• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

ஜெமினி கணேசன் பிறந்தநாள்: நவம்பர் 17 - காதல் மன்னன் பிறந்த கதை

Recommended Posts

gemini_2203597g.jpg

பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி

 
gemini1_2203596g.jpg
'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி
 
திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’.
 
கேஸ்டிங் உதவியாளர்
 
சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை – மதுரை கலாச்சாரங்கள் சங்கமித்த புதுக்கோட்டையிலிருந்து. ஜெமினியின் இயற்பெயர் ராமசாமி கணேசன். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன் சொந்த ஊரில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுப் பட்டப் படிப்புக்காக மதராஸப் பட்டணம் வந்தார். சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் இடம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட மாணவராக இருந்ததால், அங்கே பாதிரியார்களின் கவனதுக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் ஜெமினி. படிப்பு முடிந்ததும் அங்கேயே சில மாதங்கள் பயிற்சி ஆசிரியராக வேலை செய்தார். ஏனோ ஆசிரியர் பணி அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனைச் சென்று சந்திக்கும்படி சிபாரிசுக் கடுதாசு ஒன்று வீட்டிலிருந்து தபாலில் வந்து சேர்கிறது. கடுதாசியை வாங்கிப் பார்த்த வாசன் வாஞ்சையுடன் அவரை கேஸ்டிங் உதவியாளராக நியமிக்கிறார். 1940-ல் ஜெமினியில் பணியில் சேர்ந்த ஜெமினி கணேசன் அதன் பிறகு ஸ்டூடியோவின் எல்லாத் தளங்களிலும் சுதந்திரமாக உலா வந்தார்.
 
‘முதலாளியின் உறவுக்காரப் பையன்’ என்ற அடைமொழியோடு வலம் வந்தவரைத் தன் கேமரா கண்களால் பார்த்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த ஆர். ராம்நாத்.
 
தயாரிப்பு நிர்வாகியாக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனப் புகழ்பெற்ற ராம்நாத், மிஸ் மாலினி என்னும் படத்தில் கதாநாயகனின் உதவியாளராக ஜெமினி கணேசனை அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுடையது. இப்படத்தைக் கொத்தமங்கலம் சுப்பு இயக்கிக் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுதந்திர இந்தியாவில் வெளியான முதல் சமூகப் படமான மிஸ் மாலினி 1947 செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகி, தரமான படம் என்ற பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது. ஜெமினி நிறுவனத்துக்காக ராம்நாத் தயாரித்த ஜெமினி கணேசனின் அறிமுகப் படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்களோடு ஜெமினியின் இயற்பெயரான ராமசாமி கணேசன் என்பதன் சுருக்கமாக ‘ஆர்.ஜி’என்று டைட்டிலில் போடப்பட்டது.
 
காதல் மன்னன் பிறந்தார்
 
இதன் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவருக்கு, 1952-ம் ஆண்டு கே. ராம்நாத் மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ராம்நாத் இயக்கத்தில் 1952-ல் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, அழகான இளம் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். அது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் புகழ்பெற்றார். இதற்கு நேர்மாறாக வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
 
ஜெமினியின் தொடக்க காலத் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம், அடுத்த ஆண்டே வெளியான ‘மனம்போல மாங்கல்யம்’. முப்பத்து மூன்று வயதே நிரம்பியிருந்த ஜெமினி கணேசன் கவனம்பெறத் தொடங்கிய நான்காவது படத்திலேயே அவருக்கு இரட்டை வேடம் கிடைத்தது ஓர் அசாதாரணமான வாய்ப்பு. அந்நாள் தெலுங்குத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட ‘வேம்பட்டி’ சதாசிவ பிரம்மம் எழுதிய முழுநீள சமூக நகைச்சுவை திரைக்கதையைத் தமிழில் எழுதியவர் உமாசந்திரன். ஒரே தோற்றம் கொண்ட இருவரில் தன் காதலன் யார் எனத் தெரியாமல் பழகுகிறார் கதாநாயகி. அந்த இருவரில் ஒருவர் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தவர். கதை எத்தனை கலாட்டாவாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது அல்லவா? இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்னுணர்ச்சி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் ஜெமினி கணேசன். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசன் என்று முதன்முதலாக டைட்டில் போடப்பட்டது. படம் மிகப் பெரிய வெற்றிபெற்று ஜெமினியைக் காதல் மன்னனாக உயர்த்தியது. ஜெமினியின் சொந்த வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் படத்தில் சாவித்திரியுடன் நடித்தபோது ஏற்பட்ட நட்பே பின்னர் மெல்ல மெல்ல காதலாகக் கனிந்து திருமணம் வரை வந்து நின்றது. பாசமலரில் இந்த ஜோடி காதலித்தபோது அது நிஜமென்றே ரசிகர்கள் நம்பினார்கள்.
 
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் எனத் தான் ஏற்று மிளிராத கதாபாத்திரம் இல்லை என்று சாதித்துக் காட்டினார். ஜெமினியைக் காதல் மன்னனாகப் பார்க்கும் ரசிகர்கள் சிவபெருமான் வேடம் ஏற்ற அந்நாளின் கதாநாயர்களில் ஜெமினிக்கே அது கச்சிதமாகப் பொருந்தியதாகச் சொல்கிறார்கள். ஜெமினி இறுதிவரை இயக்குநர்கள் விரும்பும் நடிகராக இருந்தார். காரணம் தனது நடிப்புப் பொறுப்பை இயக்குநர்களிடம் விட்டுவிடுவார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’படத்தில் முதுமை பற்றி ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற பாடலை எழுதியிருப்பார் வாலி. ஆனால் பழுத்த முதுமையில் இயற்கையுடன் கலந்த ஜெமினி கணேசன் இன்றும் இளமையான ‘ காதல் மன்னனாகவே’ ரசிகர்களின் மனதில் படிந்திருக்கிறார். அதற்கு அவரது நடிப்பாளுமையை மீறிய மற்றொரு காரணமும் உண்டு. தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத கலைஞர்களாக இருக்கும் ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரது குரலும் ஜெமினியின் குரலாகவே தமிழ் ரசிர்கள் மனதில் பதிந்துவிட்டதுதான் அந்தக் காரணம்.
 

Share this post


Link to post
Share on other sites

ஜெமினிகணேசனின் புத்திசாலித்தனம்!

 

ஜெமினி பிறந்தநாள் - நவ.,17

 

சினிமாவில் ஏராளமாக சம்பாதித்த பல நடிகர், நடிகைகள் அந்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்ளாமல், கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்தும், கடன்பட்டு கஷ்டப்பட்ட வரலாறு பல உண்டு. அந்த வரிசையில், அக்கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், கடைசி காலத்தில் மருத்துவமனை செலவுக்கு கூட பணமின்றி சிரமப்பட்டார். ஆனால், இதற்கு விதிவிலக்கு ஜெமினி கணேசன்!
சினிமாவில் தான் சம்பாதித்ததை ஆடம்பரமாக வீண் செலவு செய்யாமல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் ஒன்பதரை கிரவுண்டு இடம் வாங்கி, அதில் பங்களா கட்டி, தன் ரசிகர்கள் அனைவரையும் அழைத்து, கிரகப்பிரவேசம் செய்தார்.
புதுமனை விழாவிற்கு காமராஜர், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி வந்து வாழ்த்தினர். தற்போது, இந்த பங்களாவின் பின்புறம், அவரின் மகள் டாக்டர் கமலாவின் ஜி.ஜி.மருத்துவமனை உள்ளது.

இதே போன்று ஒருமுறை, பாசமலர் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற ஜெமினி, 'ரெட்லிஞ்ச்' என்ற பெயரில், நான்கு ஏக்கர் பரப்பளவில், தோட்டத்தோடு கூடிய விஸ்தாரமான பெரிய பங்களாவை பார்த்தார். அதன் அழகில் மயங்கியவர், அதுக் குறித்து விசாரித்தார். அது, இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல மதுபான தயாரிப்பாளரான ஹேவார்ட்ஸ் என்பவருக்கு சொந்தமானது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர் வாங்கிப் போட்டிருந்த பங்களாவை, இந்தியா விடுதலை அடைந்ததும், ஒருவரின் நிர்வாக பொறுப்பில் விட்டு, இங்கிலாந்து சென்று விட்டார். அந்த பங்களாவை விற்கப் போவதாக அறிந்த ஜெமினி, அதை எப்படியும் வாங்கி விட முடிவு செய்தார்.

கருமுத்து தியாகராஜ செட்டியார், டி.வி.எஸ்., நிறுவனத்தார் அந்த பங்களாவை வாங்க முயல்வதாக கேள்விப்பட்டார். தியாகராஜ செட்டியார், ஹேவார்ட்சுக்கு நெருக்கமான நண்பர் என ஜெமினிக்கு தெரியும். அதனால், பங்களாவை தியாகராஜ செட்டியாருக்கு விற்றுவிடுவாரோ என்ற பயம் ஜெமினிக்கு இருந்தது. அதனால், சமயோசிதமாக ஒரு திட்டத்துடன் தியாகராஜ செட்டியாரை சந்தித்து, 'கொடைக்கானலில் எனக்கு ஒரு நல்ல பங்களா வாங்க வேண்டும்...' எனச் சொன்னவுடன், 'அதற்கென்ன ஏற்பாடு செய்துட்டா போச்சு...' என்றார் செட்டியார். உடனே, 'உங்க நண்பர் ஹேவார்ட்ஸ் தன்னுடைய ரெட்லிஞ்ச் பங்களாவை விற்கப் போவதாக கேள்விப்பட்டேன்; அதை, விலை பேச நீங்க தான் ஏற்பாடு செய்யணும்...' என்றார்.

ஜெமினி இப்படி உதவி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை தியாகராஜ செட்டியார். அதனால், அவர், 'நானே வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; இப்ப நீங்க விரும்புறதால கண்டிப்பா ஏற்பாடு செய்கிறேன்...' என்று கூறி, ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதவும் செய்தார்.
ஆனால், தியாகராஜ செட்டியாரிடம் கேட்டுக் கொண்டு விட்டோமே என அசால்டாக இல்லாமல், ஜெமினியும் தன் பங்கிற்கு ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம்:
திரு ஹேவார்ட்ஸ் அவர்களுக்கு, கொடைக்கானல் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த போது, உங்கள் ரெட்லிஞ்ச் பங்களாவை பார்த்தேன். அதை நீங்கள் விற்க இருப்பதாக கேள்விப்பட்டேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த பங்களாவை நானே வாங்க ஆசைப்படுகிறேன்; நீங்கள் விற்கும் பட்சத்தில் எனக்கே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
ஜெமினி கணேசன்.

அதோடு நிற்காமல், பின்குறிப்பாக, 'இவ்வளவு அழகான பங்களாவை விற்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? உங்களிடத்தில் நானிருந்தால் கை நழுவி போக விடவே மாட்டேன்...' என்று எழுதியிருந்தார்.
சில நாட்களுக்கு பின், விற்பனைக்கு பொறுப்பேற்றிருந்த ஜப்பார் என்பவரை பார்க்க சென்றார் ஜெமினி. 'நீங்கள் தான் ஜெமினி கணேசனா...' என்று கேட்டு, 'என்ன விலை கொடுப்பதாக இருக்கிறீர்கள்...' என்று கேட்டார் ஜப்பார்.
'நீங்கள் மூன்று லட்சம் சொல்வதாக கேள்விப்பட்டேன்; இதுவரை அதிகபட்சமாக கூறப்பட்ட விலையை சொன்னால் நான், என் விலையை கூறுகிறேன்...' என்று, அவர் பக்கமே கேள்வியை திருப்பினார்.
அவர் சிரித்தபடி, 'ஒரு லட்சம்...' என்றார்.

உடனே ஜெமினி, 'என் விலை ஒரு லட்சத்து பத்தாயிரம்...' என்று கூறியவுடன், அவர் ஜெமினியின் கையை குலுக்கியபடி, 'பங்களாவை உங்களுக்கே கொடுக்க முடிவு செய்து விட்டேன்...' என்றார். உடனே பத்தாயிரம் ரூபாய் காசோலையை முன் பணமாக கொடுத்து விட்டார் ஜெமினி.
அதை வாங்கிக் கொண்டவர், புன்னகையுடன் ஜெமினியிடம் ஒரு தந்தியை காண்பித்தார். அது, ஹேவார்ட்ஸ் அனுப்பியது.
அதில், 'என்ன விலை கொடுத்தாலும் பங்களாவை, நடிகர் ஜெமினி கணேசனுக்கே கொடுத்து விடுங்கள்...' என்று இருந்தது. அதை படித்த ஜெமினி, ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள், காசோலையை காட்டி, 'இந்த பத்தாயிரத்துக்கே கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்; நான் ஒரு வியாபாரி. அதனால் தான் விலை பேசிய பின், தந்தியை காட்டினேன்...' என்றார்.

ஜெமினி வாயடைத்து போனார்.
இது, 1961ல் நடந்தது. இன்று அந்த பங்களா, பல நூறு கோடி ரூபாய் பெறும். கொடைக்கானல் வரும் சுற்றுலாவாசிகள் மற்றும் ரசிகர்கள் இந்த பங்களாவை, 'ஜெமினி பங்களா' என்று ஆர்வமாக நின்று பார்த்து செல்வதை, இன்றும் காணலாம்.

* 'தவறு செய்யாத மனிதர்களே கிடையாது; ஆனால், தன் தவறை மறைக்காமல் நேரிடையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல்காரர் என் அப்பா...' என்று, ஜெமினி - சாவித்திரி மகன் சதீஷ், பெருமையுடன் கூறுகிறார்.

* விடியற்காலை, 4:30 மணிக்கு எழுந்து, தானே சமையலறை சென்று, காபி போடும் ஒரு சராசரி குடும்பத்தலைவராக திகழ்ந்தார்.
* காய்கறிகளை பொறுக்கி வாங்குவதிலிருந்து, அதை நறுக்கி சமைக்கவும் தெரிந்தவர்.
* எதையும் வித்தியாசமாக ஆராய்பவர்; ராமாயணத்தை, ராவணன் கோணத்தில் நின்று சிந்திக்கும் மனிதர்.
* 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்...' என்று அடிக்கடி கூறுவார்.
* ஜெமினி சிறுவனாக இருக்கும் போது, பள்ளி நாடகத்தில் குட்டி கிருஷ்ணன் வேடத்தில் பாடி, நடித்தாராம். 'அன்று, குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை, நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்து விட்டது விதி...' என்று கூறிய ஜெமினி, 'காதல் மன்னன் என்ற பட்டப்பெயரை கேட்டாலே, மனதில் வெறுப்பு வருகிறது...' என்பார்.

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22709&ncat=2

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • வாழ்த்துகள், நல்ல தொடக்கம்   
  • ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆரம்பித்து வைத்தனர். அதன்பின்னர் தொடர்ந்து இரவு பகலாக கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் டுபாயில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கட்டுமானங்கள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து, நினைவிட பணிகளை செப்டம்பரில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://athavannews.com/ஜெயலலிதா-நினைவிட-கட்டுமா/
  • கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கை திட்டதிற்கு உலக வங்கி கடனுதவி கங்கை நதியைப் புதுப்பிப்பதற்கு முற்படும் ‘நமாமி கங்கே’ திட்டத்திற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கைநதி மாசுபடுவதைத் தடுக்கவும், 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நதிப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என கூறப்படுகின்றது. 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் 381 மில்லியன் கடன் மற்றும் 19 மில்லியன் டொலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் ஜுனைத் அகமட், அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் கங்கையைப் புதுபிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்துள்ளது என கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அடர்த்தியை கொண்ட கங்கை நதிப் படுகையில் உருவாக்கப்படுகிறது. ஆனால் கங்கை நதி இன்று மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அது அதன் தரத்தையும், நீரோட்டங்களையும் பாதிக்கிறது. கங்கையில் மாசுபாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை நதி மற்றும் அதன் துணை நதிகளில் அருகில் உள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரிலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/கங்கையை-சுத்தப்படுத்தும/
  • பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மோதலில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளாத 1967ஆம் ஆண்டு எல்லைகளில் எந்த மாற்றங்களையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். இது இஸ்ரேலுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும்’ என கூறினர். பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947ஆம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967ஆம் நடந்த 6 நாள் போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது. சர்வதேச நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதிகளில், யூத மதத்தைப் பின்பற்றும் தங்கள் நாட்டவர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது. சர்வதேச சட்டம், மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் இரண்டையும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களாகக் கருதுகிறது மற்றும் யூத குடியேற்றத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. இந்த ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய யூதக் குடியிருப்புகள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என உலக நாடுகள் கூறி வந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றது. https://athavannews.com/பாலஸ்தீனிய-பிரதேசங்களை-இ/