Jump to content

தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் (கனடா)


Recommended Posts

தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் ftpelect.jpg
 

- See more at: http://tamilsguide.com/details.php?nid=72&catid=125212#sthash.Qk6TNWUN.AmrrD7Ga.dpuf

இன்றிரவு முடிவுகள் தெரிந்து விடும். வாக்களிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையுமே பிடிக்கல! :(

Link to comment
Share on other sites

MARKHAM COUNCILLOR WARD 7 CANDIDATE VOTES VOTE % STATUS Kanapathi, Logan 5,473 Elected47.3  Usman, Khalid 3,539 30.6 - Sharma, Shusmita 1,308 11.3 - Sella, Sothy 1,078 9.3 - Murugesu, Vasu 176 1.5 -

Link to comment
Share on other sites

Scarborough-Rouge River Ward 42
Toronto Council Candidates
36/36 Reported Votes % Cho, Raymond*✓ 11,768 49.5% Shan, Neethan 7,393 31.1% Jeffers, Ken 1,074 4.5% Mohamed, Gulam 1,048 4.4% Sabaratnam, Neethan 911 3.8%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Scarborough-Rouge River Ward 41
39/39 Reported Votes % Lee, Chin*✓ 10,019 52.5% Lai, Cynthia 4,387 23.0% Prabaharan, Sivavathani 2,069 10.8% Kladitis, John 1,747 9.1% Srivastava, Sandeep 875 4.6%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் நடைபெற்று முடிந்து மாநகரசபை மற்றும் நகரசபைத் தோ்தலில் போட்டியிட்ட தமிழா்கள் பெற்ற வாக்குகள்

மார்க்கம்

தொகுதி 7 மொத்தமாக 3 தமிழா்கள் போட்டியிட்டனா்.
லோகன் கணபதி - பெற்ற வாக்குகள் – 5473 (வெற்றியாளா்)
சோதி செல்லா - பெற்ற வாக்குகள் - 1078
வாசு முருகேசு - பெற்ற வாக்குகள் - 176

தொகுதி 5  மொத்தமாக 2 தமிழா்கள் போட்டியிட்டனா்
ராஜ் சுப்பிரமணியம் - பெற்ற வாக்குகள் – 1313
சிவா சிவஞானம் – பெற்ற வாக்குகள் -
126

ஸ்காபுறோ

தொகுதி -42 மொத்தமாக 4 தமிழா்கள் போட்டியிட்டார்கள்
நீதன் சண் - பெற்ற வாக்குகள் -  7393
நீதன் சபா - பெற்ற வாக்குகள் - 911
குலசேகரம்பிள்ளை கணேஷ் - பெற்ற வாக்குகள் - 107
வேந்தன் ரமணன் - பெற்ற வாக்குகள் - 96

தொகுதி 41 ஒரு தமிழா் மட்டும் போட்டியிட்டார்
சிவவதணி பிரபாகா் - 2069

 

தொகுதி -38 மொத்தமாக 2 தமிழா்கள் போட்டியிட்டார்கள்
டேவிட் தோமஸ்- பெற்ற வாக்குகள் - 1552
கங்கா சாஸ்திரிகள் - பெற்ற வாக்குகள்- 662

தொகுதி -37 ஒரு தமிழா் மட்டும் போட்டியிட்டார்
பாலசந்திரன் நிரஞ்சன் - பெற்ற வாக்குகள் -2440

 

மிஸிசாஹா
தொகுதி 10 ஒரு தமிழா் போட்டியிட்டார்
குலேந்திரன் கிரு - பெற்ற வாக்குகள் - 1592

ஸ்ரோவில்
தொகுதி 6 இரண்டு தமிழா்கள் போட்டியிட்டார்கள்
செந்தூரன் பரமசாமி - பெற்ற வாக்குகள் – இதுவரை தெரியாது
சுசி நடராஜா - பெற்ற வாக்குகள் – இதுவரை தெரியாது

 

நடைபெற்று முடிந்த தோ்தலில் கவுன்சிலா் பதவிக்காக போட்டியிட்ட ஒருவரைத் தவிர (முன்னாள் கவுன்சிலா்) ஏனையோர் படு தோல்வியை அடைந்துள்ளனா்.  இவா்கள் சிலரது தொகுதிகளில் தமிழா்களே இவா்களைப் புறக்கணித்துள்ளனா் என்பது கண்கூடு.

இந்த தோ்தலில் யாரையும் குற்றம் சாட்டும் நோக்கமில்லை எனினும்…

தோ்தலில் உண்மையில் விரும்பி போட்டியிடுவோருக்கும், சமூக அக்கறையோடு போட்டியிடுவோருக்கும் வழிவிட்டு ”வருமானவரி கணக்கினை சரி செய்ய போட்டியிடுவோர் குறிப்பாக Real Estate வியாபாரத்தில் இருப்போர் ஒதுங்கி நிற்று தமிழா்கள் போட்டியிடாத பகுதிகளில் போட்டியிடுங்கள்.

 

உங்கள் இலக்கு வெற்றியடைவதோ சமூக சேவையோ அல்ல மாறாய், இந்த தோ்தலில் நீங்கள் செலவு செய்த செலவுக்கணக்கை உங்கள் வருமானத்தின் செலவாக்கி கொள்ளவே போட்டியிடுகின்றீா்கள் எனவே எங்கு போட்டியிட்டாலும் உங்களால் அதை சாதிக்க முடியும்.
 

Link to comment
Share on other sites

கனடாவில் தேர்தலில் பங்கு கொண்ட புலம் பெயர் தமிழர்களில் மூவர் வெற்றி :

 

JEEE.jpg

கனடாவில் மூன்று தமிழர்கள் மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://tamilsguide.com/details.php?nid=22&catid=125223#sthash.1Qzk7E2R.F8xV5VjZ.dpuf

‘I think we won this election,’ Ward 42 runner-up says

By Sarina Adamo | Posted: Oct 26 2010 12:08 am

 
print-button.png
sarinas-pic.jpg

 SARINA ADAMO/TORONTO OBSERVER

Ward 42 candidate Neethan Shan lost the council race to incumbent Raymond Cho. Shan mustered 32 per cent of the vote while Cho won 53 per cent.

There were tears, hugs, handshakes and big smiles at Ward 42 candidate Neethan Shan’s election HQ Monday night.

Shan took second place behind 19-year incumbent councillor Raymond Cho.

Ward 42 candidate Neethan Shan speaks about his campaign.

 

 

Cho won with 53 per cent of the vote while Shan finished with 32 per cent.

“I know a lot of people are sad today, but I think we won this election,” Shan said in his consession speech. “Today we have shown that when people from different communities come together, we can mobilize and get support from all walks of life.”

The cheers were deafening as Shan’s diverse team of over 150 local volunteers crammed into his small headquarters at Finch Avenue East and Tapscott Road.

“I’m a bad politician because I get emotional,” said Shan, his eyes welling with tears as he thanked his wife for her support over the 10-month process.

“Just because we couldn’t reach the goal at hand doesn’t mean we can’t reach the goals we have for the issues of the city,” said campaign manager Andrea Moffat.

“To councillor Cho, congratulations to you,” Shan said. “We hope that you are more active within the community to ensure it’s served better. I promise that I will help along the way to do what we have to do, but I will also challenge him if he isn’t doing what the community needs.”

The results came as a shock to Shan supporters. He was endorsed by the Toronto StarNOW Magazine andScarborough Mirror.

“[The results] could’ve been better,” said Kandeepan Kenga, Shan’s election day manager. “All these [volunteers] worked so hard hoping he could make a change.”

Shan is a strong supporter of at-risk youth and works in many schools across Malvern and Markham as a youth outreach worker. He also helped form many strategies and organizations, including the Malvern Community Coalition, Image Campaign, Youth Cabinet and Law and Order team. After being active in the Malvern community and an executive director of Council of Agencies of South Asians, Shan was, as many believed, the best representative of the growing population of Tamils in Scarborough.

“The next four years are going to be critical,” Shan said. “Let’s work together and make sure our immigrant population, our equity groups, our women and the educated are respected.”

Shan put up a strong fight against Cho — the other seven candidates each mustered just three per cent or less. Shan’s base was strong with over 9,000 supporters.

“Everyone who worked on this campaign will get five or six people trained to do what we did today for the next election,” said Jay Yerex, another Shan election day manager.

“I’m not a quitter,” Shan said. “My team is going to get stronger day by day, year by year, and in four years, we will be back.”

http://torontoobserver.ca/2010/10/26/i-think-we-won-this-election-ward-42-runner-up-says/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று லட்சம் தமிழர் வசிக்கும் இடத்தில்,
30 பேர் போட்டியிட்டு, 3 பேர் மட்டுமா... வென்றுள்ளார்கள். வெட்கக் கேடு.
 

தேர்தலில்... போட்டியிட முன், தமிழர் என்ற வகையிலாவது... வாக்குகளை பிரிக்காமல்,

வெல்லக் கூடியவர் களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி  இருக்கலாமே....

 

1500 வாக்குகளுக்கு குறைவாக பெற்றவர்கள், தயவு செய்து அரசியலிருந்து ஒதுங்குங்கள்.

 

மூன்று லட்சம் சனம் இருந்தும், பலர் வாக்களிப்பில்....

அதிக நாட்டம் செலுத்தவில்லைப் போலுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி 

எனக்கு தொிந்து தமிழா்கள் சலிப்புற்ற நிலையில் இவா்களுக்கு வாக்களிப்பதை தவிா்த்தனா் என்றே நினைக்கின்றேன்.

இதில் எத்தனைபோ் உண்மையில் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியிட்டாா்கள் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் தமிழ் மக்களுக்கு நன்றாகவே தொியும். 

 

இந்த சந்தா்ப்பத்தில் மக்கள் முட்டாள்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தோ்தலில் 76 வாக்குகளை பெற்றவரம் இந்த தோ்தலில் போட்டியிட்டாா்.... இம்முறை 20 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி 

எனக்கு தொிந்து தமிழா்கள் சலிப்புற்ற நிலையில் இவா்களுக்கு வாக்களிப்பதை தவிா்த்தனா் என்றே நினைக்கின்றேன்.

இதில் எத்தனைபோ் உண்மையில் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியிட்டாா்கள் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் தமிழ் மக்களுக்கு நன்றாகவே தொியும். 

 

இந்த சந்தா்ப்பத்தில் மக்கள் முட்டாள்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தோ்தலில் 76 வாக்குகளை பெற்றவரம் இந்த தோ்தலில் போட்டியிட்டாா்.... இம்முறை 20 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

 

 

 

----

தோ்தலில் உண்மையில் விரும்பி போட்டியிடுவோருக்கும், சமூக அக்கறையோடு போட்டியிடுவோருக்கும் வழிவிட்டு ”வருமானவரி கணக்கினை சரி செய்ய போட்டியிடுவோர் குறிப்பாக Real Estate வியாபாரத்தில் இருப்போர் ஒதுங்கி நிற்று தமிழா்கள் போட்டியிடாத பகுதிகளில் போட்டியிடுங்கள்.

 

உங்கள் இலக்கு வெற்றியடைவதோ சமூக சேவையோ அல்ல மாறாய், இந்த தோ்தலில் நீங்கள் செலவு செய்த செலவுக்கணக்கை உங்கள் வருமானத்தின் செலவாக்கி கொள்ளவே போட்டியிடுகின்றீா்கள் எனவே எங்கு போட்டியிட்டாலும் உங்களால் அதை சாதிக்க முடியும்.

 

நிதர்சன்,

வருமான வரி கணக்கு காட்டுவதற்காக... தேர்தலில் போட்டியிடும் இவர்கள், நீங்கள் குறிப்பிட்ட மாதிரி.....

தமிழர் போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிட்டு....

 

தமது கணக்கை சரி செய்திருக்கலாம்.ஒருவர் அதே தவறை மீண்டும் செய்யும் போது, அதனால் ஏற்படும்  அசௌகரியங்களை....  சூட்டுடன், அங்குள்ள சமூக அமைப்புகள் அவருக்கு நேரடியாக தெரிவிப்பது நல்லது என நினைக்கின்றேன்.

 

இல்லையேல்... அடுத்தமுறையும்.... 20 வாக்குக்காக, பல்லைக்காட்டிக் கொண்டு நிற்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவா்களின் Sponsor ாில் விழாக்களையும், நிகழ்வுகளையும் நடாத்தும் அமைப்புக்கள் எப்படி அவா்களிடம் இதைச் சுட்டிக்காட்டுவாா்கள் தமிழ் சிறி அண்ணா,

அமைப்புக்கள் மட்டுமன்றி,  ஊடகங்களும் அதே நிலையில் தான் இருக்கின்றன. அவா்களின் விளம்பரமின்றி இலவசப் பத்திாிகைகளை வெளியிட முடியாதே....! 

10 , 12 பத்திாிகைகள்  7 வானொலிகள்... 3 தொலைக்காட்சிகளுக்கு வருமானம் வரதே?  இவா்கள் எப்போது சமூகம் சாா்ந்து சிந்திக்க போகின்றாா்களோ தொியவில்லை. 

இவா்கள் மீது விரல்களை நீட்ட முடியாது இவற்றுக்கு நாமும் (நான்  அல்ல நாம் ) காரணமோ என்ற குற்ற உணா்வு எனக்குள் உண்டு . 

 

லோகன் கணபதி கூட முற்று முழுதான தமிழா்களின் ஆதரவில் வெற்றி பெறவில்லை. மாறாய் சீன இனத்தவா்களும் இவருக்கு தமிழா்களுக்கு நிகரான ஆதரவை வழங்கி வருகின்றனா்.

உண்மையில் அவரது அரசியல் ரீதியான செய்ற்பாடுகள் பல வற்றில் உடன்பாடில்லை எனினும் அவரது வெற்றி அவரை எதிா்த்து போட்டியிட்ட இரு தமிழா்களுக்கும் ஒரு செய்தியை சொல்லியிருக்கும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தமிழர்களின் ஆதரவு மட்டுமில்லாமல் வேற்று நாட்டவரின் ஆதரவுடன் மட்டுமே வெற்றி காண முடியும். உ+ம்: நீதனுக்கு 9000 வாக்குகள் இருந்தும் கூட அவரால் வெல்ல முடியாமைக்கு காரணம் வேற்று நாட்டு வாக்களார்களின் வாக்குகளை பெறாமையால் என நினைக்கிறேன். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் 19000 வாக்குகளை பெற்றிருந்தார். மில்லியன் கணக்கில் வாக்காளர்கள் உள்ள போது வெறும் 30000 தமிழர்களின் வாக்குகள் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை மேற்படி தேர்த்தல் சொல்லி நிற்கிறது.(இவர்கள் பரந்து வாழ்கிறார்கள்: அல்லாமலும் வாக்களிக்க தகமை உடையவர்களின் என்ணிக்கை குறைவாகவே உள்ளது.)

Link to comment
Share on other sites

திரு லோகன் கணபதி அவர்கள் மூன்றாவது முறையாக மார்க்கம் நகருக்கான கவுன்செலராக தேர்ந்து எடுக்கப்பட்டதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் எம் மக்களுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டுவதுடன் இன்றும்போல் என்றும் தமிழுடன் வாழ வாழ்த்துக்கள்.

Joe Antony

Elected TGTE Member-Canada

(Facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு லோகன் கணபதி அவர்கள் மூன்றாவது முறையாக மார்க்கம் நகருக்கான கவுன்செலராக தேர்ந்து எடுக்கப்பட்டதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் எம் மக்களுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டுவதுடன் இன்றும்போல் என்றும் தமிழுடன் வாழ வாழ்த்துக்கள்.

Joe Antony

Elected TGTE Member-Canada

(Facebook)

 

நான் மக்களுக்கு என்ன செய்தனான் என்டதை, என்ர கவுன்சிலா் வேலையை விட்டிட்டு வந்து தமிழ் gangs (அமைப்புகள்) க்கு விளக்க வேண்டிய தேவையில்லை.  - லோகன் கணபதி அமைப்புகளுடனான சந்திப்பு ஒன்றில்

செய்தது - உதவி செய்பவா்கள் நடாத்தும் விழாக்களில் முகத்தை காட்டியது

Link to comment
Share on other sites

கனடிய மண்ணில் உள்ளூராட்சி தேர்தல் காய்ச்சல் சூடு பிடித்து ஒருவாறாக ஓய்ந்து விட்டது. வழமையாக இத்தகைய காலங்களில் என் பதிவுகள் ஊடகவியலாளராக பதிவாகி இருக்கும்.. இந்த தளத்தில் பந்தயக் குதிரைகளில் நானும் ஒருத்தியாக ஓடியதால் என் பதிவுகள் பரப்புரை சார்ந்து இருந்தன.

வெற்றி தோல்வி இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்கும் எனக்குள் இந்த தேர்தலில் நான் ஈட்டிய தோல்வி கூட ஒரு வகை வெற்றியாகவே பெருமிதம் தருகின்றது.

என்னால் முடிந்த வரை எனக்கான ஒரு தளத்தில் என் இனத்திற்கான ஒரு வலிமையை நான் போட்டி இட்ட பகுதியில் பெற்றுக் கொடுக்க போராடி அதில் ஓரளவு வெற்றியும் கண்டு இருக்கின்றேன் என்பதே என் மன நிறைவு.

நான் போட்டியிட இறங்கிய பகுதியில் அதீத பெரும்பான்மை இனத்தினர் சீனக் கனடியர்கள் என்பதால் எல்லோருமே இது வேண்டா முயற்சி என தடுத்தார்கள். அப்படி இருந்தும் இந்த பகுதியில் நான் போட்டியிட்டமைக்கு காரணம் என் இனத்தின் மீதான பாராமுகத்தினை இந்த பகுதி நகரச சபை உறுப்பினர் கொண்டிருந்தமையே.

45, 000 சீன சகோதரர்கள் வாழும் பகுதியில் 4, 000 தமிழர்கள் மட்டுமே வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியாக இருக்கையில் நான் ஒரு தமிழ் கனடியராக தேர்தலில் போட்டி இட்டமையே ஒரு கடுமையான சவால் என்பது மட்டுமல்லாமல் உறுதிப் படுத்தப்பட்ட தோல்வியையே உறுதி கூறி இருந்தமை அனைவரும் அறிந்ததே.

ஆனால் என் பார்வையில் 4000 தமிழர்களின் வாக்கு பலத்தின் வலிமையை இந்த பகுதி நகரசபை உறுப்பினர் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தல் கள இறக்கமாக இருந்தது.

நான் ஒரு தமிழராக களமிறங்கிய காரணத்தால் இதுவரை எம் இனத்தின் மீது ஒரு பாராமுகத்தோடு செயல்ப்பட்ட நகரசபை உறுப்பினர் 8 ஆண்டுகளாக காட்டிய திமிரான போக்கை மாற்றி தமிழர்கள் வீட்டு வாசலை நாடி வந்து கதவு தட்டினார். தமிழர்கள் நிகழ்வுகளில் பங்கு பற்றினார். தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலை என நிறுவிய பொது ஆயத்தில் முதன் முறையாக கலந்து சிறப்பித்தார். தமிழ் தொண்டர்களை தனது தேர்தல் அணியில் சேர்த்து கொண்டார். தமிழர்களோடு "வணக்கம்" "நன்றி" என மதித்து சிரித்து பேச ஆரம்பித்தார். கிடப்பில் இருந்த தமிழர் சார்ந்த பல நகர சபை சார்ந்த மனுக்கள் சிலவரற்றை பார்வையிடுவேன் என உறுதி கூறியுள்ளார்.

தமிழர்க்கு மட்டுமில்லாமல் இத்தனை அக்கறையான பார்வையையும் இந்த பகுதி சீன மக்கள் மீதும் செலுத்தி ஆதரவு தேடினார். மக்களிடம் இறங்கி வராதவர் மக்கள் வீட்டு கதவுகளை தட்ட ஆரம்பித்தார்.

இதற்கு காரணம் என் போல் இன்னொரு சீன சகோதரியும் முழுமையாக தன்னை அர்ப்பணித்து போட்டி இட்டார். எம் இருவரது வருகையினாலும் இன்று நகரசபை உறுப்பினராக மீண்டும் தெரிவாகி உள்ள சின் லீ அவர்கள் தனது மக்கள் குறித்த பார்வையை மாற்றி மக்கள் தோழனாக தன்னை காட்டி கொண்டு தரை இறங்கி மக்களை நாடி உள்ளார். இனி வரும் காலத்திலும் இந்த அச்சம் அவருக்குள் இருந்து அவரது பணிகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க எமது போட்டி அவருக்கு உதவி இருக்கும் என நம்புகின்றேன்.

இன்னொரு மாற்றம் இந்த தேர்தலில் முன்னொரு போதும் இல்லாத அளவு எமது சீன சகோதரர்கள் வாக்களிதிருக்கின்றார்கள். அவர்களை பெரிய பெரிய வாகனங்களில் கூட்டி வந்து வாக்களிக்க இரண்டு சீன வேட்பாளர்களும் கடுமையாக போட்டியிட்டு உதவி உள்ளார்கள். இது வரை இப்படி சீன மக்கள் வாக்களிக்க முன் வந்தது இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

இதில் எனது ஒரே வேதனை 4000 தமிழர்கள் வாழும் பகுதியில் நான் தமிழர்கள் தமது வாக்கு பலத்தை முழுமையாக காட்ட என்னை பயன்படுத்தாவிட்டாலும் அவர்களுக்கு பிடித்த வேறு ஒருவருக்கேனும் வாக்களித்து முயலவில்லை என்பது மட்டுமே.

இருப்பினும் முதன் முறையாக அரசியல் பின்னணி ஏதும் இன்றி தேர்தல் களத்தில் இறங்கிய நான் பல்லாண்டு அரசியல் முன்னனுபவம் கொண்டவர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் நிலையில் உள்ளேன் என்பதை கனடிய சமூகம் வெற்றியாகவே பார்க்கின்றது. அந்த வகையில் பலரும் என்னை ஊக்கப் படுத்தி பாராட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

என் வரையில் என் வெற்றிக்காக கடுமையாக உழைத்த என் உடன் பிறவா சகோதரி லாவண்யா, என் கணவர், அவர் நண்பர்கள், என்னை பெறாமலே பெற்றோரான பெற்றோர்களான தமிழ் மூத்தோர் (குறிப்பாக இராசமணி அம்மா, மரியா அம்மா, சதா அம்மா, தர்மலிங்கம் ஐயா மற்றும், ஏனைய அம்மா ஐயாமார்) இளையவர்களான கீஸா, அனோஜன், ஷான், மற்றும் என் செல்வங்களான திவ்யாவும் அவள் பல்லின தோழிகளும் மற்றும் சமூக அக்கறை கொண்ட தாஸ் அண்ணா, ஈசன் அண்ணா, தம்பிமார் ஜெயந்தன், குமரன், உள்ளிட்ட பல தோழர்கள் உறவுகளும் காட்டிய அன்பும் அர்ப்பணிப்பும் இதயங்களில் நிறைந்திருக்கும் வெற்றியே.

எனக்காக உழைத்த அன்பு உள்ளங்கள் கண்ணீர் விட்டு அழுதபோது மட்டுமே என் தோல்வி என்னை வருத்தியது. குறிப்பாக பொழுதெல்லாம் என் வெற்றியை தன் வெற்றியாக கொண்டு உழைத்த லாவண்யா, இராசமணி அம்மா, மரியா அம்மா, சதா அம்மா போன்றோர் கலங்கிய போது நான் துடி துடித்தேன் என்பது உண்மை. ஆனாலும் அவர்கள் கண்ணீரில் அவர்கள் இதயங்களை வென்றிருக்கின்றேன் என்பதை மிகப் பெரிய வெற்றியாக பார்கின்றேன்.

என் வரையில் எதற்காக நான் இந்த தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பில்லாத நிலையிலும் களம் இறங்கினேனோ அந்த முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கின்றேன் என நம்புகின்றேன். இன்னமும் இந்த வாக்கு எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். எண்ணின உறவுகள் இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை உணராமல் இருந்தமையும் முழுமையாக வாக்களிக்க தவறியமையும் எனக்கும் ஏமாற்றமே.

என் வரையில் என் இனத்திற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சியை என்னால் முடிந்ததை விட அதிகமாகவே முயன்று எடுத்துள்ளேன் என்பதை எண்ணி என்னை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் பல்வேறு சவால்களை பொருள் நட்டத்தினை பொறுத்து என்னோடு தோள் கொடுத்து வெற்றிக்காக உழைத்து தன்னம்பிக்கையை நான் இழந்து போகாதிருக்க ஊக்கம் தந்து என்னை வலிமையாக இருக்க நம்பிக்கை ஊட்டும் என் கணவர் என் மகள் திவ்யா இருவரின் தோள் கொடுப்பும் என்னை மென்மேலும் வலிமை கொள்ள வைக்கின்றன.

முயலாமல் இருப்பதை விட முயன்று தோற்பவன் வெற்றியாளன். அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிட்டு எம் இனத்துக்கு நன்மையையும் அதிகாரமும் பெற்று கொடுக்க முயன்ற நாம் அனைவரும் வெற்றியாளர்களே. இன்னொரு வெற்றிக்காக எம் இன்றைய தோல்விகள் வெற்றிப்படியாக எம் பயணங்களுக்கு உதவி உள்ளன என்பது என் வலிமையான உறுதி குன்றா நம்பிக்கையாக உள்ளது.

என் வெற்றிக்காக இந்நாட்களில் வாழ்த்துக் கூறி ஊக்கம் தந்த பல்லாயிரம் முக நூல் உறவுகள் எல்லோருக்கும் என் தோல்வி வருத்தமும் ஏமாற்றமும் தரும் என்பதை உணர்கின்றேன்.. தயவு செய்து வருந்தாதீர்கள்...உங்கள் அன்பை வென்றதை விட உயர்வான வேறு வெற்றியை நான் இந்த தேர்தலில் பெற்று விடப் போவதில்லை.

என் வரையில் இந்த தேர்தல் என் வாழ்வின் பயணங்களின் இன்னொரு தளம் மட்டுமே. என் பயணங்கள் இதோடு முடியப் போவதில்லை. அது எல்லை இல்லா பெருவெளியில் நன்மைகள் நோக்கியதாக சிகரம் தொடும் முயற்சிகளோடு தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மகிழ்வாக உறுதியாக அனைத்து அன்பு உறவுகளுக்கும் இந்த இடத்தில் வலிமையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இன்னொரு தளத்தில் என் வெற்றிகள் என் முயற்சிகளுக்காக காத்திருக்கும்!

நீங்கள் விரும்பும் வெற்றியை இன்னொரு தளத்தில் நிச்சயம் ஒரு நாள் உங்கள் வாழ்த்துக்களை நனவாக்கப் பெற்று தருவேன் என உறுதி கூறுகின்றேன். எம் இனத்தின் வெற்றிகள் யாவுமே எம் வெற்றியே. அந்த வகையில் இந்த பொழுதில் இந்த மண்ணில் வெற்றி ஈட்டிய மூன்று தமிழர்கள் வெற்றியை மகிழ்வாக கொண்டாடுவோம்!

இனத்தின் விடுதலையே தமிழர் எமக்கு உண்மையான வெற்றி. இறுதி வரை அனைத்து தளங்களிலும் எம் உழைப்பினை அந்த வெற்றி நோக்கி பாய்ச்சுவோம்! வீழ்வது நாமானாலும் வாகை சூட வேண்டும் எம் தமிழினம்!

சிவவதனி பிரபாகரன்

(Facebook)

Link to comment
Share on other sites

துளசி! என்னைப் பொறுத்தளவிள் சிலரின் கருத்துகள் போலியானவை.. அவர்களின் பின்னால் கூர்ந்து நோக்கினால் அசிங்கங்கள்தான் பொதிந்திருக்கும். இது என் நேரடி அனுபவத்தில் எழுதுவது.  :D

Link to comment
Share on other sites

I am truly blessed to have received the support of so many friends, well-wishers and residents of ward 7 & 8. Thank you for coming out and exercising your right to vote. To all my Priceless Volunteers who helped me in rain and shine pound the pavement, midnight sign runs, flyering and making phone calls a big Thank you to you, from the bottom of my heart. To all those who contributed to my campaign, I sincerely appreciate your kindness and generosity. Finally thank you to my family for putting up with me. I will continue to be your voice at the board and work tirelessly for a better future for our children.

Juanita Nathan

(Facebook)

துளசி! என்னைப் பொறுத்தளவிள் சிலரின் கருத்துகள் போலியானவை.. அவர்களின் பின்னால் கூர்ந்து நோக்கினால் அசிங்கங்கள்தான் பொதிந்திருக்கும். இது என் நேரடி அனுபவத்தில் எழுதுவது. :D

கனடாவிலுள்ள தமிழ் வேட்பாளர்கள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. முகநூலில் நான் காண்பவற்றை இங்கும் இணைக்கிறேன். :)

Link to comment
Share on other sites

கனடாவிலுள்ள தமிழ் வேட்பாளர்கள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. முகநூலில் நான் காண்பவற்றை இங்கும் இணைக்கிறேன். :)

 

சிலரைப்பற்றி தோலுரித்துக் காட்ட வேண்டும் என உணர்வு பொங்கினாலும்.. யாழின் விதிகளுக்கு அடங்க வேண்டி இருக்கிறதே!  :D

Link to comment
Share on other sites

"Tonight is a historic night for Ward 7. Tonight is a historic night for Markham. I am sincerely humbled and honoured by the love, generosity and unity of the human spirit. Tonight, the residents of Ward 7 spoke up again to cast a ballot for me, and I’m truly touched by their support. I thank you for your friendship, thank you for your faith you have placed in my leadership and me. Together, we can celebrate this victory and the faith in the freedom of democracy. I am honoured to be your voice for another 4 years - of Strong Leadership and Proven Results. To me, political leadership is about building on the strength of our people, and our vibrant and diverse communities. As I became a Councillor, I realized my family of three children, my wife, my brothers and sisters and my friends has extended to my constituents of North of Steeles, South of 407, East of McCowan all the way to the Pickering/ Durham Line. Ward 7 and the people have become my family, and I will fight till every single voice and issue is heard. When I first came to Canada in 1983, I had a couple hundred dollars, a light bag and a heavy heart to fulfill my aspirations. I am so proud to be living in a nation where we can express our democratic freedom and rights. We are breathing proof of hope and I thank Canada for letting me live my Canadian dream. And I thank all of you for being part of my journey. I couldn’t have done it without each and every one of you."

- Logan Kanapathi

(Facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை தோ்தலுக்கு முன்பு தமிழ் மக்களின் தொடா் அங்காடியான GTA Square ல் சந்திக்க நோ்ந்தது, எமது நிறுவனம் ஒன்றுக்குள் நுழைந்தவருக்கு தமிழ் தட்டுப்பட்டது. வானொலி அறிவிப்பாளராக இவாின் உரையாடல்களில் பல முறை இவருடன் பேசிய போது தமிழ் தெளிவாகவும் உறுதியாகவும் வந்தது. 

அதை விடவும் ஆதரங்களாக என்னால் நிரூபிக்க முடியாத, ஆனால் உண்மை என்பது உறுதியான பல குற்றச்சாட்டுகள் தாயக மக்களுக்கான உதவியில் இருக்கிறது.

இங்கு வேட்பாளா்கள் பற்றிய காழ்புணா்வோ, தனிப்பட்ட பகையோ எனக்கில்லை. ! ஆனால் பொதுவான கருத்துக்களை  முன்வைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தோல்வியடைந்தவர்கள் அதற்கான காரணத்தைத் தேடியறிந்து
அடுத்த தேர்தலுக்குள் உங்கள் பாதையை மாற்றி வெற்றிப்பாதையாக்குங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தோ்தலில் உண்மையில் விரும்பி போட்டியிடுவோருக்கும், சமூக அக்கறையோடு போட்டியிடுவோருக்கும் வழிவிட்டு ”வருமானவரி கணக்கினை சரி செய்ய போட்டியிடுவோர் குறிப்பாக Real Estate வியாபாரத்தில் இருப்போர் ஒதுங்கி நிற்று தமிழா்கள் போட்டியிடாத பகுதிகளில் போட்டியிடுங்கள்.

 

உங்கள் இலக்கு வெற்றியடைவதோ சமூக சேவையோ அல்ல மாறாய், இந்த தோ்தலில் நீங்கள் செலவு செய்த செலவுக்கணக்கை உங்கள் வருமானத்தின் செலவாக்கி கொள்ளவே போட்டியிடுகின்றீா்கள் எனவே எங்கு போட்டியிட்டாலும் உங்களால் அதை சாதிக்க முடியும்.

 

 

வருமானவரி கணக்கில் இதை காட்ட முடியாது போல் உள்ளது.

இணைப்பின் 24ம் பக்கத்தைப் பார்க்கவும்.

 

http://www.mah.gov.on.ca/AssetFactory.aspx?did=10336

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரைப்பற்றி தோலுரித்துக் காட்ட வேண்டும் என உணர்வு பொங்கினாலும்.. யாழின் விதிகளுக்கு அடங்க வேண்டி இருக்கிறதே!  :D

 

போட்டியிட்ட அந்த உறவினர் பற்றியா?

தேர்தலில் போட்டியிட்டவர்கள் எதுக்காகப் போட்டியிட்டனர் என்பது பற்றி எல்லாம் தெரியவில்லை. ஆனால் குறைந்தபட்ச தேர்தல் விதியைப் பின்பற்றுங்கள். அது தான் அடுத்த தேர்தலில் உங்களுக்கு குறைந்தபட்ச நன்மதிப்பினைத் தரும். பலர் எங்கு விளம்பரங்கள் வைக்கக்கூடாது என்று உள்ளதோ, அங்கு எல்லாம் விளம்பரம் வைத்தனர். அதில் அவதானித்தது அது சீனர்களும் தமிழர்களுமே இத்தவறுகளைச் செய்துள்ளனர். தவிர, இது வரை தனியார் காணிகளில் வைத்த விளம்பரங்களை நீக்கி விடுங்கள். அது தான் அந்த காணி உரிமையாளரிடம் நன்மதிப்பினை உங்களுக்குப் பெற்றுத் தரும். தவிர, மாநகராட்சி விளம்பரங்களை அகற்றாது விடின், தண்டப்பணம் அறவிடும்.

Link to comment
Share on other sites

தமிழர்கள் அதிகளவில் போட்டியிடுவது பாராட்டுக்குரிய விசயம். இம்முறை 30 பேர் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். 3 பேர்தான் வென்றாலும் போட்டியிட்டவர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அடுத்தடுத்த தேர்தல்களில் நூறு இரு நூறு பேர் என்றளவில் தமிழர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட முன்வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. ஊர் ஒன்றியத்துகு தலா ஒருவர் என்றளவில் போட்டியிட்டால் கூட இந்த எண்ணிக்கையை எட்டிவிடலாம். வியாபராத்திலும் அரசியலிலும் தமிழர்களின் ஈடுபாடும் வளர்ச்சியும் இப்போதுதான் சரியான பாதையில் செல்கின்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், வெற்றிக்கனியை எட்ட முடியாதவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.