Sign in to follow this  
Athavan CH

பெரியார்: சில புரிதல்கள்

Recommended Posts

pandian_2200808f.jpg

எம்.எஸ்.எஸ். பாண்டியன்

 

யார் வரலாறு?

இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும்கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல்சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு.

 

கடவுளா, கல்லா?

 

மதம் சார்ந்த தொன்மங்கள் (புராணக் கதைகள்) சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண் களையும் இழிவுபடுத்தப் புனையப்பட்ட பொய்ம்மைகள், கற்பனைகள் என்ற பெரியார், அவற்றைப் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்துக்கு உட்படுத்தினார். 1924-ல் வைக்கம் கோயிலில் உள்ள சிலையை, ‘துணி வெளுக்க உதவும் சாதாரணக் கல்’ என்று விவரித்தார். இவ்வகை விமர்சனம், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

 

சுயமரியாதையை மீளப்பெறுதல்

 

மாற்றம் என்பது வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை; ஒருமுகப்பட்ட மனித முயற்சியை, தலையீட்டை அது வேண்டுகிறது. எனவே, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் இப்போது செயலாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். அதன்மூலம் இழந்துபோன சுயமரியாதையை மீளப்பெறுதல் வேண்டும். சுயமரியாதையை நாம் பெற்றுவிட்டால், சுதந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடும்; மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பது பெரியாரின் கருத்து.

 

யார் போராடுவது?

 

அநீதிக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளானவர்கள் சுயமரியாதையால் உந்தப்பட்டு, தாம் தமக்காகவே கிளர்ந்து எழும்போதுதான் விடுதலை கிடைக்கும் என்பது பெரியாரின் நம்பிக்கை. பெண் விடுதலைக்காக ஆண்கள் மட்டுமே குரல் கொடுப்பதை ஏற்காத அவர், பெண்கள்தான் அதற்கான அரசியலைத் தங்கள் கையிலெடுத்துப் போராட வேண்டும் எனக் குறிப்பிடுவதைச் சான்றாகக் காட்டலாம்: “எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?” என்றார் பெரியார்.

periyar1_2200809a.jpg

 

பெரியாரின் நவீனத்துவம்

 

தன்னுடைய சமத்துவம் அடிப்படையிலான தேசியத் தேடலுக்குப் பயன்படாத, இந்திய / தமிழ்ப் பழமை பெரியாரைப் பரிதவிக்கச் செய்யவில்லை. மாறாக, தன்னுடைய தேசியத் தேடலைப் பழமையிலிருந்து விடுத்து, எதிர்காலத்தில் நிலைகொள்ள வைத்தார். “மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது; அதை யாராலும் தடுக்க முடியாது” என்பது பெரியாரது உறுதியான நிலைப்பாடு.

 

பெரியாரின் மொழி

 

தேச உருவாக்கத்தின் மையக் கூறான மொழிபற்றிய அவரது கருத்தும் இந்தப் பகுத்தறிவு வயப்பட்ட விமர்சனத்துக்கு உட்பட்டதே. மொழி என்பது பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக, சமதர்மம், சுதந்திரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக அமைய வேண்டும். துளசி ராமாயணம் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான நூல்களைப் படிக்கவே இந்தி உதவும் என்ற வாதத்தை முன்வைத்து, பெரியார் இந்தியைத் தாக்கினார். ‘‘சொர்க்கத்துக்குப் போக இந்தி உதவலாம். ஆனால், அதற்குள் சொர்க்கம் போய்விடும்’’ என்றார். இந்தியோடு ஒப்பிடுகையில் தமிழ் சிறந்தது என்றார். எனினும், அதிலும் குறைபாடு உண்டென்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை. பகுத்தறிவுத் தளத்திலிருந்து தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. “எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை” என்றார்.

 

பகுத்தறிவு ஒரு நெடும் பயணம்!

 

மானுட விடுதலை அடிப்படையிலான தேசிய உருவாக்கம் முடிவற்றதொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந்தோறும் எதிர் கொள்ளும் என்பதை அவர் மனம் கொண்டிருந்தார். “பகுத்தறிவு என்று சொல்வது மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவை எவை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் எனத் தள்ளப்படலாம்… அதுபோலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஒருகாலத்தில், ‘ராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’என்றும் கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி: காலத்தின் சின்னம்” என்றார் பெரியார்.

 

எல்லையற்ற தேசம்

 

தேசியம் என்பது ஒரு தேடலே அன்றி, ஒரு முடிவான உருவாக்கம் அல்ல எனும் கருத்தின் அடிப்படையில்தான், பெரியார் தான் தேடிய தேசத் துக்குப் புவியியல் எல்லைகளைத் தெளிவாக வகுப்பதுபற்றி அதிக அக்கறை காட்டவில்லை. தாம் கருதியுள்ள தேசத்தில் இந்தியா விலுள்ள சூத்திரர் எல்லோருக்கும் இடமுண்டு என்று தெரிவித்தார். வருணா சிரமத்தை மறுக்கும் ஜப்பானியரும்கூட பெரி யாருக்கு திராவிடர்களே. இவ்வாறாக, அவருடைய தேசம் மொழி, கலாச்சார அடிப்படையில் புவியியல் எல்லைகளை வகுக்க மறுத்தது. எல்லைகளை மீறி ஒடுக்கப்பட்டோர் இணைந்து விடுதலை தேடுவதே அதன்கூறு!

 

ஏன் எதிர்த்தார்?

 

கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள் அனைத்தையும் ஒருசேர பெரியார் எதிர்த்தமைக்குக் காரணம், உருவாகி வந்த இந்திய தேசத்தில் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் சமமான குடியுரிமையைப் பெறுவதற்கு இவை தடையாக உள்ளன என்பது பெரியாரின் புரிதலாகும். ஒரு தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் சமமான, தற்சார்புடைய குடியுரிமைதான் அடித்தளம் என்று அவர் கருதினார்.

 

எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ‘தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம்’ கட்டுரையில் இருந்து...

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6593874.ece?homepage=true&theme=true

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • யாழ். சர்வதேச விமான நிலையத்தில்...  புல நாய்வாளர்கள்.  
  • இதைத்தான் நான் சொல்லிவருகிறேன் .... கிருபன் அண்ணாவை யாராலும் மதம் மாற்ற முடியாது  என்னையும் யாராலும் மதம் மாற்ற முடியாது  மறுவபவர்களை  எப்படி மாற்றுகிறார்கள்?  ஏன் மாறுகிறார்கள்? என்ற கேள்விக்கு நாம் விடைகாணும் மட்டும் அவர்கள் மாறிக்கொண்டுதான் இருப்பார்கள். எமது மூதையார்கால் பற்றிய அறிவின்மை  எமது மதம் என்ற பெயரில் எந்த விண்ணாணம் புடுங்கினாலும் கண்டும் காணாததுபோல்  பாவனை செய்வது .... அல்லது முஸ்லிமில் கிறிஸ்தவத்தில் இல்லையா என்று சப்பை கட்டு கட்டுவது. எமது மதம் பற்றி எந்த அறிவும் இல்லாது .... எதோ இந்த உலகமே எமது மதத்தால் வாழ்வதுபோல பில்டப்பு செய்வது. பிராமணன் என்ன முட்டால் தனம் செய்தாலும் ஏற்றுக்கொளவது.  சொந்த மதத்தவனையே சாதியை சொல்லி இல்லாத கொடுமை எல்லாம் செய்வது. போன்ற அநியாங்கள் தொடருமட்டும் ... இங்கிருந்து குலைக்க வேண்டியதுதான். ஒன்றுமே இல்லாதவன் பைபிள் என்று ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து கழுவி கழுவி ஊத்துகிறான்.  அத்தனையும் இருந்தவன்  கடுவுளையே கண்டதுபோல ஆடுகிறான்.  சி வ் ஆ (சிவா) = என்றால் இல்லாதது என்று பொருளாம்  இல்லாததால்தான் இந்த உலகம் இயங்குகிறது சிவாதான் மூலம் என்று சைவர்கள் என்றோ சொன்னார்கள்.  அறிவியலின் உச்சமாக வரப்போகும் குவாந்தோம் தொழிலநுட்பம் (quantum Technology)  இல்லாததன் செயல்பாடே இருப்பவையின் அசைவு என்கிறது.  எல்லாம் இருக்கிற பிரபஞ்சத்தை விட  ஒன்றுமே இல்லாத ப்ளாக் கோலின் (black hole)  சக்தி ஆபூர்வமானது என்கிறார்கள். 
  • யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘படைவீரர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. நாட்டை பாதுகாக்கும் யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் குறித்து தேர்தல் மேடைகளில் மக்களுக்கு கூற வேண்டிய கதைகள் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம், யுத்த வெற்றி அல்லது யுத்த வீரன் உள்ளிட்டவற்றை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யுத்தம்-குறித்து-பேச-அரச/
  • திடீர் திருப்பம்: குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது துருக்கி வடக்கு சிரியாவில் குர்திஷ் மீதான எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவதற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். பென்ஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்கு இடையே அங்காராவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் ஐந்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும், துருக்கியின் எல்லையில் இருந்து குர்திஷ் போராளிகள் பின்வாங்க வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. இந்த நிலையில் குர்திஷ் தலைமையிலான போராளிகளை பின்வாங்கச் செய்வதற்கு அமெரிக்கா உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி கடந்த வாரம் குர்திஷ் போராளிகள் மீதான தாக்குதலைத் தொடங்கியது. மிலேச்சத்தனமாக இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது. துருக்கியின் எல்லையில் இருந்த குர்திஷ் மக்களை விரட்டுவதையும், அப்பகுதியில் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை மீளக்குடியமர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு துருக்கி தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகளை துருக்கியின் எல்லைப் பகுதியிலிருந்து வெளியேற்றிய பின்னரே இந்த எல்லை தாண்டிய தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலை நிறுத்துமாறும் வலியுறுத்தின. எனினும் இவற்றை செவிமடுக்காத துருக்கி, தாக்குதலை தொடர்ந்தது. இந்நிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றியளித்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திடீர்-திருப்பம்-குர்தி/
  • சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் – 637 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு! சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது. இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி ஜனாதிபதி, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என கூறி வருகின்றார். இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி ஜனாதிபதி சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி கடந்த 9-ம் திகதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. http://athavannews.com/சிரியாவின்-வடக்கு-பகுதிய/