Jump to content

France - La Chapelle இல் அண்ணன் பிறந்த நாள் நிகழ்வு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் பிறந்த நாள் நிகழ்வும் பாடல்  இசைத்தட்டு வெளியீடும்.........

photo_2.jpg

மாவீரர் வாரத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகள்.

photo_3.jpgphoto_4.jpgphoto_5.jpg

பிறந்தநாள் அரங்கமும் வந்திருந்த சனக்கூட்டமும்...

photo_1.jpgphoto_2.jpgphoto_4.jpgphoto_5.jpg

photo_1.jpgphoto_2.jpg

இசைத்தட்டு வெளியீடு..........photo_4.jpgphoto_5.jpg

அங்காங்கே

கேக் வெட்டி

வழிப்போக்கர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழும் மக்கள்........

photo_1.jpgphoto_2.jpgphoto_3.jpgphoto_5.jpg

வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் இசைத்தட்டும்

அதனுடன் தரப்பட்ட தலைவர் விருதும் (இலச்சினை)...

photo_3.jpgphoto_4.jpgphoto_1.jpgphoto_2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோதரா 

Link to comment
Share on other sites

முள்ளிவாயக்கால் பேரவலத்துக்கு பின்னர் மாவீரர் நாள் தவிர்த்து அதிகளவு மக்கள் வந்து கலந்து கொண்ட நிகழ்வு இது தான் என்று என்று நினைக்கிறேன்.துரோகி எதிர் தியாகி அரசியலை முன்னிறுத்தி வியாபார அரசியல் நடத்திவந்தவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஒன்றுமையை வலியுறுத்துபவர்கள் முன்னிறுத்தப்பட்டதும் மக்கள் இனியும் இவர்கள் சொல்லும் 'பொய்களை நம்பத் தயாராக இல்லை ஒற்றுமையே பலம்' என்பதை உணர்ந்துவிட்டதும் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன்.நான் நேற்று ஜீரிவிக்காக செவ்வி கண்டவர்களில் பெரும்பாலானவர் இந்த கருத்தைத் தான் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் தமிழ் மக்கள் படை 
தமிழர் உள்ளவரை புலிபடைக்கு அழிவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஆட்டம்

பாட்டம்

குத்தாட்டம்

அடுத்த நாள்

கண்ணீர் மல்க

மாவீரர் தின அஞ்சலி

மாவீரர் வாரத்தினை இந்தளவுக்கு கேவலமாக அனுட்டிக்க

உலகின் வேறு எந்த இனத்தினாலும் முடியாது

ஒரு பக்கம்

நாதி அற்றுப் போய் தெருத்தெருவாய் அலையும் முன்னால் ஆண் போராளிகள்

உடலையே மூலதனமாக்கி உயிர்வாழ வேண்டிய நிலையில் முன்னால் பெண் போரளிகள்

காணாமல் போன தம் உறவுகளை மீட்க கோரி அழுது குளறி போராடும் பெற்றோர்கள்

ஆனால் இவர்களுக்கு தலைவர் பெயரில் குத்தாட்டமும், கேக் வெட்டி கொண்டாட்டமும்

தலைவரின் உண்மையான விசுவாசி எவரும்

தலைவரின் கொள்கைகளை பின்பற்றும் எந்த தமிழரும்

அவரின் எளிமையான வாழ்வை புரிந்த யாரும்

இப்படி

முதல் நாள் கொண்டாட்டம்

அடுத்த நாள் நாற்பதாயிரம் போராளிகளுக்கு கண்ணீர் அஞ்சலி

என்று

இரட்டை வேடம் போட மாட்டினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன கிழமை தான் எனது சொந்த அண்ணனும் இறந்திருந்தார்...

தலைவரது பிறந்தநாள் விழாவுக்கு நானும் போயிருந்தேன்..

அங்கு எழுச்சியும் சோகமும் பெரும் அமைதியும் குடிகொண்டிருந்ததே அன்றி

கொண்டாட்டமாக  இருக்கவில்லை

ஆனாலும்

அது செய்யப்படவேண்டிய  நிகழ்வாகவே எனக்குப்பட்டது 

காரணம்

மக்கள் தம்மை அழைத்துச்செல்ல ஒரு கையை  

அல்லது ஒழுங்கமைப்பை எதிர்பார்த்து காத்திருப்பது தெரிந்தது

தெரிகிறது

அதற்கு இது போன்ற  நிகழ்வுகள் நிச்சயம் பயன்படும் என்பது எனது கணிப்பு

அங்கு போயிருந்தபோது

அங்கு கண்டவை  

வந்தவர்களுடன் பேசியபோது

இதை உறுதி  செய்தன....

10384129_591792217616685_492988447135860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் அங்கு வந்தீர்களா?

என்னைத்தெரிந்து கொண்டு தான்

என்னிடம் பேட்டி எடுத்தீர்கள் என நினைத்திருந்தேன்.... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தம்மை அழைத்துச்செல்ல ஒரு கையை  

அல்லது ஒழுங்கமைப்பை எதிர்பார்த்து காத்திருப்பது தெரிந்தது

தெரிகிறது

அதற்கு இது போன்ற  நிகழ்வுகள் நிச்சயம் பயன்படும் என்பது எனது கணிப்பு

அங்கு போயிருந்தபோது

அங்கு கண்டவை  

வந்தவர்களுடன் பேசியபோது

இதை உறுதி  செய்தன....

ஏற்கனவே நிறையப் பேர் அழைத்துச் செல்லத் தாம்தான் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். மக்கள் ஏன் அவர்களை நம்பாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நிறையப் பேர் அழைத்துச் செல்லத் தாம்தான் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். மக்கள் ஏன் அவர்களை நம்பாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் ஆராயவேண்டும்.

நான்  சொல்வது

தலைவருடைய நிகழ்வில்

அவருடைய கனவை புரிந்து கொண்டவர்கள் பலரைக்காணக்கூடியதாக இருந்தது

அவர்கள் இணையணும் என்பதே...

அதன் மூலம் ஒரு பாதை தெரியணும் என்பதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்  சொல்வது

தலைவருடைய நிகழ்வில்

அவருடைய கனவை புரிந்து கொண்டவர்கள் பலரைக்காணக்கூடியதாக இருந்தது

அவர்கள் இணையணும் என்பதே...

அதன் மூலம் ஒரு பாதை தெரியணும் என்பதே....

தலைவருடைய கனவைப் புரிந்துகொண்டவர்கள் மக்களில் நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஆனால் மேய்ப்பர்கள் என்போர் அவருடைய கனவைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடைய கனவைப் புரிந்துகொண்டவர்கள் மக்களில் நிறையப்பேர் இருக்கின்றார்கள். ஆனால் மேய்ப்பர்கள் என்போர் அவருடைய கனவைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பார்வையாளர்களாக இல்லாது

செயற்பாட்டாளர்களாக எல்லோரும்  மாறும் காலம்வரணும்

அது  வரும்வரை

இப்படியே

ஒவ்வொருத்தனை ஒருவன் திட்டிக்கொண்டிருபஇபதை என்னவென்பது....?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களாக இல்லாது

செயற்பாட்டாளர்களாக எல்லோரும்  மாறும் காலம்வரணும்

அது  வரும்வரை

இப்படியே

ஒவ்வொருத்தனை ஒருவன் திட்டிக்கொண்டிருபஇபதை என்னவென்பது....?? :(

இப்போ யாரு யாரைத் திட்டினாக?

நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக மேய்ப்பர்கள் இல்லையென்பதுதான் செயற்பாட்டார்களாக மாறாமல் பார்வையாளர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணம். எனவே விமர்சனங்களைத் திட்டுக்கள் என்று நினைக்காமல் எப்படி நம்பிக்கையூட்டுபவர்களாகச் செயற்படவேண்டும் என்பதை உங்களுக்குத் தெரிந்த மேய்ப்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்த வருடங்களும் இதே கதையைத்தான் நீங்களும் நாங்களும் கதைக்கவேண்டியிருக்கும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாரு யாரைத் திட்டினாக?

நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக மேய்ப்பர்கள் இல்லையென்பதுதான் செயற்பாட்டார்களாக மாறாமல் பார்வையாளர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணம். எனவே விமர்சனங்களைத் திட்டுக்கள் என்று நினைக்காமல் எப்படி நம்பிக்கையூட்டுபவர்களாகச் செயற்படவேண்டும் என்பதை உங்களுக்குத் தெரிந்த மேய்ப்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்த வருடங்களும் இதே கதையைத்தான் நீங்களும் நாங்களும் கதைக்கவேண்டியிருக்கும் :icon_idea:

தமிழ் ஈழம் கிடைத்தால் ....... விசுகு அண்ணாவிற்கு ஐந்து பரப்பு காணி இலவசமா ??
அதை ஏன் நீங்கள் நேரில் சென்று சொல்ல முடியாது ??
 
(அடுத்தவனை தள்ளிவிட்டால் .......... ஏதும் தவறு நடந்தால் லாபகமாக விமர்சனம் செய்துகொண்டு தொடரலாம் என்பதாலா?? )

யார் கண்டார்கள். ஐந்து பரப்பல்ல. ஐம்பதும் கிடைக்கலாம்.

எனக்குத் தெரிந்த மேய்ப்பர்களுக்கு சொல்லுவதில் எனக்கு தயக்கம் இருந்ததில்லை. சொல்லாமலும் விட்டதில்லை.

Link to comment
Share on other sites

இப்போ யாரு யாரைத் திட்டினாக?

நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக மேய்ப்பர்கள் இல்லையென்பதுதான் செயற்பாட்டார்களாக மாறாமல் பார்வையாளர்களாக இருப்பதற்கு முக்கியமான காரணம். எனவே விமர்சனங்களைத் திட்டுக்கள் என்று நினைக்காமல் எப்படி நம்பிக்கையூட்டுபவர்களாகச் செயற்படவேண்டும் என்பதை உங்களுக்குத் தெரிந்த மேய்ப்பர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்த வருடங்களும் இதே கதையைத்தான் நீங்களும் நாங்களும் கதைக்கவேண்டியிருக்கும் :icon_idea:

நீங்களே நம்பிக்கையூட்டக்கூடிய மேய்ப்பராக இருக்க முன்வந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்படலாமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.