Jump to content

மாவீரம் குறள் ஆற்றுவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரம் குறள்: 1

 

மண்ணின் கண் மகிமை கொண்டோர்

மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார்.

 

(தொடர்ந்து நீங்களும் ஆக்குங்கள். ஆளுக்கு ஓர் குறள் மட்டுமே ஆக்கலாம்.)

 


இக்குறள் மாவீரர்களின் வீரம்.. ஈகை.. கொடை.. தன்னலமற்ற பண்பு.. இலட்சிய வேட்கை.. வாழ்க்கை.. சாதனைகள்.. இனப் பற்று.. மண் பற்று.. அவர் தம் மக்கள் பற்று.. சக போராளிகள் மீதான பற்று.. மக்கள்.. மாவீரர் மீது கொண்ட மகிமை.. என்ற கருத்துக்கள் பட அமைவது நன்று.

 

இந்த தன்னமலற்ற தியாகிகள் மீதான அவதூறுகள் வரவேற்கப்பட மாட்டாது. கள நிர்வாகம் அப்படியான ஆக்கல்களை அகற்றி உதவுதல் வேண்டும்.

 

திருத்தம்:

 

ஆளுக்கு ஒரு குறள் மட்டுமே ஆக்கலாம் என்பது கீழ் வருமாறு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்வம்.. மற்றும் ஆதரவை கருத்தில் கொண்டும்.. கள உறவுகள் பலர் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கவும்.... ஒருவர் ஆற்றக் கூடிய குறள்களின் எண்ணிக்கை குறைந்தது 1 இருந்து கூடியது 5 வரை என்று விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு மேல் இந்த விதியில் தளர்வுக்கு இடமில்லை.

 

நன்றி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்ச்சி தொடருங்கள் நெடுக்ஸ்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் தந்து வீழ்ந்தோரே வாழ்ந்தார்

அஃதிலார் தொழுதுண்டு பின்செல்வராவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுப் புக முடியாத, இடதினுளும் புகுந்து, எதிரியை
தோற்றுப் போக வைப்பர்,  கரும்புலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நல்லா இருந்தது. ஆனால் குறள் சொன்னா 7 வார்த்தைகளில் இருக்கோணும் என்பது மரபு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் மடிவோர் மனிதர் அல்லர்
மாவீரர் மண்ணிற்காய் மடிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித் துணிந்தனர் மண்ணுக்காய் மாவீரர்

மற்றெல்லாம் மனதில் துறந்து

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்சி நெடுக்ஸ்.

குறளுக்கான சிறு விளக்கமும் தந்தால் நன்றாக இருக்கும். சிறு குறிப்பு அல்லது குறளை விளக்கும் சிறு கதை அல்லது உதாரணம் மேலும் மெருகூட்டும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது குறளிற்கான விளக்கம்.

கொண்ட கொள்கைக்காக உயிரை கொடுதவர்களே புகழுடன் வாழ்கிறார்கள்.

மற்றயர்வர்கள், ஏதையாவது அல்லது எவரையாவது தொழுது, உண்டு வாழ்கிறார்கள்.

இதுயாரையும் புண்படுத்த எழுதியதில்லை. போராட்டத்தில் இறந்தவர்களுக்கும் தப்பி பிழைத்தவர்களுக்கும் அரசுடன் சேர்ந்து கொண்டவர்களுக்கும்மான வித்தியாசத்தை நேரில் கண்டதால் எழுந்த சிந்தனை.

Link to comment
Share on other sites

வீரமரபின் வித்தென்றே விழுப்புண் ஒன்றைபரிசிட்டே

வாழ்த்தி விதைத்திடும் தமிழினமே...

உரை

பிறந்த உடன் இறந்த பிள்ளைகளானாலும் வீர செறிந்த இனத்தில் பிறந்ததற்காய் உடலில் காயமொன்றை தந்து விதைக்கும் மாண்பை உடையவர்கள் தமிழர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னுயிர் காத்திடத் தன்னுயிர் துறந்தாரை,

எந்நாளும் ஏந்தும் இவ்வுலகு !

 

புங்கையின் உரை:

 

இவ்வுலகில் பிறந்த மக்களின் உயிர்களைக் காப்பதற்காகத் தனது உயிரைத் துச்சமென மதித்து உயிர் விடுபவர்களை, இவ்வுலகில் வாழும் மக்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் ஒன்றுதான் எழுத வேண்டுமா நெடுக்ஸ்?

 

ஆம். இதில் தளர்வுகள் செய்ய முற்பட்டால்.. தனித்துவமும்.. இழக்கப்படும். எல்லோரினது உணர்களும் உள்வாக்கப்பட முடியாத நிலை தோன்றும்.

 

இப்போது ஆளுக்கு ஒன்றை அதில் சிறந்தது என்று கருதுவதை இங்கு முன் வைக்க முடிகிறது.

 

சமர்க்கப்பிக்கப்பட்ட ஒற்றைக் குறளிற்கு பதிலாக இன்னொன்று சிறப்பாக அமைகிறது என்று கருதும் பட்சத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முன்னைய ஒன்றை நீக்கி விட்டு அதே இடத்தில்.. சிறந்ததை சமர்ப்பிக்கலாம். இதற்கும் ஓர் சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்படும்.

 

இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்தும்.

 

மண்ணின் கண் மகிமை கொண்டோர்

மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார்.

 

 

உரை: தாய் மண்ணின் மீது சிறப்பு மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் அதற்காக தங்கள் மேன்மை பொருந்திய விலைமதிக்க முடியாத உயிரை விலையாகக் கொடுத்த தவமிருந்து பெறத்தக்கவர்கள் மாவீரர்கள்.அவர் தம் வீரமே மாவீரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை நெடுக்ஸ், ரெண்டாவதை சிக்னேச்சரில் ஏத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை நெடுக்ஸ், ரெண்டாவதை சிக்னேச்சரில் ஏத்தியுள்ளேன்.

அப்போ... குறளுக்கான உரையையும் சிக்னேச்சரில் ஏத்தி விடுங்கோ! :lol:

Link to comment
Share on other sites

வீழ்வோம் என நினைத்த பொழுது ..

உயிராயுத விழுதாகி நின்றவர் .

 

 

 

விளக்க உரை .

போராட்டத்தின் தோல்விகள் அண்மிக்கும் போதெல்லாம் தங்களின் உயிரை ஆயுதமாக்கி தடைகளை உடைத்தவர் கரும்புலிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஐந்துவரை எழுதலாம் என்றால் நிறையக்  குறள்கள் உருவாகுமே. யோசியுங்கள் நெடுக்ஸ். எதற்கு கஞ்சத்தனம்.


எண்ணித் துணிந்தனர் மண்ணுக்காய் மாவீரர்

மற்றெல்லாம் மனதில் துறந்து

 

 தம் ஆசைகளை எல்லாம் துறந்துவிட்டு மண்ணைக் காக்கவென்று துணிந்தவர்கள் எம் மாவீரர்கள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா நல்லா இருந்தது. ஆனால் குறள் சொன்னா 7 வார்த்தைகளில் இருக்கோணும் என்பது மரபு.

 

சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி கோசான்.

நானும்... அந்த வரிகளை, 7 வார்த்தைக்குள் அடக்க, முயற்சி செய்தேன்...

அர்த்தம் மாறுது. அதற்கு தனித் திறமை வேண்டும்.

 

நெடுக்ஸ்.... ஒரு ஆள், ஒரு குறள் தான் எழுத வேண்டும் என்ற விதியை, தளர்த்தினால்... நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்வம்.. மற்றும் ஆதரவை கருத்தில் கொண்டும்.. கள உறவுகள் பலர் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்கவும்.... ஒருவர் ஆற்றக் கூடிய குறள்களின் எண்ணிக்கை குறைந்தது 1 இருந்து கூடியது 5 வரை என்று விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு மேல் இந்த விதியில் தளர்வுக்கு இடமில்லை.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை நெடுக்ஸ், ரெண்டாவதை சிக்னேச்சரில் ஏத்தியுள்ளேன்.

 

ஒருவர்  ஆற்றக் கூடிய மொத்தக் குறள்களின் எண்ணிக்கை குறைந்தது 1 இல் இருந்து கூடியது 5 வரை என்று தளர்வு செய்யப்பட்டுள்ளதால் உங்கள் குறள்களை இங்கே இப்போ இணைக்க முடியும் என்பதை அறியத் தருகிறோம்.

 

மேலும்..குறள் கட்டாயம் இத்தலைப்பின் முதற்பதிவுக்குரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதை சரியாக கவனத்தில் கொள்வது அவசியம். உட்பொருள் தவறாக அமையும் பட்சத்திலும் குறள்கள் நீக்க கோரப்படலாம். அதற்கு நாங்களோ கள நிர்வாகமோ பொறுப்பல்ல. ஆற்றுபவர்கள் நிபந்தனைகளை சரியாக உள்வாங்காமையே காரணம் என்று கொள்ளப்படும்.

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனைவரினதும் ஆர்வத்துக்கும் பங்களிப்புக்கும் நன்றி. தொடர்ந்து நகர்த்திச் செல்லுங்கள். மாவீரர்.. மாவீரம்.. குறள் இயற்றி நில்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறள் - 2

 

வேங்கைகொள் களவீரம் செய்யுள் செருகில்

நீளும் பிரபஞ்ச நீட்டமேயாம்.

 

உரை:  வேங்கைகள் கொண்ட அல்லது காட்டிய கள வீரத்தை பாக்களில் அடக்கினால்.. அந்த பாக்களின் நீளம் இந்தப் பிரபஞ்ச அளவு நீளும்..!

 

(இந்த தலைப்பில் இந்த இரண்டு குறள்களையும் சமர்ப்பித்து ஓய்கிறோம். கள உறவுகள் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். நிறைய ஆக்கி நில்லுங்கள். மாவீரர்.. மாவீரம் மனங்கள் வாழ உழைத்து நில்லுங்கள்.)

Link to comment
Share on other sites

குறள் 2

பாடுவர் பரணி களிறுநின்று ஆயிர

பரணிநின் றிலனேமா வீரர்முன்

உரை

போரில் எதிரி நாட்டு படையின் ஆயிரம் ஆண்யானையை கொன்ற பெரும்வீரனை பாடுவது பரணி இலக்கியம். ஆயிரம் பரணி வைத்து பாடினாலும் ஈடாகாது தமிழீழ மாவீரனின் மாட்சிமை குன்றாத புகழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுப் புக முடியாத, இடதினுளும் புகுந்து, எதிரியை

தோற்றுப் போக வைப்பர்,  கரும்புலிகள்.

 

சிறி அண்ணா நல்லா இருந்தது. ஆனால் குறள் சொன்னா 7 வார்த்தைகளில் இருக்கோணும் என்பது மரபு.

 

காற்றுப் புகமுடியாத இடதினுளும் எதிரியை

தோற்க வைப்பர்  கரும்புலிகள்.

 

இப்ப சரியாய் இருக்கா... கோசான்.

நீங்கள் சரி என்று,  சொன்னாப் பிறகு தான்... பொழிப்புரை எழுதுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.