஆண், பெண் சினேகிதா்களை வைத்திருத்தல்... hotel, motel எந்த வகையில் கொலை வரை, அல்லது பலாத்காரம் வரை கொண்டு சென்றது? வைத்திருத்தல் தவறல்ல ஆனால் அதற்கேற்ற புாிந்துணா்வு வேண்டும்.

4.மணிக்கணக்கில் போன் நானும் பேசியிருக்கிறேன்...! ஆனால் அது யாரை பாதித்தது எவ்வாறு பாதித்தது... ? 

5. அதைப்பாா்த்து எத்தனை போ் பாலியல் தொடா்பான குற்றச் செயல்களுக்கு உட்பட்டாா்கள்? (இங்கு) அதை பாா்த்து பாலியல் வக்கிரங்களை மனதில் கொண்டு எத்தனை குற்றச் செயல்கள் உருவாகின அங்கு?

6. பெண்ணின் விருப்போடு டேட்டங்க... போங்க... ஹெட்டேல் போங்க.. எங்க வேணும் என்றாலும் போங்க கட்டாயப்படுத்தி அங்கு வா இங்கு வா என்று கீழ்த்தரமான அனுமுறையையே எதிா்கிறோம்.

7. கிளப்பிங் போன கெட்டுப் போயிடுவாங்க என்பது உங்கள் வாதமாக இருந்தால் நீங்களும் இன்னும் பழமைவாதத்துக்குள்ளே இருக்கிறீா்கள் என்று அா்த்தம். கிளப்பிங் ஒரு பொழுது போக்கு (போற கிளப்பை பொறுத்து) 

8. ஒரு நாளும் திருப்பினது கிடையாது... காரணம் வேலை... நாங்கள் 5 நாள் வேலைக்கு போனால் ஒரு நாள் chilling ஒரு நாளும் வேலைக்கு போகமல் 7 நாளும் chilling என்பதே தவறு என்கின்றோம்.

நாங்கள் வாழும் நாடுகளில் கலாச்சாரப்படியே... அதனுள் உள்வாங்கப்பட்டே நாம, இளைஞா்கள் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றனா். ஆனால் தாயக கலாச்சாரங்கள் வேறு பட்டவை. இவற்றுக்கு அப்பாற்பட்டவை. நான் கலாச்சார காவலன் அல்ல ஆனால் தேசங்களுக்கு தேசம் இது வேறு படும் என்று நீங்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றீா்கள்.!

மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் இந்த செய்தி புலம்பெயா்ந்தவா்களிடமிருந்து வரவில்லை மாறாய் அந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கோசான் யாழ்பாணத்தில் அந்த நிலை இன்றும் இருக்கிறது. நான் அங்கு சென்றவேளையில் அவதானித்த விடயங்க்கள் அவை.  தேவையில்லாமல்  கதைக்கபோய் அவர்களிடம் நான் வாங்கி கட்டினேன். இந்த பிரச்சனையை உங்களின் வழமையான கோவில்   மேளமான புலம் பெயர்ஸ் விடயமாக பார்க்கும் உங்கள் பார்வை தவறானது என்பதையே சுட்டிகாட்டினேன். யாழ்பாணத்தில் இருந்த பத்தாம் பசலித்தனம்  பல நூறு வருட பாரம்பரியத்தை  கொண்டது. 5 வருடமே புலிகளின் கட்டுபாடு அங்கு இருந்ததது.  இன்னும் கூறபோனால் யாழ்பாண தமிழர்களிடம் இருந்த பத்தாம் பசலித்தனம் தான் புலிகளை தொற்றி கொண்டயொழிய புலிகளிடம் இருந்து யாழ் தமிழர்களுக்கு இந்த பழைய பஞ்சாங்கம் காவி செல்ல படவில்லை.  இன்னமும் புலம் பெயர்ந்த நாடுகளில் முறையாக Integration ஆகவிடாம் தடுப்பதும் யாழ் பழமை பேண் பாங்கு அந்த மக்களில் தேங்கி இருப்பதே காரணம். அதனால் புலம் பெயர் தமிழ்மக்கள் இழந்தவிடயம் ஏராளம். சரியாக அவதானித்தால் இதனை உங்களாலும் உணரமுடியும்.

நான் போயிருந்தபோது

யாழில் தியேட்டரில் படம் பார்த்தேன்

பக்கத்தில் ஒரு பத்து பேர்

15 வயசுக்கும் குறைய...

சிகரெட் குடித்தபடி

கூத்தடித்தபடி

தூசணம் பேசியபடி

.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம. கேணி,

நாட்டுக்கு நாடு வேறு பட அங்கே வாழும் மக்கள் இந்த விடயங்களை பற்றி என்ன நினக்கிறார்கள் என்பது காரணமாகிறது. அதையே அன்நாட்டுச்சட்டங்கள் பிரதிபலிக்கிறன.

இலங்கையில் இதுக்கென்று சட்டங்கள் இருக்கிறது. நேரில் பார்த்த வகையில் யாழுக்கும், கண்டிக்கும், வவுனியாக்கும் மட்டுவிற்க்கும் ஒரு வித்யாசமுமில்லை.

யாழ்ப்பாணம் மட்டுமே இலங்கையின் கற்புக்கோட்டை என்பது போலவும் மற்றையவர்கள் எல்லாம் என்னவோ காட்டுமிராட்ண்டிகள் என்றும் கற்பனையில் ( ஹிட்லரின் ஆரிய இனம் பற்றிய ஒரு மேலாதிக்க கோட்பாடு போல) வாழும் சில தலிபான்களின் கூச்சல்தான் இது.

புலி இருந்தால் இப்படி ஆகுமா? எண்டு சப்புக்கட்டவும் இது காரணமாவதால் - புலத்திலும் இந்த கூச்சலுக்கு நல்ல கிராக்கி.

நீங்கள் நினைப்பது போல யாழ் ஒன்றும் குட்டிச்சிவரகவில்லை. அங்கே வாழும் இளைய சமுதாயம் ஒன்றும் மந்தைகளும் அல்ல.

நல்லதும் கெட்டதும் இப்போ அங்கே புழங்குது - இது ஒரு லிபரல் ஜனநாயக நாட்டில் தவிர்க்க முடியாதது - ஆனால் மிகப்பெரும்பாலா இளைஞர்கள் எல்லாத்தையும் அளவாக செய்பவராகவே இருக்கிறனர்.

எந்த ஊரில்தான் குடிகாரகளும் விபச்சாரிகளும் இல்லை, யாழ்ப்பாணம் என்ன கண்ணகிகள் மட்டும் வைக்கும் ஊரா? Please grow up :)

ராமர் சீதைக்கு என்ன முறை .......??
 
இதுதானே செய்தியில் இருக்கிறது.
ஆக்ரபிப்பு படைகள் யாழை ஆக்கிரமித்த பின்பு தமது இயல்பான வாழ்வு மாறி இருக்கிறது என்று ஒரு சாரர் சொன்னதாக.
(முக்கிய குறிப்பு: யாழில் இருப்பவர்கள் தமது சூழலை பற்றி சொன்ன கருத்தை. ஏன் யாழில் மட்டும்தான் கண்ணகிகள் இருக்கிறார்களா? என்று வேற திரித்தீர்கள். யாழில் இருப்பவர்கள் மட்டகிளப்பு பற்றி சொன்னால்தான் தவறு. அவர்கள் தமது இடம் சார்ந்து தமது இயல்பு நிலை சார்ந்தே சொன்னார்கள். அப்போ யாழுக்குள் எங்கோ கிடந்த பாரிஸ் அம்ஸ்டேர்டாமை புகுத்தியது நீங்கள்)
 
நீங்கள்தான் துள்ளி குதித்தீர்கள் .............  பாரிஸ் வளருது ......
பனாமா வளருது ........... பாண்டிச்சேரி வளருது என்று.
 
இப்போ இடத்திற்கு இடம் வேறுபாடும் என்று வந்து நிற்கிறீர்கள்.
அப்போ நீங்கள் இதற்கு முதல் எழுதியதெல்லாம் என்ன?? வெறும் பூச்சாண்டியா?? 
அங்கு இருப்பதெல்லாம் ............. இங்கு தேவையா?
முதலில் ஆம் என்று பொருள்வைத்து எழுதிநீன்ர்கள். இப்போ இடத்திற்கு இடம் வேறுபாடும் என்கிறீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் துல்பென். புலிகளை நான் இதில் குற்றம் சொல்லவில்லை. ஆனால் இப்போ யாழ்ப்பாணமே தனது பத்தாம் பசலித்தனத்தில் இருந்து சற்று மீள நினைக்கையிலே கூட புலக்கூட்டம் அதுக்கு விடுகுதில்லை. அதைத்தான் சுட்டினேன்.

அமெரிக்கா - ஐரோப்பாவை விட பத்தாம் பசலித்தலமான நாடு. ஆனால் அமெரிக்காவுக்கு போன பத்தாம் பசலிகள் - ஐரோப்பாவில் இருந்து போனவர்களே.

பின்னாளில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டு ஐரோப்பா பத்தாம் பசலித்தனத்தில் இருந்து வெளியே வந்து விட்டாலும், அமேரிக்காவில் இன்னும் அந்த பத்தாம் பசலித்தனம் காணப்படுகிறது.

அப்படி ஒரு நிலையே இங்கும் கருவாகிறது

கோசான் இதில் நான் கூறவந்த விடயம் இதில் அரசியலுக்கு ஒரு தொடர்பும் இல்லை. வித்தியாசமான அரசியல் கருத்துகளுடன் இருக்கும் தமிழர்களிடையே கூட இந்த பத்தாம் பசலிதனத்தில் பாரிய ஒற்றுமை இருப்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.  இ்ன்னும் கூறப்போனால் படித்த உயர்தட்டு வர்க்க தமிழர்களிடேயே தான் இந்த மூடப்பழங்கள் மாற்ற முடியாத அளவில் உள்ளதையும் அவதானிக்க முடியும். உதாரணங்கள் தவறாக விளங்கி கொள்ளபடுவதால் அதை தவிர்க்கிறேன். தவிர யாழ்பாணம் பத்தாம் பசலிதனத்தில் இருந்து மீள நினைப்பதாக நீங்கள் கூறுவது தவறு. அதற்கான அறிகுறியே அவர்களிடம் இல்லை என்பதே எனது அவதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம கேணி, நான் ஒத்துக்கிறேன் நான் சொன்னது எதுவும் உங்களுக்கு புரியவில்லை.

இதற்குமேல் விளங்கப்படுத்தும் இயலுமையும் நோக்கமும் எனக்கில்லை.

என்ன நீங்கள் தர்கத்தில் வெண்டு விட்டீர்கள் என்று ஒத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதானே? ஒத்துகிறேன் நீங்க ரவுடிதான்.

ஒரு சிறிய விண்ணப்பம் உங்களின் அதி புத்திசாலி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறதல்லவா?

இனி என்னிடம் கேள்வி கேட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நான் என் சிற்றறிவுக்கு பட்ட மாதிரி ஏதாவது உளரினால் அதை பெரிய மனது பண்ணி புறக்கணித்து விடுங்கள்.

நீங்கள் பதில் இட்டாலும் உங்களோடு நான் தொடர்ந்து உரையாடுவதில்லை.

யாழில் நான் இப்படி ஒதுங்கி போகும் ரெண்டாவது பெரிய அதிபுத்திசாலி நீங்கள்.

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம், நாகரீகம், என்பது நதிபோல ஓடிக்க்கொண்டே இருக்கும், மாறிக்கொண்டே இருக்கும்.

லாஸ் ஏஞசலீசோ, லா சப்பலோ, லண்டனோ - யாழ்ப்பாணமோ இதுதான் நியதி. இதை தடுத்த நிறுத்தலாம் 10 ஆண்டுகள் பிந்தள்ளலாம் என்பெதெல்லாம் மானுட வரலாற்றின் போக்கை அறியாதோர் சொல்லுவது.

முல்லா ஒமர் போல.

இதுதான் எல்லோருடைய கருத்தும் ..... இதற்கு முரணாக இங்கே யாரும் எழுதவில்லையே?
 
செய்தி:
காலத்திற்கு ஏற்ப இயற்கைக்கு அமைவாக ஓடிக்கொண்டு இருக்க வேண்டிய நதிக்குள்.
ஏன் கஸ்ரபட்டு கால்வாய் வெட்டி பியரும் விஸ்கியும் ஓடவிட வேண்டும்? ஓர் இருவருக்கு ருசிப்பது எத்தனை பேருக்கு துர்நாற்றமாக அமைகிறது??? 
 
(நீங்கள் எதோ புலம்பெயர்ந்தவன் எல்லோரும் விசரன் நீங்கள் ஒருவர்தான் அறிவாளி என்று மிதப்பில் துள்ளி குதித்தீர்கள். அவரையும் இவரையும் சாடினீர்கள். செய்தி மூலத்தையே ஒரு கட்டடத்தில் திரித்தீர்கள். இப்போ எல்லாம் இயற்கை என்று வந்து நிற்கிறீர்கள். அதைதான் அவர்களும் சொல்கிறார்கள் ...... நாங்களும் சொல்கிறோம்...... மாறவேண்டிய காலத்தில் அது மாறும். மாற்றங்களை எம்மீது திணிக்காதீர்கள் அதற்கு மாற்றம் என்பது பெயரில்லை. அதற்கு திணிப்பு என்றுதான் பெயர்.)
 
இதற்கு மேல் எழுதாமல் விடலாம் என்று நினைக்கிறேன். 
மேல்வீட்டு காரர் வந்தால். எல்லாவற்றையும் தூக்கிவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம கேணி, நான் ஒத்துக்கிறேன் நான் சொன்னது எதுவும் உங்களுக்கு புரியவில்லை.

இதற்குமேல் விளங்கப்படுத்தும் இயலுமையும் நோக்கமும் எனக்கில்லை.

என்ன நீங்கள் தர்கத்தில் வெண்டு விட்டீர்கள் என்று ஒத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதானே? ஒத்துகிறேன் நீங்க ரவுடிதான்.

ஒரு சிறிய விண்ணப்பம் உங்களின் அதி புத்திசாலி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறதல்லவா?

இனி என்னிடம் கேள்வி கேட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

நான் என் சிற்றறிவுக்கு பட்ட மாதிரி ஏதாவது உளரினால் அதை பெரிய மனது பண்ணி புறக்கணித்து விடுங்கள்.

நீங்கள் பதில் இட்டாலும் உங்களோடு நான் தொடர்ந்து உரையாடுவதில்லை.

யாழில் நான் இப்படி ஒதுங்கி போகும் ரெண்டாவது பெரிய அதிபுத்திசாலி நீங்கள்.

நன்றி

வணக்கம்

இதை  தங்களது தோல்வியாக நீங்கள் உருமறைப்பு செய்யலாமா??

யாழ் சம்பவத்துடன்

ஐரோப்பா

அமெரிக்கா என படந்தது நீங்கள்  தானே..

இதுக்குள் புலிகளைக்கொண்டு வந்து செருகியதும் நீங்கள்  தானே...?

இப்போ

கொட்டவேண்டியதைக்கொட்டிவிட்டு...........?? :(  :(  :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.