Jump to content

பிரான்சில் கேணல் பரிதியின் உருவப்படம் இனந்தெரியாதோரால் உடைப்பு


Recommended Posts

நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

10382443_526470044164440_334537997039082

10644155_526470124164432_809872963334842

https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795

Link to comment
Share on other sites

உண்மையால் உள்ளத்தால் உருவாகிய உணர்வுகளே எம் பதிவுகளாய் இந்த திரியில் வந்தது ,நிர்வாக பக்கத்தில் அவை ஏற்புடையதல்ல என்ற நிலையில் நீக்கிய செயலுக்கு தலை வணங்குகிறேன் .ஆனாலும் இந்த செயலை செய்தவனை இந்த வார்த்தைகள் தவிர்த்து என்னால் பதிவிடமுடியாமையின் நிலைக்கும் வருந்துகிறேன் 

Link to comment
Share on other sites

 

 
 
 
வித்தியாசம் இருப்பின்.
மேலே இருப்பது ......... ஒரு மனிதனின் எண்ணப்பாடு அல்லது "கருத்து" என்பது நிருபணம் செய்யப்பட வேண்டும்.
 
இவர் இன்னது இன்னது செய்தார் ...... (அதற்கான ஆதாரம் இவை). அதலால் நான் இவரை ஒரு இனத்தின் துரோகி என  கருதுகிறேன். 
 
இவை இல்லாத பட்சத்தில்.
இது இங்கே இருப்பதற்கே எந்த தகமையும் அற்றது.     

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவர் எப்படியோ

இறந்த ஒருவரது  சமாதியை இடித்திருக்கின்றோம்

மாவீரர் மாதத்திலே

ஒரு கொடுமை

தலைக்குனிவு

நடந்துள்ளது............

 

சிங்களவன் மாவீரர்  கல்லறையை உடைக்கின்றான் என்றும் நாமே கத்துகின்றோம்....... :(  :(  :(

Link to comment
Share on other sites

நாட்கள் கடந்து செல்கின்றன
நேற்றுப் போல...நேற்று முன்தினம் போல...
நாளையும் நாட்கள் கடந்து செல்லத்தான் 
போகின்றன-இன்று போல...
 
கடந்து சென்ற இந்த நாட்களில் 
நாங்கள் என்ன செய்தோம்..
தியாகி எதிர் துரோகி 
என்று சுயஇன்பம் கண்டதை தவிர...
 
முள்ளிவாய்க்காலில் எம்மினம் கருவறுக்கப்பட்ட 
அந்தப் பேரவலத்தின் பின்
ஐந்து கார்த்திகை மாதங்கள்
நம்மை கடந்து சென்றுவிட்டன.
 
ஐந்து மாவீரர் தினங்கள் வந்து போய்விட்டன.
நாங்களும் தவறாது விளக்கேற்றி,
வீரவணக்கம் செலுத்தி- எங்கள்
விடுதலை உணர்வை  மற்றவர்கள் மெச்சும்படி
வெளிகாட்டி விட்டோம்
 
ஆனால் எமக்கான விடியல் இன்னமும்
தொலைதூரக் கனவாகவே இருக்கிறது.
 
துரோகி பட்டம் வழங்கும்
தேசிய வியாபாரிகளின் கல்லாக்கள்
நிரம்பும் அளவுக்கு....
போரில் உயிரைத்தவிர 
அனைத்தையும் இழந்தவர்களின்
வாழ்க்கை துளிர்க்கவில்லையே..
அவர்களது பிள்ளைகளின் வயிறு 
நிரம்பவில்லையே....
 
நாங்கள் இன்றைக்கும் நாளைக்கும்- 
நாளை மறுநாளும் கூட 
இந்த தியாகி  எதிர் துரோகி அரசியலை
இன்னும் கூர்மையாக்குவோம். 
 
எங்களுக்கு தெரியும் எமது இனத்தின்
விடிவுக்கு அது உதவப்போவதில்லை என்று!
 
ஆனால் எங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதற்கு
அது தேவையாக இருக்கிறதே!-அதனால்
நாங்கள் இன்றைக்கும் நாளைக்கும்
அல்லது என்றைக்கும் அதை தூக்கிப் பிடிப்போம்.
 
காலங்கள் கடந்து போகும்  நேற்றையை போல
இன்றையப் போல- எந்தவிதவித மாற்றமுமின்றி
                                            -சிவா சின்னப்பொடி
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.