Jump to content

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்


Recommended Posts

உலகக் கிண்ணப் போட்டியில் பாதுகாப்பு, சூதாட்டம் ஆகியன சவாலானவை : ஐ.சி.சி
 

 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு மற்றும் சூதாட்டம் ஆகியவை மிகப்பெரிய சவாலாகவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாகும்.

முன்னர் இடம்பெற்ற போட்டிகளை விட இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகக் கிண்ண போட்டிக்கான பரிசுத் தொகைக்கு அடுத்தபடியாக பாதுகாப்புக்கு அதிகம் செலவிடப்படவுள்ளது.

 

இதேவேளை, அடுத்த சவாலான விடயமாக மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பொட் பிக்சிங் போன்ற சூதாட்டங்கள் உள்ளன. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஐ.சி.சி. மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக மைக் ஹஸ்ஸி
 

 

உலகக்கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராக மைக் ஹஸ்ஸி செயல்படவுள்ளார்.

1992ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை வாய்ப்புகளை பல்வேறு விதங்களில் தவற விட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு 6 வாரங்கள் மைக் ஹஸ்ஸி உதவவுள்ளார்.

ஹஸ்ஸியின் மேலாளர் இந்தத் தகவலை இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் உறுதி செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சிகளில் மைக் ஹஸ்ஸி ஆலோசனைகளை வழங்குகிறார்.

 

மேலும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் எப்படி விளையாடுவது என்பது பற்றியும் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளார் மைக் ஹஸ்ஸி.

"நாங்கள் மைக் ஹஸ்ஸியுடன் கலந்தாலோசனை செய்தோம், அதன் படி அவர் ஆலோசகராக வர ஒப்புக் கொண்டார்.” என்று தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ தெரிவித்தார்.

 

ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பேட்ஸ்மென்களில் ஒருவரான மைக் ஹஸ்ஸி ஒருநாள் போட்டிகளில் 48.15 என்ற சிறந்த சராசரி வைத்திருப்பவர். 3 சதங்கள் 39 அரைசதங்கள் இவருக்குச் சொந்தம்.

 

ஏற்கெனவே டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியானதும், அதனை மைக் ஹஸ்ஸியும் வரவேற்றுள்ளார் என்ற செய்திகளும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முந்திக் கொண்டுள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/article6861420.ece

Link to comment
Share on other sites

பந்தை ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசுங்கள்: இந்திய பவுலர்களுக்கு வெங்கடேஷ் பிரசாத் அறிவுரை
 

 

உலகக்கோப்பை போட்டிகளில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடாமல் பந்துகளை ஸ்டம்ப் டு ஸ்டம்ப் இந்திய பவுலர்கள் வீசுவதே நல்லது என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வெங்கடேஷ் பிரசாத் அறிவுரை வழங்கியுள்ளார்.

அடிலெய்டில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா தன் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

 

இந்நிலையில் வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது:

அதிகம் சோதனைகள் மேற்கொள்ளாமல் ஸ்டம்புக்கு நேராக வீச வேண்டும். அசாதாரண முயற்சிகள் தேவையில்லை. குறுகிய ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மென்களுக்கு பந்துகளை அடிக்க இடம் கொடுக்கக்கூடாது, சிக்கனமாக வீசினாலே போதும்.

இப்படியான சீரான பந்துவீச்சை இந்திய பவுலர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இந்திய பந்துவீச்சு கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால், இதனைக் கூறும்போது இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இரண்டு வாரங்கள் இடைவெளி உள்ளது, தவறுகளைச் சரி செய்து கொள்ள கால அவகாசம் உள்ளது. இதுவரை பவுலர்கள் சரியாக வீசவில்லை என்பது உண்மைதான், ஆனால் உலகக்கோப்பை என்பது புதிய தொடக்கம்.

பாகிஸ்தானுக்கு எதிரான அதி அழுத்த போட்டி ஒன்றில் வென்று விட்டால் போதும், அது அணியின் உணர்வுகளை தட்டி எழுப்பும்.

பாகிஸ்தானுக்கு எதிரான என்னுடைய பந்துவீச்சு தற்செயல்தான். ஆனால், ஒவ்வொரு முறை இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும் போதும் எனது பெயர் குறிப்பிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

 

இன்னும் சில வீரர்கள் நம் அணியில் இருக்கிறார்கள், வரலாறு படைப்பார்கள்.

இந்திய-பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அந்தப் போட்டி ஒரு பெரிய விருந்தாக அமையும். 20 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்த்துள்ளன என்று கேள்விப்பட்டேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க ஆடுவதில் இருநாட்டு வீரர்களுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். இந்தியா, பாகிஸ்தானுக்கு வெளியே இரு அணிகளுக்கும் அழுத்தம் பெரிய அளவுக்கு இருக்காது என்றே நான் கருதுகிறேன்.”

 

என்றார் பிரசாத். இவர் 161 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article6860984.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கிரிக்கெட்டை அச்சுறுத்தும் ‘பிட்ச் சைடிங்’; நூதன சூதாட்டம்: ஐசிசி கண்காணிப்பு தீவிரம்
 

மேட்ச்-பிக்சிங், ஸ்பாட்-பிக்சிங் அச்சுறுத்தல் மிகுந்த கிரிக்கெட் ஆட்டத்தில் ‘பிட்ச் சைடிங்’ என்ற புதிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'பிட்ச் சைடிங்' என்ற வார்த்தை குறிக்கும் புதிய மோசடி என்னவெனில், பொதுவாக மைதானத்தில் ஆட்டத்தின் நிகழ்வுக்கும் அது நேரடி ஒளிபரப்பில் வருவதற்கும் இடையே ஒரு 15 வினாடிகள் அவகாசம் உள்ளது. இந்த மிகக்குறுகிய கால அவகாசத்தைப் பயன்படுத்தி மைதானத்திலிருந்து ஆட்டம் பற்றிய தகவல்களை சட்ட விரோத சூதாட்டத் தரகர்களுக்கு அளிக்கும் விவகாரமே ‘பிட்ச் சைடிங்’.

 

இதனை கடுமையாகக் கண்காணிக்க நடப்பு உலகக்கோப்பையில் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு அமைப்பு களமிறங்குகிறது.

சமீபத்திய நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது இத்தகைய பிட்ச் சைடிங் மோசடி செய்து கொண்டிருந்த நபரை மைதானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். கேமராக்கள் அவரை துல்லியமாக அடையாளம் காட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இதற்கு முன்னதாக, இதுவும் சமீபத்தில் நடந்ததுதான். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐபிஎல் பாணி பிக் பாஷ் இருபது ஓவர் உள்நாட்டு போட்டித் தொடரின் போது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மைதானத்திலிருந்து 15 வினாடி இடைவெளியைப் பயன்படுத்தி தகவல்களை அனுப்பியது தெரியவர, அவர் எந்த ஒரு போட்டியிலும் மைதானத்தில் நுழைய கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்தது.

 

இந்த புதிய அச்சுறுத்தல் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாரியங்கள் அதிகாரிகளுக்கு பட்டறை ஒன்றை நடத்தி அதனை விளக்கியுள்ளனர்.

இதனால் உலகக்கோப்பை போட்டிகள் முழுதும் மைதானத்தில் ரசிகர்கள் பக்கம் கேமராவின் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து காவல்துறையினர் இதனைத் தடுக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6861270.ece

 

Link to comment
Share on other sites

தென்னாபிரிக்க அணிக்கு எச்சரிக்கை

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஒவ்வொரு அணிகளும் உலககிண்ண போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நோக்கி புறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணிகளுக்கும் தாய் நாட்டில் இருந்து புறப்படும் போது ரசிகர்களும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிவைப்பது வழமையான ஒன்று.

மாறாக உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட டி. வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி உலக கிண்ண போட்டியில் தோல்வியுடன் திரும்பக்கூடாது என்று அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் பிகிலே மலுலா எச்சரித்து வழியனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வீரர்களுக்கு தெரிவிக்கையில், ரோபோக்களுக்கு எதிராக நீங்கள் விளையாடவில்லை. மனிதர்களுடன் தான் ஆடுகிறீர்கள். எந்த அணியையும் சாதாரணமாக கருதிவிடக்கூடாது. பொறுப்புடன் விளையாடினால் தான்  வெற்றிபெறமுடியும் என்பதனால் உலக கிண்ண போட்டியில் தோல்விகளை சந்தித்து நாடு திரும்பக்கூடாது. என எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இந்த எச்சரிக்கையானது உலகின் தலை சிறந்த அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள ஒரு தூண்டுதலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=805433859307719252#sthash.T0na1eQ5.dpuf

Link to comment
Share on other sites

நெருக்கடிக்குள் இந்தியா: உலகக்கிண்ண அணியில் இணையும் யுவராஜ், முரளிவிஜய்,மொகித்சர்மா?
 

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீரர் இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தால் அவதிப்படுகின்றனர். இதே போல அணிக்கு மீண்டும் திரும்பிய ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார் ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை.

பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் இந்த 4 பேருக்கும் நாளை உடல் தகுதி சோதனை நடைபெறவுள்ளது.

கடந்த உலகக்கிண்ணத்தில் கலக்கிய சகலதுறை வீரர் யுவராஜ் சிங்குக்கு அணியில் இடம் கிடைக்க இன்னும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ரவிந்திர ஜடேஜா உடல் தகுதி பெறாவிட்டால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல ரோஹித் சர்மா உடல் தகுதி பெறாவிட்டால் அந்த இடத்தில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மேலும் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் உடல் தகுதி பெறாவிட்டால் அந்த இடத்தில் மொகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது.

உலகக்கிண்ணப் போட்டிக்கான அணியில் இடம் பெறாத மொகித் சர்மா, குல்கர்னி இன்னும் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். முத்தரப்பு தொடரில் ஆடிய அவர்களை நாடு திரும்ப வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

ஏற்கனவே முரளி விஜய், மொகித் சர்மாவை உலகக்கிண்ண அணியில் சேர்க்குமாறு அணித்தலைவர் டோனி தேர்வு குழுவினரிடம் கூறியிருந்தார். ஆனால் இதை தேர்வு குழு நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=540223859107172122#sthash.jtbrxK14.dpuf

Link to comment
Share on other sites

சயீத் அஜ்மல் மீதான பந்துவீச்சு தடை நீக்கம்: சர்வதேச போட்டிகளில் வீச ஐசிசி அனுமதி
 

 

த்ரோ செய்வதாக தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சை சரி செய்துகொண்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீச ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

அதே போல் வங்கதேச ஸ்பின்னர் சொஹாக் காஜி என்பவருக்கும் தடை நீங்கியது.

சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களது முழங்கை மடங்குவது ஐசிசி கட்டுப்பாடான 15 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

 

இதனையடுத்து அவர்கள் இருவரது மீதான தடை நீக்கப்பட்டது.

ஆனாலும், மீண்டும் அவர்கள் போட்டிகளில் பந்துவீசும் போது 15 டிகிரிக்கு மேல் முழங்கை மடங்குவதாக நடுவர்கள் உணர்ந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

 

சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி ஆகியோர் மீது நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனைகள் அடங்கிய படங்கள், வீடியோக்கள் நடுவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அவரது மாறிய பந்துவீச்சு ஆக்சன் இடம்பெற்றுள்ளது.

இருவரது பந்துவீச்சும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இறுதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.

முன்னதாக சயீத் அஜ்மல் வீசிய அனைத்துப் பந்துகளும் வேறுபாடின்றி த்ரோ என்று ஐசிசி சோதனைகளில் தெரியவந்தது. 42 டிகிரி முழங்கையை மடக்கி அவர் அனைத்து பந்துகளையும் வீசினார்.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சயீத் அஜ்மல் உலகக்கோப்பை அணியின் தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டார். காரணம் பாகிஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மீது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அஜ்மலின் பந்துவீச்சை சரி செய்ததில் முன்னாள் பாக். ஸ்பின் மேதை சக்லைன் முஷ்டாக்கின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/article6868881.ece

Link to comment
Share on other sites

ரோஹித் சர்மா, புவனேஷ் குமார் உடல் தகுதி: உலகக் கோப்பையில் இஷாந்த் சர்மா சந்தேகம்
 

 

உலகக்கோப்பை போட்டிகளில் ரோஹித் சர்மா, புவனேஷ் குமார் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் இஷாந்த் சர்மா நிலை சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

ரோஹித் சர்மா, புவனேஷ் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முழு உடற்தகுதி பெற்றதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இஷாந்த் சர்மாவைப் பொறுத்தவரை இரண்டு விதமான செய்திகள் எழுந்துள்ளன. ஒன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவரை உடற்கூறியல் நிபுணர் சோதனை செய்து அதன் பிறகு முடிவெடுப்பார் என்று ஒரு தகவல் கூறுகிறது.

 

மற்றொரு தகவல், அவர் உடல் தகுதி பெறவில்லை உலகக்கோப்பை போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்றும் இந்தியா திரும்புகிறார் என்றும் அவருக்கு பதிலாக மோஹித் சர்மா விளையாடுகிறார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி கூறுகிறது. அதனால் இஷாந்த் சர்மா நிலைமை இப்போது சந்தேகம் என்ற அளவில் உள்ளது.

 

நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக இன்று அடிலெய்டில் வலைப்பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர். அப்போது ரோஹித் சர்மா நீண்ட நேரம் வலையில் பேட் செய்தார். புவனேஷ் குமாரும் எந்த வித அசவுகரியமும் இல்லாமல் பந்துவீசினார்.

இன்று வலைப்பயிற்சியில் முழு அணியும் பயிற்சியில் ஈடுபட்டன, மோஹித் சர்மா, தவல் குல்கர்னி ஆகியோர் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

ரோஹித் சர்மா தனது உடல் தகுதி பற்றி கூறும்போது, “பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவேன். மேலும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்.

புவனேஷ் குமார் கூறும்போது, “நான் முழுதும் உடற்தகுதி பெற்றுவிட்டேன். கடந்த 3-4 நாட்கள் அருமையாக அமைந்தது. உலகக்கோப்பை போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.” என்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6869125.ece

Link to comment
Share on other sites

வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதங்களில் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவிப்பு
 

 

அடிலெய்டில் நடைபெறும் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்தியப் பந்துவீச்சு பலவீனத்தை முழுதும் பயன்படுத்தி 371 ரன்கள் குவித்துள்ளது.

 

அந்த அணியின் டேவிட் வார்னர் 83 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 104 ரன்களை எடுக்க, கிளென் மேக்ஸ்வெல் 4-வது டவுனில் இறங்கி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து போதும் என்று ரிட்டையர்ட் ஆனார்.

பந்தை எங்கு அடிக்கலாம் என்று பவுலர்களை கேட்காதது ஒன்றுதான் குறை. மற்றபடி மைதானத்தில் ஆளில்லா இடங்களில் பந்துகள் பறந்தவண்ணமே இருந்தன.

ஃபின்ச் 20 ரன்கள், வாட்சன் 22 ரன்கள், ஸ்மித் 1 ரன் எடுத்து மிகவும் அலட்சியமாக ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு உமேஷ் பந்தை விரட்ட நினைத்து கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.

 

 

பெய்லி 44 ரன்களை எடுக்க, மார்ஷ் (21), மிட்செல் ஜான்சன் (19) கடைசியில் ரன்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் ரிட்டையர்ட் ஆகாமல் இருந்தால் 400 ரன்கள் நிச்சயம்.

மொகமது ஷமி ஒன்று புல்டாஸ் இல்லையேல் ஓவர் பிட்ச், இல்லையேல் ஷாட் பிட்ச். இதனால் 9.2 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் மட்டுமே பந்து வீச்சில் சொல்லிக்கொள்ளும் படியாக இருந்தது கடைசியில் மேக்ஸ்வெல் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசும் வரை நன்றாகவே வீசினார். ஆனால் அவரால் ஒரு யார்க்கரை கூட வீச முடியவில்லை.

 

மோஹித் சர்மா 6 ஓவர்களில் 62 ரன்கள் 2 விக்கெட்டுகள். அஸ்வின் 6 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். ஜடேஜா 2 ஓவர்கள் 19 ரன்கள். ஸ்டூவர்ட் பின்னி 6 ஓவர்கள் 41 ரன்கள் 1 விக்கெட். அக்‌ஷர் படேல் 5 ஓவர்களில் 47 ரன்கள் ஒரு விக்கெட்.

 

மொத்தம் 44 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்த ரன் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பவுண்டரிகள், சிக்சர்கள்.

372 ரன்கள் இலக்கைத் துரத்த இந்தியா ஆடுமா அல்லது ‘பேட்டிங் பயிற்சி’ எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-371-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6871109.ece

Link to comment
Share on other sites

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பிட்ச்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை: மொஹீந்தர் அமர்நாத்

 

2 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியும் அந்தப் பிட்ச்களுக்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவில்லை என்று 1983 உலகக்கோப்பை நாயகன் மொஹீந்தர் அமர்நாத் கவலை தெரிவித்துள்ளார்.

 

கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள் இருவருமே ஆஸ்திரேலியாவில் எதிர்கொண்டு வரும் பிரச்சினை என்னவெனில் அந்த பிட்ச்களின் இயல்பை புரிந்து கொள்ளவில்லை என்பதே. இத்தனைக்கும் 2 மாதங்களாக அங்கு விளையாடி வருகின்றனர்.

பேட்ஸ்மென்கள் இன்னமும் பிட்சின் பவுன்சை புரிந்து கொள்ளவில்லை. இங்கு இடுப்புக்குக் கீழ் பந்து வருமென்றால், ஆஸ்திரேலியாவில் மார்புக்கு வரும். மட்டையின் மேல்பகுதிக்கே பந்துகள் வரும். ஆகவே துணைக்கண்டங்களில் ஆடுவதிலிருந்து மாறுபட்ட ஆட்ட உத்தியைக் கடைபிடிக்க வேண்டும்.

 

அதேபோல், இந்திய அணியின் பலம் சுழற்பந்து வீச்சே. ஒரு லெக் ஸ்பின்னரை அணியில் தேர்வு செய்யாமல் தேர்வுக்குழுவினர் தவறு செய்து விட்டனர்.

அமித் மிஸ்ராவை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவர் முக்கிய பங்கு வகித்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். 1985 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மினி உலகக்கோப்பையில் எல்.சிவராமகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார்.”

இவ்வாறு கூறினார் மொஹீந்தர் அமர்நாத்.

 

மொஹீந்தர் அமர்நாத் 1983 உலகக்கோப்பை மற்றும் 1985 மினி உலகக்கோப்பை போட்டி வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மிக முக்கியமான ஆட்டம் என்னவெனில் பாகிஸ்தான் தொடர் அதன் பிறகு மே.இ.தீவுகள் தொடர். தொடர்ச்சியாக நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 1083 ரன்களை விளாசித் தள்ளினார் அமர்நாத். அதிலும் பாகிஸ்தானில் இம்ரான், சர்பராஸ், சிகந்தர் பக்த் போன்ற அச்சுறுத்தும் பவுலர்கள் இருந்தனர். குறிப்பாக இம்ரான் கான் பயங்கரமான பார்மில் இருந்தார். அந்தத் தொடரில் 6 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இம்ரான்.

 

தொடர்ந்து மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக 598 ரன்களை எடுத்தார். குறிப்பாக, லாய்ட் கேப்டன்சியில் எந்த ஒரு அயல்நாட்டு வீரரும் மே.இ.தீவுகளில் 600 ரன்கள் பக்கம் டெஸ்ட் தொடரில் அப்போது எடுத்திருக்கவில்லை. மால்கம் மார்ஷல் அவரது உச்சத்தில் இருந்தார். ராபர்ட்ஸ், ஹோல்டிங் என்று வேகப்பந்து வீச்சு அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில் மிகவும் தைரியமாக ஆடியவர் மொஹீந்தர் அமர்நாத்.

 

இன்றும் மே.இ.தீவுகள் அணி அதன் உச்சத்தில் இருந்த போது அதன் பந்து வீச்சை நன்றாக ஆடிய பேட்ஸ்மென்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், மஜித் கான், மொஹீந்தர் அமர்நாத் ஆகியோரை விவ் ரிச்சர்ட்ஸ் கூறாமல் இருக்க மாட்டார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article6869270.ece

 

Link to comment
Share on other sites

தம்மிக பிரசாட் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கமாட்டார்..!
 

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாட்டுக்கு பயிற்சின் போது அவரது இடது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பயிற்சியின் போது பந்து வீசிய தம்மிக பிரசாட், மீண்டு அந்த பந்தை பிடியெடுக்க முற்பட்ட போதே இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கமாட்டார். மேலும் இவருக்கு பதிலாக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்படவில்லை.

அணியின் தேர்வு குழுவானது அணியின் முகாமையாளர் மற்றும் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரிடம் கலந்துரையாடிய பின்னரே தம்மிக பிரசாத்துக்கு பதிலாக யாரை களமிறக்குவது என  தீர்மானிக்கப்படும் என தேர்வு குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான சமிந்த ஹேரங்க மற்றும் துஸ்மந்த சாமர ஆகியோரில் ஒருவரே அணியில் சேர்த்துகொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

http://www.virakesari.lk/articles/2015/02/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பரிதாபத் தோல்வி

 

அடிலெய்டில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

மீண்டும் இந்திய அணியின் இலக்கற்ற பந்துவீச்சே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. மோசமான பந்து வீச்சினால் வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதங்களை எடுக்க ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது. இத்தனைக்கும் அந்த அணி 48.2 ஓவர்களே விளையாடியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், அஜிங்கிய ரஹானே, அம்பாட்டி ராயுடு நம்பிக்கை அளித்தனர். ஆனால் ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் இலக்கைத் துரத்தி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை இந்திய அணியின் விரட்டல் ஏற்படுத்தவில்லை, கடைசியாக 45.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு இந்தியா சுருண்டு தோல்வி அடைந்தது.

வேகப்பந்து வீச்சாளர் கமின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டார்க், ஜான்சன், ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரெய்னா, வார்னரின் அபார பீல்டிங் மற்றும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

 

 

முதல் ஓவரில் ரோஹித் சர்மா ஒரு அபாரமான கவர் டிரைவ் பவுண்டரியை தன்னம்பிக்கையுடன் அடித்தார். ஷிகர் தவனும் ஒரு அருமையான கவர் டிரைவை ஹேசில்வுட் பந்தில் அடித்திருந்தார். ஜான்சனையும் ஒரு ஆஃப் சைட் பவுண்டரி அடித்தார் தவன்.

ஆனால் 5-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளின் மீதான பலவீனத்தைப் பயன்படுத்தி ஒரு பந்தை சற்றே எழுப்பினார். ரோஹித் சர்மா அதனை அரைகுறை கட்ஷாட்டுக்கு முயன்று எட்ஜ் செய்து ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்தார். பின்ச் அதனை தட்டித்தட்டி பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தவன் மீண்டும் ஜான்சனை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். விராட் கோலி 18 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் இந்த தேர்ட் மேன் திசையில் தட்டி விட வேண்டும் என்ற ஆர்வம் ஆபத்தில் பல தடவை முடிந்திருந்தும், கோலி அப்படி ஒரு ஷாட்டை முயன்று பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு கடும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்தியா 10வது ஓவரில் 53/2 என்று ஆனது.

 

ஷிகர் தவன், ரஹானே சதக்கூட்டணி:

அதன் பிறகு ஷிகர் தவன், ரஹானே கூட்டணி உண்மையில் ஆட்டத்தை சிறப்பாகக் கொண்டு சென்றனர். 15 ஓவர்களில் 104 ரன்களைச் சேர்த்தனர். சில அபாரமான ஷாட்களை தைரியமாக ஆடிய ரஹானே 52 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். தவன் 71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். ரஹானே பீல்ட் இடைவெளிகளை நன்றாக பிக் செய்தார், சில துல்லியமான ஷாட்களை ஆடினார் அவர்.

இருவரும் இணைந்து 15 ஓவர்களில் 104 ரன்களை விரைவாக 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஸ்கோர் 25-வது ஓவரில் 157.2 என்று நம்பிக்கை அளித்த போது ரஹானே ரன் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கமின்ஸ் பந்தை மிட் ஆனில் தூக்கி அடிக்க முயன்றார் ஆனால் அது கேட்சாக முடிந்தது.

 

தொடர் விக்கெட்டுகள் சரிவு:

ரஹானே சென்றவுடன் அடுத்த 4 விக்கெட்டுகள் 28 ரன்களுகு மடமடவென சரிந்தது. தவன், ஜான்சனின் ஷாட் பிட்ச் பந்துக்கு இரையானார். ராயுடு ஒரு பந்தை ஷாட் பாயிண்டில் தட்டி விட்டு ரன் எடுக்க முயல அதில் ரெய்னா (9), டேவிட் வார்னரின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தே கமின்ஸ், தோனிக்கு பவுன்சர் ஒன்ற வீச தோனி அதனை பயங்கரமான ஹூக் ஷாட் ஒன்றை ஆடினார் பந்து ஸ்கொயர் லெக் பவுண்ட்ரிக்கு சிக்சர் போலவே சென்றது, ஆனால் ஸ்டார்க் ஒர் கையில் அபாரமான கேட்சை பிடிக்க தோனி 0-வில் வெளியேறினார். ஸ்டூவர்ட் பின்னி, ஜான்சனின் பந்தை பொறுப்பற்ற முறையில் மேலேறி வந்து விளாச முயன்று பவுல்டு ஆனார்.

185/7 என்ற நிலையிலிருந்து ராயுடு, ஜடேஜா ஸ்கோரை 254 ரன்களுக்கு உயர்த்தினர். ராயுடு 42 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 53 எடுத்து ஹேசில்வுட்டின் ஷாட் பிட்ச் பந்துக்கு அவுட் ஆனார். ஜடேஜா 20 ரன்கள் எடுத்து கமின்சிடம் வீழ்ந்தார். கடைசியாக அஸ்வின் 5 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 45.1 ஓவர்களில் 265 ரன்களுக்குச் சுருண்டு பரிதாபத் தோல்வி தழுவியது.

 

ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

 

மோசமான பந்துவீச்சை அடித்து நொறுக்கிய வார்னர், மேக்ஸ்வெல்

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்தியப் பந்துவீச்சு பலவீனத்தை முழுதும் பயன்படுத்தி 371 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் டேவிட் வார்னர் 83 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 104 ரன்களை எடுக்க, கிளென் மேக்ஸ்வெல் 4-வது டவுனில் இறங்கி வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து போதும் என்று ரிட்டையர்ட் ஆனார்.

 

பந்தை எங்கு அடிக்கலாம் என்று பவுலர்களை கேட்காதது ஒன்றுதான் குறை. மற்றபடி மைதானத்தில் ஆளில்லா இடங்களில் பந்துகள் பறந்தவண்ணமே இருந்தன.

ஃபின்ச் 20 ரன்கள், வாட்சன் 22 ரன்கள், ஸ்மித் 1 ரன் எடுத்து மிகவும் அலட்சியமாக ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு உமேஷ் பந்தை விரட்ட நினைத்து கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.

 

பெய்லி 44 ரன்களை எடுக்க, மார்ஷ் (21), மிட்செல் ஜான்சன் (19) கடைசியில் ரன்கள் சேர்த்தனர். மேக்ஸ்வெல் ரிட்டையர்ட் ஆகாமல் இருந்தால் 400 ரன்கள் நிச்சயம்.

மொகமது ஷமி ஒன்று புல்டாஸ் இல்லையேல் ஓவர் பிட்ச், இல்லையேல் ஷாட் பிட்ச். இதனால் 9.2 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் மட்டுமே பந்து வீச்சில் சொல்லிக்கொள்ளும் படியாக இருந்தது கடைசியில் மேக்ஸ்வெல் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விளாசும் வரை நன்றாகவே வீசினார். ஆனால் அவரால் ஒரு யார்க்கரை கூட வீச முடியவில்லை.

 

மோஹித் சர்மா 6 ஓவர்களில் 62 ரன்கள் 2 விக்கெட்டுகள். அஸ்வின் 6 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார். ஜடேஜா 2 ஓவர்கள் 19 ரன்கள். ஸ்டூவர்ட் பின்னி 6 ஓவர்கள் 41 ரன்கள் 1 விக்கெட். அக்‌ஷர் படேல் 5 ஓவர்களில் 47 ரன்கள் ஒரு விக்கெட்.

மொத்தம் 44 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்த ரன் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பவுண்டரிகள், சிக்சர்கள்.

அடுத்த பயிற்சி ஆட்டம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறுகிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6871109.ece

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலிய ஆதிக்கத்தைத் தடுக்கும் முனைப்புடன் ஏ.பி.டீவிலியர்ஸ்
 

 

4-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல முடிவுகட்டி விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை இந்த உலகக்கோப்பையில் முறியடிக்க தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏ.பி.டீவிலியர்ஸ் முனைப்பு காட்டி வருகிறார்.

 

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

ஆஸி. அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 என்பதை மறுக்க முடியாது. உள்நாட்டில் விளையாடுகின்றனர், இதனால் அனுகூலங்கள் அதிகம். இதனால் கொஞ்சம் அழுத்தம் கூட அவர்களுக்கு இருக்கும்.

ஆனால், இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் அணியில் எங்கள் அணியும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் தலைசிறந்த அணி தென் ஆப்பிரிக்கா என்ற பெயரை மகிழ்ச்சியுடன் அணுகுகிறோம். ஜிம்பாவேயில் ஆஸ்திரேலியாவை சமீபத்தில்தான் வெற்றி பெற்றுள்ளோம்.

எனவே, உலகின் சிறந்த அணி என்ற முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக்கோப்பையில் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு, தவற விட மாட்டோம் என்று நம்புகிறோம்.

 

ஆஸ்திரேலியா தவிர நியூசிலாந்து ஒரு அபாயகரமான அணி, பிரெண்டன் மெக்கல்லம் ஒரு அருமையான கேப்டன், அணியை பிரமாதமாக வழிநடத்திச் செல்கிறார்.” என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6871166.ece

Link to comment
Share on other sites

பயிற்சிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா
 

 

இலங்கை - தென்னாபிரிக்க  அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப்­போட்­டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்­றி­பெற்­றுள்­ளது.


11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன.

அந்­தவகையில் இன்று நியுசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடை­பெற்ற பயிற்சிப் போட்­டி யில் இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதி­ன.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

அதன் படி களமிறங்கிய இலங்கை அணி  டில்சான் பெற்ற சதத்தின் உதவியுடன் 44.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் 44.4 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட, தென்னாபிரிக்க அணிக்கு 30 ஓவர்களில் 224 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

ஒரு கட்டத்தில் ஆட்டம் இலங்கையின் பக்கம் இருந்தாலும் மீண்டும்  மழை குறுக்கிட, 25 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட தென்னாபிரிக்க அணி 24.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 

http://www.virakesari.lk/articles/2015/02/09/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

 

Link to comment
Share on other sites

மழையால் கைவிடப்பட்ட ஆட்டத்தில் நியூசி.யை அச்சுறுத்திய ஜிம்பாப்வே
 

 

நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்படுவதற்கு முன்பு நியூசிலாந்தை அச்சுறுத்தியது ஜிம்பாப்வே.

 

லிங்கனில் நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அந்த அணி ஜிம்பாப்வேயின் எதிர்பாராத நல்ல பந்துவீச்சுக்கு 30.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தடுமாறியது. அதன் பிறகு மழை வந்ததால் ஆட்டம் சிறிது நேரத்த்திற்குப் பிறகு கைவிடப்பட்டது. மார்டின் கப்தில் 86 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

 

தினஷே பன்யங்கரா என்ற ஜிம்பாவே வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவரில் மெக்கல்லமினால் 2 பவுண்டரி விளாசப்பட்டாலும், பிறகு அவரை தன்னிடமே கேட்ச் கொடுக்கச் செய்து வெளியேற்றினார்.

 

பிறகு 5-வது ஓவரில் ஃபார்மில் இருக்கும் கேன் வில்லியம்சன் (6) விக்கெட்டையும் பன்யங்கரா வீழ்த்தினார். மறுமுனையில் நன்றாக ஆடிய கப்தில், சிக்சருடன் 34 பந்துகளில் அரைசதம் எட்டினார். ராஸ் டெய்லர் 11 ரன்களில் கேப்டன் எல்டன் சிகும்பரா பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

அதன் பிறகு அபாய அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன் (6) விக்கெட்டையும் சிகும்பரா வீழ்த்தினார், மிட் ஆஃபில் அவருக்கு தஃபாத்ஸ்வா கமுங்கோஸி அருமையான கேட்சைப் பிடித்தார்.

 

மார்டின் கப்தில் 85 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். 86-வது பந்தில் சிகந்தர் ரஸாவிடம் அவுட் ஆனார். 157/7 என்ற நிலையில் மழை வர அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஆட்டம் கைவிடப்பட்டது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/article6874523.ece

Link to comment
Share on other sites

தில்ஷன் சதம் வீண்; டக்வொர்த் முறையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

 

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா டக்வொர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணியில் டீவிலியர்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஹஷிம் ஆம்லா கேப்டனாகச் செயல்பட்டார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இலங்கையை பேட் செய்ய அழைக்க அந்த அணி தில்ஷனின் 100 ரன்களுடன் 44.4 ஓவர்களில் 279/7 என்று இருந்த போது மழை வந்ததால் அந்த ஓவருடன் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

மழை ஓய்ந்து பிறகு ஆட்டம் தொடங்கிய போது தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 30 ஓவர்களில் 224 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஆட்டம் மீண்டும் மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட 25 ஓவர்களில் 188 ரன்களாக மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அணி 24.3 ஓவர்களில் 188 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று வெற்றி பெற்றது.

 

குவிண்டன் டி காக், ஹஷிம் ஆம்லா சிறப்பான தொடக்கம் கொடுக்க தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்களில் 116 ரன்களாக இருந்தது. ஆனால் 51 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்து தோல்வியின் விளிம்பை எட்டிப் பார்த்தது. ஆனால் ரீலி ரூஸோ மற்றும் வெர்னன் பிலாண்டர் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக அருமையான பார்மில் இருக்கும் திலகரத்ன தில்ஷன் 83 பந்துகளில் 15 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்தார். குறிப்பாக 69 பந்துகளில் 63 ரன்கள் என்றிருந்த தில்ஷன் அதன் பிறகு 13 பந்துகளில் 37 ரன்களை விளாசி சதம் கண்டார்.

 

 

பிறகு ஆஞ்சேலோ மேத்யூஸ் 49 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். கருண ரத்னே 46 ரன்கள் எடுத்தார். தில்ஷன், சங்கக்காரா இடையே ஒரு அரைசதக் கூட்டணியும் தில்ஷன், கருணரத்னேயிடையே மற்றொரு அரைசதக் கூட்டணியும் அமைந்தது. சங்கக்காரா 31 ரன்களில் இம்ரான் தாஹீரிடம் வீழ்ந்தார். மழை குறுக்கிடாவிட்டால் இன்னமும் 32 பந்துகள் மீதமுள்ள நிலையில் சுலபமாக 300 ரன்களை எட்டியிருக்கும் இலங்கை.

 

தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் 7 ஓவர்கள் 40 ரன்கள் என்று சோபிக்கவில்லை. மோர்கெல் 8 ஓவர்கள் 40 ரன்கள் விக்கெட்டுகள் இல்லை. இம்ரான் தாஹிரும் 6 ஓவர்களில் 46 ரன்கள் விளாசப்பட்டார். கைல் அபோட் மட்டும் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வெய்ன் பார்னெல் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

தென் ஆப்பிரிக்கா இலக்கத் துரத்திய போது ஆம்லா 40 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்களையும், குவிண்டன் டி காக் 55 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 66 ரன்களையும் எடுத்து 15 ஓவர்களில் 116 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்தனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு லஷித் மலிங்கா பந்து வீசினார், வேகத்தில் குறைவில்லை ஆனால் யார்க்கர்கள் விழவில்லை. 4.3 ஓவர்களில் அவர் 33 ரன்கள் விளாசப்பட்டார். குறிப்பாக கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் இவர் கொடுத்த 13 ரன்கள் தென் ஆப்பிரிக்க வெற்றியை தீர்மானித்தது என்று கூற வேண்டும்.

 

ஆம்லா, டி காக் இருவரையும் ரங்கன்னா ஹெராத் வீழ்த்தினார். இதனால் டூ பிளேசி, டுமினி மீது பொறுப்பு விழுந்தது. ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. அதை அறிந்த டுமினி, ஹெராத் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று ஸ்டம்ப்டு ஆனார். குலசேகரா, அதிரடி வீரர் டேவிட் மில்லரை 4 ரன்களில் பவுல்டு செய்ய தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.

அப்போதுதான் மலிங்கா ஓவரின் 3 பந்துகளில் 10 ரன்களை டு பிளேசிஸ் விளாசினார்.

 

அதன் பிறகு வெர்னன் பிலாண்டர், ரூசோ 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6874854.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: கிறிஸ் வோக்ஸ் அபார பந்துவீச்சு; மே.இ.தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து
 

 

சிட்னியில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மே.இ.தீவுகள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் பந்துகள் எகிற, டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் (5), ஸ்டீவ் ஃபின்(1) ஆகியோர் அபாரமாக பந்து வீச மே.இ.தீவுகள் 29.3 ஓவர்களில் 122 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து மொயீன் அலி (46) விக்கெட்டை மட்டும் இழந்து 22.5 ஓவர்களில் 125/1 என்று வெற்றி பெற்றது.

 

 

குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் பந்துகள் நன்றாக எழும்பியதோடு, கடுமையாக ஸ்விங் ஆனது. தொடக்க ஓவரின் 3-வது பந்தில் கிறிஸ் கெய்ல் லெக் திசையில் சென்ற பந்தை தேவையில்லாமல் ஆடப்போக பந்து கிளவ்வில் பட்டு ஜோஸ் பட்லரிடம் தஞ்சமடைந்தது.

அதற்கு அடுத்த பந்த் டேரன் பிராவோவுக்கு கிட்டத்தட்ட விளையாட முடியாத பந்து என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை வீரானா டேரன் பிராவோவுக்கு கிறிஸ் வோக்ஸின் அந்தப் பந்து குட் லெந்தில் பிட்ச் ஆகி எழும்பி, மட்டையின் விளிம்பைத் தட்டிச் சென்று பட்லர் கையில் தஞ்சம் அடைந்தது. முதல் ஓவரிலேயே வோக்ஸிற்கு ஹேட்ரிக் வாய்ப்பு. ஆனால் ஹேட்ரிக் எடுக்கவில்லை.

 

ஸ்மித் 3 பவுண்டரிகளை அடித்து 21 ரன்கள் எடுத்திருந்த போது வோக்ஸ் மீண்டும் எட்ச் செய்ய வைத்து பந்து பெல்லிடம் கேட்ச் ஆனது.

மர்லான் சாமுயெல்ஸ் 10 ரன்கள் எடுத்து ஸ்டீவ் ஃபின் பந்தில் பவுல்டு ஆனார். தினேஷ் ராம்தின் 6 ரன்கள் எடுத்து ஜோர்டானின் பந்தை தவறான லைனில் ஆட பவுல்டு ஆனார். மே.இ.தீவுகள் 14 ஓவர்கள் முடிவில் 52/5 என்று சரிவு கண்டது.

 

லெண்டில் சிம்மன்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 55 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார். பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய அந்த அணி 30 ஓவர்கள் கூட தாங்க முடியாமல் 122 ரன்களுக்குக் காலியானது.

கிறிஸ் வோக்ஸ் 7.3 ஓவர்களில் 1 மைடன் 19 ரன்கள் 5 விக்கெட்டுகள்.

 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு மே.இ.தீவுகள் பவுலர்களிடமிருந்து எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. வழக்கம் போல் மொயீன் அலி, பெல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்க 11.5 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 43 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஒரே விக்கெட்டாக கிமார் ரோச்சிடம் வீழ்ந்தார்.

பெல் 35 ரன்களையும், டெய்லர் 25 ரன்களையும் எடுக்க 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இங்கிலாந்து.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6874470.ece

Link to comment
Share on other sites

விலகினார் ஹபீஸ்
 

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சகலத்துறை வீரரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான முஹமது ஹபீஸ் விலகியுள்ளார்.

கடந்த கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது கணுக்காலில் காயமடைந்தார். காயம் குணமடைய 3 கிழமை ஓய்வு எடுக்கும்படி அவரை வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இதனால் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து 34 வயதான முஹமது ஹபீஸ் நேற்று விலகினார். இதனையடுத்து அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார்.
அவரது விலகல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக நசிர் ஜம்ஷெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/02/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D

Link to comment
Share on other sites

பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்துவோம்: ஆப்கான் கேப்டன் நம்பிக்கை
 

 

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள இந்திய அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை நாளை (பிப்.10) எதிர்கொள்கிறது.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சை 371 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா பிறகு பந்துவீச்சிலும் துல்லியம் காட்டி இந்தியாவை 265 ரன்களுக்கு சுருட்டியது.

 

இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் ஆப்கான் அணிக்கு எதிரான நாளைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று அந்த அணியின் கேப்டன் மொகமட் நபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆப்கான் கேப்டன் மொகமட் நபி கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராக எங்களது அனைத்து திறமைகளையும் ஒன்று திரட்டி விளையாடவிருக்கிறோம். வங்கதேசத்துக்கு எதிரான எங்களது முதல் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு சிறந்த தயாரிப்பை நாளைய போட்டி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம், இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

 

ஏனெனில், நாங்கள் கடந்த சில மாதங்களாக நல்ல தயாரிப்புடன் இருந்து வருகிறோம். மேற்கு ஆஸ்திரேலியா கிளப் அணிகளுடன் விளையாடி 2 போட்டிகளில் அவர்களை வீழ்த்தியும் இருக்கிறோம். எனவே நல்ல தயாரிப்பில் இருக்கிறோம்.

ஆசியாவிலிருந்து மிகவும் மாறுபட்ட களங்கள் இவை. நாங்கள் ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்தில் நீண்ட நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்று நினைக்கிறோம் எங்களிடம் ஷபூர், ஹமீத் மற்றும் தவ்லத் சத்ரான் என்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

 

கடந்த 3 மாதங்களாக நல்ல தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். எனவே வங்கதேசத்தை முதல் போட்டியில் வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள். இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 2-வது சுற்றுக்கு முன்னேறும் எண்ணத்துடன் வந்திருக்கிறோம்.” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஆப்கான் கேப்டன் மொகமட் நபி.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6874571.ece
 

 

Link to comment
Share on other sites

ரோஹித் சர்மா, ரெய்னா, ரஹானே அதிரடியில் இந்தியா 364 ரன்கள்

 

அடிலெய்டில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

 

ஷிகர் தவன் மீண்டும் கால்களை நகர்த்தாமல் ஆடுவதன் பலனை பெற்றார். ஹமித் ஹசன் வீசிய மணிக்கு 144 கிமீ வேகம் கொண்டு அவரைக் குறுக்காக கடந்து வந்த பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார்.

அடுத்தபடியாக 5 ரன்கள் எடுத்த விராட் கோலி, யார்க்கர் லெந்த் பந்து ஒன்று சற்று முன்னதாக பிட்ச் ஆகி சற்றே நின்று ஸ்விங் ஆக எட்ஜ் செய்து வெளியேறினார். 16/2 என்ற நிலையில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரஹானே ஆகியோர் அதிரடி முறையில் விளையாடி ஸ்கோர் விகிதத்தை உயர்த்தினர்.

 

 

குறிப்பாக ரெய்னாவும், ரோஹித்தும் 3-வது விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா ஆப்கான் பவுலர்களை அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கினார். மொத்தம் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அடித்த ரோஹித் சர்மா 122 பந்துகளில் 150 ரன்கள் என்று ஒரு இரட்டைச் சதத்திற்குத் தயாராக இருந்த போது 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டமிழந்தார். ஒதுங்கிக் கொண்டு ஆடும் போது அவர் எதிர்பார்த்த திசையில் பந்து செல்லாமல் நேராக லாங் ஆஃப் பீல்டர் கையில் கேட்ச் ஆனது.

முன்னதாக ரெய்னா 71 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியிலும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

ரஹானேயும் ரோஹித் சர்மாவும் இணைந்து 95 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ரஹானே 61 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

 

தோனியின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. 20 பந்துகளைச் சந்தித்து 10 ரன்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிச் சென்றார்.

பயிற்சி ஆட்டங்கள் உட்பட கோலி கடந்த 6 போட்டிகளில் 47 ரன்களையும், தோனி 5 போட்டிகளில் 80 ரன்களையும் எடுத்து சொதப்பி வருகின்றனர். ஜடேஜா 11 ரன்கள் எடுக்க உதிரிகள் வகையில் 21 ரன்கள் கிடைத்தது, இந்தியா 364/5 என்று ரன் குவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-364-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6878197.ece

Link to comment
Share on other sites

அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினர் : மெத்தியூஸ்
 

தென்ஆபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நாங்கள் துரதிஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவிய போதும் அனைத்து வீரர்களும் சிறப்பாக வெளிப்படுத்தி னார்கள்என இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் சமூக வலைத்தளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் அடுத்த போட்டிகளில் இளம் வீரர்கள் மேலும் பிரகாசிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பேட்டியில் அனுபவவீரரான டில்ஷான் சதத்தை பெற்றுக் கொண்டதுடன் பந்து வீச்சிலும் அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மட்டுமே அதிக பட்சமான விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சங்கக்கார அணித்தலைவர் மெத்தியூஸ் ஆகியோரும் தமது அனுபவத் திறமையை வெளிப்படுத்தினர்.
 

http://www.virakesari.lk/articles/2015/02/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்திய அணி நிம்மதிப் பெருமூச்சு

 

   

அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

365 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் என்று முடிவடைந்தது.

தொடக்கத்தில் பந்துவீச்சு சற்றே விலகலாக அமைந்தது. இறுதியில் யார்க்கர்களை வீசி பயிற்சி மேற்கொண்டனர். அஸ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் சிறப்பாக வீசினர். ஆனாலும் ஆப்கானிஸ்தானை ஆல் அவுட் செய்ய முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்கவே செய்கிறது.

 

 

இலக்கைத் துரத்திய ஆப்கான் தொடக்க வீரர்களான ஜாவேத் அஹ்மதி (17), உஸ்மான் கனி (44) கொஞ்சம் விரைவு ரன் குவிப்பில் இறங்கினர். பந்து வீச்சு இந்தத் தருணங்களில் இலக்கற்று இருந்தது. இதனால் 4.4 ஓவர்களில் 30 ரன்களை எட்டினர் ஆப்கானிஸ்தான்.

 

இந்திய கேட்சிங் சரியாக அமையவில்லை, இந்தப் போட்டியிலும் மொகமது ஷமி, அம்பாத்தி ராயுடு வெகு எளிதான கையில் விழுந்த கேட்சைத் தவறவிட்டதும் நடந்தது. ‘பயிற்சி போட்டிகளுக்கு நான் பெரிய விசிறி அல்ல’என்று தோனி ஆட்டம் முடிந்தவுடன் கூறினார். பயிற்சி என்றால் வெறும் பேட்டிங் மற்றும் பவுலிங் என்று அவர் நினைத்திருக்கிறார் போலும். அதனால்தான் “மிடிலில் சிறிது நேரம் கழிப்பது உதவும்” என்று பயிற்சி ஆட்டம் பற்றி அவரால் கூற முடிகிறது.

அஹ்மதி, கனி ஆகியோருக்குப் பிறகு நவ்ரோஸ் மங்கல் (60 ரன், 85 பந்து 2 பவுண்டரி 2 சிக்சர்) என்று அனாயசமாக விளையாடினார்.

 

மங்கலும் ஆட்டமிழந்த பிறகு தேவை ரன் விகிதம் அதிகரிக்க அந்த அணி 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது.

அடுத்து நேரடியாக இந்திய அணி அடிலெய்டில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. ஆகவே, கடைசி பயிற்சி ஆட்டத்தில் வெற்றியுடன் செல்வது, குறிப்பாக ரெய்னா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கும்.

 

இதே அடிலெய்டில் இந்தியா இப்போது ஏகப்பட்ட போட்டிகளை விளையாடிவிட்டது. ஆகவே பாகிஸ்தானுக்கு எதிராக பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகள் இந்திய அணிக்கு அத்துப்படியாகியிருக்கும், மாறாக நியூசிலாந்தில் ஆடிவிட்டு வரும் பாகிஸ்தான் அணி இந்த விவகாரத்தில் சற்றே அனுகூலமின்றி உள்ளது.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பாகிஸ்தான் அணியை எந்தக் காலத்திலும் முன் கணிப்பு செய்ய முடியாது என்பதை இந்திய அணியினர் அறிந்தேயிருப்பர்.

 

ரோஹித், ரெய்னா, ரஹனே அதிரடியில் 364 ரன்கள் குவித்த இந்திய அணி:

டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ஷிகர் தவன் மீண்டும் கால்களை நகர்த்தாமல் ஆடுவதன் பலனை பெற்றார். ஹமித் ஹசன் வீசிய மணிக்கு 144 கிமீ வேகம் கொண்டு அவரைக் குறுக்காக கடந்து வந்த பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார்.

அடுத்தபடியாக 5 ரன்கள் எடுத்த விராட் கோலி, யார்க்கர் லெந்த் பந்து ஒன்று சற்று முன்னதாக பிட்ச் ஆகி சற்றே நின்று ஸ்விங் ஆக எட்ஜ் செய்து வெளியேறினார். 16/2 என்ற நிலையில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரஹானே ஆகியோர் அதிரடி முறையில் விளையாடி ஸ்கோர் விகிதத்தை உயர்த்தினர்.

 

குறிப்பாக ரெய்னாவும், ரோஹித்தும் 3-வது விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா ஆப்கான் பவுலர்களை அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கினார். மொத்தம் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அடித்த ரோஹித் சர்மா 122 பந்துகளில் 150 ரன்கள் என்று ஒரு இரட்டைச் சதத்திற்குத் தயாராக இருந்த போது 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டமிழந்தார். ஒதுங்கிக் கொண்டு ஆடும் போது அவர் எதிர்பார்த்த திசையில் பந்து செல்லாமல் நேராக லாங் ஆஃப் பீல்டர் கையில் கேட்ச் ஆனது.

முன்னதாக ரெய்னா 71 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியிலும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

ரஹானேயும் ரோஹித் சர்மாவும் இணைந்து 95 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ரஹானே 61 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

 

தோனியின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. 20 பந்துகளைச் சந்தித்து 10 ரன்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிச் சென்றார்.

பயிற்சி ஆட்டங்கள் உட்பட கோலி கடந்த 6 போட்டிகளில் 47 ரன்களையும், தோனி 5 போட்டிகளில் 80 ரன்களையும் எடுத்து சொதப்பி வருகின்றனர். ஜடேஜா 11 ரன்கள் எடுக்க உதிரிகள் வகையில் 21 ரன்கள் கிடைத்தது, இந்தியா 364/5 என்று ரன் குவித்துள்ளது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article6878197.ece

 

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்தை போராடி வென்ற பாகிஸ்தான்
 

 

சிட்னியில் உள்ள பிளாடவுன் ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் சற்றே போராடியே வீழ்த்த முடிந்துள்ளது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் போராடி பிறகு 48.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

ஒரு நேரத்தில் 166/5 என்று 37-வது ஓவரில் தடுமாறியது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் விரைவில் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் தமிம் இக்பால் (81), மஹ்முதுல்லா (83) எதிர்த்தாக்குதல் உத்தியக் கடைபிடித்து 3-வது விக்கெட்டுக்காக சுமார் 33 ஓவர்களில் 168 முக்கிய ரன்களைச் சேர்த்தனர்.

 

ஆனால் 109 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த மஹ்முதுல்லா, ஷேஜாதின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். பிறகு தமிம் இக்பாலும் யாசிர் ஷா பந்தில் பவுல்டு ஆக, 190/3 என்ற நிலையில் மொகமது இர்பானின் அபார பந்து வீச்சில் வங்கதேசம் 246 ரன்களுக்குச் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் மட்டுமே 31 ரன்களை அப்போது எடுக்க முடிந்தது.

இர்பான் 9.5 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரீடி 10 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் ஷேஜாத் (5), சர்பராஸ் அகமட் (1) ஆகியோர் விக்கெட்களை மோர்டசா, ரூபல் ஹுசைனிடம் இழக்க 8 ரன்களுக்கு 2 விக். என்று தடுமாற்றம் தொடங்கியது.

 

ஆனால் அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல் (39), யூனிஸ் கான் (25) இணைந்து முதல் அரைசதக்கூட்டணி அமைத்தனர். அதன் பிறகு இன்றைய தின பாக். நாயகன் ஷோயப் மக்சூத் (93 ரன்கள் 90 பந்துகள் 9 பவுண்டரி 2 சிக்சர்), உமர் அக்மல் (39 ரன், 41 பந்து 3 பவுண்டரி 1 சிக்ஸ்) இணைந்து 63 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

மக்சூத் நிற்க உமர் அக்மல், மிஸ்பா (10) ஆட்டமிழக்க வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் 199/6 என்றான போது லேசான நம்பிக்கை வந்தது. ஆனால் அப்ரீடி களமிறங்கி 20 பந்துகளில் 24 ரன்களை எடுக்க 5 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்டது. அப்ரீடி அவுட் ஆகும் போது 47.1 ஓவரில் 240 ரன்கள் வந்து விட்டது.

கடைசியில் மக்சூத் 93 ரன்களுடன் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6875138.ece

Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லுமாம்- ஆரூடம் கணித்த ரோபோட்

 

 

கான்டெர்பரி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஆரூடம் கணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பெட்டிங்கில் யாரும் ஆப்கானிஸ்தானை எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் நியூசிலாந்து நாட்டின் ரோபோட் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆரூடத்தை கூறியுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வெல்லுமாம்- ஆரூடம் கணித்த ரோபோட் நியூசிலாந்தின் கான்டெர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எடியூர்டோ சன்டோவல் உருவாக்கிய இந்த ரோபோட்டுக்கு இக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முடிவுகள் குறித்து ஆரூடம் கணித்த பால் என்ற ஆக்டோபஸை உருவாக்கியவர் இக்ரம் என்பதால் அவரது பெயரையே தமது புதிய ஆரூட ரோபோட்டுக்கும் சூட்டியிருக்கிறார்.

 

சரி இந்த ரோபோட் என்ன முடிவை சொன்னது என்பதுதானே செய்தி... இந்தியா, மேற்கிந்திய தீவுகள் என பல நாடுகளின் கொடிகளைப் பார்வையிட்டு வந்த ரோபோட் திடீரென ஆப்கானிஸ்தான் கொடியை தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியம்தான்! கிரிக்கெட் போட்டியில் கத்துக் குட்டி நாடாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையை வென்றுவிடும் எனில் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது.. அதே நேரத்தில் இன்று ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களிடம் சிக்கி இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் பட்டபாட்டை நினைத்துப் பார்த்தால் எல்லாமும் நடந்துவிடுமோ? என்றுதான் எண்ணத் தோன்றும்!!

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/afghanistan-will-win-world-cup-2015-220742.html

Link to comment
Share on other sites

உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் சிம்பாப்வேயிடம் மண்டியிட்டது இலங்கை
 

 

இலங்கை - சிம்பாப்வே  அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப்­போட்­டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்­றி­பெற்­றுள்­ளது.


11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன.

அந்­தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட் சட்கில்பி ஓவல் மைதானத்தில் நடை­பெற்ற பயிற்சிப் போட்­டி யில் இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதி­ன.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் படி களமிறங்கிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

 

இலங்கை அணிசார்பாக கருணாரத்ன 58 ஒட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
சிம்பாப்வே அணி சார்பாக பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிங்கிய சிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது.

சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை 45.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம்  இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சிம்பாப்வே அணி சார்பாக மசஹட்ஸா ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை டெய்லர் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.