• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

பேஸ்புக்கை ஓரங்கட்டி வரும் வாட்ஸாப்..! 700 மில்லியன் பயனர்களை கடந்து அபார வளர்ச்சியடைகிறது!

Recommended Posts

whatsapp-301114-350-seithy-technews.jpg

சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

   

அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை உபயோயிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதன் தாக்கமாக, பேஸ்புக்கின் லாபம் கணிசமாகக் குறைந்ததுடன், அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது 700 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள வாட்ஸாப் இன்னும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=121787&category=CommonNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

வாட்ஸாப் நிறுவனத்தினை பேஸ்பு ஏற்கனவே வாங்கிவிட்டதே. இனி வளர்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன.  :)

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • எமக்கு அண்மையிலேயே ஒரு மியூசியமும் இருந்தது. அங்கே ஒவ்வொருநாளும் கலை நிகழ்வுகளும் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன. அதிலும் அப்சரா நடனம் மிகவும் பிரசித்திபெற்றது. இன்று மாலை ஆறு மணி தொடக்கம் எட்டுமணிவரை அதைச்சென்று பார்ப்பதாக முடிவெடுத்துவிட்டு காலையில் தங்குமிடத்திலேயே  காலை உணவை முடித்துக்கொண்டு இன்று மாலை வரை என்ன செய்வது என்று யோசித்தோம். நாம் தங்கியிருந்த விடுதிக்கு முன்பாக நான்கு ஓட்டோக்கள் எப்போதும் நிற்கும். எமது வதிவிடத்துக்கு அண்மையிலேயே பார்க்கவேண்டிய அதிக இடங்கள் இருந்ததனால் நாம் நடந்து சென்று எல்லாவற்றையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒவ்வொருதடவையும் நாம் வெளியே செல்லும்போது அவர்கள் நால்வரும் ஓட்டோவில் வருகிறீர்களா என்று கேட்பார்கள். நாமும் வேண்டாம் என்று சிறிததபடி தலையாட்டிவிட்டுச் செல்வோம். அன்றும் வெளியில் வர மற்றைய மூவரும் இதுகளைக் கேட்டுப் பயனில்லை என்று எம்மைப் பார்த்துவிட்டுப் பேசாது நிற்க ஒருவன் மட்டும் வழமைபோல் என் ஓட்டோவில் வருகிறீர்களா என்றான் சிரித்தபடி. வருகிறோம் என்றுவிட்டு போகவேண்டிய இடத்தைக் கூறி ஏறி அமர்ந்தோம். ஒரு அழகிய விகாரையின் முன்பாக ஓட்டோ நிற்க அவனின் தொலைபேசி இலக்கத்தை வாங்கிவிட்டு இரண்டு மணி நேரத்தில் வா என்கிறோம். Wat Phnom என்று அழைக்கப்பட்ட ஒரு மேட்டில் அமைந்துள்ள ஒரு பெளத்த விகாரை அங்கு அமைந்திருக்கின்றது. பெண் என்னும் விதவைப் பாட்டி ஒருவர் கண்டுபிடித்த மரத்தின் உள்ளே நான்கு வெண்கலப் புத்தர் சிலைகள் காணப்பட்டனவாம்.அச் சிலைகளைப் பாதுகாப்பதற்கு கிராம மக்களால் ஒரு சிறு குன்று அமைக்கப்பட்டு பென் என்னும் அந்தப் பணக்காரப் பெண் அங்கு ஒரு சிறிய கோவிலைக் காட்டினாராம். அதுவே பின் அவர்களின் புனித இடமாக மாறிப் போற்றப்படுகிறதாம். படிகளும் பெரிய மரநிழல்களுமாக எம்மைக் கவரக்கூடியதாகவே அச் சூழல் அமைந்திருந்தது. ஆனால் நாம் மேலே சென்று பார்த்தால் ஒரு சிறிய விகாரைத்தான் எனினும் அமைவிடத்தைப் பொறுத்து அழகாகக் காட்சி தந்தது. பலர் குடும்பமாகவும் தனியாகவும் வந்து வணங்கியபடி சென்றுகொண்டிருந்தனர். நாம் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளையும் போவோர் வருவோரையும் சிறிதுநேரம் இரசித்தோம். சுற்றிவர அரைநெல்லி மரம், பாக்கு மரம் புளிய மரம் என்று கண்ணுக்கு அழகையும் சூழலை அழகாகிக்கொண்டுமிருந்தது. ஒரு கோழியும் அதன் குஞ்சுகளும் அவ்விதத்தில் இரைதேடிக்கொண்டிருந்தன. அதை பார்த்ததும் எம் ஊர் நினைவில் வர மனதை ஒரு வேதனையும் அழுத்தியது. ஊருக்குச் சென்றாலும்கூட இனிமேல் இப்படியான ஒரு காட்சியைப் பார்க்க முடியாது. ஏனெனில் கோழியின் எச்சங்கள் வீடுவளவுகளை அசிங்கப் படுத்துகிறது என்று இப்போதெல்லாம் அங்கு வீடுகளில் கோழிகளை வளர்ப்பதில்லை என்பதை அங்கு சென்றிருந்தபோது பாத்தேன். அரை மணி நேரம் அங்கே இருந்தபின் கீழே இறங்கிவந்தால் ஒரு பெரிய கடிகாரம் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. புற்களின் நடுவே புற்களால் அலங்கரிக்கப்பட்டுப் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது. கீழே வந்து அதைப் பார்த்தபின் ஓட்டோவுக்குப் போன் செய்ய பத்து நிமிடத்தில் வருவதாகக் கூறி வந்து சேந்தார். மதிய உணவை உண்டுவிட்டு நம் பென்னில் இருந்த பெரிய ஒரு கிடைத்த தெருவுக்குச் சென்றோம். பெரிய ஒரு மண்டபத்திலும் அதைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மத்திய சந்தைக்குச் சென்றால் வழமைபோல் புதியவர்களான எம்மைக் கண்டதும் விலைகள் உச்சமாகக் கூறப்பட்டன. விலை அதிகமாக இருக்கே என்றதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் உங்களுக்கு இது அதிகமா என்ற அலட்சியப் பேச்சு. பல கடைகளில் நாம் போய் கடைக்காரர்கள் வருவதற்காகக் காத்திருந்தாலும் அவர்கள் எம்மை ஏனென்றும் கேட்கவில்லை. அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட என்ன காரணம் என்றும் புரியவில்லை. அதனால் அதிக பொருட்களை வாங்காது சிலதை  மட்டும் வாங்கிவிட்டு தங்குமிடத்துக்குத் திரும்பினோம்.  
    • எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்
    • அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள்.  அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத்  தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள். அவளது பிள்ளைகளுக்கு முன்னாலேயே “பெட்டை நாய், பரத்தை” என்று பேசிக் கொண்டும் இருந்தான். நாளடைவில் அவனது ஏச்சுக்களும் தாக்குதல்களும் மணிக்கணக்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. Adrianக்கும் Natascha வுக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஆரம்பமாவதால்  ஒரு கட்டத்தில் அவள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு Adrian இடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். பின்னர் இருவருக்கும்  சமரசம் ஏற்பட மீண்டும் இணைந்து கொண்டார்கள்.  14.12.2019இல்  தங்கள் இருவருக்கும் உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இருவருக்கும் இடையில்  சண்டை ஆரம்பித்தது. Adrian உடனடியாகவே Natascha வைத் தாக்க ஆரம்பித்து விட்டான். அவனது தாக்குதலுக்கு மத்தியிலும் Natascha தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி நிலவறைக்குள் மறைந்து கொண்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளது குடியிருப்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவளுக்கு உதவியாக நின்றார்.  ஒரு நிலையில் வீட்டில் Adrian இன் சத்தம் அடங்கிப் போனது.  இதை அவதானித்த Natascha, பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனுடன் விட்டு விட்டு தனது வீட்டுக்குள் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது அவள் முன்னல் Adrian வந்து நின்றான்.  அப்பொழுது Natascha நின்ற இடம் சமையலறை. அந்த வாசலை மறைத்துக்  கொண்டு  நின்று அவள் மேல் தாக்குதலை Adrian ஆரம்பித்தான். அவளால் வெளியேற முடியாத நிலை.  அடி, உதைகள் பலமாக இருந்தன. இந்த நிலையில் சமையலறை மேசை இழுப்பறையைத் திறந்து  அங்கிருந்த கத்தியை எடுத்து தன் பலம் கொண்ட மட்டும் Adrian உடலில் சொருகினாள். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் மீது மீண்டும் ஒரு தடவை கத்தியால் குத்தினாள்.  சமையலறைக்குள்ளேயே Adrian இறந்து போனான்.  Natascha, Adrianஐ கத்தியால் குத்தும் போது அவளது இரத்தத்தில் 2 வீதமான அற்ககோல் செறிவு காணப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. பாதுகாப்புக்காக Adrianஐ Natascha கத்தியால் ஒருதடவை குத்தியபின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவனைக் கத்தியால் குத்தியிருக்கிறாள். இது ஒருவரைக் காயப்படுத்தி மரணம் விளைவிப்பதற்கான செயல் என்று கருதி நீதிமன்றம் Natascha வுக்கு  மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. `கொலை நடந்த நேரத்தில் உள்ள சூழ்நிலை, அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த பதட்டம், அவள் இரத்தத்தில் இருந்த அற்ககோல் செறிவு, அவளது பிள்ளைகளின் எதிர்காலம்,  மற்றும் Natascha தப்பிக்க முடியாத  ஒரு வன்முறையின் சூழலில் அந்தக் கத்தியைப் பாவித்து தன்னை  விடுவிக்க முடிந்தது போன்ற காரணங்களைக் கவனத்தில் கொண்டு Natascha வை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்` என்று Nataschaவின்  சார்பில் அவளுடைய வழக்கறிஞர் ஒரு மேன் முறையீடு செய்தார். அந்த மேன் முறையீட்டுக்கன தீர்ப்புத்தான் நீதிமன்றில் இப்பொழுது அறிவிக்கப் பட்டிருக்கிறது. "ஒரு அவசர நிலையிலேயே Natascha  கத்தியை எடுத்து தனது வாழ்க்கைத் துணைவனைக் கொன்றிருக்கிறாள். Nataschaவின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்கள் நீங்க அவளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட வேண்டும்" என நீதிமன்றம் அறிவித்து அவளை விடுதலை செய்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.  மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
    • ஊரில சீமேந்தும் மணலும் சல்லியும் விக்கிற விலைக்கு இவைக்கு விளையாட்டு. எத்தனையோ சனம் இருக்க ஒரு இருப்பிடம் இல்லாமல் கொட்டில் கட்டி வாழுது. அதுகளுக்கு ஒரு அறையில் ஒரு சின்ன வீடாவது கட்டிக்கொடுத்திருந்தால்.. நாலைஞ்சு குடும்பம் வீடு பெற்றிருக்கும்.