• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

ஆபாச தகவல்கள், மற்றும் படங்கள் - google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்!

Recommended Posts

googlesecurity-301014-300-seithy-tech.jp

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

   

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferencesஓபன் பண்ணுங்கள்.. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் . நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்..

http://www.seithy.com/breifNews.php?newsID=119707&category=CommonNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்
    • அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள்.  அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத்  தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள். அவளது பிள்ளைகளுக்கு முன்னாலேயே “பெட்டை நாய், பரத்தை” என்று பேசிக் கொண்டும் இருந்தான். நாளடைவில் அவனது ஏச்சுக்களும் தாக்குதல்களும் மணிக்கணக்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. Adrianக்கும் Natascha வுக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஆரம்பமாவதால்  ஒரு கட்டத்தில் அவள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு Adrian இடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். பின்னர் இருவருக்கும்  சமரசம் ஏற்பட மீண்டும் இணைந்து கொண்டார்கள்.  14.12.2019இல்  தங்கள் இருவருக்கும் உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இருவருக்கும் இடையில்  சண்டை ஆரம்பித்தது. Adrian உடனடியாகவே Natascha வைத் தாக்க ஆரம்பித்து விட்டான். அவனது தாக்குதலுக்கு மத்தியிலும் Natascha தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி நிலவறைக்குள் மறைந்து கொண்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளது குடியிருப்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவளுக்கு உதவியாக நின்றார்.  ஒரு நிலையில் வீட்டில் Adrian இன் சத்தம் அடங்கிப் போனது.  இதை அவதானித்த Natascha, பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனுடன் விட்டு விட்டு தனது வீட்டுக்குள் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது அவள் முன்னல் Adrian வந்து நின்றான்.  அப்பொழுது Natascha நின்ற இடம் சமையலறை. அந்த வாசலை மறைத்துக்  கொண்டு  நின்று அவள் மேல் தாக்குதலை Adrian ஆரம்பித்தான். அவளால் வெளியேற முடியாத நிலை.  அடி, உதைகள் பலமாக இருந்தன. இந்த நிலையில் சமையலறை மேசை இழுப்பறையைத் திறந்து  அங்கிருந்த கத்தியை எடுத்து தன் பலம் கொண்ட மட்டும் Adrian உடலில் சொருகினாள். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் மீது மீண்டும் ஒரு தடவை கத்தியால் குத்தினாள்.  சமையலறைக்குள்ளேயே Adrian இறந்து போனான்.  Natascha, Adrianஐ கத்தியால் குத்தும் போது அவளது இரத்தத்தில் 2 வீதமான அற்ககோல் செறிவு காணப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. பாதுகாப்புக்காக Adrianஐ Natascha கத்தியால் ஒருதடவை குத்தியபின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவனைக் கத்தியால் குத்தியிருக்கிறாள். இது ஒருவரைக் காயப்படுத்தி மரணம் விளைவிப்பதற்கான செயல் என்று கருதி நீதிமன்றம் Natascha வுக்கு  மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. `கொலை நடந்த நேரத்தில் உள்ள சூழ்நிலை, அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த பதட்டம், அவள் இரத்தத்தில் இருந்த அற்ககோல் செறிவு, அவளது பிள்ளைகளின் எதிர்காலம்,  மற்றும் Natascha தப்பிக்க முடியாத  ஒரு வன்முறையின் சூழலில் அந்தக் கத்தியைப் பாவித்து தன்னை  விடுவிக்க முடிந்தது போன்ற காரணங்களைக் கவனத்தில் கொண்டு Natascha வை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்` என்று Nataschaவின்  சார்பில் அவளுடைய வழக்கறிஞர் ஒரு மேன் முறையீடு செய்தார். அந்த மேன் முறையீட்டுக்கன தீர்ப்புத்தான் நீதிமன்றில் இப்பொழுது அறிவிக்கப் பட்டிருக்கிறது. "ஒரு அவசர நிலையிலேயே Natascha  கத்தியை எடுத்து தனது வாழ்க்கைத் துணைவனைக் கொன்றிருக்கிறாள். Nataschaவின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்கள் நீங்க அவளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட வேண்டும்" என நீதிமன்றம் அறிவித்து அவளை விடுதலை செய்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.  மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
    • ஊரில சீமேந்தும் மணலும் சல்லியும் விக்கிற விலைக்கு இவைக்கு விளையாட்டு. எத்தனையோ சனம் இருக்க ஒரு இருப்பிடம் இல்லாமல் கொட்டில் கட்டி வாழுது. அதுகளுக்கு ஒரு அறையில் ஒரு சின்ன வீடாவது கட்டிக்கொடுத்திருந்தால்.. நாலைஞ்சு குடும்பம் வீடு பெற்றிருக்கும். 
    • 'யாழப்பாணத்துக்கு போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவையை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்' என சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்ததே, அதெல்லாம் பொய்யா கோபால்..?