Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

ஜனாதிபதி தேர்தலால் தமிழருக்கு பயனில்லை! தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன்!!


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன்.

kumarakuruparan01.png

தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது.

அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ஆட்சி மாற்றத்தினாலோ அரசியல் தலைவர்களை மாற்றுவதினாலோ எமக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகின்றதெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

 

எம்மை பொறுத்தவரை முதன்மையானது பொறுப்புக்கூறலே. கடந்த காலங்களினில் இத்தகைய நேரங்களில் தான் எம்மீது மோசமான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. இதனை மனதிலிருத்தி முதலில் எமது பிரச்சினைகளை நாம் முன்னிறுத்தி குரல்கொடுக்க வேண்டும். மன்னாரில் கூட்டுக்கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரனிற்கு நீதி கேட்பதனைவிட அடுத்த எதிர்கட்சி பொது வேட்பாளர் யாரென்பதிலேயே நாமும் எமது ஊடகங்களும் முனைப்பு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் தரப்பு எவரிற்கு ஆதரவளிக்கின்றதோ அவர்கள் பெரும்பான்மை மக்களிடையே தோல்வி பெறுகின்ற அரசியல் போக்கே 2005ம் ஆண்டின் பின்னரான சூழலில் இருப்பதனையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

இவ்வூடக மாநாட்டில் மற்றொரு ஊடக பேச்சாளரான எழில் ராஜனும் பிரசன்னமாகியிருந்தார்.

 

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அழைப்பாளராக மன்னார் ஆயர் அதிவண கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் இணை செயலாளர்களாக பொ.ந.சிங்கம் மற்றும் தியாகராஜன் ராஜன் மற்றும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஜந்து வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல்கொடுத்து வந்த தமிழ் சிவில் சமூக வலையமைப்பு தமிழ் சிவில் சமூக அமையம் எனும் பெயரில் அமைப்பு வடிவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிற்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களிற்கு ஒரு இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

http://www.pathivu.com/news/35522/57//d,article_full.aspx

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குருபரன், சொன்னது சரி,
அவங்க, கச்சேரி நடத்துறாங்க,
நாம, ஆவெண்டு... பாக்க வேண்டியது தான்.

 

புலி, உயிர்ப்புடன்.. இருந்திருந்தால்.... இந்தக் கச்சேரியே.... நடந்திருக்காது.
 

Link to post
Share on other sites

தமிழர்களுக்கு இத்தேர்தலினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஏற்ருக்கொள்ள முடியாது.

 

இத்தேர்தலில் தமிழர்கள் எப்படிச்செயற்படப்போகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே தீர்மானிக்கவேண்டும்.

 

தமிழர்கள், இத்தேர்தலின்மூலம் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்பினால் மகிந்தவுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப்பயன்படுத்துவதன்மூலமே அச்செய்தியக்கூறலாம்.

 

அது எதுவெனில் மகிந்த ராஜபக்ஸ போர்க்குறவாளி என்பதையும் அவர் தண்டிக்கப்படவேண்டியவர் என்பதையும் இத்தேர்தலின்மூலம் கூறலாம்.

 

மகிந்த இத்தேர்தலின்மூலம் தூக்கியெறியப்படுவாராகவிருந்தால் சர்வதேசத்தின்முன் எம்மால் முன்வைக்கப்படும் போர்க்குற்றம் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான பிரதான பங்காளியை, அவருக்கான எதுவித சட்டப்பாதுகாப்பு இன்றியே எதிர்கொள்ளலாம்.

 

நாம் செல்லவேண்டியதூரம் மிகவும் நெடிது ஆனால் இவர் தற்போதையகாலகட்டத்தில் பதவியில் இல்லாதிருந்தால் ஒரு சிறிய தூரத்தையாவது இலகுவாக்கடந்துவிடலாம், இதன்மூலம் எதிர்காலத்தின் எமது பயணங்களின் சலிப்புத்தன்மையை எம்மால் குறைத்துக்கொள்ளமுடியும்.

 

மேலும் இவர்கள் பதிவியில் இல்லாதவேளை சிலசமயம் போர்க்குற்றத்துக்கான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பார்களேயானால் இவர்களே ஏனைய போர்க்குற்றம் மற்ரும் இனவழிப்பை முன்னின்று நடாத்தியவர்களை முன்மொழியக்கூடிய சந்தர்ப்பங்களும் வரலாம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கு இத்தேர்தலினால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை ஏற்ருக்கொள்ள முடியாது.

 

இத்தேர்தலில் தமிழர்கள் எப்படிச்செயற்படப்போகிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே தீர்மானிக்கவேண்டும்.

 

தமிழர்கள், இத்தேர்தலின்மூலம் உலகுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்பினால் மகிந்தவுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப்பயன்படுத்துவதன்மூலமே அச்செய்தியக்கூறலாம்.

 

அது எதுவெனில் மகிந்த ராஜபக்ஸ போர்க்குறவாளி என்பதையும் அவர் தண்டிக்கப்படவேண்டியவர் என்பதையும் இத்தேர்தலின்மூலம் கூறலாம்.

 

மகிந்த இத்தேர்தலின்மூலம் தூக்கியெறியப்படுவாராகவிருந்தால் சர்வதேசத்தின்முன் எம்மால் முன்வைக்கப்படும் போர்க்குற்றம் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான பிரதான பங்காளியை, அவருக்கான எதுவித சட்டப்பாதுகாப்பு இன்றியே எதிர்கொள்ளலாம்.

 

நாம் செல்லவேண்டியதூரம் மிகவும் நெடிது ஆனால் இவர் தற்போதையகாலகட்டத்தில் பதவியில் இல்லாதிருந்தால் ஒரு சிறிய தூரத்தையாவது இலகுவாக்கடந்துவிடலாம், இதன்மூலம் எதிர்காலத்தின் எமது பயணங்களின் சலிப்புத்தன்மையை எம்மால் குறைத்துக்கொள்ளமுடியும்.

 

மேலும் இவர்கள் பதிவியில் இல்லாதவேளை சிலசமயம் போர்க்குற்றத்துக்கான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பார்களேயானால் இவர்களே ஏனைய போர்க்குற்றம் மற்ரும் இனவழிப்பை முன்னின்று நடாத்தியவர்களை முன்மொழியக்கூடிய சந்தர்ப்பங்களும் வரலாம். 

 

போர் குற்ற விசாரணை என்பது மகிந்தவுக்கு எதிரானது அல்ல அது முழு சிங்கள தேசத்துக்கும் எதிரானது. எனவே மகிந்த இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அது நடக்க வேண்டும், இதை நாம் மகிந்தவுக்கு எதிரானதாக மாற்றினால் இது ஏதோ தமிழனுக்கும் மகிந்தவுக்கும் எதிரான பிரச்சானையாக மாறி விடும், சிங்களவன் 66 வருடமாக செய்த அக்கிரம் எல்லாம் மறைந்து விடும்

Link to post
Share on other sites

எழுஞாயிறு சொல்வது 100% உண்மை.

பெரிய புத்திஜீவி என பீத்திகொள்ளும் குமரகுருபரனுக்கு இந்த சின்ன விடயம் புரியலியா?

Link to post
Share on other sites

மகிந்தாவை தோற்கடித்து மைத்திரிபாலா ஜனாபாதியாக வந்தால் முதல் வேலையாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பாரா? இதைத் தான் மகிந்தா முதலில் ஆட்சிக்கு வ்ரும் போது சொன்னார். மகிந்தாவை வென்ட பச்சை இனவாதி மைத்திரி.அவரது முகத்தைப் பார்த்தாலே சொல்லலாம்.அது மட்டும் இல்லாமல் குள்ள நரிகளான ரணிலும்,சந்திரிக்காவும் அவருடன் சேர்ந்திருப்பது தமிழ்ர்களுக்கு நல்லதில்லை என்பது எனது கருத்து.மகிந்தா திரும்பவும் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிராக பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டார். செய்ய வேண்டியதெல்லாம் ஏறகனவே அவர் செய்திட்டார்.மைத்திரி அரசுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக தமிழர்கள் அவதானமாக இருப்பது நல்லது.

மகிந்தா பதவியில் இல்லா விட்டால் தான் அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம் என்பது சிலரின் கருத்து.அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தவுடன் தமிழர்களது பிரச்சனை தீர்ந்து விடுமா?...திரும்பவும் மகிந்தா ஆட்சிக்கு வந்தால் சிங்கள் மக்களே அவர்களுக்கு எதிராக புரட்சி செய்யத் தொடங்குவார்கள்...அப்படி ஒரு நேரத்திற்காக தமிழர்கள் காத்திருப்பது நல்லது.

மைத்திரியை மகிந்தாவுக்கு எதிராக கொண்டு வந்ததன் பின்னனியில் நோர்வேயும்,சொல்கையும்,அமெரிக்காவும் இருக்கலாம்.அதனால் அவர்களுக்குத் தான் லாபவே தவிர தமிழர்களுக்கு அல்ல.என்னைப் பொறுத்த வரையில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் தான்.மு.வாய்க்கால் அழிவை தடுக்க கூடிய் வசதி இருந்தும் தாங்கள் இலங்கையில் காலுன்ற வேண்டும் என்பதற்காக வேடிக்கை பார்த்ததோடு,சிங்களவர்களுக்கு உதவியும் செய்தார்கள்.மகிந்தா இவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்டவுடன் ரனிலின் வாலைப் பிடிக்கிறார்கள்.

எது எப்படியுருந்தாலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். மைத்திரி தேர்தலில் இருந்து விலகலாம்.யாராவது கொல்லப்படலாம்?.தேர்தல் நின்று போகலாம்...என்னைப் பொறுத்த வரை மைத்திரி தேர்தலில் வென்டாலும் கூட மகிந்தாவுக்கு போர்க் குற்றவாளி எனச் சொல்லி தண்டனை வாங்கி கொடுக்க விடவே மாட்டார்கள்.சிங்களவர்கள் இந்த விசயத்தில் எல்லாம் நல்ல ஒற்றுமை தமிழர்கள் மாதிரி இல்லை.

Link to post
Share on other sites

ராமன் ஆண்டான்ன ராவணன் அன்டான்னா நமோருக்கொரு கவலையில்லை .... தமிழர்களின் நிலை மாறபோவதில்லை என்பதுதானே நிதர்சனம்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு சில முன்னேற்றகரமான‌ மாற்றங்களைக் கொண்டுவரலாம். மைத்திரிபாலவை மேற்கு நாடுகளும் இந்தியாவும் மறைமுகமாக அங்கீகரித்ததன் மூலம் இலங்கையின் சிங்கள இனவாதத்தின் சக்தியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.
 
மகிந்த தோற்றுப் போனால் நிச்சியமாக ஓரளவுக்கேனும் தமிழருக்கு பயனுள்ள ஒரு தேர்தலாக அமையும்.  
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தோற்றால் மகிந்தமீது போர்க்குற்ற விசாரணையைத் துவக்க ஏதுவாக இருக்கலாம்.ஆனால் மகிந்த மட:டும்தான் போர்க்குற்றவாளி மகிந்தவை மாட்டிவிட்டு மற்றவர்கள் தப்ப நினைக்கிறார்கள். ஆனால் மகிந்த அவர்களையும் மாட்டி விடுவார்.சந்திரிகாவும் ,சர்தும் ஏன் ரணில் அரசாங்கத்தில் அங்கம்' வகித்த பொழுது கூட தமிழ்இனப்படுகொலைகள் நடந்தன அதற்கு உரிய பொறுப்பாளிகள் தப்பிக்கப் போகிறார்களா?மைத்திரிபால வந்தால் வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படுமாஃ? நிச்சயமாக நடக்காது .இன்று மகிந்தவுக்கு எதிராக அணிசேர்ந்தவர்கள் மகிந்தவின் குடும்ப ஆட்சியை எதிர்த்து அரசியல் செய்கிறார்களே ஒழிய தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றி யாராவது பேசுகிறார்களா?ஃஇதற்குள் ததே கூட்டமைப்பு தாங்ளும் அவர்களுடன் பேசி தாங்கள் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கப் போகிறார்களாம்.மகிந்தவின் எதிர்தரப்பில் உள்ளவர்கள் எல்லாம் பச்சை இனவாதிகள்.தமிழ்மக்களுக்கு(இருபகுதியாலும்)இவர்களால் எந்தப் பயனும் இல்லை.

Link to post
Share on other sites

அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த நபர்

எனது கட்டுரைகளுக்கு தேவையான தகவல்களை எப்பொழுதும் மிகவும் கவனமாக ஆராய்ந்து பெற்றுக் கொள்வது வழமை. இப்படியாக ஆராயும் வேளையில், கடந்த அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்த சில நபர்கள் பற்றிய பல தகவல்களை பெற்றுக் கொண்டேன்.

தற்பொழுது, இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையில் பெரும் போட்டி காரணமாக, இவர்களை மாறி மாறி ஜனதிபதி ராஜபக்சவுடன் நெருங்கி வியாபாரம் செய்பவர்களாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னை பொறுத்த வரையில், இவர்கள் இருவரும் வியாபாரிகள், நிச்சயம் லாபம் பெரிதளவு காணப்படும் இடத்தில் தமது வியாபாரத்தை செய்வார்கள். இதை அரசியலாக மாற்றுவதற்கு முன், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி மிக தீவிரமாக பேசுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சில தமிழர்கள், இவ் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றை, புலம்பெயர் வாழ் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டுமென மிகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சி, இவ் தொடர்பு நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று செயற்படுவதாக அறியப்படுகிறது. அப்படியானால், “மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும்” காட்டும் இரட்டை நாக்கு, இரட்டை வேடம், இவ் அரசியல் கட்சிக்கு தேவையா?

இணையத் தளங்களில் பிரசுரமாகும் படங்களை, பலர் மிகவும் அவதானமாக பார்ப்பதில்லை! அப்படியானால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள, முதலாவது படத்தில் காணப்படுபவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். (படம் இலக்கம் - 1)

kiruba-001.jpg

 

யாழ் சிவில் அரங்கு

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்குவதாக கூறப்படும் யாழ்ப்பாண சிவில் அரங்கு என்பது யாரால் எப்பொழுது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

இக்கேள்வியை கேட்பதற்கான முக்கிய காரணம், இவ் சிவில் அரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் உள்ளதாக கூறப்பட்ட பொழுதிலும், வெளிநாடுகளில் நடைபெறும் மாகாநாடுகள், கூட்டங்களுக்கு, ஒரு நபர் மட்டுமே கலந்து கொள்கிறார்.

அது மட்டுமல்லாது, தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்கள் கலந்து கொள்ளும் மாகாநாடுகள், கூட்டங்களில் மட்டுமே சிவில் அரங்கின் பிரதிநிதி கலந்து கொள்வது மட்டுமல்லாது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டிற்கு, சிவில் அரங்கின் பிரதிநிதி வக்காளத்து வாங்குவதையும் நாம் பல இடங்களில் அவதானிதுள்ளோம்.

இவ் யாழ்ப்பாணத்து சிவில் அரங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதா?

ஆகையால் இவ் விடயத்தில் ஓர் தெளிவான கருத்தை, நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்வதற்காக உரியவர்கள். தமிழ் தேசிய கூட்டமைபிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர், தமது மௌனத்தை கலைத்து உண்மைகளை கூறுவார்களா?;.

இதேவேளை ஓர் சிவில் அரங்கின் அங்கத்தவர், எப்படியாக ஒருவரது அரசியல் சிந்தனைக்கு வக்காளத்து வாங்க முடியும்? இப்படியான நடவடிக்கைகளால் தான் ராஜபக்சா அரசு> இன்று புலம் பெயர் நாட்டில் உள்ள, சாத்வீக சமாதான அமைப்புக்களை, பயங்கரவாத அமைப்புக்களென கூறி தடை செய்துள்ளதுடன் நியாயப்படுத்துகிறது.

இக்கட்டுரைக்கு ஆதாரமாக மேலும் இரு படங்களை இத்துடன் இணைத்துள்ளேன் - (இலக்கம் 2, இலக்கம் 3)

kiruba-002.jpg

kiruba-003.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் இப்படங்களிற்கு, சளாப்பல் அற்ற, மக்கள் ஏற்க கூடிய சரியான விளக்கத்தை கொடுப்பார்களென நம்புகிறேன்.

இப்படியான பின்னணிகளை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டிருந்த நபர்கள் தான், தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ் தேசியத்திற்கும் குரல் கொடுக்கப் போகிறார்களா? இவர்கள் மக்களுக்கு சினிமா காட்டுகிறார்களா?.

தமிழ் தேசிய கூட்டமைப்பை யார் பிரித்தார்கள்? எதற்காக பிரிக்கப்பட்டது? என்பவற்றை மக்கள் இன்றுடன் மிக தெளிவாக விளங்கிக் கொள்வாரகளென நம்புகிறேன்.!

இதே இடத்தில் ஓர் முக்கிய கேள்வி மனதில் தோன்றுகிறது. யுத்தவேளையில், இவ் நபர் என்ன செய்தார்? இவருடைய சிந்தனை, கருத்து, செயற்பாடுகள் யாவும் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தாரா என்பதை, மக்கள் இவர்களிடமிருந்து கேட்டு அறிய வேண்டும். இக் கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து இயங்கும் குழுவினர் பதில் கொடுப்பார்களா?

இவ் விடயத்தில், அடுத்த கட்டுரைக்கான போதிய தகவல்கள், ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது என்பதை சகலருக்கும் அறியத் தருகிறேன்.

புலம்பெயர் வாழ் அமைப்புகளுக்கு தடை

கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர் தேசத்தில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகளும், 424 தனி நபர்களும், சிறிலங்கா அரசினால், ஐ. நா. பாதுகாப்பு சபை பிரேரணை, 1373க்கு கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாம்!

தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களில், ஐந்து அமைப்பு (தமிழீழ விடுதலை புலிகள், தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழர் புனர்வாழ்வு கழகம், உலகத் தமிழ் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தவிர்ந்த மற்றைய அமைப்புக்கள் யாவும் மிக அண்மையில் உருவாக்கபட்டவை.

அடுத்து, தடைசெய்யப்பட்ட 16 அமைப்புக்களும், 424 தனி நபர்களும், வெளிநாடுகளிலேயே வாசிக்கிறார்கள் அல்லது அமைந்துள்ளது.

ஐ. நா. பாதுகாப்பு சபையின் பிரேரணை 1373 என்ன கூறுகின்றதென ஆராய்வோமானால், “எல்லா நாடுகளும்” இணைந்த நடவடிக்கையென கூறப்படுகிறது.

UN Document

அப்டியானால், இவ் அமைப்புக்களோ அல்லது நபர்களோ, ஏதாவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போயிருந்து, சர்வதேச சமாதானத்திற்கும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடியவர்களா இருந்திருந்தால், அவர்கள் நிலை கொண்ட நாடுகளினால் முதலில் இவர்கள் தடை செய்யப்பட்டிருப்பார்கள். அல்லது, இவ் அமைப்புக்களையோ அல்லது தனி நபர்களையோ தடை செய்யும் முன்னர், சிறிலங்கா அரசு, இவர்கள் நிலை கொண்டிருக்கும் நாடுகளை கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியாக ஒன்றும் நடந்திருக்காத நிலையில், தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது தனி நபரோ, ஒழுங்கான சட்ட ஆலோசனைகளை பெற்று, இவ் தடை மீது நடவடிக்கை எடுக்க முன்வருவார்களெயானால், இவ்விடயத்தை தலைகீழாக மாற்றக் கூடிய நிலை உருவாகலாம்.

இவ் விடயத்தில், ஐ.நா.சாசனத்தின், அத்தியாயம் 7ல், சாரம் 39லிருந்து 51 வரை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். http://www.un.org/en.../chapter7.shtml

நீதிமன்றம் செல்ல விரும்பாதோர், இவ்விடயத்தை ஐ.நா.மனித உரிமை குழுவிடம், பாதிக்கப்பட்டவர்கள் (தடை செய்யப்பட்டவர்கள்) என்ற அடிப்படையில், முறையீடு செய்ய தகுதியுடையவர்கள். இதற்கு எந்தவித நிதியும் தேவையில்லை.

http://www.tchr.net/...information.pdf

(Model complaint form for communications under)

Optional Protocol to the International Covenant on Civil and Political Rights

சுவராசியமான செய்திகள்

சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை பற்றி பல சுவராசியமான கதைகள் உண்டு.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில், ஒரு சில மட்டுமே கடுமையாக வேலை செய்பவை. மற்றவை, புலம்பெயர் வாழ் மக்களுக்கு சினிமா காட்டுபவை, தம்பட்டம் அடிப்பவை.

இவ் அமைப்புக்களுக்கு, புலம்பெயர் மக்களது ஆதரவோ அல்லது தமிழ் கல்விமான்கள் புத்திஜீவிகளது ஆதரவு அறவே அற்றவர்கள். இவர்கள் மிரட்டல் பணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள். தமது அமைப்புக்களின் பெயர் தடைசெய்யப்பட்டதையிட்டு இவர்களுக்கு எல்லையற்ற சந்தோசம்.

தடைசெய்யப்பட்ட தனிநபர் பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதையிட்டு சில தனிநபர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடத்துகிறார்கள். வேறு சிலர் தமது பெயர் பட்டியலில் இணைக்கப்படாமையிட்டு மிகவும் கோபமும் சோகமும் அடைந்துள்ளார்கள்.

வேறு சிலர், தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களைவிட, தாம் பல மடங்கு கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் சிறிலங்காவின் காதுகளுக்கு இவை எட்டவில்லையென அதிசயப்படுகிறார்கள்.

ஒரு சில நபர், தாங்கள் வாழும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதுவரலாயத்திற்கு தொலைபேசி செய்து, தாம் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்துவந்த எதையும், நீங்கள் யாரும் அறிய முடியவில்லையெனவும், ஆகையால் உங்கள் புலனாய்வு உத்தியோகத்தர் கெட்டித்தனம் அற்ற சோம்பேறிகளென கூறப் போவதாகவும் கூறினார்கள்.

கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை, தொலைகாட்சி செவ்வி ஒன்றில் இவை பற்றி வெளிப்படையாக என்னால் கூறப்படும் வரை, இவ் அமைப்புக்களும் தனிநபர்களும், இந்த தடையினால் மிரண்டார்களோ என்னவோ, திடீரென அமைதியாகி விட்டார்கள். இவர்கள் யாரும் வெளிப்படையாக தம் மீதான தடையை எதிர்த்து எந்த கருத்தையும் கூற முன்வரவில்லை.

எம்மைப் பொறுத்தவரையில் சிறிலங்காவின், இவ் தடை என்பது ஒரு பூச்சாண்டி விளையாட்டு. இது, “நல்லூரில் குண்டுவிழும் வேளையில், ஊர்காவற்துறையில் துவக்கு தூக்கியதற்கு” சமமானது.

நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம் எனக் கூறும் சிறிலங்கா அரசு, சர்வதேசத்திற்கு “புலி பூஞ்சாண்டி” காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் வேலை திட்டங்களில் இதுவும் ஒன்று. இவற்றை கண்டு யாரும் பயப்பிட வேண்டிய அவசியமில்லை. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”. நாம் இவற்றை கண்டு அஞ்சாது தொடர்ந்து வீறு நடை போட வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், இவ் தடையில் சேர்க்கப்பட்டுள்ள பெயர் வழிகளும், அமைப்புக்களின் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பின் பிரதிநிதிகளும், இவர்களுடன் முக்கிய உரையாற்ற வந்த சில நபரின் பங்கு, பெரிதளவில் காணப்படுகிறது. இங்கு இணைக்கபட்டுள்ள படங்கள் 2, 3 ஆகியவற்றை சரியான முறையில் ஆராய்பவர்கள் இதற்கான விடையை பெற்றுக் கொள்வார்கள்.

மிக விரைவில், ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதிசயப்படாதீர்கள்.

இவ் தடையினால் பிரதானமாக பாதிக்கப்படப் போவது சிறிலங்கா அரசே. எதிர்வரும் கோடை கால விடுமுறைக்கு, சிறிலங்காவிற்கு சென்று வரவுள்ள புலம்பெயர் வாழ் தமிழர்களது எண்ணிக்கை பாரியளவில் குறைந்தே காணப்படும்.

உண்மை என்னவெனில், இவ் தடையை காரணம் காட்டி, சிறிலங்காவிற்கு செல்லும் புலம்பெயர் வாழ் மக்கள் எவரையும், எந்தவித காரணம் காட்டாது கைது செய்து, காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கு இத் தடை வழி வகுக்கும். புலம்பெயர் வாழ் மக்கள், தங்களது எதிர்கால நடவடிக்கையை, சரியான முறையில் திட்டமிட்டு, மதிநுட்பமான முறையில் அணுகாத நிலையில், இவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

தாயகத்திலும் புலத்திலும், தமிழர் தமிழர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்!

ச. வி. கிருபாகரன்

Link to post
Share on other sites
 • 4 weeks later...

ங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் ஆட்சி மாற்றத்தினாலோ அரசியல் தலைவர்களை மாற்றுவதினாலோ எமக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகின்றதெனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.[/size]

ஆட்சிமாற்றம் தமிழருக்கு நன்மையை கொண்டுவரும் என்று புலிகள் செயற்பட்டபோது குமரகுருபரன் எங்கை இருந்தவர் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிமாற்றம் தமிழருக்கு நன்மையை கொண்டுவரும் என்று புலிகள் செயற்பட்டபோது குமரகுருபரன் எங்கை இருந்தவர் .

அநேகமாக சுமந்திரன் மாதிரி கொழும்பில் கொட்டாவி விட்டபடி இருந்திருப்பார்.
Link to post
Share on other sites

அநேகமாக சுமந்திரன் மாதிரி கொழும்பில் கொட்டாவி விட்டபடி இருந்திருப்பார்.

நந்தன்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

PipPipPip

4,586 posts

Gender:Male

Location:london

Interests:இசை,காதல் இரண்டிலும் அக்கறையுள்ள உங்களுக்கு ஏன் அரசியல் ,--கு என் போர்த் தேங்காய் :) 

ஐ நா விசாரணைக்கு எத்தனை சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளீர்கள் ,வாய்ச்சவடால் விட்ட எவராவது மாதிரி ஒன்றை இணையுங்கள் பார்க்கலாம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அ....கரி 2009க்கு முன்னர் நீங்க எங்க இருந்தியலோ அதுக்கு நேரெதிரான இடத்தில் இருந்தேன்.அண்ண எப்ப மேல போவார் திண்ணை எப்பகாலியாகும் எண்டு சம்பந்தருக்கு குடை பிடிக்க சும்மா சுமந்திரனோட சேர்ந்து வெளிக்கிட்ட உங்களுக்கு எங்களைப் போன்றோரைப் பற்றிக்கதைக்க எந்த அருகதையும் இல்லை,கனடாவில குளிருக்குள்ள கிடந்து எடுக்கிற வாந்திய ஊரில போய் எடுக்கலாமே.அங்குள்ள மக்களை ஒருமுறையாவது நேரே சந்திக்கலாமே ஒன்றுக்கும் வக்கில்லை எங்களுக்கு அரசியல் படிப்பிக்க வெளிக்கிடுறது மகா தப்பு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடை பெற்ற தேர்தலில்...........எந்த 

தேர்தலில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் அமைந்திருந்தது .இன்னுமா* நம்பிறீங்க ..................... :D  :lol:  :icon_idea:

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை தோற்கடித்து மைத்திரிபாலா ஜனாபாதியாக வந்தால் முதல் வேலையாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பாரா? இதைத் தான் மகிந்தா முதலில் ஆட்சிக்கு வ்ரும் போது சொன்னார். மகிந்தாவை வென்ட பச்சை இனவாதி மைத்திரி.அவரது முகத்தைப் பார்த்தாலே சொல்லலாம்.அது மட்டும் இல்லாமல் குள்ள நரிகளான ரணிலும்,சந்திரிக்காவும் அவருடன் சேர்ந்திருப்பது தமிழ்ர்களுக்கு நல்லதில்லை என்பது எனது கருத்து.

 

 
 1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

   

 2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

  காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

   

 3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

   

 4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

   

 5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

   

 6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

   

 7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

   

 8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

   

 9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஜூட்டுக்கு  சிங்களவரை பற்றி தெரியவில்லை போல. :)  :)

 
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ  :rolleyes: 
Link to post
Share on other sites

 

 
 1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

   

 2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

  காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

   

 3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

   

 4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

   

 5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

   

 6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

   

 7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

   

 8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

   

 9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

 

கருத்துக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு அல்ல. ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது அறிவு'' [குறள்.423]   :wub:  :wub: 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 
 1. ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும்.

   

 2. பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.

  காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும்.

   

 3. ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு பதவியில் இருக்கும். இந்த அரசாங்கம் நாட்டின் முக்கியமான சவால்கள் பற்றிய தேசிய கொள்கைகளை வகுத்து இந்த சவால்களுக்கான தீர்வுகளை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

  தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு அமைச்சர் பதவியாவது வழங்கப்படும்.

   

 4. அனைத்து இனங்களையும் சேர்ந்த போரினால் விதவைகளானவர்களுக்கு பாதுகாப்பு  வழங்கப்படும்.

   

 5. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் குறைந்தது இருபத்தைந்து வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

  போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள செயற்திறன் மிக்க பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்ள வாய்ப்பு உருவாகும்.

   

 6. சட்டவிரோதமாக தமது வீடுகளில் இருந்தும் நிலங்களில் இருந்தும் அகற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

   

 7. வீடு இல்லாதவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும்.

   

 8. வடக்கிலும் தெற்கிலும் பொதுமக்களின் ஜனநாயக நிருவாகம் அமைக்கப்படும்.

   

 9. ஏனைய இனங்களையும் மதங்களையும் பாதிக்கும் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுக்க சட்ட மற்றும் சமூக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆங்கில மூலம்: Island

 

 

சிங்களம் சொல்லுது

தமிழன் நம்புகின்றான்

இதற்கு மேல்

எப்படியெடா என்னை உனக்கு புரியவைப்பேன் என சிங்களம் கலங்குகிறது :(  :(  :(

:(  :(

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இருண்ட யுகத்தை நோக்கி நகரும் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு உரிமையும் – பி.மாணிக்கவாசகம்    89 Views ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். எங்கு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றதோ அங்கு அராஜகம் தலைதூக்கும்; அநியாயங்களே கோலோச்சும். இதற்கு உலக வரலாறுகள் அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ஜனநாயகம் நிலவுவதாகக் கூறப்படுகின்ற நாடுகளில் தொடர்ச்சியாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மதிப்பதில்லை. அவற்றைப் பேணுவதில் உரிய கவனம் செலுத்துவதுமில்லை. ஆனால் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் தங்கள் கைகளுக்குள் வைத்துக் கொள்வதற்காகவும், தமது அதிகார எல்லைக்குள் பொத்திப் பேணிக் கொள்வதற்காகவும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாகவும், உரிமைகளை வழங்குவதாகவும் கூறி அவர்கள் தொடர்பிலான பல்வேறு வேலைத் திட்டங்களைத் தொடங்குவார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களின் உள்ளே வஞ்சனை நிறைந்த நிகழ்ச்சித் திட்டங்களை அவர்கள் வகுத்திருப்பார்கள். அவர்களுடைய திட்டங்களை மேலோட்டமாக நோக்கும் போது, ஊடக சுதந்திரத்துக்கு உரிய மதிப்பளித்து அவர்கள் செயற்படுவதாகவே தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தாலே அவர்களுடைய வஞ்சனையான முகம்களைக் காண முடியும். ஊடக சுதந்திரம் பேணப்படுவதாகவும், ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படுவதாகவும் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பார்கள். அதேவேளை தங்களுடைய அதிகாரப் பிடியில் அகப்பட்டுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் பயன்படுத்தி நாட்டு மக்கள் மீது கருத்துத் திணிப்பை மேற்கொள்வார்கள். உண்மைகளை மறைத்து திரித்து தமக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் அவர்கள் மிகவும் நுட்பமான முறையில் பரவச் செய்வார்கள். உண்மைகள் மறைக்கப்படுவதையும், உண்மைகள் மறுக்கப்படுவதையும் நாட்டு மக்கள் உணரமுடியாத வகையில் தமது அரசியல் தன்னலம் கருதிய பிரசாரங்களை இலாவகமாக முன்னெடுப்பார்கள். கருத்துத் திணிப்பதையும், உண்மைகளை மறைப்பதையும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சி அதிகாரச் செயற்பாட்டின் முக்கிய அம்சமாகக் கொண்டிருப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு சாதகமான முறையில் கருத்துக்கள் தம்மீது திணிக்கப்படுவதையும், உண்மையான ஆட்சி மற்றும் நாட்டு நிலைமைகள் தங்களிடம் இருந்து முழுமையாக மறைக்கப்படுவதையும் நாட்டு மக்கள் அறியாதவாறு பார்த்துக் கொள்வார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டு மக்கள் உண்மைத் தகவல்களை அறிகின்ற உரிமையை இழந்து விடுவார்கள். ஏமாற்று அரசியல் ஆட்சியின் மூலம் அவர்களுடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்கள் உணர முடியாமற் போய்விடும். அதற்காக உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து வெளிக் கொண்டுவர முயற்சிக்கின்ற ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவர்கள் தமது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அடக்கி விடுவார்கள். தேவையாயின் அவர்களை அழிப்பதற்கும் அவர்கள் தயங்க மாட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுகின்ற மக்கள் ஆட்சியாளர்களை நல்லவர்களாகவும், அவர்களுடைய ஆக்கிரமிப்பு ஆட்சியை நல்லாட்சியாகவும் கருதி அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டிருப்பார்கள். அவர்களுடைய ஆட்சியை நல்லாட்சியாகக் கருதி அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள். இத்தகைய ஆட்சிப் போக்கையும் ஊடக சுதந்திர நிலைமையையும் சிறீலங்காவில் நிதர்சனமாகக் காண முடிகின்றது. இந்த வருடத்திற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த செய்தியில் “நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம்  ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். தகவல் அறியும் உரிமையையும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுத்தோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்” என்று தெரிவித்திருந்தார். “இந்த நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் ஆட்சியில் இருந்த போதெல்லாம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம். முழு உலகமும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ‘தகவல்கள் பொது மக்களின் நலனுக்கானது’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுவது மிகப் பொருத்தமானதாகும்” என்றும் அவர் கூறியிருந்தார். ‘தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது’ என்ற சர்வதேச தொனிப்பொருளை எடுத்துக் கூறியிருந்த அவருடைய அந்த ஊடக சுதந்திர தினத்துக்கான செய்தியின் மை காய்வதற்கு முன்னதாகவே ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் விடுவிப்பதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்காகக் காத்துக் கிடந்த இந்தக் கொலை வழக்கில் குற்றவியல் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று சிறீலங்காவின் சட்டத்துறை அறிவித்திருப்பது ஊடக சுதந்திரத்தின் மீது இந்த அரசு எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த வேளை, யாழ். கச்சேரியடியின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிக்குள்ளே தனது வீட்டில் செய்திக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த நிமலராஜன் அவருடைய வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த பேனையும் அவர் எழுதியிருந்த வரிகளும் குருதியில் தோய்ந்தன. அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வீட்டின் உள்ளே கைக்குண்டு ஒன்றை வீசி வெடிக்கச் செய்துவிட்டுச் சென்றார்கள். இந்தக் குண்டு வெடிப்பினால் நிமலராஜனின் தாய், தந்தை, மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். கொலையாளிகள் நிமலராஜனின் வீட்டிற்கு வருவதற்காகப் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் அவருடைய வீட்டருகில் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் 6 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கொலை வழக்கு விசாரணைகள் இழுபறி நிலையில் இருந்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டிருந்தது. பதினைந்து வருடங்களின் பின்னர் நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கையைத் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், சந்தேக நபர்களை விடுவித்து 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறையின் சட்டப்பிரிவினருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். நிமலராஜன் மட்டுமல்ல. இந்த நாட்டின் ஊடகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இருண்ட யுகமாகக் கருதப்பட்ட ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற முக்கிய தமிழ் ஊடகவியலாளர்களான தராக்கி என்ற தர்மரத்தினம் சிவராம், நடேசன் உள்ளிட்டவர்களின் படுகொலைகள் தொடர்பிலான நீதி விசாரணைகளும் கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. ஊடக அடக்குமுறை தாண்டவமாடிய காரணத்தினால் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள். ஊடகவியாளர்கள் மீதான அச்சுறுத்தலினால் பல ஊடகவியலாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத நிலைமையே நிலவுகின்றது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவி பின்னர் 2019 ஆம் ஆண்டு கருத்துத் திணிப்பு மற்றும் உண்மைகளை மறைத்தல் உத்திகளைக் கொண்ட பிரசாரத்தின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்சக்களின் ஆட்சியில் ஊடகத்துறை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருப்பதாகவே ஜனநாயகவாதிகளும் ஊடக சுதந்திரத்தின் மீதும் நல்லாட்சி மீதும் பற்றுக் கொண்டுள்ளவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். இராணுவ முனைப்புடனான சர்வாதிகார ஆட்சிப் போக்கைக் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன தேசத்தின் பாதகாப்பு அமைச்சர் பயணம் செய்த வாகனத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக முன்னறிவித்தல் எதுவுமின்றி தலைநகர் கொழும்பின் முக்கிய வீதிச் சந்தியொன்றில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பொறுமை இழந்து ஆத்திரமுற்ற இளைஞன் ஒருவர் தனது வாகனத்தின் ஹோர்ன் ஒலியை எழுப்பி ஆட்சேபணை தெரிவித்ததுடன், சக வாகன சாரதிகளையும் அவ்வாறே ஒலியெழுப்புமாறு கோரியதையடுத்து வாகங்களின் ஒலி அந்தப் பிரதேசத்தையே அதிரச் செய்திருந்தது இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. சம்பவம் நடைபெற்று இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் மீது சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக காவல் துறை பேச்சாளர்  அஜித் ரோகண தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சம்பவம் பற்றிய காணொளியில் அந்த இளைஞனோ அல்லது தமது பயணத்தைத் தொடர்வதற்காகக் காத்து நின்ற வாகன சாரதிகளோ சட்ட விரோதமாகக் கூட்டம் கூடியதாகவோ அல்லது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகவோ காணப்படவில்லை. அவர்கள் தங்களுடைய இடங்களில் நின்றிருந்தவாறு வாகனங்களின் ஒலியை எழுப்பியதையும், இவ்வாறு வீதிகளில் முன்னறிவித்தலின்றி தடுக்கப்படுவதற்காகவோ தாங்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு வக்களித்தோம் என கேள்வி எழுப்பியதையுமே அந்தக் காணொளியில் காண முடிந்தது. கைது செய்யப்பட்ட அந்த இளைஞன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் காவல் துறையினரிடமும், அரசாங்கத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் இவ்வாறு பொது மக்கள் அரசு மீதான தமது அதிருப்தியைத் தெரிவிப்பதற்கு வேறு எவருக்கும் அந்தவித இடையூறுமின்றி சத்தம் எழுப்புவது மக்களுடைய அடிப்படை உரிமை என்றும், அதனை ஒரு குற்றச் செயலாகக் கருதி எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் இலங்கையின் உச்ச நீதிமன்றம் 1993 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்ததை இந்த சம்பவம் குறித்து ஆட்சேபணை வெளியிட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இதே போன்றதொரு சம்பவத்தில் தற்போதைய நாட்டின் பிரதமராகிய மகிந்த ராஜபக்சவே அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக ஊதுகுழல் ஒன்றைப் பயன்படுத்தி பலத்த ஒலி எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தார். அந்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. மக்கள் கோசம் என்ற பெயரிலான அந்த ‘ஒலி எழுப்பும்’ போராட்டத்தை அன்றைய எதிரணியில் இருந்த அரசியல்வாதிகளாகிய மகிந்த ராஜபக்சவே முன்னின்று நடத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுகையில் முன்னெச்சரிக்கையோ, முன்னறிவித்தலோ இன்றி ஒரு முக்கிய பிரமுகருடைய வாகனப் பேரணிக்காகப் பொது மக்களை முக்கிய வீதியில் தடுத்து நிறுத்தியமைக்காகத் தமது அதிருப்தியை ‘ஒலி எழுப்பி’ வெளிப்படுத்தியதற்காக சட்ட விரோதமாகக் கூட்டம் கூடி காவல் துறையினருக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்கியதையே எடுத்துக்காட்டி இருக்கின்றது. அது மட்டுமல்ல. ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் சர்வாதிகார ஆட்சி முறையையுமே வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே நாடு மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் பிரவேசித்திருக்கின்றது என்று அச்சம் வெளியிடப்பட்டிருக்கின்றது.     https://www.ilakku.org/?p=49251
  • குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு    33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதியில் நிலைகொண்டுள்ள முப்படையினர், முப்படைகளின் கட்டளையிடும் அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், அவர்கள் குருந்தூர் மலைப் பகுதியில் பந்தல்கள் அமைத்தல்இ தோரணங்கள் கட்டுதல் எனப் பல அலங்கார வேலைகளில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த நிகழ்வு குறித்து பொலிஸாருக்கோ அல்லது மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவினருக்கோ எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று அந்த துறைகள் சார்பில் பேசவல்லவர்கள் தெரிவித்தனர். அத்துடன், இந்நிகழ்வு முழுமையாக இராணுவத்தினராலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக உள்ளது என்று தெரியவருகின்றது. சைவ மக்களின் வழிபாட்டிடமாக காணப்பட்ட குருந்தூர்மலை பகுதியில் பௌத்த தொல்லியல்கள் உள்ளன என்று கூறி தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் சிலர் அப்பகுதியை தம்வசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆராய்ச்சிகளை பகிரங்கப்படுத்தாமலேயே, அது பௌத்த தொல்லியல் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழர் தரப்பின் வரலாற்றறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்பகுதி நாகர்கால சிவன்கோயில் என்று யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுப்பேராசிரியருமான எஸ். பத்மநாதன் கூறியிருந்தார். இந்நிலையில் நாட்டில் கொரேனா பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அவசர அவசரமாக குருந்தூர் மலையில் பௌத்த விகாரை புனர்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இதனிடையேஇ இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கவோ அல்லது அங்கு செல்லவோ தமிழ் ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.   https://www.ilakku.org/?p=49248  
  • கல்வி அமைச்சு ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு    11 Views தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின்  கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம்  மேற் கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலாக தோல்வியுற்ற இணையவழி கல்வியை வழங்க அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “தற்போது, கல்வி அமைச்சு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களின்  அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.” பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கும்வரை, ஆசிரியர்கள் தோல்வியுற்ற இணையவழி கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என சுட்டிக்காட்டியுள்ள, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  இணையவழி கல்வி தோல்வி என்பதை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். தோல்வியடைந்த திட்டமென தெரிந்தும், ஆசிரியர்களை அதனை செய்யும்படி கட்டாயப்படுத்துவது கல்வி அதிகாரிகளின் ஒரே கொள்கையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட தொழிற்சங்கத் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை முறையான அட்டவணை மூலம் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவது ஒரு நடைமுறைத் சாத்தியமான திட்டமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். “ஊடக நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து இதற்கான திட்டத்தை வகுப்பது கல்வி அதிகாரிகளின் பொறுப்பாகும்.” கோவிட்-19 தொற்றுநோய் நாட்டில் பரவியுள்ள நிலையில், 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களின் கல்வி ஸ்தம்பித்துள்ளதோடு, மேலும் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சுகாதார பாதுகாப்பு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு தரமான முகக்கவசங்களை வழங்குதல் உள்ளிட்ட பாடசாலைகளுக்கென ஒரு சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும், எனினும், இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம், 54.70 பில்லியன் ரூபாய் செலவில் ருவன்புர அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, 625 மில்லியன் ரூபாய் செலவில் 500 உடற்பயிற்சி மையங்களை அமைக்கவும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி செலவிடுவதற்கு முன்னர், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது. தடுப்பூசி வழங்கலில்போது  முன்னுரிமை அளிக்க வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மீண்டும் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னர் தடுப்பூசியை வழங்குவது அவசியமான விடயம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது. “அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பேராதெனிய பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய கழுவி பயன்படுத்தக்கூடிய நனோ தொழில்நுட்பத்துடன் சுடிய முகக்கவசங்களை இலவசமாக வழங்குதல், பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், பாடசாலைகளுக்கு போதுமான கிருமிநாசினிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் விடயத்தில் முன்னுரிமைளித்து செயற்பட வேண்டும், ” என லங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக, அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகளை சந்தித்த பின்னர், கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/?p=49262  
  • அமைச்சர்கள்... தவறு செய்தால், பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.  தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மிகச் சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விபரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1214982
  • மூன்று முறை . . . முதல் அமைச்சர் . . .    என்றும் பாராமல் . . . சொந்த கட்சியினரே . . .        
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.