Jump to content

சீமானின் சீக்கியர்கள் கூட்டு பாதகமா சாதகமா .

Recommended Posts

"ஒன்று நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.இல்லலையேல் சாக வேண்டும்.முடிவு செய்" என்று மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு வாய்ப்பினைத் தருகிறார்,"மதம் மாறுவதற்குப் பதிலாக,என்னை மாய்த்துக் கொள்வேன்" என்று வாய்ப்பை மறுத்து இறந்து போகிறார்-சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூர்.சமய நல்லிணக்கத்தைக் கடைபிடித்த அக்பர் காலத்தில்,எந்த மதத்திற்கும் அச்சுறுத்தலின்றி மக்கள் அமைதியான-நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.அக்பருக்கு பின் அரியணையேறிய அவரது வாரிசுகள்-மருந்திற்கும் கூட மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவில்லை.அதிலும் சீக்கியர்களைத் தங்கள் ஜென்ம விரோதிகளாகவேப் பார்க்கத் தொடங்கினர்.சீக்கியக் குருக்களைச் சிறை பிடித்தனர்,கொன்று குவித்தனர்.

தன் தந்தை குரு தேஜ் பகதூர் மொகலாய மன்னர் அவுரங்கசீப்பால்-கொலை செய்யப்பட்ட உடன்-அவரது மகனான குரு கோவிந்த் சிங் என்பவர்,தன் ஒன்பதாவது வயதில் சீக்கியர்களின் பத்தாவது குருவாகப் பதவியேற்கிறார்.இவர் ஆட்சியாளர்களாலும்,பிற மதத்தவராலும் தங்கள் சீக்கிய மதத்திற்கு வரும்-ஆபத்துக்களை,அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள-ஒரு சீக்கிய இராணுவத்தை கட்டமைக்கின்றார்.அதன் பெயர் தான் "கால்சா" படையினர்.இவர்களும் அடிப்படையில் கடும் மத அடிப்படைவாதிகளே.இவர்களின் நோக்கம்-"காலிஸ்தான்" என்ற தனி நாடு.

அதாவது-பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து பிரித்து,சீக்கியர்களுக்கென்று ஒரு தனி நாட்டை அமைப்பது.இன்னும் கொஞ்சம் புரியும்படியாக,அழுத்தமாகச் சொன்னால்-"சீக்கிய மதத்தவர்களுக்கென்று" ஒரு தனி நாடு.அவர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கட்டும்,போராடட்டும்.அது அவர்களின் உரிமை.ஆனால்,இவர்களோடு இணைந்து,இவர்கள் போராட்டத்தை,சீக்கிய 

இனத்தின் போராட்டம் என்று தவறாக ஆதரித்தது-டெல்லியில் களமாடியருக்கின்றார் நடிகர் சீமான்.அவர் தன் ரசிகர் மன்றக் கருத்துக்களை மட்டும் அங்கு பரப்பியிருந்தால்,நாமும் வழக்கம் போலவே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம்.

ஆனால் கருத்தியல் அடிப்படையில் துளி கூட தொடர்பில்லாத-தமிழீழ விடுதலைப்புலிகளின் தனி நாடு போராட்டத்தை-தொடர்பு படுத்தியதால் நம்மால் எளிதாக விட இயலவில்லை.

நடிகருக்கு நம் கேள்விகள் சில,

1.சீக்கியம் என்பது ஒரு மதம்.சீக்கியர்கள் என்றிலிருந்தது "இனம்" என்ற வரையறைக்குள் வந்தனர்?

2.பஞ்சாபியர்களில் பல இனங்கள் உண்டு,பல மதங்கள் கூட உண்டு.அவர்களில் சீக்கியர்கள் என்ற மதத்தினர் கேட்கும்-காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை மட்டும் ஆதரிக்க காரணம் என்ன?

3.தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாட்டிற்கான போராட்டம் என்பது-தமிழ் என்ற மொழி பேசும்,தமிழன் என்ற அடையாளத்தோடு வாழும் மக்களின் நாட்டை,அபகரித்துக் கொண்ட சிங்களவர்களை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டமேயாகும்.இனத்திற்கான புலிகளின் போராட்டத்தை-தங்கள் மதத்தின் அடையாளத்தோடுப் போராடும் சீக்கியர்களின் போராட்டத்தோடு-தொடர்புபடுத்தி கேவலப்படுத்தியது ஏன்?

4.தமிழர்களில் இந்துக்கள் உண்டு,கிறுத்தவர்கள் உண்டு,இஸ்லாமியர்கள் உண்டு,பெளத்தர்கள் உண்டு.மதமேயில்லாத நாத்திகர்கள் கூட உண்டு.சீக்கியர்களில் இப்படியிருக்கின்றார்களா?

5.ஒரு வேளை பஞ்சாபியர்கள் என்ற தேசிய இனத்தின் போராட்டத்தையே ஆதரித்தேன்,என்று சப்பை கட்டு கட்டினாலும்,அந்த பஞ்சாபியர்கள் டர்பனும்,தாடியுமாகத் தங்கள் சீக்கிய மத அடையாளங்களை முன்னிறுத்தித் தானேப் போராடுகின்றனர்? புலிகள் என்றாவது இப்படி செய்ததுண்டா? புலிகள் கழுத்தில் இருந்தது என்ன? சிலுவையா? ருத்திராட்சமா? சயனைடு குப்பியல்லவா கழுத்தில் தொங்கியது!!!இவர்களையும்-சீக்கியர்களையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி-அந்தப் போராட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்தியது ஏன்?

6.தங்கள் வழிப்பாட்டுத்தனமான அமிர்தசரஸ் பொற்கோவிலைப் புகலிடமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த காலிஸ்தான் இயக்க உறுப்பினர்களை-1984 ல் ஆப்பரசேன் ப்ளூ ஸ்டார் மூலம் அகற்றியதற்காகத்தான்-அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றனர் சீக்கியர்கள்.இந்திரா காந்தி புலிகள் இயக்கத்திற்குச் செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை.இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய வெறியாட்டத்தில் முக்கிய பங்கு சீக்கியர்களுடையதே. இப்படியொரு வரலாற்றைக் கொண்டவர்களின்,வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தில் பங்கு கொள்ள நடிகர் சீமான் சென்னையிலிருந்து புறப்பட்ட பொழுது-அவரை வழியனுப்பி வைத்தவர்களும் சீக்கியர்களே.இவர்களோடு 

நடிகர் சீமான் கரம் கோர்க்க காரணமென்ன?

7.இறுதியாக,மதமாற்றத்தை எதிர்த்து தங்கள் மதத்தைக் காப்பாற்றிக்கொள்ள துவங்கப்பட்ட அமைப்பே கால்சா படை.இவர்களது நோக்கமான தனி நாடு போராட்டத்தில் மட்டும் நியாயமிருப்பதாகத் தோன்றினால்-அதே அடிப்படையில் தங்கள் மதத்தைக் காக்க உருவாக்கப்பட்ட RSS ல் மட்டும் நியாயம் எப்படி இல்லாமல் போகும்?RSS மட்டும் தீவிரவாத இயக்கம் என்பது ஏன்?

பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கும்-உரிமைப் போராளிகளுக்கும் கூட வித்தியாசம் தெரியாத நடிகர் சீமானுக்கு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் தெரியாது.வரவும் வராது.கேள்விகள் புரிந்தாலே அதுவே பெரிய அதிசயம்.எதைச் செய்கிறோம் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத இந்த மாதிரி அரைகுறைகளால் தான் புலிகளின் நியாயமான போராட்டம் கூட தீவிரவாத வரையறைக்குள் திணிக்கப்படுகிறது.

நன்றி டி .துரை 

அரசியல் கருத்தாளர் .

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

சீக்கியர்கள் தங்களை மதவாதிகளாக மட்டும் காட்டிக்கொள்வதில்லை.. பஞ்சாபி மொழி பேசும் அவர்கள் தனித்துவமான ஒரு இனம். அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டவர்கள். இவர்களுடன் இணைந்து செயலாற்றுவது மிகப் பொருத்தமானது.

எனது நண்பியின் தந்தை சீக்கியராக தோற்றமளித்தாலும் அவர் அந்த மதத்தைப் பின்பற்றுகிறவர் இல்லை. அவரை மதவாதி என்றால் கத்தியை உருவிவிடுவார்.. :lol:

இசை விடுதலை புலிகள் இந்தியாவின் பிரிவினைக்கு ஊக்கம் அளித்தவர்கள் அல்ல அதை செய்யவும் மாட்டோம் என்று ஐயா பாலசிங்கம் பல தடவை சொல்லியும் உள்ளார் ஆனால் சீமான் போன்றோர் இவ்வாறு கத்தியில் விழுந்த வெட்டை சரி செய்ய ஓடி அங்கு போய் அவர்களுடன் கூட்டு வைத்து திசை திருப்பும் வேலை ஈழ விடுதலைக்கு குழி தோண்டும் இல்லையா ....

ஆனால் திருப்பதிக்கு வரும் ராஜபக்ஷா சுகமா வந்து போறான் ஒரு கொடிகாட்ட முடியாத ஆக்கள் டெல்லி போனதன் நோக்கம் என்ன .....

இன்று த இந்து நாளிதழ் பிரிவினைவாதிகளுடன் சீமான் என்றுதான் தலையங்கம் போட்டு இருக்கு சும்மாவே ஈழ தமிழர் மேல் புலிகள் மேல் தீவிரவாதிகள் தங்கள் ராஜீவை கொன்றவர்கள் என்று எல்லாம் ஒரு அப்பிராயம் இருக்க நாம் மீண்டும் பிழைகளை விட்டு விரோதம் வளர்ப்பதா முடியும் ..

போன சீமான் பேரறளிவாளன் ..வீரப்பன் அல்லது இப்பொழுது தூக்கை  எதிர்  நோக்கும் ஐவர் என்று இந்திய குடிமகனின் படங்களை கொண்டு செல்லாது விளம்பர நோக்கில் பிரபாகரன் படம் கொண்டு சென்றது எதுக்கு ......

நேசக்கரம் நீட்டி நின்றவர் தலைவர் ஆனால் உங்கள் தலைவர் சீமான் இந்தியாவை உடைக்கும் சக்திகளுடன் கூட்டு சேர்த்து ஆப்பினை உருவாகிறார்  :icon_idea:

திருத்தம் ...எழுத்து பிழை 

Link to comment
Share on other sites

சீமான் ஒரு பிரியோசனம் இல்லாத ஆள் உங்களைப் பொறுத்தவரையில்.. மக்கள் செல்வாக்கு இல்லாதவர். ஊடகங்களும் திரும்பிப் பார்ப்பதில்லை.. அவர் எங்கை போய் யாரைப் பார்த்தால் நமக்கென்ன.. :icon_idea:

அது எங்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் அவர் கொண்டு செல்லும் அடையாளம் எங்களுடையது இரத்தம் ..சதை ..தியாகத்தால் ஆனது தனது அற்ப அரசியலுக்கு தேசிய தலைவரை விற்பது ஏற்க முடியாது ....

அவர் விரும்பினால் இந்தியனா நேதாஜி படத்தை கொண்டு சென்று போராடலாம் ஈழத்தை விடுங்கள் முப்பது வருடம் பார்த்து களைத்து விட்டோம்  :D

சேகுவாரா படத்தை கொண்டு திரியினமே.. அப்ப ஆர்ஜன்டீனா காரன் சண்டைக்கு வருவானா?? :o ஈழப்போர் விடயங்கள் உங்கள் ஏகபோக உரிமையா?? காப்புரிமை வைத்துள்ளீர்களா?? :blink::D

Link to comment
Share on other sites

சேகுவாரா படத்தை கொண்டு திரியினமே.. அப்ப ஆர்ஜன்டீனா காரன் சண்டைக்கு வருவானா?? :o ஈழப்போர் விடயங்கள் உங்கள் ஏகபோக உரிமையா?? காப்புரிமை வைத்துள்ளீர்களா?? :blink::D

ஆக தலைவர் ஒரு வியாபார பொருள் ...காந்தியை சுட்டவன்..இந்திராவை சுட்டவன் படங்கள் ஏன் பிடிக்க முடியவில்லை .

Link to comment
Share on other sites

விவாதம் எங்கேயெல்லாம் போகிறது என்பதைக் கவனியுங்கள்.

1) துரை அவர்கள் சீக்கியர்களைப் பற்றி தவறாக எழுதியதை முதலில் சுட்டிக்காட்டினேன். அதற்கு உங்களிடம் இருந்து ஒரு பதில் வரவில்லை. மாறாக சீமான் வீணாக வம்பை விலைகொடுத்து வாங்குகிறார் என்று தாவினீர்கள். இவ்வளவுக்கும் அப்பதிவில் சீமானைப்பற்றி நான் குறிப்பிடவில்லை.

2) இரண்டாவது பதிவில் சீமான் பெரிய செல்வாக்கான தலைவர் இல்லையே.. அவரால் எப்படி பிரச்சினை வரும் என்றேன். தலைவர் படத்தை பிடித்தது தவறு என்றீர்கள்.. (தாவல் எண் 2) கவனிக்க: சீக்கிய இனம் பற்றிய உங்கள் கருத்து இன்னமும் வரவில்லை.

3) சரி தலைவர் படத்தைப் பிடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் தலைவர் வியாபாரப் பொருள் ஆகிவிட்டார் என்கிறீர்கள். :D

குறிப்பு: சீக்கியர்களுக்கு எதிரான பொற்கோயில் நடவடிக்கையைத்தான் சீமான் கண்டித்துள்ளார். இந்திராவை சுட்டதை அவர் வாழ்த்தவில்லை. விட்டால் சீக்கியர்களுடன் சேர்ந்ததால் மன்மோகன் சிங்கையும் ஆதரிக்கிறார் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.. :lol:

Link to comment
Share on other sites

Glorious Tamil History selvan anna.. 2.11.2007 memorial day .. Veeravanakkaam.

10268608_329499533918222_903990642398855

Jatinder Bir Singh Padhiana

https://m.facebook.com/photo.php?fbid=329499533918222&id=100005745341756&set=a.147394645462046.1073741834.100005745341756&source=57

அஞ்சரன் அண்ணா,

தலைவர் படத்தை கொண்டு செல்வதால் விடுதலைப்புலிகள் பற்றியும் வேற்றின மக்கள் அறிந்து முகநூலிலும் கருத்துக்கள் பகிர்கிறார்கள். மேலுள்ள முகநூல் கருத்து ஒரு உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேர்த்தியான வாதம்! 
சும்மா குழை  அடிப்பவர்கள் ..... நேருக்கு நேர் நின்று அடிக்க முடியாது.
ஏதாவது ஒரு காப்பில் வந்து குழை  அடித்துவிட்டு போகவேண்டியதுதான்.
இல்லாட்டில்  சம்மந்தமே இல்லாத ஒன்றை கொண்டுவந்து செருக வேண்டியதுதான். இதைத்தானே நாளும் பார்க்கிறோம். 
 
பச்சை இல்லை குத்த.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Glorious Tamil History selvan anna.. 2.11.2007 memorial day .. Veeravanakkaam.

10268608_329499533918222_903990642398855

Jatinder Bir Singh Padhiana

https://m.facebook.com/photo.php?fbid=329499533918222&id=100005745341756&set=a.147394645462046.1073741834.100005745341756&source=57

அஞ்சரன் அண்ணா,

தலைவர் படத்தை கொண்டு செல்வதால் விடுதலைப்புலிகள் பற்றியும் வேற்றின மக்கள் அறிந்து முகநூலிலும் கருத்துக்கள் பகிர்கிறார்கள். மேலுள்ள முகநூல் கருத்து ஒரு உதாரணம்.

இதுக்க நீங்க வேற .............
அதுதானே திரும்ப திரும்ப சொல்கிறோம். பிரபாகரன் ஒரு பயங்கரவாதி என்று பல பிரச்சாரம் பல ஆண்டுகளாக செய்து. இந்தியா முழுதும் கஸ்தபட்டு நம்பவைத்திருக்கும் நேரம்.
 
இப்படி ஒரு இருவருக்கு என்றாலும் உண்மையை எடுத்து சொன்னால். 
எமது விடுதலை போராட்டத்தை அது எவளவு பாதிக்கும்???
 
இப்ப எமது போராட்டம் எவளவு நேர்த்தியா நடந்துகிட்டு இருக்கு? இந்த நேரம் இது தேவையா ??? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர்  வேண்டுமென்றே

யாரோடோ உள்ள பகையை  முழக்க

இதை எடுத்துள்ளது தெரிகிறது

மற்றும்படி  கட்டுரைப்படி

அவருக்கு

பஞ்சாபிகளின் அழிவுகளும் தெரியல

தமிழர்களின் அழிவுகளும் தெரியல

அதைச்செய்தவர்கள் ஒருவரே என்பதும் தெரியல....

புலிகள் பற்றியும் தெரியல

ஏன் தலைவர் பற்றியும் தெரியல............

ஒரு போதும்

எந்த  கொம்பானாலும்  கொண்ட கொள்கையை  மாற்றாதவர் தலைவர்...

ஒரு போதும் எந்த ஒரு சிறுபான்மை இனத்தையும்

தனது நலனுக்காக காட்டிக்கொடுக்காதவர் தலைவர்...

அவ்வளவு பேருடனும் தொடர்பிலிருந்தவர் தலைவர்..

அதே நேரம் எப்போ

பெரிசுகளுடன் பிரச்சினை வேண்டாம் என்று பின்நகரமுயன்றாரோ

அன்றிலிருந்து தான் அழிவுகளைச்சந்திக்கத்தொடங்கினார்

இது வரலாறு...............

Link to comment
Share on other sites

விவாதம் எங்கேயெல்லாம் போகிறது என்பதைக் கவனியுங்கள்.

1) துரை அவர்கள் சீக்கியர்களைப் பற்றி தவறாக எழுதியதை முதலில் சுட்டிக்காட்டினேன். அதற்கு உங்களிடம் இருந்து ஒரு பதில் வரவில்லை. மாறாக சீமான் வீணாக வம்பை விலைகொடுத்து வாங்குகிறார் என்று தாவினீர்கள். இவ்வளவுக்கும் அப்பதிவில் சீமானைப்பற்றி நான் குறிப்பிடவில்லை.

2) இரண்டாவது பதிவில் சீமான் பெரிய செல்வாக்கான தலைவர் இல்லையே.. அவரால் எப்படி பிரச்சினை வரும் என்றேன். தலைவர் படத்தை பிடித்தது தவறு என்றீர்கள்.. (தாவல் எண் 2) கவனிக்க: சீக்கிய இனம் பற்றிய உங்கள் கருத்து இன்னமும் வரவில்லை.

3) சரி தலைவர் படத்தைப் பிடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் தலைவர் வியாபாரப் பொருள் ஆகிவிட்டார் என்கிறீர்கள். :D

குறிப்பு: சீக்கியர்களுக்கு எதிரான பொற்கோயில் நடவடிக்கையைத்தான் சீமான் கண்டித்துள்ளார். இந்திராவை சுட்டதை அவர் வாழ்த்தவில்லை. விட்டால் சீக்கியர்களுடன் சேர்ந்ததால் மன்மோகன் சிங்கையும் ஆதரிக்கிறார் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.. :lol:

இசை நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் நான் திருப்பி கேட்கலாம் அது நேர மினக்கேடு நான் கேட்டது சீமான் பற்றி நீங்கள் விளக்குவது என்னை பற்றி ஓகே நான் அரசியல் அறிவில்லாத ஆள்தான் உங்களளவுக்கு இல்லை நேரடியா கேள்விக்கு வாறன் ....

புலிகளும் தலைமையும் இந்தியாவை உடைக்க அல்லது பிரிவினைக்கு ஊக்கம் அழித்தவர்களா ..

தலைவர் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டுவதா கூறினார் ஆக அவரின் முடிவு தவறா ..

இனி நாம் ஐ ஸ் ஐ எஸ் போற இயக்கத்தை ஆதரிப்பது சரிதானே எங்களை கொன்ற இந்தியாவை எதிர்ப்பது போல அமெரிக்க மேற்குலகையும் பழிவாங்க எமக்கு  இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூட்டு வேணும் தானே  :D

Link to comment
Share on other sites

இதற்கு மிக சுலபமாக என்னால் பதிலளிக்க முடியுமா சகோ .............ஆனாலும் சம்பந்தப்பட்ட நம்ம இசை பதிலளிப்பதே சிறந்தது என நினைக்கிறேன்  :D

Link to comment
Share on other sites

விவாதம் எங்கேயெல்லாம் போகிறது என்பதைக் கவனியுங்கள்.

1) துரை அவர்கள் சீக்கியர்களைப் பற்றி தவறாக எழுதியதை முதலில் சுட்டிக்காட்டினேன். அதற்கு உங்களிடம் இருந்து ஒரு பதில் வரவில்லை. மாறாக சீமான் வீணாக வம்பை விலைகொடுத்து வாங்குகிறார் என்று தாவினீர்கள். இவ்வளவுக்கும் அப்பதிவில் சீமானைப்பற்றி நான் குறிப்பிடவில்லை.

2) இரண்டாவது பதிவில் சீமான் பெரிய செல்வாக்கான தலைவர் இல்லையே.. அவரால் எப்படி பிரச்சினை வரும் என்றேன். தலைவர் படத்தை பிடித்தது தவறு என்றீர்கள்.. (தாவல் எண் 2) கவனிக்க: சீக்கிய இனம் பற்றிய உங்கள் கருத்து இன்னமும் வரவில்லை.

3) சரி தலைவர் படத்தைப் பிடிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் தலைவர் வியாபாரப் பொருள் ஆகிவிட்டார் என்கிறீர்கள். :D

குறிப்பு: சீக்கியர்களுக்கு எதிரான பொற்கோயில் நடவடிக்கையைத்தான் சீமான் கண்டித்துள்ளார். இந்திராவை சுட்டதை அவர் வாழ்த்தவில்லை. விட்டால் சீக்கியர்களுடன் சேர்ந்ததால் மன்மோகன் சிங்கையும் ஆதரிக்கிறார் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்.. :lol:

யாழின் சிறப்பே அதுதானே ,மாட்டை பற்றி செய்திபோட்டால் அதை கொண்டுபோய் பிலாவில கட்டி பிறகு மாட்டை தவிர அது போகாத இடம் எல்லாம் புகுந்து விளையாடும் .

உமாவை சுட்ட போது திரியை பாருங்கள்  மூன்று பக்கங்கள் அவரவர் விரும்பிய பக்கம் எல்லாம் இழுத்து பிய்த்து உதறிவிட்டார்கள் .

இவற்றிற்கு எல்லாம் காரணம் பலருக்கு உண்மையில் நடந்தது எதுவுமே தெரியாது .ஒரு குத்து மதிப்பிற்கு வைத்து தாளித்து கொட்டவேண்டியதுதான் .

இதற்குள் விசுகரின் கொமடிகள்  வேறு .

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை.. அவனுக்கு இரண்டு சாத்து சாத்தி தள்ளி வச்சிருக்காரு நம்மாளு.. ஆனால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நரிப்புத்தி. பண்ணையாரோடு கூட்டு வச்சிட்டான்.

இப்ப நம்மாளு சொல்றாப்ல.. 'உங்க வம்புக்கு நாங்க வரல்ல பண்ணையாரே.. பக்கத்த வீட்டுக்காரனோட மட்டுந்தான் நமக்கு தகராறு'.

பண்ணை கமுக்கமா இருக்குறாரு.. ஆனால் கொல்லப்புறமா சதி செஞ்சு நம்மாளை கவுத்திடுறார். நம்மாளும் ரோதனை தாங்க முடியாம வீட்டை காலிபண்ணிட்டுப் போய்ட்டாப்ல. :o

இப்ப நம்மாளோட சொந்தக்காரனுங்க கடுப்பாயிட்டானுங்க.. எப்படிடா பண்ணை நீ இப்டி பண்ணலாம்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க.. பண்ணை எதையுமே கண்டுக்கல..

இவன் என்னடா கல்லுளிமங்கனாட்டம் இருக்கானேன்னுட்டு சொந்தக்காரப் பயலுக பண்ணையோட எதிரிங்க எல்லாரையும் பார்த்து பேசுறானுங்க. இது பண்ணைக்குப் பிடிக்கல. ஆனாலும் ஒண்ணும் பண்ண முடியல. முன்னமாதிரி மிரட்டவும் முடியல. நம்மாளுதான் வீட்லயே இல்லையே. :blink:

முன்னம் நம்மாளு வீட்ல இருந்தப்போ சொந்தக்காரப் பயலுங்கல்லாம் வாயை மூடிட்டுதான் இருந்தானுங்க.. ஆனா இப்ப வாயைத் தொறக்கவேண்டிய நேரம்ல. அதான் பேசிக்கிறானுங்க.. இப்பப் போய் நீ பேசாதன்னு சொல்லமுடியுமா சொல்லுங்க.. :D

இசை கேள்விக்கு பதில் வரவில்லை இப்படி நீதி கதை ஆயிரம் இருக்கு ...

இந்தியா எமக்கு வேணுமா வேணாமா ....

சீமான் முக்கியமா இந்தியா என்னும் மத்திய அரசு முக்கியமா .

Link to comment
Share on other sites

இசை கேள்விக்கு பதில் வரவில்லை இப்படி நீதி கதை ஆயிரம் இருக்கு ...

இந்தியா எமக்கு வேணுமா வேணாமா ....

சீமான் முக்கியமா இந்தியா என்னும் மத்திய அரசு முக்கியமா .

இந்திய மத்திய அரசை நம்மால் ஒன்றும் பண்ணமுடியாது. ஆனால் அங்குள்ளவர்கள் கிச்சுகிச்சு மூட்டலாம். எதுக்கும் பயப்பட வேண்டிய நிலை கிச்சுகிச்சு மூட்டுகிறவர்களுக்கு இப்போது இல்லை. ஏனென்றால் புலி இங்கு இல்லை. அதை வைத்து மத்திய அரசு இனிமேலும் விளையாட முடியாது. அதை அவர்கள் இந்நேரத்திற்கு உணர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் அதிமேதாவிகள் என்கிற விம்பத்துக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறவர்களால் தொல்லை வந்துவிட்டது. இதை மேதாவிகளால் ஏற்க முடியாது.

இதனாலெல்லாம் என்ன நன்மை என்று இப்போதைக்கு சொல்லவது கடினம். ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் கிடையாது. :D

நன்றி ..

ஆக உண்மை தெரியுது ஆனால் வெளியில் நடிக வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்கு ம்ம்  :D

நாம் அதை நேரடியா சொல்கிறோம் சீமான் எமக்கு தேவையில்லா நபர் எமக்கு வேண்டியது எல்லாம் இந்தியாவின் அணுகுமுறை மாற்றம் ஆகவே அவர்களுடன் நெருங்க வேண்டிய வேலை செய்யணுமே தவிர் வீம்புக்கு நிக்க கூடாது என்பதே .

நெருங்கி வேலை செய்வது/செய்யப்போவது யார்..? :D

Link to comment
Share on other sites

நெருங்கி வேலை செய்வது/செய்யப்போவது யார்..? :D

பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேராமல் அதிகாரம் உள்ளவன் பக்கம் கூட்டு சேருங்கள் எப்ப பாரு எதிர்த்து களமாடி யாருக்கு நன்மை  :)

Link to comment
Share on other sites

இசை நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் நான் திருப்பி கேட்கலாம் அது நேர மினக்கேடு நான் கேட்டது சீமான் பற்றி நீங்கள் விளக்குவது என்னை பற்றி ஓகே நான் அரசியல் அறிவில்லாத ஆள்தான் உங்களளவுக்கு இல்லை நேரடியா கேள்விக்கு வாறன் ....

புலிகளும் தலைமையும் இந்தியாவை உடைக்க அல்லது பிரிவினைக்கு ஊக்கம் அழித்தவர்களா ..

தலைவர் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டுவதா கூறினார் ஆக அவரின் முடிவு தவறா ..

இனி நாம் ஐ ஸ் ஐ எஸ் போற இயக்கத்தை ஆதரிப்பது சரிதானே எங்களை கொன்ற இந்தியாவை எதிர்ப்பது போல அமெரிக்க மேற்குலகையும் பழிவாங்க எமக்கு  இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூட்டு வேணும் தானே  :D

சகோ சிம்பிளான விடயம் 
 
தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவை உடைக்க நினைக்கவில்லை .ஆனால் இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளை உடைக்கும் நிலைவரை .
 
எம் தேசியத்தலைவரின் முடிவு எப்போதும் தப்பியதில்லை .இன்று வரை  அவர் நீட்டிய நேசக்கரத்தை இந்தியா பற்றிக்கொள்ளவில்லை .அது இந்தியாவிற்கே இன்று ஆபத்தான ஒரு நிலையை உரிவாக்கி கொண்டு வருகிறதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .
 
முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல ........அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கிடையிலும் உரிமைப்போராட்டம் ,உண்மை போராட்டம் என்று பலவகை உண்டு ,குர்திஸ் ,கஷ்மீர் ,லிபியா ,லெபனான் என்று .நீண்டுகொண்டு போகும் .........அனால் நாம் யாருடன் கூட்டு சேர்கிறோம் என்பதே யதார்த்தம் . :)  :D
Link to comment
Share on other sites

நன்றி ..

ஆக உண்மை தெரியுது ஆனால் வெளியில் நடிக வேண்டிய தேவை உங்களுக்கும் இருக்கு ம்ம் :D

நாம் அதை நேரடியா சொல்கிறோம் சீமான் எமக்கு தேவையில்லா நபர் எமக்கு வேண்டியது எல்லாம் இந்தியாவின் அணுகுமுறை மாற்றம் ஆகவே அவர்களுடன் நெருங்க வேண்டிய வேலை செய்யணுமே தவிர் வீம்புக்கு நிக்க கூடாது என்பதே .

தவறான புரிதல்.

சீமானை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதுக்கு நீங்கள் காரணங்களை தேட வேண்டியதில்லை. அரைகுறை கட்டுரைகளை இணைக்க வேண்டியதில்லை. ஃபோட்டோஷாப் படங்களை இணைக்க வேண்டியதில்லை.. :D

'எனக்கு இந்த ஆளை புடிக்கலய்யா..' இதுவே போதும். :huh: அதுக்காக நாங்களும் அதையே சொல்ல வேணும் எண்டு எதிர்பார்க்கக்கூடாது.. :lol:

Link to comment
Share on other sites

தவறான புரிதல்.

சீமானை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதுக்கு நீங்கள் காரணங்களை தேட வேண்டியதில்லை. அரைகுறை கட்டுரைகளை இணைக்க வேண்டியதில்லை. ஃபோட்டோஷாப் படங்களை இணைக்க வேண்டியதில்லை.. :D

'எனக்கு இந்த ஆளை புடிக்கலய்யா..' இதுவே போதும். :huh: அதுக்காக நாங்களும் அதையே சொல்ல வேணும் எண்டு எதிர்பார்க்கக்கூடாது.. :lol:

அவரின் பேச்சை விடவா கட்டுரை அரைகுறை இசை..

பெரும் தலைவர் பச்சைமுத்து ..;)

Link to comment
Share on other sites

அவரின் பேச்சை விடவா கட்டுரை அரைகுறை இசை..

பெரும் தலைவர் பச்சைமுத்து ..;)

அவரின் பேச்சுக்களில் நிறைய வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தீரன் சின்னமலையை பேருந்து பெயர்களில் மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால் அவரத வரலாற்றைப் பேசுகிறார் சீமான். அதேபோல வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அருண்மொழித்தேவன் வரலாற்றை எல்லாம் பேசுகிறார். நான் கவனிப்பது இவ்வாறான தகவல்களைத்தான்.

இது தமிழகத் தமிழர்களுக்கு மிக முக்கியமானது. சீமானின் பேச்சுக்கள் அந்த நிலத்து மக்களுக்கானது. அவரது அரசியல் மத்திய அரசை எதிர்ப்பதில் உள்ளது. அதைச் செய்யாதே என்று சொல்லும் உரிமை உங்களுக்கு கிடையாது. :D

அடுத்து என்ன சொல்வீர்கள் என்பது தெரியும். என் தலைவனின் படத்தைப் பிடிக்கக்கூடாது என்பீர்கள். அப்படிச் சொல்வீர்களானால், பிரெஞ்ச் மக்கள் ரத்தம் சிந்தி புரட்சி மூலம் கட்டி எழுப்பிய நாட்டைப் பயன்படுத்துவதை நீங்கள் முதலில் நிறுத்தவேண்டும். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.