யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நிழலி

ஈழத்து முன்னோடி எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் காலமானார்

Recommended Posts

இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரும் , அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – கார்த்திகை – 2014 ) அன்று காலமானார்.

 

அன்னார் யூன் 4ம் திகதி , 1932, நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.

நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றினார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.

 

அவுஸ்த்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.

 

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

 

----

 

 

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் ச. பொன்னுத்துரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 82.

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்ததுடன் இறக்கும்போது ஆஸ்ரேலியாவில் வாழ்ந்திருந்தார்.

ஒரு இடதுசாரி இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ். பொ அவர்கள், கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களின் சொந்தக்காரராவார். மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது படைப்புக்களில் அடக்கம்.

''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ள அவர், சென்னையில் மித்ரா பதிப்பகம் என்னும் பெயரில் வெளியீட்டாளராகவும் செயற்பட்டிருக்கிறார்.

 

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/11/141126_espopassed

 

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்! வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளர்!

Share this post


Link to post
Share on other sites

எஸ். பொ காலமானார்

இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான எஸ்.பொ என்று அழைக்கப்படும் ச. பொன்னுத்துரை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.

எஸ். பொ காலமானார்

இறக்கும்போது அவருக்கு வயது 82.

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்ததுடன் இறக்கும்போது ஆஸ்ரேலியாவில் வாழ்ந்திருந்தார்.

ஒரு இடதுசாரி இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட எஸ். பொ அவர்கள், கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புக்களின் சொந்தக்காரராவார். மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது படைப்புக்களில் அடக்கம்.

''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதியுள்ள அவர், சென்னையில் மித்ரா பதிப்பகம் என்னும் பெயரில் வெளியீட்டாளராகவும் செயற்பட்டிருக்கிறார்.

 

ஈழத்து எழுத்துலகில் பாரிய புரட்சி செய்த எழுத்தாளர் ஐயா எஸ்.பொ அவர்களின் மறைவு என்னை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கியது. அவருடன் சேர்ந்து பணி புரிந்தவன் என்ற வகையிலும் ஒரு இலக்கிய ஆர்வலன் என்ற வகையிலும், அவர்களின் மறைவு என்னை பெரிதும் பாதிப்படையச் செய்து விட்டது.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் எனது முதல் தெரிவு இவர்தான் . சடங்கில் தொடங்கியது அந்த பயணம் என்றும் மாறாது . 

Share this post


Link to post
Share on other sites

ஒரு படைப்பாளி மட்டுமல்ல... பழகுவதற்கும் மிகவும் சிறந்த மனிதர்!

 

இவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுக்களை அவுஸில் பல சிறு கருத்தரங்கங்களில் கேட்டு ரசித்துள்ளேன்!

 

அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகளும்!

Share this post


Link to post
Share on other sites

எனது நூல்களில் மூன்றைப் பதிபித்துத் தந்தவர்,  ஒரு நூலுக்கு சிறந்தவோர் அணிந்துரை தந்தவர் ஐயா எஸ்பொ அவர்கள்.  நோய்வாயப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக அறிந்தேன். அதனால் தொடர்புகொள்ள முடியவில்லை.  அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுவதோடு உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகளும்!

Share this post


Link to post
Share on other sites

அவரது ஆன்ம சாந்திக்கு இறைவனை வேண்டுவதோடு உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன் ,ஓம்சாந்தி சாந்தி சாந்தி.

Share this post


Link to post
Share on other sites

அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகளும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

சிறுகதை இலக்கியத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்து எழுத்துலகில் நிலையான ஒரு இடத்தை தனதாக்கிக் கொண்ட திரு. எஸ்.பொ அவர்களின் இழப்பில் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

 அன்னாருக்கு  எம் இரங்கல்களும் அஞ்சலிகளும் உரித்தாகட்டும்.

Share this post


Link to post
Share on other sites

எஸ் .பொ. 
ஜெயகாந்தன்,சுஜாதா ,பாலகுமாரன் வாசித்து திரிந்த காலம் .யாழ் இந்து கல்லூரி பொதுஅறிவு போட்டி இரண்டாவது பரிசு. கிடைத்தது பரிமேலழகர் உரையில் திருக்குறள் ,எஸ் பொ வின் சடங்கு .நாலு பக்கம் வாசித்துவிட்டு ஒழித்து வைத்துவிட்டேன்.வீட்டிற்கு தெரியாமல் பார்க்கும் ஆங்கில படம் போல அந்த வாசிப்பு இருந்தது தான் காரணம் .அப்ப இல்லை இப்ப வாசித்தாலும் எல்லை தாண்டித்தான் அவர் பல எழுத்துக்கள் இருந்தன .(கெட்டவன் நடேசன் பற்றி சொன்னதை யாரால் மறக்கமுடியும் ).
அவரின் அனைத்து படைப்பும் வாசித்திருக்கின்றேன் .அனைவரும் வாசிக்க வேண்டிய அவர் படைப்பு என்றால் தனது மகன் அர்ஜுனாவை பற்றியதுதான் .ஒரு பிள்ளையினதும் அதன் உயிரினதும் பிரிவை அந்த அளவு உயிரோட்டமாக நான் இன்றுவரை வாசித்ததில்லை .
படைப்பாளிகளை பட்டியல் இட்டால் இன்றும் எனது முதலிடம் அவர்தான் .அது கடைசிவரை மாறது என்றும் நம்புகின்றேன்

 

முக புத்தகத்தில் நான் இட்ட பதிவு .

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் நகைச்சுவை கதம்பும் பேச்சுக்களை இனி எப்பொழுது கேட்கமுடியும்?. மாவீரர் ஒருவரின் தந்தை இவர். மாவீர்ர் தினத்தில் இன்று இன்னுமொரு சோகச் செய்தி.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த, அனுதாபங்கள் .

Share this post


Link to post
Share on other sites

மூத்த எழுத்தாளர் எஸ்.பொவின் மறைவினால் துயருற்றிருக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஈழத்துப் புனைவுலகில் முன்னோடியான அவருடைய பல நாவல்களையும் கட்டுரைகளையும் படித்ததனாலேயே எமது சமூகத்தைப் பற்றிய பல விடயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு