• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர்

Recommended Posts

வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் -
 
Varnam%20Master%201_CI.jpg
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது.
 
ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த  இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல்.
 
மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இந்தஅனுபவம்; விரியும்.
 
இவை காரணமாகபல்வேறு இசைக் கலைஞர்கள் பற்றிய பதிவுகள் என்னில் ஏற்பட்டிருக்கிறது. இந்தவகையில் வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றியபதிவு முக்கியமானது. இசைக்கலையின் நுண்மான் நுழைபுலம் அறிந்த வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் அவர்கள் நிகழும் இசைக் கச்சேரிகள் பற்றிய குற்றங் குறைகளை நெற்றிக்கு நேராகவே சொல்லிவிடும் இயல்பு கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் பற்றிய மனக்கசப்பும் ஏனைய கலைஞர்கள் மத்தியில் இருந்ததைஅவர்கள் உரையாடல்கள் உணர்த்திற்று.
 
இது ஒரு முக்கியமான விடயத்தை உணர்த்திற்று அதாவது 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' இயல்பு கொண்ட கலை மதிப்பீட்டாளர்களின் இருப்பு எந்தவகையில் கவனமும், கற்கையும் நிறைந்தகலைச் சூழலை உருவாக்கும் என்பதாகும்.
 
வர்ண இராமேஸ்வரனும் நானும் நண்பர்களாவதற்கு முன்பு வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றியமனப் பதிவு இதுவாகத்தான் இருந்தது. வெளிப்படையாக சொல்வதானால் ஒருகுறைகாணும் மனிதனாகவே அந்த மனப்பதிவு இருந்தது.
 
 
வர்ண இராமேஸ்வரன், சு. கோபிதாஸ், க. கண்ணதாசன் ஆகியோருடனான நட்பும், கூடிப்பயிலும் காலங்களும் வர்ணகுலசிங்கம் மாஸ்ரருடன் நேரடித் தொடர்பைஏற்படுத்தியது.
 
 இசை, கூத்து கலை என அவருடனான எனது உரையாடல்கள் குறிப்பாக சாந்தினி சிவனேசன் அவர்களுடன் இணைந்து குற்றாலக்குறவஞ்சி நடன நாடக உருவாக்கத்தின் போது வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள், தலையைக் கெளித்து அதிமெதுவாகச் சைக்கிளை மிதித்து சுரங்களை முணுமுணுத்;துத் திரியும் கண்கண்ட மனிதனின் ஆளுமையை அறியவும் உணரவும் வைத்தது.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் போன்ற ஆளுமைகள் எவ்வாறு உருவாகினார்கள்? அவர்கள் உருவாகிய களம் அல்லது நிறுவனம் எது? தொடர்ச்சியான தேடலும், பயில்வும், மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் பண்பாடும் கொண்ட ஆளுமைகளின் கலைமரபின் பின்னனியை விளங்கிக் கொள்வதுமிகவும் அவசியமான இன்றைய தேவையாகி இருக்கிறது.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் என்பது மேற்கூறிய விடயம் தொடர்பான என் உள்ளும் வெளியும் நான் நிகழத்தும் உரையாடலை வலுவாக்கும் உந்துதலை தந்திருக்கின்றது.
 
ஏனெனில் அரச நிறுவனங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கலை நிறுவனங்கள் விருப்பமும் விளக்கமும் அற்றமரபினரின் பெரும் கூடாரமாகவே ஆகியிருக்கிறது. தொழிலுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் அலுவலகமாகவே அது இயங்கிவருகிறது.
 
இந்நிலையில் வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் போன்ற தன்னார்வ ஆளுமை உருவாக்க மரபினூடு உருவாகி அரசநிறுவன முறைமையுள் இயங்கிவரும் எனது தலைமுறையினரின் நிலைசவால்கள் நிறைந்தது.
 
பயில்முறைத் திறமும் அறிமுறைத் திறமும் அற்றஅதற்கும் மேலாகவிருப்பமும் தேடலும் அற்றகளச் சூழலே நடைமுறையாகி இருக்கிறது.
 
வாழ்க்கைப் போராட்டத்தின் சவால்களுக்கு முகங் கொடுத்து சாதனையாளர்களாக பரிணமித்த ஒரு கலைமரபு என்பது பெருங்கனவாக சிலருக்கும், இது பற்றி எதுவுமே அறியாத பலருக்கும் உரியதாக நடைமுறையிலுள்ள அரசுமயப்பட்ட கலைமரபு இயங்கிவருகிறது.
 
இங்கு வாழ்க்கைக்கான வரும்படி உண்டு ஆனால் வித்தைக்கான வேண்டுதல் இல்லை.
 
வர்ணகுலசிங்கம் மாஸ்ரரைநினைவு கூருவது என்பது அவர் போன்ற மரபில் அவருக்கு முன்பும் அவரது காலத்திலும் பின்பும் கலைமரபுக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்த்த ஆளுமைகளை நினைவு கூருவதும் மாண்பு செய்வதும்;;; அவல நிலைக்குள்ளாகிசீரழிந்திருக்கின்ற இன்றைய நிலையான வரும்படி கொண்ட அரசமயக் கலை மரபினை எதிர் கொள்வதும் அவசியத் தேவையாகி இருக்கிறது.
 
கலாநிதி. சி. ஜெயசங்கர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
 

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கட்ட சம்பலை காணவில்லை இன்னும் 🤔
  • சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைப்பு   அம்பாறை – கல்முனை மாநகரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் ‘சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப் பணிக்குமான அமைப்பின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று(07) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது. இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு “இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம், இலங்கையராய் ஒன்றிணைவோம்” என விழிப்புணர்வூட்டும் வசனங்கள் எழுதப்பட்ட பதாகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.   https://newuthayan.com/சமாதான-விழிப்புணர்வு-பத/
  • சிவாஜிக்கு அழைப்பாணை – புலிகளை மீள உருவாக்க முயற்சி என வழக்கு!   யாழ்ப்பாணம் – நவாலி தேவாலயத்துக்கு முன்னால் நாளை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதுடன், புலிகளை மீள உருவாக்கவும் முயற்சிப்பதாக மானிப்பாய் பொலிஸார் அறிகையிட்டு தொடுத்த வழக்கில் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (08) மதியம் 12 மணிக்கு மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.   https://newuthayan.com/சிவாஜிக்கு-அழைப்பாணை/  
  • நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கல்யாண முருங்கை இலை கொரோனா பீதி காரணமாக தற்போது உணவு முறைகளில் மக்கள் தீவிரமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னைவாசிகள் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. நோய் திர்ப்பு சக்தியூட்டும் சத்தான ஆகாரங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் உயிர் பெற்று வரும் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.   இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன. இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன. இதுதவிர காய்ச்சல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் அருமருந்தாக கல்யாண முருங்கை இலைகள் உதவுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த இலைகள் தீர்வு கொடுக்கும் வரபிரசாதமாகவும் அமைகின்றன. ஆரம்பத்தில் கல்யாண முருங்கை இலைகளை மருத்துவ குணங்களுக்காக ஆர்வத்துடன் மக்கள் பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந்த இலைகள் மீதான மக்கள் பார்வை மங்கத் தொடங்கியது. இப்போதும் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியங்களில் கல்யாண முருங்கை இலைச்சாறு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா பீதி காரணமாக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் நிறைந்திருக்கும் கல்யாண முருங்கை மர இலைகளுக்கு மீண்டும் மவுசு திரும்ப தொடங்கி வைக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் இந்த இலைகளை வாங்கி விருப்பப்படும் உணவுகளாக சாப்பிட்டு வருகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட இந்த இலைகள் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/07/07144950/1682270/Kalyana-Murungai-Tree-benefits.vpf