• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

நேர்காணல்- குழந்தை ம.சண்முகலிங்கம்: நாடகமே வாழ்க்கை

Recommended Posts

san_CI.png

மேற்குறித்த நாடகத்தனமான தலைப்பு உங்களைப் பிழையாகவழி நடத்த அனுமதிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் நாடகஉலகின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ”குழந்தைஎன்ற பெயரில் அறியப்படும் குழந்தை சண்முகலிங்கம்அவர்கள் பலருக்கு 83 வயதாகும் ஒரு முதியவர்.

நாடகம் பற்றிய புரிதல்கள் அற்ற வேறு பலருக்கு அவர்ஆரவாரமற்ற தன்னடக்கம் நிரம்பிய ஒருவர்உண்மையிலும் குழந்தை சண்முகலிங்கம் என்ற பெயர்இலங்கைத் தமிழ் நாடக உலகுடன் ஒன்றி விட்ட பெயர்இலங்கைத் தமிழ் நாடக உலகின் கடந்த தசாப்தங்களைஅவரின் பெயரை விட்டு விட்டுப் பேசமுடியாதுபுகழ்ச்சியையோ விளம்பரத்தையோ விரும்பாத அவர் இந்தநேர்காணலை ஏற்றுக்கொண்டிருந்தார்.

 

எப்படி நீங்கள் “குழந்தை”    என்னும் வித்தியாசமானதொரு “செல்லப்பெயரை” பெற்றுக்கொண்டீர்கள்?

எனது குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள்அவர்களுள் நானேஇளையவன்.  அதுமட்டுமல்ல எனது அம்மா மற்றும்அப்பாவின் சகோதர்களின் குடும்பத்தில் இருந்தபிள்ளைகளிலும் நானே சிறியவன்.  இதனால் குடும்பத்திலும்உறவினர்களிடையேயும் நான் குழந்தையானேன்எனதுபெயரும் அப்படியே நிலைத்துவிட்டது.    அதுமட்டுமல்லவெட்கமும் முன்னுக்குப்பாயும் குணமுமற்று அம்மாவின்சேலையைப் பிடித்துக் கொண்டு திரியும் “குழந்தை”யாகவும்இருந்தேன்.

 

நாடக உலகத்திற்குள் எப்படி இணைந்தீர்கள்?

நாடக உலகத்துக்குள் நான் வந்தது உண்மையிலும் ஒருவிபத்து.  இன்னும் சொல்லப்போனால் நாடக உலகத்துள்வலுக்கட்டாயமாக நான் தள்ளப்பட்டேன் என்றுதான்கூறவேண்டும். நான் முன்பு கூறியது போல அம்மாவின்செல்லமாக குழந்தையாக இருந்தேனே தவிர மற்றக்குழந்தைகளுடன் வெளியே சென்று விளையாடுபவனாகஇருக்கவில்லை.  எனக்கு 18 வயதான போது இதற்குமேலும் பொறுக்க முடியாது என நினைத்து என் அம்மாதிருநெல்வேலியில் இருந்த இந்து இளைஞர் (YMHA)மன்றத்தில் என்னை வலுக் கட்டாயமாக சேர்த்துவிட்டார்கள்.  நான் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.  இந்து இளைஞர்மன்றத்தில் கூட  ஆர்பாட்டம் எதுவுமில்லாமல் அடக்கமாகத்தான் இருந்தேன்.  ஒரு நாள் சங்கத்தின்செயலாளர் என்னை நாடகம் ஒன்றில்  நடிக்கக்  கேட்டபொழுது பெரியவர்களுக்கு மறுப்பு சொல்லாத குணம்காரணமாக அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள நேர்ந்ததுஎனக்கு உண்மையிலும் விருப்பமில்லாமல் தான் அதில்நடிக்க நேர்ந்தது.  என்ன நடந்ததுவென்றால் எமது அயல்வீடுகளுக்கு பால் கொண்டு வரும் ஒரு முதியவர்பாற்கலசத்தைக் கொண்டு வரும்படி நடுங்கும் குரலொன்றை எழுப்புவார்.  நானோ அவரது குரலை அங்கதத்துடன்மறுபடியும் எழுப்பிக்காட்டுவேன்.  இதனைச் சங்கச்செயலாளர் கேட்டிருக்கிறார்.  இதனை வைத்துக் கொண்டுஅவர் எனக்கு நடிக்க வருமென்று முடிவு செய்து விட்டார்பாற்காரரின் குரலை அங்கதமாக  எழுப்பிக் காட்டுவதை நான்ஒருபோதும் நடிகனாகும் நோக்கத்துடன் செய்ததில்லை.சுருங்கச் சொல்வதானால் எனது சிறுபிள்ளைத்தனமானபால்காரச் சுப்பையா அம்மான் போல் குரல் எழுப்பியசெயற்பாடு என்னை நிரந்தரமாகவே நாடக உலகத்துக்குள்கொண்டுவந்து விட்டது.

 

நாடகத்துறைக்குள் வந்ததும் நீங்கள் இன்னும்ஆர்வத்துடன் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியிருப்பீர்கள்இல்லையா?

உண்மையிலும் இல்லை.  நான் வாழ்க்கை என்னை எப்படிஎடுத்துக் சென்றதோ அதன் வழி சென்றேன்.  வாழ்க்கைஎன்னை அரங்கச் செயற்பாடுகளினுடாக இழுத்துச் சென்றதுஎன்று தான் கூறுவேன்.  நான் ஒரு போதும் பெரியஇலட்சியங்களுடன் இருக்கவில்லை.  வாழ்க்கையின்ஓட்டத்துடனும் திருப்புதல்களுடனும் இசைந்துசென்றிருக்கிறேன். அவ்வளவுதான்எனது வாழ்க்கையில்நடந்தவை எல்லாம் நடக்கவிருந்து நடந்தவைதான்எதனையும் நான் திட்டமிட்டுச் செய்யவில்லை

 

கொஞ்சம் கூட  நாடக துறைசம்பந்தப்பட்டதூரநோக்கோடு அல்லது ஆர்வத்தோடு ஒருசெயலையும் நீங்கள் செய்யவில்லையா?

நான் அவ்வாறு நடந்து கொண்டதாக  எனக்கு ஒரே ஒருசம்பவம் மட்டுமே  நினைவில் இருக்கிறது.

நான் எனது .பொ. உயர்தரச் சோதனைகளைச்  சரியாகச்செய்யவில்லை.  இந்து இளைஞர் மன்றத்தில் சில காலம்இருந்த பின்னர் அம்மா என்னைப் பட்டதாரிப் படிப்புக்காகஇந்தியாவுக்கு அனுப்பினார்கள்.  அப்பொழுதும் கூடவிருப்பம் இல்லாமல் தான் போனேன்அக்காலத்தில்சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாடகங்களை ஒழுங்குசெய்வதிலும் நெறியாள்கை செய்வதிலும் இந்தியநாடகவியலாளரும் திரைப்பட நடிகருமான சோ.ராமசாமி அவர்கள் மும்முரமாக இருந்தார்கள்அவர் எமது சகமாணவர்குழுவில் ஒருவராகவும் இருந்தார்.  ஆனாலும் நான்அங்கேயும் கூட நாடக முயற்சிகளில் இணையும்ஆர்வமற்றவனாகத் தான் இருந்தேன்.

பிற்பாடு 1957 ம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பி வந்துசெங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியர் ஆனேன்அத்தோடு இந்து இளைஞர் மன்றத்திலும் மீள இணைந்துகொண்டேன்ஒரு முறை இந்து இளைஞர் மன்றத்தில்அக்காலத்தில் புகழ் பெற்று இருந்த பரத நாட்டிய  நர்த்தகிஒருவர் நடன அளிக்கை செய்ய வரவிருந்தார்.  அவரதுஅளிக்கைக்கான மேடையைத் தயார் செய்யும் பொறுப்புஎங்கள் சிலரிடம் விடப்பட்டது.  நாங்களும் நூலகத்தில் இருந்த மேசைகளை ஒன்றாக இணைத்து ஒருமேடையைத் தயார் செய்தோம் .  இந்த மேசைகள் சிலஆட்டம் கண்டிருந்தன.  சில நெளிந்திருந்தன.  சிலஉயரத்தில் சமமற்றிருந்தன.  எல்லாவற்றையும் ஒன்றாகக்கட்டி மேடையாக்கி இருந்தோம்.  கனதியான அந் நடனநர்த்தகி அம் மேடையில் ஆடும் போது எங்கே மேடை உடைந்து, விழுந்து விடுவாரோ எனப் பயந்து படபடத்தநெஞ்சைப் பிடித்தபடி மேடையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்நல்ல வேளை அப்படி எதுவும்நிகழவில்லை.  

 இதனை ஏன் சொல்கிறேன் என்றால் அந்நடன நிகழ்வுக்கு தமிழ் நாடகஉலகின் மூத்த கலைஞரானகலையரசு சொர்ணலிங்கம் அவர்களும் வந்திருந்து  பார்வையாளர் பகுதியில்அமர்ந்திருந்ததைக் கண்டேன்என்வாழ்கையிலேயே முதன்முறையாகவும் ஒரே ஒருமுறையாகவும் அவரிடத்தில் என்னைப் பற்றியமனப்பதிவொன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்எழுந்ததுநிகழ்ச்சி முடிந்து நாங்கள் உருவாக்கியமேடையைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தோம்.  அந்தச்சந்தர்ப்பத்தில் கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள்அவ்விடத்தில் திரும்பச் செல்வதற்காகச் சீருந்துக்காகக்காத்திருந்தார்.  நானும் அவரைக் கவனியாதது போலமுற்காலத்தில் தமிழர்களின் அரசனாக இருந்த ராசராசசோழனின் வரலாற்றைக் குறிக்கும் ஒரு இந்திய நாடகத்தில்வரும் வரிகளை ஒத்திகை செய்து மன்னம் செய்வது போலப்பேசியபடி வேலை செய்தேன்

 

ஆனால் அவரோ அதைப்பற்றி எள்ளளவும் கவனம் செலுத்தாமல் சீருந்து வந்ததும் ஏறிச் சென்றுவிட்டார். நானோ என்னை முட்டாள் போல உணர்ந்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு 1958 இல் ஒரு நாள் யாரோ ஒருவர் திருநெல்வேலிக்கு வந்து சண்முகலிங்கம் என்பவர் யார் என்று விசாரித்து இருக்கிறார்.  கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என அவர் சொன்னார். அப்பொழுதான் நான் அன்றொரு நாட் செய்ததற்குப் பலன் கிடைத்திருக்கிறது என உணர்ந்து கொண்டேன்.

 

 

அப்படியானால் அச் சந்தர்ப்பத்துடன் நீங்கள் தொழில்முறையான நடிகனாக வருவதற்கான வாசல் திறந்தது எனச் சொல்லுங்கள்.

 

நாங்கள் எல்லோருமே அப்பொழுதும் இப்பொழுதும் தொழில்சார் நாடகக் கலைஞர்கள் அல்ல.  எங்களில் எவரையுமே தொழில்முறை அரங்கக் கலைஞர்கள் எனக் கூறமுடியாது.  ஈழத்து நாடக அரங்கம் நெடுங்காலமாகவே தொழிலல்லாத,  தனிநபர் ஒருவர் தனது சொந்த ஈடுபாட்டின் காரணமாக ஈடுபடுகிற  ஓய்வு நேரத்திற்குரியவருமானத்தைத் தராத ஒரு கலையாகவே இருக்கிறது. எங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு வேறு ஒரு தொழிலைச் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.  இன்னமும் சொல்லப் போனால் நாடக அளிக்கைகளைச் செய்வதற்கு நாங்கள்தான் பணத்தைச் செலவு செய்கிறோம்.  அதில் இருந்து உழைத்துக் கொள்ளமுடிவதில்லை.

சொர்ணலிங்கம் அவர்களுடன் வேலை செய்யக் கிடைத்தது முக்கியமானதொரு திருப்புமுனைதான்.  தேரோட்டி மகன் என்ற அவரது நாடகத்தில் நான் அர்ச்சுனனாகப் பாத்திரமேற்று நடிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். அந் நாடகத்தில் கர்ணன் தான் பிரதான பாத்திரம்.  அந்த நாடகம் மிகப் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி அதற்கு பிறகு வந்த வருடங்களில் அந் நாடகத்தை  அவர் பத்து முறைகள் திரும்பத்திரும்ப தயாரிக்க வேண்டியும் வந்தது. 

 

சொர்ணலிங்கம் அவர்கள் மிகவும் புத்தி பூர்வமான நாடகக்காரன். எதிர்மறைக் குணங்கள் கொண்ட பாத்திரங்களை பச்சாதாபத்துக்குரியவர்களாகப்  படைக்கிற வல்லமையை அவர் கொண்டிருந்தார்.  சேக்ஸ்பியரின்சைலொக்கில் இருந்து மகாபாரதத்தின் சகுனி வரை அவர் உருவாக்கிய பாத்திரங்கள் ஒப்பற்றவை.  அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

 

நாடக உலகைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு நடிகனாக அறியப்பட்டதை விட நாடக எழுத்துரு ஆசிரியராகவே அதிகம் புகழடைந்திருக்கிறீர்கள்.  நாடக எழுத்துருவாக்கம் அல்லது நாடக எழுத்தாளர் என்பதற்குள் எவ்வாறு வந்தீர்கள்?

 

தேவை காரணமாகவே நான் அவ்வாறு மாற நேர்ந்தது.   அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த எழுத்தாளர்கள் பலரை எழுத்துரு எழுதித்தரும்படி நாடி இருந்தேன்.  சிற்பி என்கிற சரவணபவனை எங்களுக்கு நாடகம் எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.  ஆனால் அவர் எப்பொழுதும் வேலைப் பழுவோடிருந்தார்.  சில காலங்களுக்குப் பிறகு நான் எழுதிய சிறுவர் நாடகம் ஒன்றை அவர் பார்க்க நேர்ந்தது.  அதனைத் தொடர்ந்து நாடக எழுத்துருக்களை என்னையே எழுதும்படி அவர் ஊக்குவித்தார்.  அதன் படிக்கு நான் நாடக எழுத்தாளன் ஆனேன்.  இதனைக் கூட விபத்து என்று தானே சொல்லவேண்டும்.  ஆக தேவைகள் எங்களை உந்தித்தள்ளியதால் நேர்ந்தது இது.

 

நீங்கள் கூறுகிறபடி நிகழ்ந்த விபத்துக்கள்” எல்லாம் உங்களின் உள்ளுறைந்திருந்த ஆர்வங்ளையும் திறமைகளையும் வெளிக் கொண்டு வருபவைகளாக இன்றுவரையும் அமைந்து விட்டிருப்பதை நீங்கள் உணரவில்லையா?  யாழ்ப்பாணத்தில் இன்றைக்கு உங்களுடைய பல நாடகங்கள் போற்றப்படுபவையாக உள்ளனவே?

 

திரும்பவும் இல்லை என்றுதான் சொல்வேன்.  எழுத வேண்டிய தேவை இருந்ததால் எழுதத் தொடங்கினேன் ஆனால் அதையே தொடர்ந்து செய்ய வேண்டி இருந்தது. வாழ்க்கை அதைத் தான் என்னிடம் எதிர்பார்த்தது.  மக்கள் என்னுடைய நாடகங்களை இரசித்துப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.   அது சந்தோசம் தருவதுஅதுவே போதுமானது.  ஆனால் நான் உன்னதமான  செவ்வியல் நாடகக் காவியத்தை எழுதிய ஆசிரியன் அல்ல. பாடசாலைப் புத்தகங்களில் எனது நாடகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  ஆனால் அவற்றின் உள்ளடக்கம் அந்தந்தக் காலப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவை. அவற்றின் பாதிப்பினால் உருவானவைஎனவே அவை வரலாற்றில் இடம் பெறப்போவதில்லை. காலம் கடந்து வாழப் போவதில்லை.  நான் அவற்றை எழுதிய போது அவை காலம் கடந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தோடும் எழுதவில்லை.

 

 

உங்களுடைய எந்த எழுத்துருவுக்காக நீங்கள் அதிகம்அறியப்படுகிறீர்கள்?

 

எனது சிறுவர்களுக்கான நாடக எழுத்துருக்களுக்காகவே நான் அதிகம் அறியப்படுகிறேன்.  ஒரு ஆசிரியராக எனது பிரதான பணி – நான் ஓய்வு பெறும் வரைக்கும் சிறுவர்களுடன் வேலை செய்வதாகவே இருந்திருக்கிறது.  எனவே எனது அனேகமான எழுத்துக்கள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டன.  சிறுவர்களைக் கவரும் விதத்தில் ஒரு நவீன நாடக வடிவத்தை மீளுருவாக்கம் செய்தற்காகவே நான் அதிகம் பாராட்டப்படுகிறேன்.

 

உங்களுடைய பல நாடகங்கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் மேடையேற்றம் செய்யப்பட்டுள்ளன.  இதற்காக நீங்கள் அதிகம் பயணங்கள் செய்திருப்பீர்கள்கௌரவிக்கப்பட்டும் இருப்பீர்கள் அல்லவா?

நான்  பயணங்கள் அதிகம் செய்வதில்லை.  என்னுடைய எழுத்துருக்களை நாடகமாக நெறியாள்கை செய்ய விரும்பும் நெறியாளர்களிடமே அதற்கான முழுப் பொறுப்பையும் விட்டு விடுகிறேன்.  கவனத்துக்குள்ளாவதும் பாராட்டுகளுக்குள்ளாவதும் என்னை எரிச்சலூட்டுகின்றன. எனவே இவற்றை கூடுமானவரை தவிர்த்து விடுகிறேன். தமிழ் மக்களிடம்,  விழாக்கள் எடுத்துப் பட்டுப் பீதாம்பரங்கள் அணிவித்து ஒருவருக்கு  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும்  பழக்கம் இருக்கிறது. பணத்தை விரையமாக்கும் அபத்தமான பழக்கம் இது. 

 

மக்களுடைய உணர்வுகளையும் உள்ளக் கிடக்கைகளையும் வெளிக் கொண்டு வரும் படைப்புக்களை என்னால் எழுதக் கூடியதாக இருப்பதற்காக காரணம் நான்  அகவயமான சிந்தனைகளோடு புறத்தில் நின்று மக்களை அவதானிப்பவனாக சமூகத்தை அவதானிப்பவனாக இருப்பதுதான்.  மக்களின் உணர்வலைகளுடன் பரிவதிர்கிற பாத்திரங்களைத்தான் நான் என் படைப்புகளில் கொண்டு வருகிறேன்.

 

ஒரு கூட்டத்தின் மையப்புள்ளியாக இருப்பதை விடவும் ஒரு மூலையில் இருந்து கொண்டு அனைவரையும் அவதானிக்கும் சந்தர்ப்பம் தரப்படுவததையே நான் அதிகம் விரும்புகிறேன்.

 

வெளிநாடுகளில் மேடையேற்றப்பட்ட உங்களுடைய நாடகங்களில் எது மிகப் பிரபல்யமானது என நினைக்கிறீர்கள்.

 

எந்தையும் தாயும் என நினைக்கிறேன்.

தமது சகல பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு தமது முதுமைக்காலத்தில் இங்கே தனித்திருக்கும் பெற்றோரைப் பற்றியது அந்நாடகம். இதனை 1991 ம் ஆண்டு  கனடாவில் வசிக்கும் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்கியே எழுதினேன்.  கனடாத் தமிழர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் அக்காலப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி அவர் கேட்டிருந்தார்.  அவரின் மனதி்ல் இருந்த எண்ணத்தை இந்த நாடகம் பூர்த்தி செய்ததா என்று தெரியாது.  ஆனால் அவருக்குக் கிடைத்தது அந் நாடகம்தான்.  இந் நாடகம் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்பட்டது. மட்டக்களப்பு மற்றும் கொழும்பிலும் இந் நாடகம் மேடையேற்றப்பட்டது.

 

புலம் பெயர்ந்தவர்கள் அந் நாடகத்திற்கு எவ்விதமான எதிர்வினையை ஆற்றினார்கள்

அந் நாடகம் நிச்சயமாக அவர்களின் உணர்விழையைத் தாக்கியிருந்தது.  அந்த உணர்வு மகிழ்ச்சியானதாக இல்லையென்றபோதும்.  இங்கிலாந்தில் அந்  நாடகத்தை நெறியாள்கை செய்து அளித்த எனது நண்பனும் மூத்த நாடக ஆர்வலருமான  தாசீசியஸ் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு மக்கள் அந் நாடகத்தை அசையாமல் இருந்து கண்களில் நீர் வழியப் பார்த்ததாகக் கூறினார்.  அந்த நாடகத்தில் ஓரிடத்தில் உணர்ச்சிபூர்வமான பகுதி ஒன்றினிடையே   நகைச்சுவையான  சில வரிகளும் வரும்.  அந்த நகைச்சுவைக்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் மட்டுமே சிரித்ததாகவும் அவரும் கூட ஏனையவர்களின் கவனத்தை தனது சிரிப்பு குலைத்துவிட்டதை அவர்களின் பார்வையில் இருந்து உணர்ந்து கொண்டதாகவும் கூறினார்அந் நாடகம் வெற்றியடைந்தது என்பது எனது உறுதி.

 

இறுதிக் கேள்வி:

 

நிறைய அனுபவங்களைப் பெற்றவர் என்ற வகையிலும் அவற்றை உங்களுடைய நாடகங்களில் அதிகமாக வெளிப்படுத்தியவர் என்ற வகையிலும் இளைய தமிழ்ச் சமூகத்திற்கு என்ன புத்திமதியைச் சொல்ல விரும்புகிறீர்கள்.  எங்களிற் பலர் நவீன உலகமயமாதலுக்கும் பழமையான எங்கள் கலாச்சாரத்துக்கும் இடையிற் சிக்கி இருக்கிறோம் வேகமாக மாறிவரும் உலகம் விடுக்கும் சவால்களை எதிர் கொள்ளுதலும் அதே வேளை குறிப்பிடத்தக்க எங்கள் கலாச்சாரத்தை பேணுதலும் ஆகிய அசௌகரியத்தைச் சந்திக்கிறோம்  நவீனத்துக்கும் மரபுக்கும் இடையில் எங்கே எல்லைக் கோட்டைக்கீறுவது?

 

கலாச்சாரம் என்பது மக்களால் அவர்கள் வாழும் காலத்தில் நடைமுறையில்  பின்பற்றப்படுவது.  நாங்கள் எதனை விரும்பவேண்டும் அல்லது எதனைச் செய்ய வேண்டும் என்பதைப் பழமைவாதிகள் அல்லது மரபு வாதிகள் கூற முடியாதுஎமது முன்னோர்கள்  கைக்கொண்டவைகள் என அவர்கள்  கற்பனை செய்து கொள்பவைகளை எல்லாம் நாங்கள் இப்பொழுது விரும்ப வேண்டும் என்று அவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

கடந்த பல வருடங்களாக ஒரு நாடக ஆர்வலனாக இச் சமூகத்தை அவதானித்தவன் என்ற வகையில் ஒன்றைச் சொல்லமுடியும். மீளுருவாக்க எழுத்தாளர்கள் நாடக எழுத்தாளர்கள் இன்னும் பல கலை இலக்கியவாதிகள் யாவரும் சமூகம் கடுமையான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் சந்தித்த போதுதான் எழுச்சி கொண்டு படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள்  அவ் வகையில் மிக மோசமான சமூக நிலமைகளின் கீழ் தான் அற்புதமான இலக்கியங்கள் சமூக விழுமியங்களையும் பெறுமானங்களையும் எழுச்சி அடையச் செய்யப் படைக்கப்பட்டன காலங்கள் பல கடந்த  பின்பு கடந்த காலத்தில் சமூகத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் தெரியாத அல்லது புரியாத பழமைவாதிகள் எமது முன்னோர்கள் அற்புதமானவர்கள்; அவர்களிடம் அற்பதமான விழுமியங்கள் இருந்தன எனச் சொல்லுவதை என்னவென்பது.

 

உதாரணத்துக்கு  திருவள்ளுவருடைய குறளையோ அவ்வையாருடைய  அற்புதமான சந்தம் நிறைந்த வெண்பாக்களையோ அல்லது செய்யுளையோ வாசித்து விட்டு  அவர்கள் போதித்த அற நெறிக் கருத்துகளை வாசித்து விட்டு நம் முன்னோர்கள் அற்புதமான பெறுமானங்களைக் கொண்டிருந்தனர் என்று சொல்ல மரபு வாதிகள் முனையக் கூடும்.

திருவள்ளுவரோ அவ்வையாரோ தரும் அறிவூட்டல்கள் பொதுவான உணர்வு நெறிமுறைகளைச்  சார்ந்தவை. மக்களுக்கு களவெடுக்க வேண்டாம்,மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்க வேண்டாம் என்று அறநெறிப் போதனைகளைச் செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தனர் என்றால் அச் சமூகத்தை நினைத்துப் பாருங்கள்.  அவர்கள் சட்டமும் ஒழுங்கும் நிலைகுலைந்திருந்த சமூகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதானே நான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

அதேவேளை மற்றவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்காக எங்களது கலாச்சாரத்தைக் கைவிட்டுவிட வேண்டும் என்றும்  சொல்லமாட்டேன்.  ஆனால்ஒளிமயமான பழம் பெருமைகளின்  பின்னால் தொங்கிக் கொள்ளவும் பரிந்துரைக்க மாட்டேன்.

கலாச்சாரம் என்பது கடிகாரம் போன்றது  அதன் முட்கள் காலத்துடன் நகர்ந்து கொண்டு இருக்கும்  அந்நகர்வை யாராலும் எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. மரபுவாதிகள் செய்வது என்னவென்றால் கடிகாரத்தின் நிமிட முள்ளை அவசரப்பட்டுப் பிடித்து அது அசைவது தெரிவதால்அதை அசைய விடாமல் செய்து கொண்டு காலம் அசையாமல் நிற்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.   அதேவேளை கடிகாரத்தின் மணித்தியால முள்ளு அசைந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் அதனை அவர்களால் பார்க்கவோ உணரவோ முடிவதில்லை  எனவே அதைத் தடுக்க அவர்கள் முனைவதில்லை.  ஆக நீங்கள் நிமிட முள்ளைத் தடுத்துக் கொண்டு காலம் போகவில்லை என நினைத்து இறுகி விட முடியாது.  மாற்றம் தவிர்க்க முடியாதது.  கால ஓட்டத்துடன் இணைந்துதான் செல்ல வேண்டும்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113676/language/ta-IN/article.aspx

Share this post


Link to post
Share on other sites