Jump to content

அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

அரசின் அறிவிப்பும் அடையாள எதிர்ப்பும் !

83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன.

சத்தியப் பிரமனாம் :

83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.

ஆயுத போராட்டம் மீதும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையை தோற்றுவித்தது.

இதே வேளையில் ஜே.ஆர். அரசு புதிய அறிவிபொன்றை வெளியிட்டது.

சகல அரசாங்க ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராகவும், ஆரசியல் மைப்புக்கு விசுவாசமாகவும் சத்திய பிரமாணம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது.

தமிழ் அரசாங்க ஊழியர்கள் விரும்பினால் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம். அதன் அர்த்தம் சத்தியப் பிரமாணப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதல்ல என்று புலிகள் கூறினார்கள்.

சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்தால் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழியர்கள் தமது வேலைகளை இழக்க வேண்டி ஏற்படும் அதனால் அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே சத்தியப் பிரமாணம் எடுப்பதை தாம் எதிர்க்கப் போவதில்லை என்று புலிகளது சார்பாக பிரபாகரனது பெயரில் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.

சத்தியப் பிரமாணத்தை எதிர்க்க வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். முடிவு செய்தது.

இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் பத்மநாபா செய்த முடிவு அது.

சத்தியப் பிரமாணத்தை தடுக்க முடியாவிட்டாலும் அதற்கு அடையாள எதிர்ப்பையாவது தெரிவிக்க வேண்டும்.

வடக்கு - கிழக்கெங்கும் சத்தியப் பிரமாண படிவங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

கிழக்கின் முக்கியமான உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள். தற்போது அங்கே உள்ளவர்களால் நடபடிக்கைகளில் இறங்க முடியுமா? என்று யாழ் பிராந்திய கமிட்டி பத்மநாபாவிடம் கேட்டது.

"முடியும்" என்று விட்டு இந்தியா சென்று விட்டார் பத்மநாபா.

சத்திய பிரமாணம் செய்யும் திகதி வந்தது. யாழ் குடாநாட்டில் ஆயுதங்களோடு அரசு அலுவகங்களில் புகுந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் மக்கள் விடுதலைப்படை (பி.எல்.ஏ.) சத்தியப் பிரமாணம் படிவங்களை பறித்தெடுத்தது.

பொலிஸ் ஜீப் மீது தாக்குதல்:

 ஒரே நாளில் அரசு அலுவகங்களில் மேற்கொள்ளப்பட்ட  இந்த நடவடிக்கையில் ஏழு பேர் மட்டுமே பங்கு கொண்டனர் என்பதுதான் ஆச்சரியம்.

ஆரசுக்கு சொந்தமான ஜீப் வண்டிகள் மற்றும் வாகனங்கள் குண்டுவைத்தும் தீயிட்டும் கொளுத்தப்பட்டன.

யாழ் நகருக்குள் தனது ஜீப்பில் வந்து கடை ஒன்றுக்கு சென்றார் பொலிஸ் அதிகாரி. அவர் திரும்பி வந்து ஜீப்பில் ஏறிய போது "அசையாதே அப்படியே இரு" என்றனர் இளைஞர்கள்.

பொலிஸ் அதிகாரியை ஜீப்புக்குள் வைத்தே பெற்றோல் ஊற்றப்பட்டது. அவர் மன்றாடினார். கதவைத் திறந்துவிட அவர் தெருவில் தவழ்ந்து சென்றார்.

அவர் வந்த ஜீப் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது, இந்த நடவடிக்கைகளில் ரமேஷ், சுபத்திரன், மோகன், சுதன், குமார், இந்திரன், இளங்கோ ஆகியோர் பங்கு கொண்டனர்.

அடையாள எதிர்ப்பு என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்த்தமை மட்டுமே ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு கிடைத்த வெற்றி. ஆனால், பத்மநாபா உறுதியளித்தபடி கிழக்கில் சத்தியப்பிராமண எதிர்ப்பு நடவடிக்கை எதுவும் நடைபெறவேயில்லை.

மட்டக்களப்பு சிறையடைப்பு :

83 ஜூலைக் கலவரத்தின் பின்னர் நடைபெற்ற மற்றொரு முக்கியமான சம்பவம் மட்டக்களப்பு சிறையடைப்பாகும்.

வெலிக்கடை சிறைப் படுகொலைக்கு பின்னர் முக்கியமான தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப் பட்டிருந்தனர்.

60 க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அங்கு தடுத்து வைகப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் வாவி சூழ்ந்த பகுதியான ஆணைப்பந்தி என்னுமிடத்தில் சிறைச்சாலை அமைந்திருந்தது.

சிறையை உடைத்து போராளிகளை மீட்க வேண்டும் என்று திட்டமிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் தலைவர்களின் ஒருவராகவும், மக்கள் விடுதலை படை தளபதியாகவும்  அப்போதிருந்த தேவானந்தா, மட்டக்களப்பு பிராந்திய தலைவராக இருந்த சிவா, மத்திய குழு உறுப்பினராக இருந்த மணி, மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுபினர்களான குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகியோர் உட்பட 15 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்.

மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் கால்மாக்ஸ் நூற்றாண்டு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஒரு கருத்தரங்கம் நடத்தியது.

அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு இரண்டு விரிவுரையாளர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அழைத்தது.

அதில் ஒருவர் வரதராஜப்பெருமாள், இன்னொருவர் மகேஸ்வரராஜா.

கருத்தரங்கில் கலந்து கொள்ள முதலில் வரதன் மறுத்தார்.

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பதால் கிடைக்கும் வருமானத்தை இழக்க முடியாது. ஏற்கனவே பட்ட அனுபவங்கள் போதும் என்று கூறினார்.

ரமேஷ், தயாபரன் ஆகியோர் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கருத்தரங்கில் பொலிஸ் நுழைந்து  ஈ.பி.ஆர்.எல்.எஃப்.  உறுப்பினர்களோடு சேர்த்து இரண்டு விரிவுரையாளர்களையும் கைது செய்தது.

அவர்களும் மட்டக்களப்பு சிறையில் தான் இருந்தனர்.

அச்சமயத்தில் பத்மநாபாவும் கருத்தரங்கில் இருந்த போதும் அவர் தப்பிவிட்டார்.

எப்போது விடுதலை ?

புளொட் அமைப்பில் மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜா, வாமதேவன், பாரூக், டேவிட் ஐயா ஆகியோரும்,'தமிழீழ விடுதலை இராணுவம்' என்றும் அமைப்பைச் சேர்ந்த பனாகொடை மகேஸ்வரனும் அவரது இயக்கத்தைச் சேர்ந்த சிலரும், மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள்.

இவர்களில் பலரை தானாகவே முன்வந்து அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கை அறவே இருக்கவில்லை.

சிறை உடைப்பு திட்டத்தை இவர்கள் அனைவரும் முன்னின்று வரவேற்றதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.

சிறை உடைப்பு நடவடிக்கையை வெளியில் இருந்து மேற்கொள்ளும் பொறுப்பு குணசேகரனிடமும், சிறையின் உள்ளே டக்லஸ் தேவானந்தா விடமும் ஒப்படைக்கப்பட்டது.

 

புலிகள் மறுப்பு :

சிறை உடைப்பை மேற்கொள்ள புலிகளது உதவியையும் பெற ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் விரும்பினார்.

மட்டக்களப்பு சிறையில், புலிகளது ஆதரவாளர்களான விரிவுரையாளர் நித்தியானந்தன், நிர்மலா, வணபிதா சிங்கராஜர் ஆகியோரும் சிறையில் இருந்தமையால் இரு அமைப்பும் இணைந்து நடவடிக்கையில் இறங்கலாம் என்று குணசேகரன் விரும்பினார்.

முதலில் ஒப்புதல் தெரிவித்த புலிகள் அமைப்பினர் பின்னர் மறுத்து விட்டனர்.

அதன் பின்பு 'புளொட்' அமைப்பின் தாளைவர்களில் ஒருவரான வாசுதேவாவுடன் பேசி இரு அமைப்பினரும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை பகிர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டர்.

சிறையில் உள்ளே டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன், பரந்தன் ராஜன் ஆகியோர் நடவடிக்கைப் பொறுப்புக்களை பகிர்ந்து கொண்டனர்.

திட்டம் தயாரானது :

அரை மணிநேரத்திற்கு ஒரு தடவை இராணுவ ரோந்து இருக்கும். பொலிஸ் அடிக்கடி வந்து பாதுகாப்பைப் பார்வையிட்டுச் செல்லும்.

இவர்ருக்கிடையே தப்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் என்ற போர்வையிலும், வேறு சில உதவிகள் மூலமாகவும் சிறைக்குள் சில ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டன.

சிறைகாவலர்களை மடக்கும் பொறுப்பை டக்ளஸ் தேவானந்தா, மாணிக்கம் தாசன் போன்றோர் எடுத்துக் கொண்டனர்.

வயதான கைதிகளான டேவிட் ஐயா போன்றோருக்கு மடக்கப்படும் சிறைக்காவலர்களுக்கு வாயில் பிளாஸ்டர் ஓட்டும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது.

சிறைக்கதவு வழியாக தப்பிச் செல்ல முடியாவிட்டால் பின் சுவர் வழியாக செல்ல வேண்டும். அந்தச் சுவரை உடைத்து வழி ஏற்ப்படுத்தும் பொறுப்பு வரதரஜப்பெருமாளிடம் கொடுக்கப்பட்டது.

சந்தேகம் :

இடையில் ஒரு சந்தேகம் தமக்குத் தெரியாமல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தப்பித்து சென்று விடுவார்களே என்று புளொட் உறுப்பினர்களுக்கு சந்தேகம்.

அதே சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கும்.

இதனால் இரவு நேரங்களில் இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கண்காணித்தனர்.

இது தொடர்பாக ஏற்பட்ட வாக்கு வாதம் ஒன்றில் பனாகொடை மகேஸ்வரனை பரந்தன் ராஜன் அடித்து விட்டார்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட நாளும் வந்துவிட்டது.

செப்டம்பர் 23. 1983, இரவு 8 மணி சிறைக்காவலர் அந்தனிப்பிள்ளை என்பவர் கைதிகளுக்கு தேநீர் கொடுப்பதற்காக சினிமாப் பாடல் ஒன்றைப் பாடியபடி வந்தார்.

"என்ன தம்பிகளா எப்பட்யிருக்கிறீர்கள் ?" என்று குசி மூட்டில் வந்தவரை "அண்ணே வாங்கோ" என்று மடக்கிப் பிடித்தனர் போரளிகள்.

அவரது வாயில் 'பிளாஸ்டர்' ஒட்டப்பட்டது. அதனையடுத்து ஏனைய சிறைக் காவலர்களும் மடக்கப்பட்டனர். குறித்த நேரத்தில் சிறைக்கு வெளியே வாகனங்கள் வந்து சேர்ந்தன. தப்பிய போராளிகள் வாகனங்களில் ஏறிக் கொண்டனர்.

சிறையில் நிர்மலா :

இவர்கள் வெளியே வாகனத்தில் போய் ஏறியதை பின்புறக் சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதரஜப்பெருமாளும், அழகிரியும் அறியவில்லை.

இதே வேளை வணபிதா சிங்கராஜர் கோவை மகேசன், டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் தங்களால் தப்ப முடியாது என்று ஏற்க்கனவே கூறியிருந்தனர்.

தப்பிச் செல்வதால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்நோக்க அவர்களது உடல் நிலையும் ஒத்துழைக்காது என்பது முக்கிய காரணம்.

போராளிகள் தப்பிச் செல்லும் போது வணபிதா சிங்கராஜர் பிரார்த்தனையில் ஈடு பட்டார்.

நிர்மலா பெண்கள் பகுதியில் வைக்கபட்டிருன்தார். அவரது சிறைக் கூண்டைத் திறந்து மீட்கும் பொறுப்பு வாமதேவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வாமதேவன் தான் தப்பும் அவசரத்தில் நிர்மலாவை மறந்துவிட்டார்.

சுவரை உடைத்துக் கொண்டிருந்த வரதனுக்கும், அழகிரிக்கும் ஒரு சந்தேகம்; சிறையில் 'எந்தச் சத்தத்தையுமே காணவில்லையே' இருவரும் ஓடிவந்து பார்த்தனர்.

சிறையிலிருந்து தப்பியவர்கள் அனைவருமே போயே விட்டார்கள்.

இருவரும் திகைத்துப்போனார்கள்.   (தொடரும்)

 

 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

விம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:

தவித்தனர் இருவர் :

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.

அவரை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.

அமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.

அழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர்.  ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.

இருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.

ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.

அந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.

வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

முதல் நடவடிக்கை :

50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.

வெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.

45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.

அரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

மிகையான செய்திகள் :24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

விம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:

தவித்தனர் இருவர் :

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.

அவரை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.

அமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.

அழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர்.  ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.

இருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.

ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.

அந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.

வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

முதல் நடவடிக்கை :

50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.

வெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.

45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.

அரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

மிகையான செய்திகள் :24 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

விம்மியழுத கிட்டுவும் வியப்படையாத பிரபாவும்:

தவித்தனர் இருவர் :

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.

அவரை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியிருந்தார்.

அமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார்.

அழகிரி ஈரோஸ் அமைப்பை சேர்ந்தவர்.  ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.

இருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை; மறந்தே போனார்கள்.

ஏனையோர் தப்பிச் சென்றுவிட்டார்களே இப்போது என்ன செய்வது என்று வரதனும், ஆழகிரியும் தவித்துப் போயினர்.

அந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல முயன்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, சுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர்.

சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே தாம் மூவரும் வாவி வழியாக படகில் தப்பிச்செல்லப் போவதாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கூறியிருந்தார்.

ஏற்கனவே அவர்கள் ஏற்பாடு செய்தபடி படகு வந்து தயாராக நின்றது.

வாவியை நோக்கி ஓடிய வரதனும், அழகிரியும் தம்மையும் அழைத்துச் செல்லும்மாறு கேட்டனர். படகில் அவர்களோடு தப்பிச் சென்றனர்.

முதல் நடவடிக்கை :

50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.

இலங்கையின் வரலாற்றில் முதலாவதாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.

வெலிக்கடை சிறைப் படுக்கொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.

45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் மூலமாகவும் தப்பிச் சென்று காட்டுக்குள் மறைந்தனர்.

அரசு அதிர்ந்தது, சிறை உடைப்பு நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

மிகையான செய்திகள் :சிறை உடைப்பு தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சில ருசிகரமானவை.

'நீர்மூழ்கிக் கப்பல்' மூலமாக போராளிகள் தப்பிச் சென்றுவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி படித்து மக்களுக்கு வியப்பு.

தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி ''நீர்மூழ்கிக் கப்பல்" வைத்திருக்கும் அளவுக்கு போராளிகள் வளர்ந்து விட்டார்களே என்று நினைத்து தான் அந்த மகிழ்ச்சி.

இன்னொரு வேடிக்கை சிறைக்குள் செருப்புக்களை வெட்டி துப்பக்கிபோல செய்து வைத்திருந்தனர்.

பார்த்தவுடன் கைத்துப்பாக்கி என்று சிறைகாவலர்களை மிரள வைக்கத்தான் அந்த ஏற்பாடு.

உள்ளே தருவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் போதாது என்பதால் தான் இந்த போலி ஆயுதங்கள்.

துப்பாக்கி போல தயாரிக்கப் பட்ட செருப்பு ஒன்றைக் கண்ட நிருபர் ஒருவர் பத்திரிகைக்கு  அனுப்பிய செய்தி இது:

"கைதிகள் தப்பிச் செல்லும்போது இயந்திரத் துப்பாக்கி ஒன்றை சிறைக்குள் தவறவிட்டுச் சென்றுள்ளனர்."

தாக்குதல் நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு மிகைபடுத்தப்பட்ட செய்திகள் வருவது வழக்கம்தான்.

நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டமே மிகைப்படுத்தல் என்று தெரியும்; தமக்குள் சிரித்துக் கொள்வார்கள்.

காட்டுக்குள் முரண்பாடு :   

மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய 45 போராளிகளும் காட்டுப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அவ்வாறு செல்லும்போது ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகளுக்கும், புளொட் போராளிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றிவிட்டன.

அதனால் இடைநடுவில் இரு அமைப்பினரும் வெவ்வேறு பாதைகள் வழியாக பிரிந்து தப்புதல் பயணத்தை தொடர்ந்தனர்.

கட்டுப்பத்தை முடிய அடுத்த பயம் படகு மூலமாக தமிழ் நாட்டுக்கு என்று திட்டமிடப்பட்டது.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் அப்போது சொந்தமாக ஒரு படகு கூடக் கிடையாது.

படகு வாடகைக்கு அமைத்தலாம். அதற்க்கு பணம் வேண்டும்.

வடக்கை, டீசல் மற்றும் செலவுகளுக்கு குறைந்தது பதினைந்து ஆயிரம் ரூபா என்றாலும் தேவை.

பத்து ரூபாய்க்கு கூட அல்லாடிக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ் பிராந்திய கமிட்டி திகைத்து போய்விட்டது.

இது தவிர ஆயுதப் பயிற்சிக்கும் தமிழ்நட்டிடுக்கு ஆட்களை அனுப்பவும் படகு தேவை, பணம் தேவை.

தபல்நிலையக் கொள்ளை :

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக இருந்தது பிரதான தபாலகம்.

அங்கு பணம் இருப்பதாக தகவல். பொலிஸ் நிலையமோ முன்னால் இருக்கிறது, கஷ்ட்டமான சூழல்தான். ஆனால் வேறு வழியில்லை.புகுந்தனர் ஏழு பேர், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு பைகளில் பிரித்து பணத்தைக் கட்டி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு பையாக தபாலக உழியர்களை வைத்து பிரித்து பணத்தை திரட்டி யெடுக்க ஒரு மணிநேரமானது.

மேலும் பணம் தேவை வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு. பாதுகாப்பை உடைக்க தலைமையிடம் தேவையான ஆயுதம் கேட்டும் கிடைக்கவில்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு?

'மாட்டிக்கொண்டால் இயக்கப் பெயரை கூறுவதில்லை தனிப்பட்ட தேவைக்கு என்று தான் வாக்குமூலம் கொடுப்பது' என்ற முடிவோடு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கூட்டுறவுக் சங்கங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.

ஒரு காரைக் கடத்திக்கொண்டு ஒரே நாளில் பண்டத்தரிப்பு, கொக்குவில், உரும்பிராய் தபாலகங்களில் கொள்ளையிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ரமேஷ், சுபத்திரன், மோகன், இந்திரன், சுதன். இளங்கோ ஆகியோர் கொண்ட 7 பேர் குழுவே பங்குகொண்டது.

தடுமாற்றம் :

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கும், மானிப்பாய் வங்கியில் நிதி பறிப்பில் ஈடுப்படவும் இவர்கள் தயாரான போது யாழ் பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கமிட்டியில் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை.

ரமேஷ் சில காலம் தமிழ் நாட்டில் சென்று தங்கியிருக்க வேண்டும் என்றும். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் மக்கள் விடுதலைப் படை நடவடிக்கைகளை தம்மால் நிறுத்த முடியாமல் போகும் என்றும் யாழ் பிராந்திய கமிட்டி செயலாளராக இருந்த செழியனால் மத்திய குழு உறுப்பினர் குணசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைவிட வேடிக்கை- நிதி தேவையானபோது தம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ் பிராந்திய கமிட்டி, தேவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் கொள்கை நடவடிக்கைகளை விமர்சித்தது.

பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதும், வேறு பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை தங்க வைப்பது. தமிழ் நாட்டுக்கு அனுப்புவது, நிதித் தேவைகளை கவனிப்பது, யாழ்ப்பாணத்தில் பயிற்சிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது. உளவுப் பிரிவு நடவடிக்கைகள் என்று சகல பொறுப்புகளையும் 83ம் ஆண்டுநெருக்கடியான காலகட்டத்தில் ரமேஷ் - சுபத்திரன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டே சமாளித்தனர்.

போர்க்குணமின்மை, முந்திக்கொள்ள முயலாமை, நிலைமைக்கு ஏற்ப செயற்படாமை, தயக்கம் காரணமான ஜனநாயக வாய்வீச்சுக்கள், சரியானவர்களை இனம்காண முடியாமை போன்றவற்றால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்குள் ஒரு சாரார் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

உரிமைகோரலில் போட்டி :

மட்டக்களப்பு சிறை உடைப்பு நடவடிக்கையை தமிழ்நாட்டில் இருந்து புளொட் அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரும் "நாம் தான் சிறையை உடைத்தோம்" என்று தனித்து உரிமை கோரினார்கள்.

இந்தப் போட்டி உரிமை கோரல் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

புகுந்தனர் ஏழு பேர், ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சிறு சிறு பைகளில் பிரித்து பணத்தைக் கட்டி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு பையாக தபாலக உழியர்களை வைத்து பிரித்து பணத்தை திரட்டி யெடுக்க ஒரு மணிநேரமானது.

மேலும் பணம் தேவை வங்கிகளுக்கு பலத்த பாதுகாப்பு. பாதுகாப்பை உடைக்க தலைமையிடம் தேவையான ஆயுதம் கேட்டும் கிடைக்கவில்லை. இருந்தால் தானே கொடுப்பதற்கு?

'மாட்டிக்கொண்டால் இயக்கப் பெயரை கூறுவதில்லை தனிப்பட்ட தேவைக்கு என்று தான் வாக்குமூலம் கொடுப்பது' என்ற முடிவோடு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கூட்டுறவுக் சங்கங்களில் கொள்ளையடிக்கப்பட்டது.

ஒரு காரைக் கடத்திக்கொண்டு ஒரே நாளில் பண்டத்தரிப்பு, கொக்குவில், உரும்பிராய் தபாலகங்களில் கொள்ளையிடப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் ரமேஷ், சுபத்திரன், மோகன், இந்திரன், சுதன். இளங்கோ ஆகியோர் கொண்ட 7 பேர் குழுவே பங்குகொண்டது.

தடுமாற்றம் :

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கும், மானிப்பாய் வங்கியில் நிதி பறிப்பில் ஈடுப்படவும் இவர்கள் தயாரான போது யாழ் பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எப் கமிட்டியில் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை.

ரமேஷ் சில காலம் தமிழ் நாட்டில் சென்று தங்கியிருக்க வேண்டும் என்றும். அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் மக்கள் விடுதலைப் படை நடவடிக்கைகளை தம்மால் நிறுத்த முடியாமல் போகும் என்றும் யாழ் பிராந்திய கமிட்டி செயலாளராக இருந்த செழியனால் மத்திய குழு உறுப்பினர் குணசேகரனிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைவிட வேடிக்கை- நிதி தேவையானபோது தம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ் பிராந்திய கமிட்டி, தேவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் கொள்கை நடவடிக்கைகளை விமர்சித்தது.

பயிற்சிக்கு ஆட்களை அனுப்புவதும், வேறு பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை தங்க வைப்பது. தமிழ் நாட்டுக்கு அனுப்புவது, நிதித் தேவைகளை கவனிப்பது, யாழ்ப்பாணத்தில் பயிற்சிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது. உளவுப் பிரிவு நடவடிக்கைகள் என்று சகல பொறுப்புகளையும் 83ம் ஆண்டுநெருக்கடியான காலகட்டத்தில் ரமேஷ் - சுபத்திரன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டே சமாளித்தனர்.

போர்க்குணமின்மை, முந்திக்கொள்ள முயலாமை, நிலைமைக்கு ஏற்ப செயற்படாமை, தயக்கம் காரணமான ஜனநாயக வாய்வீச்சுக்கள், சரியானவர்களை இனம்காண முடியாமை போன்றவற்றால் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்குள் ஒரு சாரார் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

உரிமைகோரலில் போட்டி :

மட்டக்களப்பு சிறை உடைப்பு நடவடிக்கையை தமிழ்நாட்டில் இருந்து புளொட் அமைப்பினர் உரிமை கோரினார்கள்.

இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரும் "நாம் தான் சிறையை உடைத்தோம்" என்று தனித்து உரிமை கோரினார்கள்.

இந்த பிரசார நடவடிக்கைகளுக்கு மூல காரணமாக இருந்தவர்களில் ரமேஷ் ஈ.பி.டி.பி.யிலும், சிறீதரன் ஈ.பி.ஆர்.எல்.எப்பிலும் இருக்கின்றனர், ஏனையோர் ஒதுங்கிச் சென்றுவிட்டனர்.

இந்தியப் பயிற்சி :

இந்திய அரசு ஈழப் போராளிகள் அமைப்புக்கள் ஐந்துக்கு ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, ஈரோஸ் ஆகிய அமைப்புக்களது பயிற்சி முகாம்கள் தமிழ் நாட்டில் இருந்தன.

அந்த பயிற்சி முகாம்களில் இருந்து இந்தியாவின் உத்தர பிரதேசப் பகுதிக்கு போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒவ்வொரு இயக்கத்திற்கும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்தே பயிற்சியளிக்கப்பட்டது.

பாலங்களை தகர்ப்பது, பொருளாதார மையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றை குண்டுவைத்து சிதைப்பது போன்ற கருத்துக்கள் இந்திய பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட இராணுவ வகுப்புக்களில் விளக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பற்றிய விபரங்களை போராளிகள் மூலமாக அறியவும் இந்தியப் பயிற்சியாளர்கள் முயன்றனர்.

கிட்டுவின் அழுகை :

புலிகள் அமைப்பினர் பொன்னம்மான் என்றழைக்கப்படும் குகன் தலைமையில் இந்திய பயிற்சிக்கு சென்றார்.

பயிற்சிக்கு சென்றவர்களில் 'கிட்டு'வும் ஒருவர். உத்திர பிரதேசம் குளிர் பிரதேசம். சூழ்நிலைக்கு பழக்கப்படும் வரை போராளிகளுக்கு நோய் - நொடிகள்.

புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கும்பொறுப்பாளராக இருந்தவர் இந்திய இராணுவ கேணல்.

அவர் போராளிகள் மீது மீக பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார்.

பயிற்சிகள் முடிவடைந்து விடைபெறும் நேரம். இந்திய கேணலுக்கு கண்கள் கலங்கிவிட்டன. போராளிகள் கண்களிலும் குளம்.

கிட்டு ஓடிச் சென்று இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டார்.

கண்ணீரோடு விடைபெற்று சென்னை வந்தனர். சென்னை அடையாரில் புலிகளது அலுவலகம் இருந்தது.

தமது அனுபவங்களை புலிப் போராளிகள் பிரபாவிடம் கூறினார்.

அதனைக் கேட்டு விட்டு சிறிது நேர மௌனத்தின் பின்னர் பிரபா கூறியது இது!

"நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப் போனோம்; அவர்கள் (இந்தியா) வேறு ஒரு நோக்கத்திர்ககப் பயிற்சி தந்திருக்கிறார்கள். எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நாள் அவர்களது இராணுவம் திரும்பினால், இதே கேணலுடன் சண்டை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நான் உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்டை பிடித்தேயாக வேண்டும்."

கிட்டுவும், மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். அவர்கள் இந்தியாவை நம்பியிருந்தவர்கள். அதனால் தான் திகைப்பு.

இதே போல இன்னொரு முக்கிய சம்பவம். அதுவும் பிரபாவின் வித்தியாச அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுதான். அதை அடுத்தவாரம் சொல்கிறேன். 

இந்தப் போட்டி உரிமை கோரல் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை:

ஆயுத உதவியும் பிரபாவின் அவதானமும்:

ஆயுத உதவி:

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது.

இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி.

புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர் பிரபாகரன் ஒருவர் மட்டும்தான்.

இந்தியா ஆயுதம் தரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தமது தலைவரை சந்திக்க சென்ற கிட்டு உட்பட முக்கிய உறுப்பினர்களிடம் பிரபா சொன்னது இது.

"நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்க வேண்டும்".

கேட்டவர்களுக்கு அதிர்ச்சி, இந்தியா ஆயுதம் தரப்போகிறது. பின்னர் ஏன் வெளியே ஆயுதம் வாங்க வேண்டும்?

அவர்களின் மனதில், ஓடிய எண்ணங்களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் சொன்னது இது.

"இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் எம்மை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமாகவே ஆயுதம் தரும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால் சொந்தமாகவும் ஆயுதங்கள் தேடிக்கொள்ள வேண்டும்".

சொன்னது மட்டுஅல்ல திட்டமிட்ட அதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கினார் பிரபாகரன்.

புலிகள் தவிர புளொட் அமைப்பினரும் வெளியே ஆயுதம் வாங்க முற்பட்டனர்.

ஆயுதப் பறிப்பு:

1984இல் புளொட் அமைப்பினரின் ஆயுதங்கள் கப்பல் ஒன்றில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்தன.

இந்திய சுங்கப் பகுதியினால் அந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களது பெறுமதி 4 கோடி என்று புளொட் அப்போது கூறியிருந்தது.

தனது கையை விட்டு போராளிகள் அமைப்புக்கள் செல்வதை இந்தியா விரும்பவில்லை.

சொந்தமாக ஆயுதங்கள் பெரும் போராளிகள் அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்தமைக்கு அதுதான் காரணம்.

புளொட் அமைப்புக்கும் இந்தியா ஆயுதம் வழங்கியது.

அதே சமயம் புளொட் தானாகவே சொந்தமாக வாங்கிவந்த ஆயுதங்களை அதே இந்தியா பறித்து வைத்துக்கொண்டது.

இந்திய சுங்கப் பகுதியினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு புலிகள் வெளிநாடுகளில் உள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ரொலோவும் வெளியில் இருந்து ஆயுதங்களை வங்க முயற்சி எடுத்த போதும் குறிப்பிடத்தக்க அளவில் சாத்தியமாகவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் தலைமைகளுக்கு வெளியில் இருந்து ஆயுதம் வாங்குவது ஒரு நல்ல கனவாக மட்டுமே இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் ஆட்சேர்ப்பில் காட்டிய தீவிரத்தை ஆயுத சேகரிப்பில் காட்டவில்லை.

ஈரோஸ் ஆட்சேர்ப்பில் சில வரையறைகளோடு நின்று கொண்டது.

பின்வந்த காலங்களில் ஈரோஸ்ன் பெயர் கெட்டுவிடாமல் இருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம், உள்ளவற்றில் பரவாயில்லை என்று அதனை மக்கள் கருதியமை 1988 பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் ஈரோஸ் நிறுத்திய சுயேட்சைக் குழுக்கள் வெற்றிபெறவும் ஒரு காரணமாக அமைந்தது.

முகாம் தகர்ப்பு:

1984இல் திருகோணமலையில் கிண்ணியா வங்கி ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பால் கொள்ளையிடப்பட்டது. சுபத்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

1984இல் பெப்ரவரியில் யாழ்ப்பாணத்தில் குருநகர் இராணுவ முகாம் கட்டிடங்கள் புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. குருநகரில் நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு வெளியேறினார்கள்.

மீண்டும் இராணுவம் அங்கு வந்து முகாம் அமைப்பதை தடுப்பதற்காகவே புலிகள் கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தனர்.

சமூக விரோதிகள் ஒழிப்பு:

வடக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாக வடிவங்களும் சீர்குலைந்தன.

திருடர்களும், குற்றவாளிகளும், தீயசக்திகளும் இந்த நிலையைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டனர். இயக்கங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டனர்.

அப்போதெல்லாம் மக்களுக்கு இயக்கங்களின் பெயர்கள்தான் அறிமுகம்.

இயக்கங்களின் இருந்த உறுப்பினர்களை மக்களுக்கு தெறியாது. இரகசியமாக இயங்கிய கால கட்டம் அது.

"நானும் இயக்கம்தான்" என்று 'சட்டைக் கொலரைத்' தூக்கி விட்டபடி திரிந்தவர்களை அப்போதெல்லாம் காணவே முடியாது.

பல அம்மக்களுக்குக் கூட தமது பிள்ளைகள் இயக்கத்தில் இருந்தது தெரியாத காலம் அது.

ஆகவே இயக்கப் பெயர்களைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சில இடங்களில் தமது கைவரிசைகளைக் காட்டினார்கள்.

சமூக விரோதிகள் என்று இனம் காணப்பட்ட சிலரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.

வரவேற்பு:

சமூக விரோதிகள் அழித்தொழிப்பு தொடர்பாக 1984 மார்ச் மாதத்தில் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.

சமூக விரோதிகள் தம்மால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று புலிகள் அப்பிரசுரத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நடவடிக்கைக்கு மக்களிடம் வரவேற்புக் கிடைத்தது. இயக்கங்கள் குறித்தும் மக்களிடையே இருந்த நல் அபிப்பிராயம் மேலும் வளர்ந்தது.

ஆயுதப் போராட்டம் காரணமாகவே வடக்கில் பொலிஸ் நிர்வாகம் செயல் இழந்தது.

அதனைப் பயன்படுத்தி வளர முற்பட்ட சமூக விரோதிகளை களைய வேண்டிய பொறுப்பு ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு இருந்தது.

தத்துவம், மனிதாபிமானம் என்ற பெயரில் சில இயக்கங்கள் அதனைச் செய்ய தவறிவிட்டன.

மக்கள் விரோதிகளிடம் மனிதாபிமானம் காட்டுவதென்றால் ஆயுதம் ஏந்தியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

இதனை உணராதபோதுதான் சில இயக்கங்களுக்குள் கூட மக்கள் விரோத சக்திகள் புகலிடம் பெற்றுக்கொண்டன. அந்த இயக்கங்கள் மதிப்பிழக்கும் சுழலும் ஏற்பட்டது.

ரொலோவின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

முழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய சரமும், சடைமுடியும், கழுத்தில் தொங்கும் கருப்பு நூலும், காதில் கடுக்கனும் ரொலோவின் அடையாளமாக மாறியது.

போர்குணம் வேறு, சண்டித்தனம் வேறு. சண்டியர்கள் மக்களை மதிப்பதில்லை, மக்கள் அவர்களிடம் பயந்தாலும் சண்டியர்கள் வீழ்ச்சியடையும் பொது மக்கள் மகிழவே செய்வர்.

மக்கள் விரோதிகள் விடயத்தில் புலிகள் வெளியே மட்டும் அல்ல, இயக்கத்தின் உள்ளேயும் கண்டிப்பான போக்கையே கையாண்டனர்.

கோண்டாவில் தாக்குதல்:

1984 மார்ச் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட பஸ் ஒன்று கோண்டாவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்ஸில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த விடயம் புலிகளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

கோண்டாவிலில் வைத்து இரு விமானப்படை வீரர்களும் புலிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

(1) ரோகன் ஜெயசேகரா

(2) சரத் அனுரசிறி

ஆகியோரே 1984  மார்ச் 20இல் புலிகளால் கொல்லப்பட்ட விமானப்படை வீரர்கள்.

மார்ச் 25:

இலங்கையில் தேசிய பாதுகாப்பு அமைச்சராக அத்துலத் முதலியை நியமித்தார் ஜே.ஆர்.

பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் உயர்மட்டபாதுகாப்பு மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்தார் அத்துலத்முதலி.

ஏற்பாடுகள் நடந்தன. மாநாட்டுக்கு தலைமை தங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் வந்திறங்கினார் அத்துலத்முதலி.

அவர் வந்து இறங்கிய அரைமணி நேரத்திற்குள் ஒரு செய்தி அவர் செவிக்கு வந்தது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த அதிரடிப் பிரிவினர் ரோந்து சென்றனர்.

ரோந்து சென்றவர்கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

ஒரு சார்ஜன்டும், இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஒற்றுமை முயற்சி:

பிரதானமான தமிழ் விடுதலை இயக்கங்களை ஒன்றுபடுத்தும் முயற்சி ஒன்று 84இல் மீண்டும் ஆரம்பமானது.

பத்மநாபா, டக்லஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ்நாட்டில் சென்னையில் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒற்றுமை முயற்சியின் முதற்கட்டமாக ரொலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்தன.

'ஈழத்தேசிய விடுதலை முன்னணி' (ஈ.என்.எல்.எஃப்) என்று மூன்று இயக்கங்களும் ஐக்கிய கூட்டமைப்புக்கு பெயரிடப்பட்டது.

இந்தக் கூட்டமைப்போடு 'புளொட்' அமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈரோஸ் விரும்பியது.

ஈரோஸ் சார்பாக அதில் முன்னணியில் நின்றவர் வே.பாலகுமார்.

'புளொட்' அமைப்பினருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்பிற்கும் இடையே அப்போது பிரச்சனை நிலவியது.

மட்டக்களப்பு சிறை உடைப்பை அடுத்து ஏற்பட்டபிரச்சனை அது.

பத்மநாபா கசப்பை மறந்துவிட்டு 'புளொட்' அமைப்பைக் கூட்டமைப்புக்குள் கொண்டு வர தயாராகவே இருந்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், ரமேஷ் போன்றவர்கள் அதனை விரும்பவில்லை. புளொட் அமைப்பினர் தமது உறுப்பினர்கள் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும். நிறுத்தினால்தான் கூட்டமைப்பிற்கு புளொட் வரமுடியும் என்று நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டனர்.

அப்போது கூட்டமைப்புக்கு ரமேஷ் செயலாளராக இருந்தார்.

பாலகுமாரின் விருப்பம்:

'புளொட்' அமைப்பை பேச்சுக்கு அழைக்குமாறு வே.பாலகுமார் ரமேஷிடம் பலமுறை வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

ரொலோ தலைவர் சிறிசபாரத்தினத்தை தனியே சந்தித்த வே.பாலகுமார் "கூட்டமைப்பில் புலிகள் சேர்ந்தால் கூட்டமைப்பே  அவர்களுடையதாக மாறிவிடும், எனவே புளொட்டை கொண்டுவருவோம்" என்று யோசனை தெரிவித்தார்.

ஆனால், பாலகுமார் இப்படி தமக்காக வாதாடுவது புளொட் தலைவர் உமாமகஸ்வரனுக்குத் தெரியாது.

கூட்டமைப்பின் அலுவலகம் கோடம்பாக்கத்தில் இருந்தது. சென்னையில் ஏனைய இயக்கங்களுக்கு அலுவலகங்கள் இருந்தன.

ஈரோஸ்க்கு மட்டும் அலுவலகம் கிடையாது.

அதனால் கூட்டமைப்பு அலுவலகத்தில் வந்து நாள் முழுவதும் குந்திவிடுவார் பாலகுமார்.

ஒருநாள் உமாமகஸ்வரனும் வேறு சிலரும் கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்றனர்.

பாலகுமார் தான் அப்போது அங்கு இருந்தார். பாலகுமாரோடு காரசாரமான வாக்கு வாதத்தில் ஈடுப்பட்ட உமாமகேஸ்வரன் அங்கிருந்த மேசையில் ஓங்கிக் குத்தினார்.

"ஈரோஸ் ஒரு 'லெட்டர் கெட்' இயக்கம்" என்று பாலகுமாரைப் பார்த்து கேலி செய்துவிட்டும் சென்றுவிட்டார் உமாமகேஸ்வரன்.

இதன் பின்னர் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சைக் குறைத்துக் கொண்டார் பாலகுமார்.

புலிகள் மறுப்பு:

கூட்டமைப்பில் சேராமல் வெளியே நின்று புரிந்துணர்வோடு செயற்பட விரும்புவதாகப் புலிகள் கூறிக் கொண்டிருந்தனர்.

புலிகள் தாமதித்துக் கொண்டிருந்த போட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர்.

கூட்டணியும் வருவதால் புளொட் அமைப்பையும் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ரொலோ, புளொட்,கூட்டணி ஆகிய அமைப்புக்களதுபிரதிநிதிகள் சென்னையில் கூடிப் பேசினார்கள்.

கூட்டணி சார்பில் அமிர் -சிவ \சிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலிகள் வராவிட்டால் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்காமல் கூட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவாக்கலாம் என்று புளொட் கூறியது. கூட்டணியும் அதனை ஆதரித்தது.

மீண்டும் ஒரு முறை புலிகளிடம் முடிவை கேட்டுவிட்டு மேற்கொண்டு பேசித் தீர்மானிக்கலாம் என்றளவில் அந்தக் கூட்டம் முடிவுற்றது.

சுழிபுரம் படுகொலைகள்:

யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

சித்திரவதை செய்யப்பட்டே அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இக் கொலைகளை புளொட் அமைப்பினரே செய்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அப்போது சென்னையில் இருந்து 'ஈழச் செய்தி' என்னும் மாத பத்திரிகை ஒன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியிட்டு வந்தது.

'ஈழச் செய்தி' ஆசிரியராக இருந்தவர் ரமேஷ்.

சுழிபுரம் படுகொலையைக் கண்டித்து 'ஈழச் செய்தி' காரசாரமாக விமர்சித்தது.

இதனையடுத்து புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது.

'ஈழச் செய்தி' பத்திரிக்கையை புலிகள் தாமும் வாங்கி விநியோகித்தனர்.

கூட்டமைப்புக்கும் வருவதற்கு தாம் தயாராக இருபதாக புலிகள் சார்பில் இராசநாயகத்தால் ஈ.பி.ஆர்.எல்.எப். பிற்கு தெரிவிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி உருவாக்கிய ஆயுதப்படை


அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 26.


 

இயக்க மோதலைத் தவிர்க்க பிரபா கூறிய யோசனை


அரசியல் தொடர்


நம்பிக்கை இல்லை


ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோ அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார்.


ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.


ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது ஏற்பட்ட நல்லெண்ணம் காரணமாகவே ஐக்கிய முயற்சிக்கு பிரபா உடன்பட்டார்.


இதற்கிடையே நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வொன்றைக் கூறிவிட்டு ஐக்கிய முயற்சி பற்றி தொடருகிறேன். பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இயக்கங்களை விட தம்மையே அதிகம் நம்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூறித் திரிந்தனர்.


அமுதரின் இல்லத்தில் ஒரு புகைப்படம இருந்தது-. இந்திராவை அமுதர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே அது. அழகாக ஃபிறேம் போட்டு அதனை வைத்திருந்தார்.


இந்திய அரசும், மிதவாதத் தலைவர்கள் என்ற வகையில் கூட்டணியை ஆரம்பித்ததில் தட்டிக்கொடுத்து வந்தது.


இயக்கங்கள் தமது சொற்படி நடக்காவிட்டாலும் கூட்டணியினர் தாம் சொல்வதை கேட்கக்கூடியவர்கள் என்று இந்திய அரசு நினைத்திருக்கலாம்.


இந்த நேரத்தில் தான் அமுதருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.


இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுப்பதால் குறிப்பிட்ட இயக்கங்கள் பலமாகிவிடும். ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் கூட்டணிக்கு மேலும் சவாலாகிவிடலாம்.


எனவே & கூட்டணிக்கும் ஒரு ஆயுதப் படையை உருவாக்குவதுதான் புத்திசாலித்தனம் என்று அமுதர் நினைத்தார்.


இளைய மகன் தலைவர்


அமுதருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் காண்டீபன் இலண்டனில் அரசியல் புகலிடம் பெற்றிருந்தார். இளைய மகன் பகீரதன் அமுதரோடு இருந்தார்.


பகீரதனை தலைவராக வைத்து கூட்டணியின் ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.


இந்தியா கூட்டணிக்குத்தான் பெரும் உதவிகளை செய்யப்போகிறது என்று கூறி பகீரதனும் சிலரும் சேர்ந்து இளைஞர்கள் சிலரை திரட்டினார்கள்.


இயக்கம் என்று இருந்தால்தானே இந்தியா பயிற்சி கொடுக்கும்:


'அகிம்சையே எங்கள் மூச்சு: ஆயுதங்களை தூர வீசு.' என்பதுபோலப் பேசிய கூட்டணியின் பெயரில் பயிற்சி பெறுவதோ, ஆயுதம் கேட்பதோ நன்றாகவா இருக்கும்? இருக்காதல்லவா?


அதனால் பகீரதனின் தலைமையிலான ஆயுதக் குழுவுக்கு தமிழீழ தேசிய விடுதலை இராணுவம் (ரெனா) என்று பெயரிடப்பட்டது.


கிடைத்தது அடி


தமிழ்நாட்டில் ஒரு முகாம் அமைத்து இளைஞர்களை வைத்திருந்தார்கள்.


பயிற்சி முகாம் என்று பெயர்தானே தவிர பயிற்சியும் இல்லை: ஆயுதங்களும் இல்லை இந்திய பயிற்சிக்கு அனுப்பப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர அனுப்புவதாகத் தெரியவில்லை.


இன்று போகலாம். நாளை போகலாம் என்று நாட்களைக் கடத்தினார் பகீரதன். பொறுத்துப் பார்த்து வெறுத்துப்போன இளைஞர்கள் முகாமில் பொறுப்பாக இருந்தவரை அடித்துப் போட்டு விட்டு முகாமை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்.


அந்த அடியோடு தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா) இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.


கூட்டணியின் ஆயுதப்படை கட்டும் முயற்சி & 'சீச்சி. இந்தப் பழம் புளிக்கும்' கதையாக மாறிப்போனது.


காந்தீயவாதிகள் கத்தி எடுக்க நினைத்தார்கள். ஆனால் முயற்சி சித்தியடையவில்லை.


இனி & ஐக்கிய முயற்சிக்கு செல்வோம்.


சிறீயைக் கொல்ல சதி?


பிரபாகரன் ரெலோ&ஈரோஸ் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அதுபோல ரெலோவுக்கும புலிகள் மீது நம்பிக்கையோ நல்லெண்ணமோ இருக்கவில்லை.


ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொல்வதற்கு பிரபாகரன் சதி செய்தார் என்று அப்போதுதான் ரெலோ குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.


இக் குற்றச்சாட்டுக்கு காரணமான சம்பவம் பற்றியும் கூறவேண்டும்.


1984இன் ஆரம்பத்தில் ரெலோவுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டன. ரெலோவின் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்த உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.


அரசியல் ரீதியாக இயக்கத்தை வழி நடத்தாமல் இராவணுவவாதக் கண்ணோட்டத்தோடு சீறி செயற்படுவதாக அவர்கள் கூறினார்கள்.


உள் இயக்க பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் பிரபாகரனிடம் உதவி கோரினார்கள்.


பிரபா உதவி


இதனைத் தொடர்ந்து ரெலோ ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் இருந்தன:


05.05.84 அன்று ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டது.


பிரபாகரனிடமிருந்து கைத்துப்பாக்கியும், குளோரஃபோம் போத்தலும் பெற்றுக்கொண்ட ரெலோ உறுப்பினர்கள் சிறீ சபாரத்தினத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டனர்.


இதனை ஏற்கெனவே அறிந்து கொண்ட சிறீ சபாரத்தினம் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்.


மீண்டும் 09.05.84 அன்று ரெலோ இயக்கத்தினர் சிலர் தமது தலைவரைக் கொல்ல சதித்திட்டத்தோடு காத்திருந்தார்கள்.


அந்தத் திட்டத்தையும் முறியடித்து சதித்திட்டம் போட்ட உறுப்பினர்களை சிறீ சபாரத்தினத்தின் விசுவாசிகள் கைது செய்தனர்.


ரெலோவின் பாதுகாப்பில் இருந்த சிறீ சபாரத்தினத்தின் புலிகளின் உதவியோடு தப்பிச்சென்றனர்.


சிறீ சபாரத்தினத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் வரதன் என்னும் உறுப்பினர்


அற்புதன் எழுதுவது


அந்த வரதனும் புலிகளோடு இரகசியத் தொடர்பு வைத்திருந்தார். அவரது தகவலின் படியே ரெலோவின் மறைவிடத்தில் புலிகள் புகுந்தனர். சிறீயைக் கொல்ல முயன்றவர்களை மீட்டுச் சென்றனர்.


இதுதான் ரெலோ சார்பாக வெளியே சொல்லப்பட்ட தகவல்கள்.


இச் சம்பவத்தின் பின்னர் ரெலோவும் புலிகளும் விரோத நிலைப்பாட்டில் இருந்தனர்.


இதனால் ஒற்றுமை முயற்சிக்கு பிரபா உடன்பட்டபோதும் ரெலோ குறித்து சந்தேகம் கொண்டிருந்தார்.


முதல் சந்திப்பு


அதனால் மூன்று இயக்கப் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு தனது சார்பில் அன்ரன் பாலசிங்கத்தையும், இராசநாயகத்தையும் அனுப்பிவைத்தார். (இராசநாயகம் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரவைத் தலைவர்)


கோடம்பாக்கத்தில் இருந்த ஈ.என்.எல்.எஃப் அலுவலகத்திற்கு அவர்கள் இருவரும் சென்றனர்.


மூன்று இயக்கங்கள் ஒன்-றுபட்டு ஈ-என்.எல்.எஃப் கூட்டமைப்பு உருவாகியது ஏப்ரல் 1984இல் புலிகள் கூட்டமைப்போது பேச வந்தது, மார்ச், 23. 1985இல்.


"ஒற்றுமை முயற்சி என்றால் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்வதுதான் முறையாக இருக்கும். அதனால் பிரபாகரன் கூட்டத்திற்கு வரவேண்டும்" என்று ஈரோஸ் சார்பாக வே. பாலகுமார் கருத்துத் தெரிவித்தார்.


"தம்பி (பிரபா) வருவதில் பிரச்சனை கிடையாது. பாதுகாப்புக் காரணம் கருதி பொது இடத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்."


என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார். சென்னையில் இஇருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் 'பிரசிடென்சி'


நான்கு இயக்கத் தலைவர்களும் 'பிரசிடென்சி' ஹோட்டலில் சந்திப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டது.


ரெலோ சார்பில் சிறீசபாரத்தினம், மதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா. குணசேகரன், ரமேஷ், ஈரோஸ் சார்பில் பாலகுமார், முகிலன். புலிகள் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.


1985 ஏப்ரல் 10ம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பு நடைபெற்றது.


பேச்சு ஆரம்பித்தவுடன் பிரபாகரன் முதலில் எழுப்பிய கேள்வி இது:


"உருவாகப்போவது தமிழீழமா? ஈழமா? கூட்டமைப்புக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிட்டுள்ளீர்கள். நாமும் ரெலோவும் தமிழீழம் என்றுதான் கூறிவருகின்றோம். அதனால் கூட்டமைப்பு பெயரை மாற்றினால் என்ன?"


அதற்கு வே. பாலகுமார் பதிலளித்தார். "நாமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் ஈழம் என்றுதான் கூறிவருகிறோம். ரெலோவுக்கம் பெயர் ஒரு பிரச்சனை இல்லை."


இந்த இடத்தில் குறுக்கிட்ட பத்மநாபா. "எமக்கு பெயர் ஒரு பிரச்சனையல்ல. ஐக்கியம்தான் முக்கியம். கூட்டமைப்பு பெயரை மாற்றுவது என்றாலும் பிரச்சனையில்லை."


என்று கூறிவிட்டார். இதனை எதிர்பார்க்காத பாலகுமார் சொன்னது இது:


"ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கு பெயர் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். நாங்கள் ஈரோஸ் அப்படி சொல்ல முடியாது. நான் எனதுஆட்களோடு பேசிவிட்டுத்தான் முடிவு சொல்ல இயலும்."


பெயர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஈ.என்.எல்.எஃப்&விடுதலைப்புலிகள் சந்திப்பு என்று கூட்டறிக்கை விடுவதாக முடிவு செய்யப்பட்டது.


பிரபா சொன்னவை


அதனைத் தொடர்ந்து பிரபா சில கருத்துக்களைத் தெரிவித்தார்.


"சரவணன், மைக்கேல் போன்றவர்களை நான் சுட்டது உண்மைதான். ஆனால் இயக்க முடிவின்படி தான் செய்தேன். மா, நாகராசா எல்லோரும் உடன்பட்டுத்தான் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது நான் தன்னிச்சையாகச் செய்ததாகக் கூறுகிறார்கள்.


"கட்டுப்பாட்டை மீறினால் தண்டிப்பது பிழையல்ல. இப்போது கூட என்ரை பெடியள் விலகிப் போகலாம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, பிரச்சனை இல்லாமல் போனால் அனுமதிப்பேன்.


"ஆயுதங்களோடு போனால் விடமாட்டேன். இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கங்களுக்கு போனால் அதனால் பிரச்சனை வரும்.


"என்னோடு இருந்த ஒருவர் உங்களோடு சேர வந்தால் நீங்கள் சேர்க்கக்கூடாது. உங்களோடு இருக்கும் ஒருவர் என்னோடு சேரவந்தால் நானும் சேர்க்க மாட்டேன்.


இப்படியான அணுகுமுறை இருந்தால் இயக்கப் பிரச்சனைகள் வராது. என்னோடு இருந்து விலகி வந்தவரை நீங்கள் சேர்ததால அவர் எங்களைப் பற்றி தவறாகப் பேசும்போது நாங்கள் பிடிக்க வேண்டிவரும். அல்லது உங்களோடு இருந்தவர் எங்களிடம் வந்து இருந்துகொண்டு உங்களைப் பற்றி தவறாக கதைத்தால் நீங்கள் பிடிக்க வருவீர்கள். ஏன் இந்த தேவையற்ற பிரச்சனை.


"நாங்கள் நான்கு இயக்கங்களும் ஒருவரிடமிருந்து விலகுபவரை இன்னொருவர் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டும்"


"பிரபா அவ்வாறு சொன்னவுடன் அதனை பத்மநாபா மறுத்துப் பேசினார்.


"இயக்க உறுப்பினர்களுக்கு ஜனநாயக உரிமையை மறுக்க முடியாது விலகவும், விரும்பி இயக்கத்தில் சேரவும் அவர்களுக்கு உரிமை உண்டு."


என்று வாதிட்டார் பத்மநாபா. ரெலோவும், ஈரோசும் அதனை ஏற்றுக் கொண்டன.


பிரபாவின் கருத்து சரியானது என்று கூட்டம் முடிந்தவுடன் பத்மநாபாவிடம் கூறினார் ரமேஷ். எதிர்காலத்தில் இயக்கப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிரபா சொன்ன கருத்தை ஏற்று அதனை ஒரு முடிவாக எடுக்கலாம் என்பது ரமேஷின் கருத்தாக இருந்தது. எனினும் பத்மநாபா அதனை ஏற்கவில்லை.


1985ல் பிரபா சொன்ன கருத்து அது. தற்போது 95ம் ஆண்டு.


இந்த இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஒரு விடயம் தெளிவாகியிருக்கிறது.


எந்த ஒரு இயக்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு விலகி வேறு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தாமும் உருப்பட்டதில்லை. தாம் சேர்ந்த இயக்கங்களையும் உருப்படவிட்டதில்லை. மாறாக இப்படியானவர்களால் இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புக்களே மிஞ்சியிருக்கின்றன.


கோவையும் & பிரபாவும்


கூட்டணியில் முக்கியமானவராக இருந்தவர் கோவை மகேன், சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துக்கள் எழுச்சியை வி¬த்தன.


பின்னர் கூட்டணியோடு அவர் முரண்பட்டு தமிழீழ விடுதலை அணியை உருவாக்கினார். இது பற்றி முன்னரே விளக்கமாக கூறி இருந்தேன்.


கோவை மகேசனுக்கு பிரபாகரனில் நல்ல பிரியம் இருந்தது, கோவை மகேசன் மீது பிரபாவுக்கும் ஒரு பிடிப்பு நிலவியது.


தமிழ்நாட்டில் இருந்த கோவை மகேசன் கஷ்டப்பட்டார். அவருக்கு உதவி செய்தார் பிரபாகரன். கோவை மகேசன் பிரபாவின் உதவியோடு 'வீரவேங்கை' என்ற பத்திரிகையை சென்னையில் இருந்து ஆரம்பித்தார்.


அப்போது புலிகள் அமைப்பினர் 'விடுதலைப் புலிகள்' பத்திரிகையை பொறுப்பேற்றுச் செய்யுமாறு கூறியிருக்கலாம். இயக்கத்திலும் அவரை சேர்த்திருக்கலாம்.


ஆனால் செய்யவில்லை. கோவை மகேசன் நல்லவராக இருக்கலாம். தமிழீழ விடுதலை உணர்ச்சி மிகுந்தவராக இருக்கலாம் & ஆனால் இயக்க கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவரல்ல. தவிர அவரை கட்டுப்படுத்துவதிலும் சங்கடங்கள் ஏற்படும்.


அதனை உணர்ந்தே கோவை மகேசனுக்கும் இயக்கத்திற்கும் இடையே கௌரவமான ஒரு இடைவெளி வைத்துக் கொண்டார் பிரபா.


எவரை&எங்கே&எந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவது என்ற நுட்பம் தலைமைத் துவத்திற்கு தேவை. அதுவும் ஆயுதப் போராட்ட சூழலில் மிகவும் முக்கிய தேவை.


பரா&பாலகுமார்


இன்னொரு உதாரணம் கூறுகிறேன்:


ஈரோஸ் அமைப்பை கலைத்துவிட்டதாக கூறிவிட்டு வே. பாலகுமார், பரராஜசிங்கம் போன்றோர் புலிகளோடு சேர்ந்தனர்.


பராவுக்கோ, பாலகுமாருக்கோ இயக்க உறுப்பினர்களை ஆளுமை செய்யும் பொறுப்பு எதனையும் பிரபா கொடுக்க வில்லை.


பாராவை அவரது திறமைக்கு ஏற்ப சிவில் நிர்வாகப் பொறுப்பு கொடுத்து தனது நேரடி கண்காணிப்பில்தான் பிரபா வைத்திருக்கிறார். இயக்க உறுப்பினர்களுக்கு பரா கட்டளை போட முடியாது.


இதிலிருந்து தெரிவது பிரபா 85இல் தெரிவித்த கருத்தில் இன்றுவரை அவரிடம் மாற்றம் இல்லை என்பதுதான்.


இப்போது மீண்டும் ஒற்றுமை முயற்சி கட்டத்திற்கு செல்லலாம்.


ஓடிவந்த உறுப்பினர்

'பிரசிடென்சி ஹோட்டலில்' சந்திப்பு முடிந்து பிரபா விடைபெற்றுச் சென்றார். அவரோடு பேசியபடி சென்ற பத்மநாபாவும் மற்றவர்களும் தமது காரில் ஏற ஆயத்தமானபோது ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் ஓடிவந்தார்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தூதரகத்தில் போராளிகள் பாச்சல்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-27)

patmanapa-680x365.jpg
 

சென்னை ‘பிரசிடென்சி ஹோட்டலில் இருந்த புறப்பட்டு சென்றுவிட்டார். பத்மநாபாவும் தனது காரில்  புறப்பட ஆயத்தமான போது தான் ஈரோஸ் உறுப்பினர் ஓடிவந்தார்.

மேலே  ஹோட்டல்  அறையிலிருந்த பாலகுமாரும், சிறீ சபாரத்தினமும்  அந்த உறுப்பினர்  மூலம் ஒரு தகவல் அனுப்பியிருந்தனர்.

பத்மநாபாவை  தங்களை  வந்து  சந்திக்கும்படி  தகவல் அனுப்பியிருந்தார்.   பத்மநாபா  மீண்டும் சென்றார்.

அமெரிக்க தூதரகத்தில்  போராளிகள் பாச்சல்

பாலகுமாரின் தந்திரம்

கூட்டமைப்பு பெயரை மாற்றுவதில்லை  பிரச்சனையில்லை என்று கூறிவிட்டீர்கள்.

அப்படி பெயரை மாற்றினால்  புலிகள் புதிய  கூட்டமைப்பை  உருவாக்கியதாக கருதப்படும்.  சிறீ சபாரத்தினமும்  இதையே சொல்லுகிறார் என்றார் பாலகுமார்.

பிரபாகரனும்  பத்மநாபாவும்  கீழே சென்ற போது   சிறீ சபாரத்தின் மனதை மாற்றிவிட்டார் பாலகுமார். எனவே பாலகுமாரின்  கருத்தை சிறியும்  ஆமோதித்தார்.

பெயரை மாற்றுவதில்லை  என்ற முடிவுக்கு பத்மநாபாவும் சம்மதித்தார்.

இதன் பின்னர் சில நாட்கள் கழித்து  அடுத்த சந்திப்பு  நடைபெற்றது.  அதில் பிரபா கலந்துகொள்ளவில்லை.

புலிகள்  சார்பாக  அன்ரன் பாலசிங்கமும்  இராசநாயகமும் கலந்து கொண்டனர்.

பெயர் பிரச்சனை  மீண்டும் எழுந்தது. அன்ரன் பாலசிங்கம் சில கருத்துக்களை தெரிவித்தார்.

“தம்பி  ஒற்றுமைக்கு  தயாராக  இருக்கிறார். தம்பியை  சுற்றியிருக்கும் சிலர் இதை விரும்பவில்லை.  நானும் இராசநாயகமும்  தப்பியோடு கதைத்து அவரை உடன்பட செய்திருக்கிறோம்.

இந்த நிலையில் கூட்டமைப்பு பெயர்  “ஈழத் தேசிய  முன்னணி”  என்று  இருந்தால் எங்களுக்குள்   பிரச்சனை வரும். ஏன் தமிழீழம் என்று போடவில்லை என்று  கேட்பார்கள்.

அதனால்   “ஈழத் தேசிய  முன்னணி- புலிகள் கூட்டமைப்பு” என்று  அதை்துக்கொள்வோம் என்றார் பாலசிங்கம்.

நீண்ட விவாத்தின் பின்னர் பாலசிங்கத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

pirapaa1.jpg

கையொப்பம் வரும்

தம்பியை சுற்றியிருப்பவர்கள் சிலர் ஒற்றுமை முயற்சியில்  நம்பிக்கை கொள்ளவில்லை  என்று பாலசிங்கம் கூறியதில்  உண்மை இல்லாமல் இல்லை.

கூட்டமைப்பு சார்பாக பத்திரிகைகளுக்கு  அறிக்கை விடுக்கப்படுவதுண்டு.

புலிகளது சார்பில்  அறிக்கைகளில்   கையொப்பமிடுபவர்  பேபி சுப்பிரமணியம்.

கூட்டமைப்பு கூட்டத்திற்கு ஒரு நாள் கூட   பேபி சுப்பிரமணியம் சென்றது கிடையாது.  கூட்டமைப்பு அறிக்கையை  பாலசிங்கம் கொண்டு சென்று   பேபி சுப்பிரமணியத்திடம்  கையெப்பம் வாங்கி வந்து கொடுப்பார்.

பிரபாகரன்   நினைத்திருந்தால்  பாலசிங்கத்தை   கையொப்பம் போடுமாறு  கூறியிருக்கலாம்.

ஆனால்  பேபி சுப்பிரமணியம்  அரசியல்  செயலாளராக  இருப்பதால் அவர்தான் கையொப்பமிடவேண்டும்  என்பதில் மாற்றம் ஏற்படுத்த பிரபா விரும்பவில்லை.

இது மட்டுமல்ல ” விடுதலைப் புலிகள்”  பத்திரிகையில்  விரிவுரையாளர் நித்தியானந்தன் பல ஆக்கங்களை எழுதிக்கொண்டிருந்தார்.

அவர்  எழுதும்  ஒவ்வொரு ஆக்கங்களையும்   பேபி சுப்பிரமணியம் பார்வையிட்டு  அனுமதி கொடுத்த பின்னரே  அச்சேறவேண்டும் என்பது பிரபாகரனின்  உத்தரவு.

இது குறித்து நித்தியானந்தன் வருத்தப்பட்டதும் உண்டு.

நித்தியானந்தன் போன்றவர்கள் வருவார்கள் -போவார்கள். பேபி சுப்பிரமணியம்  போன்றவர்கள்  என்றும் தன்னோடு  இருப்பார்கள்    என்பது பிரபாவின் கருத்து.

விரிவுரையாளர்  நித்தியானந்தன் புலிகளில்  இருந்து பின்னர் விலக்கப்பட்டார்.  பேபி சுப்பிரமணியம்  “இளம்குமரன்”  என்ற  பெயரில் இப்போதும்  புலிகள் அமைப்பில் இருக்கிறார்.

கூட்டமைப்பு  ஒற்றுமை  முயற்சிகள்  பற்றி பின்னர் பார்க்கலாம்,

1984 இல் நடந்த முக்கியமான  சம்பவங்கள் பற்றி  இப்போது கூறுகிறேன்.

சி.ஐ.ஏ

தமிழ் மக்களின்  போராட்டத்தை நசுக்க இலங்கை  அரசுக்கு அமெரிக்கா  உதவுகின்றது என்று  இயக்கங்கள் குற்றம் சாட்டி வந்தன.

இதில் முன்னணியில்  நின்றது  ஈ.பி.ஆா.எல. எப் . அமெரிக்க  உளவு  நிறுவனமான   சி.ஐ.ஏ இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருப்பதாக   ஈ.பி.ஆா.எல. எப் . பிரச்சாரம் செய்து வந்தது.

1984ம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம்  முன்பாக ஆாப்பாட்டம் நடந்த  ஈ.பி.ஆா.எல. எப் திட்டமிட்டது.

ஒரு நாள் 10 மணிக்கு அமெரிக்க தூதரகம் முன்பாக   முன்று ஓட்டோக்களில் சென்று  இறங்கினார்கள்  ஈ.பி.ஆா.எல. எப் .  உறுப்பினர்கள்.

தூதரக வாயிலில் காவலர்கள்  நிற்பார்கள்  உள்ளே செல்ல அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். எப்படியாவது உள்ளே சென்றுவிடவேண்டும். தூதரக வாயிலில் வைத்து அமெரிக்க கொடியை     எரிக்கவேண்டும் என்பதுதான் திட்டம்.

ஓட்டோவிலிருந்து   இறங்கியவுடன் காவலரை நோக்கி ஓடிய ரமேஷின் கையில் ஒரு சிறிய கமரா  இருந்தது. அதனை  காவலருக்கு  நேராக நீட்டி  மிரட்டியவுடன்    காவலர்கள் துப்பாக்கியை போட்டுவிட்டு உள்ளே ஓடிவிட்டனர்.

கமராவை சிறிய துப்பாக்கி என்று  காலர்கள் நினைத்துவிட்டர்ர்கள். உள்ளே  புகுந்தனர்கள் ஈ.பி.ஆா.எல. எப் .  உறுப்பினர்கள்.

சிறிய ஒலி பெருக்கி மூலம்  அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை   எழுப்பினார் டேவிட்சன்.  கொடிக்கு தீ வைத்தார் தயாபரன். அதற்கிடையில்  பொலிசாருக்கு தகவல் சென்றுவிட்டது.

ஈ.பி.ஆா.எல. எப் .  உறுப்பினர்கள்  சுற்றி  வளைக்கப்பட்டு  கைதுசெய்யப்பட்டனர்.

தமிழக முதல்வராக  இருந்த  எம்.ஜி. ஆரின் உத்தரவின் படி  அன்று  மாலையில்   கைதானவர்கள் விடுதலையானார்கள்.

அன்று முதல்  சென்னையில்  அமெரிக்க  தூதரகம் முன்பாக  பொலிஸ் டிரக் ஒன்று  ஆயுதம்   தரித்த  பொலிசாரோடு  காவலுக்கு நிறுத்தப்பட்டது.

தூதரக பாதுகாப்பும்  அதிகரிக்கப்பட்டது.

தூதரகம்  ஒன்றுக்குள்  நுழைவது   பாரதூரமான     குற்றம். அத்து மீறி   நுழைபவர்களை  சுட்டுதள்ளவும்   அங்கிருக்கும் காவலர்களுக்கு  உரிமையிருக்கிறது.

அதனை தூதரகம் அமைந்துள்ள நாடுகூட கேட்க முடியாது.

அன்று  காவலர்கள் பயந்திருக்காவிட்டால்  தூதரகத்தில் நுழைந்தவர்கள்  மீது துப்பாக்கி பிரயோகம்  செய்திருக்க முடியும்.  அமெரிக்க  எதிர்ப்பில்  முன்னின்ற   இயக்கமாக  ஈ.பி.ஆா.எல. எப்  அடையாளம் காணப்பட்டது.

dalas.jpg

தம்பதி மீது குறி

யாழ்பாணத்திலும்   சி.ஜ.ஏ உளவுப்  பிரிவு  ஊடுருவியிருப்பதாக சந்தேகம் நிலவியது.

உதவி திட்டங்கள் , அபிவிருத்தி  ஆராய்ச்சிகள் என்ற  போர்வைியில்  சி.ஜ.ஏ உளவு  பிரிவினர்கள்  நடமாடுவதாக   ஈ.பி.ஆா.எல. எப்  சந்தேகப்பட்டது.

அவ்வாறான சந்தேகத்தில் சிக்கிக்கொண்டனர் அலன் தம்பதியினர்.

யாழ்பாணத்தில் குருநகர்   இராணுவ முகாமுக்கு   அருகில்   ஒரு வீட்டை வாடகைக்கு  எடுத்து  அவர்கள்    தங்கியிருந்தனர்.  அலன்  தம்பதியினரை  கடத்தி சென்று  பயண கைதிகளாக்குமாறு   ஈ.பி.ஆா.எல. எப்  மக்கள்  விடுதலைப்படை   தளபதியாக இருந்த டக்ளஸ்  தேவானந்தா  உத்தரவிட்டார்.

1984ம் ஆண்டு மே மாதம் 10 ஆம்    திகதி  இரவு   அலன்  தம்பதியினரின் வீட்டுக்குள் புகுந்தனர்   மக்கள்  விடுதலைப்படை உறுப்பினர்கள்.

வீட்டுக்கு முன்னால் இராணுவ முகாம். காவலுக்கு நின்ற  இராணுவத்தினரின் கண்களில்  படாமல்   காரியத்தை முடிக்கவேண்டும்.

தமது  இரவுணவை  முடித்துவிட்டு  படுக்கையறையில் உல்லாசமாக இருந்தனர் அலன் தம்பதியினர்.

சிவ பூசைக்குள்  கரடி நுழைந்தது போல் திடீரென்று கதவு தட்டப்பட்டது.

துணியென்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்து  கதவை திறந்தார்  அலென். அவரை  துப்பாக்கி முனையில் மடக்கினார்கள்.  திருமதி  மேரி   அலனும்  துணிகளை     அள்ளிச் சுற்றிக்கொண்டு  ஓடி வந்தார்.

இருவரையும்  மாற்று  உடை    அணிந்து வருமாறு  கூறப்பட்டது.

பின்னர்  தம்பதியினர்  மறைவிடம்  ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோரிக்கைகள்

“20 போராளிகள் விடுதலை செய்யப்படவேண்டும. “

“5 கோடி மதிப்புள்ள தங்கம்   தரப்படவேண்டும்”    என்று   மறுநாள் அரசுக்கு  அறிவிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட வேண்டிய  போராளிகளது பெயர்களும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டன.

ஜே.ஆர். அரசு  திகைத்துப்  போனது.  உலகெங்கும்  செய்தி பரவியது. இலங்கையிலிருந்த வெளிநாட்டவர்களின்  பாதுகாப்பு கேள்விக்குள்ளானது.

யாழ்பாணத்திலிருந்த வெளிநாட்டவர்கள்  அனைவரும்  பொலிஸ் பாதுகாப்போடு  கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

அமெரிக்க அரசு தனது பிரஜைகள் பற்றி  கவலையை இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

பொலிசாரும்  இராணுவத்தினரும்  யாழ்பாணத்தில் சல்லடை  போட்டு தேடினார்கள்.  பயன் இல்லை.

இலங்கை  இந்தியாவின்  ஒத்துழைப்பை கோரியது.  தலைவர்   பத்மநாபாவும் , மக்கள்  விடுதலைப்படை   பிரதம தளபதி  டக்ளஸ்  தேவானந்தாவும்  தமிழ் நாட்டில் இருந்தனர்.

அவாகளோடு   இந்திய அரசு  தொடர்பு கொண்டு  உதவவேண்டு  என்று இலங்கை  அரசு கேட்டுக்கொண்டது.

தமிழகத்தில் கைது

கடத்தப்பட்ட அலன்  தம்பதிகள் யாழ்பாணத்தில்  ஒரு வீட்டில்  வைக்கப்பட்டிருந்தனர்.   கடத்தப்பட்டவாகள்  தமிழ்நாட்டுக்கோ  அல்லது  பாகிஸ்தானுக்கோ  கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என இலங்கை அரசு நம்பியது.

இந்திய அரசு கூட  அலன்  தம்பதியினர்கள்  தமிழ்நாட்டுக்கு  கொண்டுவரப்பட்டிருக்கலாம்  என்றே   நினைத்தது.

இந்திய   பிரதமராக  இருந்த  இந்திராகாந்தி    அலன்  தம்பதி விடுதலை செய்யவேண்டும் என்று அக்கறை காட்டினார்.

தமிழ்நாட்டிலிருந்த   ஈ.பி.ஆா.எல. எப்  முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரனை  கைது செய்த தமிழக இரகசிய பொலிசார் அவரிடமிருந்த  டயரியை துருவி ஆராய்நதனர்.

பத்மநாபாவையும், டக்ளஸ்  தேவானந்தாவையும் எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதே  அவர்களது நோக்கம்.

பத்மநாபா  அப்பொழுது டில்லியில் இருந்தார்.  அங்கிருந்தால் கைதுசெய்யப்படலாம்  என்பதால் விமானம் மூலம்  செ்ன்னை திரும்பினார்.

இதனை அறிந்துவிட்ட தமிழக    பொலிசின் உளவுப்பிரிவினர்  விமான நிலையத்தின் முன்பாக காத்திருந்தனர்.  பத்மநாபாவை அழைத்துச் செல்ல  வந்த  அவரது கார் மீது  உளவு பிரிவினரது கழுகு பார்வை பதிந்திருந்தது.

ஈ.பி.ஆா.எல. எப்  ஒரு உளவுப்பிரிவை வைத்திருந்தது.  மக்கள்  ஆய்வு பிரிவு (MAP )என்பது அதன் பெயர்.   இந்தியாவில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் ரமேஷ்.

விமான நிலையத்தில் வந்திறங்கிய  பத்நாபாவை  வேறு ஒரு காரில்  ரமேஷ்  அழைத்துச் சென்றுவிட்டார்.  மக்கள்  ஆய்வு  பிரிவின் மறைவிடத்துக்கு  பத்மநாபா அழைத்துச் செல்லப்பட்டார்.

pathbanabha-20130426-1.jpg

முற்றுகை

தமிழநாட்டில் இருந்த  ஈ.பி.ஆா.எல. எப்  அமைபின்  தங்குமிடங்கள்  யாவும்   தமிழக உளவு பிரிவுக்கு நன்கு தெரியும். ஆனால்   மக்கள்  ஆய்வு  பிரிவின் மறைவிடம் மட்டும் தெரிந்திருக்கவில்லை.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் டயரியில்  மக்கள்  ஆய்வு  பிரிவின் தொலை பேசி இலக்கம் இருந்தது.

அதனை வைத்து முகவரியை கண்டுபிடித்த  தமிழக பொலிசின் உளவுத்துறை  இரவு 12மணிக்கு அந்த மறைவிடத்தை முற்றுகையிட்டது.

பத்மநாபா,  டக்ளஸ்  தேவானந்தா,  சுரேஷ் பிரேமச்சந்திரன்  மக்கள்  ஆய்வு  பிரிவு  பொறுப்பாளர் மணி ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.  பத்மநாபா,  டக்ளஸ்  தேவானந்தா,  சுரேஷ் பிரேமச்சந்திரன்  ஆகியோரை  தனியாக வைத்து   தமிழக  உளவுத்துறை  விசாரித்தது.

தமிழக  டி.ஜி.பியாக  அப்போதிருந்தவர்  மோகனதாஸ்.  மோகனதாசும் ஒரு  சி.ஜ.ஏ அனுதாபி என்றே கருதப்பட்டார்.

தமிழ் நாட்டிலிருந்த ஈழப்போராளிகள் பற்றிய விபரங்களை   மோகனதாஸ் இலங்கை  அரசுக்கு கொடுத்து  உதவுவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு   வந்தது.

எனவே மோகனதாஸின்  கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்  முரண்டு பிடித்தனர்.

இந்திரா வேண்டுகோள்

images61.jpgஇலங்கையில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அத்துலத் முதலி.

இந்திய அரசின்  முயற்சி  தோல்வி  அடைந்ததால்  போராளிகளது  கோரிக்கைக்கு   இணங்க அவர் தயாராக இருந்தார்.

போராளிகளால் விடுதலை செய்யுமாறு  கேட்கப்பட்ட   20வது அரசியல் கைதிகளும்  பலாலி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, விடுவிக்க  தயார்  நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்திய பிரதமர்  இந்திராகாந்தி  அலன்  தம்பதியை விடுதலை செய்ய வேண்டும்   என்ற  தனது   விருப்பத்தை  ஈ.பி.ஆா.எல. எப்  தலைவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

இந்திராகாந்தியின் விருப்பத்தை  மீறுவது சரியல்ல  என்று   ஈ.பி.ஆா.எல. எப்  தலைவர்கள் முடிவு செய்தனர்.

அந்த   முடிவை    மக்கள் விடுதலைப்படை தளபதி  டக்ளஸ்  தேவானந்தா    யாழ்பாணத்துக்கு  அனுப்பி வைத்தவுடன்  அலன் தம்பதி விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையரசு  நிம்மதி  பெருமூச்சு விட்டது.  அலன் தம்பதி  தம்பதி  கடத்தல் நடவடிக்கையில்  ரெக்ஸ், மோகன், குமரி, இந்திரன், ரோசன்  ஆகியோரும் பங்கு கொண்டனர்.

mokanathas.jpgமோகனதாசின் துள்ளல்.

தமிழக பொலிஸ் டி.ஜி. பியாக இருந்த ஓய்வு பெற்ற மோகனதாஸ்  ஒரு புத்தகம்  எழுதி வெளியிட்டார்.

எம்.ஜி.ஆா  “நிஜமும்-நிழலும்”  என்பது அதன் பெயர்.

அந்த  புத்தகத்தில்  அலன்  தம்பதி    கடத்தல்   விடயத்தில்  தமிழக    பொலிஸ்  எடுத்த  நடவடிக்கைகள்  பற்றி  உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்துள்ளார்.

தனது  மிரட்டல்களால்  தலைவர்கள் பணிந்தனர்  என்று கூறியிருப்பதில்  சயதம்பட்டம் மட்டுமே இருக்கிறது.

தமழ் நாட்டில் அப்போதிருந்த  சூழலில்  எந்தவொரு போராளி  அமைப்பபையும்  பொலிசார் மிரட்ட இயலாது. அந்தளவுக்கு  தமிழக மக்களின் பேராதரவு இருந்தது.

தொடரும….

அற்புதன் எழுதுவது

http://ilakkiyainfo.com/அமெரிக்க-தூதரகத்தில்-போர/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28
mathivathani-680x365.jpg
 

1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன்.

1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை தொடர்ந்த மாணவர் போராட்டம் பற்றி இடையில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன்.

யூலை 83 இனப்படுகொலை தென்னிலங்கையில் தமிழர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருந்தது.

தென்னிலங்கையிலிருந்து வடகிழக்கு நோக்கி ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றவர்களும் இருந்தனர்.

பேராதனை,கொழும்பு, மொரட்டுவ பல்கலைக் கழகங்களில் கல்வி கற்ற தமிழ் மாணவர்கள் தாம் மீண்டும் திரும்பி செல்ல முடியாது என கூறினார்கள்.

யாழ்பாண, மட்டக்களப்பு பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க கூடியதாக மாற்றம் தருமாறு அந்த மாணவர்கள் கோரினார்கள்.

இட மாற்றம் கோரிய மாணவர்களது கோரிக்கையை அரசு நிராகரித்தது.

“இடம்பெயர்ந்த மாணவர்கள் உடனடியாக தமது பல்கலைகழகங்களுக்கு திரும்ப வேண்டும்” என்று அரசு காலக்கெடு விதித்தது.

அரசின் அறிவிப்பை எதிர்த்து இடம்பெயர்ந்த மாணவர்கள் போராடத் தீர்மானித்தார்கள்.

போராளி அமைப்புக்களும் மாணவாகளது போராட்டத்தை ஆதரித்தன.

ஈழமாணவர் பொது மன்றம் (G.U.E.S) இடம்பெயர்ந்த மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதராவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது.

கொலைகளம்

இடம் பெயர்ந்த மாணவர்கள் சிலர் மீண்டும் தென்னிலங்கை பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடிவு செய்தனர்.

இந்த முடிவு இடம் பெயர்ந்த மாணவர்களது போராட்டத்தை பாதிக்கும் என பிரச்சனை எழுந்தது.

07-11-83 அன்று புலிகள் அமைப்பினர் ஒரு பிரசுரம் வெளியிட்டனர்.

“கொலைக்களத்துக்கு போகவேண்டாம்” என்ற தலைப்போடு அந்தப் பிரசுரம் வெளியாகியிருந்தது.

“சிறிலங்காவில் உள்ள பல்கலைகழகங்கள் வெலிக்கடையாக மாறும் நிலையுண்டு” என்று புலிகளது பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.

இடம் பெயர்ந்தவர்களது உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தது.

பொதுமக்கள் மத்தியிலும் என்றும் இல்லாதவாறு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு நிலை காணப்பட்டது.

ஜே.ஆர். அரசு எதற்கும் செவிசாய்க்கவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தது.

இதனையடுத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த மாணவர்கள் முடிவு செய்தனர்.

09-01-84 முதல் ஒன்பது மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சாகும்வரை உண்ணாவிரதமும்,தன்னை தார்மீக அரசு என்று சொல்லிக் கொண்ட ஜே.ஆர் அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் மாணவர்கள் மீது அனுதாபமும், அரசு மீது ஆத்திரமும் ஏற்பட்டன.

மக்கள் வெள்ளம் யாழ் பல்கலைகழகத்தின் முன் திரண்டது.

எங்கும் பதட்டம் நிலவியது.

அரசு உத்தரவு

யாழபாணம் எங்கும் கறுப்பு கொடிகள் பறந்தன.

ஹர்தால்கள், பாடசாலை பகி்ஷ்கரிப்புகள் நடைபெற்றன. அரச ஜீப்வண்டிகள் தீயிடப்பட்டன.

எங்கும் கொந்தளப்பு நிலை ஏற்பட்டதை அவதானித்தது அரசாங்கம்.

இடம்பெயர்ந்த மாணவர்கள் போராடடத்துக்கு ஆதரவாக துண்டுப்பிரசு்சரம் வினியோகித்த ராஜ்மோகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ் பல்கலைகழகத்தை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியது. அரசு ஏட்டிக்கு  போட்டியாக நடந்ததே தவிர  இணக்கமான போக்கை காட்டவில்லை.

மாணவர் கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

மாயமாய் மறைந்த உண்ணாவிரதிகள்

1984 ஜனவரி 16ஆம் திகதி பிற்பகல் உண்ணாவிரதிகளின் நிலை மோசமடைந்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமடைந்ததுள்ளது என்று மருத்துவர் தெரிவித்தார். அந்த மாணவி சாவோடு போராடிக்கொண்டிருந்தார்.

இன்நிலையில் 16ஆம் திகதி  இரவு ஒன்பது மாணவர்களும் திடீரென காணாமல் போனார்கள்.

ஆயதம் தாங்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களால் ஒன்பது மாணவர்களும் கடத்தப்பட்டார் என்பது தெரியவந்தது.

மாணவர்களது அறவழி போராட்டத்தை நிறுத்தியது சரியா?

ஈழமாணவர் பொது மன்றம், புளெட் ஆகியவை புலிகள் – மாணவர்கள கடத்திச்சென்றது தவறு என்று கண்டித்தன.

கண்டனங்களை அடுத்து புலிகள் தமது நடவடிக்கைகளுக்கு விளக்கமளித்தனர்.

“உண்ணாவிரதிகளை அழைத்துச்சென்று அவர்களது உயிர்களை பேணிக்காக்க நாம் முயன்றோம். உண்ணாவிரதிகளும் தமது பூரண சம்மதத்தை தெரிவித்தே எம்மோடு வந்தனர்.

மாணவ, மாணவிகள் எம்மோடு பாதுகாப்பாக இருக்கின்றனர்.

மாணவர்களது உயிர் போகக் கூடாது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பதால் அரச அதற்காக வருந்தவும் செய்யாது.

அறவழிப்போராட்டம் அரசின் செவிகளில் ஏறாது என்பதால் உண்ணாவிரதிகளை காப்பாற்றியதாக” புலிகள் விளக்கமளித்தனர்.

ஒன்பது மாணவ மாணவிகளும் படகு மூலம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

1137491_f496.jpgபிரபாகரனின் காதல்

சாகும்வரை உண்ணவிரதமிருந்த ஒன்பது மாணவாகளில் நான்கு மாணவிகளும் இருந்தனர் என்று கூறினேன் அல்லவா?

அந்த மாணவிகளில் ஒருவர் மதிவதனி.சென்னையில் புலிகளின் இல்லத்திலிருந்த மதிவதனியை பிரபாகரனுக்கு பிடித்துவிட்டது.

இருவருக்கும் காதல் மலர்ந்தது.

மதிவதனியை தனது வாழ்கை துணைவியாக்கி கொண்டார் பிரபாகரன்.

காதல், கல்யாணம் எல்லாம் போராட்டப்பாதையில் சுமையாகிவிடும். அதனால் இயக்கத்தில் இருப்பவர்கள் காதல் விவகாரங்களை தவிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார் பிரபாகரன்.

அந்த கருத்தை மாற்றிவிட்டார் மதிவதனி.

இயக்கத்தில் சோ்ந்து ஐந்து வருடத்தை கடந்தவர்கள் விரும்பினால் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார் பிரபாகரன்

வட்ட மேஜை.

1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய மற்றெரு நிகழ்வு வட்ட மேசை மாநாடு.

இயக்கங்களின் கோரிக்கைகள், கருத்துக்ககள் எதனையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஜே.ஆர்.அரசோடு பேச்சு நடத்தச்சென்றார் அமுர்தலிங்கம்.

கூட்டணியை நம்பவில்லை

ஜே.ஆர்.அரசோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது இயக்கங்களின் கருத்தை அலட்சியம் செய்தே சென்றனர்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?

விடுதலை இயக்கங்களோடு தங்களுக்கு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கூட்டணி கூறியதை தென்னிலங்கை இனவாதிகள் நம்பவில்லை.

தென்னிலங்கை பத்திரிகைகள் கூட கூட்டணிக்கும் புலிகளுக்கும் தொடர்புள்ளதாகவே செய்திகள் வெளியிட்டன.

pulikal.jpg“ஐலன்ட்” ஆங்கில பத்திரிகை ஒரு “கருத்தோவியம்” வெளியிட்டிருந்தது.

அமுதர் புலியோடு வட்டமேஜை மாநாடுக்கு செல்வது போன்று “கருத்தோவியம்” வரையப்பட்டிருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியோடு பேச்சு நடத்துவது ஏன்?

இந்தக் கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத்முதலி சொன்ன பதில் இது..

“இன்று தீவிரவாதிகளது நடவடிக்கை காரணமாவே ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியால் அரசோடு உடன்பாட்டுக்கு வரமுடியாமல் இருக்கிறது.

தீவிரவாதிகள் பலமுள்ளவர்களாகவும், மிதவாதிகள் பலமற்றவர்களாகவும் இருப்பதாலேயே அரசியல் தீர்வு எதனையும் காணமுடியாமல் இருக்கிறது.

அரசியல் தீர்வு எதுவும் காணமுடியாமல் இருக்கிறது.

அரசியல் தீர்வு ஏற்படவேண்டுமாயின் தீவிரவாதிகளை அடக்குவது முக்கியமானது.

மிதவாதிகளை பலமுள்ளவாகள் ஆக்குவதற்காகவே நாம் தற்போது முயற்சிக்கின்றோம்.”

அத்துலத்முதலியின் கருத்தை கூட்டணி மறுத்து பேசவில்லை.

வாகன தாக்குதல்

கூட்டணியை அரவனைத்துக்கொண்டு அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டின் போன்ற நாடுகளிடம் போராளிகளை ஓழிக்க ஆயதங்கள் கோரியது அரசு.

ஜே.ஆர். அரசு உதவி கோரிய இன்னொரு நாடு. மனிதவுரிமை மீறலகளுக்கு பெயர் பெற்றிருந்த தென்னாபிரிக்கா.

அன்னிய உதவிகளோடு போராளிகளை ஒழிக்க அரசு திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது புலிகள் ஒரு தாக்குதலுக்கு தயாரானார்கள்.

போராளிகளை எதிர்த்து தாக்குதல் நடத்த இராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது.

கஜபாகு ரெஜிமென்ட்” என்று அப்படைப் பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டது.

“கஜபாகு ரெஜிமென்ட்” படைபிரிவை சேர்ந்தவர்கள் கொழும்பிலிருந்து இரயில் மூலம் யாழ்பாண இரயில் நிலையத்துக்கு வந்திறங்கினார்கள்.

அவர்களை ஏற்றிக்கொண்டு இராணுவ “ட்ரக்”வண்டி யாழ்பாண ஆஸ்பத்திரி வழியாக சென்றுகொண்டிருந்தது.

பாதையோரத்தில் வான் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இராணுவ வண்டி அந்த வான் நின்ற இடத்தை கடந்தபோது.. அந்த வான் வெடித்துச்சிதறியது.

அதனால் இராணுவ “ட்ரக்”வண்டி சிதைந்து போனதுடன் அதனை தொடர்ந்து வந்த இராணுவ வாகனங்களும் சேதமாகின.

இராணுவ வாகனத்திலிருந்த இராணுவத்தினர் யாழ் புகையிரத நிலயத்தை நோக்கி ஓடிச் சென்று அங்கு மறைந்துகொண்டனர்.

வாகனம் ஒன்றை வெடிக்க வைத்து நடத்தப்பட்ட முதலாவது வாகனத் தாக்குதல் அதுதான்.

அது நடந்தது 1984 ஏப்பிரல் 09 ஆம் திகதி.

trak.jpg

படையினரின் தாக்குதல்

அத்தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும்  இராணுவத்தினர்கள் கவச வண்டிகள் சகிதம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஹெலிகொப்டர் ஒன்று வானத்தில் தாழப்பறந்து இராணுவத்தினருக்கு துணையாக வந்தது.

தாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எடுத்துச் சென்ற பின்னர் படையினரின் தாக்குதல் ஆரம்பித்தது.

வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் சுட்டுத்தள்ளப்பட்டனர்.

யாழ்பாணத்தில் உள்ள சரித்திர புகழ்வாய்நத அடைக்கலமாதா தேவாலயம் இராணுவத்தினரின் கண்ணில் பட்டுவிட்டது.

G08.jpg“ரொக்கட் லோஞ்சர்கள்” மூலம் தேவாலயத்தை தாக்கினார்கள்.

யேசுநாதரின் சுருவமும் உடைக்கப்பட்டது.

1984 ஏப்பிரல் 10ஆம் திகதி காலை அந்த நாசம் அரங்கேறியது.

வீதியால் சென்றுகொண்டிருந்த கார்கள் அடித்து நொருக்கப்பட்டன. பல கார்கள் வீதிகளில் வைத்தே தீயிட்டு எரிக்கப்பட்டன.

யாழ் கூட்டறவு பண்டசாலையும், அருகிலிருந்த கடைகளும் தீயில் நாசமாகின.

அடைக்கலமாதா கோயில் தாக்கப்பட்ட செய்தி யாழ்பாணம் எங்கும் “தீ”யெனப் பரவியது.

யாழ் நகரில் பொதுமக்களால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

திரண்ட மக்களிடம் எறிகுண்டுகள் புலிகளால் கொடுக்கப்பட்டன.

இராணுவ வண்டிகளை நோக்கி பெற்றோல் குண்டுகளையும் பொதுமக்கள் வீசினார்கள்.

எரிக்கப்பட்ட உடல்கள்

யாழ்பாண நகரில் ஸ்டான்லி வீதியில்  இருந்த பௌத்தவிகாரை கிட்டத்தட்ட இராணுவ முகாம் போலவே செயல்பட்டு வந்தது.

யாழ் நகரிலிருந்து இருந்த சிங்கள மகாவித்தியாலயமும் இராணுவத்தினரின் தங்குமடமான பயன்பட்டு வந்தது.

ஏப்பிரல் 10ஆம் திகதி மாலை யாழ் நகரில் இருந்த நாகவிகாரை தாக்கப்பட்டது. சிங்கள மகாவித்தியாலயமும் தீயிடப்பட்டது.

அரச கட்டிடங்கள் பலவும் தீ மூட்டப்பட்டன.

இத்தாக்குதலுக்கு புலிகளே முக்கிய தூண்டுதலாக இருந்ததோடு தாமும் பங்கு கொண்டனர்.

புலிகளின் சார்பில் முன்னின்றவர்களில் கிட்டுவும் ஒருவர்.

விகாரையும், மகாவித்தியாலயமும் தாக்கப்பட்ட அறிந்த இராணுவத்தினர் பெரும்தொகையாக வந்து குவிந்தனர்.

எதிர்பட்டவாகள் மீதெல்லாம் துப்பாக்கி சூடுகள் விழுந்தன.

பலர் இறந்தனர். பெரும்தொகையானோர் காயமடைந்தனர்.

இறந்தவாகளது உடல்கள் நாகவிகாரைக்கு அருகில் தியிட்டு எரிக்கப்பட்டன.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு நேரத்திலும் புலிகளது தாக்குதல் அணி ஒன்று புறப்பட்டது.

தொடரும்..

அரசியல் தொடர்..

எழுதுவது அற்புதன்.

 

பிரபாகரன்- மதிவதனி காதல் மலர்ந்த கதை..

download-1917.jpg1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள்.

அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன்.

அங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 பேரும் தங்கி இருந்தார்கள்.

பிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும்.

ஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் … எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான்.

prabakaran-family-13.jpgஇந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி.

இதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.

அழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை.

நீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார்.

கிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

பின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சீலன்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -29

seelan-680x365.jpg
 

தாக்குதல்

1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது.

யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள்.

தீடீர் தாக்குதலை எதிர்பாராத பொலிசார் பின்வாங்கித் தப்பிச்சென்றனர்.

அதன் பின்னர் பொலிஸ் நிலையம் இருந்த கட்டிடத்துக்கு தீ வைத்தனர் புலிகள்.

போராளிகளது நடவடிக்கைகள் நாளும் பொழுதும் வளர்ந்து வருவதை அவதானித்த ஜே.ஆர். அரசு அடக்குமுறைகளை அதிகப்படுத்தியது.

யாழ் குடாநாட்டில் இராணுவம் வைத்ததே சட்டம் என்றாகியது.

யாழ் அரசாங்க அதிபரைவிட வடமாகாண இராணுவ பிரிகேடியர் அதிகாரமுள்ளவராக விளங்கினார்.

இரவு நேரங்களில் யாழ்குடாநாட்டு மக்கள் நடமாடவே அஞ்சினார்கள்.

ஆணையிறவு, பலாலி இராணுவமுகாம்கள் வடமாகாணத்தின் ஆட்சி மையங்களாக மாறியிருந்தன.

ஆயுதம் ஏந்திய இயக்கங்களை ஒளித்துக்கட்ட ஜே.ஆர். அரசு வெளிநாட்டு உதவிகளை நாடியது.

போராளிகளுக்கு இந்தியா உதவியதால் ஜே.ஆர். அரசு அமெரிக்காவின் உதவியை கேட்டது.

அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவராக இருந்த திரு ஜோசப் அடாப்பூவின் தலைமையில்  உயர்மட்ட  தூதுக்குழு ஒன்று இலங்கை வந்தது.

அதனை அடுத்து அமெரிக்காவின் பிரதி உதவி வெளிநாட்டமைச்சர் திரு ஹோவர்ஹட் பிஷாபர் 21.02..84 அன்று இலங்கை விஜயம் செய்தார்.

இலங்கை அரசுக்கு 7கோடியே 38இலச்சம் டொலர்களை உதவியாக வழங்குவோம் என்று ஹோவர்ஹட் பிஷாபர் உறுதியளித்தார்.

இந்த அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அமரிக்கவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.

பிரிடிஷ் அரசாங்கமும் இலங்கைக்கு உதவமுன்வந்தது.

பிரிடிஷ் அரசுக்கு சொந்தமான “ஷேட் பிரதர்ஸ்” பிரிட்டனிள் உள்ள தனியார் நிறுவனமாக ஹெட்ஸபர் ஆகியவற்றிடமிருந்து பல கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆயதகொள்வனவு மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

20 கவச வண்டிகள் இருட்டில் வெளிவாக பார்த்துச் சுடக்கூடிய தானியங்கித் துப்பாகிகள் எளிய இயந்திர துப்பாக்கிகள் (S.M.G) வலுமிக்க கைகுண்டுகள், றிவோல்வர்கள், பிஸ்டல்கள் (L :M :G)ஆகியவை அரசபடைகளுக்காக தருவிக்கப்பட்டன.

மொசாட்டும் வந்தது

மனிதவுரிமை மீறல்களுக்கு பெயர் பெற்ற நாடாக அப்போதிருந்தது தென்னாபிரிக்கா.

கறுப்பின மக்களை காலடியில் போட்டு மிதித்து வைத்திருந்தது கொண்டிருந்தது.

தென்னாபிரிக்காவின் நிறவெறியரசு மீது நாகரீக உலகம் காறி உமிழ்ந்தது கொண்டிருந்தது.

ஜே.ஆர்.அரசு அந்தத் தென்னாபிரிக்கா அரசோடு கைகுழுக்கிக்கொண்டது. ஆயத உதவியும் கோரியது.

தென்னாபிரிக்காவும் உதவ முன்வந்ததது.

சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வந்தன.

பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலிக்கு ஒரு யோசனை வந்தது.

இஸ்ரேலிய உளவுப்பிரிவான “மொசாட்” அழித்தொழிப்புகளில் பெயர் பெற்றது.

பலஸ்தீன விடுதலைக்கு போராடிய பல தலைவர்களை வேட்டையாடி பிரபல்யம் பெற்றிருந்தது “மொசாட்”.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ யும் மொசாட்டும் அண்ணன் தம்பிகள் போல அப்போது இணைந்து செயற்பட்டு வந்தன.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஜ.ஏ இலங்கை அரசுக்கு உதவி செய்யமுன்வந்தது.

முன்வந்தது மட்டுமல்லாமல் ஒரு பயங்கரமான யோசனையும் சி.ஜ.ஏ தெரிவித்தது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

பயங்கரமான யோசனை

50ஆயிரம் தமிழ் இளைஞர்களை ஒழித்துக்கட்டினால் தீவிரவாதத்தை “ப்பூ” என்று அணைத்துவிடலாம் என்பதுதான் சி.ஜ.ஏ சொன்ன யோசனை.

சி.ஜ.ஏ நெருக்கமாகிவிட்டது. இனி மொசாட்டும் வந்துவிட்டால் போராளிகளை அழித்துவிட்ட மாதிரிதான் என்று கனவு கண்டார் அத்துலத்முதலி.

மொசாட்டும் உதவ முன்வந்தது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் “இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு”இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

1970இல் பதவியில் இருந்த சிறிமா அரசு இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தது.

உறவை முறித்துக்கொண்டதோடு நில்லாமல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தார்.

அப்போது பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா.

14 ஆண்டு கழித்து 1984இல் இஸ்ரேலுடன் இனிய உறவை ஆரம்பித்தது ஜே.ஆர்.அரசு.

ஜே.ஆர்.அரசின் நடவடிக்கையை சிறிலங்கா சுதந்திர கட்சி கண்டித்தது.

“இஸ்ரேலியர்களை வரவழைத்து அரபு நாடுகளின் முகத்தில் அடித்தது போன்ற செயல்” என்று பண்டாரநாயக்கா கூறினார்.

சவுதி அரேபியா,லிபியா,சிரியா, ஈரான், ஜோர்தான் போன்ற நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன.

வடகிழக்கில்- முஸ்லிம் மக்கள் இஸ்ரேல் வருகைக்கு எதிராக ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.

போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவுழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்தது ஜே.ஆர்.அரசு.

ithra.jpgஇந்திரா பேட்டி

இலங்கையில் அன்னிய சக்திகளின் வருகை இந்தியாவை விழிப்படைய செய்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி.

பிரான்சின் தலைநகரான பாரிசிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்று “லீ பிகாரே” அந்த பத்திரிகையின் சிறப்பு நிருபர் இந்திய பிரதமர் இந்திராவை பேட்டி கண்டார்..

அதில் ஒரு பகுதி இது.

கேள்வி : கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நலன் காக்கும் பிரிவு ஒரு தொல்லை என்று கருதுகிறீர்கள?

இந்திரா: இஸ்ரேலிய பிரிவை கொழும்பில் புகுத்தியது சம்பந்தமாக இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களிற்கிடையே தீவிர எதிர்ப்பு இருந்து வருகிறது.

எம்மை பொறுத்தவரையில் எமது கடல் எல்லையோரத்தில் இருக்கும் சிறிலங்காவில் அந்நியர் தங்க இடமளிக்கப்படுவது எமக்கெல்லாம் ஒரு பயமுறுத்தலாகும்.

கேள்வி: இஸ்ரேல், லெபனான் பிரச்சனை போல் இலங்கையிலும் உருவாகி வருவதாக சிலர் கூறுகின்றனரே! நீங்கள் அதை நம்புகிறீர்களா?

இந்திரா: இஸ்ரேலியர்களை சிறிலங்கா இறக்குமதி செய்திருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்று  எனக்கு  தெரியவில்லை.

பயங்கரவாதிகளை சமாளிக்கவே அவர்களை தங்க வைத்திருப்பதாக ஜெவாத்தனா கூறுகிறார்.

ஆனால் முன்பு நடைபெற்றது போல பயங்கரவாத ஒழிப்பு என்றபோர்வையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

பிரதமர் இந்திராவின் கருத்து இந்தியாவின் மனநிலயை படம்பிடித்து காட்டியது.

images-53.jpg

ஜே.ஆர்  ஜெயவர்த்தனா

இதனால் ஜே.ஆர். ஒன்றும் அசந்துவிடவில்லை.

ஜே.ஆர். என்னகூறினார் தெரியுமா?

அவர் கூறியது இதுதான்.

பயங்கரவாதிகளை அழிப்பதற்கு எந்த பேய் பிசாசுகளை உதவியினை பெறுவதற்கும் நாம் தயார்.

கூட்டணி நிலை

இந்த வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்னசெய்து கொண்டிருந்தது என்ற கேள்வி வரும்..

1978இல் இராஜாங்க அமைச்சின் விருந்தினராக சென்றவர் அமர்தலிங்கம்.

அமெரிக்காவின் தீவிர விசுவாசி இயக்கங்களால் கூறப்பட்ட நீலன் திருச்செல்வத்துக்கு கட்சியில் இடமளித்தார் அமர்தலிங்கம்.

தமிழரசுக் கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்செல்லத்தின் மகன்தான் நீலன் திருச்செல்வம்.

தமிழர் போராட்டம் எதிலும் ஈடுபடாமல், அடிபடாமல், உதைபடாமல், சட்டை கசங்காமல் கூட்டணிக்குள் இடம்பிடித்தவர் நீலன் என்று விமர்சிக்கப்பட்டது..

அரசியல் சட்ட அறிவு இருக்கிறது என்பதுதான் நீலனை கட்சிக்குள் சேர்க்க கூட்டணி கூறிய காரணம்.

neela.jpg நீலன் திருச்செல்வம்.

நீலன் மீது கண்டனம்

1983 யாழபாணத்தில் சிறிதர் திரையரங்கம் முன்பாக மே தினக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஈழமானவர் பொது மன்றம் (G:U:E.S) நடத்திய அந்த மே தினக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மு.டேவிற்சன்.

தனது பேச்சில் டேவிற்சன் ஒரு கேள்வி எழுப்பிவிட்டு பதில் சொன்னார். அது இதுதான்.

“யார் இந்த நீலன் திருச்செல்வம்?”

அமெரிக்க சி.ஜ.ஏ ஆள்தான் இவர்.

1984இல் புலிகள் தமது “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் நீலன் திருச்செல்வம் ஏ.ஜே.வில்சன் போன்றோர் குறித்து இப்படி எழுதியிருந்தனர்.

“அமெரிக்கா சார்பான சி.ஜ.ஏ உளவு ஸ்தாபனத்துடன் தொடர்புடைய தமிழ் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் இருந்து வருவது தெரிந்து வருவது தெரிந்த விசயமே.

அரசியல் யாப்பு நிபுணர்களாக, சட்ட ஆலோசகர்களாக ஜெவர்த்தனாவின் நண்பர்களாக இவர்கள் இயங்குகின்றார்கள்.

இவ்வாறான இனத்துரோக சக்கதிகளின் செயல்பாடுகள் பற்றி விடுதலை அமைப்புகள் விழிப்பாக இருக்கவேண்டும.”

இவ்வாறான பின்னணியில் கூட்டணியும் அமெரிக்க சார்பானதாகவே தமிழ் போராளி அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

cia_logo_1_by_mr_logo-d6q1f3p.jpgஇந்த நேரத்தில் ஒரு தகவல் : அமெரிக்க சி.ஜ.ஏ நிறுவனத்தின் சின்னமும் கழுகு.

அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களோடு நல்ல நட்பும், அபிமானமும் கொண்டிருந்தவர் அத்துலத்முதலி,

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தனிக்கட்சி தொடங்கினார் அல்லவா அத்துலத் முதலி?

அப்போது தனது கட்சியின் சின்னமாக அவர் விரும்பியிருந்தது கழுகு சின்னம.

தமது பத்திரிகைக்கும் இராஜாளி என்றுதான் பெயர் வைத்தார்கள் அத்துலத் முதலி அணியினர்.

பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அத்துலத்முதலி போட்டிருந்த புத்திசாலித்தனமான திட்டங்களில் ஒன்று கூட்டணியை பலப்படுத்துவது.

ஏன் பலப்படுத்தவேண்டும்?

அவரே அதற்கான விளக்கமும் சொல்லியிருந்தார் அது இதுதான்.

“மிதவாதிகள் பலவீனமாகிவிட்டார்கள். தீவிரவாதிகள் பலமாக இருப்பதாலேயே கூட்டணியினர் எம்மோடு அரசியல் தீர்வுக்கு வரத் தயக்கம் காட்டுகிறார்கள்.

நாம் இப்போது செய்யவேண்டியது. தீவிரவாதிகளை பலவீனப்படுத்திவிட்டு மிதவாதிகளை பலப்படுத்துவதுதான்”

வந்தனர்-கண்டனர்

தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக –தகவல் சேகரிப்பிலும் பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா.

1984 மே மாதம் இரண்டாம் திகதி பருத்திதுறை பஸ்நிலையத்தில் சைக்கிள்களில் வந்திறங்கினார்கள் இளைஞர்கள்.

அவர்கள் யாரையோ தேடினார்கள் தேடப்பட்டவர் பஸ்ஸில் ஏறத்தயாராகிக் கொண்டிருந்தார்.

இளைஞர்களில் ஒருவர் அவரை நோக்கி சுடத்தொடங்கினார். பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்கள் ஓடத்தொடங்கினார்கள்.

சுடப்பட்டவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது பெயா நவரத்தினம் யாழ் விசேட பொலிஸ் பிரிவில் சார்ஜன்டாக இருந்தவர்.

இயக்கங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் சிறப்பாக செயல்பட்டதால் சப் இன்பெக்டர் பதவி அவருக்கு கிடைக்க இருந்தது.

1984 மே 4ஆம் திகதி இன்னுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்பாணம் சாவகச்சேரியில் உள்ள மீசாலை என்னுமிடத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கான்ஸ்டபிள் சுப்பிரமணியம் என்பது அவரது பெயர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர்.

இவர் ஏன் சுடப்பட்டார்?

புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சாள்ஸ் அன்ரனி.(சீலன்)

1983 யூலை 15ஆம் திகதி அன்ரனியும், அருள் நாதன் (ஆனந்தன்) என்னும் போராளியும் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

திடீர் சுற்றி வளைப்பு.

தப்பி ஓடிய போது படையினரின் துப்பாக்கிகள் சீறின.

சீலனின் நெஞ்சில் ரவைகள் பாய்ந்தன.

இனியும் தப்பும் முயற்சி சாத்தியமில்லை என்றுணர்ந்த சீலன் ஒரு முடிவுக்கு வந்தார்.

தன்னோடு வந்த சகபோராளியிடம் சீலன் கூறினார்.

Lt-seelan-and-v.ananth.jpg“என்னை சுடாடா-சுடு”

அந்த போராளி தயங்கினான் சீலன் விடவில்லை வற்புறுத்தினார். இராணுவத்தினர் நெருங்கி கொண்டிருந்தனர்.

சீலனின் தலையில் துப்பாக்கியால் சுட்டார் அந்தப் போராளி.

அதே சமயம் ஆனந்தன் மீதும் இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.

சீலனும், ஆனந்தனும் உயிரிழந்தனர். 1983 யூலை 15இல் நடந்தது அது. சீலனும் ஆனந்தனும் மீசாலையில் தங்கியிருந்த வீடுபற்றிய தகவலை திரட்டிக் கொடுத்தவர்தான் கான்ஸ்டபில் சுப்பிரமணியம்.

தொடரும்..

 எழுதுவது அற்புதன்.

http://ilakkiyainfo.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை.. அரசியல் தொடர்..30

thraujapa-680x365.jpg
 

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு.

1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன் செய்த தவறால் நிர்மலா தப்பிச் செல்ல முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

நிர்மலாவை சிறை மீட்பதற்கு புலிகளமைப்பினர் திட்டமிட்டனர். அதனை விபரிப்பதற்கு முன்னர் நிர்மலா பற்றிய சிலவிபரங்கள்..

யாழ்.பலகலைகழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றியவர் நிர்மலா.

பெண்கள் விடுதலை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

நிர்மலாவின் துணைவராக இருந்த நித்தியானந்தனும் யாழ் பல்கலைக்கழ விரிவுரையாளராக கடமையாற்றினார்.

ஆரம்பத்தில் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை கொண்டிருந்தனர்.

புத்திஜீவிகள் இயக்க ஆதரவாளர்களாக இருக்கமுடியும். இயக்க உறுப்பினர்களாக மாறினால் கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப அவர்களால் நடந்துகொள்ளமுடியாது.

புத்திஜீவிகள் தனிநபர் பிரபலம், தனிநபர் சுதந்திரம் பற்றிய மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை கோரும்போது இயக்க கட்டுக்கோப்பு சிதைவடையும் என்பன போன்ற கருத்துக்களை ஈழ மாணவர் பொது மன்றம் (G:U:E:S) கொண்டிருந்தது.

தமக்கு எல்லாம் தெரியும் தாம் மேலானவர்கள் என்னும் புத்திஜீவிகளது குணாம்சம் ஒரு கட்டத்தில் இயக்க தலைமைக்கு எதிராகவும் திரும்பலாம.

சோவியத் புரட்சியில் கூட லெனின் புத்திஜீவிகள் விடயத்தில் பலத்த அவதானம் தேவை என்பதை வலியுறுத்தியே வந்தார்.

இவைதான் ஈழமாணவர் பொதுமன்றம் கொண்டிருந்த நிலைப்பாடு.

இவ்வாறான நிலையில் நிர்மலா போன்றவர்களை ஈழமாணவர் பொதுமன்றம் உள்வாங்கவில்லை.

எனினும் அவர்களின் முற்போக்கான தன்மைகளையும் அங்கீகரித்தது.

புலிகள் அமைப்போடு நிர்மலாவும், நித்தியானந்தனும் தொடர்புகளை வைத்திருந்தனா.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை 27.10.82 இல் புலிகள் தாக்கியபோது சீலன் உட்பட இரு புலிகள் காயமடைந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு நிர்மலா வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,

சிறையில் நிர்மலா

இத் தகவல் இராணுவத்தினருக்கு எப்படியோ எட்டிவிட்டது. 1982 நவம்பர் 20 ஆம் திகதி நித்தியானந்தனும்  நிர்மலாவும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.

nirmala.jpg

வதந்திகள்

குருநகர் இராணுவ முகாமில் வைத்து இருவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பின்னர் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிர்மலா தொடர்பாக பல வதந்திகள் அடிபட்டன.

பலாத்காரப்படுத்தப்பட்டதால் நிர்மலா கர்ப்பமுற்றுள்ளார் என்றொல்லாம் பேசப்பட்டது.

பின்னர் அவையாவும் பொய்யான செய்தி என்று தெரியவந்தது.

வெலிகடை சிறைப் படுகொலையை அடுத்து மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டார் நிர்மலா.

1983 செப்டம்பர் 23 சிறையுடைப்பில் நித்தியானந்தனும் தப்பிச்சென்று புலிகளோடு முழு நேர உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.

சிறையில் இருந்த நிர்மலா மீது 1984 யூன் மாதம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது.

வழக்குக்காக நிர்மலாவை அழைத்துச் செல்வதற்க்கு முன்னர் சிறைமீட்க புலிகள் திட்டமிட்டனர்.

authaporadam-300x133.jpgசிறைக்குள் புலிகள்

1984 யூன் மாதம் 10ம் திகதி இரவு 7.15 மணி.

புலிகள் இயக்கத்தின் 15 உறுப்பினர்கள் சிறைக்காவலர்கள் போன்று உடையணிந்து சிறைவாயிலுக்குச் சென்றனர்.

கொழும்பிலிருந்து சில கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுமதிக்க அழைத்து வந்திருக்கிறோம் கதவை திறவுங்கள் -என்றனர்.

முதலாவது பிரதான கதவு திறக்கப்பட்டது.

உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்த சிறைக்காவலர்கள் மூவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அவர்கள் மூவரும் மீண்டும் கதவை மூடமுயன்றதுடன், தாக்குதல் நடத்தவும் தயாரானார்கள்.

உள்ளே துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் வெளியே சத்தம் கேட்கும்.

காவல் பணியில் உள்ள அதிரடிப்படை இராணுவத்தினர் வந்துவிடுவார்கள்.

அதனால் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை தவிர்த்தனர்.

சிறைக்காவலர்கள் சிலருடன் கைகலப்பில் ஈடுபட்டு அவர்களை மடக்கினர்.

சிறையின் இரண்டாவது இரும்புக் கதவையும் திறந்தால்தான் நிர்மலா சிறை வைக்கப்படடிருந்த பெண்கள் பகுதிக்கு செல்ல முடியும்.

அந்த இரும்புக் கதவின சாவியை வைத்திருந்த சிறை அதிகாரி ஓடி போய் ஒளிந்துகொண்டார்.

என்ன செய்யலாம்? வேறு வழியில்லை இரும்புக்கதவை உடைத்து திறந்தனர்.

நிர்மலா சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டையும் உடைத்தே திறந்தனர்.

நிர்மலா சிறை மீட்கப்பட்டார். இரண்டாவது தடவையும் சிறை உடைக்கப்பட்டதால் அரசுக்கு பலத்த அதிர்ச்சி!

சிறை மீற்கப்பட்ட நிர்மலா தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். புலிகளின் முழுநேர உறுப்பினர் ஆனார்.

அதன் பின்னர் சில காலம் இயக்கத்தில் செயல்பட்ட நிர்மலாவும், நித்தியானந்தனும் இயக்கதிலிருந்து விலக்கப்பட்டனர்.

இயக்கத்திலிருந்து வெளியேறிய பின்னர் நிர்மலாவும், நித்தியானந்தனும் குடும்ப வாழ்க்கையிலும் பிரிந்து கொண்டனர்.

புலிகள் அமைப்பின் தலைவாகளில் இருந்த பின்னா வெளியேறியவர் ராகவன்.

நிர்மலா ராகவனை தனது வாழ்க்கை துணையாக்கிக் கொண்டார்.

தற்போது வெளிநாடென்றில் வசித்து வருகிறார்.

paruthijannnnnnnaipil.jpgகடல் விமானத்துக்கு தீ

காரை நகர் கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது பருத்தியடைப்பு கிராமம்.

கடற்படை கமாண்டராக இருந்த அசோக டி சில்வா கடல் விமானம் ஒன்றில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அவர் வந்த கடல் விமானம் பருத்தியடைப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த கடல் விமானம் 1984 யூன் 15ஆம் திகதி புலிகளால் தீ வைக்கப்பட்டது.

விமானத்தின் பெற்றோல் தாங்கியில் தீ பற்றிக்கொண்டதால் பலத்த சத்தத்தோடு கடல் விமானம் சிதறிப்போனது.

வழுக்கை விழுந்த போதும்…

ஆயுதப் போராட்டம் தீவரமடைந்த நிலையிலும் தமிழர் விடுதலைக்கூட்டணி ஜே.ஆர் அரசுடன் வட்டமேசை மாநாடு நடத்திக் கொண்டிருந்தது.

சகல போராளி அமைப்புகளும் வட்டமேசை மாநாட்டை கண்டித்துக்கொண்டிருந்தன.

வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு தமிழீழ கோரிக்கையை கிண்டலடித்த இன்னொரு அரசியல்வாதி குமார் பொன்னம்பலம்.

குமார் பொன்னம்பலத்தை ஒரு பொருட்டாக எடுக்கத்தேவையில்லை என்று நினைத்த போராளி அமைப்புகள் கூட்டணியை குறிவைத்தே கண்டணங்களை தொடுத்தன.

1984யூலையில் வெளியான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் கூட்டணியை கண்டித்து ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டது.

அதிலிருந்து ஒரு பகுதி இது.

“வட்ட மேஜை மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு எந்தவித உருப்படியான தீர்வும் ஏற்பட போவதில்லை.

27வருட வரலாற்று அனுபவத்தில் நம்பிக் கெட்டு வழுக்கை விழுந்தாலும் இன்னும் இவர்களுக்கு நம்பிக்கை தளரவில்லை.

புரசிகரப் புதிய பரம்பரை ஆயதபாணிகளாக தோற்றம் கொள்ள தொடங்கியுள்ளது.

இனி நாம் பார்க்கவிருப்பது பழைய பரம்பரையின் புளித்துப்போன கதையை அல்ல.

புதிய வரலாறு படைக்கும் புதிய தலைமுறையின் புரசிகரப் போராட்டத்தையே!.

ஏமாந்த வரலாற்றின் நாயகர்கள் இன்னும் அரசியல் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்போராளிகளோ ஈழத்தமிழரை பிரதிபலிக்கும் அரசியல் சக்கியாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எனவே எதிர்கால தமிழ் அரசியல் வரலாற்றின் கதாநாயகர்கள் அவர்களே கூட்டணி தலமையல்ல என்று அடித்துக் கூறியது புலிகளின் ஏடு.

amarthalinkam.jpgஅமிர் முழக்கம்

வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தால் அகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தார் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.

வட்டமேசை மாநாட்டை காலைவரையின்றி ஒத்திப்போட்டார் ஜே.ஆர்.

இந்திரா காந்தி சொன்னதால்தான் பேசப்போனோம் என்று சொன்னர் அமிர்தலிங்கம்.

ஆனால் இந்திய அரசுசொன்ன கருத்து வேறுவிதமாக இருந்தது.

“நாமாக எந்தவொரு தீர்வையும் தினிக்கவில்லை.அமிர்தலிங்கத்துடனும், ஜயவர்தனாவுடனும் ஜி.பார்த்தசாரதி பேச்சு நடத்தினார்.

இருவர் கருத்துக்களையும் ஒட்டி எழுந்ததே சமரசதிட்டம்.

இதில் இந்தியாவின் தலையீடு கிடையாது.” என்று சொன்னது இந்திய அரசு.

ஜி.பார்த்தசாரதிதான் அப்போது வெளியுறவு செயளாளராக இருந்தவர்.

வட்டமேஜை மாநாடு தோல்வியில் முடிவடைந்த பின்னர் தமிழ்நாட்டில் கரூர் எனுமிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது

அதில் கலந்து கொண்டு அமிர்தலிங்கம் கூறியது இது..

“சுதந்திர தமிழீழம் அடையும்வரை நாம் போராடுவோம்”

இப்பேச்சை பத்திரிகையில் பார்த்தார் கோவை மகேசன். உடனே தனது வீரவேங்கை பத்திரிகையில் எழுதிய பதில் இது..

“ஒற்றையாட்சி ஏற்றுக்கொண்டு பேச்சு நடத்தும் அமிர் –சிவசிதம்பரம் கம்பனியார் புதிய பல்டி அடித்திருக்கிறார்கள்.

அகிம்சை போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார் அமிர்தலிங்கம். அது எப்படிபட்டதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்,

எதாவது கோவிலில் உண்ணாவிரதம் இருப்பார்கள். மங்கையகரசி அமிர்தலிங்கம் பாட்டுப்பாடுவார். மாலை பழரசத்துடன் போராட்டம் முடிவடையும்.

இப்படிபட்ட போராட்டத்தை கடந்த 30 ஆண்டுகளில் 30.000தடவை நடத்தியிருப்பார்கள். இதனால் சிங்கள அரசுக்கு என்ன கஷ்ரம்?

இதை எழுதிய கோவை மகேசனும் ஒரு காலத்தில் கூட்டணியின் உண்ணாவிரத போராட்டங்களில் கலந்து கொண்டவர்தான்.

கடற்படையோடு மோதல்

1984 ஆகஸ்ட் 4ஆம் திகதி சனிக்கிழமை வல்வெட்டிதுறையில் உள்ள பொலிகண்டி எனும் கிராமத்தில் புலிகளது மோட்டார் படகு நிற்கிறது.

கடல்கண்காணிப்பு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் புலிகளின் படகை கண்டுவிட்டனர்.

புலிகளது மோட்டோர் படகு திடீரென்று கடற்படையினரது வியூகத்துக்குள் சிக்கி கொண்டது.

புலிகளது படகில் இருந்தது நான்கு பேர். கடற்படையினர் 18பேர்.

கடற்படையினருக்கும் புலிகளுக்கும்மிடையில் இடையில் மோதல் ஆரம்பிக்கிறது.

மோதலின் முடிவில் கடற்படையினர் ஆறுபேர் மாண்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

நவீன ரோந்து படகையும் கைவிட்டு கடற்படையினர் கைவிட்டு பின்வாங்கி சென்றனர்.

இலங்கை கடற்படையினருக்கு எதிரான முதலாவது பாரிய தாக்குதல் அதுதான்.

பதிலடி படுகொலைகள்

இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து வடக்கில் பாரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டது ஜே.ஆர். அரசு. கடற்படை கப்பல்கள் வல்வெட்டிதுறை கடற்கரையில் வந்து முத்தமிட்டன.

கடற்படை படகிலிருந்து கிராமங்களை நோக்கி குண்டுகள் ஏவப்பட்டன.

இதனால் 5000பேர்வரையான ஊர் மக்கள் வீடகளைவிட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சமடைந்ததனர்.

வயோதிபர், பெண்கள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனவர் குடியிருப்புகள், வள்ளங்கள் என்பன நாசமாக்கப்பட்டன.

படையினரின் பதிலடி அவ்வாறு நடந்து கொண்டிருந்த போது புலிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றுக்கு தயாரானார்கள்.

ரோந்து அணிக்கு குறி

வல்வெட்டி துறைக்கு அருகே உள்ளது நெடிய காடு.

ஆகஸ்ட் 5திகதி நெடிய காடு பகுதியில் கமோண்டோ படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

மூன்று கவச வண்டிகள். ஒரு ட்ரக் ஒரு ஜீப் சகிதம் ரோந்து அணி சென்று கொண்டிருந்தது.

பிரதான் வீதிகளில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்து விட்டு புலிகள் காத்திருந்தனர்.

நிலக்கண்ணிவெடி புதைக்கப்பட இடத்தைக் கடக்கமுற்பட்ட ஜீப் வண்டி சிதறியது.

ஜீப் வண்டியில் ஒன்பது கமோண்டோக்கள் கொல்லப்பட்டனர். உதவிப் பொலிஸ் ஜயரட்ண என்பவரும் மாண்டுபோனார்.

இதனையடுத்து படையயினரின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன.

அதே சமயம் முல்லைதீவில் உள்ள ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகளின் ஒரு பிரிவு நகர்ந்தது.

தொடரும்…

அற்புதன் எழுதுவது..

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1984 ஆகஸ்ட் 5ஆம் திகதியும் இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருந்தன.

இஸ்ரேலிய “மொசாட்” பிரிட்டனிலிருந்த வரவழைக்கப்பட்ட “எஸ்’.ஏ.எஸ்” என்றழைக்கப்படும் படையினர்   ஆகியோரின்   ஒத்துழைப்போடு வேட்டைகள் தொடர்ந்தன.

வடபகுதி வீதிகளில் தமிழர் பிணங்களும்,  தமிழர்களின் வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன.

இருபுற தாக்குதல்

அதே நாள் மாலை 5.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.

பொலிசார் 50பேர்வரை அங்கு இருந்தனர். அதில் 30பேர் கொரிலாத் தாக்குதலுக்கு எதிரான பயிற்சி பெற்றவர்கள்.

மாடிக் கட்டிடத்தோடு அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தின் பின்புறமாய்ச் சென்று புலிகள் பதுங்கு நிலையில் இருந்தனர்.

அதே சமயம் முன்புறமிருந்து புலிகளது இன்னொரு கொரிலா அணி தாக்குதலை ஆரம்பித்தது.

முன்புறமிருந்தே தாக்குதல் வருவதாக நினைத்து பொலிசார் பதில் தாக்குதல் தொடுக்கமுற்பட்டனர்.

அதேநேரம் எற்கனவே பின்புறம் நிலைகொண்டிருந்த புலிகள் தாக்குதலை ஆரம்பித்தபடி உள்ளே புகுந்தனர்.

இருபுறமும் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

பொலிசார் ஆயதங்களை கைவிடுச் தப்பிச் சென்றனர். பொலிஸ் நிலையம் புலிகளின் வசம் வீழந்தது.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் கனேமுல்ல உட்பட எட்டு பொலிசார் கொல்லப்பட்டனர்.

பொலிஸ் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆயதங்களின் விபரம் இது..

நான்கு இயந்திர துப்பாக்கிகள் மூன்று 303 ரக ரைபிலகள்.நான்கு ரிபீட்டர் ரக துப்பாக்கிகள், இரண்டு 38ரக ரிவோல்வர்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள்.

பொலிஸ் நிலையமும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இத்தாகுதலை அடுத்து படையினரின் நடவடிக்கைகள் மேலும் உக்கிரமாயின.

தமது கோபத்தை எல்லாம் தமிழ் மக்கள் மீதும், அவர்களது உடைமைகள் மீதம் கொட்டித் தீர்த்தனர் படையினர்.

vidu.jpgவங்கி ஒன்று கொள்ளை இரண்டு

யாழ்பாணம் ஸ்ரான்லி வீதியிலிருந்த வங்கியிலும் கொள்ளை ஒன்று நடந்தது.

இக்கொள்ளை நடவடிக்கையை பற்றிய சுவாரசியமான விசயம் ஒன்று சொல்லுகிறேன்.

ஒரே நாளில் இரண்டு தடவை ஒரே வங்கி கொள்ளையிடப்பட்டது.

அது எப்படி தெரியுமா? ஸ்ரான்லி வீதியில் இருந்த வங்கி மீது ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மக்கள் விடுதலைப்படையும் கண்வைத்திருந்தது.

அதே சமயம் தமிழ் மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (என.எல்.எப்.ரி)என்னும் இயக்கமும் குறிவைத்திருந்தது.

மக்கள் விடுதலைப்படை தமது தளபதி டக்ளஸ் தேவானந்தாவின் உத்தரவுக்காக தாமதித்திருந்தது.

தளபதி டக்ளஸ் தேவானந்தா அப்போது இந்தியாவில் இருந்தார். என.எல்.எப்.ரி முந்திக்கொண்டது.

வங்கிக்குள் புகுந்த என.எல்.எப்.ரி யினர் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இரும்புப் பெட்டிக்குள் இருந்த நகைகளை எடுக்கமுடியவில்லை.

அதனை உடைத்து திறப்பது உடனே நடக்கக்கூடிய காரியமில்லை.

தாமதித்தால் பொலிசார் வந்து சேர்ந்து விடலாம்.அதனால் வெளியே இருந்த பணத்தையும், நகைகளையும் திரட்டிக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

.இச்செய்தி மக்கள் விடுதலைப்படைக்கு எட்டிவிட்டது. உடனே இறங்கினார்கள். வங்கிக்குள் புகுந்து இரும்பு பெட்டியை தூக்கி வந்து உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றினார்கள்.

இரும்பு பெட்டி பலத்த கனமாக இருந்தது.

பொது மக்களும் ஆளுக்கொரு கைகொடுத்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவிட்டார்கள்.

இரகசிய இடமொன்றுக்கு கொண்டு சென்று இரும்பு பெட்டியை உடைத்து நகைகளையும், பணத்தையும் திரட்டிக்கொண்டனர்.

இரும்புப் பெட்டிக்குள் சில காணி உறுதிகளும் இருந்தன. அதில் ஒன்று யாழ் தொகுதி எம்.பியாகவிருந்த யோகேஸ்வரனின் காணி உறுதி.

இச் சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வந்து சேர்ந்தனர் இராணுவத்தினர்.

ஸ்ரான்லி வீதியால் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

8வயது சிறுவன் உட்பட பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

avalam.jpgவவுனியாவில் கோரம்

இதேநேரம் வடபகுதியெங்கும் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

வவுனியாவில் நாலு தமிழ் பெண்கள் விமானப்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் பலாத்காரப் படுத்தப்பட்ட நிலையில் வீதிகளில் பிணமாக கிடந்தனர்.

கவச வண்டி நாசம்

1984 ஆகஸ்ட் 6ஆம் திகதி யாழ்பாண பொதுமருத்துவ மனைக்கு அருகில் கவச வண்டியோடு வந்திறங்கினார்கள் இராணுவத்தினர்.

கவசவண்டியின் பீரங்கியால் அருகில் உள்ள கட்டிடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதல் நடத்திவிட்டு கவச வண்டி சகிதம் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடந்தினார்கள்.

கவசவாகனத்தை நோக்கி புலிகள் கைகுண்டுகள் வீசினார்கள்.

கவச வாகனம் சேதமடைந்தது. ஒரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.

மன்னார் நகரில் படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக மன்னர் நகரில் இருந்த பல கடைககுளும் வீடுகளும் எரிந்து சாம்பலாகின.

அடம்பன் கிராமத்திலும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கனக்கான மக்கள் அகதிகளாயினர்.

முஸ்லிம் கடைகளும் மொசாட்டும.

முருங்கன், சிலாவத்துறை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மன்னாரில் இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட கடைகளில் பெரும்பாலானவைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.

மொசாட் குழுவினரை சந்தோசப்படுத்தவே முஸ்லிம் கடைகளையும் இராணுவத்தினர் கொளுத்தியதாக நம்பப்பட்டது.

மன்னாரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் இந்திய பிரஜைகள்.

ஆறு பேரில் ஒருவர் சேது இராமலிங்கம் சில நாட்களில் அவர் இந்தியா செல்ல இருந்தார்.

திருகோணமலையில் இருக்கிறது தம்பலகாமம் சிவன் கோயில்.

சினம் கொண்ட இராணுவத்தினருக்கு சிவன் மீதும் கோபம். கோயிலையும் நொருக்கிவிட்டு, பிரதம குருக்களையும் பிடித்துச் சென்றனர்.

யாழ்பாணம் அச்சுவேலியில் இருந்த கடைகளையும், வீடுகளையும் இராணுவத்தினர் கொழுத்திய போது நீதிபதியின் வீட்டையும் விட்டுவைக்கவில்லை.

மல்லாகம் மஜிஸ்ரேட் திரு பாலசிங்கத்தின் வீடுதான் தீக்கிரையானது.

நிருபர்கள் பட்ட அவலம்.

கனடா வானொலி நிறுவனம் ஒன்றின் நிருபர் ஜோன் தன்மன்.

வடபகுதிக்கு நேரில் சென்று நிலைமையை அறிய விரும்பினார்.

அனுமதி கொடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அதனால் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கத்தோடு அவர் தொடர்புகொண்டார்.

அமுர்தலிங்கமும் வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து விளக்கம் கொடுத்தார்.

அவர் சொன்னதையெல்லாம் தொலைபேசி ஒலிப்பதிவு கருவி மூலம் பதிவு செய்து கொண்டார் நிருபர்.

நன்றி சொல்லி ரீசீவரை வைத்துவிட்டு திரும்பிய நிருபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரிவோல்வர்களோடு சி.ஐ.டியினர் நின்றனர்.

கனடா நிருபர் கொழும்பில் உள்ள சிஐ.டி தலமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஒலிப்பதிவு நாடாக்கள், செய்திக் குறிப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒப்புதல் வாக்கு மூலம் கேட்டனர் சி.ஐ.டியினர்.

நிருபர் மறுத்ததால் ஏழரை மணிநேரம் கூண்டுக்குள் அடைபட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

விமானம் ஏறமுன் கனடா நிருபர் சொன்னது இது

“மனிதவுரிமைகளுக்கு இலங்கையில் இடமேயில்லை”

இலங்கையில் பணியாற்றிய “இந்திய டூடே”

சஞ்சிகையின் நிருபர் பெயர் வெங்கட்ரமணி.

அவரையும் இராணுவத்தினர் கைது செய்தனா.

இந்திய தூதர் தலையிட்டு அவரை விடுவித்தார்.

இத்தனைக்கும் அவர் இலங்கை அரசுக்கு சாதகமாக எழுதிய கட்டுரை ஒன்று கைது செய்யப்படும் முன்னர் இந்திய டூடே யில் வெளிவந்திருந்ததது.

வடபகுதி நிலவரம் அறிய சென்ற “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பிரதம ஆசிரியரும் மேலும் மூன்று பத்திரிகையாளர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மணிநேரம் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தாக்குதல்கள் வெறியாட்டங்கள் பற்றியே அதிகம் கூறிவிட்டதால் இடையில் மேலும் ஒரு சுவாரசியமான செய்தி.

தனிநாடும் தனிவீடும்

” தனிநாடு அல்லது சுடுகாடு” என்று முழங்கியவர்கள் கூட்டணித்தலைவர்கள்.

1984இல் அவர்களில் சிலர் தமிழக அரசிடம்

“தனிவீடு அல்லது வாடகைவீடு” கேட்டார்கள்.

அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

கூட்டணியினரின் தனிவீட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டணி தலைவர்கள் மூவருக்கு தனிவீடு தர முன்வந்தார்.

கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம், திருமலைக்காவலர் என்றழைக்கப்பட்ட இரா.சம்பந்தன்.

எல்லைக் காவலர் என்றழைக்கப்பட்ட வவுனியா தா சிதம்பரம் ஆகியோருக்கு தனிவீடுகள் கிடைத்தன.

இந்தவிடயம் இலங்கை பத்திரிகையில் வந்தபோது தலைவர் மு.சிவசிதம்பரம் சங்கடப்பட்டார்.

அத்துலத் முதலியின் அறிவிப்பு

“தமிழீழத்தை எதிர்க்கும் சகல சிங்கள மக்களிடமும் ஆயுதம் வழங்குவோம்” என்று பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலி கூறினார்.

prab2.jpg“தமிழகத்தில் 5கோடி தமிழூகளும் தமிழக அரசியல்வாதிகளும், எம்.ஜி.ஆரும் இல்லை என்றால் தமிழ் தீவிரவாதிகளின் கதை என்றோ முடித்திருப்போம்” என்றும் அத்துலத் முதலி கூறியிருந்தார்.

“எம்.ஜி.ஆர் உயிருக்கு தமிழகத்தில் தங்கியிருக்கும் போராளிகளால் ஆபத்து” என்று ஒரு கட்டுக்கதையையும் இலங்கையரசு பரப்பியிருந்தது.

அதற்கு பதிலடிபோல எம்.ஜி.ஆர் சொன்னது இது.

“எனது உயிருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு யாழ்பாணத்தில் எனது உடன்பிறப்புக்களான தமிழர்கள் மீது இராணுவத்தை ஏவிவிட்டு பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவிப்பதேன்?

JR-jeya.jpgஎந்த கண்டணத்தையும் ஜே.ஆர். அரசு தனது காதில் போட்டுக் கொள்ளவில்லை.

படுகொலை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு சிகரம் வைத்தது போன்ற ஒரு சம்பவம் சுன்னாகத்தில் நடந்தது.

இரத்தத்தை உறைய வைக்கும் அந்தப் பயங்கரம் அடுத்தவாரம்.

தொடரும்..

http://ilakkiyainfo.com/எம்-ஜி-ஆரும்-இல்லை-என்றால/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வரவுக்கு மணி என்ன மொட்டையாக உண்மை எனும் கருத்து நீங்கள் எதை சொல்ல வருகின்றீர்கள் நம்ம சம்பந்தன் ஐயா அன்று நடந்து கொண்ட முறையை பார்த்தீர்களா? இனி வரும் இத்தொடர் சம்பந்தன் ஐயாவின் தற்போதைய அரசியலில் முக்கிய தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என நம்பலாம் .சில அத்தியாயங்கள்  அற்புதனின் தீர்க்க தரிசனமாய் உள்ளது கண்கூடு நன்றி மணி13 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர், சிவ சிதம்பரம் குடும்ப சகிதம் இந்தியாவுக்கு ஓடினது மிகத்தப்பு.

87-90 வரை மதிவதனி, சாள்ஸ், துவாரகா எங்கே இருந்தனர்? சுவிற்சலாந்து என்பது மணலாறுக் காட்டின் ஒரு பகுதியையோ?

பிரபா 83-87 ஏன் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்? கேவலம் கெட்ட சம்பந்தர் போல் ஓடி ஒழியாமல் கிட்டு போல் யாழில் ஏன் நிக்கவில்லை?

த தே செய்தால் யுத்ததந்திரம், ஏனையோர் செய்தால் துரோகம்.

Link to comment
Share on other sites

கோசான் சும்மா இருக்காமல் ஏன் என்ரை ஞாபகங்களை கிளறுகிறீங்கள்.
 
சரி கிளறினது இதுதான்.
 
80பதுகளில் ஒருநாள் நண்பர்களுடன் எனது நண்பர் ஒருவர் கொஞ்சம் பார்ட்டி பண்ணினார். பல இளைஞர்களை அங்கு கண்ட தேசிய வீரர்கள் உள்ளே புகுந்து கேட்டார்கள் "நாடு இருக்கும் நிலையில் பார்ட்டி உங்களுக்கு தேவையா?" என்று. நண்பரும் சாகவாசமாய் கேட்டார் "நாடு இருக்கும் நிலையில் தேத மட்டும் .. பிள்ளை பெத்துக்கலாம் நாங்க குடிச்சா தப்பா? என்று.
 
அப்புறம்
 
பாவம் இன்றும் முழுமையாக அவரால் நடக்க முடியவில்லை.
 
நண்பரின் கேள்வியில் என்ன பிழை என்பது இன்றும் புரியாதது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

daklasthevanantha-680x365.jpg
 

யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று.

1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக் கொடடிருந்தபோது புலிகளும் பதில் நடவடிக்கை ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.

சுன்னாகம் பொலிஸ் நிலையமும் தாக்கப்படலாம் என்று பொலிசாருக்கு தகவல்கிடைத்தது.

பொலிஸ் நிலையத்தை காலிசெய்து  செல்ல அங்குள்ள பொலிசார் முடிவு செய்தனர்.

அறைக்குள் பூட்டிவைத்து

கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில்தான் வைக்கப்பட்டிருந்தனர்.

25பேர் வரை இருந்தனர்.

அவர்களது கைகளைகட்டி பிளாஸ்ரர் ஓட்டி ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள்.

வாசலில் குண்டைவைத்துவிட்டு பொலிசார் வெளியேறி சென்றுவிட்டனர்.

உள்ளே கிடந்த இளைஞர்கள் சிலர் பிளாஸ்ரர்களை அகற்றிவிட்டு அபயக்குரல் எழுப்பினார்கள்.

சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச்சென்று கதவை உடைத்தனர்.

அப்போது குண்டு வெடித்தது.

மாடிக்கட்டிடம் உடைந்து வீழ்ந்தது.

அறைக்குள் பூட்டப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களில் இடிபாடுகளில் சிக்கி 22 பேர்வரை உயிரிழந்தனர்.

பொதுமக்கள் சடலங்களை மீட்டெடுத்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவரும் பலியானார்கள்.

அமைச்சர் அறிக்கை

இதேவேளை அப்போது அமைச்சராக இருந்த எம்.எச்.முஹமட் (பின்னர் சபாநாயகராக இருந்தவர்) மன்னார் பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்தார்.

இராணுவத்தினர்தான் நுர்ற்றுக்கு பேற்பட்ட கடைகளை மன்னாரில் தீயிட்டு கொழுத்தினார்கள் என்று எம்.எச்.முஹமட் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து மன்னார் இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் மோரிஸ் பின்வருமாறு சொன்னார்.

” மது அருந்தியிருந்த 30இராணுவத்தினர் அத்துமீறி நடந்துவிட்டனர்.

திருமணவீட்டுக்கு சென்றோர் பிணமானார்கள்.

வவுனியாவிலும் சந்தைகள், கடைகள் எரிக்கப்பட்டிருந்தன.

“வேல் கபே” என்னும் உணவு விடுதிக்குள்ளும் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

யாழ்பாணத்தில் இருக்கிறது கைதடி என்னும் கிராமம். தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி 16 போ திருமணம் ஒன்றுக்காக சென்றுகொண்டிருந்தனர்.

அந்த வாகனம் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டது.. துப்பாக்கிகள் வேட்டுக்களை பொழிந்தன.

பெண்கள்,குழந்தைகள் உட்பட பலர் இரத்த வெள்ளத்தில் உயிர் துறந்தனர்.

இராணுவ நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த போது புலிகளின் மற்றொரு தாக்குதல் அது நடந்தது மன்னாரில்.

மன்னாரில் இருந்தது தள்ளாடி இராணுவ முகாம். மன்னார் மாவட்டத்தில் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் தள்ளாடி இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

அதன் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவதில்லை.

11-08-84 அன்று தள்ளாடி இராணுவமுகாமை சேர்ந்த 13 இராணுவ வீரர்கள் ஜீப் வண்டி ஒன்றில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

மன்னார்- பூநரி பிரதான பாதையில் நிலக்கண்ணி வெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.

ஜீப் வண்டி குறிப்பிட்ட இடத்தில் வந்ததும் நிலக் கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன.

30அடிவரை உயர்ந்து சிதறியது ஜீப் வண்டி. 13 இராணுவத்தினரும் பலியானார்கள்.

இது மன்னார் தாக்குதல்! மற்றொரு தாக்குதல் வல்வெட்டித்துறையில்.

panaimaram.jpgஒரு மணிநேரச் சமர்

யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்த பொலிஸ் நிலையம் அதிகாலை 4.30மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டது.

பொலிஸ் நிலைய பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த செக்யூரிட்டி லைட் மீது சூடு விழுந்தது. அதனால் பொலிஸ்நிலைய சுற்றுப்புறமும் இருளானது.

கைக்குண்டுகள் வீசி பொலிஸ் நிலையம்மீது தாக்குதல் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

பொலிஸ் கமாண்டோக்கள் திருப்பித் தாக்க தொடங்கினார்கள்.. சுமார் மணிநேரம் துப்பாக்கி சமர் தொடர்ந்தது.

பொலிஸ் நிலையத்தின் உள்ளே செல்லமுடியவில்லை.தாக்குதலை நிறுத்திவிட்டு புலிகள் திரும்பினார்கள்.

14.8.84 அன்று புலிகள் நடத்திய தாக்குதல் அது.

வவுனியாவில் குண்டு

வவுனியா மாவட்டத்தில் கெடுபிடி நடவடிக்கைகளோடு படுத்திப் பேசப்பட்டவர் எஸ்.பி.ஹேரத். வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியாக அவர்தான் இருந்தார்.

வவுனியாவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதில் எஸ்.பி.ஹேரத் முன் நின்று செயற்பட்டார்.

வவுனியாவில் காந்தியம் என்னும் அமைப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தது.

அதனால் ஹேரத்தின் கழுகுப்பார்வை காந்தீய அமைப்பு மீது வீழ்ந்தது.

காந்தீய அமைப்பு புளொட் அமைப்போடு  தொடர்பாக இருந்தது

புளொட் அமைப்பின் தலைவர்களில் ஒருவராக இருந்த சந்ததியார் காந்திய அமைப்பின் ஊடாக வேலை செய்தார்.

1984 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் எஸ்.பி.ஹேரத் தனது அலுவலகத்தில் இருந்தபோது குண்டுவெடித்தது.

எஸ்.பி.ஹேரத் பலியானார்.

புளொட் அமைப்பே இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

அப்பட்டமான பொய்கள்

வடபகுதி எங்கும் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையையும் பயங்கரவாதிகளின் கணக்கில் சேர்த்துகொண்டது அரசு.

இலங்கை வானொலி பின்வருமாறு அறிவித்தது.

“பாதுகாப்பு படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த 24மணித்தியாலங்களில் மூன்று இடங்களில் நடைபெற்ற மோதலில் 31 கொரிலாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.”

கைதடியில் மேலும் 10பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.”

இதுதான் இலங்கையரசு தனது வானொலி மூலம் சொன்னசெய்தி.

வல்வெட்டிதுறையில் கடற்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு

அமைச்சர் லலித் அத்துலத்முதலி என்னசொன்னார் தெரியுமா?

“கடற்படையிடம் பீரங்கிகளோ இல்லை. பீரங்கித் தாக்குதல்கள் வல்வெட்டித்துறையில் எங்குமே நடைபெறவில்லை”என்றார் அவர்.

இலங்கை வானொலிச் செய்திப்படி நூற்றிப் பதினொருபேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் அத்தனைபேரும் பயங்கரவாதிகள்.

ஆனால் இயக்க உறுப்பினர்கள் என்று பார்த்தால் புலிகள் அமைப்பை சேர்ந்த இருவர் மட்டுமே மாண்டனர்.

ஏனையோர் அனைவரும் பொதுமக்களே.

தகவல் கிடைத்தது

யாழ்பாணத்தில் இருக்கிறது கரவெட்டி . கரவெட்டி மேற்கில் கல்லுவம் மண்டான் என்றழைக்கப்படும் பாதையில் புலிகள் காத்திருந்தனர்.

நிலக்கண்ணி வெடிகள் பாதையில் புதைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த தகவலை யாரோ இராணுவத்தினருக்கு தெரியப்படுத்திவிட்டனர்.

24.8.84 கொழுத்தும் வெயிலில் பகல் 12.30மணி கோபுரக் கவச வண்டி சகிதம் நிலக்கண்ணிகளை அகற்ற இராணுவ அணி விரைந்து வந்தது.

இராணுவத்தினர் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தைதேடி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

கோபுர கவச வண்டி நகர்ந்து நிலக்கண்ணி வெடிக்கு மேலே வந்தபோது பதுங்கியிருந்த புலிகள் அவற்றை வெடிக்க வைத்தனர்.

கோபுர கவச வண்டி குப்புறக் கவுழ்ந்து பற்றி எரிந்தது. இராணுவத்தினர் எட்டுபேர் பலியானார்கள்.

அதே நாளில் மற்றொரு நிலக்கண்ணி வெடித்தாக்குதல் நீர்வேலியில் நடைபெற்றது.

நீர்வேலி பிரதான பாதையில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

இத்தகவல்களும் இராணுவத்தினருக்கு எட்டியதோ தெரியவில்லை.

வாகனம் பின்னால் நகர்ந்துவர முன்னால் நடந்து பாதையை ஆராய்நதபடி வந்தனர் இராணுவத்தினர்.

எனினும் நிலக்கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரில் மூவர் பலியானார்கள்.

இத்தாக்குதலும் புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.

duglas-devananda-terrorist-rebel.jpgபாரிய தாக்குதல் திட்டம்

1984 இல் மிகப்பெரிய தாக்குதல் முயற்சி ஒன்றுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலை படையானது தயாரானது.

யாழ்பாண காரைநகரில் உள்ள பாரிய கடற்படை முகாமை தாக்கி அங்குள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதுதான் திட்டம்.

இதே நேரம் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவுக்கள் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.

மக்கள் விடுதலை பிரதம தளபதியாக டக்ளஸ் தேவானந்தா.

ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவின் அரசியல் பீட உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களிற்கிடையிலும் ஏற்பட்ட

பிரச்சனைகளில் பத்மநாபா நடுநிலை வகிப்பவராக நடந்துகொண்டார்.

காரைநகர் கடற்படை முகாம்தாக்குதல் திட்டம் குறித்து டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது அவர் தமிழ் நாட்டில் இருந்தார்.

மற்றொரு மத்திய குழு உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்பாணத்தில் இருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணம் வருவதற்கு இடையில் கடற்படை முகாம் மீதான் தாக்குதலை நடத்தி முடித்துவிட சுரேஸ் திட்டமிட்டார்.

கடற்படை முகாம் பாரிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது.

ஆட்பலமும் அதிகமிருந்தது.

ஆனாலும் தாக்கி அழித்துவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் நம்பியதற்கு முக்கிய காரணம் ஒன்று இருந்தது.

அதுதான் மோட்டோர் ஷெல்.

தமிழ் அமைப்புகளிடையே முதன் முதலில் சொந்தமாக மோட்டார் தயாரித்ததது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புதான்.

83493147_83493140.jpgஉதவிய புத்தகம்

தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் வைத்து மோட்டார்களும் அதற்கான ஷெல்களும் தயாரிக்கப்பட்டன.

ஆனால் அது ஒன்றும் தலைமையின் திட்டமிட்ட முடிவினால் நடந்த காரியமல்ல.

திருமலையை சேர்ந்த சின்னவன்.

லெபானில் பயிற்சி எடுத்தவன் துணிச்சலுக்கு பெயா போனவர்.

குறிபார்த்து சுடுவதில் வல்லவர்.

ஒரு நாள் வெளிநாட்டு புத்தகம் ஒன்றை சின்னவன் காணநேர்ந்தது.

அது ஆயுத தளபாடங்கள் சம்பந்தப்பட்ட புத்தகம்.

அதில் மோட்டார்கள் மற்றும் ஷெல்கள் தயாரிக்கும் முறை பற்றிப் படங்களோடு விளக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு நேராக ஆர்.பி.கே ஸ்ரான்லின் என்பவரை சந்தித்தார் சின்னவன்.

ஸ்ரான்லின் கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு தன் பல லச்சங்கள் பெறுமதியான சொத்துகளை கொடுத்தவர்.

திராவிட கழகத்தில் மாணவர் தவைராக இருந்தவர்.

ஆனால் வெளியே அதிகம். ஸ்ரான்லின் என்று அவருக்கு பெயர் வைத்தவர் தந்தை பெரியார்.

ஸ்ராலினிடம் கேட்டார் சின்னவன்.

“நாங்கள் மோட்டர் செய்து பார்க்கக் கூடாது”

ஸ்ரான்லின் கேட்டார்.

“உங்களுக்கு நம்பிக்கை இருக்குதுங்களா சின்னவன்?

“இருக்குது”

“செஞ்சுடுவோம்”

மோட்டார் தயார்

sinavan.jpg

ஸ்ராலினுக்கு சொந்தமான பட்டறையில் வேலை தொடங்கியது.

சின்னவனுக்கும் ஸ்ரான்லினுக்கும் தூக்கமேயில்லை.

கிட்டத்தட்ட ஓயாத அலை.

மோட்டார் தயார்.

ஷெல்லும் தயார்.

இருவர் விழிகளிலும் ஆனந்த கண்ணீர்

கும்பகோணத்தில் வைத்து பரீசீலித்துப் பார்த்தார்கள். மோட்டாரில் ஷெல்போட்டார் சின்னவன்.

நேர்த்தியாக எழுந்துபோய் வெடித்தது.

“வெற்றி”

சின்னவன் கண்களில் இராணுவ முகாம்கள் தெரிந்தன.

சின்னவன் சொ்ன்னார்

“இனி ஒரு முகாமும் ஈழத்தில் இருக்காது”

அந்த மோட்டார் தாக்குதலை முதுகெலும்பாக வைத்து காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் திட்டமிடப்பட்டது.

மோட்டாரும் ஷெல்களும் வந்து யாழ்பாணத்தில் இறங்கின.

யாழ் பிராந்திய மக்கள் விடுதலைப்படை தளபதி சுபத்திரன் கேட்டார்.

“பரீசோதிக்கவில்லையா?

“தேவையே இல்லை. வெடிக்கும்” என்றார் சின்னவன்.

சிறிய வான் ஒன்றை எடுத்து கவச வண்டியாக தயாரித்தனர்.

முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கவச வண்டியும் அதுதான்.

தயாரித்தவர் மக்கள் விடுதலைப்படை யாழ்.பிராந்திய முக்கியஸ்தராக இருந்த சுதன்.

தாக்குதல் ஆரம்பம்.

தாக்குதல் ஆரம்பித்தது..

மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சின்னவன் ஏற்றிருந்தார்.

மோட்டாரில் இருந்து செஷல்கள் எழுந்துபோய் கடற்படை முகாம்களில் வீழ்ந்தன. ஆனால் அவற்றில் பல வெடிக்கவேயில்லை.

கவச வண்டி கடற்படை முகாம் வாசல்வரை சென்று மேற்கொண்டு செல்லமுடியாமல் மரம் ஒன்றுடன் சிக்கிக்கொண்டது.

கவச வண்டி செல்லக்கூடிய வழி இருப்பதாக மக்கள் விடுதலைப்படை உளவு பிரிவு சொன் தகவலினால் ஏற்பட்ட தவறு அது.

வெடித்த ஷெல்களால் கடற்படை முகாம் கட்டிடங்கள் சேதமடைந்தன.

கடற்படையினர் முகாமைவிட்டு பின்வாங்கிச் சென்று பதுங்கிக்கொண்டனா.

முகாமுக்கு வெளியே நின்ற மக்கள் விடுதலைப்படைக்கு உள்ளே நடந்தது எதுவும் தெரியாது.

அதனால் மக்கள் விடுதலைப்படையினரால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியவில்லை.

திட்டம் தோல்வி என்பதால் தாக்குதலை நிறுத்திவிட்டுத் திரும்பினார்கள்.

1. உரிய தகவல்கள் திரட்டப்படாமை

2. மோட்டார் ஷெல் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தமை.

3. யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்களோடு கூடி ஆராயமை.

4. முதல் தாக்குதலையே பாரிய தாக்குதலாக திட்டமிட்டமையால் ஏற்பட்ட முன் அனுபவம் இன்மை.

போன்றவையே கடற்படைமுகாம் தாக்குதலின் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.

கடற்படை முகாமை தாக்குவதற்கு முன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கலாம் என்று யாழ் பிராந்திய மக்கள் விடுதலைபடை பொறுப்பாளர்கள் கூறினார்கள்.

தலைமை தடுத்துவிட்டது.

ஆனால் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது ரெலோ குறிவைத்தது.

தொடர்ந்து வரும்…

நன்றி அற்புதன் 

http://ilakkiyainfo.com/முதன்-முதலில்-சொந்தமாக-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சாவகச்சேரியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் : 50க்கு மேற்பட்ட பொலிசார் பலி!! ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -33)

patmanathan-680x365.jpg
 

 

 

அத்தாக்குதலின் பின்னர் சாவச்சேரி பொலிஸ் நிலைய பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை மீண்டும் தாக்கும் திட்டத்தோடு ரெலோ அமைப்பினர் தகவல் திரட்டிக்கொண்டிருந்தனர்.

அதேநேரம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் மக்கள் விடுதலைப் படையும் தகவல் திரட்டிக்கொண்டிருந்தன.

ஏனைய அமைப்புகளைவிட சாவகச்சேரியில் ஈ.பி.ஆர்.எல.எப் வேரூன்றியிருந்தது. அங்கிருந்து தனது முக்கிய உறுப்பினர்களை பெற்றிருந்தது.

ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பினால் ஈழ முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.

ஈழவாலிப முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன்வேலைகள் சாவகச்சேரியில் கூடுதலாக நடைபெற்று வந்தன.

ஈழவாலிப முன்னணிக்கு ரமேஷ் பொறுப்பாக இருந்தார். கிராமங்கள் தோறும் மக்கள் தொண்டர் படை உருவாக்கப்படும் வேலைகள் நடந்து வந்தன.

தமிழரசுக் கட்சி காலத்திலிருந்தே அக்கட்சியின் கோட்டையாக விளங்கியது சாவகச்சேரி.

பின்னர் கூட்டணியின் கோட்டையாக மாறியது. சாவகச்சேரியில் கூட்டணியன் செல்வாக்கை உடைப்பதில் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் அரசியல் கருத்தரங்குகள் முக்கிய பாத்திரம் வகித்தமை மறுக்க இயலாது.

ரமேஷ், சிறிதரன், செழியன், டேவிட்சன் ஆகியோர் அரசியல் கருத்தரங்குகளில் கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

எனவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கான அதிக சாதகம் ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்புக்கே இருந்தது.

பொலிஸ் நிலையத்துக்குள் இருந்து அதிக தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கவும் செய்தன.

ஆயினும் “மாபெரும் தாக்குதல்” என்னும் கனவு காரணமாக காரைநகர் கடற்படைமுகாமில் ஈ.பி.ஆர்.எல.எப் குறிவைத்துக்கொண்டிருந்தது.

savakasery.jpg
ஏட்டிக்கு போட்டி

தாக்குதல்கள் எதிரிக்கெதிராகவே என்றாலும் கூட, தாக்குதல் நடவடிக்கைகளை வைத்து அந்த விளம்பரத்தால் முன்வரிசையில் வந்துவிடுவதற்கான போட்டியும் இயக்கங்கள் மத்தியில் நிலவியது.

புலிகள் சிறுசிறு தாக்குதல்களை நடத்துவதால் நாம் ஒரேயடியாக பெரிய தாக்குதலை நடத்தி முடித்துவிடலாம்.

அதன் விளைவாக தாம் முதலிடத்தில் வந்து புலிகள் உட்பட ஏனைய இயக்கங்களை பின்னால் தள்ளிவிடலாம் என்று ஈ.பி.ஆர்.எல.எப் கணக்குபோட்டது.

அந்தக் கணக்கு தப்புக் கணக்கானதை சென்றவாரம் விபரித்திருந்தேன்.

ரெலேவை பொறுத்தவரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கும் திட்டத்தோடு ஒரு கௌரவ பிரச்சனையும் இருந்தது.

ஏற்கனவே பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தார்கள் அல்லவா எனவே தமது தாக்குதல் புலிகள் நடத்திய தாக்குதலைவிட சிறப்பாக அமையவேண்டும் என்று ரெலோ திட்டமிட்டது.

ரெலோ தலைவராக இருந்த சிறீசாபாரத்னம் நேரடியாகவே தாக்குதலுக்கான தயாரிப்புகளை கவனிக்க தமிழகத்திலிருந்து யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.

தாக்குதலை படம்பிடிக்க வீடியோ கமராவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தால் அதனைவைத்து வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் பெரியளவில் பிரச்சாரம் நடத்தலாம். நிதி திரட்டவும், நம்பிக்கையூட்டவும் வீடியோ ஆதாரம் உதவியாக இருக்குமல்லவா?

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை சொல்லவேண்டும்.

1980களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலானோர் தமிழ் இயக்கங்களில் இரண்டையே கூடுதலாக நம்பினார்கள்.

ரெலோவும், புலிகள் அமைப்புமே அந்த இரண்டு அமைப்புகள். ஈ.பி.ஆர்.எல.எப், புளொட், ஈரோஸ் போன்ற அமைப்புகள் கம்யூனிச சித்தாந்தம் கொண்டவை என்று ஒரு சாரார் முகம் சுளித்தார்கள்.

தாக்குதல் நடத்தாமல் தத்துவம் பேசுவதாக கூறி மற்றொரு சரார் அந்த அமைப்புகளை சுவாரசியமில்லாமல் நோக்கினார்கள். .

அமெரிக்காவில் இருந்து வந்த குழு.

மற்றொரு இரகசியம் ஒன்று சொல்கிறேன்.

1984 இல் அமெரிக்காவில் உள்ள இலங்கை தமிழர்களான வசதி படைத்த புத்திஜீவிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்தது.

தமிழ் இயக்கங்களின் தலைவர்களை அக்குழு சந்தித்தது. அக்குழுவினரிடம் ஒரு பயங்கரமான திட்டம் இருந்தது.

அக்குழுவுக்கு தலமைதாங்கி வந்தவர் ஒரு பிரபல தமிழ் டாக்டர். இப்பாதும் அமெரிக்காவில் இருக்கிறார்.

இயக்கங்களின் தலைவர்களை தனித்தனியே அக்குழுவினர் சந்தித்திருந்தனர்.

“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், ஆனால் ஒரு நிபந்தனையோடு”

“என்ன நிபந்தனை?”

பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியை தீர்த்துக்கட்டவேண்டும்.

முடியுமா??

அப்பொழுதெல்லாம் கொழும்பில் நடவடிக்கைகளில் இறங்குவது பற்றி இயக்கங்கள் அதிகம் யோசிக்காத காலகட்டம்.

வேறு சூழல், வேறு மொழி பேசும் மக்கள், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்.

எனவே நடவடிக்கைகள் வெற்றியளிப்பது கஷ்டம் என்றே கருதப்பட்டது..

எனவே இயக்கங்களின் தலைவர்கள் திட்டவட்டமாக “ஆம்” சொல்லவில்லை..

ஈ.பி.ஆர்.எல.எப், புளொட் அமைப்புகளிடம் அந்த குழுவினருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பதால் அவர்கள் பெரிதும் நம்பியது ரெலோவைதான்.

“திட்டததை முடிதால் மட்டுமே பணம்” என்று ஏறக்குறைய ஒரு பேரம் போல பேச்சு நடத்திவிட்டு அவர்கள் அமெரிக்கா திரும்பிவிட்டனர்.

அக்குழுவினா கொண்டு வந்த திட்டத்தின் பின்னணியில் சக்தி யாரென்பது இதுவரை மர்மம்தான்.

துணிச்சலான பாச்சல்

இனி சாவகச்சேரி நடவடிக்கைக்கு திரும்புவோம்

30-11-84 அதாவது, முதலாவது தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடம் கடந்து சென்ற பின்னர் மீண்டும் ஒரு தாக்குதலை சந்திக்கப்போவது தெரியாமல் அமைதியாக இருந்தது பொலிஸ் நிலையம்.

தாக்குதல் பிரிவுகள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றன.

பொலிஸ் முன்பாக வாகனம் நின்றதும் அதிலிருந்து குதித்து சுட்டுக்கொண்டு முன்னேறினார் ஒரு போராளி.

அவரது பெயா நீயூட்டன் யாழ்பாணத்தில் கொழும்புத்துறையை சேர்ந்தவர். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்தவர்.

நீயூட்டனுக்கு இயக்கப் பெயர் நிக்சன்.

நீயூட்டன் பற்றிக் கூறக்காரணம்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான்.

காவலரனில் இருந்த பொலிசாரை நோக்கி சுட்டுக்கொண்டே சென்ற நீயூட்டன் பொலிசார் திருப்பிச்சுட்டார்கள்.

முதலில் உள்ளே நுழைபவர் கொல்லப்படுவார் என்று தெரிந்தே நீயூட்டன் செயலில் இறங்கினார்.

தற்கொலைப்படை உறுப்பினர் போலவே அவரது நடவடிக்கை அமைந்தது.

நீயூட்டனின் துணிச்சலான பாய்ச்சலால் பொலிசார் திகைத்த நொடியில் ஏனையோர் உள்ளே புகுந்தனர்.

a_Ltte-sol.jpgஅதிரடி தாக்குதல்

50க்கு மேற்பட்ட பொலிசார் பலியானார்கள். அவர்களில் பலர் இஸ்ரேலியர்களால் பயிற்றுக்குவிக்கப்பட்டவர்கள.

ஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்தை தகர்த்தது ரெலோ.

யாழ்பாணத்தில் அதுவரை நடந்த தாக்குதல்களில் மிகப்பெரிய வெற்றிகரமான தாக்குதல் அதுதான்.

ரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் தாக்குதல் நடைபெற்ற போது தானும் நேரடியாக பங்குகொண்டிருந்தார்.

உதவி தடுக்கப்பட்டது

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கபபட்ட செய்தி அறிந்து இராணுவ அணியொன்று விரைந்து வந்தது.

அதனை எதிர்பார்த்து கைதடியில் காத்திருந்த ரெலோவினர்

தாக்குதல் நடத்தியதில் 20வதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர்கள் பலியானார்கள்.

இத்தாக்குதல் ரெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமைந்தன.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலின்போது எடுக்கப்பட்ட வீடியோப் பிரதிகள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு பிரச்சாரமும் களைகட்டியது.

தாக்குதலை வீடியோவில் கண்ட வெளிநாட்டு தமிழர்கள் பலர் சிலித்துப் போனார்கள்.

ரெலோவிக்கு தாராளமாக நிதி வழங்கினார்கள்.

முதன்முதலில் வீடியோவில் எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கையும் அதுதான் என்பதும் குறிப்பிடதக்கது.

அதேவேளை ஈ.பி.ஆர்.எல் அமைப்பால் தமிழ் நாட்டின் பலபாகங்களில் கண்காட்சி குறிப்பிடதக்க ஒன்றாகும்

சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி.சேலம் போன்ற முக்கிய பகுதிகளில் அக்கண்காட்சி நடத்தப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் (1948) 1983வரை தொடர்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

மிகுந்த முயற்சியோடு திரட்டப்பட்ட பத்திரிகை செய்திகள், புகைப்படங்கள் போன்றவை பெருமளவில் இடம்பெற்றிருந்தன.

thamil.jpg
கதறிய தாய்மார்கள்

83 கலவரம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட தமிழர்களது உடல்கள்

கண்டதுண்டமாகக் கிடந்த காட்சிகள் புகைப்படங்களில் தெரிந்தன.

இடையே ஒரு கடல் பிரித்தாலும் இதய உணர்வால் ஒன்றுபட்ட மக்கள் அல்லவா தமிழக மக்கள்.

தனாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே. துடித்துப்போனார்கள்.

கண்காட்சிக்குச் சென்ற தாய்மார்கள் விழிகளில் கண்ணீரோடும், ஜே.ஆர். அரசுமீது கோபத்தோடும் திரும்பினார்கள்.

தாய்மார்கள் மட்டுமல்ல கண்காட்சியை காணச்சென்ற ஆண்களும் கதறியழுதனர்.

“நாங்களும் வருகிறோம் போராட சேர்த்துக்கொள்வீர்களா” என்று கேட்டவர்கள் பலர்.

அக்கண்காட்சியை தனது கடின உழைப்பால் டே விற்சன்.

தமிழக ஓவியர் சேகர் டே விற்சனுக்கு உதவியாக இருந்தவர்.

ஈழமாணவர் பொதுமன்றத்தின் (G :U :E :S) நிர்வாகச் செயலாளராக இருந்த டேவிற்சனை படையினர் தேடினார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டார் டேவிற்சன்.

தமிழ் நாட்டுக்கு சென்ற டேவிற்சன் ஈழமணி என்றபெயரோடு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

ஈ.பி.ஆர். எல்.எப் அமைப்புக்குள் ஏற்பட்ட உள்பிரச்சனையில் டக்ளஸ் தேவானந்தா அணியோடு நின்ற டேவிற்சன் தற்போது வெளிநாடொன்றில் இருக்கிறார்.

TELO_sabaratnam.jpgசுவையான செய்தி

போராளி அமைப்புக்களின் வளர்ச்சியால் அதிர்ச்சியுற்ற இலங்கை அரசு பல்வேறு பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தது.

அவற்றில் சில வேடிக்கையானவை. வேறு சில அரசே ஏமாந்து போய் கடைசியில் கைகளை பிசைந்து கொண்டு நிற்க வைத்தவை.

அதில் ஒன்றுதான் நான் இப்போது சொல்லப்போவதும்.

பெலஜியம் நாட்டு விமான நிலையத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்தச் செய்தி உடனடியாக இலங்கை அரசுக்கு கிடைத்துவிட்டது.

“ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் தான் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை உடனே கொழும்புக்குக் கொண்டுவர பெல்ஜியம் அரசின் உதவி கோரப்படும்” என்று அரசு தகவல்களை வெளியிட்டது.

பெல்ஜியத்தில் கைதுசெய்யப்பட்டவர் சிறீசாபாரத்தினமா இல்லையா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவொன்றையும் அரசு அனுப்பிவைத்தது.

இப்படியொல்லாம் அமளியான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த போது ரெலோ தலைவர் சிறீசாபாரத்தினம் என்னசெய்து கொண்டிருந்தார் தெரியுமா?

சென்னையில் சாலிக்கிராமத்தில் இருந்த தமது அலுவலகத்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

தமது தலைவர் கைதுசெய்யப்பட்டதாக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக ரெலோ கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

முல்லையில் தாக்குதல்

1984 இல் நடைபெற்ற மற்றொரு முக்கியமான தாக்குதல் முல்லைத்தீவுக்கருகே இடம்பெற்றது.

அதுபற்றி அடுத்த தொடரில்…

தொடரும்..

http://ilakkiyainfo....ில்-சொந்தமாக-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற போராளிகள் துரையப்பா முதல் காமினி வரை  (பகுதி -34)

பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34)
 

முல்லைதீவுப் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ஜே.ஆர் அரசாங்க காலத்தில் மேலும் தீவிரமாக்கப்பட்டன.

குடியேற்றங்களுக்கு பாதுகாப்பாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்ட வகையில் ஒரு வலைபின்னல் உருவாக்கப்படும்.

படிப்படியாக குடியேற்றம் விரிவடையும். இராணுவ உதவியோடு தமிழ் மக்கள் மீது அச்சுறுத்தல் ஆரம்பிக்கப்படும.

அதனால் தமது சொந்தக் கிராமங்களை விட்டு தமிழ் மக்கள் மெல்ல மெல்ல வெளியேற தொடங்கினர்.

திட்டமிட்ட குடியேற்றங்களின் நோக்கம் அதுதான்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம். தமிழ் மக்களுக்கு என்று ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பே இல்லாமல் செய்துவிட்டால் தொல்லையில்லையல்லவா.

முல்லையில் குடியேற்றம்

 mulathivu  பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34) mulathivuஅது தவிர முல்லைதீவு கடல் வளம். வனவளம். வயல் வளம் உள்ள பூமி.

மிகப்பிரதானமாக வடக்கையும் கிழக்கையும் இணைத்து நிற்கும் இதயம் போன்ற பகுதி.

அதனால் முல்லைதீவை சுருட்டிக்கொள்ளக் கூடிய குடியேற்ற திட்டங்களை ஜே.ஆர்.அரசு முடுக்கிவிட்டிருந்தது.

1984இல் சிங்கள-தமிழ் மீனவர்கள் மத்தியில் முல்லைத்தீவில் பிரச்சனைகள் ஏற்பட்டன.

தமிழ் மீனவர்களின் வலைகளும் வள்ளங்களும் சிங்கள மீனவர்களால் அழிக்கப்பட்டன.

படையினரின் ஆசீர்வாதத்தோடு தான் அவை நடைபெற்றன.

முல்லைத்தீவு இராணுவ முகாம்தான் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட்டது.

முல்லைத்தீவில் நடந்த மின்னல் தாக்குதல்.

நிலக்கண்ணிகள்

1984 செப்டம்பர் 10 ஆம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது செம்மலைக்கிராமம்

அங்கு புலிகளின் தாக்குதல் பிரிவொன்று அதிரடித் தாக்குதலுக்கு தயாரானது.

அந்த பிரிவில் 16பேர் இருந்தார்கள்.

முல்லைதீவிலிருந்து செம்மலைக்கு ஊடாக செல்வதுதான் முல்லைதீவு கொக்கிளாய் பிரதான பாதை.

பிரதான பாதையில் புலிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துவிட்டுக் காத்திருந்ததததனர்.

நேரம். காலை 10-15 மணி.

ஒரு டிரக் வண்டி, இரண்டு ஜீப் வண்டிகள் சகிதம் இராணுவ அணி பிரதான பாதையில் வரத்தொடங்கியது.

நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தது ஜீப் வண்டி.

நிலக்கண்ணி வெடிக்கவில்லை.

ஜீப் தப்பிவிட்டது.

இரண்டாவது ஜீப்வண்டியும் அந்த இடத்தை கடந்து கொண்டிருந்த போது நிலக்கண்ணி வெடித்தது.

இரண்டாவது ஜீப் வண்டி சிதறியது.

ஜீப் வண்டி சிதறிய சத்தத்திலிருந்து முன்னால் சென்ற ஜீப்பில் இருந்தவர்களுக்கு விசியம் புரிந்து விட்டது.

அந்த ஜீப் வண்டி வேகமாக சென்று மறைந்துவிட்டது.

பின்னால் வந்த டிரக் வண்டி சாரதி வண்டியை நிறுத்திவிட்டார்.

அதிலிருந்து குதித்த இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.

மோதல் தொடர்ந்தது. நான்கு இராணுவத்தினர் பலியானார்கள். புலிகள் தரப்பில் இழப்பு எதுவுமில்லை.

முல்லைதீவு இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் விரைந்து வருவதற்கிடையில் புலிகள் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றனர்.

eelam-mathiya  பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34) eelam mathiya
இத்தாக்குதல் நடவடிக்கைக்கு மாத்தையாவே பொறுப்பாக இருந்தார்.

தாக்குதல் நடைபெற்ற பின்னர் முல்லைதீவில் குடியேறியிருந்த சிங்கள மீனவ குடும்பங்கள் பல தமது சொந்த ஊருக்குத் திரும்பி சென்றனர்.

மீண்டும் ஒரு முயற்சி

1984 இல் ஈ.பி.ஆர்.எல்.எப் நடத்திய தாக்குதல்களில் ஒன்று கிளிநெச்சி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல்.

ரெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கியிருந்தமையால், நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டோமே என்று ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் விடுதலைப்படையின் யாழ். உறுப்பினர்களுக்கு வருத்தம்.

காரைநகர் கடற்படை முகாம் மீது தனது பொறுப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது தாக்குதல் தோல்வியில் முடிந்தமையால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு கவலை.

கிளிநொச்சியில்  ஒரு சறுக்கல்

அதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை தாக்கி அழிப்பது என்று திட்டமிட்டார்கள்.

தகவல்கள் திரட்டப்பட்டன. கவசவாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

கவச வாகனத்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தபடி பொலிஸ் நிலையத்துக்குள் முதலாவது அணி பிரவேசிக்கவேண்டும.

அதன் பின்னர் ஏனைய தாக்குதல் பிரிவுகள் செல்லவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. திட்டம் சரி.

தாக்குதல் நடத்த அணிகள் விரைந்தன.கவச வாகனம் உள்ளே செல்ல முடியவில்லை.

பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் உளவு இயயந்திரம் ஒன்று குறுக்கே நிறுத்தப்பட்டிருந்தது.

அதனால் தான் கவச வாகனம் உள்ளளே செல்ல வழியின்றி போனது. பொலிசார் உஷாராகி துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.

இதேவேளை பொலிஸ் நிலையம் மீது போராளிகள் மோட்டார் ஷெல் தாக்குதலும் நடத்தினர்.

மோட்டார் ஷெல்கள் நிலைய வளாகத்துக்குள் இருந்த மரங்களிலும், கிளைகளிலும் பட்டு குறிதவறி விழுந்து வெடித்தன.

தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்புமாறு கூறிவிட்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்கு 1984.ல் இரண்டாவது பெரிய தோல்வி அது.

சுவையான சிக்கல்

இத்தாக்குதல் தொடர்பாக எழுந்த ஒரு சுவையான சிக்கல்.

கிளிநொசிசியில் தாக்குதல் நடந்த செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்துக்கு எட்டிவிட்டது.

சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) எனும் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இலங்கையில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் வெளியுலகுக்கு தெரிவிப்பதில் அது முக்கிய பங்காற்றியது.

அதற்கு பொறுப்பாக இருந்தவர் மித்திரன் (தற்போது விலகி வெளிநாட்டில் இருக்கிறார்)

அந்த நிறுவனத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட செய்தி ஏடு “ஈழச் செய்தி”.

மாதாந்தம் பத்தாயிரம் பிரதிகள்வரை அப்போது தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பொறுப்பாளராக இருந்தவர் ரமேஷ்.

தமிழ் நாட்டிலிருந்து இலங்கை செய்திகளை வெளியிட்டு வந்த இன்னொரு நிறுவனம் தமிழ் தகவல் தொடர்பு மையம்.

இதன் முக்கியஸ்தராக இருந்து கஸ்ரப்பட்டவர் எஸ்.டி.சிவநாயம். மற்றவர் மகேஸ்வரி வேலாயும்.

எந்த இயக்கச் சார்பும் இல்லாமல் ஓரளவு சுதந்திரமாக இயங்கியது தமிழ் தகவல் தொடர்பு மையம்(TIC)

சிறு சந்தேகம்

கிளிநொச்சி பொலிஸ் நிலைய தாக்குதல் செய்தியை ஈழமக்கள் தகவல் தொடாபு நிலையம் உடனடியாக சகல இந்திய பத்திரிகைகள், மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டது.

இச் செய்தி அப்போது சென்னையில் இருந்த ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்துக்கும் கிடைத்துவிட்டது.

உடனடியாக அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபாவோடு தொடர்பு கொண்டார்.

“கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை நாம் தாக்குவதாக இருந்தது. நான் அனுமதியும் கொடுத்திருந்தேன்.

நீங்கள் தாக்கியதாக செய்தி கொடுத்துள்ளீர்கள்.

எதற்கும் ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நானும் எனது ஆட்களுடன் தொடர்பு கொண்டு எனது ஆட்களிடம் கேட்கிறேன்” என்று சொன்னார் சிறீ.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப் குழப்பம்.

ரெலோ தாக்கியிருந்தால் பெரிய அவமானம்.

செய்தி கொடுத்தாகிவிட்டதல்லவா.

மறுநாள் யாழ்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் தாக்குதல் நடத்திய செய்தி சென்னைக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர்தான் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப் பிற்கு நிம்மதி.

சிறியும் யாழ்பாணத்தில் இருந்து உண்மையை அறிந்து கொண்டார்.

அந்த செய்தி மட்டும் தவறாக அமைந்திருந்தால் ஈழ மக்கள் தகவல் தொடர்பு நிலையம் (EPIC) அதன் பின்னர் மூடப்பட்டிருக்க வேண்டியதுதான்.

iyakam  பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34) iyakam
மீண்டும் பhலஸ்த்தீனத்தில்

பாலஸ்தீனப் போராளிகளிடம் தமிழ் இயக்கப் போராளிகள் பயிற்சி பெற்றது குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

1984 இன் இறுதியில் மீண்டும் தமிழ் போராளிகள் பலஸ்தீனப் பயிற்சிக்கு சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும்,புளொட் அமைப்பும் தனித்தனியே பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியோடு (PFLF) தொடர்பு கொண்டன.

இரண்டு அமைப்புகளுக்கும் தனித்தனியே பயிற்சி வழங்க பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக சென்ற குழுவை டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றார்.

(ஏற்கனவே அவர் லெபனான் பயிற்சி பெற்றிருந்தவர்)

பயறி்சிக்கு சென்ற குழுவில் பெண்களும் இருந்தனர்.

குழுவுக்கு தயாபரன் பொறுப்பாக இருந்தார்.

புளொ்ட் அமைப்பின் சார்பில் சென்ற குழுவில் மானிக்க தாசன், ஜான்மாஸ்ரர் மென்டிஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

பெண்கள் யாரும் குழுவில் இருக்கவில்லை

புளொட் சார்பில் சென்றவர்கள் பாலஸ்தீன போராளிகளோடு சேர்ந்து இஸ்ரேலியர்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.

ஜான் மாஸ்டர் இஸ்ரேலிய டாங்கி ஒன்றை ஆர்.பி.ஜி ரக ஆயுதத்தால் தாக்கி சிதறடித்தார் என்று அப்போது கூறப்பட்டது.

ஜான் மாஸ்டர்தான் பின்னர் புளொட்டிலிருந்து வெளியேறி “தீப்பொறி” என்ற பெயரில் இயங்கிய குழுவில் முக்கியமானவராக இருந்தார்.

இந்த நேரத்தில் இந்திய பத்திரிகையாளர் அனிதாப் பிரதாப் எனும் பெண்மணி எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.

கல்கியில் அனிதா

வெளியுலகம் முன்பு ஜே.ஆர்.அரசு எப்படி கணிக்கப்பட்டது அது சான்று.

5.8.84 அன்று தமிழக சஞ்சிகை கல்கி அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இலங்கையில் ஒரு நடிகர் திலகம் என்பதுதான் அந்த தலைப்பு.

“சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரலாம், அரசியல் வாதிகள் சினிமா எடுக்கலாம். ஆனால் சினிமாத்துறையுடன் சம்மந்தப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதும், அவர் ரெம்ப நன்றாக நாடகமாடத் தெரிந்தவராய் இருப்பதும் சிறிலங்காவில் மட்டுமே நடக்கிறது.

ஆமாம்! ஜெயவர்தனா போன்ற சிறந்த நடிகர் வேறு யாராவது உண்டா என்பது சந்தேகமே!

அவரது நடிப்புத் திறமைக்கு ஆஸ்கார் அவார்டே தரலாம்.

jejar jejavarthana  பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34) jejar jejavarthana
ஜெயவர்த்தனா

நான் போயிருந்த சமயத்தில் ஜயவர்தனாவின் உறவுக்காரப்பிள்ளை –பெயர் பிலிப் உபாலி வியாபார விஷயமாய் கிழ்கிந்திய நாடுகளுக்கு போய்விட்டு திரும்பும்போது, பாதி வழியில் விமானமே காணாமல் போய்விட்டது.

ஜெயவர்த்தனா நிலைகுழைந்து போயிருந்தார்.

இலங்கையில் ஒரே பரபரப்பு.

காணாமல் போன விமானத்தை தேடும் முயற்சி தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது.

(உபாலியை பற்றி : இலங்கையின் மிகப்பெரிய பணக்காரன். அவரை தன் வாரிசாக உருவாக்கிக் கொண்டிருந்தார் ஜெயவர்த்தனா. நான் இந்தியா வந்த பிறகு அந்த விமானத்தின் சில பகுதிகள் மலாக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன்.)

ஈழத் தமிழர் பிரச்சனையில் “ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒன்றும் நான்  செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்” என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.

ஏதோ சில காரணங்களால் அப்படி நடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜெயவர்த்தனாவை சுருக்கமாக விமர்சிக்க வேண்டுமெனில், தந்திரத்தில் நரி.நழுவுவதில் விலாங்கு மீன்”

இதுதான் அனிதாப் என்ற நிருபரின் படப்பிடிப்பு.

index  பயிற்சிக்காக பாலஸ்தீனம் சென்ற  போராளிகள்:  துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி -34) index3
உபாலி மர்மம்

அனிதாவின் கட்டுரையின் இடையில் கூறப்பட்டுள்ள உபாலியின் விடயம் தொடர்பான மர்மம் 84முதல் இன்றுவரை நீடிக்கிறது.

ஜே.ஆர்.உபாலியை தனது வாரிசாக நியமிக்கப் பார்த்தார். ஜனாதிபதி ஜயவர்தனவின் மைத்துனரே உபாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பிரேமதாசாதான் உபாலியின் மறைவிக்கு திட்டமிட்டார் என்று அப்போது எழுந்த பேச்சும் இதுவரை அப்படியே இருக்கிறது.

மட்டக்களப்பில்

மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள களவாஞ்சிக்குடி. அங்குள்ள பொலிஸ் நிலையத்தை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனா.

தாக்குதலுக்கு புலிகள் தயாராகி கொண்டிருந்த தகவல் பொலிசாருக்கு கிடைத்துவிட்டது.

தாக்குதல் எந்தத் திகதியில் எத்தணை மணிக்கு நடத்தப்படும் என்பதையும் பொலிசார் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்தார்கள்.

செப்டம்பர் 22.1984 புலிகள் வாகனமொன்றில் புறப்பட்டார்கள். பொலிசார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா காந்தி மரணம்…...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்; அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -35

இந்திரா காந்தி மரணம்…ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்: அல்பிரட் துரையப்பா  முதல் காமினிவரை -35
 

மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு விரைந்த கொண்டிருந்த புலிகள் அணிக்கு தலைமை தாங்கியவர் இரா.பரமதேவா.

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதப்போருக்கு அணிதிரண்ட இளைஞர்களில் முதலிடம் வகிப்பவர்களில் முக்கியமான இடம் இரா.பரமதேவா உண்டு.

இரா.பரமதேவா பற்றி சுருக்கமாக சில விபரங்களை சொல்லி விட்டு தாக்குதலுக்கு செல்லலாம்.

1975 – அக்கால கட்டத்தில் இலங்கையின் சுதந்திர தினம் என்றாலும் சரி, குடியரசு தினம் என்றாலும் சரி தமிழர் விடுதலைக் கூட்டணி தீ உமிழும் வார்த்தைகளோடு போராட்டங்களை அறிவிக்கும்.

1975 மே மாதம் 22 ஆம் திகதி இலங்கையின் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கமான அகிம்சை வழி எதிர்ப்பை தெரிவித்தது கூட்டணி.

பாடசாலை பகிஷ்கரிபு்பும் அதில் ஒரு அங்கம்.

paramatheva  இந்திரா காந்தி மரணம்...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்: அல்பிரட் துரையப்பா  முதல் காமினிவரை -35 paramathevaஅப்போது பரமதேவாவும் ஒரு மாணவன்.

பகிஷ்கரிப்பு போராட்டத்தின் முன் வரிசையில் நின்ற பரமதேவாவை பாடசாலையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.

கல்வி கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன் கருவி ஏந்திப் போராடும் களத்துக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினான்.

1977ம் ஆண்டு மட்டு நகரில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பரமதேவாவை தேடியது பொலிஸ்.

அத்தோடு வீட்டிலிருந்தும் அவன் வெளியேறினான். தலைமறைவு வாழ்க்கை.

“நாகபடை” என்று ஒரு அமைப்பை உருவாக்கினான். கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை திரட்டிச் சேர்த்தான்.

இயக்கத் தேவைகளுக்கு நிதி தேவை. 1978 இல் செங்கலடி மக்கள் வங்கி பணத்தை “நாகபடை”பறித்தெடுத்தது.

துரத்தி வந்த பொலிசார் “நாகபடை”யினரை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவரும் பரமதேவாவும் வீதியில் கட்டிப் புரண்டு மோதினார்கள்.

பரமதேவாவின் கையின் மேற்பாகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

பொலிஸார் பரமதேவாவை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை நடந்தது. 1981இல் பரமதேவாவுக்கு எட்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்டகால சிறை

1978 முதல் 1983 வரை பரமதேவாவுக்கு சிறை வாழ்க்கை. தமிழ் போராளிகளில் நீண்டகாலம் சிறையில் இருந்தவன் பரமதேவர் என்றுதான் நினைக்கிறேன்.

1983 யூலையில் வெளிக்கடை சிறைப் படுகொலையின் பின்னர் “மகர” சிறையில் இருந்த பரமதேவாவும் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டான்.

1983 செப்டம்பர் 28ம் திகதி முதலாவது மட்டக்களப்பு சிறையுடைப்பின் போது தப்பி வந்த பரமதேவர் புலிகள் அமைப்போடு இணைந்துகொண்டான்.

1984 ஆகஸ்ட் 5ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் புலிகளால் தாக்கப்பட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

அத்தாக்குதலில் பிரதான பங்குவகித்தவர் பரமதேவா. அந்த நேரத்தில்தான் கிழக்கிலும் ஒரு பொலிஸ் நிலையத்தை தாக்கவேண்டும் என்ற சிந்தனை பரமதேவாவுக்கு ஏற்பட்டது.

1984 செப்டம்பர் 10 திகதி கொக்கிளாயில் இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலிலும் பரமதேவா பங்கு கொண்டிருந்தான்.

அத்தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்பு சென்று, களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு பரமதேவா ஆயுத்தம் செய்தான்.

தயார் நிலையில் பொலிசார்

இனி களவாஞ்சிக் குடித்தாக்குதலுக்கு செல்லலாம்.

தாக்குதல் பிரிவை சேர்ந்தவர்கள் பொலிஸ நிலையம் முன்பாக வேனை நிறுத்திவிட்டு குதிப்பதற்கு இடையில்.

முன் கூட்டியே தகவலறிந்து தயாராக இருந்த பொலிசாரின் இயந்திர துப்பாக்கிகள் முழங்கத்தொடங்கின.

புலிகளும் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர்.

மோதல் மூண்டுவிட்டது.

முன்னரே பாதுகாப்பான இடங்களில் பொலிசார் தற்காப்பு நிலை எடுத்துக்கொண்டதால் புலிகளைவிட பொலிசாருக்குதான் நிலமை சாதகமாக இருந்தது.

ஒரு குண்டு பரமதேவாவின் மார்பில் பாய்ந்தது.

அப்படியே சரிந்தான் பரமதேவா.

ரவி என்றழைக்கப்படும் இன்னொரு புலி உறுப்பினரும் வீழ்த்தப்பட்டார்.

பொலிசாரின் கை மேலோங்கியதை உணர்ந்துகொண்ட புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பிவிட்டார்கள்.

இது கிழக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட முதலாவது பெரிய தோல்வி.

பரமதேவாவின் மரணம் புலிகளுக்கு பேரிழப்பு.

பரமதேவாவின் சகோதரர் இரா-வாசு தேவா.

புளொட் அமைப்பில் அரசியல் துறை செயளாளராக இருந்த வாசுதேவா புலிகளால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

28dc077070799f605cd9ddde097a690d_m  இந்திரா காந்தி மரணம்...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்: அல்பிரட் துரையப்பா  முதல் காமினிவரை -35 28dc077070799f605cd9ddde097a690d m
அன்னையின் மரணம்

1984 அக்டோபர் 31.

புதுடெல்லி இந்தியாவின் தலைநகரம்

இனிதாய் மலர்ந்த ஒரு காலைப் பொழுது ஒரு கொடிய சம்பவத்தால் சோகமானது.

வேட்டுச்சத்தங்கள் –அந்தோ!!

பாரத நாட்டின் தவப் புதல்வியை அவரது பாதுகாவலர்களில் ஒருவரே சுட்டுக்கொலை செய்துவிட்டார்.

இந்தியாவே ஸ்தம்பித்தது. அகில உலகமும் அதிர்ந்து போனது.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் விழிகளில் கண்ணீர் அருவி.

செய்தியறிந்த மறுநிமிடமே கறுப்பு-வெள்ளைக் கொடிகள் வடக்கிலும்-கிழக்கிலும் மலையகத்திலும் துக்கம் அறிவித்துக்கொண்டிருந்தன.

இந்தியா என்றால் இந்திரா என்று சொல்லப்படுமளவுக்கு சாதனைகள் படைத்த பெண் பிரதமர்.

1983 யூலையில் கலவரத்தீயில் தமிழர்கள் எரிந்துகொண்டிருந்த போது இந்திராவின் கண்டணம் தமிழ் மக்களின் கண்டனம் தமிழ் மக்கள் இதயங்களை வருடிக்கொடுத்ததை எப்படி மறக்கலாம்?

மரணம் அவரை அணைத்த செய்தி கேட்டபோது தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து போனதாகவே இலங்கை தமிழ் மக்கள் சோகம் சுமந்தனர்.

அன்னை இந்திரா கொல்லப்பட்டபோது ஈழப்போராளி அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் தமிழ் நாட்டில்தான் தங்கியிருந்தார்கள்.

கொலைக்கு கண்டனம் போராளி அமைப்புகளின் தலைவர்கள் உடனே அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

அன்னை இந்திராவின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார்.

அன்னையின் மைந்தனும் அவரைப்போலவே எங்கள் பிரச்சனையில் அனுதாபம் உள்ளவராக இருப்பாரா? இலங்கைத் தமிழ் மக்களின் கேள்வி அதுதான்.

pirapa  இந்திரா காந்தி மரணம்...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்: அல்பிரட் துரையப்பா  முதல் காமினிவரை -35 pirapaபிரபாவின் கடிதம்.

ஈழப்போராளி அமைப்புகளின் தலைவர்கள் புதிய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்தனர்.

அந்த வாழ்த்துச் செய்திகளில் ஒன்று பிரபாகரனிடமிருந்தும் சென்றது.

இந்திராவைக் கொன்றவர்கள் கொடியவர்கள் என்று கூறியிருந்த பிரபாகரனின் கடிதத்தின் இறுதியில் பின்வரும் வாசகங்களும் இருந்தன..

” எந்த உன்னத இலச்சியங்களுக்காக அன்னை இந்திராகாந்தி வாழ்ந்து போராடி இறந்தாரோ

அந்த இலச்சியங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள் என்றே நாம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

நீங்கள் வெற்றி பெற எமது வாழ்த்துகள்.”

இந்திரா காந்தி  பற்றி பிரபா கூறியதில் மிக முக்கியமான கருத்து இது.

“தமிழ் மக்களின் பெரும் காவலராக திகழ்ந்த அன்னை இந்திராவின் தனிப்பட்ட அக்கறை இல்லாது போயிருந்தால் எமது தேசமே அழிந்து போயிருக்கும்.

தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆத்மீக வலிமையின் கோபுரமாக அவர் திகழ்ந்தார். என்று கூறியிருந்தார் பிரபாகரன்.

மதகுருமார் முயற்சி

மதகுருமார் தூதுக்குழுக்கள் சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக தற்போதும் செய்திகள் வந்துகொண்டிருந்தன.

1984 அக்டோபர் மாதத்தில்தான் மதகுருமார் குழுவொன்று முதன் முதலாக போராளி அமைப்புகளை சந்திக்கப்போவதாக அறிவித்தது.

அறிவித்தது மட்டுமல்ல போராளி அமைப்பின் தலைவாகளை சந்திப்பதற்காக தமிழ் நாட்டுக்கும் சென்றது.

ஆனால எந்தவொரு போராளி அமைப்பும் மதகுருமார் தூதுக்குழுவை சந்திக்க வரவில்லை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏதோவொரு தந்திரத்தோடு பௌத்த மதகுருமார்களை அனுப்பிவைக்கிறார் என்றே இயக்கங்கள் நினைத்தன.

ஈரோஸ்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புகள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தன.

“மத தலைவாகள் தூதுக்குழுவோடு பேச்சு நடத்த மாட்டோம். இவர்கள் வந்து பேச்சு நடத்துவதால் அரசியல் தீர்வும் ஏற்படபோவதில்லை” என்று மூன்று அமைப்புகளும் தெரிவித்திருந்தன.

ராகுல தேரோவின் அழைப்பு

இதேவேளை பௌத்த மத தலைவர்களில் ஒருவரான ராகுலதேரோவால் தமிழ் போராளிகளுக்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

“போராளிகள் சமாதான பேசு்சுக்கு வரவேண்டும். வன்செயல்களை நிறுத்தி விட்டு”

என்பதுதான் ராகுலதேரோவின் அழைப்பு.

அழைப்பு விடுத்த ராகுல தேரோ குறித்து போராளிகள் நன்கு அறிவர்.

ஐக்கிய தேசியக்கட்சியில் இனவாதத்துக்கு பெயர்போன அமைச்சராக இருந்தவர் சிறில் மத்தியூ.

“ஹௌத ஹொட்டியா? (யார் இந்த புலிகள்) என்ற நூலை எழுதியதோடு “சிங்கப்படை” என்ற அமைப்பை உருவாக்கியவர் சிறில் மத்தியூ.

சிறில் மத்தியூவின் வலதுகரமாக இருந்தவர் ராகுல தேரோ.

ராகுல தேரோவின் அழைப்பை அடுத்து புலிகள் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். ராகுல தேரோவின் அழைப்புக்கு பதிலாக அது அமைந்தது.

அதிலிருந்த பிரதான வாசகங்கள் இவைதான்.

“தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு நீங்கள் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.

சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக எம்மை சமாதான பேச்சுக்கு அழைத்திருக்கிறீர்கள்.

இந்த அழைப்பின் ஒரு முன் நிபந்தனையாக வன்முறை செயல்களை நிறுத்தி, சட்டமீறல்களை நிறுத்தி சமரசம் பேசுவோம் வாருங்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.

உங்களது இந்த அழைப்பு வேடிக்கையாக இருக்கிறது.

நாம் வன்முறையானவர்கள் அல்லர். அஜராகவாதிகளும் அல்லர். நாம் அடிமையாக வாழ விரும்பவில்லை.

நாம் சுதந்திரமாக நிம்மதியாக வாழ விரும்புகின்றோம். எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆயுத பலாத்கார அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ளவே நாம் ஆயுதம் தரித்திருக்கிறோம்.

பௌத்தத்தின் சார்பில், தர்மத்தின் சார்பில் சமாதானத்தை நீங்கள் விரும்புவதாயின் வன்முறைவாதிகளான உங்கள் ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

அதர்மமான அடக்குமுறை நீங்கி எமது மக்கள் சுதந்திரமான வாழ்வை தழுவிக்கொள்ளும்வரை நாம் ஆயுதங்களை கைவிடப்போவதில்லை.

அடிமைத்தளைகள் அகன்ற சுதந்திரமான, சமாதானமான நிம்மதியான வாழ்வை இலச்சியமாக கொண்டே நாம் ஆயுதப்போரை வரித்துக்கொண்டோம.

நாம் சமாதானத்தை விரும்புகிறோம.

சமாதானத்தை உங்களிடம் இரந்து கேட்டு ஏமாந்து போவதைவிட போராடி பெறுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்” புலிகள் ராகுலோதேரோவுக்கு கொடுத்த பதில்.

குடியேற்றம் மீது தாக்குதல்

இதற்கிடையே புலிகள் நடத்திய ஒரு தாக்குதல் பெரும் சர்சைகளையும், விமர்சனங்களையும் கிளப்பியிருந்தது.

முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் அரசாங்கத்தால் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன.

மீனவ குடும்பங்களே அவ்வாறு குடியேற்றப்பட்டிருந்தனர். குடியிருப்புகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

குடியேறியிருந்த குடும்பங்களில் 54பேர்வரை புலிகளின் தாக்குதலினால் பலியானார்கள்.

இத்தாக்குதல் மாத்தையாவின் தலைமையில் நடத்தப்பட்டது.

சிங்கள குடியேயற்றம் மீது வேறு தமிழ் இயக்கம் எதுவும் அதற்கு முன்னர் இவ்வாறான பாரிய தாக்குதல் எதனையும் நடத்தியிருக்கவில்லை.

சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்துவது முறையல்ல என்று பலத்த கண்டனங்கள் எழுந்தன.

இவ்வாறு கண்டனங்கள் எழும் என்று முன் கூட்டியே உணர்ந்திருந்தத புலிகள் அத்தாக்குதலுக்கு உரிமை கோராமல் இருந்து விட்டார்கள்.

இத்தாக்குதலை அடுத்து அரசு வடபகுதி கடலில் கண்காணிப்பு .வலயம் ஏற்படுத்தியது.

மன்னார் முதல் முல்லைதீவு வரையுள்ள கரையோரப் பகுதிகளை மனித நடமாட்டம் இல்லாத சூன்னிய பிரதேசமாக மாற்றியது.

இதனால் அப்பகுதிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் மீனவ குடும்பங்கள் அகதிகளா வேண்டிய நிலை ஏற்பட்டது.

1984 இல் யாழ்பாணத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் அரசுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.

அது அடுத்த வாரம்

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36

புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36
 

இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு.

இராணுவ ரீதியில் அவரதுசெயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாக இருந்தமையால் பிரபலமானவராக அறியப்பட்டார்.

sri-lanka-army4  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 sri lanka army4கவச வாகனங்கள்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் தமது கவச வண்டிகள் சகிதம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. உண்மையில் அக்காலகட்டத்தில் கவச வாகனங்களைப் பயன்படுத்தி மோதல் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை.

இராணுவம் குறித்து பயம் கலந்த பிரமையை ஏற்படுத்துவதற்காகவே கவச வாகனங்கள் சகிதம் ரோந்துகள் நடைபெறுவதுண்டு.

அப்போதெல்லாம் புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புக்களும் கெரில்லாத் தாக்குதல்கள் நடத்தக்கூடிய பலத்தில் மட்டுமே இருந்தனர்.

இயக்கங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் முகாம்கள் காவலரண்கள் என்பவற்றை நிறுவி செயற்படவும் ஆரம்பிக்கவில்லை. நேரடி மோதல்களிலும் பெரிதாக ஈடுபடும் பலம் இருக்கவில்லை.

கெரில்லா தாக்குதல் நடத்திகிறவர்கள் மீது கவச வாகன தாக்குதல்கள் நடத்துவது பெரிய பயனை ஏற்படுத்தாது.

முக்கியமாக டாங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆடுகள் சிக்கின

உதாரணத்திற்காக ஒரு சம்பவம் கூறுகிறேன்.

1983 மார்ச் 4ம் திகதி பரந்தனுக்கருகே உமையாள்புரத்தில் புலிகள் ஒரு தாக்குதல் நடத்தியது பற்றி முன்னரே கூறியிருந்தேன்.

இத் தாக்குதலுக்காக நிலகண்ணி வெடிகளை புதைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.

கண்ணிவெடிகளைக் கையாள்வதில் பூரண தேர்ச்சி பெறாத காலகட்டம் அது.

கண்ணிவெடிகளை புதைத்திருந்த இடத்திற்கு அருகே இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

வாகன இரச்சலுக்குப் பயந்து ஆட்டுக்குட்டிகள் மிரண்டு   ஓடத்தொடங்கின.  ஓடிய ஆடுகள் கண்ணிவெடிகளை மிதித்தபோது அவை வெடித்து விட்டன.

எதிர்பாராத இச்சம்பவத்தால் புலிகளில் பத்துப்பேர் கொண்ட குழு திகைத்தபோது இராணும் கவச வாகன்கள் துப்பாக்கி ரவைகளை பொழிந்தன.

images  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 imagesவீதிக்கு அருகே தண்டவாளம். அதன் இரு புறமும் வெட்டை வெளி. கிட்டுவின் கையில் ஜி.3.ரகத்துப்பாக்கி இருந்த்து.

கவச வாகனத்தை நோக்கி கிட்டு சுடத்தொடங்கினார். சாரதி காயமடைந்து போக கவச வாகனம் சரிந்து கவிழ்த்து.

இதன் பின்னரே கிட்டுவை இயக்கத்தின் தாக்குல் பிரிவின் இரண்டாவது பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்திருந்தார்.

இனி 84 இல் நடந்த தாக்குதலுக்கு செல்லுவோம்.

குறியில் கேணல்
கேணல் ஆரியப் பெருமவும் இரண்டு கவச வாகனங்கள் சகிதம் ரோந்து சென்று கொண்டிருந்தார். கவச வாகனங்களுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த ஜீப்பொன்றில் அவர் அமர்ந்திருந்தார்.

கட்டுவன்   தெல்லிப்பளை வீதியில் நிலக்கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டு புலிகள் காத்திருந்தனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்வண்டி நிலக்கண்ணியில் சிக்கியது.  பின்னால் வந்த கவச வாகனங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

கேணல் ஆரியப் பெரும உட்பட எட்டு இராணுவத்தினர் அந்த நிலகண்ணி வெடித்தாக்குதலில் பலியானார்கள்.

pandithar  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 panditharகப்பரன் பண்டிதர்,

பண்டிதர், கிட்டு ஆகியோரும் புலிகளின் தரப்பில் அத்தாக்குதலில் பங்கு கொண்டனர்.

யாழ் பிராந்தியத்திற்கு புலிகளின் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் பண்டிதர்.

கேணல் ஆரிய பெரும குழுவினர் மீது தாக்குதல் நடந்த்து 19.11.84 இல். தாக்குதலில் பலியான ஆரிய பெருமவுக்கு ஜே. ஆர்.ஜயவர்த்தனா பிரிகேடியர் பதவி வழங்கி கௌரவித்தார்.

தொடர் தாக்குதல்

இத் தாக்குதல் நடவடிக்கை வடக்கில் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் யாழ் குடா நாட்டில் இரண்டு நிலக்கண்ணி வெடித் தாக்குதல்கள் புலிகளால் நடத்தப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் உள்ள அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒரு நிலக்கண்ணிவெடித்  தாக்குதலில்  இராணுவக் கவச வண்டி ஒன்று நாசமானது.

ஒன்பது இராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டனர். மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர்.

2.11.84 அன்று தொண்டமானாறு பலாலி வீதியில் இராணுவ கவசவண்டி ஒன்று புலிகளின் கண்ணிவெடியில் சிக்கியது. இராணுவத்தினர் ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

இலங்கை நிலவரங்கள் தொடர்பாக வெளியுலகம் பொண்டிருந்த கருத்துக்கள் சிலவற்றை தெரியப்படுத்திவிட்டு மேலே தொடரலாம்.

“நீயூஸ் வீக் பார்வையில்” 

அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படும் ‘’நியூஸ் வீக்” சஞ்சிகை வெளியிட்ட விமர்சனத்தின் ஒரு பகுதி இது.

“கொல்லப்படும் தமிழர்களில் மிகச் சிலரைத்தவிர ஏனையோர் பயங்கர வாதிகளே” என்று அரசாங்கம் கூறுவதை சிங்கள மக்களில் பலர் கூட நம்ப மறுக்கின்றார்கள்.

இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தி வருகிறது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும், சிங்களவர்களும் தங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் விரைவாகத்  தீரும் என்னும்  நம்பிக்கையை இழந்து விட்டார்கள். {நியுஸ் வீக் 27.8.84}

ஐ.நா.வில் பேச்சு

இனப்பாதுகாப்பு தொடர்பாக ஆராய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு குழு இருக்கிறது, அக் குழுவின் செயற்குழு 21.8.84. அன்று ஜெனீவாவில் கூடியது.

இக்குழுவில் இந்தியாவின் உறுப்பினர் சி.எம்.சி.பண்டாரே.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார் பண்டாரே.

திரு.பண்டாரே அங்கு பேசியதில் முக்கியமான பகுதிகள் இவை-

” எனது கருத்துப்படி  தமிழர்களின் கோரிக்கைகளுக்கு  இணக்கமான அரசியல் தீர்வு  காணவேண்டும் என்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தவில்லை.

தமிழர்களுக்கு எதிரான வன்முறை  என்பது இலங்கை அரசின்  நேரடி நடவடிக்கையாகிவிட்டது.  இதற்கே அரசு  படைகளை பயன்படுத்துகிறது.

அரச பயங்கரவாதத்தை தார்மீக  ரீதியில் நியாயப்படுத்தவே முடியாது. சமாதான- சாத்வீக வழிகளில்  தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும். 

அத்தீாவு தமிழ் மக்களை   பாதுகாக்பதாகவும்,  மறுபடியும் பிரச்சனைகள்  ஏற்படுவதை தவிர்ப்பதாகவும் அமைய வேண்டும.” அது இந்திய பிரதிநிதியின் பேச்சு.

“பிளிட்ஸ்”  பாச்சல்

இந்தியாவின் பிரபலமான  முற்போக்கு பத்திரிகையான பிளிட்ஸ் (BLITZ) 18.08.84  எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி இது

“சாதாரணக் குடிமக்களுக்கு எதிராகத் தமிழர்வாழும் வட இலங்கையில் இராணுவமும் கடற்படையும் சேர்ந்து நடத்திய வன்செயல்களால் உயிரிழந்தவர்கள் பல நூற்றுக்கணக்கானோர்.

அதே சமயம் தமிழ் பகுதிகள் பல பேய்கள் நடமாடும் வெட்டவெளிக் காடுகள் ஆக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இராணுவ டாங்குகளும், கவச வண்டிகளும் கிராமங்களை தரைமட்டமாக்கி உள்ளன.

தனது சொந்தக் குடிமக்களையே சிறீலங்கா அரசு குண்டுவீசி அழித்துள்ளது.

பஞ்சாயில் இடம்பெற்ற பயங்கரவாதம் பிந்திரன்வாலே கூட்டத்தினால் பின்பற்றப்பட்டது. இலங்கையிலோ பயங்கரவாதத்தில் அரசாங்கமே ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு கடும் விமர்சனம் வெளியிட்டிருந்தது. ‘பிளிட்ஸ்’ பத்திரிகை. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் வில்லியம் கௌயர் எழுதிய குறிப்பில் படைகளது  நடவடிக்கைகள்  பழிவாங்கும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

அவரது குறிப்பிலிருந்து ஒரு பகுதி இது.

இவையெல்லாம் 1984 ஆகஸ்ட்  செப்டம்பர் மாத காலத்தில் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளையடுத்து எழுந்த விமர்சனங்களாகும்.

இரகசிய வானொலி

இக்கால கட்டத்தில் புளொட் அமைப்பினரால் இரகசிய வானொலிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து இயங்கிய அந்த வானொலிச் சேவையின் பெயர்“தமிழீழத்தின் குரல்”

சிங்களத்திலும் ‘தமிழீழத்தின் குரல்‘ ஒலிபரப்பப்பட்டது. சிங்கள மக்கள் பலர் அந்த ஒலிபரப்பைக் கேட்டு வந்தனர். தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசவும் பட்டது.

‘தமிழீழத்தின் குரல்’ ஒலிபரப்பைக் கேட்டு வந்தவர்களில் முக்கியமான ஒருவர் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசா.

இலங்யின் முதலாவது இரகசிய வானொலி சேவை அதுதான்.

இதன்பின்கர்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினரால் தமிழ் நாட்டிலிருந்து “ஈழவானொலி” சேவை ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது வடக்கில் புலிகளால் இரகசிய வானொலி ஒலிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. “புலிகளின் குரல்”  என்பது அதன் பெயர்.

voice-of-tigers  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 voice of tigers

பாதுகாப்பு நிதி

தேசிய பாதுகாப்பு நிதி திரட்டுவதில் அமைச்சர் அத்துலத்முதலி தீவிரமாயிருந்தார். இதனையடுத்து புலிகள் தாமும் தேசிய பாதுகாப்பு நிதி திரட்டப’போவதாக அறிவித்தனர்.

“தமிழீழ தேசியப் பாதுகாப்பு நிதி” என்று தமது நிதிதிரட்டலுக்கு பெயர் சூட்டிய புலிகள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் நிதிகோரி வோண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக பிரபாகரனால் பிரத்தியோக வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டது.

அந்த வேண்டுகோளில் பிரபா வெளியிட்ட சில கருத்துக்கள் முக்கியமானவை,

வடபுலப் போரில் இன்றுள்ள நிலவரத்தில் பிரபாவின் மனநிலை எப்படியிருக்கும் என்றும் ஊகிக்கவும் அந்தக் கருத்துக்களைத் தொிந்து கொள்ளலாம்.

அரசியல் தொடருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை போர்விமானம்…… வந்து மன்னிக்கவும் போர்விமானம் பற்றிய தகவல் வந்து ஆக்கிரமித்து விட்டது.

எனவே பிரபாவின் செய்தி அடுத்தவாரம்.

 

pukaraa  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 pukaraapukara  புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36 pukara

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய கிட்டு!!  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37

இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37
 

பிரபாவின் செய்தி

இலங்கை அரசு   தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன்.

அதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“தமிழீழ அரசியல் வராற்றில் என்றுமில்லாத ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தை  நாம் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறோம்.

pirapa  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 pirapa2கொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி எம்மீது திணிக்கப் பட்டிருக்கிறது. ஆயுத பலாத்காரத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை கொன்றுவிட அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது.

அடக்குமுறை எந்தளவிற்கு தீவிரமாகிறதோ அவ்வளவிற்கு மக்களிடம் புரட்சியுணர்வு  பிறக்கிறது விடுதலை வேட்கை எழுகிறது விழிக்புணர்வு தோன்றுகிறது.

எமது ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசு தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறது.

பொதுமக்கள் போராளிகளுக்கு எதிராக திருப்பிவிடலாமென்பதே அரசின் நோக்கம். இதனை நாம் நன்கறிவோம். அதேவேளை இந்தச் சிக்கலைத் தவிர்த்துக்  கொள்ள நாம் ஆயுதப் புரட்சிப் போரை ஒத்திப் போடுவது அசட்டுத்தனமாகும்.

இராணுவ அடக்குடுமுறையால் தமிழினத்தை ஒதுக்கிவிட முடியாது என்பதை உணர்த்த இராணுவத்தை சதா பயங்கொள்ளச் செய்து பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எமது போராட்டத்தில் நாம் தனித்து நிற்கவில்லை. தமிழக மக்களின் ஒன்று திரண்ட மாபெரும் சக்தி எமக்கு பக்கபலமாக இருக்கிறது.

அகில இந்திய மக்களின் அனுதாபமும் எமது பக்கமே இருக்கும். எனினும் எமது விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராடியாக வேண்டும்.

என்பதுதான் பிரபாவின் செய்தி தற்போதைய நிலவரத்தோடு பிரபாவின் மனப்போக்கைப் புரிநடது கொள்ளவும் மேற்கண்ட செய்தி உதவுமல்லவா.

pooralikal2813629  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 pooralikal2813629

சந்திரகாசன் அழைப்பு

தந்தை செல்வநாயகத்தின் மைந்தன் எஸ்.சந்திரகாசன் ரெலோ அமைப்போடு தொர்பாக இருந்தது பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

84 இறுதியில் என்று நினைக்கிறேன் திரு.சந்திரகாசன் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கு அவசர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.

இந்திய அரசு தொிவித்த முக்கியமான செய்தியொன்றை தொிவிக்க வேண்டியிருக்கிறது. எனவே உடனடியாகத் தன்னை சந்திக்குமாறு அவர் செய்தியனுப்பினார்.

ரெலோ, ஈ.பழ.ஆர்.எல்.எஃப்ஈ, ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டமைப்பாகசெயற்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

அந்த மூன்று அமைப்புக்களுக்குமே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

சந்திரகாசன் என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துவர மூன்று அமைப்புக்களது பிரதிநிதிகளும் சென்னையில் உள்ள சந்திரகாசன் அலுவலகத்திற்குச் சென்றனர்.

ரெலோ சார்பாக சிறீ சபாரத்னம், மதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக பத்மநாபா, ரமேஷ் ஈரோஸ் சார்பாக பாலகுமார், முகிலன் ஆகியோர் அச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தி அரசு ஒரு திட்டத்தை தயாரித்திருக்கிறது என்றார் சந்திரகாசன்

“என்ன திட்டம்”?

இலங்கை படையினரைத் தோற்கடித்து தமிழீழத்தை உருவாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கும் வழங்கப்படும்.

தமிழீழம் உருவாகிய பின்னர் அதனை இந்திய அரசு அங்கீகரிக்கும். அத்தோடு தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கும்.

 chandrahasan  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 chandrahasanசந்திரகாசன்

என்று  சொன்ன சந்திரகாசன் மூன்று அமைப்புக்களது பிரதிநிகளிடம் கேட்டது இது.

“எவ்வளவு  ஆயுதங்கள் தேவை என்ற விபரத்தை என்னிடம் தொிவியுங்கள். நான் அதை அங்கு தொிவிக்கிறேன்.”

தமிழ் அமைப்புக்களது பிரதிநிதிகள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்ததுக் கொண்டார்கள்.

ரெலோ தலைவர் சிறீ சபாரத்னம் ஒரு கேள்வி எழுப்பினார்.

“நாமும் இந்திய அரசோடும் அதன் உளவு நிறுவனங்களோடும் தொர்புகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது உங்கள் மூலமாக இந’திய அரசு நம்மோடு எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?”

“அதுதானே” என்று சிறீயின் கருத்தை ஆமோதித்தனர் ஏனைய பிரதிநிதிகள்.

இறுதியாக சிறீ தெரிவித்தது இது.

“இந்திய அரசுக்கு ஏதாவது யோசனை இருந்தால் எம்மோடு நேரடியாக பேசுமாறு கூறுங்கள். இடையில் யாரும் தேவையில்லை”

அத்தோடு அந்த சந்திப்பு முடிவுற்றது.

இன்றுவரை புதிர்

சந்திரகாசனுக்கு அந்த யோசனை யார் தொிவித்தார்கள்? ஏன் தொிவித்தார்கள்? அல்லது தமிழ் அமைப்புக்களிடம் தனது செல்வாக்கை நிலைப்படுத்த அவராகவே அவிழ்த்துவிட்ட திட்டமா என்பது இன்றுவரை புதிர்தான்.

ஆனால் சந்திரகாசனுக்கு “றோ” எனப்படும் இந்திய ஆய்-பகுப்பாய்வுப் பிரி வோடு நல்ல தொடர்பு இருந்தது.

இலங்கை விவகாரத்தை “றோ” உளவு நிறுவனம் மூலமாகவே இந்திய அரசு கையாண்டது.றோவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன்.

உன்னிகிருஷ்ணனுக்கும் சந்திரகாசனுக்கும் நல்ல நெருக்கம். அந்த உன்னிகிருஷ்ணன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமொிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின்(சி.ஐ.ஏ )கையாளாக  ‘றோ’வில் இருந்து செயற்பட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் உன்னிகிருஷ்ணன்.

உன்னிகிருஷ்ணன் மூலமாக தமிழ் போராளிகள், போராளி அமைப்புக்கள் பற்றிய விபரங்கள் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு சென்றிருக்கலாம்.

சி.ஐ.ஏ.  மூலமாக அந்தத் தகவல்கள் யாவும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டது.

தூதர் வந்தார்

அமொிக்க அரசு ஜே.ஆர் அரசுக்கு சகல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டியே வந்தது.

10.12.1984 அன்று அமொிக்காவின் விசேஷ தூதுவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது பெயர் ஜெனரல் வோல்டர்ஸ். அப்போது அமொிக்க அதிபராக இருந்தவர் றீகன். அவரது தூதுவராகவே ஜெனரல் வோல்டர்ஸ் வந்திருந்தார்.

இவர் வந்த தினத்தன்றுதான் வடபகுதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 42 மணி நேர ஊரடங்கு முடிவடைந்தது.

42 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு வீடாக இராணுவ சோதனை இடம்பெற்றது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 300 பேர்வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் 100 பேர்வரை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளையில் கொழும்பிலும் மலையகத்திலும் தமிழர் விரோத உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.

மலையகத்தில் இரத்தினபுரியில் தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளும் , ஹட்டனில் இரு கடைகளும் எரிக்கப்பட்டன. பதுளையிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.  7.12.84 அன்று இச்சம்பவங்கள் நடந்தன.

 

சுவரொட்டிகள்

இதேவேளை கறுப்பு நில வர்ணங்களில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அச் சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகம் இது:

தமிழீழம் கோருபவர்கள் ராஜதுரோகிகள். துரோகிகள் யாவரும் திருமலையில் இருந்து துரத்தப்பட வேண்டும்.

சிங்களவர்கள் யாழ்நகரில் வேலைபார்க்க முடியாது என்றால் தமிழர்கள் எவ்வாறு திருக்கோணமலையில் வேலைபார்க்க முடியும்?

இச் சுவரொட்டிகள் திருமலைத் தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின.

அச்சத்தை நியாயப்படுத்தும் விதமாக திருமலை மாவட்டத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.

திரியாயிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு  வருமாறு கிராம மக்கள் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டனர்.

அப்போது ஊரடங்கு உத்தரவும் அமுலில் இருந்தது. விளையாட்டு மைதானதடதிற்குச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  நூறுபேர் படுகாயங்களோடு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொிய குளத்திலும் இது போல் ஒரு கோரச் சம்பவம் வீடுகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட தமிழர்களில் 20 பேர்வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

84 நவம்பர் மாதத்தில் திருகோணமலையில் ‘தென்னைமரவாடி’ என்னும் கிராமம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர்.

நடந்ததும் – செய்தியும்

வடக்கில் நடைபெற்ற கைதுகள் குறித்து ஜே.ஆர். அரசு வெளியிட்ட பொய்கள் கலப்படமில்லாதவை.

யாழ்ப்பாணம் கைதடியில் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தீடீரென்று அங்கு வந்த இராணுவத்தினர் மாணவர்களில் 200 பேரைக் கைது செய்து சென்றனர்.

இதனையடுத்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு பொய் சொன்னது:

“யாழ்பாணத்தில் பயங்கரவாதிகளின் மூன்றுமுகாங்களில் இருந்து துப்பாக்கிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவை கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.”

இதேவேளை தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தலலித் அத்துலத்முதலி ஒரு அறிவுப்புச் செய்திருந்தார்.

“பயங்கரவாதத்தை கைவிட்டு சரணடைய வேண்டும்” என்று தமிழ் போராளிகளை அவர் கோரியிருந்தார்.

Lalith_CI  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 Lalith CIலலித்  அத்துலத் முதலி

புலிகள் கடிதம்

இதனையடுத்து புலிகளால் லலித்  அத்துலத் முதலிக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அக கடிதத்தில் சில முக்கிய பகுதிகள் இவை:

“திரு.அத்துலத் முதலி அவர்களே: அப்பாவி மக்களுக்கு எதிராக இனவாத யுத்தம் நடத்துகிறீர்கள். கிட்லரையும் வெல்லக் கூடிய முறையில் இனக் கொலைக் கலையில் நீங்கள் மிக வல்லவராயிருக்கிறீர்கள்.

ஓரின மக்களின் வராலாற்றில் பக்கத்துக்கு பக்கம் இரத்தமும், கண்ணீரும் காணப்படுவதற்கான பழியையும், பாவத்தையும் சுமக்கப் போகிறீர்கள்.

நீங்கள் ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிடுவது  ஒடுக்கப்படும் மக்களின்  புரட்சிகர எதிர்ப்பேயன்றி வேறல்ல.

அரசு பயங்கரவாதம் பெற்றெடுத்த குழந்தையே தமிழீழத்தில் தோன்றியுள்ள ஆயுதப்போராட்டம்.  இதை உருவாக்கியவர்கள் நீங்களே.

இராணுவரீதியாக இதை நீங்கள் முறியடித்துவிட முடியாது. எமடமை ‘பயங்கரவாதிகள்’ என்பதால் தமிழர் பிரச்சனை தீரப்போவதில்லை.

உங்கள் இராணுவத் தீர்வு உங்களுக்கே அழிவை ஏற்படுத்தும்.

எங்களை நீங்கள் கண்டுகொள்ளவோ, அடையாளம் காணவோ முடியாது, ஏனெனில் நாம் எவ்விடத்திலும் இருக்கிறோ. இன்னும் சொல்லப்போனால் மக்களே நாம்தான்.

எவ்வளவு சக’தி வாய்ந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான போரில் அது வெற்றிவாகை  சூடியதில்லை.

எத்தகைய இன்னல்கள், இடர்பாடுகள் எதிர்ப்படினும் அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து எமது தமிழீழநாட்டை அமைத்தே தீருவோமம்.

இறுதியில் உலக மக்களின் மனச்சாட்சியில் நீங்கள் ஒரு குற்றவாளி ஆக்கப்படுவீர்கள்.

இராணுவ அணிக்குள் சிக்கிய புலிகளின் தளபதிகள்

athuraiyapa  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 athuraiyapaவழிமறிப்பு

84இல் இலங்கை இராணுவத்தினர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களை தேடி தீவிர வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இது:

மோட்டார் சைக்கிள் ஒன்றில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தனர்.

அதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் கிட்டு, அவர்தான் மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருநடதார். பின்னால் இருந்தது சென்றவரில் ஒருவர் ரஞ்சன்லாலா.

இருவருமே யாழ் மாவட்டத்தில் புலிகளது பிரதான தளபதிகள்.

யாழ்-பருத்தித்துறை வீதி வழியாக அச்சுவேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அச்சுவேலி பஸ் நிலையத்தை சென்றடைய முன்பாக வசாவிளான் வீதிச் சந்தி இருக்கிறது. அங்கு இராணுவத்தினர் நின்றனர் சோதனை நடவடிக்கையில்.

மோட்டார் சைக்கிள் இராணுவத்தினரால்மறிக்கப்பட்டது. கேள்விகள் தப்பிக்கொள்ளும் பதில்கள். கிட்டுவின் சட்டைப் பையில் சயனைட் குப்பி இருந்தது.

சயனைட் குப்பி இராணுவத்தினரின்கண்ணில் பட்டுவிட்டது.

அப்போது சயனைட் குப்பி பிரபலமாகாத காலம் எனவே “இது என்ன?” என்று கேட்டனர் இராணுவத்தினர்.

“தொய்வு நோய்க்குப் பயன்படுத்தும் மருந்து” என்று பதில் சொன்னார் கிட்டு. இராணுவத்தினருக்கு ஏதோ ஒரு சந்தேகம்.

மூவரில் ஒருவரை தமது ‘ட்றக்’ வண்டியில் ஏறுமாறு கூறினார்கள், மற்றைய இருவரையும் மோட்டார் சைக்கிளில் தமது வாகன அணிகளின் மத்தியில் வருமாறு கூறிலிட்டு புறப்பட்டனர்.

வீதியில் விபரீதம்

இராணுவ வாகன அணிக்கு மத்தியில் மோட்டார்சைக்கிளில் கிட்டுவும், ரஞ்சன்லாலாவும்.

அச்சுவேலி வசாவிளான் பாதையில் வாகன அணி சென்று கொண்டிருக்கிறது.

அந்த பாதையில் ‘மக்கோண’ என்று அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி  இருக்கிறது. அதன் அருகே ஒரு ஒழுங்கையும் இருக்கிறது.

வாகன அணி மத்தியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று அந்த ஒழுங்கைக்கு திருப்புகிறார் கிட்டு.

இராணுவ வாகனங்கள் சட்டென்று நிறுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள் 50 யார் தூரம்வரை சென்று விடுகிறது.

அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 38

கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 38
 

எதிர்பாராத திருப்பம்

ஒழுங்கை வழியாக  திரும்பிவிட்டால்  இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை.

அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

ஒழுங்கை வேலியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று தெருவைக் கடந்து எதிர்ப் பக்கமாக மேய்ந்து கொண்டிருந்தது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கயிற்றில் சிக்கி வீதியில் புரண்டது.

விரைந்து  வந்தகொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.

கிட்டு எழுந்து அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து விட்டார் .

ரஞ்சன் லாலாவை துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன. கிட்டுவைத் துரத்திய இராணுவத்தினர் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகள் வாழைகளை முறித்து வீழ்த்தின.

கிட்டு தப்பிச் சென்று விட்டார். ரஞ்சன் லாலா மரணமானார்.

இச் சம்பவம் நடைபெற்ற திகதி 13.07.1987ல் புலிகளுக்கு ஏற்பட்ட மிகப் பாரிய இழப்பு அது.

ரஞசன் லாலா என்பது இயக்கப் பெயர். க.ஞானேந்திரமோகன் என்பதுதான் சொந்தப் பெயர், பருத்தித்துறைதான் செபந்த ஊர், வயது, 23.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புலிகளது கொில்லாத் தாக்குதல்கள் அனைத்திலும் பலியாகும்வரை பங்குகொண்டவர் ரஞ்சன் லாலா என்பது குறிப்பிடத்தக்கது.

ranjanlala  கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 38 ranjanlalaசயனைட் விபரீதம்

இந்தச் சம்தவம் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட வேண்டும். இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது கிட்டுவிடம் சயனைட் குப்பி இருந்தது.

அதனை தொய்யு மருந்து என்று கூறி இராணுவத்தினரை கிட்டு ஏமாற’றி விட்டார். கிட்டு நினைத்திருந்தால் ‘சயனைட்’ அடித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

இதேபோல மற்றொரு சம்பவம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லுரிக்கு அருகே நடந்தது.

அப்போது குருநகரில் இருந்த இராணுவத்தினர் அடிக்அடி வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு.

புலிகள் அமைப்பைச் சேர்ந்த வாசன், சின்னக் கண்ணாடி, அல்லது அலெக்ஸ் ஆகிய இருவரும் கொய்யாத் தோட்டம் வீதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.

இராணுவத்தினரின் சந்தேகப் பார்வை அவர்கள் மீது விழுந்தது. இருவரையும் அழைத்து  வீதியில் வைத்து விசாரிக்க இராணுவத்தினர் முற்பட்டபோது வாசன் சயனைட் அடித்துவிட்டார். அவரைப் பார்த்து அலெக்சும் சயனைட் அடித்தார்.

இருவரும் அந்த இடத்திலேயே பலியானார்கள். 18.7.84 அன்று இந்தச் சம்பவம் நடந்தது.

வாசனின் சொந்தப் பெயர்: ஐயம்பிள்ளை மணிவாசகம். வயது 23, சொந்த ஊர்: நெடுந்தீவு. சின்னக் கண்ணாடி அல்லது அரெக்ஸின் சொந்தப் பெயர்: வேதரத்தினம் மொரிஸ். சொந்த இடம்:  கொய்யாதடதோட்டம், யாழ்பாணம்.

வெளிநாடடுப் பிரசாரம்

1984 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் ‘ஈழவிடுதலை’ அவசியம் என்பதை வலியுறுத்திப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் பிரசாரங்கள் இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்கால் பிரபலப்படுத்தப்பட்டும் வந்தன.

உலக ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன என்ற செய்தியைத் தொிவிப்பதே அதன் நோக்கம்.

84 இல் அமொிக்காவில் உள்ள நியூயோர்க்கில் உலகத் தமிழீழ மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

இதன் பின்னணியில் இருந்நவர் டாக்டர் பஞ்சாட்சரம்.

டாக்டர் பஞ்சாட்சரம் தொடர்பாக தமிழ் அமைப்புக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யின் ஆளாக அவர் இருக்கக்கூடும் என்பதுதான் சந்தேகம்.

இதனால் பஞ்சாட்சரம் கூட்டும் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் அமைப்புக்கள் மறுத்துவிட்டன.

புலிகள் அமைப்பை எப்படியாவது மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சி நடந்தது வந்தது.

இதற்கிடையே டாக்டர் பஞ்சாட்சரம் தமது நியூயோர்க் மாநாடு ஏன் கூட்டப்படுகிறது என்பதை விளக்கியிருந்தார்.

விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது தமது நோக்கங்களில் ஒன்று என அவர் தொிவித்தார்.  இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அமொிக்காவின் கரங்களுக்குள் போராளி அமைப்புக்களை கொண்டுசெல்ல பஞ்சாட்சரம் திட்டம் போடுவதாகக் கருதப்பட்டது.

சென்னையில் தங்கியிருந்த தமிழ் இயக்கத் தலைவர்கள்  நியூயோர்க் மாநாட்டில் கலந்து கொள்ள தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்து விட்டனர்.

pirpakaran  கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 38 pirpakaranபிரபாவின் கடிதம்

டாக்டர் பஞ்சாட்சரத்துக்கும் புலிகளுக்குமிடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. இதனையடுத்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் டாக்டர் பஞ்சாட்சரத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்து.

கடிதத்தின் ஒரு பகுதி இது:

“விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து  ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தொிகிறது.

இவ்வித ஒற்றுமை முயற்சிகள்  நான் வரவேற்கிறேன். எனினும் இந்த முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே நான் விரும்புகிறேன்.

அந்நிய  நாடு ஒன்றில் அதுவும் அமொிக்க ஏகாதிபத்தியத்தின் தலைநகரில் சி.ஐ.ஏ உளவு ஸ்தாபனத்தின் சிலந்தி வலைக்குள் இருந்து எமது போர் முறைத்திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை.

விடுதலை இயக்கங்கள் மத்தியில் ‘சோசலிசத் தமிழீழம்” என்ற இலட்சியத்தில் ஒருமைப்பாடு உண்டு என்பது நீங்கள் அறிந்ததல்ல.

எனினும் இந்த இலட்சியத்தை அடைவதற்கான போருபாயங்கள், போர் முறைத் திட்டங்கள் போன்றவற்றில் கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன.

இத மிகவும் சிக்கலான விவகாரம். போர் நுட்பமும், போர் அனுபவமும் சார்ந்த விசயம் இயக்கத் தலைமைகள் மிகவும் இரகசியமாக பரஸ்பர நம்பிக்கையுடன் பரிமாறிக் கொள்ள வேண்டியது.

இவற்றை எல்லாம் சர்வதேச மாநாடுகளில் அதுவும் அமொிக்காவின் திறந்த அரங்குகளில் விவாதிக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதாயின் மிகவும் கட்டுப்பாடுடைய தேசிய இராணுவ அமைப்பொன்றை  முதலில் கட்டி எழுப்ப வேண்டும்  இதனையே நாம் இன்று செயற்படுத்தி வருகிறோம்.

ஏனைய விடுதலை அணிகளும் எம்மோடு இணைந்து செயற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. போராட்ட சூழ் நிலைகள் இந்த ஒற்றுமையைப் பிறப்பிக்கும்”

என்று தொிவித்திருந்தார் பிரபாகரன். இக் கடிதம் 19.05.84 என்று தேதியிடப்பட்டு டாக்டர் பஞசாட்சரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உறவுகளின் போட்டி

வெளிநாடுகளில் இருந்த விடுதலை அமைப்புக்களோடும் தமிழ் இயக்கங்களின் வெளிநாட்டுக்கிளைகள் தொடர்புகளை பேணி வந்தன.

இதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இரண்டும் முன்னணியில் இருந்தன.

1984ன் இறுதியில் சென்னையிலிருந்த சோவியற் யூனியன் தூர்வராலயத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் முற்பட்டது.

1980களில் வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள் புலிகள் அமைப்பை விட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளோட் அமைப்புகளுடன் தான் பரிச்சயமாக இருந்தன.

வெளிநாட்டு விடுதலை இயக்கங்களிடம் தம்மை முற்போக்கு அமைப்புக்களாகக் காட்டிக் கொள்வதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளோட் அமைப்புக்களிடையே கடும் போட்டி நிலவியது.

JR  கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 38 JRஅமொிக்காவின் தந்திரம்

1984 ல் இலங்கை அரசுக்கு அமொிக்கா வழங்கிய ஆயுத உதவி அம்பலத்திற்கு வந்தது.

இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அமொிக்காவோடு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அந்த ஒப்பந்தப்படி அமொிக்கா வழங்கும் ஆயுத உதவிக்குப் பதிலாக திருகோணமலை துறைமுகத்தை அமொிக்க தளமாக மாற்ற இசைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அமொிக்க தலைநகரான வொஷிங்டனுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.

100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் பெறுவதற்காகவே அவர் சென்றிருந்தார். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதே காலகட்டத்தில் அமைச்சர் ஹமீத், பிரதமர் பிரேமதாசா ஆகியோரும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தனர்.

அமைச்சர் ஹமீத்தும், லலித் அத்துலத் முதலியும் ஒன்றாக லண்டனில் தங்கியிருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஆயுத உதவி பெறும் இரகசிய பேச்சுக்கள் நடப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தின.

வியட்நாம் யுத்தத்தின் பின்னர் அமொிக்கா எந்தவொரு நாட்டுக்கும் நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்காமல் இருந்தது.

தனது ஆயுதக் கிடங்குகளை வேறு நாடுகளில் வைத்திருந்தது. அங்கிருந்தே ஆயுதங்களை விநியோகித்து வந்தது அமொிக்கா.

உதாரணமாக அங்கோலா சோசலிச அரசுகடகு எதிராகப் போராடிய கிளர்ச்சியாளருக்கு போர்த்துக்கல்லிலிருந்த தனதுஆயுதக்கிடங்கில் இருந்தே அமொிக்கா ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டிருந்தது.

இரகசியமாக வந்த அமொிக்க ஆயுதம்: அம்பலமானது எப்படி?

இலங்கை அரசுக்கும் போர்த்துக்கல்லிலிருந்து தனது ஆயுதக் கிடங்து மூலமாகவே ஆயுதங்கழளை வழங்க அமொிக்கா முன்வந்தது.

போர்த்துக்கல்லிலிருந்து ஆயுதங்களை ஏற்றிவர சயர் றாட்டு விமானம் பயன் படுத்தப்பட்டது. சயர் நாடு அமொிக்காவின் நட்பு நாடாகும்.

சயர் நாடடு சரக்கு விமானமானடி.சி.8 என்ற விமானம் 16.000 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதத் தளாபாடங்களோடு போர்த்துக்கல் நாட்டிலிருந்து புறப்பட்டது.

போத்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் விமான நிலையத்திலும்  ஓமானில் மஸ்கற் விமான  நிலையத்திலும் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு நேராக கொழும்பு வருவதுதான் டி.சி.8 விமானத்தின் பயணத் திட்டமாகும்.

விமானத்தின் கொள் அளவைவிட அது சுமந்த வந்த எடை அதிகமாக இருந்தமையால் எரிபொருள் தீர்ந்துவிட்டது.

அதனால் வேறுவழியின்றி இந்தியாவில் கேரளமாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டி.சி.8 விமானம் இறக்கப்பட்டது.

எதிபாராத இந்த நிகழ்வால் சயர் நாட்டு விமானத்தின் ஆயுதக் கடத்தல் விவகாரத்தை இந்தியா அறிந்து கொண்டது. விசயமும் அம்பலமானது.

ஆயுதங்களோடு வரும் விமானங்கள் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் தரித்து வருவதற்கான அனுமதி பெறுவதே இலங்கை அமைச்சர்கள் பாங்கொக், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ததின் இரகசியம் என்று இதன் பின்னர் பேசப்பட்டது.

சொன்னதும் – செய்ததும்

இதேவேளை பிரிட்டிஷ் அரசு இலங்கையில் தமிழர்களது பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியது.

தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். அவரது விஜயம் பற்றி பிரிட்டிஷ் அரசு பின்வருமாறுசொன்னது:

“தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மந்திரியிடம் கூறப்பட்டிருக்கிறது.”

இந்த செய்திகள் இலங்கை பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டிருந்தபோது!

அதே பிரிட்டிஷ் அரசு 10 நவீன போர் படகுகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்னவற்றை இலங்கை அரசுக்கு தருவதாக ஒப்புக்கொண்டது.

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” அது போல நாடுகளுக்கிடையேயான உறவுகளில் வெளியே செல்லப்படும் செய்திகள் யாவும் மெய்யல்ல.

கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் இலங்கையும் ஓரங்கம்.

தென்னாபிரிக்காவோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது கூட்டுச் சேரா நாடுகளது கொள்கை,

ஆனால் ஜே.ஆர். அரசுக்கு 84ம் ஆண்டு ஏழாம் மாதத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து ஆயுதம் வந்தது. அதைக் கொண்டு வந்ததும் சியர் நாட்டு டி.சி.8 விமானம்தான்.

இதே சமயம் தென்னாபிக்க ஐனாதிபதி பீட்டர் போத்தா இலண்டனுக்கு விஜயம் செய்தபோது ஆபிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் புலிகளது இலண்டன் கிளையும் கலந்து கொண்டது.எதிரிக்கு எதிரி நண்பன் தானே!

raila  கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 38 railaயாழ்தேவிக்கு குறி.

1985ம் ஆண்டில் இராணுவ நடவடிக்கையை போராளி இயக்கங்கள் தரப்பிலிருந்து முதலில் ஆரம்பித்து வைத்தது ரெலோ இயக்கம்.

09.01.85 அன்று யாழ்தேவி  புகையிரதம் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரை சுமந்து கொண்டு சென்றது.

பழைய முறிகண்டி என்னுமிடத்தில் கண்ணிவெடிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தனர் போராளிகள்.

12 பெட்டிகளோட வந்த யாழ்தேவி கண்ணிவெடியில் சிக்கி சிதறியது.

நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள்.

இரவு 08.30 அணியளவில் நடைபெற்ற இத்தாக்குதல் அதுவரை நடந்த கொில்லாத்தாக்குதல்களில் பாரியதாகும்.

புகைவண்டிப் பாதையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.

இத்தாக்குதலில் முன்னின்று செயற்பட்டு வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தாஸ்.

உட்கொலை

பருத்திதுறையைச் சேர்ந்த தாஸ் ரெலோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வடக்கில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர்.

இவர் பின்னர் ரெலோ இயக்க உள் முரண்பாடு காரணமாக யாழ் பொது மருத்துவமனையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரெலோ தலைவர் சபரிட்டுடினம் உத்தரவின் படி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து தாஸீம் அவரது விசுலாசிகள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாஸின் கொலையோடு ரெலோவின் இராணுவ நட வடிக்கைகள் வேகம் குன்றியமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி பின்னர் ஒரு சமயத்தில்

 

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆரை குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39

எம்.ஜி.ஆரை  குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39
 

அகண்ட தமிழகம்

நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன்.

இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட வேண்டும். மாநாட்டில் தமிழீழ வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டது.

அமையப்போகும் அல்லது விரும்பப்படும் ‘தமிழர் தாயகம்’ என்ற பெயரில் அந்த வரைபடம் வெளியிடப்பட்டது.

அந்த வரைபடத்தை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்பு-கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளோடு இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டையும் இணைத்து அந்த வரைபடம் உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழீழ ஆதரவு என்ற போர்வைக்குள் அமொிக்காவின் சி.ஐ.ஏ.உளவு நிறுவனம் போட்ட திட்டப்படியே அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.

நியூயோர்க்கில் இருந்து தமிழீழ ஆதரவாளர்களாக நடித்துக்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் பிரமுகர்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டது சி.ஐ.ஏ. அவர்களும் சி.ஐ.ஏ. சொன்னதை செய்து முடித்து விட்டார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.

4891  எம்.ஜி.ஆரை  குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39 4891‘அகண்ட தமிழக வரைபடத்தை உருவாக்கியதால் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு என்ன இலாபம்.

இதற்கான பதிலை தமிழ்நாட்டில் இருந்து வெளியான ‘மக்கள் குரல்’ பத்திரிகை சொன்னதில் இருந்து தருகிறேன்:

“இந்தியாவின் தமிழ் நாட்டையும் ஈழத்தோடு இணைத்து ஒரே தேசமாக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. பிரிவினை பற்றி  இந்தியர்களிடமும்  இந்திய ஆட்சியாளரிடமும் ஒரு பயத்தை உருவாக்குவதே இந்த அகண்ட வரை படத்தின் நோக்கம்.

இப்படிச் வெய்தால் தமிழீழக் கோரிக்கை அடிபட்டுப்போய் விடும் என்பது தந்திரம்!

ஜயவர்த்தனா அரசுக்கு நடைமுறையில் உதவ இந்த வரைபடமே போதுமானது.

தமிழர்கள் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிரச்சனை என்றுதான் அவர் இந்தியாவிடம் சொல்லி வருகிறார்.

“ஈழம் என்று உதட்டளவில் உச்சரித்து யாருக்கோ சேவை செய்ய ஒரு கூட்டம் முற்படுகிறது” என்று சொன்னது ‘மக்கள் குரல்’ பத்திரிகை.

இதன் ஆசிரியர் டி.ராமசாமி அவர்தான் அக்கட்டுரைஎழுதியிருந்தார். இந்திரா காந்தி ராஜீவ் காந்தி ஆகியோரோடு நெருக்கமாக இருந்தவர். (தற்போது மரணமாகி விட்டார் டி.ஆர்)

அந்த பத்திரிகை சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.

இலங்கை அரசுக்கு யுத்தத்தில் உதவி செய்து கொண்டிருந்தது அமொிக்கா.

தமிழீழத்தை ஆதரிப்பது போல பேசவைத்து அக்கோரிக்கையை ஆபத்தானதாகச் சித்தரிப்பதும் ஜே.ஆர்.அரசுக்கு அமொிக்கா செய்த உதவிகளில் ஒன்றுதான் என்று கருத இடமுண்டு.

தகவல் கொடுத்தவர் யார்?

இதேவேளை இந்தியாவில் ஈழப்போராளிகளது பயிற்சி முகாம்கள் இருந்ததை மறுத்துக்கொண்டிருந்தது இந்தியா.

இந்திய அரசின் மறுப்பை புஸ்வாணமாக்குவது போல ஒரு செய்தியை வெளியிட்டது ‘இந்தியா டுடே‘ சஞ்சிகை.

தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளது பயிற்சி முகாம்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்ற விபரங்களை வெளியிட்டிருந்தது அச்சஞ்சிகை.

இதனை அடுத்து அத்தகவல்களை யார் கொடுத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

சந்தேகப் பார்வையில் சிக்கியவர்களில் ஒருவர் சிவநாயகம் ‘சற்றடே றிவியூ’ என்றொரு ஆங்கில இதழ் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. அதன்ஆசிரியராக இருந்தவர்தான் சிவநாயகம்.

பின்னர் இவர் சென்னையில் ‘தமிழ் தகவல் தொடர்பு நிலையம்’ நடத்தி வந்தார்.

இவர்தான் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்ளைக் கொடுத்தார் என்று நம்பப்பட்டது.

போலிக் குதிரைகள்

சிவநாயகத்திற்கும் அமொிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக இந்தியாவின் முற்போக்குப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ அம்பலப்படுத்தியது.

பிளிட்ஸ் பத்திாிகை காட்டமாக குற்றம் சாட்டியது மற்றொருவர் நீலன் திருசடசெல்வம்.

25.08.84 அன்று தகது முன்பக்கத்தில் ‘பிளிட்ஸ்’ வெளியிட்ட செய்திலிருந்து சில பகுதிகள் இதோ:

“தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் சி.ஐ.ஏ புகுத்திவிட்ட நீலம் திருச்செல்வம் ஒரு போலிக் குதிரை. (Trojan Horse) இப்படியானபோலிக் குதிரைகள் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே சி.ஐ.ஏ ஈழ விடுதலைக் குழுக்களுக்குள் ஊடுருவி விட்டது.

இன்னொரு போலிக் குதிரைதான் சிவநாயகம் என்பவர். இந்தியாவுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் எதிரான வாதங்களை கிளப்பிவிட்ட ‘இந்தியா டுடே’ கட்டுரைக்கு பெரும்பாலான தகவல்னளைக் கொடுத்தது இந்த மனிதர்தான்.

என்று தொிவித்தது ‘பிளிட்ஸட’ பத’திரிகை.

‘ரெலி’மீது தாக்குதல்

9.9.84 அன்று யாழ்பாணத்தில் பொன்னாலை என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகவும் துயரமானது.

ஜெகதீசன் என்னும் ஜெகன் என்பவரால் ‘தமிழீழ விடுதலை தீவிரவாதிகள்‘என்னும் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதனை சுருக்கமாக ‘ரெலி’ (T.E.L.E) என்று அழைத்தார்கள்.

மண்டைஓட்டின் சின்னத்தோடு ‘ரெலி’ தனது செயல்பாடுகளை மேற்கொண்டடு வந்தது.

9.9.84 அன்று காரைநகருக்கு அருகேயுள்ள பொன்னாலை பாலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துக் கொண்டிருநடதனர் ரெலிஇயக்கத்தினர்.

கடற்படையினர் அப்பாலத்தின் வழியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கே ‘ரெலி’ இயக்கத்தினர் தயாராகிக் கொண்டிருந்தனர்.

தயாதிப்புக்கள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. இனித்தாக்குதல் நடத்த வேண்டிது தான் பாக்கி ‘ரெலி‘ உறுப்பினர்கள் காத்திருந்தனர்.

அப்போதுதான் அந்தப் பகுதிக்குஇன்னொரு குழுவினரும் வந்து சேர்ந்தனர்.

‘ரெலி’ தலைவரை அக்குழுவினர் வருமாறு அழைத்தனர் அவரும் அவர்களை நோக்கி சென்றார்.

திடீரென்று அக் குழுவில் அருந்த ஒருவர் ‘ரெலி’ தலைவர் ஜெகனை நோக்கி சுட்டார். தொடர்ந்து ரவை மழை.

ஜெகன் அப்படியே சரிந்து விழுந்து உயிர்விட்டார். இதனைக் கண்ட ‘ரெலி’ இயக்கக்தினர் அங்கிருந்து ஓடித் தப்பிவிட்டனர்.

thelipan  எம்.ஜி.ஆரை  குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39 thelipanவந்த குழுவினர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

ஜெகனைச் சுட்டவர் திலீபன். இவர்தான் பின்னர் புலிகளது யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர். இந்திய படைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து மரித்தவர்.

ஜெகன் கொல்லப்பட்டதை ஏனைய தமிழ் அமைப்புக்கள் கண்டித்தன.

இதனையடுத்து 13.09.84இல் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.

“விடுதலைப் போராளிகள் என்று இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில்தான் அச் சம்பவம் நடைபெற்றது.”

என்று அப் பிரசுரத்தில் புலிகளால் விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ‘ரெலி’ இயக்கம் சில காலம் இயங்கியதாயினும் பின்னர் செயலிழந்து விட்டது.

மலையக அகதிகள்

மலையகத்தில் நடந்த வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மலையக தமிழ் குடும்பங்கள் வவுனியாவில் குடியேறி இருந்தனர்.

வவுனியாவில் நடைபெற்ற இராணுவத்தினரின் தேடுதல் வேட்டைகளில் அங்கிருந்த மலையகத்  தமிழர்கள் தொல்லைகளுக்கு உள்ளாயினர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் ‘டொலர்’ ‘கென்ற்’ என்னும் பண்ணைகளில சிங்கள மக்களை அரசு குடியேற்றியது.

அநுராதபுரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட குடியேற்றவாசிகளில் பெரும்பாலானவர்கள் பழைய ‘கேடி’கள். சிறையில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.

அருகில் இருந்த தமிழ் குடும்பங்கள் இந்த ஆயுதம் தாங்கியவர்களால் மிரட்டல்களுக்கு உள்ளாகினர். மலையகத் தமிழ் குடும்பங்களும் அதில் அடக்கம்.

இயக்கப் பிரசாரங்கள்

1984 இன் இறுதியில் ஒவ்வொரு தமிழ் இயக்கமும் தமது பலத்தை வெளிப்படுத்தும் பிரசாரங்களில் ஈடுபடத்தொடங்கின.

தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தாமே முன்னணி இயக்கம் என்று காட்டுவதும் அதில் ஒரு முறையாகும்.

இதனால் தமது தாக்குதல்களின் போது பலியாகும் படையினரது எண்ணிக்கையை அதிகமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். இதற்கு ஒரு சுவாரசியமான உதாரணம் கூறுகிறேன்.

காரைநகர் கடற்படை முகாம்மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப். 1984இல் தாக்குதல் நடத்தியபோது கடற்படையினர் எவரும் இறந்ததாகவே அரசு கூறவில்லை. சிலர்காயமடைந்தனர்.

ஆனால் ஈ.பி.ஆர்.எல். எஃப். பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கை என்ன கூறியது தெரியுமா?

“150 கடற்படையினர் பலி. கடற்படை முகாம் தரைமட்டம்!”

இதே போல யாழ்தேவி புகைவண்டி மீதான தாக்குதலில் நூற்றி இருபது பேர் வரையிலான இராணுவத்தினரே பலியாகியிருந்தனர்.

200 பேர் பலியானதாக தமிழ்நாட்டில் அறிவித்தது ரெலோ இயக்கம்.

இதேவேளை தமது உறுப்பினர்கள் ஆயுதங்களோடு , சீருடைகளோடும் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்களை வெளியிடுவதிலும் இயக்கங்களுக்குள் பலத்த போட்டி நிலவியது.

முதலில் தமது உறுப்பினர்களது புகைப்படங்களை வெளியிட்டது புலிகள் இயக்கம்.

இதனையடுத்து ஏனைய  இயக்கங்களும் புகைப்படங்களை வெளியிட்டன.

முதல் இடத்திற்கு வந்ததுவிட வேண்டும் என்ற போட்டியில் முக்கிய இயக்கங்கள் களத்தில் குதித்திருந்தமையைக் கோடிட்டுக் காட்டவே இதனைத் தொிவித்தேன்.

தமிழக மக்களிடம் தமது பலத்தை பொிதுபடுத்திக் காட்டுவதில் ஈழப்போராளி அமைப்புக்கள் ஈடுபட்டிருந்தன.

எம்.ஜி.ஆரிடம்  பிரபாகரன் சொன்ன கதை…

mgr_prabaharan  எம்.ஜி.ஆரை  குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39 mgr prabaharanஎம்.ஜி.ஆரும் பிரபாவும்

தமிழக அரசியல் சென்று ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் தாமே பெரும் இயக்கம்  என்று கூறிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு இயக்கமும் தம்மை நியாயப்படுத்த  மற்றைய இயக்கத்தின் பொட்டுக் கேடுகளை ஒப்புவித்துவிடும். இதனால் ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் உள் பிரச்சனைகள் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அத்துப்படியாகி விட்டன.

இதே வேளையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புலிகளது தலைவர் பிபாகரன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர்.தலமையிலான தமிழக அரசோடு முதலில் நெருக்கமாக இருந்தது புளொட் அமைப்பு.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாகவே அந்த நெருக்கம் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரோடு  முரண்பட்டுக் கொண்டிருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தனிக் கட்சி ஆரம்பித்தபோது அந்த நெருக்கம் குறையத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர். பிரபாகரனை சந்திக்க விரும்பினார் முதல் சந்திப்பிலேயே பிரபாகரனை எம்.ஜி.ஆருக்குப் பிடித்து விட்டது.

அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பதாகவும் அந்தப் படங்கள் மூலமாகவும் அநீதிகளை எதிர்க்கும் உணர்வு சிறு வயதில் வளர்ந்தது என்றும் எம்.ஜி.ஆரிடம் கூறினார் பிரபாகரன்.

எம்.ஜி.ஆர். குளிர்ந்து போனார்.கூடவே இன்னொரு திட்டம் அவர் மனதில் விரிந்தது.

தொடரும்….

நன்றி அற்புதனுக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

………………………………………………………………………………………………………………………………………………………………………………

pirapakaranqa  எம்.ஜி.ஆரை  குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39 pirapakaranqaபலியான கரும்புலி மீண்ட தெப்படி? கடற்போரில் புலிகளுக்கு ஆச்சரியம்!

மாண்டு போனார் என்று நினைத்தவர் மீண்டு வந்தால்… ஆச்சரியம் அடர்த்தியாகிவிடுமல்லவா?

புலிகளுக்கும் அப்படியொரு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.

16.07.95 அன்று கடற்புலிகள் அணியொன்று காங்கேசன்துறை கடற்பரப்புக்கு விரைந்தது. அந்த அணியில் மொத்தம் மூன்று படைப் பிரிவுகள் பங்கேற்றிருந்தன.

அதிகாலை – 1.15 மணியளவில் கடற்பரப்பில் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே மோதல் தொடங்கியது. அதிகாலை 5.30 வரை மோதல் இடம் பெற்றது.

மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கடற்புலிகளது இரு படகுகள் துறை முகப் பகுதிக்குள் ஊடுருவிச் சென்றன. இரு படகுகளிலும் நான்கு கடற்புலிகள் இருந்தனர்.

மேஜர் நியூட்டன், மேஜர் தங்கம் ஆகியோர் சென்ற படகு ‘எடிதாரா’ கட்டளைக் கப்பலில் மோதியது.

தரையிறங்கு கப்பல் ஒன்றை நோக்கி கப்டன் தமிழினி, கப்டன் செவ்வானம் (இருவரும் பெண் கரும்புலிகள்) ஆகியோர் சென்ற படகு முன்னேறியது.

கடற்படையினர்  முன்னேறி வந்த கரும்புலிப் படகை நோக்கி தாக்குதல் தொடர்ந்தனர். படகு சிதறியது.

கடர் போர் முடிந்து திரும்பிய புலிகள் தமது தரப்பில் 17 பேர் பலியானதாக அறிவித்தனர் பலியானவர்களில் நான்கு பேர் கரும்புலிகள் என்று அறிவிக்கப்பட்டது.

நான்கு கரும்புலிகளோடு பிரபாகரன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் யாழ்பாண பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.

17ம் திகதி கப்டன் செவ்வானம் என்னும் பெண் கடற்கரும்புலி கரைக்கு வந்து சேர்ந்தார் . அன்று வெளியாகிய பத்திகைகளில் மாண்டவர் வரிசையில் தனது படமும் வெளியாகியிருப்பதைக் கண்டார்.

18ம் திகதி யாழ்பாணப் பத்திரிகைகளில் கடற்கரும்புலி மீண்டு வந்துள்ள செய்தியை புலிகள் தொிவித்திருந்தனர்.

படகு தாக்குதலுக்கு உள்ளான போது தமிழினி பலியாகி விட்டார். செவ்வானம் கடலில் குதித்து நீரடி நீச்சல் மூலம் தப்பி வந்து விட்டார். அதனால் கடற்படையினரது கண்ணிலும் அவர் சிக்கவில்லை.

கடற்புலிகள் அணியில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர நீச்சல், நீரடி நீச்சல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நீரடி நீச்சல் உயிரோடு திரும்பக் கைகொடுத்திருக்கிறது.

கடற் புலிகளுக்கும் – கடற்படைக்கும் இடையே நடைப்பெற்ற முதலாவது பொிய போர் 16.07.95 இல் நடந்ததுதான்.

இப் போருக்கு இருகடற்புலித் தளபதிகள் தலைமை தாங்கிச் சென்றனர்.

அதில் ஒருவர் பெண் லெப்டினன்ட் கேணல் மாதவி (தி.திருச்செல்வி – அல்வாய்) இன்னொருவர் லெப்டினன்ட் கேணல் நரேஸ். (சி.நவராஜன் – திருக்கோணமலை) இந்த இரு தளபதிகளும், மேலும் 14 கடற்புலிகளும் (மூவர் கரும்புலிகள்) 16.07.95 கடற் போரில் பலியானார்கள்.

http://ilakkiyainfo.com/அல்பிரட்-துரையப்பா-முதல-15/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவு இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட பிரபாகரன்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 40)

மண்டைதீவு  இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட  பிரபாகரன்:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 40)
 

உளவுத்துறை தகவல்

புலிகள் அமைப்பு கட்டுப்பாடன ஒரு அமைப்பு பிரபாகரன் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சில ஒழுங்கு முறைகளை வகுத்துச் செயற்படுபவர்.

அவரது உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக நடந்து கொள்பவர். இவை போன்ற விபரங்களை மாநில உளவுத்துறை மூலம் எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார்.

கலைஞர் கருணாநிதி ரெலோ அமைப்பை கிட்டத்தட்ட தத்தெடுத்தது போலவே தனக்கு ஆதரவாக வைத்திருந்தார்.

‘ரெலோ’ அமைப்பு கட்டுப’பாடு விடயத்தில் ஊட்டைகள்நிறைந்தது. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு விதமாக செயற்படுவார்கள், என்றெல்லாம் தமிழக உளவுத்துறை எம.ஜி.ஆரிடம் சொல்லி வைத்திருந்தது.

இந்த இடத்தில் ஈழப்போராளி அமைப்புக்கள் விடயத்தில் இந்திய – தமிழக உளவுத்துறைகளது நடவடிக்கை பற்றி சுருக்கமாக கூறவேண்டியிருக்கிறது.

ஈழப்போராளிகள் அமைப்புக்கள் குறித்து இந்தியாவில் நான்கு உளவுத்துறை அமைப்புக்கள் கண்காணித்து வந்தன.

1. அந்திய ஆய்வு -பகுப்பாய்வுப் பிரிவான ‘றோ’ (RAW)

2. இந்திய மத்திய புலனாய்வு பிரிவு. (சி.பி.ஐ)

3. இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவு.

4. தமிழக பொலிஸ் உளவுத்துறையின் விஷேச பிரிவான ‘கியூ’ பிரிவு.

இதில் ‘றோ’ மட்டுமே மத்திய அரசின் முடிவுகளுக்கேற்ப போராளி அமைப்புக்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தது.

பயிங்சி, ஆயுதம், நிதி மூன்றும் ‘றோ’ மூலமாகவே இயக்கங்களுக்கு வழங்கப்பட்டமையால் இந்திய அரசின் பிரதிநி போலவே இயக்கங்களோடு ‘றோ’ நடந்து கொண்டது.

ஏனைய உளவுப் பிரிவுகள் போராளிகளோடு நட்பு ரீதியில் பழகி தமக்குத் தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்வதோடு நின்று கொண்டன.

எங்கெங்கே இயக்க முகாம்கள் இருக்கின்றன எத்தனை பேர் இருக்கிறார்கள் போன்ற விபரங்களை சேகரிப்பதோடு அவை இருந்துவிட்டன.

‘றோ’ வோடு தொடர்பு இருந்தமையாலும்  தமிழக மக்களது போராதரவு இருந்தமையாலும் ஏனைய உளவுப் பிரிவுகளை போராளி அமைப்புக்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை.

அவர்கள் கேட்ட விபரங்களைக் கூட சரியாக கொடுப்பதுமில்லை

உதாரணமாக, ஒரு முகாமில் நூறு பேர் இருந்தால் 50 பேர் என்று முகாம் பொறுப்பாளர் சொல்வார்.

‘றோ’ பிரிவு கேட்டால் மட்டும் முகாமில் நூறு பேர் இருந்தாலும் இருநூறு பேர் இருக்கிறார்கள் என்று பொறுப்பாளர் சொல்லிவிடுவார்.

அது ஏன்? ஆயுதம் அதிகம் பெற வேண்டுமானால் உறுப்பினர் தொகையை உயர்த்திதானே காட்ட வேண்டும்!

மோகனதாஸ்

தமிழ்நாடு பொலிஸ் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தவர் கே.மோகனதாஸ் இவர்தான் பின்னர் தமிழக பொலிஸ் டி.ஜி.பியாகவும் இருந்தவர்.

மோகன்தாசுக்கும் இலங்கை உளவுத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஈிப் போராளி அமைப்புக்களுக்கு சந்தேகம் இருந்தது.

அதனால் தமிழக உளவுத்துறைக்கு சரியான விபரங்கள் கிடைக்கக்கூடாது என்று விழிப்பாக இருந்தனர்.

ஆனால் மோகன்தாஸ் எம்.ஜி.ஆருக்கு வலதுகரம் போல இருந்தார். எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்ன தகவல்களை பொிதும் நம்பினார்.

புலிகளுக்கு  புகழரம்

ஈழப் போராளி அமைப்புக்கள் குறித்து மோகனதாஸ் எம்.ஜி.ஆருக்கு என்ன சொல்லியிருப்பார் என்பதை அறியவேண்டுமா?

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மோகனதாஸ் ஒரு புத்தகம் எழுதியிருந்தார்.  “எம்.ஐி.ஆர் நிழலும் நியமும்” என்பது அதன் பெயர்.

அப் புத்தகத்தில் ஈழப்போராளிகள் அமைப்பு பற்றி மோகனதாஸ் கூறியிருப்பது இதுதான்:

″மத்திய அரசு  அமைப்புகள்  செய்த முதல்  தவறு.  பயிற்சிக்கான  கையாட்களாக  அவை “டெலோ”  பிரிவினரை  தேர்ந்தெடுத்ததே.

அந்தப் பிரிவில் குற்றவாளிகளும், கொலைகாரர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆா. எல். எப், ப்ளாட் (புளொட்) அமைப்புகளுக்கு இருந்த தீவிர இலட்சியப்  பிடிப்பு  “டெலோ”  இல்லை.

ஆனால் அவர்கள் மத்திய அரசைப் பொறுத்தவரை  “ஆமாம் சாமிகள்”  இந்த பாராபட்சம்  மற்றப் போராளிகள்  பிரிவுகளை வருத்தப்படுத்தியது.

எல்.ரி.ரிக்கு உயர்ந்த இலட்சிய ஈடுபாடு  இருந்தது. கவர்ச்சிகரமான  அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில்  போராளிகள் கட்டுப்பாட்டுடன் இயங்கினார்கள்.

அவ்வப்போது நான் எம்.ஐி.ஆரிடம்  போராளிகள் பற்றி சொல்லி வந்தேன். போராளிகளது தலைவர்களை  குறிப்பாகப் புலிகளை சந்திக்க விரும்புவதாக அவர் என்னிடம்  தெரிவித்தார்.

mgra-680x365  மண்டைதீவு  இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட  பிரபாகரன்:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 40) mgraஎம்.ஐி. ஆருக்கும், புலிகளது தலைவர் பிரபாகரனுக்கும்  ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. 

தனக்கே உரித்தான  உள்ளுணர்வு மூலம் எம்.ஐி.ஆர்  புலிகளுக்கும் பிற அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை  புரிந்து கொண்டார்.

அதன் விளைவாக எம.ஐி.ஆர் பிற்காலத்தில் அந்த இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்தும், அரசு நிதியிலிருந்தும்  வெவ்வேறு சமயங்களில் உதவி செய்தார்.″ இவ்வாறு கூறியிருக்கிறார் மோகனதாஸ்.

தனது உளவுத்துறை  மூலம் பெற்ற விபரங்களை வைத்த  புலிகளை அணைத்துக்கொண்டார்  எம.ஐி.ஆர் .

கலைஞர் கருணாநிதிக்கு மட்டும்தான்  ஈழப்போராளி அமைப்புகளிடம் செல்வாக்கு இருக்கிறது எண்ணத்தைத் தவறாக்குவதும்  எம.ஐி.ஆரின் திட்டமாக இருந்தது.

இந்த விடயத்திலும்  எம.ஐி.ஆரிடம்  கலைஞர் தோற்றுத்தான் போனார். எம.ஐி.ஆரின் மறைவின் பின்னர் ரெலோவை கைவிட்டு புலிகளை முற்றுமுழுதாக ஆதரித்தார் கலைஞர்.

எம.ஐி.ஆர்  பதவியில் இருந்தபோது ரெலோ உறுப்பினர்கள் பலரைக் கடுமையான  சட்டங்களின் கீழ் சிறையில்  தள்ளியிருந்தார். கலைஞர் பதவிக்கு வந்த பின்னரும் அவர்களில் சிலர் சிறையில் இருந்தனர்.

மின்கம்பத்தில் தொங்கிய சடலங்கள்: 84 இல்  ஒரு சங்கிலியன் பஞ்சாயத்து.

சமூக விரோதிகள் ஒழிப்பு

1984 இல் வடக்கில் சமூக விரேதிகள் ஒழிப்பு தீவிரமாக நடந்தது. பொலிஸ்  நிலையங்கள் பல மூடப்பட்டமையால்  சமூக விரேதிகளுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.

வீடுகளில் புகுந்து கொள்ளை,பெண்களை பலாத்காரம் செய்தல், வீதிகளில் சங்கிலி பறிப்பு என்று சமூக விரோதிகளது அட்டகாசம் அதிகமாகியது.

சுழிபுரத்தை சேர்ந்தவர் சின்னையா சிவபாலன். 21 வயது. சுழிபுரம், பண்ணடத்தரிப்பு பகுதியில் பிரபலமான உள்ளூார் சண்டியர்.

05.03. அன்று சின்னையா சிவபாலன் பண்டத்தரிப்புச் சந்தியில் சூட்டுக் காயங்களோடு செத்துக்கிடந்தார்.

பிணத்தின் அருகே ஒரு துண்டுப் பிரசுரம் காணப்பட்டது.

வீடுகளில் நகைக்கொள்கைகளில் ஈடுபட்டது, சண்டிலிப்பாய் இளம் பெண் ஒருவரை சுழிபுரத்தில்  வைத்து பலாத்காரம் செய்தமை.

இயக்கத்தின் பெயரில் வாகனக் கடத்தல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச் சாட்டுகள் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

பிரசுரத்தின் அடியில் தீாப்பு வழங்கியது யார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீாப்பு வழங்கியது “சங்கிலியன் பஞ்சாயத்து” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

சங்கிலியன் பஞ்சாயத்து  என்ற பெயரில் தண்டணை வழங்கியது  புளெட் இயக்கம்.

யாழ்பாணத்தை கடைசியாக ஆண்ட மன்னனின் பெயர்தான்  சங்கிலியன்.

கிளிநொச்சியில் கந்தசாமி  சிறிஸ்கந்தராசா (வயது 23) என்பவரும்  சமூகவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு  “புளொட்”  அமைப்பால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மின் கம்பத்தில்

அச்சுவேலி பஸ்நிலையத்துக்கு சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அங்கிருந்த மின்கம்பத்தில் ஒரு உடல் கட்டப்பட்டிருந்தது.

முகத்தில் சூட்டுக்காயம். கழுத்தில் வெட்டுக்காயம்.   கொலையானவர் இளைஞராக தெரிந்தார்.

மின் கம்பத்தின் அருகே ஒரு துண்டுப் பிரசுரம் காணப்பட்டது.

துப்பாக்கி முனையில் பொதுமக்களின் உடமைகளை கொள்ளையடித்தான். அதுக்காகவே தண்டனை என்று பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.

பிரசுரத்தில் புலிகள் தமது சின்னத்தையும் பொறித்திருந்தனர். கொல்லப்பட்டவரின் பெயர் பொன்னம்பலம் நடராஐா. வயது 28.

இத் தண்டணையை அடுத்து    மின் கம்பத் தண்டனைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.

திருடர்கள், கொள்ளையர்கள் பற்றி மக்கள் தமக்குள் பேசிக்கொள்ளும் போது    மக்கள் இவ்வாறு கூறுவார்கள்.

“போஸ்ரிலை (மின்கம்பத்தில்) தொங்கப்போகிறான்.

குக்கூ

யாழ்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் குணரத்தினம் 29வயது. இவரும் சண்டியர். சுருக்கமாக  “குக்கூ” என்று  அழைக்கப்படுவார்.

“குக்கூ” வுக்கு மூன்று பெண்டாட்டி. அதுவும் போதாது என்று  அங்கே  இங்கே கைநீட்டி அட்டகாசம் வேறு.

என்றாலும்  “குக்கூ” கெட்டிக்காரன். 83 யூலைக் கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள் அல்லவா?

அப்போது யாழ்பாணம் சிறைச் சாலையில் இருந்த தமிழ் கைதிகளும் பயம்.
தாமும் கொல்லப்படலாம் என்று நினைத்தார்கள்.

“குக்கூ”  வும்  எதோ திருட்டுக் குற்றத்துக்காக யாழ்பாணச் சிறையில் இருந்தான். அநியாயமாக சாவான் ஏன் என்று சிறையிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டான்.

வெளியே வந்தவன் ஆங்காங்கே கைவரிசை  காட்டினான்.

நவாலியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த இளம்பெண்ணை தாக்கினார்.

ஒரு லட்சம்  ரூபாய் பெறுமதியான நகைகளோடு கம்பி நீட்டினான்.

ஒரு நாள் “குக்கூ”  வை வழிமறித்தனர் சில இளைஞர்கள். “குக்கூ” முதலில் முறைத்துப் பார்த்தான்.

பின்னர் என்ன நினைத்தானோ ஓடத் தொடங்கினான்.  இளைஞர்களில் ஒருவர் சுட்டார்.

“குக்கூ” விழுந்தான். மல்லாகத்தில் ஒரு மின்கம்பத்தில்  “குக்கூ” வின் உடலைக் கட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

” பல தடவை எச்சரித்தோம். கேட்கவில்லை. அதனால் சுட்டுவிட்டோம்” என்று சுன்னாகம், மல்லாகப் பகுதிகளில் சுவரொட்டிகள் காணப்பட்டன.

புலிகள் தான் “குக்கூ”வைச் சுட்டனர். “குக்கூ” சிறையில் இருந்திருந்தால் செத்திருக்க மாட்டான்.

ஐப்பானுக்கு குறி

இதுபோல மற்றொரு சம்பவம். முல்லைத்தீவுச் சேர்ந்தவர் மகேந்திரன்.  இவரை மகேந்திரன் என்று சொன்னால் தெரியாது. ஜப்பான் என்று சொன்னால் தான் தெரியும்.

தனியார் வீடகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டுவதில் ஜப்பான் படுசூரன். அடி,பிடி விவகாரங்கங்களிலும் கெட்டிக்காரன்.

ஜப்பானை தேடிவந்தனர் மூன்று இளைஞர்கள். ஜப்பானுக்கு விஷயம் விளங்கிவிட்டது. வந்தவர்களையும் ஓரளவு அவனுக்கு தெரியும்.

ஓடித்தப்ப வழி பார்த்தான். சூடு விழுந்தது. தலையில் ஒரு சூடு. மார்பில் ஒரு சூடு. ஜப்பான் செத்துப் போனான்.

இதற்கு அன்புடன் படைப்பிரிவு உரிமை கோரியது. இது புளொட் அமைப்பின் ஒரு பிரிவாகும்.

பிரபலமான மற்றொரு சண்டியருக்கு புலிகள் குறிவைத்தனர். குறிவைக்கப்பட்டவரும் லேசுப்பட்டவரல்ல.

(தொடர்ந்து வரும்..)

அரசியல் தொடர்..எழுதுவது அற்புதன்.

 

sornam-2  மண்டைதீவு  இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட  பிரபாகரன்:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 40) sornam 2வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

28.06.95 அதிகாலை மண்டைதீவு  இராணுவ முகாமை புலிகள் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.

dcp5464646446  மண்டைதீவு  இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட  பிரபாகரன்:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 40) dcp5464646446முகாம் தாக்குதல் காட்சியே மேலுள்ள படங்கள். கைப்பற்றப்பட்ட    ஆயதங்களை புலிகளது தலைவர் பிரபாகரன், கடற்புலித் தளபதி சூசை, புலிகளது மூத்த தளபதி சொர்ணம், யாழ் தளபதி பானு ஆகியோர் பார்வையிட்டனர்.

28.07.95 இல் வெலிஓயா தாக்குதல் புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை புலிகளது பாணியிலேயே பார்வைக்கு வைக்க இராணுவத்தினருக்கு ஒரு வாய்ப்பு.  இராணுவ வெற்றிகளை பறைசாற்றுவதில் இரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டுகின்றன.

ஆயுத பலத்துக்கே முதல் மரியாதை.

padankal  மண்டைதீவு  இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட  பிரபாகரன்:  (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 40) padankal

http://ilakkiyainfo.com/அல்பிரட்-துரையப்பா-முதல-16/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41)

கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41)
 
 

சண்டியர் ஆதிக்கம்:

இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது.

கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும் நடந்துகொண்டனர்.

அவர்களை ‘விலாசங்கள்’ என்று பொதுவாக அழைப்பதுண்டு. ‘விலாசம்’ காட்டுவதென்றால் ஒரு நாலு பேருக்காவது நடுவீதியில் வைத்து அடிக்கவேண்டும.

நாலுபேருக்கு அடிப்பவனோடு கூடித்திரிந்தே ‘விலாசம்’ பெற்றவர்களும் பலர் .இருக்கிறார்கள்..

இதில் செல்லக்கிளி முதல் ரகம்.

ஒரு பொலிஸ்காரர் ஏதோ முறைப்பாட்டை விசாரிக்க செல்லக்கிளியிடம் வந்தார். செல்லக்கிளி அந்த பொலிஸ்காரரை அடித்துவிட்டாராம.

“செல்லக்கிளி பேய் விலாசம் மச்சான்” யாரும் வம்பு தும்புக்கு போகமாட்டார்கள்.

அதனைவைதே பெண்களோடு சேஷ்டைகள் செய்வது, கடைகளில் கப்பம் வாங்குவது என்று செல்லக்கிளியின் கொடி பறந்தது.

ஒரு நாள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்புறமிருந்த தேனீர்க் கடைக்கு தனது நண்பரோடு சென்றார் செல்லக்கிளி.

செல்லக்கிளியை தேடித்திரிந்த இயக்கத்திற்கு தகவல் பறந்தது. மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்து காத்திருந்தார்கள்.

தேனீர் அருந்திவிட்டு தனது நண்பருடன் வெளியே வந்தார் செல்லக்கிளி. முதல் வெடி நெற்றியை குறிபார்த்து வைக்கப்பட்டது. குறி பிசகவில்லை. செல்லக்கிளி செத்துப்போனார்.

ஒழிப்பிலும் போட்டி

சமூக விரோதிகள் ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இதனால் சமூக விரேதிகள் ஒழிப்பு நடவடிக்கையிலும் இயக்கங்கள் மத்தியில் போட்டி தலைதூக்கியது.

தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலோ) என்ற இயக்கத்திற்கும், தனது பங்குக்கு சமூக விரோதிகள் சிலரையாவது கொல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

இயக்கங்களின் போட்டியால் மாட்டிக்கொண்ட கோழிக்கள்ளன்

index  கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) index4அதன் விளைவு கொஞசம் நகைச்சுவை கலந்த விபரீதம். அதையும் சொல்லுகிறேன்.

யாழ்பாணம் மானிப்பாயில் ஒரு பிரபல அரிசி ஆலையில் நல்லிரவு நேரத்தில் கோழிகளை திருடினார் ஓர் இளைஞர்.

கோழிகள் போட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட உரிமையாளர் கரல் கொடுக்க அயலவர்கள் திரண்டுவிட்டனர்.

11கோழிகளோடு மாட்டினான் கோழி திருடன்.

இந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடிகொடுத்து விட்டு, அருகிலுள்ள தந்திக்கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர்.

அப்போது அங்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டது.

தங்களோடு கோழித்திருடனை அனுப்புமாறு கேட்டு, அவனது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றது.

அதே நாள் யாழ்பாணம் மத்திய சந்தையில் ஒரு இளைஞருக்கு தர்ம அடி நடந்துகொண்டிருந்தது. ஒரு நபரிடமிருந்து 95/-ரூபா பிக்பொக்கட் அடித்துவிட்டார் அந்த இளைஞன்.

கோழித்திருடனை கடத்திச் சென்ற அதே இளைஞர் குழு அங்கும் தோன்றியது. பிக்பொக்கெட் திருடனை கூட்டிச்சென்றுவிட்டது.

பின்னர் அவர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டு உடல்கள் மானிப்பாய் வீதியில் போடப்பட்டிருந்தன.

உடல்களின் அருகில் தீர்ப்பு வழங்கியதற்கு உரிமை கோரியிருந்தது தமிழீழ இராணுவம்.(ரெலோ)

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் புளொட் அமைப்போடு நட்பாக இருந்தது தமிழீழ விடுதலை இராணுவம். தமது தலைவர் ஒபரோய் தேவனை புலிகள் சுட்டபின்னர்“புளொட்” அமைப்பின் உதவியோடு தான் “ரெலோ” இயங்கியது

சமூக விரோதிகள் ஒழிப்புக்கு மக்களிடம் ஆதரவு இருந்தது உண்மைதான். ஆனால் கோழிக் கள்ளனுக்கும் பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டணை வழங்குவதை மக்கள் வரவேற்க வில்லை.

பொலிஸ் அதிகாரி உதவி

யாழ்பாணம் “மயிலிட்டியில் மற்றொரு சம்பவம்.

வீடொன்றுக்குள் கொள்ளையிட முயன்ற இளைஞர் குழுவொன்றை ஊர் மக்கள் திரண்டு துரத்தினார்கள். ஒருவர் மட்டுமே ஊர் மக்கள் கையில் வசமாக சிக்கிக்கொண்டார்.

இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் பொலிசில் ஒப்படைக்கலாம் என்று அவரை கட்டிவைத்து காவல் காத்தனர் ஊர் மக்கள்.

இந்த செய்தி இயக்கமொன்றுக்கு எட்டியது. காரொன்றில் பறந்தனர்.

“பொலிசாரிடம் ஒப்படைத்தால் ஒழுங்காக விசாரிக்க மாட்டார்கள். நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” என்றனர் காரில் வந்த இளைஞாகள்.

அழைத்து செல்லப்பட்டவருக்கு பூசை கொடுத்து அவரது கூட்டாளிகள் பற்றிய விபரங்களையும் அந்த இயக்க இளைஞர்கள் திரட்டிக்கொண்டனர்.

பின்னர் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் நடவடிக்கையே அது. ஈ.பி.ஆர்.எல்.எப்

அக் கொள்ளை பற்றி விசாரித்தபோது ஒரு பொலிஸ் அதிகாரியும் உதவினார்.

அத்தோடு கொள்ளையர்களிடம் கைப்பற்றி, பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றையும் இயக்கத்திடம் தனது பரிசாக கொடுத்தார்.

அவர்தான் இன்ஸ்பெக்கடர் ஜெயக்குமார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இருந்தவர். முன்னாள் ராஜாங்க அமைச்சர் திருமதி ராகமனோகரி புலேந்திரனின் சகோதரர்.

இரண்டாம் ஈழப்போர் காலகட்டத்தில் புலிகளால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமார்.

புலிகளின் சிறையிலேயே மரணமானார் என்பது குறிப்பிடதக்கது. அவரது உறவினர்களுக்கு ஜெயக்குமார் இறந்துவிட்டார் என்ற தகவலையும் அவரது உடைகளையும் மட்டுமே கொடுத்திருந்தனர் புலிகள்.

“போக மாட்டேன் ஐயா”

சமூகவிரோதிகள் ஒழிப்பில் இயக்கங்கள் போட்டிபோட்டுக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம்.

யாழ் பொலிஸ் நிலையத்தில் திருட்டுக்குற்றங்களுக்காக ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவரது வீட்டுக்கு கடிதம்மொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடிதத்தை எடுத்துக்கொண்டு அவரது தயார் பொலிஸ் நிலையம் சென்றார்.

மகனிடம் கொடுத்தார். கடிதத்தை படித்து முடித்தவரின் முகம் இருண்டுவிட்டது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காலில் போய் விழுந்தார்.

“ஐயா என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் இங்கேயே இருக்கிறேன். நான் செய்த குற்றங்களுக்கு நீங்களே தண்டனை தந்துவிடுங்கள் ஐயா” என்றார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆச்சரியம்.கடிதத்தை வாங்கி பார்க்கிறார். அது , “சங்கலியன் பஞ்சாயத்”தால் தால் அனுப்பப்பட்டிருந்த எச்சரிக்கை கடிதம்.

அன்றும் ஒரு காட்சி

தற்போது அரசியல் தீர்வு யோசனைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்களும், எதிர்பார்ப்புக்களும் நிலவுகின்றனவல்லவா?

அதனால் 84 இலும் இதுபொலவே தோன்றி மறைந்த காட்சிகள் சிலவற்றை காலப்பொருத்தம் கருதி நினைவுபடுத்திவிட்டு மேலே செல்லலாம்.

84இல் ஜே.ஆர். அரசு வட்டமேசை மகாநாடு நடத்தியது பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

anrum  கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) anrum
இலங்கையின் தமிழ் பத்திரிகைகள், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவையெல்லாம், வட்ட மேசை மாநாடு தமிழர் பிரச்சனையைத் தீர்க்கப்போவதாகவே எழுதிவந்தன.

வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒதுங்கியிருந்ததைக் கண்டித்தும் வந்தன.

பொல்காவலையில் மாதிரிக் கிராமம் ஒன்றை திறந்து வைத்து அன்றைய பிரதமர் பிரேமதாசா உரையாற்றினார். அவர் அப்போது சொன்னது இது.

“நம் சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இச் சூழ்நிலையில் பொது மக்களின் ஆலோசனைகளை நாம் கோருகிறோம்” நாம் சாவாதிகாரிகள் போல் செயல்படவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் பிரச்சனைகளை தீர்க்க மநாடு நடத்தலாம். மக்களின் ஆலோசனைகளை கோரலாம், இதில் எந்தவித தவறுமில்லை. நாட்டில் ஒற்றுமை நிலவவேண்டும்.

சுதந்திரம் கட்டிக்காக்கப்படவேண்டும. இதற்கு பிக்குகளின் ஆலோசனைகள் அவசியம்.

amirthar  கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) amirtharதிரு. அ.அமுர்தலிங்கம்

அமிரின் முழக்கம்

இதேவேளை கூட்டணிச் செயலதிபர் திரு. அ.அமுர்தலிங்கம் பேசியது இது :

“வடக்கும்-தெற்கும்”  இணைந்த சுயாட்சி மூலமே கிழக்கை காப்பாற்ற முடியும். வடகிழக்கு இணைந்த மாநில நிர்வாகத்தின் மத்திய நிலையமாக திருகோணமலை இருக்கும்.

இன்று திருமலையில் எவ்வாறு திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறதோ, அதனை அடுத்துள்ள விந்தனை பகுதியிலும் குடியேற்றம் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் அம்பாறையில் முஸ்லிம்களைவிட சிங்களவர்கள் தொகை கூடிவிட்டது. இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் அம்பாறையில் தடுத்து நிறுதப்படவேண்டுமானால் வடக்கும்-கிழக்கும் இணைந்த மாநில ஆட்சி அமைக்கவேண்டும”.
இது நிந்தாவூர் முன்னாள் எம.பி.முஸ்தப்பா தலைமையில் கல்முனையில் மெதடிஸ்த சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமிர்தலிங்கம் பேசியது.

அம்பாறையை பாதுகாககவே மாநில சுயாட்சித் திட்டம் என்று அமிர் கூறினார்.

பிராந்திய சபை திட்டத்தில் அம்பாறையை விட்டுக்கொடுக்க தயார் என்று கூட்டணித்தலைவர் திரு.சிவசிதம்பரம் சமீபத்தில் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

முஸ்லிம் காங்கிரஸ்

1984 இல் முஸ்லிம் காங்கிரஸ் இப்போது உள்ளதைபோல செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

ஆயினும் தனி மாகாணசபை கோரிக்கை மூலமாக தனது குரலை உயர்த்த தொடங்கியது.

கூட்டணி தலைவர்களை தனியே சந்தித்து பேச்சு நடத்தியது முஸ்லிம் காங்கிரஸ்.

மாநில சுயாட்சிக்கோரிக்கைக்கு பௌத்த மதகுமாரின் பலத்த எதிர்ப்பும் நிலவியது.

மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான புதிய ஏற்பாடுகள் எதனையும் ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதனையடுத்து பௌத்த மகாசங்கத்தினரை கூட்டணித்  தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.
மாநில சுயாட்சி பெளத்த மதத்திற்கோ, அல்லது சிங்கள மக்களுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்களுக்கு விளக்கிக்கூறினார்கள்.

எனினும் அதனை பௌத்த சங்கங்கள் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளவில்லை.

இத்தனைக்கும் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் போராளிகள் அமைப்புக்களது கருத்துகள் எதனையும் கூட்டணி தனது காதில் போட்டுக்கொள்ளவு இல்லை.

தமிழீழம் காண வாருங்கள் என்று இளைஞர்களை அழைத்த கூட்டணி, அதற்காகப் போராடிக்கொண்டிருந்த இயக்கங்களை கவனத்தில்கொள்ளவில்லை.

இறுதியில் வட்டமேசை மாநாடு தோல்வி கண்டது.

வேலணையில் கொள்ளை

84ல் யாழ்பாணத்தில் வேலணை இலங்கை வங்கியில் குறிவைத்தது தமிழீழ விடுதலை இராணுவம்(ரெலோ)

வங்கிக்குள் புகுந்த இளைஞர்கள் இரும்புப் பெட்டியை தூக்கிவந்து ஒரு வானில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.

தகவல் பொலிசாருக்கு எட்டியது.

இரும்புப் பெட்டியோடு வந்த வேன் பண்ணைப் பாலத்தடியில் வைத்து மறிறக்கப்பட்டது.

வேனில் இருந்து குதித்து “ரெலா”உறுப்பினர்கள் தப்பி ஓடினார்கள்.

பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

ரெலா இயகத்தைச் சூந்த கணேசலிங்கம் என்பவரே பலியானவராவார்.

இரும்புப் பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது,
மீட்கப்பட்ட இரும்புப்பெட்டிக்குள் 61/2 இலச்சம் ரூபா பணம் இருந்தது.

குறிபிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்படக்கூடிய முறையில் அமைந்த இரும்புப் பெட்டி அது.

ரெலா இயக்கத்தின் நடவடிக்கைகள் சிலவற்றை நோக்கினோம். ரெனா இயகத்தின் ஒரு விபரீத நடவடிக்கை பற்றி நிச்சியம் அறிந்துகொள்ளவேண்டும.

தமிழ் தேசிய இராணுவம் என்பதைத்தான் சுருக்கமாக “ரெனா” என்று அழைத்தார்கள்.

இதன் தலைவர் தம்பாபிள்ளை மகேஸ்வரன்.

தமது இயக்கத்தின் மிகப் பெரிய நடவடிக்கை ஒன்றிற்கு திட்டமிட்டார் மகேஸ்வரன்.

திட்டம் அமோகமாகத்தான் இருந்தது. அதனைச் செயற்படுத்தியபோது ஒரு பயங்கரம் நிகழந்தது.

தொடரும்…

-எழுதுவது அற்புதன்-

புலிகளின் ஷெல் தொழிற்சாலையில் விபரீதம் :

pulikala  கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) pulikalaயாழ்பாணத்தில் புலிகளது ஷெல் தொழிற்சாலை ஒன்றில் 10.07.95 அன்று வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது.

இது பற்றி தகவல்களே திரிபடைந்து 150 பொதுமக்கள் புலிகளின் வெடி விபத்தால் பலி என்று வதந்திகாளகியதும் குறிப்பிடதக்கது.

முரசு மட்டுமே வதந்தியை மறுத்திருந்தது.

யாழ்பாணத்தில் கொக்குவிலில் உள்ள தலையாளி என்னுமிடத்தில் ஒரு வீட்டில் இருந்த ஷெல் தொழிற்சாலையிலேயே வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தால் பெரும் தீப்பிழம்பு உருவானது. அயலில் உள்ள வீடகளின் ஜன்னல் கண்்ணாடிகள் உடைந்து பலர் காயமடைந்தனர்.

கோபமடைந்த அயலவர்கள் புலிகளை எதிர்த்து திரண்டுவர, மன்னிப்பு கேட்ட புலிகள் காயமடைந்தவர்கள் யாவரையும் தமது வாகனங்களில் ஏற்றி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த வெடிவிபத்தில் கப்டன் கண்ணாளன் (ஏரம்பு-கந்தசாமி-மட்டகளப்பு) எனப்படும் புலிகள் அமைப்பு உறுப்பினர் பலியானர்.

புலிகளது நாலு ஆதரவாளர்கள் பலியானார்கள்.

1.தசரத ராஜ்குமார் சந்தாணம்- கனகராயன் குளம்-வவுனியா.

2. நடராஜா ராஜபாலன்- காங்கேசன்துரை,

3.நடராஜா கணநாதன், அத்தியடி-யாழ்பாணம்.
4. சோமசுந்திரம் மிதிலைகாந்தன் –பூநாறி மடம் லேன் யாழ்பாணம். ஆகியோரே பலியான ஆதரவாளர்களாவர்.

நவாலி தேவாலயம் மீத தாக்குதல் நடந்தது நூறுவீதம் உண்மை.

navali church boming_CI  கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும்  மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) navali church boming CIதேவாலய கூரைகள், ஜன்னல்கள் யாவும் சின்னாபின்னமாகின. தேவாலயத்தோடு இருந்த கட்டிடங்களுக்குள் தஞ்சமடைந்த மக்களே கொல்லப்பட்டனர்.

தேவாலயம் சேதங்கள், காயங்களோடு தப்பிக்கொண்டு விட்டது. தரைமட்டமாகவில்லை என்பதால், தாக்குதலே நடக்கவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.

தேவலாய வளாக இடிபாடுகளுக்கிடையில் புக்காரா விமானத்தின் சிதைவடைந்த பாகங்களை புலிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அக்காட்சியே படத்தில் இருக்கிறது.

http://ilakkiyainfo.com/கோழித்திருடனுக்கும்-பிக/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏர் லங்கா’ விமானத்தில் குண்டு வைத்த ‘தமிழிழீழ இராணுவம்': அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42)

‘ஏர் லங்கா’  விமானத்தில் குண்டு வைத்த  ‘தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42)
 

 

 

தவறு திருத்தம்:

சென்ற வாரம் ஒரு பெயர் குழப்பம். ஒரேவிதமான பெயர்கள்  காரணமாக ஏற்பட்ட குழப்பம்.  தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் இயஙங்கிய இயக்கத்தின் பெயர்  “ரெனா”  என்று குறிப்பிட்டுவிட்டேன.

“ரெனா”   என்பது அமரர் அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகன் பகீரதனால் ″தமிழ் தேசிய இராணுவம்”  என்னும் குழுவையே குறிக்கும்.

இதன் தோற்றமும் அழிவும் குறித்து முன்னமே விளக்கியிருந்தேன்.

தம்பாபிள்ளை  மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய  இயக்கம்  “தமிழிழீழ இராணுவம்” . இது சுருக்கமாக TEA  என்று அழைக்கப்பட்டது.

ஒபரோய் தேவன் உருவாக்கிய இயக்கம் “தமிழீழ விடுதலை இராணுவம்”. சுருக்கமாக (TELA) என்று அழைக்கப்பட்டது.

ஜெகன் உருவாக்கிய இயக்கம் உருவாக்கிய இயக்கம் “ரெலி” என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது.

ரெலோ, ரெனா, ரெலா, ரெலி பெயர் குழப்பம் தலை சுற்ற வைக்கிறதல்லவா? இவற்றில் உடைபாபாடுகளோடு தற்போது மிஞசியிருப்பது “ரெலோ” மட்டுமே.

தம்பாபிள்ளை மகேஸ்வரன் லன்டனில் இராசயன விஞ்ஞானம் படித்தவர்.

பானாங்கொடை சிறையிலிருந்து தப்பி ஓடி. பின்னர் மீண்டும் கைதானார். மட்டக்களப்பு சிறையுடைப்பு மூலமாக இவரும் வெளியே வந்தார்.

பனாங்கொடை சிறையிலிருந்து தப்பியதை வைத்து “பனாங்கொடை மகேஸ்வரன்” என்று அழைக்கப்பட்டார்.

பாரிய கொள்ளை

1984இல் நடைபெற்ற வங்கிக்கொள்ளையென்று பரபரப்பாக பேசப்பட்டது.  மட்டக்களப்பில் காத்தான்குடி மக்கள் வங்கியல் புகுந்த இளைஞர் கோஷ்டியொன்று அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டது.

கொள்ளைபோன  நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டது.

தமிழீழ இராணுவம் (TEA) கச்சிதமாக மேற்கொண்ட   நடவடிக்கையே அதுவாகும்.

மட்டக்களப்பில் உள்ள பன்குடாவெளியில் சில வீடுகளில் கொண்டுபோய் நகைகளை புதைத்து வைத்தனர்.

பொலிசாரின் தேடுதல் வேட்டையின் தீவிரம் குறையும் போது நகைகளை யாழ்பாணத்திற்கும், தமிழ் நாட்டுக்கும் கொண்டு செல்வதுதான் நோக்கம்.

நகைகளை புதைத்து வைத்த வீடொன்றில் இருந்த பெண்மணிகளுக்கு ஒரு யோசனை “பெரும் தொகையாக புதைக்கப்பட்டுள்ள நகைகளில்  கொஞ்சம் எடுத்து விற்றுவிட்டால் என்ன?”

யோசனையை நிறைவேற்றினார்கள். தமிழீழ இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் அந்த யோசனையில் பங்கிருந்தது.

செங்கலடியில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொடுத்து    பணம் பெறப்பட்டது.

தகவல் கசிந்தது

இதற்கிடையே தமிழீழ இராணுவ இயக்கத்தினரால் புதைத்து வைக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதி யாழ்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒரு பகுதி நகைகள் மட்டும் தொடர்ந்தும் பன்குடாவெளியில்  உள்ள இரு வீடுகளில் பொலிதீன் பைகளில் போட்டு புதைக்கப்பட்டிருந்தன.

செங்கலடியில் நகைகளின் விற்பனை மூலமும, இரகசியத்தை பேணமுடியாத இயக்க உள்நிலை காரணமாக பொலிசாருக்கு தகவல் கசிந்துவிட்டது.

பன்குடாவெளியில் உள்ள வீடொன்றை ஏறாவூர் பொலிசார் சுற்றிவளைத்தனர்.  வீட்டுக்குள் தமிழீழ இராணுவ முக்கியஸ்தர் வரதன் சிக்கிக்கொண்டார்.

index  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) index11வளவைத் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட தங்க நகைகள் வந்துகொண்டிருந்தன.

பொலிசாரின் தீவிர கவனிப்பில் வரதன் தனக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் ஒப்பிவித்தார்.

பன்குடாவெளியில் மற்றொரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டன.

யாழ்பாணம் சங்கானையிலும் ஒரு வீட்டிலிருந்தும்  நகைகள் கைப்பற்றப்பட்டன. மீண்டும்  கைப்பற்றிய நகைகளின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.

மீதி நகைகள் தமிழீழ இராணுவத்தால் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

ராஜயோகம்

வாகனங்கள் அலுவலகங்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் உறவினர்களின் ஆதிக்கம் என்பவற்றின் மத்தியில்  தமிழ் நாட்டில் ராஜபோகம் நடத்தியது தமிழீழ இராணுவம்.

கொள்கை, கோட்பாடு, இயக்க்கட்டுப்பாடு என்பவை பற்றி துளியும் கவலைப்படாத இயக்கங்களில் தமிழீழ இராணுவமும் ஒன்று.

ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாட்டையும் திடீரென்று கிடைத்த காற்றில் பறக்கச் செய்துவிட்டன.

இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

தமிழ் நாட்டில் கோடியக்கரையில் தமிழீழ இராணுவமுகாம் ஒன்று இருந்தது.

கடற்கரைக்கும் முகாமுக்கும் வாகனங்களில் மின்னல் வேகத்தில்  பறந்து திரிவார்கள்.

பாடசாலைகள் விடும் நேரத்தில் என்றால் வேகம், வெட்டி ஓடும் லாவகம் மேலும் அதிகமாக இருக்கும்.

ஒரு நாள் அந்த விபரீதம் நடந்தது.

கண்மண் தெரியாமல் வந்த வந்த தமிழீழ இராணுவ வாகனம் பாடசாலை சிறுவர்கள் மீது  மோதியது. சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

கத்திகள், பொல்லுகளோடு ஊரே திரண்டுவிட்டது. பொலிஸ் தலையிட்டு காப்பாற்றியது,

srilanka  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) srilankaபயங்கரத் திட்டம.

தமிழ் நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில்  உதித்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான  நிலையத்திலிருந்து  கொழும்பு வரும் “ஏர் லங்கா” விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிடவேண்டும.

குறித் நேரத்தில் வெடிக்கும்  (டைம் பாம்) அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும்.

திட்டத்தை நிறைவேற்ற  மீனம்பாக்கம் விமானநிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது.

ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இருவரை கைக்குள் போட்டுக்கொண்டார்கள.

பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிடவேண்டும்.

பொதுகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச சேர்ந்துவிடும்.

திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது.

பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது.

சுங்க அதிகாரிகளில்  ஒருவருக்கு அந்த சூட்கேசில் சந்தேகம்  வந்துவிட்டது. சூட்கேசை எடுத்து, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார்.

வந்தது ஆசை

அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றார்.

அவர் நினைத்திருந்தால் உடனடியாகவே சூட்கேசை திறந்து பரிசோதித்திருக்கலாம். செய்யவில்லை. அதற்கு காரணம் இருந்தது.

“சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும். பாரமாக வேறு இருக்கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன? என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது.

தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக்கொண்டார்.

சூட்கேஸ் கைமாறிவிட்டது. விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்துவிடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர்களுக்கு விளங்கிவிட்டது.

பயணிகள் அனுப்ப வந்த பார்வையாளர்கள் போல் நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர்.

“விமான நிலையத்தில் ஒரு சூட்கேசுக்குள் குண்டு இருக்கிறது. உடனே அப்புறப்படுத்துங்கள்”என்று தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.

“ தங்கத்தை கடத்த முற்பட்டவாகள் தான் கயிறு விடுகிறார்கள்” என்று நினைத்து சுங்க அதிகாரி அலச்சியமாக இருந்துவிட்டார்.
மறுபடியும் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள்.

“அனாமதேய மிரட்டல், வழக்கமான ஏமாற்று” என்று நினைத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தம்பாட்டில் இருந்துவிட்டனர்.

மூன்றாவது தடவை சூட்கேசின் நிறத்தையும் கூறி தகவல் சொல்லப்பட்டது.

Evening-Tamil-News-Paper_60678827763  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) Evening Tamil News Paper 60678827763சந்தேகம்
தகவல் அறிந்த சுங்க அதிகாரிக்கும்  “உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் வந்துவிட்டது.  ஊழியர் ஒருவரை அழைத்து சூட்கேசை வெளியே கொண்டு செல்லுமாறு பணித்தார்.

சூட்கேசோடு ஊழியர் செல்ல, சுங்க அதிகாரியும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கூடவே சென்றனர்.

விமான நிலைய  கட்டிடத்தைவிட்டு அவாகள் வெளியேற முன்னர்.

குண்டு வெடித்தது!!

பயங்கரமான சப்தம்!!

எங்கும் ஒரே புகை மூட்டம்.

கட்டிடம் இடிந்து வீழ்நதது.

இலங்கையர் உட்பட முப்பதுக்கு மேட்பட்டோர் பலியானார்கள். நூறுபேர்வரை காயமடைந்தனா.

தமிழ் நாடெங்கும் அதிர்ச்சி. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திவிர புலன் விசாரனைக்கு உத்தரவிட்டார்.

ஈழப் போராளிகள் குண்டு வைத்திருப்பார்கள் என்று தமிழக மக்கள் நம்ப மறுத்தார்கள்.

தமிழக மக்களை பலியாக்கும் நடவடிக்கையை ஈழப்போராளிகள் ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்கு காரணமாகும்,

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஈ.பி.ஆா.எல்.எப்  சூட்டோடு சூட்டாக சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது.

“மீனம்பாக்கம் வெடி குண்டு அமெரிக்க சி.ஐ.ஏயின்  சதி. தமிழக மக்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் இடையே விரிசலை தூண்டும் முயற்சி”

என்ற வாசங்களோடு அந்தச் சுவரெட்டிகள் காணப்பட்டன.

இதேநேரம் எம்.ஐி.ஆரை இந்திய மத்திய அரசு தொடர்பு கொண்டது.  மிக முக்கியமான செய்தியொன்றை அவாகுள் எம்.ஐி.ஆரின் காதில் போட்டார்கள்.

எம்.ஐி.ஆர் குழம்பி போனார்.

தொடரும்…

ஏவுகணைகள் -சில தகவல்கள்

B22936B18  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) B22936B18Misil antiaereo Blowpipe

நவீன யுத்தத்தில் ஏவுகணைத் தொழில் நுற்பம் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது.

ஜெர்மனியின் விஞ்ஞானி டாக்டர் வெணர் வொன் பிரேனிக் என்பவர்தான் ஏவுகணை யுத்தத்தை  ஆரம்பித்து வைத்தவர்.

இவரை ஏவகணையின் தந்தை என்று சொல்லலாம.

ஏ1.ஏ2. ஏ3.ஏ4 என்ற பெயர்களில்  ஹிட்லரின் ஜெர்மன் படை ஏவகணைகளை வைத்திருந்தது.

ஜெர்மன் படைகளிடம் இருந்த ஏவகணைகளில் அதிக சக்தி வாய்ந்தது “வி2″ என்ற பெயரிடப்பட்ட ஏவுகணையாகும்.

2150 இறாத்தல் எடை கொண்ட வெடிபொருளை 200மைல் தூரம் காவிச் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது.

இந்த ரக ஏவுகணைகள் மூலம் இலன்டன் நகர்மீது மட்டும் 1115 தடவைகள் 1944இல் தாக்குதல் நடத்தப்பட்டது.

1945 அணுகுண்டு தயாரிக்கும் வரை “வி2″ ரக ஏவகணைதான் உலகில் அதி சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்தது.

1945 மே மாதம் ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்க படைகள், ஜெர்மன் எங்கும் சல்லடை போட்டுத் தேடி “வி2″ ரக ஏவுகணைகளை உற்பத்தி செய்யக் கூடிய உதிரிப்பாகங்களை கைபற்றிக் கொண்டன.
இவற்றின் எடை ஒரு தொன்வரை  இருந்ததாம்.

300க்கு மேற்பட்ட வாகன்ங்களில் எல்லாவற்றையும் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தது  அமெரிக்கா.

சேவியத் யூனியனும் தனது பிடியில் வந்த ஜெர்மன் பகுதியில் தேடி “வி2″ ரக ஏவுகணைகளை எடுத்துக்கொண்டது. விஞ்ஞானிகள் சிலரையும் பிடித்துக்கொண்டது.

ஆரம்ப கால ஏவுகணைகள்   குறித்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதில் பல தவறுகளை செய்தன.

ஆனால் நவீன ஏவகணைகள்  கம்பியுட்டர் மூலமே கட்டுப்படுத்தப்பட்டு, இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்ககூடியவையாகும்.

ஆனால் இந்த ஏவகணைகளை தடுத்து அழிக்ககூடிய ஏவுகணைகளும் பாவனையில் இருக்கின்றன.

நவீனரக ஏவகணைகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ltte-usa-arrest-20121217-2  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) ltte usa arrest 20121217 2

1.தரை-தரை ஏவகணைகள்: இவற்றில் நெடுந்தூர, நடத்தர, குறந்தூர ஏவகணைகள் இருக்கின்றன.

இவவை அணு ஆயதங்களையும் சுமந்து செல்லக் கூடியவை. கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவகணைகள் என்று சொல்வது இவற்றைதான். நீர் மூழ்கிக்கப்பல்கள், யுத்தக் கப்பல்களில் இருந்தும் இவற்றை ஏவமுடியும்.

தரை- ஆகாய ஏவகணைகள்: விமானங்களை தாக்கியழிக்கவே இவை பயன்படுத்தப்படுகின்றன.

தரையில் வைத்து ஏவக்கூடிய ஏவகணைகள், தோளில் வைத்து ஏவப்படும் சிறிய ரக ஏவகணைகள் என்று பல்வேறு ரகங்களில் இருக்கின்றன.

ராடர் மூலம் செலுத்தப்படும் ஏவகணைகளும் இருக்கின்றன. கெரில்லாப் போர் முனைகளுக்கு தோளில் வைத்து ஏவப்படும் ஏவகணைகளே ஏற்றவையாக உள்ளன.

இலக்கை தேடிக் கண்டுபிடிக்கும் மோப்ப சக்தியும் நவீன விமான எதிர்ப்பு ஏவகணைகளுக்கு இருக்கிறது.

வெப்பதை நாடிச்செல்லக் கூடியவை. குறிப்பிட்ட டெசிபல்களுக்கு மேட்பட்ட ஒலியை நாடிச் செல்வன என்று பல ரகங்களில் இருக்கின்றன.

தரையிலிருந்து தரைக்கு வரும் ஏவகணைகளை சந்தித்து அழிக்கக்கூடிய தரை-ஆகாய ஏவுகணைகளும் இருக்கின்றன.
ack-ack-20140616-1  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) ack ack 20140616 1விடுதலைப் புலிகள் பயன்படுத்திய   சிறிய ரக இலகு விமானங்களை தாக்கும் பீரங்கி துப்பாக்கி

3. ஆகாய-தரை  ஏவுகணை:- விமானங்களிலிருந்து தரையிலுள்ள இலக்குகளைத் தாக்க இவ்வகை ஏவகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இலக்கை தவறாகக் கணித்து ஏவினால் அது ஏவகணையின் குறறம் அல்ல.

4.ஆகாய -ஆகாய ஏவுகணைகள்:- இவை போர் விமானம் ஒன்றிலிருந்து மற்றோரு போர் விமானத்தை தாக்க பயன்படுத்தப்படுகின்றன.

நம்நாட்டு யுத்த முனையில் படையினரால் ஆகாய- தரை  ஏவுகணையும், புலிகளால் தரை-ஆகாய ஏவுகணையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மோட்டாரில் இருந்து ஏவப்படும் ஷெல், பீரங்கியில் இருந்து ஏவப்படும் குண்டுகள் போன்றவை ஏவுகணை ரகத்தில் சேர்ந்தவையல்ல.
அவை கனரக ஆயத வகைகளை சேர்ந்தவையாகும்.

pix3_072814  'ஏர் லங்கா'  விமானத்தில் குண்டு வைத்த  'தமிழிழீழ இராணுவம்':  அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பகுதி-42) pix3 072814

http://ilakkiyainfo.com/55977/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.