• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Paanch

மனது இளமை என்று துள்ளாதே!!

Recommended Posts

பதிவுகளையும் அவற்றிற்கான பின்னூட்டங்களையும் கூடுதலாகப் பதிந்து, பச்சைப் புள்ளிகளையும் அதிகம் பெற்ற யாழ் உறவுகளை வாழ்த்துவது உறவுகளின் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு மனதுக்கு மகிழ்வையும் தரும் நிகழ்வாகும். அந்தவகையில் மன மகிழ்வை நானும் பெற்றேன். என்னை வாழ்த்திய விதமும் புதுமையாக இருந்தது. வாழ்துக்கான படங்களையும், அவற்றுக்கான கவிகளையும் பார்த்தவுடன் மனம் துள்ளவே செய்தது. ஆனாலும் நான் துள்ளவில்லை!. ஏன் துள்ளவில்லை? என்ற உறவொன்றின் கேள்வியும் எழுந்து நின்றது. யோசித்தேன்! நான் ஏன் துள்ளவில்லை? திரும்பத் திரும்ப படங்களையும், கவிகளையும் புரட்டிப் பார்த்தபோது என் சிந்தனையில் எழுந்தவற்றை இங்கு தருகிறேன்.

http://i60.tinypic.com/nwc9kw.gif

யாழ்களத்தின் ஒளியைத்தான் கோபுரம் பரப்பியது! நீதான் அந்த ஒளியென்று துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பஞ் டயலக் பேசுபவர் பாஞ்சின் முன்னூறு மூவாயிரம் என்றதும்! மிதமிஞ்சித் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பனைமரம் மரம் பழசு! ஆனாலும் பனம்கொட்டை புதுசுதான்! பவிசுகொண்டு துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

சித்தரின்கையில் புத்தகமா? பாஞ்சுக்கு பச்சைகளா? கேள்விவரும். புள்ளி எண்ணித் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பித்தன் இருக்கிறார் சங்கு ஊதிடுவார். தட்சனைப்போல் தலையில் பித்தம் பிடித்துத் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

வயது முதிர்கிறது உடல் உமிதூக்கும் பலமும் அற்றுப்போகும் மனது இளமை என்று துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

நிலத்துக்கு நீ என்ன செய்தாய்? யாழ்முதல்வர் கேட்கிறார் அவரையும் ஏமாற்றித் துள்ளாதே.!!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

திரு. பாஞ்ச் அவர்களே,

எந்த மனிதனும் அங்கீகாரதிற்காக ஏங்குவது இயல்பு.

 

அந்தவகையில் யாழ்களமும் கள உறவுகளை ஊக்குவிக்கவும் சக உறவுகளுக்கு வழிமுறை செய்து கொடுத்துள்ளது.. யாழ்கள குழுமத்திலேயே உறவுகளை தொடர்ந்து இறுக்கி வைக்க, இந்த வாழ்த்தும் ஒரு உந்துசக்தியாக உதவும் என்பது எனது நம்பிக்கை.

 

குடும்பப் பொறுப்புகளால் களத்தை அடிக்கடி மறந்துவிடும்( ??? :lol: ) உங்களை ஊக்கப்படுத்தி, தங்களது அனுபவங்களை & அழியாத கோலங்களை எங்களோடு இங்கே பகிர்ந்து இறுத்தவே அவ்வாழ்த்து மடலை அலுவலக வேலைகளுக்கிடையே தயாரித்து வெளியிடப்பட்டது.

வாழிய நலமோடு, இனிதே தொடரவும் யாழோடு! :)
 

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணா,
உங்கள் பதிவை வாசித்த போது... நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழி தான், நினைவுக்கு வந்தது.
உங்கள் உணர்வை, நாம் புரிந்து கொள்கின்றோம்.
வழக்கமாக....  100, 500, 1000, 2000 என்று பச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களை தான்...

யாழ் களத்தில் வாழ்த்துவது என்று முன்பு உறவுகளால்... கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

அப்படி இருந்தும்....
உங்கள் அனுபவத்தையும், வயதையும், இதுவரை ஆற்றிய சமூகப் பணிகளையும்....

இந்த நேரத்தில் கௌரவிக்கும் முகமாக, இந்தத் தருணத்தை....

ராஜவன்னியனும், புங்கையூரனும் பயன் படுத்திக் கொண்டதில்....எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.

 

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள், யாழ்களத்தில்... இரு பெயரில் எழுதியும்,

அவரை உரிய முறையில்.... நாம் கௌரவிக்கவில்லை என்ற மனக் குறை,

மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

 

ஆனபடியால்... உங்களுக்கு கிடைத்த வாழ்த்தை, மகிழ்ச்சியாக துள்ளி கொண்டாடுங்கள். :D

 

அத்துடன் முதல் படத்தில் உள்ள கோபுரத்தையும்,  அந்த சித்தரின் பெயரையும்... உங்களுக்கு தெரியும்.
அதனை எவை என்று, நீங்கள் இன்னும் கண்டு பிடிக்காதது, ஆச்சரியமாக உள்ளது. :)

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பாஞ்ச் அண்ணா,

உங்கள் பதிவை வாசித்த போது... நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழி தான், நினைவுக்கு வந்தது.

உங்கள் உணர்வை, நாம் புரிந்து கொள்கின்றோம்.

வழக்கமாக....  100, 500, 1000, 2000 என்று பச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களை தான்...

யாழ் களத்தில் வாழ்த்துவது என்று முன்பு உறவுகளால்... கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

அப்படி இருந்தும்....

உங்கள் அனுபவத்தையும், வயதையும், இதுவரை ஆற்றிய சமூகப் பணிகளையும்....

இந்த நேரத்தில் கௌரவிக்கும் முகமாக, இந்தத் தருணத்தை....

ராஜவன்னியனும், புங்கையூரனும் பயன் படுத்திக் கொண்டதில்....எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.

 

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள், யாழ்களத்தில்... இரு பெயரில் எழுதியும்,

அவரை உரிய முறையில்.... நாம் கௌரவிக்கவில்லை என்ற மனக் குறை,

மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

 

ஆனபடியால்... உங்களுக்கு கிடைத்த வாழ்த்தை, மகிழ்ச்சியாக துள்ளி கொண்டாடுங்கள். :D

 

அத்துடன் முதல் படத்தில் உள்ள கோபுரத்தையும்,  அந்த சித்தரின் பெயரையும்... உங்களுக்கு தெரியும்.

அதனை எவை என்று, நீங்கள் இன்னும் கண்டு பிடிக்காதது, ஆச்சரியமாக உள்ளது. :)

 

எனக்குக் கிடைத்த வாழ்த்தை,நிறைந்த மகிழ்வோடு மனம் துள்ளக் கொண்டாடினேன். :) 
 
ராசவன்னியன் அவர்களின் கற்பனையில் இணைந்த சித்திரங்கள் வியக்கவைத்தது. அதற்கான புங்கையூரன் அவர்களின் கவியும், புவியில் என்னைத் துள்ளவைத்தது. எனக்குமட்டும் அல்ல, யாழ்கள உறவுகள் பலருக்கும் பரவசமூட்டும் வண்ணம் தொழில்நுட்பங்களுடன் கூடிய,  சித்திரங்களையும், வாழ்த்து மடல்களையும், தயாரித்தளித்த ராசவன்னியரின் திறன் கண்டு வியந்துள்ளேன். :o  
 
தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டம்வரை வளர்ந்தும் வெற்றிபெறாது அடைந்த பின்னடைவு ஏற்படுத்திய மன அழுத்தம் நித்திரையும் கொள்ளவிடாது துன்புறுத்தியது. அந்த அழுத்தத்தை மேன்மேலும் வளர்ப்பதற்கு சில தமிழ் உடகங்களே முனைந்த வேளையில், ஆறுதலைத்தரும் ஆக்கங்களை வெளியிட்டு, யாழ்களம் மனதிற்கு  ஆறுதலைத் தந்தது. அதில் ஆழ்ந்த கருத்துக்களையும் பகிடிபோல் உறவுகள் பதிந்தது என்னையும்  கவர்ந்ததால் நானும் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பகிடிகளை இணைத்தே பதிந்துவந்தேன். பகிடிச்சிங்கம் என்று எனக்கும் பட்டந்தர யாழ்களம் என் பெயரைத் தெரிவுசெய்ததும் உண்டு.  :lol:
 
பச்சைப் புள்ளிகளைப் பெற்ற வாழ்த்துக்கும் பகிடியாகவே ஊட்டம் எழுதிப் பதிந்தேன்.  இருந்தும் பகிடியைப் பாம்பு கடிக்கும் என்பதை மறந்துவிட்டேனா? என இச்சமயம் எண்ணத் தோன்றுகிறது. எவரையும் மனம் நோகச்செய்வது எனது நோக்கமல்ல. அப்படியும் யாரையாவது நான் மனம்நோகச் செய்திருந்தால் தயவுடன் அவர்கள் என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.  :huh:  
 
உங்களின் பின்னூட்டம் என்னை நீங்கள் அறிந்திருப்பதை உணர்த்துகிறது.  :icon_idea:
 
படத்தில் உள்ள கோபுரத்தை எங்கள் வீட்டிலிருந்து பார்க்கலாம், :rolleyes:  
 
அந்த சித்தரின் பெயர் இன்னமும் என் புத்திக்கு வரவில்லை.  :(

Share this post


Link to post
Share on other sites

....

அந்த சித்தரின் பெயர் இன்னமும் என் புத்திக்கு வரவில்லை.  :(

 

 

2e4dldz.jpg

 

இவர்தான் "தங்க தாத்தா" , உங்கள் "நவாலியூர் தாத்தா.."

 

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் தவமிருக்கிறார். :rolleyes:

 

"குருமடம் புகுந்தவுருவி லாக்காமன்

கல்விச்சாலையை பெற்றமிழ்ப் பித்துத்

தாய் மொழிமடவார் வாய்மொழியாக்கிச்

சமயமும் லீலாசமயமாய்ச் செய்து

நிகலில் தீக்கை நிருவாணமாக்கிச்

சந்நிதானங்கள் தந்நதானம் விடக்

குன்றிலுங்க குழியிலும் விழுத்தி

வருகின்றான்"

 

என எழுதி வைத்து சென்றுள்ளார்..!  பெயர் தெரியும் தானே? :)

 

Share this post


Link to post
Share on other sites

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!!

 

 

நன்றி ராசவன்னியரே! 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!!

 

 

நன்றி ராசவன்னியரே! 

 

ஆகா... கண்டுபிடித்துவிட்டீர்கள்...!  bjr2.gif

 

வாழ்த்துக்கள்..! :)

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this