Sign in to follow this  
Sembagan

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?

Recommended Posts

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்

தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?

 

அன்பான யாழ் கழ உறவுகளே!

                                                           நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன்.   இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

                                                           உலகின் வாழும் தொன்மையான மொழிகள் ஆறு. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. இவ்வாறான தொன்மையான மொழியைப் பேசும் இனம் தமிழினம்.  குமரிக்;(லெமுரியா); கண்டத்தில் முதல் தோன்றிய மனிதனும் தமிழனே. முதல் பேசப்பட்ட மொழியும் தமிழே|| என, மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தமிழினம் தனக்கென தனியான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் தொன்மையை இவ்விரண்டின் மூலமாகவே வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் கணக்கீடு செய்கிறார்கள்.

                                                           இன்று எமது நிலையென்ன? தமிழனுக்கென தனியாக ஒரு நாடு உண்டா? ஒரு நாடு இருக்கும்போதுதான் அவற்றைப் பேணிப் பாதுகார்க்க முடியும்? தமிழன் நிரந்தரமாக வாழும் நாடுகளிலேயே தமிழ்மொழி ஆட்டம் காண்கிறது. தமிழர் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு சிதைக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் நாட்டை நோக்கினால் அங்கு தமிழ் படும்பாட்டையும் சினிமா, சின்னத்திரையில் நடைபெறும் தமிழ்கொலைகளையும், கலாச்சார சிரழிவுகளையும்  பண்பாட்டுச் சிதைப்புகளையும் நோக்கலாம். இதனைப் புலம்பெயர் தேசங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்கள். அன்னிய மொழியின் ஆதிக்கத்திற்குள் வாழ்ந்து வரும் நம் இளைய தலைமுறையினர் இதனால் ஈர்க்கப்பட்டு, உள்ளதையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  ஆகவே நான் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டவற்றை விரிவாக ஆராயலாமெனக் கருதுகிறேன். இதுபற்றிய உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நன்றி

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நல்ல ஒரு முயற்சி, செண்பகன்!

 

பல சந்தர்ப்பங்களில், புலத்து வாழ்க்கை அனுபவங்களில்... சிலரது கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுபவை என்னை முகம் சுழிக்க வைத்திருக்கின்றன !

 

ஒரு திறந்த, பரந்த ஒரு சமுதாய அமைப்பு (multiculturalism) என்பதன் கருத்து, மிகவும் பரந்தது என்பது எனது கருத்தாகும்!

 

குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகங்கள், பல அதனைப் பிழையாகப் புரிந்து கொண்டு.. தங்கள் கலாச்சாரம் என்று கூறப்படுவதை மட்டும் பெரும்பான்மைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதும், பெரும்பான்மைச் சமூகங்களின் சகிப்புத் தன்மையைச் சோதிப்பதும் நடை பெறுவதுண்டு!

 

சில உதாரணங்களைத் தேவை ஏற்படின்.. நாம் இங்கு எழுதலாம் என நினைக்கிறேன்!

 

முதலில், எமது கலாச்சாரம் என்பது எதுவென்று வரையறை செய்யுங்கள்.. பின்னர் ஒரு விவாதமொன்றைத் தொடரலாம்!

 

சேலை அணிவதும், வேட்டி கட்டுவதும், பொட்டு வைப்பதும், தாலி அணிவதும் தான் எமது கலாச்சாரம் எனில்.. நான் இந்த விவாதத்தில் பங்கெடுக்கப் போவதில்லை!

 

அல்லது கோவில்களும், பஜனை நிலையங்களும், அரங்கேற்றங்களும், சாமத்திய வீடுகளும் தான் எமது கலாசாரம் எனில், அதிலும் எனக்கு உடன்பாடில்லை!

 

மற்றும், புட்டும், இடியப்பமும், தோசையும், மிளகாத்தூளும் தான் எமது கலாசாரம் எனில் அது ஒருநாளும் அழிந்து போகாது!

 

பெண்ணடிமைத்தனம், வன்முறை, குழந்தைகள் மீது வன்முறை..போன்றவையும் 'பல் கலாச்சாரம்' என்ற போர்வையில் சில நாடுகளில் மறைக்கப்படுகின்றன!

 

ஆனால் மொழி என்று வரும்போது.. அது இரண்டாவது மொழியாகவேனும் வீட்டில் பேசப்படவேண்டும் என்பதில் எனக்கு இரு கருத்துக்கள் இல்லை! 

 

ஆனால் 'தமிழ் மொழியின் வளர்ச்சி' என்பது புலம் பெயர்ந்தவர்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பது எனது கருத்தாகும்!

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?

Share this post


Link to post
Share on other sites

எங்கள் தமிழ்மொழி பற்றி ஆராயலாம். தற்போது எங்களிடம் உள்ள கலை, கலாச்சாரம்,பண்பாடு என எங்களுக்கு உரிமை இல்லாதவற்றை ஆராய்வதில் பயனுண்டா.

Share this post


Link to post
Share on other sites

முதல் இந்த ஐரோப்பா அம்மாமார் பிள்ளை அப்படி பண்ணாத .....இப்படி பண்ணாத .....அதை  பண்ணு ......இதை பண்ணு ........அங்க பண்ணு ......இங்க பண்ணு என்று இந்த பண்ணு என்று சொல்லி சொல்லும் வழக்கத்தை விட ஏதாவது வழி இருக்கா .... :rolleyes:

 

 

Share this post


Link to post
Share on other sites

 

எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?

 

அண்ணை குறை நினைக்காமல் இதே கேள்விகளை லண்டனில் ஐந்தாவது தலைமுறையாய் வாழும் குயராத்தி களிடம் குயராத்தி பாஷையை (இந்தி அல்ல) தொடர்கினமென்டு கேட்டு பாருங்கள் அவர்களை தேடத்தேவையில்லை பக்கத்தில் இருக்கும் பாமஸிகடையில் இருப்பினம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முதலில் இருக்க வீடு வேண்டும். அதாவது எமக்கென ஒரு நாடு வேண்டும். அப்போதுதான் சகலதையும் தக்கவைக்கமுடியும்.

 
புலம்பெயர் நாடுகளில் எமது மொழி என்று பார்க்கப்போனால் பிள்ளைகளிடம் மிகமிக அரிதாகிக்கொண்டே வருகின்றது. இதனை பெற்றோர்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்.தமிழை மனதளவிலாவது கட்டாய கல்வியாக்க வேண்டும்.தமிழ் பாடசாலைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
 
 உணவும் உடையும் பழக்கவழக்கங்களும் ஒரு மனிதனின் கலாச்சார இன காவிகள். என்றைக்கு இவை அனைத்தையும் கைவிடுகின்றானோ அன்றைக்கு அவன் இனம் அழிந்ததிற்கு சமன். :icon_idea:
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மொழியின் இருப்பு என்பது வேறு கலாச்சார விழுமியங்கள் இல்லாது போவது என்பது வேறு...

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி இன்றைய காலத்தில் ஓரளவுக்கேனும் வாழ்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அது வாழும் என்று யாரும் உறுதியாக கூற முடியாது. ஆனால்  பெற்றோர்களின் அக்கறையே தமிழை வளர்க்கும்... வீட்டில் மட்டுமே பிள்ளைகள் தமிழில் பேசுவார்கள் தமிழ் நண்பர்களுடன் கூட அவர்கள் தமிழில் கதைப்பதில்லை. (பக்கத்தில் நிற்கும் வேற்றினத்தவர்களுக்கு விளக்க கூடாது என்றால் தமிழ் பேசுவார்கள்) இந்த விடயத்தில் நான் சீன நாட்டவர்களை பார்த்து பெருமிதமடைவதுண்டு. சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை தமது மொழியில் தான் உரையாடுவார்கள்..

கலாச்சாரம் என்பது பற்றிய வரையறை எனக்கு தெரியாத காரணத;தால் அதை விட்டுவிடுகின்றேன்...

ஆனாலும் தமிழ் மொழியை பேசாது விட்டாலும் ஆடை அணிகலன்களில் இருந்து தமிழர்கள் மாறு பட மாட்டார்கள் .... நல்ல விலைக்கு சேலை... நல்ல பட்டு வேட்டி... அதற்க்கு ஏற்ற வேற கலர்ல ஒரு சேட்டு பேட்டுத் தான் திருமண நிகழ்வுகளுக்கு இளைஞர்கள் பேவதை காணக்கூடியதாக உள்ளது (கனடாவில்) 

திருமண முறையும் மாறப்பேவதில்லை... மண்டப நடாத்துனர்கள் மாற்றினால் சில நேரம் அது மாற சந்தர்ப்பம் உண்டு.. தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சி நிலை மத்தமாக உள்ளதுடன் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

 

தமிழ் எழுதுவது சிக்கலாக இருக்கின்ற போதும்... ஐ போன் போன்ற தமிழ் கீ போர்ட் வந்த பின் எழுத தெரியாதவர்களும் எழுத முயற்ச்சிக்கின்றனர்.


ஒட்டு மொத்தமாக காலம் தான் பதில் சொல்லனும்..

Share this post


Link to post
Share on other sites

------

தமிழ் எழுதுவது சிக்கலாக இருக்கின்ற போதும்... ஐ போன் போன்ற தமிழ் கீ போர்ட் வந்த பின் எழுத தெரியாதவர்களும் எழுத முயற்ச்சிக்கின்றனர்.

------

 

அவ்வளவு தூரம் ஏன் போவான், நிதர்சன்.

தமிழ் கணணி தட்டச்சு வந்து யாழில் எழுத தொடங்கியிருக்காவிட்டால்....

ஈழத்தில் தமிழில் கல்வி கற்ற என்னால்,  இன்று சரியான தமிழில் எழுதுவேனா என்ற சந்தேகம் உள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

 

எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?

 

 

1. இந்த ஒரு கேள்வியே போதும் உங்கள் ஏனைய கேள்விகள் இதைச் சார்த பதிலிலே பதிலளிக்கப்பட்டிருக்கும்.

 

2. தமிழ் மொழியில் பேசுவதால் உடனடி நன்மை...

         - இரு மொழிகளை அறிதல்

         - வேற்று நாட்டுத் தமிழர்களுடன் பொதுவான ஒரு மொழியான தமிழில் உரையாடுதல்

         - கனடாவில் வேலை வாய்ப்புகள் உண்டு  (வங்கி - மொழிபெயர்ப்பு -காவல்துறை )

         - தாய் மொழியை பேசுவதால் தமிழன் என்ற இன அடையாளத்தை இழக்காதிருத்தல்

 

3.- இன அடையாளம் இழந்த ஒரு சமூகம் உருவாகும்

   - ஏனைய மொழி பேசும் தமிழர்களோடு தொடர்பாடல் துண்டிக்கப்படும்

 

4. ஊருக்கு போவதற்காக யாரும் தமிழ் பேசும் படி கேட்கவில்லை. மாறாக ஊரில் செத்துக் கொண்டிருக்கும் தமிழை நாங்களாவது காப்பாற்றுவோம் , பேசுவோம் என்கிறார்கள். தமிழ் தெரியாதவர்கள் ஊருக்கு போக முடியாது என்ற நிலை இல்லை.

 

5. தமிழ் மொழியை ஒரு திணிப்பாக கருதும் எந்த குழந்தையும் -மாணவனும் தமிழைக் கற்றுக்கொள்ள மாட்டார். தமிழ் மொழியை ஒரு விருப்ப பாடமாக உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தெரிவு செய்து கற்கிறார்கள் (கனடாவில் தெரிவு செய்ய முடியும்)  ஆனாலும் பெற்றோர் குழந்தைகளை எப்படி வீட்டில் வளர்க்கிறார்களோ அந்த வகையில் தான் பிள்ளைகள் வளரும்... எனக்கு தெரிந்த ஒருவர் வெளியில் தனது நண்பர்களோடு தமிழில் பேசியதே இல்லை. ஆனால் எங்களோடு வந்திருக்கும் போது தமிழில் பேசுவார். இப்போது எழுதுவதை கூட நன்றாக வாசிப்பார் ஆனால் தமிழ் நண்பர்களுடன் (அவரது பள்ளி) தமிழில் பேச மாட்டார் அல்லது அவரது நண்பர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் நிறைய ஆண்கள் -மாணவர்கள் தங்களுக்குள் தமிழில் பேசுவதை அவதானிக்க முடியும்... பெண்கள் தமிழ் கதைக்க வெட்கப்படுகிறார்கள் போல..!

6. நீங்கள் உங்கள் சமூகத்தை முதலில் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை சொன்னால் தான் மற்றவர்கள் கருத்துச்  சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரை எனது சமூகம்  மதிப்புக்குரிய சமூகமே.. எந்த தொழிலை எடுத்தாலும் அதில் தமது கடின உழைப்பை காட்டி முன்னுக்கு வரும் இனமாகவும், தொன்மையான இனமாகவும் இருக்கிறது தமிழினம்.

அவ்வளவு தூரம் ஏன் போவான், நிதர்சன்.

தமிழ் கணணி தட்டச்சு வந்து யாழில் எழுத தொடங்கியிருக்காவிட்டால்....

ஈழத்தில் தமிழில் கல்வி கற்ற என்னால்,  இன்று சரியான தமிழில் எழுதுவேனா என்ற சந்தேகம் உள்ளது. 

 

அது மட்டுமன்றி, யாழில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த , ஆங்கிலம் தவிர்ந்த மொழி பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை இணைத்து வைத்துள்ளது தமிழ் தான். நீங்கள் உங்கள் நாட்டு மொழியில் எழுதுவீர்களாக இருந்தால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும்..!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தனது கலாச்சாரம், பண்பாடு, மொழி மீது உயர்ந்த மதிப்பீடு இல்லாத ஒரு சமூகத்தால் எதையும் தக்க வைக்க முடியாது.  தமிழர் கலாச்சாரம் தான் வாழும் பிரதேசங்களிலே நிலைத்து நிற்க போராடும்போது புலம்பெயர் தேசம் எல்லாம் எம்மாத்திரம் !!??

Share this post


Link to post
Share on other sites

இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படும் இயல்பையே பண்பாடு என்கிறோம்.

இவற்றை எல்லாம் புலம்பெயர் தேசங்களில் தக்க வைக்க முடியுமா?

 

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

 

மொழி என்பது ஒரு உரையாடல் கருவி மட்டுமல்ல. அது ஒரு அறிவு பெட்டகம். பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்த நமது மூதாதையர்களின் மொத்த அறிவும் / அனுபவமும் நூல் வடிவாக, செய்தியாக, கதையாக, பாடலாக மொழி மூலம் பரப்படுகிறது. அந்த மொழி அழியும்போது அதனோடு  அந்த அறிவும் அனுபவமும் சேர்ந்தே அழிந்து போகும்.

 

எல்லாவற்றியும் விட தமிழன், தமிழ் என்பது நமது அடையாளம். இன்சியல் இல்லாமல் இருப்பது போலத்தான் அடையாளம் தொலைப்பதும்....  பொருளாதரத்தையும் தாண்டி யோசித்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மொழி பற்றிய எனது கருத்து கொஞ்சம் வித்தியாசமானது!

 

'Oriental Languages' என்னும் மொழித் தொகுதி படிப்பதற்கு மிகவும் சிக்கலானது! ஜப்பானிய, சீன, கொரிய, மற்றும் இந்திய மொழிகள் இதில் அடங்குமென நினைக்கிறேன்!

 

உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் கலந்து மொழி உருவானதால் . குழந்தை நிலையில் இருக்கும் போதே, ஒரு விதமான தர்க்க அறிவை இந்த மொழிகள் வளர்த்து விடுகின்றன!

 

இதுவே கணிதப் பிரச்னைகளையும், மென் பொருள் பிரச்சனைகளையும்,வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஒரு முன்மாதிரியாக 'தர்க்க அறிவை' இந்த இனங்களுக்கு வழங்குகின்றது என்பது எனது அனுமானமாகும்!

 

இந்த அறிவே கள்ள மட்டை அடிப்பதற்கும், உணவுக் கலப்படங்களுக்கும், ஆள் கடத்தல்களுக்கும் பயன்படுகின்றது என்பது வேறு விடயம்! :o

 

ஏனெனில் இந்த 'மொழிப்பின்னணி' குழந்தைப் பருவத்தில், அறவே இல்லாத இளையவர்களிடம்.. கணிதம் போன்ற பாடங்கள் அதிகம் வரவேற்பைப் பெறுவதில்லை!

 

இது மொழி சம்பந்தமாக,எனது தனிப்பட்ட அனுமானம் மட்டுமே!

Edited by புங்கையூரன்

Share this post


Link to post
Share on other sites

மேற்குறிப்பிடப்பட்ட  தலைப்பை தொடங்கியபோது உரிமையுடன் முன்வந்து கருத்தெழுதிய புங்கையூரன்.   ஈசன்.  பஞ்ச். அஞ்சரன். பெருமாள்    ஆகியேருக்கு எனது மனமுவர்ந்த பாராட்டுக்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்குமகமாகவும். இளம் தலை முறையினருக்கு ஏதுவாகவும் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டி. சரியான கருத்துக்களையும்  ஆக்கபூர்வமான விமர்சனத்தையும்  பிரயோசனமளிக்கும் விதத்தில் முன் வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

         உலகில் வாழும் தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. இவ்வினத்தின் மொழி தமிழ். இதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த மொழியாகும்.  இம்மொழியில் சிறப்பையும் இம் மொழியைப் பேசும் இனத்தின் சிறப்பையும் எடுத்துக் காட்டுவனவாக இருப்பவை நாகரிகம்> பண்பாடு ஆகியவையாகும். இதில் பண்பாடு  கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது.  

 

*"மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு உடை - உறையுள் - ஊர்தி - நிலம் -  புலம் -  தோட்டம் - துரவு கழனி காடு அணி மணி மாடமாளிகை - கூடகோபுரம் – எழிலுடல். ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவது நாகரிகம்.||

*"மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு -  அறிவு -  ஆற்றல் - இன்பம் -  இயல்பு - உணர்ச்சி -  எழிற்சி -  வீரம் - தீரம் -  ஈவு -  இரக்கம் -  அமைதி -  அடக்கம் - ஒப்பரவு - ஒழுக்கம் -  உண்மை - ஊக்கம் -  சினம் - சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.|| (பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் - இரா.நெடுஞ்செழியன்.)

 

பண்டைத் தமிழர்கள் தமக்கென இறைமையுள்ள நாடுகளில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கென நாகரிகம். பண்பாடுகள் இருந்தன. அதனால் அவன் முழுமைபெற்ற சிறப்புமிக்க ஒரு இனமாக வாழ்ந்தான். அப்படியான ஒரு இனம் இன்று அடிமைகளாகவும் அகதிகளாகவும் பல நாடுகளில் வாழும் நிலையில் உள்ளது. நிரந்தரமாக வசிக்கும் நாடுகளில் கூட அவனது மொழி. கலாச்சாரம் போன்றவை என்ன நிலையில் உள்ளன என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.  இந்நிலையில் புலம்;பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? ஏன்பதே கேள்வியாக உள்ளது.

 

புலம்பெயரும் ஒருவர் முதல் சந்திக்கும் மாற்றம் ஒரு நாட்டின் தட்பவெட்ப மாற்றங்களே. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை நோக்கினால் அந்நாட்டுக் கால நிலைக்கேற்ப குளிரிலிருந்து தன்னைக் காப்பாற்ற உடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின் அந்நாட்டு மொழியைக் கற்றாக வேண்டும். அந்நாட்டு மொழி அத்தியாவசிய தொடர்புசாதனமாக அமைகிறது. இதன் பின் உணவிலும் பண்பாட்டிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில்தான்  புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் தமதுமொழி. கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதன் விளைவாக தமிழ்மொழி கற்பிப்பதற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலைவகுப்புகள் நடாத்துவதற்கான பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்வுகள்  நடைபெறுவதற்கான   மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. தமிழ்மொழிப் பாடசாலைகள் அமைக்கப்படும்போது தமிழ்மொழி கற்பிப்பதில் பெற்றோர் பெருமளவில் ஈடுபடவில்லை. தமிழ்மொழி கற்பதால் என்ன பயன் என்று பலர் பேசியதைக் கேட்கக் கூடியதாக இருந்தது. திருப்பி அனுப்பினால் அங்குபோய் பிள்ளைகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற மனப்பாங்கில் சிலர் தமிழ்மொழி கற்பிக்க உடன் பட்டார்கள். தமிழ்மொழி கற்பிற்க்கூடிய பல பயற்றப்பட்ட ஆசிரியர்கள் இருந்தும் அவர்கள் கற்பிப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில்தான்  கற்பிக்க ஆர்வம் உள்ளவர்களைக்கொண்டு பாடசாலைகள் நடாத்தப்பட்டன.  பின்னர் தமிழ்மொழியில் ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டு. திறமையாகச் சித்திஎய்துபவர்களுக்கு பரிசில்களும்   வழங்கப்படட்டன.  இதேபோன்று  கலைவகுப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாலும் தமிழ்மொழி. தமிழ்க்கலைகளில் முன்னேற்றம் காணும் நிலை ஏற்பட்டதுடன் தமிழ் இளைஞர்கள் தாய் மொழியான தமிழ் மொழியிலும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டார்கள்.

இதன்பின்  மாணவர்கள் மேற்கல்வி கற்கும் நிலைக்கு வந்தபோது தமிழ்மொழி. கலைப்பாடங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றபோது தமிழ் மொழியைத் தொடர்ந்து பயிலும் நிலை தடைப்பட்டது.  

 

இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் பலர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியில்; பேசும் திறன் அற்றவர்களாக இருந்ததால். பிள்ளைகளுக்கும் பெற்றேருக்குமிடையே தமிழ்மொழி தொடர்பு மொழியாக இருந்தது. இந்நிலையில் பிள்ளைகள் பெற்றோருடன் தாய் மொழியிலும் அயலவர்களுடன் நண்பர்களுடனும்  வாழும் நாட்டு மொழியிலும் உரையாடத் தொடங்கினார்கள். இதனால் தமிழ்மொழி பழக்கம் குறைவடையத் தொடங்கியது. சில இடங்களில் கலைப்பாடங்கள் வாழும் நாட்டு மொழியிலே நடாத்த வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்மொழிப் பாவனை  மேலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. கலைப்பாடங்களில் பரதநாட்டியம் ஒருவித ஈடுபாட்டை இளம்பெண்களிடையே ஏற்படுத்தியதால்  அதனை பயிலும் சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள். இதுவும் காலப்போக்கில் குன்றத் தொடங்கியது. வாழும் நாடுகளில் அந்நாட்டு மொழி. கலை. கலாச்சாரம் போன்றவை தமிழ்மொழி. கலை கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்பத்தி நெருக்ககடிக்குள்ளாகும் நிலையில்.  இந்தியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் தொலைக்காட்சிகள் தமிழருக்குரித்தில்லா நாகரிகம். பண்பாடு போன்றவற்றை புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடையே திணித்து வருவதுடன் ஆங்கிலத் தமிழையும் திணித்து வருகின்றன. இவற்றைக் கடைப்பிடித்து  ஐரோப்பாவில்  இருந்து ஒலிபரப்பப்படும்  தொலைக்காட்சிகளும் செயற்படுவதால் புலம்;பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ்மொழி. தமிழர் கலாச்சாரம் மேலும் நெருக்ககடிக்குள்ளாகும். இந்நிலையில் இன்றைய தலைமுறையினர் ஓரளவாவது கட்டிக் காத்தாலும் அதற்கடுத்த தலைமுறையினரிடையே தமிழ்மொழி. கலை கலாச்சாரம் பண்பாடு போன்றவை வாழுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே உண்மை.

தொடரும்.

 

Share this post


Link to post
Share on other sites

குமாரசாமி: நிதர்சன், தமிழ்சிறி, ஆதித்த இளம்பிறையான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

 

ஈசனின் கேள்விகளுக்கு நிதர்சன் பதிலளித்திருந்தார். அதையொட்டி எனது கருத்துக்களையும் இங்கே பதிகிறேன்.

மொழியென்பது ஒரு இனத்தின் அடையாளம். அதனை பழகாமல் விடின் அது  வழங்கொழிந்துபோய்விடும். பல மொழிகள் பழகாமலே இறந்துவிட்டன.  

மொழி அடையாளம் இழந்த இனம், நாடோடி இனம்.

மேலும் இரண்டு தமிழர்கள் ஒரு இடத்தில் நின்று ஆங்கில மொழியிலோ அல்லது பிரான்ஸ் மொழியிலோ பேசிக்கொண்டு நின்றால் அவர் எந்த நாட்டைச் சோந்தவர் என்று சிந்திக்கும் நிலை தோன்றும். பின்னர் அவர்கள் பாகிஸ்தானியரா? ஆப்கானிஸ்தானியரா? பங்களாதேசத்தவரா? சொர்ணாமா…? கேரளாவா? ஆந்திராவா? என்று மண்டையைக் குடையும் நிலை தோன்றும். இருவரும் தமிழில் உரையாடிக்கொண்டு நின்றாள் இந்நிலை தோன்றுமா?  

மொழி தெரியாமல் ஊருக்குப் போன ஒரு குழந்தை, விசரர் பைத்திய காரர் போன்று அங்கு நடந்து கொண்டதாகக் கேள்வி… காரணம் அவர் ஒருவருடனும் பழகக்கூடிய நிலை இல்லை.

மேலும் பிரான்ஸ், நோர்வே, இங்கிலாந்து, யேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ளவர்கள் அந் நாட்டு மொழிகளுடன் தமிழையும் கற்றிருந்தால் தமிழ்மொழி அனைத்துத் தமிழ் மக்களையும் தொடர்பு படுத்தக்கூடியதாக இருக்கும். இதற்காகத்தான் தமிழால் ஒருங்கிணைவோம் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.

இன்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியுள்ளார் சங்கப் புலவர் கணியன்பூங்குன்றனார் அவர்கள்.  மேலும் தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம்,  இலக்கியம், கலை, பொறியியல், விஞ்ஞானம், விவசாயம், ஆன்மிகம், சிற்பம் சாத்திரம், ஓவியம் போன்ற பழமைமிக்க  வாழ்வியலைக் கொண்ட இனம் தமிழினம். தமிழரின் பெருமை தமிழருக்குத் தெரியாது. சீனா, யப்பான், போத்துக்கல், இத்தாலி, யேர்மனி  போன்ற தேசத்தவருக்குத் தெரியும்.   
 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

மேற்குறிப்பிடப்பட்ட  தலைப்பை தொடங்கியபோது உரிமையுடன் முன்வந்து கருத்தெழுதிய புங்கையூரன்.   ஈசன்.  பஞ்ச். அஞ்சரன். பெருமாள்    ஆகியேருக்கு எனது மனமுவர்ந்த பாராட்டுக்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்குமகமாகவும். இளம் தலை முறையினருக்கு ஏதுவாகவும் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டி. சரியான கருத்துக்களையும்  ஆக்கபூர்வமான விமர்சனத்தையும்  பிரயோசனமளிக்கும் விதத்தில் முன் வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

      

 

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?

 

                          தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறி வாழ்கிறார்கள். அப்படி வாழும் நிலையில் தமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்;பார்களா? கைவிடுவார்களா என்று சிந்தித்து அதற்கான காரணிகளை சுருக்கமாக ஆராய்வோம்.

                          உலகில் வாழும் தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அதேபோல்  தொன்மையான மொழிகள் ஆறில்,  தமிழ்மொழியும் ஒன்று. இவ்வாறான தொன்மையான மொழியைப் பேசும்   தமிழினம். உலகின் தோன்றிய முதல்  மாந்தனென  மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

குமரிக்;(லெமுரியா); கண்டத்தில் முதல் தோன்றிய மனிதனும் தமிழனே. முதல் பேசப்பட்ட மொழியும் தமிழே||  இக்கூற்றை நோக்கும்போது தமிழினத்தினதும் தமிழ்மொழியனதும் தொன்மையைப்; புரிந்துகொள்ள முடியும்.

 

ஒரு இனத்தின் தொன்மையை நாகரீகம்;, பண்பாடு ஆகியவற்றின் வரலாற்று ஆதாரங்கள் மூலமாகவே, வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். இவற்றில்; பண்பாடு  கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் நாகரிகம் \\மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும், உணவு உடை - உறையுள் - ஊர்தி - நிலம் -  புலம் -  தோட்டம் - துரவு கழனி காடு அணி மணி மாடமாளிகை - கூடகோபுரம் - எழிலுடல் ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவது|| எனவும் \\அன்பு -  அறிவு -  ஆற்றல் - இன்பம் -  இயல்பு - உணர்ச்சி -  எழிற்சி -  வீரம் - தீரம் -  ஈவு -  இரக்கம் -  அமைதி -  அடக்கம் - ஒப்புரவு - ஒழுக்கம் -  உண்மை - ஊக்கம் -  சினம் - சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு|| எனவும் இரா நெடுஞ்செழியன் அவர்கள் பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

பண்டைக் காலத்தில்  தமிழர்கள் தமக்கென இறைமையுள்ள நாடுகளில் வாழ்ந்தார்கள். அதனால் மேற்கூறப்பட்ட நாகரீகம், பண்பாடு ஆகியவற்றில் முழுமைபெற்ற, சிறப்புமிக்க ஒரு இனமாக வாழ்ந்தார்கள். இதற்குப் பல சான்றுகளும் உள்ளன. இப்படியான ஒரு இனத்திற்கு இப்போது தனியாக இறமையுள்ள  நாடு இல்லை. இருந்தால் அதனைப் பாதுகாக்க முடியும் என சிலர் விவாதிக்கலாம். அதில் உண்மை உண்டு.  ஆனால் தமிழன் இப்போது நிரந்தரமாக வாழும் நாடுகளில் அவனது மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணிக்காக்க முடிகிறதா? குறிப்பாக தழிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன? தமிழ் பண்பாட்டின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள் அல்லது அங்கே சென்று பாருங்கள் புரியும். இந்நிலையில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் இடங்களில் அதன் நிலைப்பாடு எப்படி அமைந்துள்ளது. எப்படி அமையப்போகிறது?

 

1983ம் ஆண்டுக்குப்பின்னர்  புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில்  பெருந்தொகையானவர்கள்  இலங்கையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இலங்கையில் இனவாத சிங்கள அரசின் இராணுவக் கொடுமையினால் உயிரைக் காப்பாற்றும்பொருட்டு  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார்கள். புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குப் புலம்பெயரவில்லை. உலகில் உள்ள பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமது மொழி, கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கவும் தலைப்பட்டார்கள்.

 

புலம்பெயரும்போது, ஒருவர் முதல் சந்திக்கும் மாற்றம் ஒரு நாட்டின் தட்பவெட்ப நிலை மாற்றங்களே. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை நோக்கினால் அதிகமான நாடுகளில் பெரும் குளிரே காணப்படும். அதற்கேற்ப வாழ அவர்; தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கமைவாக  குளிரிலிருந்து தன்னைக் காப்பாற்ற உடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின் அவர் மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு மொழியைக் கற்றாக வேண்டும். இதனால் அவர் தாய் மொழியான தமிழ்மொழியின் ஈடுபாடு குன்றத் தொடங்குகிறது.  இதன் பின் உணவிலும்  பண்பாட்டிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில்தான்  புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் சிலர் தமிழ்மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதன் விளைவாக தமிழ்மொழி கற்பிப்பதற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலைவகுப்புகள் நடாத்துவதற்கான பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்வுகள்  நடைபெறுவதற்கான   மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. தமிழ்மொழிப் பாடசாலைகள் அமைக்கப்படும்போது பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழி கற்பிப்பதில்  பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை. இக்காலகட்டத்தில்  \\தமிழ்மொழி கற்பதால் என்ன பயன்? ||; என்று கேட்பவர்கள் பலரைக் காணக் கூடியதாக இருந்தது.  வாழும் நாடுகளில் தொடர்ந்து வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் கிடைக்காததனால் இ.லங்கைக்குத் திருப்பி அனுப்பினால்  அங்குபோய் பிள்ளைகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற மனப்பாங்கில் சிலர் தாமதமாகத் தமிழ்மொழி கற்பிக்க உடன் பட்டார்கள். அன்றைய சூழலில் தமிழ்மொழி கற்பிற்க்கூடிய பல பயிற்றப்பட்ட ஆசரியர்கள் இருந்தும் அவர்கள் கற்பிப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில்  கற்பிக்க ஆர்வம் உள்ளவர்களைக்கொண்டு பாடசாலைகள் நடாத்தப்பட்டன.  பின்னர் தமிழ்மொழியில் ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாகவும் திறமையாகச் சித்தி எய்துபவர்களுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும்   வழங்கப்படட்டன.  இதேபோன்று  கலை வகுப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாலும் தமிழ்மொழி, தமிழ்க்கலைகளில் முன்னேற்றம் காணும் நிலை ஏற்பட்டதுடன் தமிழ் இளைஞர்கள் தாய் மொழியான தமிழ் மொழி கற்பதிலும் தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் பெரும் ஈடுபாட்டைக் காட்டினார்கள். 

 

பெற்றோர்கள் பலர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியில்; பேசும் திறன் அற்றவர்களாக இருந்ததால். பிள்ளைகளுக்கும் பெற்றேருக்குமிடையே தமிழ்மொழி தொடர்பு மொழியாக இருந்தது. பிள்ளைகள் பெற்றோருடன் தாய் மொழியிலும் அயலவர்களுடன் நண்பர்களுடனும்  வாழும் நாட்டு மொழியிலும் உரையாடத் தொடங்கினார்கள். இச் செயலே  தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழிப் பழக்கம் குறையத் ஆரம்பமாக அமைந்தது.  இதன்பின்  மாணவர்கள் மேற்கல்வி கற்கும் நிலைக்கு வந்தபோது தமிழ்மொழி, கலைப்பாடங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றபோது தமிழ் மொழியைத் தொடர்ந்து கற்கும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ்மொழி பழக்கம் மேலும்  குறைவடையத் தொடங்கியபோது. பரதநாட்டியம், குரலிசை,  வீணை போன்ற கலைப்பாடங்களில் ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டு மொழியிலே அப்பாடங்களை நடாத்த வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்மொழிப் பாவனை முன்னரைவிட  மேலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன்பின்  பரதநாட்டியம்  ஒருவித ஈடுபாட்டை இளம்பெண்களிடையே ஏற்படுத்தியதால்  அதனைத் தொடர்ந்து  பயிலும் நிலையில்  சில மாணவர்கள் இருந்தார்கள். இதிலும்  காலப்போக்கில்  வீ;ழ்ச்சி ஏற்பட்டது.

 

இந்நிலையில் தமிழ்மக்கள் நிரந்தரமாக வாழும் நாடுகளில் தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி வரும்  சினிமா, தொலைக்காட்சி, சின்னத்திரை போன்றவை  புலம்பெயர்ந்த தேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றன. சினிமா மக்கள் மத்தியில் எதையும் சுலபமாகக் கொண்டு செல்லக்கூடிய பாரிய பிரச்சார ஊடகம். இப்போது அது வர்த்தக நோக்கிலேயே தயாரிக்கப்படுவதால் தமிழ் மக்களை  விழிப்பூட்டக் கூடிய கதை அம்சங்களைக் கொண்டவையாகத் தயாரிக்கப்படுவதில்லை. முற்றுமுழுதாகப் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும் மொழிக் கலப்புச் செய்வதாகவும் மாறுபட்ட கலாச்சாரத்ததைப் புகுத்துவதாகவுமே தயாரிக்கப்படுகிறது. இச்செயற்பாடு  தமிழ்நாட்டைப் பாதித்துவருவதுபோல் புலம் பெயர்ந்து வாழும்  தமிழ்மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளில் அன்னிய மொழி, கலை, கலாச்சாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்மக்களிடையே இவ் ஊடகத்தின் செயற்பாடுகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக தமிழ் மொழியிலும் தமிழர் கலாச்சாரத்திலும் ஆங்கிலத் தமிழையும் வட இந்தியக் கலாச்சாரத்தையும்  புகுத்தி வருவதை இங்கு குறிப்பிடலாம். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிச் சேவைகள் கூட இத் தொலைக்காட்சிகளைப் பின்பற்றி ஒளிபரப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்

 

இத்தருணத்தில் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றை உதாரணத்துக்கு இங்கே இணைக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுடன் நடைபெறும் உரையாடல்கள், நிகழ்ச்சித் தலைப்புக்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பாருங்கள்.  அவை புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலுள்ள இளைஞர்களைப் எந்தெந்த வகையில் பாதிக்குமென சிந்தியுங்கள். 

 

நிகழ்ச்சித் தலைப்புக்கள்:

சுப்பர் சிங்கர் - Samaiல் – Star Junction Super Singer Koffee with dd  - கொனெக்~ன் Top 10 Home minister - ஜோடி நம்பர் 1  - கிச்சன் Super star…

விளம்பரங்கள்:

\\கட் பண்ணுங்க கொக் பண்ணுங்க ரேஸ்ட் பண்ணுங்க. றைஸ் ரெடி..

கொமடி இருக்கு சோங் இருக்கு பைற் இருக்கு லவ் இருக்கு... .||

உரையாடல்:

\\சோ... ஒகே...  ஓகே  எங்கட  றிலேசனசிப்  வெறி வெல்  நாங்க

சேர்ந்து வேக் பண்ணுறம் நல்லா என்சொய் பண்றம்  

ஒரு சின்னப் பிறேக்..    .||

                    

ஒளிபரப்;ப்படும் தொடர் நாடகங்களில் பெரும்பகுதி  முற்றுமுழுதாக வட இந்திய கலாச்சாரத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்களாகவே காணப்படுகின்றன. அவை தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன.  இங்குள்ளவர்கள் அதனைப் பார்த்து அந்தக் கலாச்சாரத்துக்குள்ளேயே மூழ்கிறார்கள். அதில் வரும் நடைர் உடை, பாவனைகளைப் பின்பற்றி தாங்களும் அவ்வாறே நடக்க முனைகிறார்கள். தமிழர்  திருமண முறைகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் இக் கலாச்ச்சாரத்தைப் பின்பற்றி நாடக பாணியிலேயே பெருந்தொகைப் பணம் செலவு செய்து நடைபெறுகின்றன. நாடகத்தில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் உடைகள் மாதிரி வேண்டுவதற்காக

நாடு நாடாக அலைபவர்களும் அவ்  உடைகளுக்காகவும் அதில் வரும் அரங்குகள் மாதிரி அமைத்து திருமண நிகழ்ச்சிகள், பூப்பனித நீராட்டுவிழா நிகழ்ச்சிகள்  செய்வதற்காகவும்  பெருந்தொகைப் பணம் செலவு செய்து  கடனாளியானவர்களும் பலருண்டு. மேலும் இந் நாடகங்கள் தமிழரின் சிந்தனைச் சக்தியை மூழ்கடித்து, தொலைக்காட்சிப் பெட்டியில் ஒட்டிய பூச்சியாக தமிழ்;மக்களை மாற்றியுள்ளது. சின்னத்திரை நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது வீடுகள் எரிந்த சம்பவங்களும் பல உண்டு.  இதே வேளை சினிமாவைச் சொல்லத் தேவையில்லை. இதன் மூலம்  தமிழ் மொழியும்  தமிழர் கலாச்சாரமுமு; வளர்வதற்குப் பதிலாக வீழ்ச்சியடையும் நிலையே உருவாகிறது.  இதை எம்மவர்கள் மௌனமாக வரவேற்பது கவலையான விடயம்.

 

தமிழர்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை பின்பற்றி வாழ்பவர்கள். உறவு முறை, பெரியோரை மதித்தல், உணவுமுறை, திருமண முறை, வழிபாட்டு முறை எல்லாமே தனிப்பண்பு வாய்ந்தவையாக இருந்தன. புலம்பெயர்ந்து வாழும் இடத்தில் இவை அனைதும்  அடியோடு பிரட்டிப்போட்டதுமாதிரி மாறிவிட்டன. பிள்ளைகள் பதினெட்டு வயதுக்கு மேல் தனியான இடங்களுக்கு மாறி விடுகிறர்கள். இதனால் பெற்றோர் தனித்து விடப்பட்டு, கூண்டுக்குள் அடைபட்ட சோடிப் புறாக்கள்போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் நோயும் பிணியுமாக கவலையுடன் காணப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் தனியாக வாழும் நிலை தோன்றியுள்ளதால் அவர்கள் பெரியேரை மதிப்பவர்களாகவோ, உறவுமுறை தெரிந்தவர்களாகவோ, தமிழரின் பாரம்பரிய உணவுகளையோ பழக்கவழக்கங்களையோ  பேணுபவர்களாகவோ, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்பவர்களாகவோ  இல்லை. இதேவேளை அவர்கள் தமக்கு விரும்பமான ஒருவரை, வாழ்க்கைத் துணையாகத் தாமாகவே  தேடிக்கொள்ளுகிறார்கள். பின்னர்  இவர்களே விவாகரத்தும் பெற்றுத் தனிமையில் வாழ்கிறார்கள்.  மேற்காணும் திருமண முறைகளினால்  தமிழரிடையே காணப்படும் சாதி அமைப்பு முறையும் சமய சம்பிரதாய முறைகளும் தகர்க்கப்படுகின்றன. பலரின் திருமண நிகழ்வுகள் வாழும் நாட்டு முறைப்படியே நடைபெறுகின்றன. அதே வேளை தமிழரல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களும் உண்டு. எதிர்காலத்தில் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தமிழர் கலாச்சாரத்தையோ தமிழ் மொழியையோ கடைப்பிடிக்காதவர்களாகத்தான் வளர முடியும். 

 

பெற்றோருக்கமைவாக நடக்கும் பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில்  பலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கமைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவதால் விரத்தி நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஐயர்மாரின் காலில் விழும்படி  தள்ளிவிடப்படுகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள்; பாதிக்கப்பட்டுவரும் தமிழருக்கும் உதவுவதில்லை. தமிழ்மொழி தமிழர் கலாச்சாரம் போன்றவற்றையும் பேணிப்பாதுகாக்க முன்வருவதில்லை. மாறாகப் பணம்கறக்கும் இடங்களாகவே செயல்படுகின்றன. இத்தலங்கள் நேரத்திற்கும் மதிப்பளிப்பதில்லை.  இதனை அவதானித்து வரும் இளைஞர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு (சைவக் கோவில்கள்) செல்வதையே வெறுக்கிறார்கள்.

 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அடுத்த தலைமுறை,  வாழும் நாட்டுக் கலாச்சாரத்தை உள்வாங்கி,  அந்நாட்டு  மொழியிலேயே  சகல தொடர்புகளையும் பேணி வருவதாலும்  அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் மாற்றம் பெறுவதாலும் இரண்டாவது தலைமுறை  தமிழ்மொழியில் பேசுவதற்கான வாய்ப்போ தமிழர் கலாச்சாரத்தைப் பேணுவதற்கான வாய்ப்போ  கிடையாதென்பது எனது கருத்து  அவர்கள் முற்றுமுழுதாக வாழும் நாட்டுக் கலாச்சாரத்திலேயே வளர்ந்து வாழும் நாட்டு மொழியையே பேசுவார்கள்.   அதனால் தமிழர் கலாச்சாரமோ மொழியோ  எதிர்காலத்தில் கைவிடப்படும். இக்கட்டத்தில் காக்கையின் கூடுகள்  என்றொரு சிறுகதையில் வரும் பகுதியை இக்கே குறிப்பிடலாம். அது இப் பந்திக்குப் பொருத்தமாகவும் அமையுமெனக் கருதுகிறேன்.

 

\\காக்கையின் கூடுகளில் குயில் முட்டையிட காகத்தினால் அது அடைகாக்கப்பட்டு  பொரிக்கப்பட்ட பின் குஞ்சுகள் காக்கா என்று கத்தாமல் கூ...கூ...  என்றுதானே கூவத் தொடங்குகின்றன. ஆனால் நம் தமிழ்க் குஞ்சுகளைப் பார்த்தீர்களா? எந்த நாட்டில் பிறந்ததுகளோ அந்த நாட்டு மொழியில் அல்லவா பேசுதுகள்.|| 

 

இந்நிலையில் ஆரம்பகாலங்களில் பாடசாலைகளை ஆரம்பித்தவர்கள் தமிழ்மொழி வளர்க்கும் நோக்கில் மிக்க  ஆர்வத்துடன் மாணவர்களை அணுகிப் தமிழைப் படிக்கத்தூண்டி. பாடசாலையை நடாத்தினார்கள். அதனால் பல  மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க சென்று கொண்டிருந்தார்கள். இப்போது அந்த நிலை இல்லை. பாடசாலையை நடாத்தும் சிலர்,  தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகிறார்கள். அதனால் கல்வி கற்க வரும் மாணவர்களும் தமிழ்மொழி கற்பதில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இதேபோன்றுதான் கல்வி போதிக்கும் சில ஆசிரியர்களும்  கௌரவநோக்கை அடிப்படையாக வைத்துத்தான்  பாடசாலைக்கு செல்லுகிறார்களே தவிர தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டர்களாக இல்லை. கலைப்பாடங்கள் நடாத்தும் பாடசாலைகளோ ஆசிரியர்களோ பணத்தைக் குறியாகக்கொண்டே இயங்குகிறார்கள். தமிழர் நலன்சார்ந்த சமூக அமப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தும் அவைகூட சுயநலப் போக்கிலும் பதவிப் போட்டிகளிலும் அரசியல் காழ்ப்புணர்வுகளுக்குள்ளும் சிக்கி ஏட்டளவில்தான் செயல்படுகின்றன. சில மேடை நிகழ்சிகள் செய்வதுடனேயே நின்று விடுகின்றன.  மேடை நிகழ்ச்சிகளில் தெலுங்குப்பாடல்களே முன்னணி வகுக்கின்றன. இச் செயற்பாடுகளும் தமிழ்மொழியினதும் தமிழ் கலையினதும் எதிர்காலத்தைப்  பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

 

தமிழ் மக்கள்   புலம்பெயர்ந்து   வாழும் தேசங்களில்,  தமிழ் மக்களின் முதலாவது தலமுறையில், வாழும் நாட்டு கலாச்சாரமும் மொழியும் அழுத்தத்தைக் கொடுப்பதினாலும் தமிழ் இளைஞர்கள் மனங்களில் தமிழ் மொழிபற்றிய ஆர்வம் குறைவடைந்து வருவதாலும் தமிழ்நாட்டி லிருந்து ஒளிப்பரப்பபடும் தொலைக்காட்சிச் சேவைகளும்  சினிமாவும் சின்னத்திரையும் தமிழருக்குரித்தில்லாத கலாச்சாரத்தைத் திணிப்பதாலும் தமிழ்கொலை செய்வதாலும் கல்விக்கூடங்கள் கலைக்கூடங்கள் வழிபாட்டுத் தலங்கள் வியாபார நோக்கில் நடப்பதினாலும் இவை சம்பந்தமாக அவர்களிடையே போட்டி பொறாமைகள் ஏற்பட்டு அவை முழுத் தமிழ்மக்களையும் பாதிப்படையச் செய்வதாலும்   தமிழ் மக்களிடையே உள்ள நற்பண்புகள் மாறி வருவதாலும் தமிழ்மொழிப் பற்றில்லாமல் நடப்பதாலும்,  நாட்டுப் பற்று, மொழிப் பற்று தமிழரிடையே அருகி வருவதாலும் அதில் பலர் போலித்தனமாக ஈடுபடுவதாலும்; இளம் தலைமுறையினருக்கு தமிழினத்தின் மேலும் தமிழர் கலாச்சாரத்தின் மேலும் சலிப்பு ஏற்படவும்  அவர்கள் தமது குழந்தைகளைத் (இரண்டாவது தலைமுறை )தாம் வாழும்  நாட்டுக் கலாச்சாரத்துக்குள்ளேயே  வளர்ப்பார்கள். 

அதனால் தமிழர்  புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ் மொழியோ தமிழ் கலாச்சாரமோ முதலாவது தலைமுறையுடன் முடிவுக்கு வரும் அவல நிலையே தோன்றும். கூலிகளாகப் பிடித்துச் சென்று   தென்னாபிரிக்கா, பர்மா, செனகல், கயானா, பிஜி, சூரினாம் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கல்வி பயில்வதற்காகவும் வேலை வாய்ப்புக்கருதியும் இங்கிலாந்து, வட அமெரிக்கா சென்று வாழ்ந்து வரும் தமிழ் மக்களும், தமிழ் தெரியாமலே வாழுகிறார்கள் இவர்கள் இதற்கு உதாரணம்.

 

ஆகவே அன்பு உள்ளங்களே, தமிழ்மொழிக்காகவும் தமிழருக்கு ஒரு தேசம் வேண்டுமென்றும் தமது விலைமதிப்பற்ற உயிர்களை ஆகுதியாக்கியவர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து, புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் தொடர்ந்து காப்பாற்றுவதற்கான  முன்னெடுப்புகளை இப்பொழுதே எல்லோரும் ஒன்றிணைந்து ஆரம்பியுங்கள். 

 

              \\தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

                                           தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! ||

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

http://www.youtube.com/watch?v=xyN98UqBWXM

Share this post


Link to post
Share on other sites

பொங்குதமிழ் பக்கம் வந்து எனது கருத்தையும் கவனித்து உங்கள் கருத்தையும் பதிவு செய்த புங்கையூரான்,  ஈசன், Paanchஅஞ்சரன்பெருமாள்குமாரசாமி,   நிதர்சன்,   தமிழ்சிறி,  ஆதித்ய இளம்பிறையான்       ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எமது தேசத்தில் தமிழர் அடையாளங்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு சிங்கள இனவாதிகள் செயற்படுகிறார்கள். ஆதலால் நாம் தமிழர் மொழி, கலை கலாச்சார விழுமியங்களை  இங்கு பாதுகாத்து காப்பாற்றி வந்தால்தான் அதனை நமது தேசத்தில் நாற்றாக நட முடியும்.  ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். தமிழ்படிப்பிக்க ஊக்குவிக்க வேண்டும்நாமும் செயற்படுவோம். 

மேலும் உங்கள் கருத்துக்களைத் தொடருகங்கள்.

நன்றி.

பாடல் இணைத்த தமிழ் சிறிக்கு மனமார்ந்த நன்றிகள். சங்கே முழங்கு பாடலையும் இதன் கீழ் இணைத்துவிடுங்கள்

Share this post


Link to post
Share on other sites

சங்கே முழங்கு பாடலை இணைத்த புங்கையூரான் க்கு மனமார்ந்த நன்றிகள்.

மேலும் உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள்.

நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இங்கிதம் தெரியாத டொனால்ட் ரம்ப்....கிட்லரை விட மோசமான மனிதன்.
  • பொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள்   இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் 54.5 ஆக காணப்பட்ட இந்திய தயாரிப்புத் துறையின் குறியீட்டெண் மாா்ச்சில் 51.8 ஆகியுள்ளது. இதுகுறித்து ஐஎச்எஸ் பொருளாதார நிபுணா் எலியட் கொ் கூறுகையில். ‘ வரும் மாதங்களில் இந்திய தயாரிப்புத் துறை மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்’ என்றாா். வேளாண் துறை கவலை சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இந்தியாவின் ரபி பருவ சாகுபடியில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முழு அடைப்பு காரணமாக வேளாண் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. பல்வேறு மாநிலங்களின் மொத்தவிலை சந்தைகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தோட்டக்கலை துறை ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதியம் குறைப்பு இந்தியாவில் செயல்பட்டு வரும் 45 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தோ்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், 25 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளா்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாக நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் தெரிவித்துள்ளது. கடன் விகிதம் சரிவு இந்திய நிறுவனங்களின் கடன் விகிதம் 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான கடன்தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு கிரிசில் குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் வருவாய் குறைந்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளுக்கு மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்தை தாண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.   https://www.dinamani.com/business/2020/apr/05/பொருளாதாரத்தில்-கரோனாவின்-இன்னல்கள்-3394555.html கொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. கோப்பு படம்.   அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரை தாக்கி இருக்கிறது. இதுவரை 7406 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1480 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மார்க்கன் ஸ்டான்லி’ என்ற அமைப்பு கூறியுள்ளது. அதாவது 1946-ம் ஆண்டு பொருளாதார நிலை எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதாவது 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக சரியலாம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அடுத்த ஜூன் மாத காலாண்டில் 38 சதவீதம் சரியலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் 5.5 சதவீதம் பொருளாதார சரிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்த அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/04/05125104/1394228/corona-impact-US-will-face-an-economic-downturn-of.vpf
  • https://www.youtube.com/watch?v=XEXkQH9k35g What is Virus in Tamil Virus explained in Tamil What is a Virus? What is the meaning for the word “Virus”?, Who discovered a virus? How does a virus look like? What are the different shapes or symmetry of viruses? Where do viruses present? What are the special characters of viruses? Is a virus living or non-living? How do viruses multiply? These are the questions answered in this video. Ancient diseases were generally caused by viruses (Rabies, Smallpox, Measles). They cause epidemic outbreaks and led to the decline of the Roman empires in AD 165-180, AD 251-266. A virus is a small infectious agent that replicates only inside the living cells of an organism. Viruses can infect all types of life forms, such as humans, animals, plants, insects, fishes and even bacteria too. Viruses infecting bacteria are called bacteriophage. In 1798, Edward Jenner discovered the vaccine for smallpox using cow poxviruses. In 1184, Louis Pasteur discovered the Rabies vaccine (Dog bite). In 1892, Dimitri Iwanowsky and 1898 Martinus Willem Beijerinck, Dutch Microbiologist discovered and reported the existence of viruses using Chamber land filter experiment. They discovered the Tobacco Mosaic Virus. Virus Means “Poison” in the Latin language. Virus structure is simple. It has a genetic material (Either DNA or RNA) surrounded by a protein capsid made of capsomere subunits. Based on symmetry viruses are classified as Icosahedral, Helical, Enveloped and Complex Viruses. Viruses are neither living nor non-living. Its multiplication occurs in 6 steps: Attachment to host cell, Entry/Penetration, Uncoating, Biosynthesis of viral components, Assembly and release. This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it. Watch Our Other Medical Science Videos in Tamil • What is bacteria? Tamil https://www.youtube.com/watch?v=-R9aI... • Introduction to Fungus in Tamil https://www.youtube.com/watch?v=J4TTx... • Useful bacteria in humans, Normal flora (Tamil) https://www.youtube.com/watch?v=4tCol... • Why Doctors Write Rx in Prescription? –Tamil https://www.youtube.com/watch?v=lvwHb... • What is Blood? Tamil https://www.youtube.com/watch?v=Cwhms... • Blood formation explained in Tamil https://www.youtube.com/watch?v=hEzkk...