Jump to content

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு


Recommended Posts

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மலையக மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு......

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனிப்பாரற்று காணப்படும். எம் உறவுகளான மலையக தமிழ் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன். வரலாற்றில் முதற் தடவையாக க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஹட்டன் வலயத்திற்குட்பட்ட மிகவும் பின் தங்கிய தமிழ் பாடசாலைகளான டிக்கொயா தமிழ் மகா வித்தியாலயம்,கணபதி தமிழ் மகா வித்தியாலயம்,டன்கில்ட் தமிழ் வித்தியாலயம்,மற்றும் கார்பக்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றை சேர்ந்த நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்களை ஒன்றினைத்து இரு நிலையங்களில் கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கு இடம் பெற்றது.

இக் கருத்தரங்கிற்கு அனுமதி வழங்கிய ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள் அத்துடன் வளவாளர்களாக பணியாற்றிய மாணவர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள் அனைவருக்கும் மாணவர் ஒன்றியத்தின் சார்பில் நன்றிகள்.

10155583_796348233757862_563311517937868

10686781_796348203757865_501909618213301

10698399_796348300424522_553241801683414

10414651_796348157091203_262055488094460

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.