அஞ்சரன்

விஷேட வேவு புலிகள் ...!

Recommended Posts

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
 
சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ...
கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் ..
 
ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ...
கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ...
 
பலமான  இடத்தில் பலவீனம் தேடியவர்கள் ..
தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் ..
 
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
 
குண்டை  கழட்டி தன்னுடன் அணைத்தவர் ...
எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் ..
 
தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ...
தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் ..
 
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .
 
  • Like 12

Share this post

Link to post
Share on other sites

இந்தக் கவிதையைப் படிக்கும்போது உள்ளத்தில் எழும் எண்ணங்கள் பல. வேவுப் புலிகளின் வாழ்க்கை, வீரம், தியாகம், நட்பு, அர்ப்பணிப்பு, உறுதி என்பனவற்றை வரிகள் அருமையாகச் சொல்லி நிற்கின்றன. புலிகளின் வெற்றிகளுக்குப் பின்னேயெல்லாம் இவர்களின் பசியும் உறக்கமும் ஆகுதியாக்கப்பட்டிருக்கும். நன்றி அஞ்சரன்

Share this post

Link to post
Share on other sites

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
-----
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
------
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .

இதுவரை நான்.... வேவு புலிகளைப் பற்றிய பதிவுகளை, எங்குமே வாசித்திருக்கவில்லை.

அவர்களின் குணாதிசயத்தை... அழகிய கவிதையாக வடித்த, அஞ்சரனுக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

விலை மதிக்க முடியாத தியாகங்கள், அர்ப்பணிப்புகள், துணிகரச் செயல்கள் ...!

அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை!

அனைத்துக்கும் ஒரு பலன் கிடக்கும் நாள் விரைவில் வரவேண்டும்!

கவிதைக்கு நன்றிகள் அஞ்சரன்! 

Share this post

Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி அஞ்சரன் அண்ணா. தொடருங்கள்

Share this post

Link to post
Share on other sites

நன்றி வருகைக்கு வாலி ..தமிழ்ஸ்ரீ ..புங்கையூரான்  பெரியவர்களுக்கும் தங்கை துளசிக்கும் கருத்துக்கும்  :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

இந்த கவிதையூடு மேமாதம் பதினைந்தாம் திகதி நந்திக்கடல் ஊடுருவலுக்காக முன்னணி காவலரண்களை பார்க்க சென்றவேளை வீரச்சாவை தழுவிக்கொண்ட, பல விசேட வேவுப் போராளிகளை உருவாக்கிய சசிக்குமார் மாஸ்டர் (மித்திரன் - மானிப்பாய் ) அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பான நண்பர், பாசமான அண்ணன், எனக்கு கவலைகள் வரும்போது எல்லாம் சந்திக்கும் ஆறுதலுக்கான தளபதி, ஆசான்.

வட்டக்கச்சி உருத்திரனில், பானு அண்ணாவுடன் கூழ் குடிச்ச ஞாபகங்களும், வட்டத்தொப்பியுடன் பீல்ட் பைக்கில் வரும் நினைவுகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன.

கிளிநொச்சியை இராணுவம் சுத்தி வளைச்சு இருந்த வேளையிலும், ஆமி தொப்பி அணிச்சபடி, A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் என்னை கட்டி அணைச்சு குஞ்சு பரந்தன் நிலைகளை பலப்படுத்த சொன்ன ஞாபகங்கள் என்னை விட்டு அகலவில்லை.

நீங்கள் சென்ற கடைசி நாளில் கூட, பழ டின் ஒன்றை உடைத்து நானும் நீங்களும் அன்னாசி பழ துண்டுகளை பகிர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியவில்லை மாஸ்டர். உங்கள் மகள் காயப்பட்ட வேளையிலும் கொஞ்சம் கூட கலங்காமல் இப்போ வரேண்டா என்று சென்ற சசிக்குமார் மாஸ்டர் திரும்ப வரவே இல்லை.

வீர வணக்கங்கள் சசிக்குமார் மாஸ்டர்/அண்ணா.

நன்றிகள் அஞ்சரன் பதிவிற்கு.

Edited by அபிராம்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வேவுப்புலிகள் பற்றிய பதிவுகள் மிகக்குறைவே..தனித்து அவர்களைப்பற்றி எழுத நிறையவே விடயங்கள் இருக்கின்றன. ச்பந்தப்பட்டவர்கள் அன்றி யாராலம் அவர்களை எழுதி விடமுடியாது... நன்றி அஞ்சரன் உங்கள் பதிவுக்கு

Share this post

Link to post
Share on other sites

இந்த கவிதையூடு மேமாதம் பதினைந்தாம் திகதி நந்திக்கடல் ஊடுருவலுக்காக முன்னணி காவலரண்களை பார்க்க சென்றவேளை வீரச்சாவை தழுவிக்கொண்ட, பல விசேட வேவுப் போராளிகளை உருவாக்கிய சசிக்குமார் மாஸ்டர் (மித்திரன் - மானிப்பாய் ) அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பான நண்பர், பாசமான அண்ணன், எனக்கு கவலைகள் வரும்போது எல்லாம் சந்திக்கும் ஆறுதலுக்கான தளபதி, ஆசான்.

வட்டக்கச்சி உருத்திரனில், பானு அண்ணாவுடன் கூழ் குடிச்ச ஞாபகங்களும், வட்டத்தொப்பியுடன் பீல்ட் பைக்கில் வரும் நினைவுகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன.

கிளிநொச்சியை இராணுவம் சுத்தி வளைச்சு இருந்த வேளையிலும், ஆமி தொப்பி அணிச்சபடி, A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் என்னை கட்டி அணைச்சு குஞ்சு பரந்தன் நிலைகளை பலப்படுத்த சொன்ன ஞாபகங்கள் என்னை விட்டு அகலவில்லை.

நீங்கள் சென்ற கடைசி நாளில் கூட, பழ டின் ஒன்றை உடைத்து நானும் நீங்களும் அன்னாசி பழ துண்டுகளை பகிர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியவில்லை மாஸ்டர். உங்கள் மகள் காயப்பட்ட வேளையிலும் கொஞ்சம் கூட கலங்காமல் இப்போ வரேண்டா என்று சென்ற சசிக்குமார் மாஸ்டர் திரும்ப வரவே இல்லை.

வீர வணக்கங்கள் சசிக்குமார் மாஸ்டர்/அண்ணா.

நன்றிகள் அஞ்சரன் பதிவிற்கு.

சசிக்குமார் மாஸ்டர் ஆரம்ப வேவு தளபதி தொண்ணூற்றி ஆறு ஏழு  லெப்டினன்ட்  கேணல் தனம் அண்ணை பெரிய மடு சண்டையில் வீரச்சாவு பின்னர் தளபதி  ஜெரி சிறிய காலம் பின்னர் வெளியில் வந்து கருணாம்மான் உடன் ஒரு சாதாரண போராளியா தளபதி ஜெயம் நின்றார் தாண்டிக்குளம் மீதான ஊடறுப்பு சண்டையில் கருணாம்மான் ஒரு பிளாட்டூன் லீடரா தளபதி ஜெயத்தை விட்டார் ......

அப்போது எல்லாம் அவரு பின்னாடி நின்று சொல்வார்கள் மாத்தையா பிரச்சினை இவருமாம் என்று ஏனெனில் போராளிகளுக்கு அவரின் ஆரம்ப படிநிலை தெரியாது ஆனால் அவரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார் தனக்கு கொடுக்கபட்ட வேலை செய்தார் தாண்டிக்குளம் மீதான சண்டையில் துடையில் காயம் அடைத்து கூட மூன்று நாள் அவர் களத்தை விட்டு வெளியில் வரவில்லை தான் மரணிக்க வேணும் என்னும் ஒரு மனநிலையில் இரத்தம் போயும் காயம் பற்றி சொல்லவில்லை ...

பின்னர் கவனித போராளிகள் ஆளை பின்னுக்கு அனுப்பினார்கள் காயம் ஆறி ஆள் தொண்ணூற்றி எட்டில் வந்து இறங்கினார் தனம் அண்ணைக்கு எடுத்த  லான்ஸ் குறொசர் வாகனத்தில் இருந்தல் தலை முட்டும் மேல ....

இனி இவர் தான் பொறுப்பு என்று பிஸ்டல் மிடுக்கான உடை நடை ஆளை பார்த்தால் ஒரு கம்பீரம் வரும் கேணல் ஜெயமா கடைசிவரை அதே விசுவாசம் பற்றுடன் நின்ற ஒரு தளபதி அவர் ...

தாண்டிக்குளம் சண்டை கரும்புலி நிதன் ...யாழினி ..சாதுரியன் ...தடை உடைக்க போகும்வரை இவர்கள்தான் கரும்புலிகள் என்று தெரியாது கண்ணீர் முட்டும் காட்சிகள் அவை  :(  :(

நன்றி அபிராம் ..சகாறா அக்கா வருகைக்கு .

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.