Jump to content

புரிவதில்லை


Recommended Posts

மழைத்துளியின் சோகங்கள்

மண்ணுக்குத்தெரிவதில்லை

மழலையின் இனிய மொழி

மற்றவர்க்குப் புரிவதில்லை

மலர்களின் வாசம் தன்னை

மலர்க்கூந்தல் அறிவதில்லை

மங்கையின் மன ஆழத்தை

மன்மதனும் அறிந்ததில்லை

இதயத்தின் உணர்வுகளை

இதயங்கள் உணர்வதில்லை

தந்தையின் சுமைகள்

இளமையில் புரிவதில்லை

தாயின் அன்புதன்னை

தானிருக்கும்போது புரிவதில்லை

கண்ணீரின் ஈர வலியது

கண்களுக்குப்புரிவதில்லை

வானவில்லின் வர்ண ஜாலம்

சந்திரனுக்குத்தெரிவதில்லை

உடலின் முடிவுதன்னை

உணர்வுக்குப்புரிவதில்லை

காலனின் வருகைதன்னை

காலத்துக்கும் தெரிவவதில்லை

காதலின் வலிகள்

காமுகர்க்குப்புரிவதில்லை

நட்பின் இலக்கனம்

நயவஞ்சகர்க்குப்புரிவதிலை

இலக்கியனின் உணர்வுகள்

இங்கு உங்களுக்குப்புரிவதில்லை :wink:

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ இந்த

கவிதை புரிந்த அளவுக்கு..

இலக்கியனின் கடைசி இரண்டு வரியும்

புரியலைப்பா..

இலக்கியன் சார்

யார் அந்த..

உள்ளங்கவர் கள்ளி. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லைப் புரியவில்லை என்று எல்லாம் புரிந்து வைத்திருக்கிறீர்கள் இலக்கியன் வாழ்க வளர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னமோ இந்த

கவிதை புரிந்த அளவுக்கு..

இலக்கியனின் கடைசி இரண்டு வரியும்

புரியலைப்பா..

இலக்கியன் சார்

யார் அந்த..

உள்ளங்கவர் கள்ளி. :wink:

அது எனக்கும் புரியவில்லை :wink:

Link to comment
Share on other sites

என்ன எழுதியிருக்கிறோம் என்று வாசித்து விடயங்களைப் புரியாவிட்டாலும் நாங்கள் சொல்வது ஆகா கவிதை அருமை!, நன்றாக உள்ளது!, கருத்துக் குழப்பங்கள் இருந்தாலும் விவாதிப்பதில்லை..... இந்த நிலையால் இலக்கியன் இலக்கியத்திற்கு இப்படைப்புக்களத்தில் கிடைக்கும் மதிப்பால் இதயம் நொந்திருக்கிறார்போலும் அதுதான் அவருடைய இலக்கிய உணர்வுகள் காயப்படுகின்றன. யாருமே புரிகிறார்கள் இல்லையே என்று தவிக்கிறார் என்று நினைக்கிறேன் இலக்கியன் அப்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழைத்துளியின் சோகங்கள்

இதயத்தின் உணர்வுகளை

இதயங்கள் உணர்வதில்லை

தந்தையின் சுமைகள்

இளமையில் புரிவதில்லை :D:lol:

தாயின் அன்புதன்னை

தானிருக்கும்போது புரிவதில்லை :cry:

கண்ணீரின் ஈர வலியது

கண்களுக்குப்புரிவதில்லை :cry: :cry:

நட்பின் இலக்கனம்

நயவஞ்சகர்க்குப்புரிவதிலை :cry: :twisted: :twisted:

வாழ்த்துக்கள் கவிஞரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியன் சார் உங்கள் கவிதையில் எதையோ சொல்ல நினைக்கிறிர்கள் நினைப்பதை எழுத முடியாமல் தவிப்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழைத்துளியின் சோகங்களை

மண் உள்வாங்கிக் கொள்கிறது

மழழையின் இனிய மொழி

தாய்மைக்கு புரிகின்றது

மலர்களின் வாசத்தால்

மலர்க்கூந்தல் மணக்கிறது

மங்கையின் மனமோகம்

மன்மதனும் அறிந்து கொள்வான்

இதயத்தின் உணர்வினால்

இதயங்கள் துடிக்கின்றன

தந்தையின் சுமைகள்

தனையனவன் புரிந்து கொள்வான்

தாயின் அன்புதனை

தானாகவே புரியும்மனம்

கண்களில் உள்ள ஈரம்

கண்கள் மட்டுமே அறியும்

........

...

இலக்கியனின் கவிவளம்

எமக்கெல்லோருக்குமே தெரியும்

ஏனிந்த சோகம் - எமக்கு

தெரிந்தால் என்ன பாவம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...

இலக்கியனின் கவிவளம்

எமக்கெல்லோருக்குமே தெரியும்

ஏனிந்த சோகம் - எமக்கு

தெரிந்தால் என்ன பாவம்??

ம்ம்..ம்ம்.. நீங்களும் அறியாம விடமாட்டீங்கபோல. உங்களுக்கும் நல்லாக் கவி வாறமாதிக் கிடக்கு.

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ இந்த

கவிதை புரிந்த அளவுக்கு..

இலக்கியனின் கடைசி இரண்டு வரியும்

புரியலைப்பா..

இலக்கியன் சார்

யார் அந்த..

உள்ளங்கவர் கள்ளி. :wink:

நன்றி விகடகவி உங்கள் கருத்துக்கு :lol:

அந்தக்கடசிவரி உவமானத்துக்குதான் சொன்னேன் :wink:

ஒரு கள்ளிக்கும் சொல்லவில்லை :lol:

Link to comment
Share on other sites

புரியவில்லைப் புரியவில்லை என்று எல்லாம் புரிந்து வைத்திருக்கிறீர்கள் இலக்கியன் வாழ்க வளர்க

நன்றி தமிழன்பு உங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

என்ன எழுதியிருக்கிறோம் என்று வாசித்து விடயங்களைப் புரியாவிட்டாலும் நாங்கள் சொல்வது ஆகா கவிதை அருமை!, நன்றாக உள்ளது!, கருத்துக் குழப்பங்கள் இருந்தாலும் விவாதிப்பதில்லை..... இந்த நிலையால் இலக்கியன் இலக்கியத்திற்கு இப்படைப்புக்களத்தில் கிடைக்கும் மதிப்பால் இதயம் நொந்திருக்கிறார்போலும் அதுதான் அவருடைய இலக்கிய உணர்வுகள் காயப்படுகின்றன. யாருமே புரிகிறார்கள் இல்லையே என்று தவிக்கிறார் என்று நினைக்கிறேன் இலக்கியன் அப்படியா?

என் உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் ஒன்றுபடுகின்றது :lol: உண்மையான கருத்து சொன்னீர்கள் இந்தகவிதையில் சில முறன்பட்டகருத்துக்கள் வரும் என எதிர்பார்த்தேன் :idea: ? ஆனால்வரவில்லை :wink: :lol:

Link to comment
Share on other sites

இலக்கியன் சார் உங்கள் கவிதையில் எதையோ சொல்ல நினைக்கிறிர்கள் நினைப்பதை எழுத முடியாமல் தவிப்பது தெரிகிறது.

நன்றி கறுப்பி கருத்துக்கு

அதை சொல்லிவிட்டேன் :wink: :lol:

Link to comment
Share on other sites

மழைத்துளியின் சோகங்களை

மண் உள்வாங்கிக் கொள்கிறது

மழழையின் இனிய மொழி

தாய்மைக்கு புரிகின்றது

மலர்களின் வாசத்தால்

மலர்க்கூந்தல் மணக்கிறது

மங்கையின் மனமோகம்

மன்மதனும் அறிந்து கொள்வான்

இதயத்தின் உணர்வினால்

இதயங்கள் துடிக்கின்றன

தந்தையின் சுமைகள்

தனையனவன் புரிந்து கொள்வான்

தாயின் அன்புதனை

தானாகவே புரியும்மனம்

கண்களில் உள்ள ஈரம்

கண்கள் மட்டுமே அறியும்

........

...

இலக்கியனின் கவிவளம்

எமக்கெல்லோருக்குமே தெரியும்

ஏனிந்த சோகம் - எமக்கு

தெரிந்தால் என்ன பாவம்??

அடடா கோபிதா நீங்களும் கவிதை எழுதலாம் போல இருக்கிறது எழுதவும் உங்கள் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காலனின் வருகைதன்னை

காலத்துக்கும் தெரிவவதில்லை

காதலின் வலிகள்

காமுகர்க்குப்புரிவதில்லை

உண்மையான வரிகள்- இலக்கியன்! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லை என்பதை வடிவாக புரியவைத்து இருகீறிங்கள் :wink: வாழ்த்துக்கள் இலக்கியன்.

Link to comment
Share on other sites

காலனின் வருகைதன்னை

காலத்துக்கும் தெரிவவதில்லை

காதலின் வலிகள்

காமுகர்க்குப்புரிவதில்லை

உண்மையான வரிகள்- இலக்கியன்! 8)

நன்றி வர்ணன் உங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

புரியவில்லை என்பதை வடிவாக புரியவைத்து இருகீறிங்கள் :wink: வாழ்த்துக்கள் இலக்கியன்.

உணர்வுகள் புரிந்து கருத்து தந்த உங்களுக்கு நன்றி தீபா

Link to comment
Share on other sites

இலக்கியன் கவிதையும், அவரின் கவிதையில் இருந்தே பதிலை தந்த கோபிதா இருவருக்கும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

காலனின் வருகைதன்னை

காலத்துக்கும் தெரிவவதில்லை

காதலின் வலிகள்

காமுகர்க்குப்புரிவதில்லை

உண்மையான வரிகள்- இலக்கியன்! 8)

நன்றி வர்ணன் உங்கள் கருத்துக்கு

புரியவில்லை என்பதை வடிவாக புரியவைத்து இருகீறிங்கள் :wink: வாழ்த்துக்கள் இலக்கியன்.

நன்றி தீபா எனக்கு புரிந்ததை புரியாத கவிதையாக்கிவிட்டேன் :mellow:

இலக்கியனின் கவிதை என்று வர வேண்டும்

நன்றி உங்கள் கருத்துக்கு அப்படியே மாற்றி வாசிப்போம் :rolleyes:

Link to comment
Share on other sites

அருமையான கவிதை இலக்கியன் வாழ்த்துக்கள்

ஈழவனின் கருத்துக்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.