Jump to content

ஓடிப்போதல் ...!


Recommended Posts

ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல் எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது,  அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று .அல்லது இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட  ஓடிப்போனவன்  என்று ,சொல்லும்  போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி  ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டா  உனக்கு இப்ப முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு என்று கிழவி கலைக்கும் ..

பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது ஊரே ஒரே பரபரப்பு, இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறன் சரி அடிபாடு தொடங்க போகுது என்று, எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓடி விடுப்பு பார்ப்பதுமா சனம் சமையல் ..வீட்டு வேலை எல்லாம் விட்டுட்டு இதே வேலையா திரியுது ஊரில ..

அட அப்படி என்னதான் நடக்கு என்று நானும் களத்தில இறங்கினன் .விஷயம் இதுதான் ஓடிப்போயிட்டினமாம். இருவரும் கலியாணம் கட்டி என்று கதை காதில் விழுகுது ஓ, நீண்டநாள் தேடல் எல்லோ; இந்த ஓடிப்போதல் எப்படி என்று எப்படி முழுவிபரம் அறிவது என்று அடுத்த பிரச்சினை.சரி முதல் கூட்டி கொண்டு போன அண்ணன் வீட்டுக்கு போய் விடுப்பு பார்ப்பம் என்று அங்க போனேன். திண்ணையில இருந்து ஆச்சி ஒருஆள் குரல் எடுத்து அழுகுது ஐயோ ஒன்றும் தெரியாத என்ற பெடிய கூட்டிட்டு போயிட்டாள், படுபாவி நல்லாவே இருக்க மாட்டாள் என்று கிழவி தான சாபம் போடுது ..

அனா கிழவி சும்மா இரன எதுக்கு தீட்டி தீர்க்கிற என்று பக்கத்தில இருந்து ஐயா ஒராள் சொல்லுறார் ..அதுக்கு கிழவி பாரடி மோளே தன்னுடைய சொந்தம் பந்தம் என்று அப்படி பேசுறான், இவன் இவனும் சேர்த்துதான் கூட்டி விட்டு இருக்கிறான் போல ..முதல் தந்தி அனுப்பு கொழும்பில உள்ள மூத்தவனுக்கு வரட்டும் அவன் வந்தால் தான் எல்லாம் சரிவரும் எல்லலோரையும் வெட்டி போடுவான் ..

ஐயோ என்ற ஒரேஒரு குஞ்சு பொத்தி பொத்தி வளர்த்தேன் என்ன மாயம் மந்திரம் செய்து கொண்டு போனாளோ, ஆத்தையும் மகளுமா சேர்த்து வசியம் வைத்து இருப்பாளுகள் ..அடிக்கடி அவள் இங்கின கோயிலுக்கு வரும்போதே எனக்கு தெரியும் என்னவோ நடக்க போகுது என்று.. நான் தான் கொஞ்சம் அலட்சியமா இருந்திட்டன் போல என்று தலையில் அடித்து அழுதா அந்த வீட்டுக்கார அம்மா ..என்னடா இது கொடுமை கலியாணம் தானே நடந்தது எதுக்கு இப்படி ஒப்பாரி என்று எனக்கு ஒரே குழப்பம் ..இன்னொரு அக்கா வேகமா வந்தா அவன் பந்து விளையாடி போட்டு தம்பியாரோட அங்க போய் இருக்கிறான் அப்பத்தான் அவளுகள் எதோ தேத்தண்ணியில் எதோ போட்டு கொடுத்து இருக்கிராளுகள் ஆச்சி ..அவ்வளவுதான் சும்மா இருந்த கிழவி எனக்கு தெரியும் எனக்கு தெரியும் அவன் லேசில எடுபட மாட்டன் என்னவோ செய்துதான் கொண்டு போயிட்டாளுகள் என்று மீண்டும் தொடங்கிட்டு ..

அட இப்படி மாறி மாறி அழுதண்டு இருக்குதுக நாம இதுல நிண்டு ஒரு பிரயோசனமும் இல்லை என்னும் ஒரு முடிவுடன், கிளம்பி அந்த கலியாணம் கட்டின அக்கா வீட்டுக்கு போனேன் பக்கத்தில் தான் ஒரே வட்டாரம் ஒரு கிலோமீட்டர் தூரம் தான் அங்க போய் சேர்த்தா ஒரு நாலுபேர் கூடி இருந்து வரட்டும் வரட்டும் யாரு வருவீனம் என்று பார்ப்பம் டேய் அந்த அலவாங்கை எடுத்து தாவாரத்தில் வை ,கோடாலி பிடியை கலட்டி பிறம்பா வை ,சிலவேளை மேற்க்கில இருக்கிற மாமன் வருவார் அவர் கொஞ்சம் சண்டித்தன பார்ட்டி ஆ.. ஊ என்றால் போட்டு பிடிச்சு அனுப்புவம் ...

இப்படி பெண்ணு வீட்டில ஒரே வன்முறை கதையா இருக்கு சரி நான் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறான் பாருங்கோ ...நமக்கு சின்னனில் இருந்தே சண்டை படம் பார்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் இங்க வேற அதுதான் நடக்க போகுது என்று உள்ளுக்குள்ள குதூகலிப்பு ,அட இந்த மாப்பிளை பொண்ணு எங்க என்று தேடிபார்த்தேன் இந்த ஓடிப்போதல் விஷயம் என்ன கேட்பம் என்று ஆக்களை காணவில்லை,சிறிய குடில் வீடு முன்னுக்கு திண்ணையுடன் சேர்த்து ஒரு வரவேற்ப்பு இடம் உள்ள ஒரு அறை அது நாலுபக்கமும் கிடுகு கொண்டு அமைக்கபட்ட தட்டி ,போறவன் வாறவன் எல்லாம் அந்த தட்டியை பிரிச்சு உள்ளார எட்டி பார்க்கிறான் புது மாப்பிளை பொண்ணு அங்கதான் இருக்கினமாம் என்று ,சரி நானும் ஓடிப்போய் ஒரு இடைவெளியை பிடிச்சு எட்டி பார்த்தேன் ..

இருவரும் இருக்கினம் அந்த அண்ணை அழுதுகிட்டு இருக்கிறார் பாவம் அப்பாவிதான் என்று, இப்ப விளங்குது அந்த கிழவி அழுதது போல ஒன்னும் தெரியாத ஆள் போல்தான் இருக்கிறார். அந்த அக்கா எதோ நாடியை பிடிச்சு எதோ சொல்ல தலை தலை ஆட்டுறார் அவர் ..எனக்கு பின்னால வந்து அப்பத்தா ஒன்னு போட்டா எங்க நிக்கிற நான் இந்த உலகம் எல்லாம் தேடிக்கொண்டு வாறன் இங்க வந்து வாய் பார்த்துக்கொண்டு நிக்கிற ஓடுடா வீட்ட என்று கிழவி தடி முறிக்குது எட்டி பூவரசில ..

அடசீ சண்டை எல்லாம் நடக்க போகுது என்று நான் இருக்க கிழவி குழப்பி போட்டுது  என்று ஒரு எட்டில எட்டி கடப்பல பாய்ந்து போவம் என்று ஓட பழைய ஆமைக்கார் ஒன்று வந்து நிக்குது படலையில ,இந்த பெரியவன் வந்திட்டான் என்று எல்லோரும் படலைக்கு ஓடி வர நானும் ஆக்களோட ஆக்களா கலந்து உள்ளோ போனேன், நம்ம அப்பத்தாவும் அங்கின நிண்டுட்டா ,அந்த கலியாணம் கட்டின அக்கா வந்து காலில விழுந்து அண்ணே சேர்த்து வையுங்க என்று காலை பிடிச்சு அழுகுது அந்த அண்ணை அப்படியே ஒரு பார்வை பார்த்திட்டு ,சரி அழாத அதுதான் அண்ணன் வந்திட்டன் எல்லோ எழும்பு என்று ஒரு அதட்டு அதட்டி கூட்டி போனார் பிறகு என்ன கொஞ்சநேரம் மந்திர ஆலோசனை ..சரி நான் மட்டும் போறன் அங்க போய் கதைச்சுபோட்டு வாறன் என்ன சொல்லினம் என்று கேட்டுட்டு அடுத்த முடிவை எடுப்பம் என்று சொல்ல ,இல்லை இல்லை தனிய போகவேணாம் அவன் மாமன் ஆராவது வந்து நிண்டால் பிரச்சினை அடிதடியா போயிடும் என்று பொண்ணின் அம்மா மறிக்க, எங்க அப்பத்தா அடி போடி அதுகள் நல்ல குடும்பம் அப்படி ஒன்றும் செய்யாதுகள் நீ நடவடா மகனே நானும் வாறன் என்று சொன்னா ..

பிறகு என்ன எங்க அப்பத்தாக்கு கொஞ்ச பயம் இருக்கு ஊரில அவாக்கு ஐந்து ஆண்பிள்ளை மனுசிக்கு ஒன்று என்றால் அங்க ஒருவன் மிஞ்ச முடியாது அதால இந்த சின்ன லொட்டு லோடுக்கு பஞ்சாயத்து எல்லாம் அப்பத்தா செய்வா ,சரி கிழவி கூட்டிட்டு போனா நானும் மசுந்தி மசுந்து பின்னாடி போனேன் அங்க படலையை திறந்து போனது தான் காணும். எல்லோரும் அந்தா வாறான் மாப்பிளையை கொண்டுபோய் வீட்டில வைச்சுட்டு என்ன மூஞ்சியை கொண்டு வாறன் என்று அங்க உள்ள கிழவி கோஷம் போடுது ..

உடனம் எங்க அப்பத்தா சரி சரி கொஞ்சம் சும்மா இரு சின்னன் சிறுசுகள் எதோ காதல் பண்ணி ஓடிபோட்டுதுகள் அதுக்கு இப்ப என்ன கள்ளன் ...காடன்கூடவா போனதுகள் இல்லையே ஒரு இனம் சனம் பின்ன எதுக்கு சும்மா கர.. கர என்று கொண்டு இருக்கிற ,இனி ஆகுற வேலையை பார்க்காமல் பழைய கதைகளை கதைச்சுக்கொண்டு என்னடா நீ என்ன சொல்லுற இந்தா பொண்ணின் அண்ணன் வந்து நிக்கிறான் பேசுறதை பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ..

கொஞ்சம் நேரம் மவுனம் பிறகு பொடியனின் தாய் கதையை தொடங்கினா அவன் ஒரு மகன் நான் பெரிசா கலியாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டனான் மற்றும்படி ஒன்றும் இல்லை நீங்க செய்வதை செய்தா சரி தம்பி ,அப்பத்தா குறுக்கிட்டு என்ன செய்யுறது அதையும் சொல்லு காசா ..நகையா வீடு காணியா எல்லாம் பேசி முடியுங்க பிறகு ஆளை ஆள் ஏமாற்றி போட்டினம் என்று ஊருக்க பேசிட்டு திரியாமல் ,இல்லை கிழவி அவனுக்கு எங்க சொத்து இருக்கு எங்களுக்கு ஒன்னும் வேணாம் என்று முடிக்க பொண்ணின் அண்ணன் சொன்னார் சரி நாங்களே கலியாண செலவு எல்லாம் செய்கிறம் மற்றும்படி அவளுக்கு கொடுக்க வேண்டிய எல்லாம் கொடுத்து அனுப்புவம் ,வேற எதவது எதிர்பார்த்தா சொல்லுங்க செய்கிறம் என்றார் ,அடுத்த கிழமை நல்ல நாள் வந்து கை நனைச்சுட்டு போறம் பிறகு கலியாண நாள் வைப்பன் ...

அட பாவிகள் அடிபாடி சண்டை என்று எல்லாம் பெரிய பில்டாப்பு விட்டுட்டு இப்படி சும்மா பேச்சில முடிச்சு போயிட்டு என்னும் ஆதங்கம் நமக்கு ,எல்லாம் இந்த அப்பத்தா கிழவி சும்மா இருக்காமல்  நாட்டாமை பண்ணிட்டு என்று மனதுக்குள் பேசிக்கொண்டு ஒருமாதிரி இந்த ஓடிப்போதல் என்பதுக்கு விளக்கம் பிடிச்சன் என்னும் சந்தோசம் மட்டும் எட்டி பார்க்குது ...
இதுக்குத்தான் ஊருக்க இரண்டு மூணு கிழவிகள் இருக்க வேணும் இப்படியான பிரச்சினைகளை சுமூகமா தீர்த்து வைக்க அனுபவம் வாழ்க்கைக்கு முக்கியம் ..

என்ன இருவர் விருப்பபட்டு  வீட்டின் அனுமதி இல்லாமல் கலியாணம் கட்டினா அதுக்கு பெயர்தான். ஓடுப்போய் கட்டுவது என்று ஒரு பெரிய கண்டுபிடிப்புடன் வளர்த்த பின் நானும் ஓடிப்போனது வேறு கதை பாருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிபோதல் ...அதாவது கந்தர்வ திருமணம் செய்வது என்பது என்னைப் போல கோழைகளால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று....
ம்ம்ம் அது சரி என்னுடன் ஓடி வர ஒரு ஜீவன்  இருந்ததா / இல்ல இருக்கா தான் என்ன ? !!

Link to comment
Share on other sites

ஓடிபோதல் ...அதாவது கந்தர்வ திருமணம் செய்வது என்பது என்னைப் போல கோழைகளால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று....

ம்ம்ம் அது சரி என்னுடன் ஓடி வர ஒரு ஜீவன்  இருந்ததா / இல்ல இருக்கா தான் என்ன ? !!

நன்றி சசி  வர்ணன் அண்ணே ..வருகைக்கு கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிட்டாளாம் என்று முதன்முதல் கேட்டபோது அவர்கள் ஏன் ஓடிக் களைக்காமல் நடந்து போகவில்லை என்று நினைக்கிற வயசில் இருந்தேன். இலண்டனில்கூட ஒருத்தி தனக்குப் பிடித்தவனுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழப் போனால் அவளையும் ஓடிப்போனவள் என்றுதான் கதைக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

நானும் கனதரம் ஓடியிருக்கிறன் ..ஆனால் தனியாத்தான் ..எண்பதுகளுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் யாராவது சோடிகள் ஒடுவதென்றால் ..பெரும்பாலும் வன்னிக்கு தான் ஓடுவார்கள் .வந்தவரையெல்லாம் வாழ வைக்கும் நிலமாகவே அன்றிலிருந்து வன்னி இருந்திருகிறது .

 

Link to comment
Share on other sites

ஓடிட்டாளாம் என்று முதன்முதல் கேட்டபோது அவர்கள் ஏன் ஓடிக் களைக்காமல் நடந்து போகவில்லை என்று நினைக்கிற வயசில் இருந்தேன். இலண்டனில்கூட ஒருத்தி தனக்குப் பிடித்தவனுடன் ஒன்றாகச் சேர்ந்து வாழப் போனால் அவளையும் ஓடிப்போனவள் என்றுதான் கதைக்கின்றார்கள்.

எப்படிபட்ட  சமூகமா வளர்க்கபட்டு  இருக்கு  எங்க இனம்  :rolleyes:

நானும் கனதரம் ஓடியிருக்கிறன் ..ஆனால் தனியாத்தான் ..எண்பதுகளுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் யாராவது சோடிகள் ஒடுவதென்றால் ..பெரும்பாலும் வன்னிக்கு தான் ஓடுவார்கள் .வந்தவரையெல்லாம் வாழ வைக்கும் நிலமாகவே அன்றிலிருந்து வன்னி இருந்திருகிறது .

வன்னி தான்  தேடி  வந்தாலும் பிடிக்க முடியாது  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.