Sign in to follow this  
புங்கையூரன்

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்-(2)

Recommended Posts

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

 

blog-jeya-1-dsc_0167.jpg

 

சரி.. கதைக்கு வருவோம்!

 

விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப்

பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, ஒரு கிணறு, துலா, மண்வெட்டி, மற்றும் சில கடகங்களும், சில பட்டைகளும் தான் அவரது மூலதனம்! மிகவும் முக்கியமான முதலீடு அவரது ‘அயராத உழைப்பு' மட்டுமே! அதிகாலையில் ‘குருவிகள்' எழும்ப முன்பே எழுந்து விடுவதால்.. அவரது பெயரும் ‘குருவியர்' ஆகி விட்டது!

 

தாயாரைப் பற்றி அதிகம் கூறுவதற்கில்லை! அவருக்கும் ஒரு பெயர் உண்டு! அது தான் ‘குருவியம்மா'! குருவியம்மாவும் வெறுங்கையோட வந்த மனுசியில்லை!  அந்தக்காலத்திலேயே ‘மூலைக்கை’ வைச்ச வீடு அவவுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது! மனுசியும் அதை பெருமையாய் இடைக்கிடை எல்லாருக்கும் சொல்லிக்காட்டுவதுண்டு!

 

மூத்தவனைப் படிப்பிச்சுப் போடுவம் எண்டு ‘குருவியாரும்' தலை கீழாய் நிண்டு பார்த்தார்! இந்த மண்ணைக் கிழறுற வேலை, தன்னுடைய தலை முறையோட முடிஞ்சு போய் விட வேண்டுமென்பது அவரது இரகசியமான ஆசை! ஆனால் அதை வாய்விட்டு ஒருவரிடமும் சொல்லியதில்லை! ஏனெனில், குருவியாரின் நண்பரொருவர் தனது மகன் படிக்கிறானா என்று ஊர் வாத்தியாரிடம் கேட்க..... அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும் என்று முகத்திலடிச்சது போல கூறியது.. அவரை வாய் திறக்கவே விடவில்லை! அவ்வளவுக்கு வாத்திமாரின் ‘ஊக்குவிப்பு' அந்தக்காலத்தில் இருந்தது! எனவே தனது ஊரில் படிப்பிக்காமல், பக்கத்துக்கு ஊர்ப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தார்! அவனும், ஊர் வாத்தியார் சொன்னதை உண்மையாக்கி விடுபவன் போல… அப்பு எனக்குப் படிப்பு ஏறுதில்லையணை, எங்கையாவது வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சுத் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில கட்டிக் குடுக்கலாம் எண்டு நினைக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு வந்தான்!

 

அவருக்கு வந்த கோவத்திலை… அடி செருப்பாலை என்று கூறியபடி.. ஒரு சுருட்டையும் எடுத்துக் கொண்டு வெளியால போய் விட்டார்!  அந்தச் சுருட்டுத்தான் அவரது ‘டென்ஷனைக்' கொஞ்சம் குறைக்கக் கூடிய சாமான் எண்டு அனுபவத்தில அவர் கண்டு பிடிச்சிருந்தார்! ஒரு சுருட்டைப் பத்தவைச்சு, அதை வாயில வைச்சு ஆழமாகப் புகையை இழுத்து விடும் போது.. ஒவ்வொரு இழுவைக்கும் அவரது ‘டென்ஷன்' கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வாறது வழமை!

 

கொஞ்சம் இருட்டின பிறகு வீட்டுக்குள்ளை வந்து.. கிணத்தடியில கால் முகத்தைக் கழுவிப் போட்டுக் குடிசை வாசலில் தொங்கிய தேங்காய்க் குடுவைக்குள்ளிருந்து ‘திருநீற்றை' எடுத்துச் சிவ..சிவா… என்ற படி நெற்றியில் தடவியபடி.. திண்ணையில் அமர்ந்தார்!

 

சிறிது நேரத்தில்  அவர் எதிர்பார்த்தது நடந்தது!

 

குசினிக்குள்ளிருந்து குருவியம்மா தேனீரோடு ‘என்னப்பா.. தம்பி சொல்லுறது சரி போலத் தானே கிடக்கு… என்ற படி.. குருவியருக்குப் பக்கத்தில் வந்து பவ்வியமாக, அமர்ந்து கொண்டார்!

 

“சரி.. இவர் வெளிநாட்டுக்குப் போய் என்னத்தை வெட்டிப் புடுங்கப் போறார்? உழுகிற மாடு.. ஊருக்குள்ளை விலை போகும் எண்டு சொல்லுவினம்! “

 

இல்லையப்பா. அங்க போய் அகதி எண்டு பதிஞ்சால்.. சும்மா காசு குடுப்பாங்களாம்! அப்பிடித்தான் எல்லாரும் இப்ப அங்கையிருந்து ஊருக்குக் காசனுப்புகினமாம்"

 

அப்ப.. இவர் அகதி எண்டு சொல்லுறதுக்கு.. இவருக்கு என்ன நடந்தது? மூண்டு நேரமும் வேளைக்கு வேளை விழுங்கிப் போட்டுத் திமிர் எடுத்த ஆக்கள் என்னெண்டு போய் அகதி எண்டிறது…?

 

எல்லாரும் அப்பிடித் தான் அப்பா செய்யினம்.. ஆமி அங்க அடிச்சான்.. இஞ்ச அடிச்சான் எண்டு சொல்லி பனையால விழுந்த காயத்தைக் காட்டிச் சனம் அகதியாகுதுகள். வெள்ளைக்காரனுக்கு பனையில ஆக்கள் ஏறி விழுகிறது என்னண்டப்பா.. தெரியும்?

 

அது சரி… இப்ப இவரை அனுப்பிறதுக்குக் காசுக்கு எங்கை போறது?

 

நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டு சத்தியம் பண்ணினால், நான் ஒரு வழி சொல்லுவன்!

 

சரி..சரி.. நீங்கெல்லாம் சேந்து முடிவு பண்ணினாப் பிறகு.. நான் கோவிச்சு எத்தைச் செய்யிறது?

 

உங்கட தோட்டத்தில மேற்குப் பக்கத்துத் துண்டைத் தனக்குத் தரச் சொல்லிச் சுப்பையர் கேட்டது உங்களுக்கு மறந்து போச்சே.. உங்களுக்கு வயசும் போகுது.. இந்தப் பெரிய தோட்டத்தை வைச்சு என்னண்டு சமாளிக்கப் போறியள்? பெடியளும் தோட்டப் பக்கம் போவாங்கள் எண்டு நான் நினைகேல்லை!

 

ம்ம்ம்ம்… என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர்… சரி ..சரி செயிறதைச் செய்து முடியுங்கோ என்ற படி.. கண்களை மூடியபடி.. கொஞ்ச நேரம். அப்படியே ஒரு வித தியான நிலையில் இருந்தார்.

 

ஒரு வேளை.. அவரது அப்பாவின் ஆவி அவரின்ர கண்ணுக்குள்ளை வந்து போகுதோ என்று குருவியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

அடுத்த நாளே அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களைக் குருவியம்மா ஆரம்பித்து விட்டாள்!

 

தோட்டக்காணியைச் சுப்பையருக்கு விற்பதை நினைக்கும் போதே... தன்னில் ஒரு பாதி.. பிரிந்து போவதாகவே குருவியார் உணர்ந்தார். ஆனால்..காணியை விற்பதை விடத் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும் இருந்தது!

 

வீட்டுச் சுவர் முழுவதையும்.. தனது மூத்த மகனதும்.. மகளதும்..விவேகானந்த சபையால் வழங்கப் பட்ட சான்றிதழ்கள்.. வேறு வேறு நிறங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தன!

 

நாளைக்கு மறக்காமல்.. ஞானம் ஸ்டூடியோவில போய் எல்லாரும் ஒரு படம் எடுத்து வைக்க வேணும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

 

 

தொடரும்…!

 
 • Like 9

Share this post


Link to post
Share on other sites
அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும்
உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.
எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.
ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.

எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.

ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

 

மோராவது அவனுக்குக் குடுத்து அனுப்பியிருக்கலாமே வாத்தியார் :D

 

சிட்நீலையும் இப்பிடி விளக்குமாறாலதான் நிலம் கூட்டுறநீங்களோ???? புங்கை

Share this post


Link to post
Share on other sites

முழு கதையும் முடியத்தான் மொத்த பச்சையும் புங்கை .

Share this post


Link to post
Share on other sites

உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

இந்த விதமான திமிர் எங்கையிருந்து வந்தது எண்டது தான் எனக்கும் தெரியேல்லை புத்தன்!

 

புத்தக வெளியீடா? :o

 

நாங்கள் நவீன காலத்து இலக்கியம் தான்!  :lol:

 

புத்தகங்களை எழுத, அவற்றைக் கறையான் அரிக்க.. அவற்றுக்கு உயிர் கொடுக்க சேக்கிழாரும் இல்லை.. ராஜேந்திர சோழனும் இல்லை!

 

விண் வெளிக்கு, லைக்காவை அனுப்பின மாதிரி, புத்தனை முன்னால விட்டுப்.. பின்னால வருவம் எண்டு யோசிக்கிறன்! :icon_idea:

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகள் காவலூர் கண்மணி !

 

இனித்தான் 'கிளைமாக்ஸ்' இருக்குது..!

 

தங்கள் போன்றவர்களின் ஊக்குவிப்பு, மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

Share this post


Link to post
Share on other sites

--------

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

தொடரும்…!

 

அடுத்த பகுதியை... வாசிக்க கடந்த எட்டு நாட்களாக காவல் இருக்கிறோம்.

எங்க, பொறுமையை.... ரொம்ப சோதிக்காதிங்க புங்கை. :rolleyes:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

நிழலி போலத்தான் நானும் புங்கை கதையை முடியுங்கோ அதன்பிறகு கருத்து எழுதுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ரோமியோ வாய்க்கால் வரப்பிலா எல்லாரையும் வரிசைகட்டி கூட்டிப்போறீங்க பார்வைக்கு எட்டின மட்டும் பசுமைகளால் நிறைஞ்சிருக்கு.... கதை இரம்மியமாக பசுமையான நிலையில் நகர்கிறது ..... :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அப்படியே இங்கும் சுவிஸ் பாஸ்ட்டருக்கும் எதிரா வழக்கு போடணும் .
  • வணக்கம் நில்மினி. உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி. ஆரம்பத்தில் நீங்கள் எழுதிய மருந்துகளைத் தான் போட்டு நோவை குறைத்து வந்தேன்.ஆனால் ஒரு நாள் போடாவிட்டால் அல்லது குறிப்பிட்ட மணிநேரத்திற்குப் பின் நோகத் தொடங்கிவிடும். சன்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் நேஸ் பிறைக்ரிசனராக (Nurse Practitioner)இருப்பதால் இப்படி இப்படி செய் என்று சொல்லுவா. அவவின் ஆலோசனைப்படி சீரோயிட் மருந்தை ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு எடுக்கிறேன்.அதையும் முடிந்தால் குறைக்கச் சொல்லுவா.அதைவிட குறைக்கும் போது மணிக்கட்டு முழங்கை தோள்முட்டு மிகவும் வலியாக இருக்கும். வீட்டில் இதனால் ஒரே அன்புப் பிரச்சனை.மனைவி இந்த மருந்து எடுக்கக் கூடாது. மகள் காலம் முழுக்க கை கால் குறண்டி கொஞ்ச நாளில் சோறும் அள்ளித் தின்னேலாது என்று கூட வயது வாழவேணுமா? அல்லது குறைய வயது வாழ்ந்தாலும் நோவில்லாமல் ஒழுங்காக இருக்கும்வரை இருக்கப் போறீங்களா? டாக்ரரிடம் கேட்டால் இது கூடாது தான் ஆனாலும் இதுக்கு மிஞ்சி போகாமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார்.வயது 64 ஆகிறது.வயதுக்கேற்ற பிரச்சனைகள் இருக்கத் தானே செய்யும். கிழமையில் 3-4 நாட்கள் நடப்பேன்.வேறு உடற் பயிற்சி இல்லை. உங்கள் ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. அத்துடன் Leflunomide 20 mg உம் எடுக்கிறேன்.இதன் தொழிற்பாடு என்ன?
  • டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மத குருமார்கள், தொற்று நோயைப் பரப்பியதாக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 129 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசின் கண்காணிப்பில் 213 பேரும் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.   மேலும், இதுவரை 7,267 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அனுப்பப்பட்டதில் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தில் கொரோனாவில் பாதிப்பில் இருந்து 27 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,480 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதில், 554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 926 பேருக்கு தொற்று இல்லை என்பதும் சோதனை மூலம் உறுதியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 188 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி மத பிரசாரத்தில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குருமார்கள் மீது தமிழகம் முழுவதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டது, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டது மற்றும் அவர்களில் சிலர் தங்களுக்குக் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த மதகுருமார்கள் 6 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 8 பேர், சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் 11 இந்தோனேசிய மதகுருமார்கள் உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல், மதுரை மலைப்பட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 பேர் மீதும், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் பிரான்ஸ், கேமரூன், காங்கோ மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மத குருமார்கள் 12 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் விசாகாலம் முடிந்தும் தங்கியிருந்த 11 மதகுருமார்கள் கைது செய்யப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர், குஜராத்தைச் சேர்ந்த 29 பேர் என 40க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 129 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் பலர் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் பதுங்கி இருந்தவர்களை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.   https://www.vikatan.com/news/tamilnadu/tn-police-books-129-related-delhi-religious-event?artfrm=v3    
  • இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140909?ref=imp-news