Jump to content

புதினப்பலகை: ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’*

கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று.

எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்கியது? இன்றுவரை தெளிவான காரணத்தை அறியமுடியவில்லை. இந்நிலையில் புதினப்பலகை ஆர்வலர்களிடமிருந்து விசாரிப்புகளுடன் மின்னஞ்சல்கள் வரத்தொடங்கின. இன்னும் நெருக்கமானோர் தொலைபேசி வழியாகவும் தொடர்புக்கு வந்தனர். அப்போது நாம் தனித்தில்லை தோள்கொடுக்க பலருண்டு என்ற உணர்வும் மகிழ்ச்சியும் ஆட்கொண்டது.

‘புதினப்பலகை’ அறியவைக்கவும், தெளிவை ஏற்படுத்தவும், செய்தியை செய்தியாக வழங்க வேண்டும் என்பதிலேயே எம் கவனத்தை குவித்திருந்தோம். இதனைத் தெளிவாகவே எமது முதல் ஆசிரியர் குறிப்புரையான புதினப்பார்வையில் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது இருப்பு அதாவது புதினப்பலகையின் இருப்பு ‘தோற்றப் போலிகள்’ பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் அறிவோம். எம்மை எவ்வழியிலாயினும் முடக்க வேண்டுமென முயற்சித்திருந்தனர். அவர்களுக்கு எமது முடக்கம் நிம்மதியை தந்திருக்கும். ஆனாலும் அதே மிடுக்குடன் மீளவும் எழுந்துள்ளோம்.

எமது ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’டன் தொடரும் பயணத்திற்கு தோள் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகள். குறிப்பாக தன்னலமற்ற உணர்வுடன் புதிய தளத்தின் வடிவமைப்பை செய்த ‘இளம் தொழில்நுட்பவியலாளனுக்கு’ நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘அறி – தெளி – துணி’ எனவாய் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’.

நன்றி.

‘புதினப்பலகை’ குழுமத்தினர்.

03 -11 – 2014

* ஈழத்து கவிஞர் ‘மஹாகவி’ உருத்திமூர்த்தியின் கவிதை ஒன்றின் வரி நன்றியுடன் தலைப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/11/04/puthinappaarvai/191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

பல போலிகள் காணாமல் போய்விட்டன. ஆனால் சில இப்போதும் இருக்கின்றன.

புதினப்பலகைக்கும் ஒரு அரசியல் பின்புலம் இருக்கின்றதுதான். எனவே எதையும் அப்படியே நம்பாமல் எமது பகுத்தறிவையும் பட்டறிவையும் கொண்டு உண்மைகளை இனங்காணவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

அந்த "புதினத்தில்" இருந்து யாழுக்கு நேரடியாக செய்திகள் இணைப்பார்கள்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதினத்தில் இணைந்து பணியாற்றியவர்களின் உருவாக்கமே புதினப்பலகை.  புதினம் இணையத்தளத்தை தேசியத்தின் பெயரால் சிலர் முடக்கியமையும்...  தனிப்பட்ட காரணங்களுக்காக புதினம் மற்றும் தமிழ் நாதம் இணையத்தளங்கள் மூடப்பட்டமை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். 

புதினத்தின் மூடல்... பல ஊடக வியாபாரிகளை எமக்குள் உருவாக்கி விட்டது. குறிப்பிட்டு சொல்ல போனால் தமிழ் வின்...!

Link to comment
Share on other sites

புதினத்தில் இணைந்து பணியாற்றியவர்களின் உருவாக்கமே புதினப்பலகை.  புதினம் இணையத்தளத்தை தேசியத்தின் பெயரால் சிலர் முடக்கியமையும்...  தனிப்பட்ட காரணங்களுக்காக புதினம் மற்றும் தமிழ் நாதம் இணையத்தளங்கள் மூடப்பட்டமை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். 

புதினத்தின் மூடல்... பல ஊடக வியாபாரிகளை எமக்குள் உருவாக்கி விட்டது. குறிப்பிட்டு சொல்ல போனால் தமிழ் வின்...!

 

இப்படி எழுதுவதற்கு நிதர்சன் மன்னிக்கவும்.
 
புதினத்தை யாரும் நிறுத்தவில்லை. இறுதி முடிவுகளின் பின்னர் தானாகவு பொய்யான காரணத்தை சொல்லி புதினம் நடாத்தியவர் ஒதுங்கினார். அது மட்டுமன்றி கனடா பரபரப்பு ரிஷியுடன் இணைந்து கே.பி.யுடன் இலங்கையில்  நீண்டகாலமாக கே.பி.ரூ கோவுடன் கைகோர்த்தது யாரும் அறியேல்லயா ? 
 
புதினம் வருதற்கு முதல் இருந்த இணையங்களை முடக்குவதில் முன்னின்று சிறப்பாக பணியாற்றியவர் புதினத்தை இயக்கியவர். சமாதான செயலகத்தையும் நிதர்சனம் ,புலிகளின் குரல் மற்றும் ஊடக பேச்சாளர் தயாமாஸ்ரரின் பந்தத்தில் இயங்கிய தனிராச்சியம் புதினம். 
 
புதைகுளி வெட்டுவதில் பின்னிற்காமல் பணியாற்றியவரின் ஒதுங்கலுக்கு அவரே காரணம். புலிகள் அதிகாரத்தில் இருந்த போது உண்மையில் விசுவாசத்தோடு பணியாற்றிய பல ஊடகத்துறை சார்ந்தவர்களை ஒதுங்க வைத்ததில் பெரும்பங்கு தவபாலன், புதினம் கரன் ஆகிய இருவருக்கும் உண்டு.  சிலருக்கு துரோகிப்பட்டமும் இவ்விருவராலும் வழங்கப்பட்டது. தவபாலன் இல்லாத இந்த நாட்களில் அவரை எழுதுதல் நாகரீகமில்லை. ஆனால் தவிர்க்க முடியாதுள்ளது.
 
தமிழ்வின் இதர ஊடகங்களின் செய்திகைளை எவ்வித உறுத்தலுமின்றி வெட்டியொட்டி தன்னை ஒரு நிறுவனமயமாக்கியது. அதுவொரு வியாபார ஊடகம். யாரின் மீதும் ஏறிமிதித்து தன்னை வளர்க்கவும் வியாபாரத்தில் வளரவும் தன்னை வியாபாரமாகவே வளர்த்த ஊடகம். 
 
புதினத்துக்கு முதல் யாழ் களம் ஆரம்பித்திருந்தது. யாழ் மோகன் எதற்கும் யாருக்கும் காக்கா பிடிக்காமல் இருந்தமையால் இன்று யாழ் தேசத்துக்கான தனது பணியையும் பலத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. 
 
அன்று புதினம் கரன் தேசத்தோடு இணைந்து பணியாற்றியவர்களை பணியாற்றிய ஊடகங்களையும் ஊடகர்களையும் போட்டுக்கொடுத்து பொய்காரணம் திரித்து ஒதுங்க வைக்காமல் விட்டிருந்தால் இன்று புதினம் மிஞ்சியிருக்கலாம்.
 
சரிதம் என்றொரு இணையத்தை அறிந்திருப்பீர்கள். அந்த இணையத்தில் இருக்கும் பலர் புதினத்தை வளர்க்க வெடிகுண்டுக்கு மத்தியிலும் நின்று செய்திகளை கொடுத்தவர்கள். அவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கே விலைகேட்டவர் புதினம் கரன்.
 
புதினம் பற்றியும் அதன் இயக்குனர் பற்றியும் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது. இது அதற்கான தளம் இல்லையென்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி அக்கா, 

புதினத்தை கரனே நிறுத்தினாா் என்பதும், அதற்கு ” தனிப்பட்ட காரணங்களுக்காக” என்று காரணத்தையும் அவா் வழங்கியிருந்தாா். 

 

புதினத்தின் வளா்ச்சி பாதையில் பலாின் வீழ்ச்சி இருந்தமையை நான் அறிந்திருக்கவில்லை. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சரிதம் என்றொரு இணையத்தை அறிந்திருப்பீர்கள். அந்த இணையத்தில் இருக்கும் பலர் புதினத்தை வளர்க்க வெடிகுண்டுக்கு மத்தியிலும் நின்று செய்திகளை கொடுத்தவர்கள். அவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கே விலைகேட்டவர் புதினம் கரன்.

போர் முடிவுக்கு வந்ததும் இன்னும் ஐந்து வருடத்தில் மக்களால் புலி,புலிக்கொடி,தனித்தமிழ்ஈழம் மறக்கடிக்கப்பட வேண்டும் பிரபாகரன் எனும் நாமம் சிதைக்கடிக்கப்படவேண்டும். எனும் திட்டத்திற்க்கு அமையவே சில உடணடியாக நிறுத்தபட்டன சிலதுகள் உள்ளுக்குள்ளால் விலை போயின.

 

ஆத்த முடியாமல் புலி வேசத்துடன் புதிய வெப்புகள் முளைத்தன ஆனால் நடந்தது வேறு மக்களை முட்டாளாக்கமுடியாது ஆனாலும் சிங்களம் சோர்ந்துவிடவில்லை இம்முறை இரட்டைமுக கருக்களை விதைப்பை மேற்கொன்டுள்ளது இவை 2013 பின்னரே அதிகரித்துள்ளன.

 

உதாரணத்துக்கு சிங்களம் தெரிந்தபடியால் கட்டுநாயக்காவில் இலகுவாக வெளியில் வரமுடியும் இதன் அர்த்தம் நீங்களும் சிங்களத்தை படித்தால் நல்லது ஆனால் அதே ஆள் கீழே ஒருவரிவிடுவார் சிங்களம் தெரியாமல் இருப்பது எவ்வளவோ நல்லது இது யாரையென்றால் தன்னையும மீண்டும் விஷகருத்துக்களை மெல்ல பரப்புவதற்க்கும் ஏதுவாய் எழுதும் வரி இப்படியாண விஷமமற்று புதினபலகை வீறு நடைபோடவேண்டும் ஏனெனில் திறைமைமிக்க ஊடகம் மக்களை வழி நடத்தும் சக்தி பெற்றதாகிறது இதையே ஆங்கிலத்தில் 

CNN effect    http://en.wikipedia.org/wiki/CNN_effect
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாக்கால் சம்பவத்துக்கு பின்.......
நாம் எதற்காக வந்தமோ அது வெற்றிகரமாக முடிந்துவிட்டது  இத்துடன் எமது இணையத்தை மூடுகின்றோம் என வெற்றிவாகை சூடிய இணயத்தளங்களும் உள்ளன.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், கோசான் என்று பேரை சொல்லியே சேறடிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு பொருந்தாத நாகரீக வேசம்?

எந்தவித வலுவும் இன்றி, தனிமனிதனாய் நின்று கருத்துச் சொல்லும் என்னையே - CNN effect என்று மகிந்த ராசபட்சவின் உளவாளி ரேஞ்ச்சுக்கு ஏத்துறீங்களே? யாழில் வந்து கருத்து எழுதுபவர்களுக்கு இன்னும் இலங்கை அரசு படியளக்கிறது என்று அப்பாவித்தனமாக நினைக்கும் உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை. பேரினவாதத்துக்கு தொடர் வெற்றிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், கோசான் என்று பேரை சொல்லியே சேறடிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு பொருந்தாத நாகரீக வேசம்?

எந்தவித வலுவும் இன்றி, தனிமனிதனாய் நின்று கருத்துச் சொல்லும் என்னையே - CNN effect என்று மகிந்த ராசபட்சவின் உளவாளி ரேஞ்ச்சுக்கு ஏத்துறீங்களே? யாழில் வந்து கருத்து எழுதுபவர்களுக்கு இன்னும் இலங்கை அரசு படியளக்கிறது என்று அப்பாவித்தனமாக நினைக்கும் உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை. பேரினவாதத்துக்கு தொடர் வெற்றிதான்.

இதற்க்கு பதில் சொல்லக்கூடிய திரி அல்ல இத்திரி இது தெரியாமல் வந்து நீங்களாவே கற்பனையில் உளறவேண்டாம் -----------

புதின பலகையின் விடயங்கள் மாத்திரமே இங்கு. :)

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.