Jump to content

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்


Recommended Posts

பயிற்சி போட்டி: இங்கிலாந்து 250 ரன்கள்

சிட்னி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை பயிற்சியில் கேரி பேலன்ஸ், ஜோ ரூட் அரை சதம் அடிக்க, இங்கிலாந்து அணி 250 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் 14ல் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றன. சிட்னியில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி (4) ஏமாற்றினார். ஹேல்ஸ், பேலன்ஸ் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. ஹேல்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பேலன்ஸ் அரை (57) சதம் அடித்தார். மார்கன் டக்–அவுட் ஆனார். பொறுப்புணர்ந்து செயல்பட்ட ரூட் அரை சதத்தை பதிவு செய்தார். போபரா (11), பட்லர் (13) நிலைக்கவில்லை. ஜோ ரூட் 85 ரன்கள் எடுத்தார். பிராட் டக்–அவுட்டாக, இங்கிலாந்து அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது.

 

இலங்கை அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்தின் ஓவலில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று ‘பேட்டிங்’ தேர்வு செய்த இலங்கை அணிக்கு திரிமான்னே (30), சங்ககரா (8), ஜெயவர்தனா (30) விரைவில் திரும்பினர். கருணாரத்னே மட்டும் அரை (58) சதம் அடித்தார். மற்றவர்கள் சொதப்ப, இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது.

 

ஜிம்பாப்வே அணிக்கு சிபாபா (22), சிகந்தர் (7) ஏமாற்றினர். இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட மசகட்சா சதம் (117*) விளாசினார். தன் பங்கிற்கு பிரண்டன் டெய்லர் (63), சீன் வில்லியம்ஸ் (51) அரை சதம் அடிக்க, வெற்றி உறுதியானது. முடிவில், ஜிம்பாப்வே அணி 45.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

நியூசி., அசத்தல் வெற்றி

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று ‘பேட்டிங்’ செய்த நியூசிலாந்து அணிக்கு கப்டில் (26) நிலைக்கவில்லை. கேப்டன் பிரண்டன் மெக்கலம் (59), வில்லியம்சன் (66) அரை சதம் விளாச, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் (11) சொதப்பினார். பவுல்ட் ‘வேகத்தில்’ ரோசோவ் (2), டுபிளசி (8), மில்லர் (4) அடுத்தடுத்து சிக்கினர். டுமினி (80), பிலாண்டர் (57) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தனர். முடிவில், தென் ஆப்ரிக்க அணி 44.2 ஓவரில் 197 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

 

http://sports.dinamalar.com/2015/02/1423634076/GaryBallanceengland.html

 

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

நின்றார் மிஸ்பா; வென்றது பாகிஸ்தான்: இங்கிலாந்து தோல்வி
 

 

சிட்னியில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மிஸ்பா, உமர் அக்மல் முக்கிய கூட்டணி அமைக்க இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க, இங்கிலாந்து அணி பாகிஸ்தானின் இறுக்கமான பந்துவீச்சில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்தது. இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 78/4 என்று திணறிய போது கேப்டன் மிஸ்பா உல் ஹக் (91 ரன்கள், 99 பந்து, 5 பவுண்டரி 2 சிக்சர்), உமர் அக்மல் (65 ரன்கள், 66 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) முக்கியக் கூட்டணி அமைக்க, 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் சொஹைல் கான், ஈஷான் ஆதில் ஆகியோரது துல்லியமான, குட் லெந்த் பந்துவீச்சில் விரைவு ரன்களைக் குவிக்க முடியவில்லை.

 

2-வது ஓவரில் ஈஷான் ஆதில் பந்தை மொயீன் அலி லெக் திசையில் திருப்பி விட நினைத்தார். ஆனால் மட்டையை சற்றே முன்னதாக திருப்ப பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஷாட் கவரில் எளிதான கேட்சை யூனிஸ் கான் பிடிக்க 4 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு கேரி பாலன்ஸ் களமிறங்கி 15 பந்துகளில் 1 ரன்னையே எடுக்க முடிந்தது. ஆனால் அவர் பதட்டமடையவில்லை. அவர் 81 பந்துகளில் 57 ரன்களை 4 பவுண்டரிகளுடன் எடுத்து நிலைப்படுத்தினார். அதிரடிக்காக இறக்கி விடப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸும் துல்லியமான பந்து வீச்சை அடித்து ஆட முடியவில்லை. அவரும் முயற்சி செய்யவில்லை. கடைசியில் அவர் 47 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஷாகித் அஃப்ரீடி பந்தில் ஆட்டமிழந்தார்.

 

ஹேல்ஸும், பேலன்சும் 2-வது விக்கெட்டுக்காக 64 ரன்களைச் சேர்க்க, பேலன்சும், ஜோ ரூட்டும் இணைந்து 66 ரன்களை 3-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் சேர்த்தனர்.

பேலன்ஸை 57 ரன்களில் யாசிர் ஷா என்ற லெக்ஸ்பின்னர் வீழ்த்த, கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர்ந்தது. அதே ஓவரின் 4-வது பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். பிறகு பொபாராவையும் (11) யாசிர் ஷா வீழ்த்த இங்கிலாந்து 35-வது ஓவர் முடிவில் 157/5 என்று சரிவின் விளிம்பில் இருந்தது.

 

ஜோஸ் பட்லர் 13 ரன்களில் சோஹைல் கான் பந்தில் பவுல்டு ஆனார். ஆனால் அதன் பிறகு ரூட், கிறிஸ் ஜோர்டான் இணைந்து 8 ஓவர்களில் 64 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜோ ரூட் 89 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 85 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். இங்கிலாந்து 250 ரன்களை ஒருவழியாகச் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இங்கிலாந்து மிடில் ஆர்டரை வெளியேற்றினார். அப்ரீடி தொடக்கத்தில் சிக்கனமாக வீசினாலும் பின்னர் ரன்களை கசியவிட்டு 59 ரன்களைக் கொடுத்தார்.

 

மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஜோடியின் வெற்றிக் கூட்டணி:

இலக்கைத் துரத்தக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராடின் வேகம் மற்றும் ஸ்விங்கிற்குத் தடுமாறினர். நசீர் ஜாம்ஷெட் 1 ரன் எடுத்து பிராடின் வைடு பந்தை கால்களை நகர்த்தாமல் விளையாடி எட்ஜ் செய்து டிரெட்வெல்லிடம் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த படியாக அகமது ஷேஜாத் 2 ரன்களில் இருந்த போது ஆண்டர்சனின் கிளாசிக் அவுட் ஸ்விங்கருக்கு ஷேஜாத் வழக்கமான பாணியில் தொட அது மீண்டும் டிரெட்வெல்லிடம் கேட்ச் ஆனது.

 

யூனிஸ் கான் 40 பந்துகள் விளையாடி 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜோர்டான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடி கேரி பாலன்ஸின் அபார கேட்சிற்கு அவுட் ஆக, பாகிஸ்தான் 14-வது ஓவரில் 43/3 என்று ஆனது. அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல், மிஸ்பா இணைந்து ஸ்கோரை மெதுவே 78 ரன்களுக்கு உயர்த்தினர், இதில் ஹாரிஸ் சோஹைல் 33 ரன்கள் எடுத்து டிரெட்வெல் ஆஃப் ஸ்பின்னை லாங் ஆனில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

அதன் பிறகு உமர் அக்மல், மிஸ்பாவுடன் இணைந்து 22 ஓவர்களில் 133 ரன்களைச் சேர்த்தனர். உமர் அக்மல் 65 ரன்களில் வெளியேற ஸ்கோர் 211/5 என்று பாதுகாப்பை எட்டியது. சோஹைப் மக்சூத் 20 ரன்கள் எடுக்க மிஸ்பா ஒரு கேப்டனுக்கான பொறுப்பும், நிதானமும் காண்பித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6882852.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை செய்திச் சரம்

 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நியமனம் தொடர்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை வகித்துச் செல்ல மைக்கேல் கிளார்க் மிகச் சரியான நபர். ஆனால், இத்தொடருக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை அவர் விட்டுவிட வேண்டும்.

 

டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு கிளார்க்கின் உடலும் மனமும் ஒத்துழைக்கும். எனவே, உலகக் கோப்பை போட்டி முடிந்ததற்குப் பின், ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை வழங்கலாம். கிளார்க் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நீடிக்கலாம்.

 

இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்போம்

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தொடர் தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து பாகிஸ்தான் வீரர் அப்ரிதி கூறியதாவது:

வரும் 15-ம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள போட்டியில், இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியுற்று வரும் வரலாற்றை மாற்றும் தகுதி, மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.

அப்போட்டியை மற்றுமொரு சாதாரண போட்டி என்ற அளவிலேயே அணுகுவோம். அப்போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அதிர்ச்சியளிக்கும்.

 

துணைக் கேப்டன் பட்லர்

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர், உலகக் கோப்பை தொடரில் அணியின் துணைக் கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட் என அனுபவம் மிக்க வீரர்கள் இருந்த போதும், கேப்டன் இயான் மோர்கனின் விருப்பத்தின்பேரில் ஜோஸ் பட்லர் துணைக் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டி தொடங்கும் வரும் 14-ம் தேதியன்று, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.

 

வசைபாடினால் கடும் நடவடிக்கை

உலகக்கோப்பை போட்டிகளின் போது, ஸ்லெட்ஜிங் எனப்படும் உசுப்பேற்றும் சொற்களைக் கூறினாலோ அல்லது சைகைகளைச் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்முறை இத்தவறு செய்தால் அபராதமும், ஏற்கெனவே செய்திருந்து தண்டனை பெற்று மீண்டும் செய்தால் போட்டி யிலிருந்து இடை நீக்கமும் (சஸ்பெண்ட்) செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இல்லாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு 6 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது. இதுபோன்று வசைபாடுபவர்களுக்கு கால்பந்து போட்டிகளைப் போல சிவப்பு, மஞ்சள் அட்டை முறை கொண்டு வரப்பட வேண்டும் என நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோ தெரிவித்துள்ளார். தான் இதுவரை பார்த்ததிலேயே வார்னர்தான் மிக மோசமான, சிறுபிள்ளைத் தனமான வீரர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லேப்டாப்கள் திருட்டு

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள நெட்பால் அரங்கில் வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பை தொடர்பான தகவல்கள் அடங்கிய 5 லேப்டாப்கள் திருடு போயின. அதில் சில தகவல்கள் இருந்தபோதும், அது கடவுச் சொற்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் எவ்வித இழப்புகளும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6885742.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை: செய்திச் சாரல்

.

ட்விட்டரில் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் 15 பேருக்கும் தனித்தனியாக ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு ரசிகரல்லாதவர் யார் என ஜடேஜாவுக்கும், எல்லா போட்டிகளிலும் ஸ்விங் செய்யுங்கள் என புவனேஷ்வர் குமாருக்கும், உங்களது சுழல், பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தையும், நமக்கு வெற்றியையும் அளிக்கும் என அஸ்வினுக்கும் தனித்தனியே வாழ்த்துகளை அனுப்பியுள்ளார் மோடி.

 

மிரட்டும் மட்டையாளர்கள்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவர்.

இந்த மூன்று வீரர்களும் நிகழ்த்தும் வாணவேடிக்கை பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். எந்தவொரு பந்துவீச்சாளரும் இந்த மூவரைப் பார்த்து நடுங்குவர். இவர்களை ரன் எடுக்காமல் கட்டுப்படுத்துவதை விட, ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்தது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

 

ஹாட் ஸ்பாட் இல்லை

ஐசிசி சிஇஓ டேவ் ரிச்சர்ட்ஸன் கூறியதாவது: முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையின் ஒருபகுதியாக ஹாட் ஸ்பாட் முறை பின்பற்றப்படமாட்டாது. இம்முடிவில் மாற்றமில்லை. இம்முறையைப் பயன்படுத்தும் போது சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஸ்னிக்கோ (ஆர்டிஎஸ்) முறையே பின்பற்றப்படும்.

 

மேம்படுத்தப்பட்ட இணையதளம்

உலகக் கோப்பைத் தொடரை முன்னிட்டு, தனது இணையதள பக்கத்தை மேம்படுத்தப்பட்ட வகையில் வடிவமைத்துள்ளது ஐசிசி. இணையதள தொடர்புடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதிவிரைவாக ஸ்கோர்களை நேரடியாகப் பெற முடியும். மேலும் பல்வேறு புள்ளிவிவரங்களையும் அந்தந்த நொடிகளிலேயே பெறவும், பழைய தகவல்களைப் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது ‘ஆப்’ வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 

கிளார்க் இல்லை

உலகக்கோப்பையின் முதல்போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குகிறார்.

 

பயிற்சிப் போட்டி ஒரு பொருட்டல்ல

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் கூறியதாவது: வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிரான இரு பயிற்சிப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. இருப்பினும், அந்த போட்டியில் பெற்ற வெற்றி மனோநிலையிலிருந்து அணியினர் விலகிச் சென்றுவிடக்கூடாது.

அப்போட்டிகளில் பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதை சாதகமாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/article6890111.ece

Link to comment
Share on other sites

பெரிய ஷாட்களை ஆடிய தோனி: தீவிர பயிற்சியில் இந்திய அணி
 

 

பாகிஸ்தானுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள விவரங்களில் சில:

 

வலைப்பயிற்சியில் இந்திய கேப்டன் தோனி ‘பிக் ஹிட்டிங்’ பயிற்சி மேற்கொண்டார். பிறகு உலகக்கோப்பை தொடக்க விழாவுக்காக முன்னதாகவே மெல்போர்ன் புறப்பட்டார்.

அடிலெய்டில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

 

குறிப்பாக பந்துவீச்சில் யார்க்கர்களை வீசுவதற்கான முனைப்பு தெரிந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மொகமது ஷமி, தவால் குல்கர்னி ஆகியோர் கடும் பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக தவால் குல்கர்னி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்ட்டார். எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

வழக்கமான பேட்டிங், பவுலிங் பயிற்சிகளுக்குப் பிறகு கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வீரருக்கும் 5 ஹை கேட்ச்கள் என்ற வீதத்தில் கேட்சிங் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இவையனைத்திலும் ரவிசாஸ்திரி, மற்றும் துணைப்பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

மேலும், ஆட்டங்களில் எப்படி பீல்டிங் அமைப்பார்களோ அந்த வகையில் அமைத்து பந்துவீச்சு செய்து, பீல்டிங், கேட்சிங் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பயிற்சி ஆட்டங்களில் இந்திய அவுட் ஃபீல்டிங்கில் எளிதான கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டதையடுத்து பீல்டிங் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபப்ட்டுள்ளது.

பவுலிங் பயிற்சியாளர் பி.அருண், நடுவர் நிற்பது போல் நின்று கொண்டு பவுலர்களின் நோ-பால் மற்றும் லைன், லெந்த் ஆகியவை பற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து நாளையும் கடுமையான பயிற்சிகள் மெற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article6891360.ece

 

Link to comment
Share on other sites

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு
 

 

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே ரசிகர்களின் இருதயத் துடிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...

 

உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து கடுமையாக அதிகரித்துள்ளது.

"‘உலகக்கோப்பையை வென்றால் போதும், இந்தியாவுடன் தோற்றால் கவலையில்லை." என்று பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதற்கு நேரெதிரான மன நிலையில் உலகக்கோப்பை வெல்வது முக்கியம்தான் ஆனால் பாகிஸ்தானுடன் தோற்றுவிடக்கூடாது என்பதே அதைவிட முக்கியம் என்பதாகவே ரசிகர்களின் மனநிலை இதுவரை இருந்து வந்துள்ளது இப்போதும் இருந்து வருகிறது.

 

 

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக ஐதராபாத்தில் ரசிகர்கள் சிலரைச் சந்தித்து இந்தியா-பாக் மோதல் பற்றி ரஞ்சனி ராஜேந்திரா சேகரித்த செய்திகள் வருமாறு:

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் டிரெய்னராக இருக்கும் டி.ராகுல் என்பவர் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இந்தியா வெற்றி பெறும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்திய பேட்ஸ்மென்களுக்கும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக இந்தப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய பேட்டிங் பலமாக உள்ளது.” என்றார்.

 

நரேஷ் வீரவல்லி என்ற பொறியியலாளர்: "இந்தப் போட்டியை நான் நிச்சயம் பார்க்காமல் விடப்போவதில்லை. நண்பர்களுடன் ஸ்போர்ட்ஸ் பார் அல்லது என் வீட்டில் ஒன்று சேர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்திருக்கிறோம்.” என்றார்.

குரிஷாப் சிங் என்ற உணவக உரிமையாளர் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர். இவர் கூறும்போது, “இந்தியா தோற்றுவிடும் என்று என் உளமனது கூறுகிறது. சமீபமாக நம் அணி சிறப்பாக விளையாடவில்லை. குறைந்த தரமான அணிகளிடம் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

 

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனாலும், எனக்கு இந்தப் போட்டி ஆர்வமூட்டுகிறது, இந்தியா எப்படியாவது வென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். மேலும் அன்று ஞாயிற்றுக் கிழமை வணிக ரீதியாக உணவகத்தில் அதிக கூட்டம் வரும் நாள். ஆனாலும், உணவகத்தில் உள்ள தொலைக்காட்சியில் எப்படியும் லைவ் காட்சிகளை பார்ப்பேன் என்றே கருதுகிறேன்.” என்றார்.

 

இந்தப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வர்ணனையாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமிதாபின் குரல் நிச்சயம் அந்த ஆட்டத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறியுள்ளனர்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6891222.ece

 

Link to comment
Share on other sites

சிறீலங்கா நாணய சுழற்சியில் வெற்றியீட்டி பந்து வீச்சை தெரிவு செய்து உள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காதான் வெல்லும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NZ batting 78/0 11 overs

மலிங்காவின் ஒரு ஓவரில் 23 ஓட்டங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டங்களை ஆன்லைனில் இலவசமாய் பார்க்காலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, இலங்கை நேரடி தொலைக்காட்சி ஒலிபரைப்பை ஆன்லைனில் பார்க்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SL ஆரம்ப பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை கொடுத்து விட்டார்கள் 18 ஓவர்ஸ் 162/1. பரவாயில்லை, சர்வதேச தரத்தில் விளையாடும் களத் தடுப்பாளர்கள் பந்தை பிடிக்க விட்டால் எப்படி பந்து வீசியும் பிரயோசனம் இல்லை. mathew வைத் தவிர SL பில்டிங்க்ஸ் சொதப்பல்.

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கனுக்கு செம அடி.
இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா 
 
மத்தீவ்ஸ் பந்து மாற்றங்களில் செய்த தவறுகள் இதற்கு அடித்தளமிட்டது.
 
Link to comment
Share on other sites

உலகக்கோப்பை: மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் அதிரடியில் நியூசி.க்கு மிகப்பெரிய வெற்றி

 

 

கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இலங்கையை 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதலில் 2 புள்ளிகளைப் பெற்றது.

 

 

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் அவர் பேட்டிங் எடுத்திருக்க வேண்டும் ஆனால் ஏனோ நியூசி.யை பேட் செய்ய அழைத்தார்.

நியூசிலாந்து அணி மெக்கல்லம் (65), கேன் வில்லியம்சன் (57), கோரி ஆண்டர்சன் (75) ஆகியோரது பங்களிப்பின் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்தது.

 

 

இலங்கை தரப்பில் மலிங்கா சுத்தமாக சோபிக்கவில்லை, அவர் 10 ஓவர்களில் 84 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகள் இல்லை. குலசேகரா 8 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹெராத் மட்டுமே 9 ஓவர்களில் 37 ரன்களை சிக்கனமாக விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நிதானமாக தொடங்கினாலும் 124 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய 46.1 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. திரிமானி அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார்.

சவுதீ, போல்ட், மில்ன, வெட்டோரி, கோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

 

மெக்கல்லம் அதிரடி தொடக்கம்; மலிங்கா ரன் தானம்

மெக்கல்லம் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்க பிறகு மார்டின் கப்திலே குலசேகராவை 2 பவுண்டரிகளை 5-வது ஓவரில் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. மெக்கல்லம் அதன் பிறகு தாறுமாறாக அடிக்கத் தொடங்க முதல் 10 ஓவர்களில் 77 ரன்கள் விளாசப்பட்டது.

ஆட்டத்தின் 8-வது ஓவரில் மெக்கல்லம் அடிக்கத் தொடங்கினார். மலிங்கா லெக் திசையில் சாதாரண பந்தை போட அதனை பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தே நோ-பால், அதுவும் லெக் திசை, அதுவும் பவுண்டரி.

 

அடுத்ததான ஃப்ரீ ஹிட்டில் லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சர் அடித்தார் அதுவே ஆட்டத்தின் முதல் சிக்சர். பிறகு கடைசி 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. மொத்தம் அந்த ஓவரில் 23 ரன்கள். மலிங்கா 4 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக் கொடுத்தார். பிறகு 35 பந்துகளில் மெக்கல்லம் அரைசதம் கண்டார். பிறகு மேலும் சில பவுண்டரிகள் விளாசப்பட 14-வது ஓவரில் நியூசிலாந்து 100 ரன்களை எட்டியது.

16-வது ஓவரில் பிரெண்டன் மெக்கல்லம் 65 ரன்களை 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்திருந்த போது ஹெராத் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆஃபில் தூக்கி அடித்தார். பந்து சிக்சர் செல்கிறது என்ற நினைத்த நேரத்தில் ஜீவன் மெண்டிஸ் அபாரமான கேட்சைப் பிடித்தார்.

நியூசிலாந்து 111/1 என்று 16-வது ஓவரில் இருந்தது.

 

சங்கக்காரா விட்ட கேட்ச்:

அதன் பிறகு கேன் வில்லியம்ஸ் இறங்கினார். 17-வது ஓவரில் சுரங்க லக்மல் வீச அழைக்கப்பட்டார். அப்போது லக்மல் வீசிய பந்தை கேன் வில்லியம்சன் பின்னால் சென்று ஆடுவதற்குப் பதிலாக காலை முன்னால் நகர்த்தி ஆட பந்து விளிம்பில் பட்டு சங்கக்காராவிடம் கேட்சாகச் சென்றது. சங்கக்காரா வலது புறம் டைவ் அடித்து முயன்றார் முடியவில்லை. கேன் வில்லியம்சன் அப்போது ரன் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் 67 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்தார்.|

 

 

11-வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை இலங்கை ஓவருக்கு 5.07 என்று மட்டுப்படுத்தி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. இடையில் மார்டின் கப்தில் 49 ரன்களுக்கு சுரங்க லக்மல் பந்தில் அவுட் ஆனார். குறிப்பாக பவர் பிளேயிற்கு முன்னதாக 34-வது ஓவரில் வில்லியன்சன், டெய்லர் (14) ஆகிய இருவரையும் லெக் ஸ்பின்னர் ஜீவன் மெண்டிஸ் வீழ்த்தினார். ஆனால் ஜீவன் மெண்டிஸுக்கு கொடுக்கப்பட்ட ஓவர் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே, அவர் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

40வது ஓவரில் நியூசிலாந்து 229/4 என்று இருந்தது. அப்போது ஆண்டர்சன் 18 ரன்களுடனும் எலியட் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆனால் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் விளாசப்பட்டது. 44-வது ஓவரில் எலியட் 29 ரன்களில் அவுட் ஆனார். ஆண்டர்சன் 43 ரன்களில் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் கையில் வந்த கேட்சை கோட்டை விட்டார். கவர் திசையில் எளிதான கேட்ச் அது. வெறுப்படைந்த பவுலர் சுரங்க லக்மல். அந்த ஓவரில் ஆண்டர்சன் 17 ரன்களை விளாசினார்.

குலசேகரா வீசிய 48-வது ஓவரில் 15 ரன்கள். மலிங்கா வீசிய 49-வது ஓவரில் 10 ரன்கள், குலசேகரா வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள். ஆண்டர்சன் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 75 ரன்கள்.

 

நிதானத் தொடக்கத்திற்குப் பிறகு சுருண்ட இலங்கை

 

இலங்கை அணியில் தில்ஷன், திரிமானி நிதானப்போக்கை கடைபிடித்து 13 ஓவர்களில் 67 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். தில்ஷன் ஆக்ரோஷாமாக ஆட முடியவில்லை 41 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன் எடுத்த நிலையில் வெட்டோரி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

திரிமானி அபாரமாக ஆடிவந்தார். சில அற்புதமான பவுண்டரிகளை அடித்தார். அவர் 60 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்டின் பந்தை குழப்பத்துடன் ஆடி பவுல்டு ஆனார். அதற்கு அடுத்த போல்ட்டின் ஓவரில் சங்கக்காராவும் போல்ட்டின் அருமையான பந்துக்கு எல்.பி.ஆகி 39 ரன்கள்எடுத்து வெளியேறினார். இடையே டேனியல் வெட்டோரி, ஒரு பந்தை கடுமையாகத் திருப்ப மகேலா ஜெயவர்தனே எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார்.

 

22-வது ஓவரில் 124/1 என்று இருந்த இலங்கை 24-வது ஓவரில் 129/4 என்றும் 32-வது ஓவரில் 168/6 என்றும் சரிந்தது. இதில் மேத்யூஸ் மட்டுமே 46 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். அவரும் 8-வது விக்கெட்டாக 42-வது ஓவரில் வெளியேற இலங்கை கதை முடிந்தது.

ஆட்ட நாயகனாக ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6895135.ece

 

Link to comment
Share on other sites

2015 உலகக்கோப்பையின் முதல் சதம் எடுத்த ஏரோன் ஃபின்ச்: 342 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

 

 

மெல்போர்னில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் விளாசியது.

ஏரோன் பின்ச்சிற்கு முதல் ஆண்டர்சன் ஓவரில் பின்ச் பந்தை பிளிக் செய்ய மிட்விக்கெட்டில் கையைக் கூப்பியபடி எம்பிய வோக்ஸ் பந்தை பிடிக்கத் தவறினார். விளைவு ஏரோன் ஃபின்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 135 ரன்கள் விளாசினார் என்பதே.

 

கடைசியில் ஹாட்ரிக் எடுத்து ஸ்டீவ் ஃபின் ஆறுதல்:

ஆட்டத்தின் 50வது ஓவரை ஸ்டீவன் ஃபின் வீசினார். 4-வது பந்தில் ஹேடின் தேர்ட் மேனில் கேட்ச் பிடிக்கப்பட்டார், 5-வது பந்தில் ஜோ ரூட்டின் அபாரமான கேட்சிற்கு கிளென் மேக்ஸ்வெல் வெளியேறினார். கடைசி பந்தை மிட்செல் ஜான்சன் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஃபின் 10 ஓவர்களில் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனாலும் என்ன பயன்? 2009-இல் பிளிண்டாஃப் எடுத்த ஹாட்ரிக்கிற்குப் பிறகு தற்போது ஃபின் இங்கிலாந்துக்காக ஒரு ஹேட்ரிக் சாதனை புரிந்தார்.

பின்ச் கேட்சை விட்ட பிறகு சிறப்பாக ஆடியது போல் கடைசியில் 66 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

 

பின்ச் எடுத்த 135 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 5-வது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். வார்னருடன் 57 ரன்கள் தொடக்கம் கண்ட பின்ச் பிறகு பெய்லியும் இவரும் இணைந்து 146 ரன்களைச் சேர்த்து 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை கொண்டு சென்றனர்.

இங்கிலாந்து கடைசி ஓவர் பவிலிங் வெளிறிப்போக ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை எடுத்தது.

வார்னருக்கும் தொடக்கத்தில் கடினமான வாய்ப்பு ஒன்று விடப்பட்டது. ஆனால் அவர் அதிகம் சோதிக்காமல் 22 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் பவுல்டு ஆனார். லெக் திசை பிளிக் ஷாட் சிக்கவில்லை. முன்னதாக, ஆண்டர்சனின் 3-வது ஓவரில் 18 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. . வாட்சனுக்கு அடுத்த பந்தே அருமையான அவுட் ஸ்விங்கரை வீச அவர் எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார். இதன் மூலம் பிராட் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். உள்ளே இறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு அபாரமான இன்ஸ்விங்கிங் மிடில் ஸ்டம்ப் யார்க்கரை வீசினார் பிராட், ஆனால் ஸ்மித் தடுத்தாடிவிட்டார்.

 

ஸ்மித்தின் ஆட்டம் தூக்கி நிறுத்தும் என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஆட முயன்று பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத்தாக்கியது. ஆஸி.70/3 என்று ஆனது.

அதன் பிறகு பெய்லி, ஏரோன் பின்ச் 58 பந்துகளுக்கு பவுண்டரி அடிக்கவில்லை. அணியை நிதானித்தனர். ஆனால் மொயீன் அலியை 2 பவுண்டரிகள் அடித்தனர் பின்ச், மற்றும் பெய்லி. அதன் பிறகு ஆண்டர்சன் பந்தையும் சிக்சருக்குத் தூக்கினார் பின்ச். பிறகு ரூட் வந்தவுடன் லாங் ஆனில் பவுண்டரி பிறகு ஆஃப் திசையில் ஸ்லைஸ் ஷாட் சிக்சருக்குப் பறந்தது. கடைசியில் 31-வது ஓவர் பவர் பிளே வந்தது. ஃபின் வீசிய லெக் திசைப் பந்தை பவுண்டரி அடித்து 102 பந்துகளில் சதம் கண்டார் பின்ச். மட்டையை உயர்த்தினார், குதித்தார். உலகக்கோப்பை அறிமுகத்தில் சதம் எடுக்கும் 4-வது ஆஸி. வீரர் ஏரோம் ஃபின்ச்.

 

123 ரன்களில் இருந்த போது ஜேம்ஸ் டெய்லரின் மோசமான த்ரோவினால் ஏரோன் பின்சிற்கு மற்றொரு ரன் அவுட் வாய்ப்பு தவற விடப்பட்டது. ஆனால் 135 ரன்களில் இயன் மோர்கன் த்ரோவுக்கு பின்ச் ரன் அவுட் ஆனார். பெய்லி 55 ரன்கள் எடுத்து பின் பந்தை ஸ்டம்பில் அடித்தார்.

 

மேக்ஸ்வெல் அதிரடி:

அதன் பிறகு மேக்ஸ்வெல் இறங்கி 3-வது பந்தையே மொயீன் அலியை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். அதன் பிறகு அவரது வழக்கமான பாணியில் நகர்ந்து கொண்டு ஆடுவது, மேலேறி வந்து ஆடுவது என்று அடிக்கத் தொடங்கினார். 42-இல் இவருக்கும் ஒரு வாழ்வு வழங்கியது இங்கிலாந்து ஆனால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசியில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்களை 11 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் ஹாட்ரிக் விக்கெட்டுகளில் ஒன்றானார்.

மிட்ச்ல் மார்ஷ் விரைவு 23 ரன்களையும் பிராட் ஹேடின் 14 பந்துகளில் 31 ரன்களையும் விளாசியதில் கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை ஆஸி.விளாச ஸ்கோர் 342 ரன்கள் எடுத்தது.

 

 

http://tamil.thehindu.com/sports/2015-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-342-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6895367.ece

Link to comment
Share on other sites

மிட்செல் மார்ஷ் அபாரப் பந்துவீச்சு: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

 

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

343 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து ஆட்டம் முழுதும் தடுமாறி கடைசியில் டெய்லரின் அபாரமான 98 ரன்கள் வீணாக 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் சற்றும் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்தை திணறச் செய்து 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஜேம்ஸ் டெய்லர் ஒரு சாம்பியன் போல் பேட் செய்து 90 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முன்னதாக கிறிஸ் வோக்ஸும் அவரும் இணைந்து 14 ஓவர்களில் 7-வது விக்கெட்டுக்காக அதிரடி முறையில் 92 ரன்களைச் சேர்த்தது மட்டுமே இங்கிலாந்துக்கு ஆறுதல் அளித்தது.

 

 

இங்கிலாந்து சுருண்ட விதம்

 

முதலில் மொயீன் அலி 2 பவுண்டரிகளை அடித்தார். மிட்செல் ஸ்டார்க் உண்மையில் சரியான வேகத்தில் வீசினார். அதனை புரிந்து கொள்ளாமல் மொயீன் அலி 5-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய ஷாட் பந்து அவரிடம் விரைவில் எகிற அதனை மீறி புல் ஆட முயன்று 10 ரன்களில் மிட் ஆனில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சரியாக 5 ஓவர்கள் சென்று அதே 10 ரன்களில் கேரி பாலன்ஸ் ஆஸ்திரேலியா வைத்த பொறியில் சிக்கினார். மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை பிளிக் செய்தார். ஆனால் தரையில் ஆடாமல் காற்றில் ஆட ஷாட் மிட்விக்கெட்டில் ஃபின்ச் காத்திருந்தார்... பிடித்தார்.

இதற்கும் சரியாக 4 ஓவர்கள் சென்று 4 பவுண்டரிகளுடன் ஓரளவுக்கு பிட்சைப் புரிந்து கொண்டு ஆடி 36 ரன்களுடன் ஆடி வந்த இயன் பெல், மிட்செல் மார்ஷ் பந்தை ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் ஸ்டார்க் அதற்காகக் காத்திருந்தார்.

அதற்கு அடுத்த பந்தே ஜோ ரூட் காலியானார். மீண்டும் ஷாட் பந்து, ஜோ ரூட் ஷாட்டிற்குச் சென்று டாப் எட்ஜ் செய்ய ஹேடின் கேட்ச் பிடித்தார்.

கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர அவர் 6 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், மிட்செல் மார்ஷ் வீசிய ஸ்லோ ஷாட் பந்துக்கு ஹேடினின் அற்புதமான தாழ்வான கேட்சிற்கு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

 

 

ஸ்டீவ் ஸ்மித்தின் அசாத்தியமான கேட்ச்:

 

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 10 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை கவர் திசையில் சக்தி வாய்ந்த ஷாட்டை ஆடினார். ஆனால் ஷாட் கவர் திசையில் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சிகரமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார், இடது புறம் பாய்ந்து இருகைகளையும் கொண்டு சென்று அசாத்தியமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். இங்கிலாந்து 22-வது ஓவரில் 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கியது.

 

டெய்லர், வோக்ஸ் அளித்த சிறு நம்பிக்கை:

 

அதன் பிறகு டெய்லர், வோக்ஸ் இணைந்து 14 ஓவர்களில் 92 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வோக்ஸ் 37 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள். இந்நிலையில் வோக்ஸிற்கு அதி அற்புத மெதுபந்தை வீசினார் மிட்செல் ஜான்சன், பந்தில் வேகம் இல்லை ஆனால் கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது, அதனை வோக்ஸ் அடிக்க பந்து மேலெழும்ப ஸ்மித் பின்னால் சென்று கேட்ச் பிடித்தார்.

இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கை ஸ்டூவர்ட் பிராட் மட்டுமே இப்போது.. ஆனால் அவருக்கு மிட்செல் ஸ்டார்க் வந்து நின்றவுடன் ஒரு விளையாட முடியாத யார்க்கரை வீச, பிராட் பவுல்டு ஆனார்.

 

ஜேம்ஸ் டெய்லரின் சாம்பியன் பேட்டிங்:

 

ஜேம்ஸ் டெய்லர் சில புதிதான பவுண்டரி ஷாட்களைக் கண்டுபிடித்து அடித்தார். மேலும் மிட் ஆன், மிட் ஆஃப் என்று அவர் தூக்கி தூக்கி அடிக்க பவுலர்கள் சற்றே கலங்கினர், குறிப்பாக 34-வது ஓவரில் அவர் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை ஸ்கூப்/ஸ்விப் செய்ய பந்து சிக்ஸ் ஆனது. அது அவரது அரைசதமானது. 61 பந்துகளில் 4பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 53 ரன்களில் இருந்தார். பிறகு மிட்செல் மார்ஷை இறங்கி வந்த் மிட் ஆனில் ஒரு பவுண்டரி அடித்தார்.

மீண்டும் மிட்செல் ஸ்டார்க் வீச வர லாங் ஆனில் வெறித்தனத்துடன் ஒரு சிக்சரை அடித்தார். வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகும் கூட மிட்செல் ஜான்சனை அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மீண்டும் ஸ்டார்க் பந்தை இரண்டு பவுண்டரி அடித்தார். இடையில் ஃபின், பிராட் ஆகியோர் வெளியேறினர்.

 

42-வது ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் தீர்ப்பளிக்கப்பட இங்கிலாந்து 231 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.

டெய்லரின் பேட்டிங்கின், பவுலிங்கில் ஸ்டீவ் ஃபின்னின் ஹேட்ரிக்குமே இன்றைய இங்கிலாந்து ஆட்டத்தின் ஆறுதல் அளிக்கும் அம்சங்களாகும்

2015 உலகக்கோப்பையில் முதல் சதம் கண்ட ஏரோன் பின்ச்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

முன்னதாக டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது. அந்த அணி அபாரமான பின்ச் சதம் மற்றும் மேக்ஸ்வெல், பெய்லி, அரைசதங்களுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.

 

ஏரோன் பின்சிற்கு முதல் ஓவரிலேயே கேட்சை விட்ட வோக்ஸ்:

 

ஏரோன் பின்ச்சிற்கு முதல் ஆண்டர்சன் ஓவரில் பின்ச் பந்தை பிளிக் செய்ய மிட்விக்கெட்டில் கையைக் கூப்பியபடி எம்பிய வோக்ஸ் பந்தை பிடிக்கத் தவறினார். விளைவு ஏரோன் ஃபின்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 135 ரன்கள் விளாசினார் என்பதே.

 

கடைசியில் ஹாட்ரிக் எடுத்து ஸ்டீவ் ஃபின் ஆறுதல்:

ஆட்டத்தின் 50வது ஓவரை ஸ்டீவன் ஃபின் வீசினார். 4-வது பந்தில் ஹேடின் தேர்ட் மேனில் கேட்ச் பிடிக்கப்பட்டார், 5-வது பந்தில் ஜோ ரூட்டின் அபாரமான கேட்சிற்கு கிளென் மேக்ஸ்வெல் வெளியேறினார். கடைசி பந்தை மிட்செல் ஜான்சன் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஃபின் 10 ஓவர்களில் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனாலும் என்ன பயன்? 2009-இல் பிளிண்டாஃப் எடுத்த ஹாட்ரிக்கிற்குப் பிறகு தற்போது ஃபின் இங்கிலாந்துக்காக ஒரு ஹேட்ரிக் சாதனை புரிந்தார்.

பின்ச் கேட்சை விட்ட பிறகு சிறப்பாக ஆடியது போல் கடைசியில் 66 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.

 

பின்ச் எடுத்த 135 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 5-வது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். வார்னருடன் 57 ரன்கள் தொடக்கம் கண்ட பின்ச் பிறகு பெய்லியும் இவரும் இணைந்து 146 ரன்களைச் சேர்த்து 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை கொண்டு சென்றனர்.

இங்கிலாந்து கடைசி ஓவர் பவிலிங் வெளிறிப்போக ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை எடுத்தது.

வார்னருக்கும் தொடக்கத்தில் கடினமான வாய்ப்பு ஒன்று விடப்பட்டது. ஆனால் அவர் அதிகம் சோதிக்காமல் 22 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் பவுல்டு ஆனார். லெக் திசை பிளிக் ஷாட் சிக்கவில்லை. முன்னதாக, ஆண்டர்சனின் 3-வது ஓவரில் 18 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. . வாட்சனுக்கு அடுத்த பந்தே அருமையான அவுட் ஸ்விங்கரை வீச அவர் எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார். இதன் மூலம் பிராட் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். உள்ளே இறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு அபாரமான இன்ஸ்விங்கிங் மிடில் ஸ்டம்ப் யார்க்கரை வீசினார் பிராட், ஆனால் ஸ்மித் தடுத்தாடிவிட்டார்.

 

ஸ்மித்தின் ஆட்டம் தூக்கி நிறுத்தும் என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஆட முயன்று பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத்தாக்கியது. ஆஸி.70/3 என்று ஆனது.

அதன் பிறகு பெய்லி, ஏரோன் பின்ச் 58 பந்துகளுக்கு பவுண்டரி அடிக்கவில்லை. அணியை நிதானித்தனர். ஆனால் மொயீன் அலியை 2 பவுண்டரிகள் அடித்தனர் பின்ச், மற்றும் பெய்லி. அதன் பிறகு ஆண்டர்சன் பந்தையும் சிக்சருக்குத் தூக்கினார் பின்ச். பிறகு ரூட் வந்தவுடன் லாங் ஆனில் பவுண்டரி பிறகு ஆஃப் திசையில் ஸ்லைஸ் ஷாட் சிக்சருக்குப் பறந்தது. கடைசியில் 31-வது ஓவர் பவர் பிளே வந்தது. ஃபின் வீசிய லெக் திசைப் பந்தை பவுண்டரி அடித்து 102 பந்துகளில் சதம் கண்டார் பின்ச். மட்டையை உயர்த்தினார், குதித்தார். உலகக்கோப்பை அறிமுகத்தில் சதம் எடுக்கும் 4-வது ஆஸி. வீரர் ஏரோம் ஃபின்ச்.

 

123 ரன்களில் இருந்த போது ஜேம்ஸ் டெய்லரின் மோசமான த்ரோவினால் ஏரோன் பின்சிற்கு மற்றொரு ரன் அவுட் வாய்ப்பு தவற விடப்பட்டது. ஆனால் 135 ரன்களில் இயன் மோர்கன் த்ரோவுக்கு பின்ச் ரன் அவுட் ஆனார். பெய்லி 55 ரன்கள் எடுத்து பின் பந்தை ஸ்டம்பில் அடித்தார்.

 

மேக்ஸ்வெல் அதிரடி:

 

அதன் பிறகு மேக்ஸ்வெல் இறங்கி 3-வது பந்தையே மொயீன் அலியை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். அதன் பிறகு அவரது வழக்கமான பாணியில் நகர்ந்து கொண்டு ஆடுவது, மேலேறி வந்து ஆடுவது என்று அடிக்கத் தொடங்கினார். 42-இல் இவருக்கும் ஒரு வாழ்வு வழங்கியது இங்கிலாந்து ஆனால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசியில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்களை 11 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் ஹாட்ரிக் விக்கெட்டுகளில் ஒன்றானார்.

மிட்ச்ல் மார்ஷ் விரைவு 23 ரன்களையும் பிராட் ஹேடின் 14 பந்துகளில் 31 ரன்களையும் விளாசியதில் கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை ஆஸி.விளாச ஸ்கோர் 342 ரன்கள் எடுத்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6895367.ece

 

Link to comment
Share on other sites

ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் அவுட் தீர்ப்பு தவறுதான்: ஐசிசி ஒப்புதல்
 

 

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸி.-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து வீர்ர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு கொடுத்த ரன் அவுட் தீர்ப்பு தவறுதான் என்று ஐசிசி. ஒப்புக்கொண்டது.

 

இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

குரூப் ஏ ஆட்டமான இங்கிலாந்து-ஆஸ்திரேலிய போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆட்டத்தின் கடைசி பந்தை பிளேயிங் கண்ட்ரோல் டீம் ஆய்வு செய்தது.

 

நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) ஆட்டச்சூழ்நிலைகள் விதிமுறை பிரிவு 3.6ஏ-யின் படி கள நடுவர் ஒருமுறை அவுட் என்று தீர்ப்பளித்து விட்டால் பந்து உடனே தனது செயலை இழந்து விடுகிறது. அது டெட் பால். ஜேம்ஸ் டெய்லருக்கு எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்ட பிறகே அடுத்ததான ரன்கள் அல்லது அவுட்கள் சாத்தியமில்லை.

இந்நிலையில் பிளேயிங் கண்ட்ரோல் டீம் இங்கிலாந்து அணி நிர்வாகத்தைச் சந்தித்து ஆட்டம் தவறாக முடிக்கப்பட்டது என்றும் பிழை ஏற்பட்டுவிட்டது என்றும் ஒப்புக் கொண்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6896364.ece
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6896364.ece

 

 


ஜேம்ஸ் ஆண்டர்சனின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்: நடந்தது என்ன?

 

 

  

மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு ஏ ஆட்டம் இன்று இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் தீர்ப்புடன் முடிந்தது.

98 ரன்களில் ஆடிவந்த ஜேம்ஸ் டெய்லர், ஒரு ஆறுதல் சதத்திற்காகவும், இருக்கும் ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களை மேலும் சில ஷாட்களை ஆடிக் காய்ச்சவும் தீர்மானித்திருந்த போது 42-வது ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார்.

 

 

அந்த ஓவரின் 5-வது பந்து ஃபுல்லாக மிடில் அண்ட் லெக் ஸ்டம்புக்கு வந்தது. பிளிக் செய்ய முயன்ற ஜேம்ஸ் டெய்லர் பேலன்ஸ் தவறினார். ஜோஷ் ஹேசில்வுட் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் உரத்த முறையீடு செய்ய நடுவர் அலிம் தார் அவுட் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால், உடனேயே ஜேம்ஸ் டெய்லர் 3-வது நடுவர் மறுபரீசிலனைக்கு முறையீடு செய்துவிட்டார். ஆனால் அலீம் தார் கொடுத்த அவுட்டை ரீப்ளே பார்த்த டிவி நடுவர் இல்லை என்று மறுதலித்தார். ஆகவே டெய்லர் நாட் அவுட்.

 

இதற்கிடையே பேடில் பட்டுச் சென்ற பந்தை எடுத்து கிளென் மேக்ஸ்வெல் நேராக ஸ்டம்பில் அடிக்க, ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரீசை அடைய முடியவில்லை. அதனை தர்மசேனா ரிவியூ செய்தார். அது அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜேம்ஸ் டெய்லர் அது டெட் பால், டெட் பால் என்று திரும்பத்திரும்ப கூறினார், ஆனால் எடுபடவில்லை.

அலிம்தார் டெய்லருக்கு எல்.பி. என்று தீர்ப்பளித்துவிட்ட பின்னரே பந்து ‘டெட்’ ஆகிவிடுகிறது. நடுவர் கையை உயர்த்திய பிறகு ஆண்டர்சன் ரன் அவுட் ஆனாரா? அல்லது அதற்குப் முன்னரா போன்ற விஷயங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

 

ஆஸ்திரேலிய ஊடகம் இது பற்றி கூறுகையில், மேக்ஸ்வெல் த்ரோ ஸ்டம்பைத் தாக்கும் முன்னரே அலீம்தார் டெய்லருக்கு அவுட் கொடுத்தார் என்று கூறி, எனவே ஆண்டர்சன் ரன் அவுட் கிரிக்கெட் விதிகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது.

 

முழுமுற்றான ஆஸ்திரேலிய ஆதிக்க தினத்தில், கடைசியில் டெய்லர் சதம் எடுக்க முடியாமல் இந்த ரன் அவுட் தீர்ப்பு அமைந்தது சர்ச்சையைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6896147.ece
 

Link to comment
Share on other sites

எது நடந்தாலும் பரவாயில்லை, நாங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என்று விளையாடுபவர்கள் ஆஸ்திரேலிய அணியினர். அவர்களிடம் துளி அளவு கூட நியாயத்தை எதிர் பார்க்க முடியாது. இது ஆயிரத்தோடு ஆயிரத்து ஒன்று. அவ்வளவு தான். சிட்னி டெஸ்ட் போட்டியில் 2007-08 தொடரின் போது நடந்ததை விட ஒரு உதாரணம் வேண்டுமா என்ன?

 

தமிழ் ஹிந்து  இணணயத்தில் ஒரு வாசகர்

Link to comment
Share on other sites

கத்தியே காரியம் சாதிப்பதில் வல்லவர்கள் அவுஸ்காரர்.. :huh:

Link to comment
Share on other sites

98 ரன்களில் நிற்கும்போது இப்படி ஒரு அவுட். கடைசி விக்கெட் வேறு, எப்படியோ இங்கிலாந்து வெல்ல போவதில்லை.

 

ஆஸ்திரேலிய அணி தலைவர் அவரை தொடர்ந்து ஆட அனுமதித்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.