Jump to content

எப்போதும் இரவு

Recommended Posts

உங்களுக்கு ஏன் இப்படிக் கோபம் வருகிறது என்றுதான் எனக்குப் புரியவில்லை. வாத்தியார். உலகில் நடப்பவை எல்லாம் தான் செய்திகளாக கவிதைகளாகக் கதைகளாக இலக்கியங்களாக அன்றுதொட்டு வந்துள்ளன. எல்லாவற்றையும் எழுதாது மூடிமறைப்பதில் யாருக்கு என்ன இலாபம்????  முகத்க்கு முகமூடி போட்டுக்கொண்டு நாக்கிலும் மனதிலும் விசத்தை வைத்துக்கொண்டு தேன் ஒழுகுவதுபோல் பேசும் ஏமாற்று வேலையை நான் செய்யவில்லை. உங்களைப்போல் அவற்றை நம்பி நான் உங்களைப்போல் மாயையுள் கிடக்கவும் இல்லை. மற்றவர்களிடம் நல்லவள் என்னும் பெயர் எடுக்க என்னை நடிக்கச் சொல்கிறீர்களா ?????

கனவுலகிலும் கண்கட்டி வித்தைக்களுள்ளும் மூழ்காது யதார்த்த உலகில் உண்மையாய் வாழப் பழகுங்கள் முதலில்

மலைகள் என்ற தளத்தில் யாரோ ஒருவர் எழுதிய கதை எனத்தான் முதலில் வாசித்தேன். பின்னர் உங்களின் பதிவையடுத்துப் பின்னூட்டங்களையும் வாசித்தபோது தெரிந்தது இந்தக்கதையை சுமேரியர் எழுதியிருக்கின்றார்.

இந்தக்கதையில்ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண்கள் பற்றிப்  பெரிதாக ஒரு சமூகப்பிரச்சனை என இந்தக்கதையை எழுதப்பட்டிருக்கின்றது.

நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இரவு என வக்கிரமமான தலைப்பு இடப்பட்டுள்ளது. போரினால் வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலைப்பெண்ணை ஆண்வர்க்கம் எப்படிப்பார்க்கின்றது எனவும் எழுதப்பட்டுள்ளது.

இந்தப்பார்வை உண்மையாக இருந்தால் இந்தக்கதை ஆண்வர்க்கத்தில் பெண்களைப்பற்றிய பார்வை அதுவும் ஆதரவற்ற அல்லது அபலைகளாக வாழ்கின்ற பெண்களைப்பற்றிய வக்கிரமான பார்வை அதிகரிக்கவே செய்யும்.

பெண்களாலேயே பெண்களைப்பற்றிய இழிவான கருத்துக்களைக் கதை மூலம் கூற வைத்துள்ளீர்கள். ராணுவத்தின் பிடியில் சிக்கிய எல்லாத்தமிழிச்சிகளும் ராணுவத்தால் வன்புணரப்பட்டுள்ளார்கள் என கதைமூலம் அடித்துக்கூறியுள்ளீர்கள்.

கதை முடிவில் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு அபலைத் தமிழிச்சி

தமிழர்களால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறும் இந்தக்கதை

சிங்கள ராணுவத்தின் ஒரு ரோகித விடம் அந்தத் தமிழிச்சியை ஒப்படைத்துத் தன் விகாரத்தைக் காட்டி முடித்து வைக்கின்றது.

மொத்தத்தில் இந்தக்கதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல்  தமிழ் இனமே ஒரு கேடு கேட்ட இனம் எனக் காட்டி நிற்கின்றது.

இப்படியான கதைகளினால் வித்தியாசமான எழுத்தாளர் என மட்டுமே பெயர் வாங்கலாம். அல்லது இன்னும் சற்றுக் கதையை மெருகூட்டி விளக்கமாக எழுதினால் கதை நன்றாக விற்பனையாகும்.

தமிழிச்சிகளுக்கோ விடிவு கிடைக்கப்போவதில்லை.

ஆண் வர்க்கமும் விழிக்கப்போவதில்லை. :D:icon_idea:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் நக்கீரன் பார்வைக்கு தலை சாய்கின்றது. ஆனாலும் எழுத்தாளர் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது சமூகத்தைப் திருத்தவோ எழுதவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு எழுத்தாளருக்குப் படைப்புச் சுதந்திரம் இருக்கவேண்டும். தான் சொல்லவந்த விடயத்தைத் தயங்காது சொல்லவேண்டும். அந்தச் சுதந்திரத்தை பிறருக்குக்காக விட்டுக்கொடுக்கும்போது படைப்பாளி பொற்காசுக்கு அல்லது புகழுக்குப் பாடும் புலவரைப் போலாகின்றார்!

மேலும் தனது படைப்பை எழுதியதற்கான காரணத்தை எழுத்தாளர் விளக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லப்படவேண்டியது எல்லாம் கதையில் இருப்பதால் அதற்கு காரண காரியங்களும், பொழிப்புரைகளும், விளக்கங்களும் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அத்துடன் பொதுவெளியில் வாசிக்கப்படும்போதே படைப்பு படைப்பாளிக்குச் சொந்தமற்றதாக மாறிவிடுகின்றது. வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது அனுபவங்களைக் கொண்டு வெவ்வேறான அர்த்தங்களையும் புரிதல்களையும் ஏற்படுத்திக்கொள்வார்கள். இவற்றினை படைப்பாளி உள்வாங்கலாம் அல்லது விடலாம். ஆனால் விமர்சிப்பவர்களுடன் விவாதம் புரிவது எதுவித பயனும் தராது!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிருபன். வாத்தியார் போன்றவர்களைக் கோபித்துப் பயன் இல்லை. விளங்கிக் கொள்ள முயல்பவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். விளங்கிக்கொள்ளத் தேவை இல்லை என்று எண்ணுபவர்களை என்ன செய்வது ???? :lol: :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

உங்களின் பார்வைக்கும் நடுநிலமையான கருத்துக்கும் நன்றி. உண்மையிலேயே ஒரு கதையை விமர்சிப்பதற்கான அத்தனை தகுதிகளும் உரிமையும் பொதுவெளியில் வாசிப்பவர்களுக்கும் உண்டு. நீங்கள் மிகுந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் என்பதை உங்கள் எழுத்துகளூடும் உங்கள் இணைப்புகள் ஊடும் நான் அறிவேன்.

வாத்தியார் எழுதியதில் நான் தவறேதும் காணவில்லை. அது அவரது மனநிலையில் இந்த கதையை பற்றிய விமர்சனம் மட்டுமே. அதற்கு நன்றி தெரிவிக்க கூட மனசில் இடமில்லாமல் அவரை பார்த்து விமர்சிப்பதில் இருந்து இந்த கதை எழுதியவரின் நோக்கம் வெளிப்படையாக தெரிவது மறுக்க முடியாதது.

மேலும் இந்த கதை பொதுவான ஆண்வர்க்கத்தை குறிவைத்து எழுதப்படவில்லை மாறாக தமிழ் இனத்தில் உள்ள ஆண்வர்க்கத்தை குறிவைத்தே எழுதபட்டுள்ளது. இந்த கதையை எழுதியவரின் முன்னைய ஆக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், இந்த கதை இவர் எழுதி இன்னொருவர் திருத்தம் செய்து அல்லது அழகூட்டியதாகவே எனக்கு தனிப்பட படுகிறது.

இவரின் இப்போதைய கதை கருவும் எழுத்து பாணியும் என்னக்கு இன்னொரு எழுத்தாளரை நினவூடுவதை இந்த எழுத்தாளரால் தடுக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன்.

மேலும் இந்த கதையை ஆழமாக பார்க்குமிடத்து உண்மையிலேயே கதை நடக்கும் களத்தில் கதை நடந்த காலத்தில் இந்த காதாசிரியியர் ஒரு நாள் கூட வாழ்ந்ததாக தெரியவில்லை. அது அப்பட்டமாக சில யதார்த்தமற்ற "புளுகள்" மூலம் தெரிய வருகிறது.என்னால் வாத்தியாரின் கருத்து உடன் ஒத்து போக முனைகிறது.

இந்த பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முதல் காரணத்துக்கு உரிய இனமே பின்னர் அடைக்கலம் கொடுக்கிறது என்ற முரண் நகையான நகைச்சுவை காட்சிகளை பதிந்து நிற்கிறது. அதைவிடவும் அந்த அடிக்கலம் கூட ஒரு நிரந்தர பாலியல் சுகத்துக்காக என்ற மறைமுக காரணம் மட்டுமே தொக்கி நிற்கிறது.

இது சமுதாய விழிப்புணர்வோ அல்லது போரின் பின் பெண்களின் இருட்டு வாழ்க்கையின் வெளிப்பாடோ ஆகாமல் மாறாக சில தேவைகளுக்காகவும், அடையாளத்துகாககவும் தனிப்பட்ட காரணங்களுக்காக்கவுமே கதாசிரியர் பெண்ணாக இருந்து கொண்டு தமிழ் இனத்தின் மீது அல்லது தமிழ் ஆண் வர்க்கத்தின் சேறடித்து இருப்பதாக இந்த கதை எனக்கு உணர்த்தி நிற்கிறது.

இது கதையை வாசித்த ஒரு வாசகனாக எனது தனிப்பட்ட விமர்சனம் மட்டுமே. இதை ஏற்பதுக்கும் மறுப்பதுக்கும் கதாசிரியருக்கு பூரண சுதந்திரம் உண்டு.

நன்றி கிருபன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
முதல்வன் இதனை நாள் இதற்குக் கருத்து எழுதாது இன்று வந்து எழுதுவதிலிருந்து உங்கள் நோக்கம் தெரிகிறது. நீங்கள் எத்தனை ஆண்டுகளாக புலம்பெயர்ந்து வாழ்கிறீர்கள்.??? நான் எழுதியது யதார்த்த நிலை. உங்களுக்கு உண்மயில் சமூக அக்கறை இருக்குமானால் இப்படி வந்து கருத்து எழுதிக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.

முகநூலில் நான் இந்தக் கதையைப் போட்டதற்கு அங்கு ஊடகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் நடப்பதைத்தானே எழுதியுள்ளீர்கள் என்றார். இன்னும் வன்னியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூட தொடர்ந்து எழுதுங்கள் அக்கா என்றார்,.

வாத்தியாரின் கருத்துக்கள் எனக்கு எழுதியதுபோல் யாருக்கும் எழுதப்படவில்லை என்று எண்ணுகிறேன். நீங்கள் குடும்பி முடியும் வேலை தான் இப்ப செய்கிறீர்களே அன்றி ஒரு நல்ல நோக்கம் அற்றது உங்கள் எழுத்துக்கள்.

நான் யாரையும் திருத்தும் நோக்கிலோ அன்றிச் சமூகத்தை திருத்தும் நோக்கிலோ கதை எழுதவில்லை. கதை நடக்கும் களத்தில் வாழ்ந்தால்த்தான் கதை எழுதவேண்டும் என்னும் உங்கள் பேரறிவை மெச்சவேண்டும். புதிய எழுத்தாளர்களில் பல எழுத்தாளர்களின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அதற்காக எழுதாது இருக்க முடியுமா ???? உங்களைப் போன்ற பலர் இப்படித்தான் ஒரு கதை இருக்கவேண்டும் என்றும் உங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு இப்படித்தான் விமர்சனம் வைக்கவேண்டும் என்றும் எண்ணுபவர்கள். உதற்கெல்லாம் பயந்து நான் எழுதாது இருக்க முடியுமா ????  இருந்தாலும் மினைக்கெட்டு வந்து எழுதியதற்கு நன்றி முதல்வன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிலுக்கும் நேரத்துக்கும் நன்றி சுமே. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி கிட்டும்.

நான் எழுதிய கருத்துக்கு பதிலை நேர்மையாக கருத்தெழுதும் ஒரு கருத்தாளனாக நான் கருதும் கிருபனிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். அதுவே மேலும் ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

உங்களின் பார்வைக்கும் நடுநிலமையான கருத்துக்கும் நன்றி. உண்மையிலேயே ஒரு கதையை விமர்சிப்பதற்கான அத்தனை தகுதிகளும் உரிமையும் பொதுவெளியில் வாசிப்பவர்களுக்கும் உண்டு. நீங்கள் மிகுந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் என்பதை உங்கள் எழுத்துகளூடும் உங்கள் இணைப்புகள் ஊடும் நான் அறிவேன்.

நடுநிலமை எல்லாம் கிடையாது. எது சரியெனப் படுகின்றதோ அதைத்தான் சொல்வதுண்டு. சில நேரம் அது மற்றவர்களுக்குப் பிழையாகவும் இருக்கலாம். சிலநேரம் நானே எனது கருத்தை மாற்றவும் கூடும். மாற்றம் ஒன்றே மாறிலியாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டால் பல விடயங்களை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும். தமிழர்களின் மிகப் பெரும் பலமாக விளங்கிய விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், அதில் இருந்தவர்களும், இயக்கத்தினை ஆதரித்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இந்த மாற்றங்களுக்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் எமது இனத்தின் மீது எமக்கே நம்பிக்கை இல்லாமல் போகச் செய்தது விடுதலைப் புலிகளின் தோல்வியே. அந்த ஆற்றாமை, இயலாமை படைப்புக்களில் வருவது இயல்பானதே!

கதையை வாசித்தவுடன் நான் வைத்த கருத்து இதோ. கூட வேலை செய்யும் சிங்களவர்களைக் கூட சிநேகதமாகக் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை கடந்த 30 வருடப் போர் உண்டுபண்ணியிருப்பதால் எனக்கும் கதையை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் கதைசொல்லிக்குப் படைப்புச் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதை உறுதியாக நம்புகின்றேன்.

மலைகள் தளத்தில் வாசித்தபோது எழுதியவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று இருந்தது. யாரோ புதியவர்தான் எழுதியிருக்கின்றார். ஆறுதலாக யாழில் இணைப்போம் என்று நினைத்திருந்தேன். அது இப்போது இலண்டன் என்று மாறிய பின்னர்தான் மெசோ ஆன்ரி என்று தெரிந்தது! நடை (எழுத்து நடையைய் சொன்னேன்) மாறியிருக்கின்றது. கதைக்குள் அரசியல் இருக்கின்றது. சிங்களவர்கள் நல்லவர்கள், தமிழர்கள் பொல்லாதவர்கள் என்றாகிவிட்டார்கள். நல்ல தமிழர்கள் எல்லாம் போரோடு மறைந்துவிட்டார்களா என்ன?

வாத்தியார் எழுதியதில் நான் தவறேதும் காணவில்லை. அது அவரது மனநிலையில் இந்த கதையை பற்றிய விமர்சனம் மட்டுமே. அதற்கு நன்றி தெரிவிக்க கூட மனசில் இடமில்லாமல் அவரை பார்த்து விமர்சிப்பதில் இருந்து இந்த கதை எழுதியவரின் நோக்கம் வெளிப்படையாக தெரிவது மறுக்க முடியாதது.

வாத்தியார் நேர்மையாகத்தான் விமர்சனத்தைத் தந்துள்ளார். கதைசொல்லி யாழ் கள உறுப்பினர் என்பதால் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. அதற்குத்தான் எனது தலை சாய்கின்றது! வாத்தியார் நன்றியை எதிர்பார்த்து விமர்சனம் வைக்கவில்லை என்பதால் கதைசொல்லி நன்றி சொல்லவேண்டும் என்று எதிர்பார்பதும் ஒரு வகையில் திணிப்புத்தான். எனவே எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்து, பூடகமாக எழுதுவதை விட்டுவிட்டு, உங்கள் பார்வையில் கதைசொல்லியின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எழுதலாம். அப்படி நீங்கள் ஒன்றை வைத்தாலும் அதுவும் ஒரு ஊகமாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லமுடியும். மேலும் விமர்சனத்தை எப்படி உள்வாங்குவது என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விடயம். கோட்பாடு, கொள்ளளவு, உணர்வு எனப் பல வகையான விடயங்களின் கலவைதான் விமர்சனத்திற்கு பதிலைக் கொண்டு வரும். என்னுடைய பார்வையில் கதைசொல்லி கதைக்கு வெளியே புதிதாகச் கதையைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அப்படியான நிலைமை வந்தால் எழுதிய கதையில் முழுமை இல்லையென்றாகிவிடும்.

மேலும் இந்த கதை பொதுவான ஆண்வர்க்கத்தை குறிவைத்து எழுதப்படவில்லை மாறாக தமிழ் இனத்தில் உள்ள ஆண்வர்க்கத்தை குறிவைத்தே எழுதபட்டுள்ளது. இந்த கதையை எழுதியவரின் முன்னைய ஆக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், இந்த கதை இவர் எழுதி இன்னொருவர் திருத்தம் செய்து அல்லது அழகூட்டியதாகவே எனக்கு தனிப்பட படுகிறது.

இவரின் இப்போதைய கதை கருவும் எழுத்து பாணியும் என்னக்கு இன்னொரு எழுத்தாளரை நினவூடுவதை இந்த எழுத்தாளரால் தடுக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன்.

மேலே சொல்லப்பட்டதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஊகம். ஒருவரின் படைப்பாற்றலை குறைத்து மதிப்பிடாமல் ஊக்கப்படுத்தும் மனநிலை இருந்தால் இப்படியான கருத்துக்கள் வராது! அப்படி உங்களுக்கு ஏதாவது தெரியுமென்றால் ஆதாரமாகக் குறிப்பிட்டு எழுதலாம்தானே. கறுப்பு எழுத்து என்று ஒரு வகையுண்டு. அந்தப் பாணியில் ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி போன்றவர்கள் எழுதியுள்ளனர். அதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் கொப்பியடிக்கின்றனர் என்று சொல்லமுடியுமா?

மேலும் இந்த கதையை ஆழமாக பார்க்குமிடத்து உண்மையிலேயே கதை நடக்கும் களத்தில் கதை நடந்த காலத்தில் இந்த காதாசிரியியர் ஒரு நாள் கூட வாழ்ந்ததாக தெரியவில்லை. அது அப்பட்டமாக சில யதார்த்தமற்ற "புளுகள்" மூலம் தெரிய வருகிறது.என்னால் வாத்தியாரின் கருத்து உடன் ஒத்து போக முனைகிறது.

கதைக் களத்தில் வாழாமல் அங்குள்ளவர்களுடன் கதைத்தே பல புனைவுகள் உருவாக்கப்பட்டு யாழ் களத்தில் பல வந்துள்ளன. எனவே கட்டாயம் அங்கு வாழும் ஒருவரால்தான் கதை எழுதப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இப்படிப் பார்த்தால் வரலாற்றுச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு ஒருவரும் கதை எழுதமுடியாமல் அல்லவா போய்விடும்!

இந்த பெண்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய முதல் காரணத்துக்கு உரிய இனமே பின்னர் அடைக்கலம் கொடுக்கிறது என்ற முரண் நகையான நகைச்சுவை காட்சிகளை பதிந்து நிற்கிறது. அதைவிடவும் அந்த அடிக்கலம் கூட ஒரு நிரந்தர பாலியல் சுகத்துக்காக என்ற மறைமுக காரணம் மட்டுமே தொக்கி நிற்கிறது.

முன்னரே குறிப்பிட்டது போன்று சிங்களவர்களை நல்லவர்களாகக் காட்டுவது எனக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அது எனதும் உங்களதும் தனிப்பட்ட விருப்புக்கள். அதனைக் கதைசொல்லியும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அப்படிப் பின்பற்றாததால் அவர் துரோக அரசியல் அல்லது இணக்க அரசியல் செய்கின்றவர் என்று முடிச்சுப் போடுவதும் ஏற்புடையதல்ல. இது வழமையாகத் தூய தேசியவாதிகள் சூட்டும் துரோகிப் பட்டங்களுக்கு ஒத்தது. அதனை நீங்கள் செய்ய முனையவில்லை என்றே நினைக்கின்றேன்.

இது சமுதாய விழிப்புணர்வோ அல்லது போரின் பின் பெண்களின் இருட்டு வாழ்க்கையின் வெளிப்பாடோ ஆகாமல் மாறாக சில தேவைகளுக்காகவும், அடையாளத்துகாககவும் தனிப்பட்ட காரணங்களுக்காக்கவுமே கதாசிரியர் பெண்ணாக இருந்து கொண்டு தமிழ் இனத்தின் மீது அல்லது தமிழ் ஆண் வர்க்கத்தின் சேறடித்து இருப்பதாக இந்த கதை எனக்கு உணர்த்தி நிற்கிறது.

இது கதையை வாசித்த ஒரு வாசகனாக எனது தனிப்பட்ட விமர்சனம் மட்டுமே. இதை ஏற்பதுக்கும் மறுப்பதுக்கும் கதாசிரியருக்கு பூரண சுதந்திரம் உண்டு.

நன்றி கிருபன்.

தமிழ் ஆண்களை நல்லவர்களாகக் காட்டவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு தமிழ் ஆண்கள் நல்லவர்களாக இல்லை என்பது கதை சொல்லியின் கருத்து. அதைத்தான் எனது முந்தைய கருத்துக்கும் பதிலாக வைத்திருந்தார். ஆனால் தனது தனிப்பட்ட புகழுக்காகத்தான் தமிழ் ஆண் வர்க்கத்தின் மீது சேறடித்துச் சர்ச்சைக்குரிய கதைகளை எழுத முனைகின்றார் என்று சொல்லுவதும் ஒரு சேறடிப்பே!

நான் இதில் கதைசொல்லியான மெசோ ஆன்ரிக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. தனிநபர் சுதந்திரத்தை எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை உறுதியாக நம்புவதாலும், ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்வது தவறு என்று உணர்வதாலும் எனது கருத்தைப் பதிந்துள்ளேன்.

கதைசொல்லியான மெசோ ஆன்ரிக்கும் உங்களுக்கும் இடையில் ஏதாவது அரசியல் முன்விரோதம் இருந்தால், அல்லது வேறு வகையான கொடுக்கல் வாங்கல்கள் இருந்தால் அதைக் கதைக்கு வெளியே வைப்பதுதான் அறம்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் புரிந்து கருத்தெழுதியமைக்கு மிக்க நன்றி கிருபன்.

Link to post
Share on other sites
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2014 at 0:38 PM, வாத்தியார் said:

மலைகள் என்ற தளத்தில் யாரோ ஒருவர் எழுதிய கதை எனத்தான் முதலில் வாசித்தேன். பின்னர் உங்களின் பதிவையடுத்துப் பின்னூட்டங்களையும் வாசித்தபோது தெரிந்தது இந்தக்கதையை சுமேரியர் எழுதியிருக்கின்றார்.

இந்தக்கதையில்ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண்கள் பற்றிப்  பெரிதாக ஒரு சமூகப்பிரச்சனை என இந்தக்கதையை எழுதப்பட்டிருக்கின்றது.

நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இரவு என வக்கிரமமான தலைப்பு இடப்பட்டுள்ளது. போரினால் வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலைப்பெண்ணை ஆண்வர்க்கம் எப்படிப்பார்க்கின்றது எனவும் எழுதப்பட்டுள்ளது.

இந்தப்பார்வை உண்மையாக இருந்தால் இந்தக்கதை ஆண்வர்க்கத்தில் பெண்களைப்பற்றிய பார்வை அதுவும் ஆதரவற்ற அல்லது அபலைகளாக வாழ்கின்ற பெண்களைப்பற்றிய வக்கிரமான பார்வை அதிகரிக்கவே செய்யும்.

பெண்களாலேயே பெண்களைப்பற்றிய இழிவான கருத்துக்களைக் கதை மூலம் கூற வைத்துள்ளீர்கள். ராணுவத்தின் பிடியில் சிக்கிய எல்லாத்தமிழிச்சிகளும் ராணுவத்தால் வன்புணரப்பட்டுள்ளார்கள் என கதைமூலம் அடித்துக்கூறியுள்ளீர்கள்.

கதை முடிவில் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு அபலைத் தமிழிச்சி

தமிழர்களால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறும் இந்தக்கதை

சிங்கள ராணுவத்தின் ஒரு ரோகித விடம் அந்தத் தமிழிச்சியை ஒப்படைத்துத் தன் விகாரத்தைக் காட்டி முடித்து வைக்கின்றது.

மொத்தத்தில் இந்தக்கதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல்  தமிழ் இனமே ஒரு கேடு கேட்ட இனம் எனக் காட்டி நிற்கின்றது.

இப்படியான கதைகளினால் வித்தியாசமான எழுத்தாளர் என மட்டுமே பெயர் வாங்கலாம். அல்லது இன்னும் சற்றுக் கதையை மெருகூட்டி விளக்கமாக எழுதினால் கதை நன்றாக விற்பனையாகும்.

தமிழிச்சிகளுக்கோ விடிவு கிடைக்கப்போவதில்லை.

ஆண் வர்க்கமும் விழிக்கப்போவதில்லை. :D:icon_idea:

கருத்துக்களுக்கு நன்றி வாத்தியார்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.