Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

பேஸ்புக்கை ஓரங்கட்டி வரும் வாட்ஸாப்..! 700 மில்லியன் பயனர்களை கடந்து அபார வளர்ச்சியடைகிறது!

Recommended Posts

whatsapp-301114-350-seithy-technews.jpg

சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

   

அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை உபயோயிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதன் தாக்கமாக, பேஸ்புக்கின் லாபம் கணிசமாகக் குறைந்ததுடன், அதன் பங்குகள் $77 வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது 700 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள வாட்ஸாப் இன்னும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=121787&category=CommonNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

வாட்ஸாப் நிறுவனத்தினை பேஸ்பு ஏற்கனவே வாங்கிவிட்டதே. இனி வளர்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன.  :)

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • நான் பிரித்தானியாவுக்கு வந்த சில நாட்களில் ஒரு பேக்கரியில் வேலை செய்ய ஆரம்பித்தேன். French sticks 🥖 உம் baguettes 🥖 🥖 தயாரிக்கும் பகுதியில்தான் வேலை. இது மெயின் பேக்க்கரி இருந்த கட்டடத்தில் இருந்து தள்ளி வீதிக்கப்பால் இருந்தது.  Production பகுதியில் நான் மட்டும்தான் தமிழன். ஒரு நைஜீரிய இளைஞனைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஐரிஷ்காரர்கள். ஒன்று இரண்டு ஐரிஷ்காரர்களுக் சாதுவாக நட்டு லூஸாகவும் இருந்தது.   நான் ஊரில் படித்த ஆங்கிலம், spoken English என்று private ஆக ஐயரிடம் படிக்கப்போயிருந்தாலும் அது என்னவே grammar உம் vocabulary உம் மட்டும்தான்! என்னுடைய முதலாவது translation சேவை இந்திய இராணுவத்திற்கும், அவர்களால் பனையோலை வெட்டுவதற்காகப் பிடித்து வைக்கப்பட்டு தன்னைச் சுடப்போறாங்களாக்கும் என்று பயந்து உதறிக்கொண்டிருந்த மரமேறி ஒருவருக்கும் இடையில் நடந்தது. அவருடைய பயத்தைத் தெளிவித்து campஐச் சுத்தி வேலி அடைக்க பனையோலை வெட்டிக்கொடுக்கவேண்டும் என்று இந்திய இராணுவம் சொன்னதை தமிழில் சொல்லி விளங்கப்படுத்தினேன். நாலா பக்கமும் துவக்குகளுக்கு மத்தியில் செய்த அந்த translation இல் வந்த துணிவுதான் உலகமெல்லாம் செல்லும்போது பயப்படாமல் ஆங்கிலத்தில் கதைக்க எப்போதும் உதவுகின்றது! பேக்கரியில் வாரத்தில் ஆறு நாட்களில் , சனிக்கிழமை தவிர, பன்னிரண்டு மணிநேர ஷிப்ட் வேலை காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிக்கு முடியும்! நான் ஐரிஷ்காரர்களுடனும், நைஜீரியனுடனும்தான் அதிக நேரத்தைப் பகல்பொழுதுககளில் செலவழித்தேன். ஐரிஷ்காரர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்த சொல்லாக F word ஐப் பாவிப்பார்கள். நல்லதுக்கும் கூடாததுக்கும், கோபத்திற்கும் அன்புக்கும் எப்படி ஒரு சொல்லையே பாவிக்கின்றார்கள் என்று வியந்ததுண்டு. ஐரிஷ் மனேஜர், மற்றைய ஐரிஷ்காரர்கள் சொல்லுவது எனக்குப் புரியாதபோதெல்லாம் மனேஜர் நைஜீரியனை கூப்பிட்டு ஐரிஷ் ஆங்கிலத்தை நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லுவான். நைஜீரியன் சொல்லுவதை விளங்குவதில் எனக்குப் பிரச்சினை இருக்காது. இப்படியாக அந்த நைஜீரியன், ஐரிஷ் ஆங்கிலத்தையும், தமிழ் ஆங்கிலத்தையும் தனது நைஜீரியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கதைப்பதற்கு ஒரு பாலமாக இருந்தான். இவர்களுடன் பேசித்தான் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொண்டேன். கற்றல் இன்னமும் முடியவில்லை!    
    • அப்படி காட்டத்தக்கதாக ஏதாவது இருந்தால் ஏன் இப்படி எள்ளிநகையாடுவதில் கவனம் செலுத்துகிறார்? ஒன்றும் இல்லாத ஆற்றாமையில் தனக்கு முடிந்ததை செய்கிறார் - பாவம், விட்டுவிடுங்கள், ஏதோ ஒரு சந்தோசமாவது கிடைக்கட்டும்.
    • தெரியாமல்தான் கேட்கிறேன், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறீங்கள்.....!  இங்க பிரச்சினை இல்லையென்றால் தூக்கமும் வருகுதில்லை....!  😁