Jump to content

ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம்


Recommended Posts

ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம்

mhgbkk.jpg

 

ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிலல் ஆஸ்கர்(55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஹிலல் அம்பயராக இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து வேகமாக வந்து ஹிலலின் தலையில் பட்டது. இதில் கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவுக்கு இஸ்ரேலிய கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. ஹிலல் சர்வதேச போட்டிகளிலும் அம்பயராக இருந்தவர். ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் விளையாடிய அந்நாட்டு வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்துபட்டதில் அவர் மரணம் அடைந்தார்.

 

அவர் இறந்த 2 நாட்களில் ஹிலலும் தலையில் பந்து பட்டு இறந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹிலலின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் இது ஏதேச்சையாக நடந்தது தான் என்றும், திட்டமிட்ட காரியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/israeli-umpire-dies-after-ball-strikes-his-head-215991.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1dd038f828f3703d944cca13a2b40319.jpg

இஸ்ரேலின் அஸ்டோட் நகரில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய ஹிலல் ஆஸ்கர் தாடையில் பந்து தாக்கியதில் மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் நடுவர் ஒருவர் பந்து தாக்கியதில் மரணமடைந்துள்ளார். இஸ்ரேலின் அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 60 வயதான ஹிலல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார்.

 
பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தபோது, அதிலிருந்து அவர் தப்பிக்க முயன்ற போது, பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
மிகசிறந்த மனிதரான அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் என்று ஐரோப்பிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவரது மரணத்துக்கு அனைத்து வீரர்களும், இஸ்ரேல் கிரிக்கெட் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=456523687730241914

Link to comment
Share on other sites

பந்து தாக்கி அம்பயர் மரணம்: கிரிக்கெட்டில் அடுத்த அதிர்ச்சி
நவம்பர் 30, 2014

 

அஸ்தோத்: பிலிப் ஹியுஸ் மரணம் அடைந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், இன்னொரு சோகம் கிரிக்கெட் அரங்கை உலுக்கியுள்ளது. இம்முறை பந்து தாக்கியதில் இஸ்ரேல் அம்பயர்

ஹிலெல் அவாஸ்கர் பரிதாபமாக மரணமடைந்தார்.

இஸ்ரேலில் உள்ள அஸ்தோத் நகரில் இஸ்ரேல் லீக் தொடர் நடந்தது. இதில் பேட்ஸ்மேன் ஒருவர் விளாசிய பந்து, நேராக எதிரிலிருந்த ‘ஸ்டெம்பில்’ பட்டு, பின் அருகில் நின்றிருந்த அம்பயர் ஹிலெல் அவாஸ்கரின் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கியிருக்கிறது. இதில் நிலைகுலைந்த இவர் கீழே விழுந்தார். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.      

பந்து தாக்கிய உடன், அவாஸ்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்திய வம்சாவளி: இந்தியாவில் பிறந்தவர் அவாஸ்கர்,55. பின் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்துள்ளார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்த இவர், ஐ.சி.சி., தொடர்களில் பங்கேற்றுள்ளார். சிறந்த ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேனான இவர், சுழற்பந்துவீச்சிலும் முத்திரை பதித்துள்ளார். பொதுவாக, இஸ்ரேலில் கிரிக்கெட் பிரபலம் இல்லை. இங்குள்ள இந்திய வம்சாவளியினர் காரணமாக கிரிக்கெட் சில பகுதிகளில் மட்டும் விளையாடப்படுகிறது.

 

இஸ்ரேல் கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி கட்கார் கூறுகையில்,‘‘பந்து வேகமாக வருவதை கண்ட ஹிலெல் தப்பிக்க பார்த்துள்ளார். அதற்குள் அவரை பதம் பார்த்து விட்டது. இவரது தலை மற்றும் நெஞ்சு பகுதியை தாக்கியதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வரும்,’’என்றார்.      

தொடரும் சோகம்

அம்பயர்கள் பொதுவாக ‘ஹெல்மெட்’ அணிவது கிடையாது. இதன் காரணமாக மரணம் ஏற்படுவது உண்டு. அவாஸ்கருக்கு முன், 2009ல்

வேல்சில் நடந்த உள்ளூர் போட்டியல் ‘பீல்டர்’ ஒருவர் எறிந்த பந்து தலையில் பட்டு இங்கிலாந்தை சேர்ந்த மூத்த அம்பயர் அலிவின் ஜென்கின்ஸ், 72, மரணம் அடைந்தார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1417330813/cricket.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.