பெருமாள் 1,533 Report post Posted September 7, 2015 பொட்டன்மானை கடத்திச் சென்ற புளொட்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -43 இந்தியா மறுப்பு: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டது. ஈழப் போராளிகள் பயிற்சி முகாம்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லையென்று இந்திய அரசு மறுத்து வந்துள்ளது. ‘இந்திய ருடே‘ சஞ்சிகையில் தமிழ் நாட்டில் இருந்த போராளிகளின் பயிற்சி முகாம்கள் பற்றிய புகைப்படம் வெளியாகிய பின்பும், இந்தியா தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்தே வந்தது. அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் பிரேமதாசா ‘இந்திய ருடே’ சஞ்சிகையில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். “இந்தியாவில் பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன. பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் பிரதமராக இதனைக் கூறுகின்றேன். இது தொடர்பாக இந்திய அரசு பொறுப்புடன் கவனிக்க வேண்டும். இந்தியா எங்களை அற்பத்தனமாக நினைக்க் கூடாது. எமக்கும் சுயகௌரவம் இருக்கிறது. எந்தச் சவாலையும் சந்திக்க நாம் தயார்” என்று பேசினார் பிரேமதாசா. அப்போது குறுக்கிட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி பா.உ. லக்ஷமன் ஜெயயக்கொடி ஒரு கேள்வி தொடுத்தார். “பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதாக வந்துள்ள செய்திகள் தவறானவை என்று இந்தியத் தூதர் மறுத்துள்ளாரே? என்று அவர் கேட்டார். பிரதமர் பிரேமதாசாவுக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்கள் என்னை நம்புகிறீர்களா? இந்திய தூதரை நம்புகிறீர்களா? என்று காரசாரமாக கேட்டார். அநுராபண்டாரநாயக்கா. அநுராவின் பேச்சு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் திரு.அநுராபண்டாரநாயக்கா. பிரதமர் பிரேமதாசாவின் பேச்சுக்கு பதிலளிப்பதுபோல, அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் சொன்னது இது, “இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு பயிற்சியக்கப்படுவது தொடர்பான தகவலில் உண்மை இல்லை” என்று இந்தியத் தூதர் திரு.எஸ்.ஜே.சத்வால் என்னிடம் கூறினார். இந்திய அரசு சார்பிலான அவரது கூற்றினை நாம் ஏற்கவேண்டும். திரு.சத்வால் திறமைமிக்க ஒரு தூதுவர். இந்திய பிரதமர் திருமதி இந்திராகாந்தியினதும், இந்திய அரசின் சார்பிலும் அவர் பதிலளித்துள்ளார். இதனை நாம் மறுக்க முடியாது. அணிசேரா இயக்கத்தின் தலைவியான திருமதி இந்திரா காந்தியின் உறுதிமொழியை நாம் சந்தேகிக்கூடாது”என்றார் அநுரா பண்டாரநாயக்கா. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரே வடக்கு-கிழக்கு பிரச்சனையின் வளர்ச்சி,அதன் விரிவுகள், தொடர்புகள் குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் எந்தளவுக்கு அப்பாவித்தனமாக பேசியிருக்கிறார் என்று தெரிகிறதல்லவா. தற்போதும் பெரும்பான்மை இனக்கட்சித் தலைவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதுதான் இனப் பிரச்சனையின் வடிவத்தை அவர்களால் சரவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில்கூட இந்தியாவின் மறுப்பை ஒரு சாரர் நம்பிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்… மீனம்பாக்கம் குண்டுவெடிப்புக்கு ஈழப்போராளிகளே காரணம் என்று வெளியே தெரிந்தால் தமது மறுப்பு பொய்யாகிவிடும் என்று இந்திய மத்திய அரசு நினைத்தது. விமானத்தில் குண்டை ஏற்றி, கொழும்பு விமான நிலையத்தில் வெடிக்க வைப்பதே தமிழீழ இராணுவத்தின் நோக்கம் என்பதையும் இந்திய அரசு தெளிவாக அறிந்து கொண்டது. தமிழீழ இராணுவத்தின் இந்த நோக்கம் வெளியானாலும் அதனால் ஒரு பிரச்சனை இந்தியாவுக்கு ஏற்படலாம. இலங்கையில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு தளமாக பாவிக்கப்பட்டு வருவதாக குற்ச்சாட்டு எழுந்துவிடும். எனவே-குண்டுவெடிப்புக்கு ஈழப் போராளி அமைப்பு ஒன்றுதான் காரணம் என்ற உண்மையை அப்படியே அமுக்கிவிடவே மத்திய அரசு தீர்மானித்தது. அனால், இதற்கிடையே தமிழக பொலிஸ் தீவிரமாகச் செயற்பட்டு தமிழிழ இராணுவத்தின் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தது. அவர்கள் கொடுத்த தகவலை வைத்து குண்டு தயாரிக்கப்பட்ட இடமும் கண்டு பிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் குழப்பம் இந்த நேரத்தில்தான் இந்திய மத்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்புகொண்டது. விசாரணைகளை தீவிரப்படுத்துவதையும், அது பற்றிய செய்திகள் உள்ளுர் பத்திரிகைகளில் வெளியாவதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்று எம்.ஜி. ஆரக்கு சூசகமாக சொல்லப்பட்டது. எம.ஜி.ஆர் குழம்பிப் போனார். தமிழக இரகசியப் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மோகனதாசை அழைத்தார் எம்.ஜி.ஆர். அழைத்து என்ன சொன்னார் எம்.ஜி.ஆர்? அதனை மோகனதாஸ் தனது எம்.ஆர். நிழலும் நிஜமும் என்ற நூலில் கூறுகிறார். அது இதுதான். ” அவர் ஒரு குழபத்தில் இருந்தார். வெடிகுண்டு சம்பவத்தில் “மொசாத்” தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி மீண்டும் கேட்டார். அதை நாம் ஏற்றுக்கொண்டால் நம்மை கண்டு சிரிப்பார்கள் என்றேன். இதுவரை செய்யப்பட்ட குற்றப்புலனாய்வில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லையென்றால், என்னை உளவுத்துறைப் பதவியில் இருந்து அவர் விடுவித்துவிடலாம் என்றேன். ஒரு நிமிட்ம் யோசித்தார். பிறகு புன்புறுவல் பூத்தபடியே “புது டெல்லி அவர்கள் விரும்பியபடியே செய்து கொள்ளட்டும். நீங்கள் உங்கள் விசாரணையை தொடருங்கள் என்றார். எம்.ஜி.ஆர்” என்று மோகனதாஸ் தனத நூலில் குறிப்பிடுகிறார். ஆனாலும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் அடக்கமாகவே பின்னர் மேற்கொள்ளப்பட்டன. தடையில்லை தமிழீழ ஈழ இராணுவத் தலைவர் தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமறைவாக இருந்தார். ஆயினும் தமிழ் ஈழ இராணுவம் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் இயங்குவதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. விக்கினேஸ்வரராஜா (இலங்கையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்தவர்) சந்திரகுமார்(தமிழ் பொலிஸ் கான்ஸ்டபில்) மற்றும் ஏர்லங்காவில் பணியாற்றிய இந்தியாவை சேர்ந்த இரு தமிழர்கள் ஆகியோர் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். ‘த லீக்’ என்னும் இந்திய ஆங்கில சஞ்சிகை பின்வருமாறு எழுதியிருந்தது. “தமிழ் நாட்டு குற்றப்புலனாய்வுத்துறை பாராட்டப்படும் விதத்தில் செயற்பட்டிருக்கிறது. ஆனால்.., இந்தச் சம்பவம் முழுமைக்கும் அரசியல் சாயம் பூச அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். காவல்துறையின் கண்டுபிடிப்பை அடுத்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து செயற்படும் ஈழப்போராளிகள் குழுக்களுக்கு அரசு ஏன் ஆதரவு தரவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்” ஆனாலும் இத்தகைய கேளவிகள் எல்லாம் தமிழ்நாட்டின் சாதாரண மக்களிடம் செல்லவில்லை. ஈழப் போராளிகளுக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவு துளியும் குறைவின்றித் தொடரவே செய்தது. கலைஞரின் ரெசோ இக்காலகட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். ‘ரெசோ‘ என்று அது சுருக்கமாக அழைக்கப்பட்டது. “இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும்” என்று கருணாநிதி குரல் கொடுக்கத்தொடங்கினார். முக்கியமாக மூன்று கோரிக்கைகளை கலைஞர் கருணாநிதியால் முன்வைக்கப்பட்டன. 01.இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டும். 02. இலங்கையுடன் இந்திய தனது இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்ளவேண்டும். 03.தனித் தமிழீழம் உருவாக மத்திய அரசு ஆவனசெய்ய வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டம் நடத்தினார் கலைஞர். கைதுசெய்யுமாறு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர். எட்டாயிரம் தொண்டர்களோடு சிறைபுகுந்தார் கலைஞர். “உலகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரை விடுதலை செய்” என்று குரல் எழுப்பினார்கள் தி்.மு.க தொண்டர்கள். இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் எம்.ஜி.ஆர் அரசு ஏன் கைது செய்ய வேண்டும்? ஆகவே, எம்.ஜி.ஆருக்கு தமிழ் பற்றுகிடையாது என்று தி.மு.க சொல்லிக்கொள்ள அதுவும் ஒரு வாய்ப்பானது. தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (ரெசோ) மூலமாக கலைஞர் கருணாநிதி “ரெலோ” இயக்கத்துக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்க முற்பட்டார். இதனால் ஏனைய போராளி அமைப்புகள் “ரெசோ” “ரெலோ”வை வளர்க்கும் அமைப்பு என்று கூறி அதனிடமிருந்து விலகியே இருந்துகொண்டனர். ரெசோவுக்குள் முரண்பாடு கலைஞர் கருணாநிதியோடு திராவிடர் கழகத்தலைவர் சி.வீரமணி,நெடுமாறன் ஆகியோரும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இணைந்து செயற்பட்டு வந்தனர். சி.வீரமணியும், நெடுமாறனும் புலிகள் இயகத்தை ஆதரித்து வந்தனர். அதனால் ரெசோவுக்குள், ரெலோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இக்காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆவேசமாக குரல் கொடுத்தபடி ஒருவர் களத்தில் இறங்கினார். அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது. அவர்தான் மதுரை ஆதீனம் கடவுளே இல்லை என்று மறுத்துவரும் வீரமணி போன்றவர்களோடு, மடாலயபதி ஏன் இணைந்து கொண்டார் என்றும் சிலர் கேள்வி எழுப்பினார்கள். கேள்வியில் கேலியுமிருப்பதை புரிந்துகொண்டவராக மதுரை ஆதீனம் பதில் சொன்னார்.” தமிழர்கள் என்ற இன உணர்வு நம்மை இணைத்திருக்கிறது” தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் தங்கியிருந்த போராளி அமைப்புகள் மத்தியிலான சிறு சிறு உரசல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன. குறிப்பாக புலிகள் அமைப்பினருக்கும், புளொட அமைப்பினருக்குமிடையே கடும் பிரச்சனை நிலவி வந்தது. நேரில் சந்தித்துக்கொண்டால் மோதிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சனை சூடாக இருந்தது. (பொட்டு அம்மான் தலைவர் பிரபாகரனுடன்) புலிகள் கடத்தல்: கூட்டணி தலைவாகள் வீட்டில் புலி உறுப்பினர்களுக்கு அடி 1502.85 இல் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை புளொட் அமைப்பினர் சென்னையில் வைத்து கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியந்தால் ஆச்சரியப்படுவீர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சங்கரியின் சென்னையிலுள்ள வீட்டுக்குத்தான் கடத்தப்பட்டவர் கொண்டு செல்லப்பட்டார். கடத்தி செல்லப்பட்டவரின் பெயர் ஆதவன். அதைத் தொடர்ந்து 05.03.85ல் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரையும், இன்னொரு உறுப்பினரையும் புளொட் அமைபினர் கடத்திச் சென்றனர். அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட புலிகளது மூத்த உறுப்பினர் வேறு யாருமல்ல, பொட்டம்மான் தான் அவர். அப்போது ‘பொட்டு’ என்று அழைக்கப்பட்டார்.( பின்னர் புலிகளின் உளவுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர்) பொட்டம்மானிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறித்துவிட்டு விடுவித்தனா புளொட் அமைப்பினர். இதற்கு முன்னர் யாழ்பாணம் சுழிபுரத்தில் வைத்து புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் 06 பேர் புளொட் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். இது நடந்தது 25.11.84ல் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவதை கண்டுவிட்டனர் இரு இளைஞர்கள். அதனால் அவர்களும் கொல்லப்பட்டர். இக்கொலைகளைத் தொடர்ந்தே புளொட் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கு மிடையிலான மோதல் நிலை தீவிரம் அடைந்தது. கண்ணன் கடத்தல் பொட்டம்மான் கடத்தப்பட்டதோடு பிரபாகரன் சீற்றம் அடைந்தார். தமது மூத்த உறுப்பினர் கடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கை எடுக்க புலிகள் திட்டமிட்டனா. சென்னையில் உள்ள மகாவலிங்கபுரம் என்னுமிடத்தில் தமிழ் தகவல் நிலைய அலுவலகம் இருந்தது. 07.03.85 காலை 09 மணிக்கு அங்கு வந்தார் புளொட் அமைப்பின் படைத்துறைச் செயயலாளா கண்ணன். தமிழ் தகவல் நிலையத்தில் இருந்த ரெலோ உறுப்பினனரான குலசிங்கம் என்பவரோடு கண்ணன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அலுவலகத்தின் வெளியே வெடி ஓசை கேட்டது. புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான சங்கர் என்று அழைக்கப்படும் சொர்ணலிங்கமும், வேறு சில புலிகளும் உள்ளே வந்தனா. கண்ணணை தம்மோடு வருமாறு கூறி வேன் ஒன்றில் கொண்டுசென்றனர். கண்ணனோடு வந்திருந்தவர்களில் ஒருவரான ரவி என்னும் புளொட் உறுப்பினருக்கும் காலில் சுட்டுவிட்டு சென்றுவிட்டனர். தமிழக பொலிஸ் துறையும், உளவுப்பிரிவும் தலையிட்டு கண்ணனை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் கோரின. இரண்டு மணி நேரத்தின் பின்னர் கண்ணன் விடுவிக்கப்பட்டார். இதணையடுத்து புளொட் அமைப்பினர் விடுத்த அறிக்கையில் கடத்திச் செல்லப்பட்ட கண்ணன் பிரபாகரன் முன்னிலையில் கை,கால்களுக்கு விலங்குகள் பூட்டப்பட்டு,சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர். கண்ணன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து புலிகள் அமைப்பினரும் விரிவான பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.“இது ஒரு இறுதி எச்சரிக்கை நடவடிக்கையாகும்” என்று தெரிவித்த புலிகள் அமைப்பினர், தமது உறுப்பினர்கள் கடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்ணனே பொறுப்பாகும் என்றும் கூறியிருந்தனர். 1985 இன் ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் புலிகள் அமைப்பினரின் பிரதான மறைவிடம் ஒன்றை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தனர். (தொடந்து வரும்) (அரசியல் தொடர்… எழுதுவது..அற்புதன்) http://ilakkiyainfo.com/55977/ 1 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted September 19, 2015 பெண் கடற்புலிகளுக்கு வந்த கௌரவப் பிரச்சனை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை – 44) பொலிஸார் எங்கே?? முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் உள்ளடக்கிய வன்னித்தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார். 05.8.84 அன்று ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது புலிகள் நடத்திய தாக்குதல் பற்றி முன்னர் கூறியிருந்தேன். மாத்தையாஅத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது, அத்தாக்குதலையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார். திட்டம் எல்லாம் வகுத்தாகிவிட்டது. தாக்குதல் நடத்தும் அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகிவிட்டது. தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பிவைத்தார் மாத்தையா. நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொலிஸ் வெறிச்சோடிபபோய் கிடந்தது. அங்கு பொலிசார் யாரும் இருக்கவில்லை. தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ பொலிஸ் நிலையத்தை மூடிவிட்டு வாபஸாகியிருந்தனர் பொலிஸார். இன்னொரு முறை தாக்குதல் ஒன்றுக்குப் பயன்படுத்த வாகனம் ஒன்று தேவையாக இருந்தது. வீதியில் காத்திருந்தனர். ஜீப் ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார்கள். ஜீப்பை நிறுத்திய சாரதிக்கு விஷயம் விளங்கிவிட்டது. சட்டென்று ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டார். மாத்தையா உட்பட யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், அக்கால கட்டத்தில் வாகனம் ஒன்றைக் கடத்துவது கடினமான காரியமாக இருந்தது. இப்பொழுது விமானத்தையே புலிகள் கடத்தக்கூடும் என்று நினைக்கும் அளவுக்குப் போராட்ட அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றன. முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த பின்னர்தான் இராணுவ ரோந்து அணியினர் மீது குறிவைக்கப்பட்டது. அத்தாக்குதல் குறித்து சென்ற வாரம் குறிப்பிட்டுவிட்டேன். திலீபனுக்குப் பொறுப்பு யாழ்பாண மாவட்டத்திற்கான புலிகளின் பொறுப்பாளராக கிட்டு பொறுப்பேற்ற பின்னர் ஒரு பிரச்சனை எழுந்தது. யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாரை நியமிப்பது என்பதுதான் பிரச்சனை. யாழ்-பல்கலைக்கழக மாணவரான ரவிசேகர்தான் அரசியல் பதவிக்குப் பொருத்தமானவர் என்று யாழ்மாவட்ட புலிகளில் ஒரு பகுதியனர் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். ஆனால் கிட்டுவுக்கு ரவிசேகர் மீது அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. எனவே ரவிசேகரை நியமிக்காமல் திலீபனை யாழ் மாவட்டத்திற்கான புலிகளது அரசியல் பிரிவு பொறுப்பாளராக நியமித்தார் கிட்டு. திலீபனும் கிட்டுவோடு இந்திய அரசு வழங்கிய இராணுவ பயற்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பியருந்தார். ரவிசேகரை ஓரம் கட்டியது யாழ் பல்கலைகழகத்தல் இருந்த புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களில் சிலர் இயக்க நடவடிக்கைகளைக் கைவிட்டு ஒதுங்கி இருக்க தொடங்கினார்கள். யாழ்பாண பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் புலிகள் அமைப்பினர் செயற்பட்டு வந்தனர். மறுமலர்ச்சி கழகம் ஒருபொதுவான அமைப்பு என்று கூறப்பட்டு வந்தபோதும், புலிகள் அமைபின் ஒரு பிரிவாகவே இயங்கி வந்தது. தளிர் என்னும் சஞ்சிகை ஒன்றும் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு வந்தது. மறுமலர்ச்சி கழக செயற்பாட்டில் ரவிசேகரின் பங்கும் முக்கியமானதாக இருந்தது. உண்மையில் ரவிசேகருடன் ஒப்பிடும்போது திலீபனுக்கு அதக்காலகட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட்டமை முறையல்ல என்ற கருத்தியல் நியாயமில்லாமில்லை. எனினும், பின்னர் திலீபனின் செயற்பாடுகளும் புலிகள் அமைப்பின் வளர்ச்சியைப் பொறுத்தவரை குறைசொல்ல முடியாததாகவே இருந்தது. கிட்டுவின் தாக்குதல் இந்த நேரத்தில் கிட்டுவின் சாகசங்கள் பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும். யாழ்பாணம் குருநர் இராணுவ முகாமில் ஹெலிக்கொப்படர் வந்து இறங்கும்போது தாக்குதல் நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு. குருநர் இராணுவ முகாமுக்குச் சமீபமாக மாடி வீடு ஒன்று இருந்தது. அங்கு நின்று பார்த்தால் இராணுவ முகாமின் ஹெலி இறங்கும் தளம் இருந்தது. அங்கிருந்து தாக்குதலை நடத்த வசதி என்று நினைத்தார் கிட்டு. ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர் ஆயதங்களை இந்தியா இயக்கங்களுக்கு வழங்கியிருந்தது. ஆா.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் கனரக வாகனங்களை ஊடுருவிச் தாக்க்கூடியவை. தோளில் வைத்துத்தான் இயக்கவேண்டும்.(விமான எதிர்ப்பு ஏவுகணை அல்ல) தரைத் தாக்குதல்களுக்கே அனேகமாகப் பயன்படும். வான் படைமீது புலிகளின் தாக்குதல் ஹெலிக்கொப்டர் தாழப்பதிந்து இறங்கும்போதோ அல்லது தரையிறங்கி நிற்கும் போதோ ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கமுடியும். மாடிவீட்டில் ஆா.பி.ஜியுடன் கிட்டு காத்திருந்தார். ஹெலி வந்து இராணுவ முகாமில் தரையிறங்கியது. கிட்டு ஆர்.பி.ஜியைக் குறிபார்த்து இயக்கினார். ரொக்கட் கிரனைற் பறந்து சென்றது. ஆனால் குறிதவறிவிட்டது. இலக்குத் தவறி ரொக்கட் கிரனைட் வெடித்தவுடன் இராணுவத்தினர் உஷாராகி விட்டனர். கிட்டு ஆர்.பி.ஜியுடன் மாடிவீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து விரைந்து வந்தனர் இராணுவத்தினர். தாக்குதல் நடத்தியவர் அங்கு இல்லை. கண்ணில் பட்டவர்களை நையப்புடைத்தனா. கிட்டு நடத்திய தாக்குதல் தோல்வியடைந்தபோதும் வான்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் முயற்சி அதுதான். வான்படையினர் மீதான தாக்குதல் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் என்று கிட்டுவைச் சொல்ல முடியும். தேடுதல் தந்திரம் 1985 ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளுக்கு புதிய தந்திரங்களை கையாள ஆரம்பித்தனர். மினிபஸ்ஸில் வேட்டி, சட்டை அணிந்து, வீபூதி, சந்தனம் இட்டுக்கொண்டு பயணிகள்போல சென்று கொண்டிருப்பார்கள். சந்தேகப்படும்படியான இளைஞர்களைக் கண்டால் மினிபஸ்ஸை நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினபஸ்ஸில் நிறுத்தி ஏற்றிக்கொள்வார்கள். மினிபஸ்ஸில் வைத்தே சாத்துப் படி நடக்கும். ஒருமுறை ஈ.பி.ஆா. எல்.எப் உறுப்பினர் ஒருவரை தந்திரமாக தமது வாகனத்தில் ஏற்றிவிட்டனர். தனக்காக வாகனத்தை நிறுத்தி ஏற்றிக்கொண்டதால் வாகனத்திலிருப்பவர்கள் தமது இயக்கத்தினர்தான் என்று நினைத்துவிட்டார் அந்த உறுப்பினர். வாகனத்தில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை நோக்கி “எப்படி தோழர்?” என்று நலம் விசாரித்தார் அந்த உறுப்பினர். தோழர் என்ற பதத்தைப் பிரயோகித்ததை வைத்தே, மாட்டிக்கொண்டவர் எதோ ஒரு இயக்கப் போராளி என்று இராணுவத்தினருக்குப் புரிந்து விட்டது. அந்த உறுப்பினருக்குப் பலத்த கவனிப்பு. அவரை வைத்தே வேறு சில உறுப்பினர்களும் வலை வீசிப்பிடித்தனர். அதே நேரத்தில் கவச வாகனங்கள் சகிதம் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளும் ஆமற்கொள்ளப்பட்டே வந்தன. 25.4.85 அன்று யாழபாணம் பருத்தித் துறையில் உள்ள இன்பருட்டி என்னும் பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அங்கு நிலக்கண்ணி வெடிகளைப் புதைத்துவிட்டுக் காத்திருந்த புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். 11 இராணுவத்தினர் பலியானார்கள். இராணுவக் கவச வண்டி ஒன்றும் சேதமானது. ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர் பருத்திதுறை நகருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கினார்கள். நகரில் இருந்த கடைகளுக்கும் தீ வைக்க முயன்றனர். நகருக்குள் மறைந்திருந்த புலிகள் துப்பாக்கிப் பிராேயகம் செய்தனர். இராணுவத்தினரும் பதிலுக்கு தாக்கினார்கள். கரவெட்டியில் 28.04.85 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டிப் பகுதியில் எட்டுக் கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். ரோந்து அணியினர் கரவெட்டியில் உள்ள நவிண்டியில் வீதியை வந்தடைந்தனர். அங்கு நிலக்கண்ணி வெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தன. ரோந்து வாகனங்களில் ஒன்று நிலக்கண்ணி மீத ஏறியதும் வெடித்துத் தூக்கி எறியப்பட்டது. அந்த வாகனத்திலிருந்த எட்டு இராணுவத்தினரும் பலியானார்கள். ஏனைய வாகனத்திலிருந்து குதித்த இராணுவத்தினர், வயலுக்குள் பதுங்கி நிலை எடுத்து தாக்க முற்பட்டனர். வயலுக்குள் முன்கூட்டியே பதுங்கி தயார் நிலையிலிருந்த புலிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார்கள். பின்புறம் இருந்து தாக்குதலை எதிர்பாக்காத இராணுவத்தினரால் பதிலடி நடத்த முடியவில்லை. பத்து இராணுவ வீரர்கள் பலியானார்கள். மொத்தமாக 18 இராணுவத்தினர் அத்தாக்குதலில் பலியானார்கள். புலிகள் தரப்பில் உயிர்தேசம் எதுவும் எற்படவில்லை. இதேநாள் அன்று மற்றொரு சம்பவம். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் இராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனா. பொலிஸ் நிலையம் அருகில் இருந்தமையால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக ரோந்து சென்றுகொண்டிருந்தனர். மறைந்திருந்த இளைஞா்கள் கைக்குண்டுகளை ஏறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அதில் நான்கு இராணுவத்தினர் பலியானார்கள். ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களும் அலைந்து திரிந்து தாக்கும் கெரில்லா யுத்த முறையில் புலிகள் தேர்ச்சி பெற்று வருவதை புலப்படுத்திக்கொண்டிருந்தன. திருமலையில் தாக்குதல் திருமலையிலும் கண்ணிவெடித் தாக்குதல் 26.4.85 அன்று நடத்தப்பட்டது. இராணுவ ஜீப்வண்டி ஒன்றில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது கட்டைபறிச்சான் என்னும் இடத்தில் வைத்து நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு லெப்டினன்ட் உட்பட ஆறு அல்லது ஏழு இராணுவத்தினா பலியானார்கள். அபபோது திருமலையில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சந்தோஷம் மாஸ்டர், புலேந்தி அம்மான் ஆகியோர் பொறுப்பாக இருந்தனா. 1985 இல் வடக்கு-கிழக்குக்கு வெளியே ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனா புலிகள். ஆயத்தங்கள் துரிதமாக நடக்கத்தொடங்கின. அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது.. (தொடர்ந்து வரும்….) பெண் கடற்புலிகளின் கௌரவப் பிரச்சனை!!: கடற்புலிகளுக்கு இந்த மாதத்தில் மற்றொரு தோல்வி காங்கேசன் துறைதுறைமுகத்தில் நேர்ந்திருந்தது. 10 திகதி அதிகாலை 12.55மணிக்கு எடித்தாரா தரையிறக்கக் கப்பலை குறிவைத்து கடற்கரும்புலி அருள்ஜோதி என்றழைக்கப்படும் முத்துமோகன் சியாமளா நீருக்குள் இறங்கினார். இவர் அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவை சேர்ந்தவர். கரும்புலி கப்டன் -அங்கையற்கண்ணி 1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி காங்கேசன் துறைமுகத்தில் ஊடுருவி எடித்தாரா கட்டளைக் கப்பலை தாக்கிய கடற் கரும்புலிதான் அங்கையற் கண்ணி. அவரது பெயரில் உருவானதே அங்கையற் கண்ணி நீரடி நீச்சல் பிரிவு. யூலை 16-1995 அன்று புலிப்பாய்ச்சலின் ஒரு கட்டமாக காங்கேசன்துறை துறைமுகத்தில் நடந்த கடற்சமரில் கடற்கரும்புலிகளால் எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது. அப்போது அங்கு தரித்து நின்ற தரையிறக்கக் கப்பல்மீது குறிவைத்து கரும்புலிகளின் மற்றொரு படகு நகர்ந்தபோதும் கடற்படையினர் அத்தாக்குதலை முறியடித்துவிட்டனர். தரையிறக்கக் கப்பல் தப்பிக்கொண்டது. ஒரு பெண் கடற்கரும்புலி கப்படன் தமிழினி(சிவப்பிரகாசம் கனிமொழி- வல்வெட்டித்துறை) பலியானார். இன்னொரு பெண் கடற்கரும்புலி செவ்வானம் நீந்திக் கரைசேர்ந்தார். யூலை 16 இல் தப்பிக்கொண்ட தரையிறக்க் கப்பல்தான் செப்டம்பர் 10 திகதி குறிவைக்கப்பட்டது. யூலை 16 கடற்சமரில் ஆண் கடற்கரும்புலிகள் இருவர் கட்டளைக்கப்பலுக்கும், பெண் கடற்கரும்புலிகள் இருவர் தரையிறக்கக் கப்பலுக்கும் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டனர். ஆண் கடற்கரும்புலிகள் மட்டுமே பணியை முடித்தனா. எனவே -தமது அணியால் தவறவிடப்பட்ட தரையிறக்க்கப்பலை மீண்டும் தமது அணிதான் தாக்கவேண்டும் என்று கடற்கபுலிகள் மகளிர் அணியினர் விரும்பினார்கள். ஏனெனில், அது அவர்களுக்கொரு கௌரவப் பிரச்சனை. அதனால் -கடற்புலிகளின் மகளிர் அணியைச் சேர்ந்த அருள்ஜோதியை கரும்புலியாக அணுப்பத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்னர் தரையிறக்கக் கப்பல் எங்கு தரித்து நிற்கிறது என்பதை கடற்புலிகளின் வேவுப்பரிவு நீரடி நீச்சல் மூலம் மோப்பம் பிடித்து அறிந்துகொண்டது. தரையில் உள்ள முகாம்களை தாக்குவதற்குமுன் வேவு பார்ப்பது போல, கடலில் தரித்துள்ள கப்பல்களையும் வேவு பார்ப்பதும் வழக்கம். கடற்புலிகளின் விசேட வேவுப் பொறுப்பாளர் மேஜர் மோகன், விசேட வேவுப்படையை சேர்ந்த கப்டன் ராம்குமார் ஆகியோர் முன் கூட்டியே வேவு பார்த்து விட்டனர். அருள்ஜோதியை கடலில் வழிகாட்டி அழைத்துச் சென்று , இலக்கை காட்டிவிட்டு திரும்புவதுதான் அவர்கள் இருவரது பணியாகும். நீரடி நீச்சல் மூலமாக மூவரும் தரையிறக்கக் கப்பலை நோக்கிச் சென்றபோது கடற்படையினரின் கப்பலில் இருந்த ராடர்கருவி காட்டிக் கொடுத்து விட்டது. இந்த நேரத்தில் ஒரு தகவல். கடற்கரும்புலிகளது தொடர் தாக்குதல்களையடுத்து கடற்படையினர் சக்திமிக்க ராடர் கருவிகளை பெற்றுள்ளனர். முன்னர் கடற்படையினரிடம் இருந்த ராடர்கருவிகள் கடும் மழை பெய்யத் தொடங்கிவிட்டால் சூழலில் நடப்பதைச் சொல்லத் தெரியாதவையாக இருந்தன. இப்போதுள்ள ராடர்கள் மழைக்காலத்தில் மட்டுமல்ல, நீருக்கடியில் நடக்கும் நடமாட்டங்களையும் கண்டறியக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் ராடர் கருவியை கவனிப்பவர் தூங்கிவிட்டால் அவ்வளவுதான். ராடர்கள் மூலம் கடற்கரும் புலியையும், கடற்புலிகளின் வேவுப்படையினர் இருவரையும் கண்டுபிடித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். மூவரும் பலியானார்கள். கடற்படையினர் எந்நேரமும் விழிப்பாக இருக்கமாட்டார்கள் என்று புலிகள் போட்ட தப்பு கணக்கே செப்டம்பர் 10ல் நடந்த தோல்விக்கு காரணமாகும். படையெடுப்புக்கான ஆயுத்தமும், அதேநேரம் அதைத் தடுக்க புலிகளது தாக்குதல் உத்திகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் கடற்படையினர் விழிப்பாக இருக்க மாட்டார்கள் என்று புலிகள் நினைத்ததுதான் தவறான கணிப்பு. இதேவேளை-தரையிறக்கக் கப்பலை தாக்கிவிட்டு ஒரு கடற்கரும்புலி உட்பட மூவர் பலியானதாக யாழபாணத்தில் புலிகள் அறிவித்தும் விட்டார்கள். யுத்தத்தில் எந்தவொரு தரப்பும் தமது மக்களுக்கு உண்மையான தரவுகளை வழங்க முன்வருவதில்லை என்பதை புலிகளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 3.09.95 அனறு ‘டோராவை’ தாக்கும் முயற்சியில் இரண்டு கடற்கரும்புலிகள் பலியாகியிருந்தனர். அப்போதும் ‘டோரா’ தாக்கி மூழ்கடிப்பு என்றே புலிகள் அறிவித்திருந்தார்கள். யுத்தமுனையில் தமது தரப்புப்பற்றிய வெற்றிகளை மிகைப்படுத்தி கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எதிரிக்கு உற்சாகம் கொடாமல் இருப்பது. இதன் ஒரு கட்டம்தான் தமது தரப்பில் பலியானோர் பற்றிய விபரங்களை குறைத்து கூறுவது. இந்த உத்தியை அரசாங்கம்தான் அடிக்கடி பிரயோகிக்கிறது. இரண்டு, தமது மக்களிடம் தம்மைப் பலமானவர்கள் என்று காட்டுவது. இதன் ஒரு கட்டம்தான் தோல்விகளை மறைப்பது. இந்த உத்தியை அரசாங்கம் அடிக்கடியும், புலிகள் அவ்வப்போதும் பிரயோகித்து வருகின்றனர். http://ilakkiyainfo.com/55977/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted October 2, 2015 சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை சுட்டது யார்??: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-45) S சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள் யாழ்-பல்கலைகழக மாணவர்கள். யாழ்.மாவட்ட அதிபர்கள் சங்கம், யாழ்-பிரஜைகள் குழு, சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06. 85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தன. யாழ்.நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்பு பட்டிகளோடு காணப்பட்டனர். St.Johns-College-Jaffnaமாணவர்கள் கண்டனம் இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் தெடரவே செய்தன. இதற்கிடையே யாழ்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒரு அறிவித்தலை வெளியிட்டது. “ஆனந்தராஜா கொலை பற்றிய தகவல் தருவோருக்கு 5 இலச்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டது. அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச்சடங்கில் பெருமளவில் மாணவாகளும், பொதுமக்களும் திரண்டால் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும், அதனால் அவரது சடலத்தை யாழ்.பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரை சுட்ட இயக்கம் முயற்சித்தது. ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவ மனைக்கு சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது. அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர். சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பதும், சம்பந்தபட்ட இயக்கம் மூலமாக வெளியே வந்தது. அதிபர் சி.ஈ.ஆனந்தராஜாபுலிகளின் காரணம் கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள். யாழ.நகரமெங்கும் உரிமை கோரும் சுவரரெட்டிகள் புலிகள் அமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்தன. ஆனந்தராஜாவின் படையினரோடு உறவுகளை வைத்திருந்தார். எச்சரித்தும் கேட்கவில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள். புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவாகள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில்- தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது. ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு. யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட். ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர். இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார். யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார். “ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்?” என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார் : “அப்படி ஒருவரை போட்டால்தான் மற்றவர்கள் பயப்பிடுவார்கள். புளிப்படங்கும் அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா இத்தனைக்கும் ஆனந்தராஜா ஈழமாணவர் பொது மன்றத்தோடு (G:U:E:S) தொடர்பாக இருந்தவர். “பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் மாணவர்களை அழைத்து போராட்ட பிரசார வகுப்பு நடத்தலாம் தனது ஒத்துழைப்பு இருக்கும்” என்று (G:U:E:S) அமைப்பிடம் கூறியிருந்தவர். யாழ்-பிரஜைகள் குழுவில் ஒருவராக இருந்தமையால், யாழ்பாணத்தில் கைது செய்யப்படும் இளைஞர்களது பெற்றோர்கள் ஆனந்தராஜாவிடம் ஓடுவார்கள். படை அதிகாரிகளை சந்தித்து கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பேசுவார் ஆனந்தராஜா. ஆனால், ஆனந்தராஜாவுக்கு புலிகளைப் பிடிக்காது. இராணுவத்தினருடன் சினேகபூர்வ கிரிகெட் ஆட்டத்திற்கு ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன. “கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள். “நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா. அதுதான் கிட்டுவுக்குக் கோபம். “மண்டையில் போடு” என்று சொல்லிவிட்டார். மண்ணும் மரணமும் அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்ட ரிச்சார்ட் இயக்கத்தைவிட்டு விலகும் முன்னர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன். இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர். புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர். அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட். ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார். மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் பலியானார்கள். இதுவும் 1985 ல் தான் நடந்தது. பேச்சு முயற்சிகள் இலங்கை அரசு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தமையானது இந்தியாவோடு காதோடு காதாகப் பேசி செய்த நடவடிக்கை என்றே நம்பப்பட்டது. போர் நிறுத்தத்தையடுத்து பேச்சுவார்தையை ஆரம்பிக்க முயற்சி செய்தது இந்தியா. தீவிரவாத இயக்கங்களை உடன்படவைக்காமல் கூட்டணியோடு பேச்சு நடத்துவதால் பயனில்லை என்று இலங்கை அரசு சொல்லிவிட்டது. எவ்வாறென்றாலும் தீவிரவாத இயக்கங்களை பேச்சு மேசைக்கு கொண்டுவருவதாக இந்தியாவும் உறுதியளித்துவிட்டது. இதே காலகட்டத்தில் கூட்டணி நடத்திய நாடகம்தான் அருமையானது. பேச்சு வார்த்தையில் கூட்டணிதான் முக்கிய பாத்திரம் வகிப்பதுபோல கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றின் மூலமாக செய்திகளை வெளியாக்கிக் கொண்டிருந்தது. அப்பத்திரிகையும் இயக்கங்களை தீவிரவாதக் குழுக்கள் என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது. சுற்றி வளைப்பானேன், “வீரகேசரி”தான் அவ்வாறு செய்திகளை வெளியிட்டு வந்தது. பேச்சுக்கு செல்லவிரும்பாத தலைவர்கள் இத்தனைக்கும் இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லையென்றால் பேச்சு முயற்சியே கிடையாது என்ற நிலைதான் நிலவியது. “சென்னையில் இருந்து அமிர்தலிங்கம் பேட்டி-பேச்சு வார்த்தைக்கு ஆதரவுதிரட்ட கொழும்புக்கு தலைவர்களை அனுப்பிவைக்கிறார்’ என்றெல்லாம் செய்திகள் வரும். உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே பத்திரிகைகள் சில தாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பிக் கொண்டிருந்தன. கூட்டணியின் கையைவிட்டு பேச்சுவார்த்தை அரங்கம் போராளி இயக்கங்களிடம் சென்றுகொண்டிருந்தது. சில பத்திரிகைகள் மூலமாக எல்லாமே தமது கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயன்றார்கள் கூட்டணிதலைவர்கள். சென்னையில் இருந்த இயக்கத்தலைவர்கள், கூட்டணிக்கு பேச்சுவார்த்தையில் இடமளிக்கப்படுவதையே விருப்பவில்லை. “கொஞ்சம் இடம் கொடுத்தால் எங்களையும் தள்ளிப்போட்டு குறக்காலே ஓடுவாகள்” என்று அடிக்கடி சொல்லுவார் ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம். இந்திய ‘றோ‘ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு உடன்படச் சொல்லிக் கேட்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் தலைமறைவாகிவிட்டார் பிரபாகரன். நான்கு இயக்க கூட்டமைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. ‘பேச்சுக்கு உடன்படுமாறு கேட்கப் போகிறார்கள். என்ன செய்யலாம்’ என்று கேள்வி எழுந்தது. புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அதற்கு பதில் சொன்னார். “தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கு வெளியே தலைகாட்டாதீர்கள். தலைவாகள் வரட்டும், கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.” ஆனால் அந்த தந்திரம் பலிக்கவில்லை. இந்திய அரசு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க பிடிவாதமாக இருந்தது. இயக்கங்களை கேட்காமலேயே இலங்கை அரசுக்கு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, தலைவர்களின் கழுத்தை பிடித்தது இந்தியா. “இன்னமும் ஏழு நாட்களில் தீவிரவாத இயக்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வரப்போகின்றன” என்று நம்பிக்கையோடு அறிவித்தார் அத்துலத் முதலி. ஈ.என்.எல்.எஃப். தலைவர்கள் உடன்பாடு இறுதியில் நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈ.என்.எல்.எஃப். பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. “பேச்சுவார்த்தையில் தலைவாகள் கலந்துகொள்ள தேவையில்லை. எமது பிரதிநிதிகளை அனுப்பினால் போதும் என்றார்” பிரபாகரன். ஏனைய மூன்று இயக்கத் தலைவர்களும் அதனை ஆமோதித்தனர். தலைவாகள் கலந்துகொண்டால் உறுப்பினர்கள் சோர்வடைந்துவிடுவார்கள். தமிழீழ போராட்டத்தை கைவிட்டு பேச்சுக்கு மேசைக்கு சென்றுவிட்டார்கள் என்று நினைத்துவிடுவார்கள். தலைவர்கள் கலந்துகொள்ளாமல் இருந்தால், “இது ஒரு நாடகம் மட்டுமே பேச்சுக்கு எதிரானவாகள் அல்ல என்று உலகுக்கு காட்டும் நடவடிக்கை” என்று தெளிவு படுத்த முடியும். இயக்கங்களின் முதலாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்களை கூட பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைக்க இயக்கங்கள் முன்வரவில்லை. கூட்டணி மட்டும் விதிவிலக்கு. அமிர்தலிங்கமே நேரில் செல்ல ஆயத்தமானார். கூட்டமைப்பில் இல்லாவிட்டாலும் புளொட் அமைப்பினரும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டனர். தமிழர் தரப்பிலிருந்து 5 அமைப்புக்களது (கூட்டணி உட்பட) பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை இந்தியா உறுதிப்படுத்தியது. பேச்சுவார்த்தையை மூன்றாம் நாடொன்றில் நடத்த திட்டமிட்டது இந்தியா. பூட்டானின் தலைநகரான திம்புவில் தான் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது இந்திய அரசு. (பூடான் தலைநகர் திம்புவில் 1985-ம் ஆண்டு ஈழப்பிரச்சினை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை (கோப்புப் படம்) நேரடி தொடர்புபேச்சுவார்த்தையில் இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிந்தவுடன் இந்திய அரசு ஒரு காரியம் செய்தது. திம்புவில் இருந்து பிரதிநிதிகள் உடனுக்குடன் சென்னையில் உள்ள தலைவர்களோடு தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தியது. ‘தலைவாகளை கேட்டுச் சொல்லுகிறோம்’ என்று பிரதிநிதிகள் நழுவிக்கொள்ளாமல் தடுக்க இந்தியா செய்த தந்திரம் அது. இதேவேளை யாழ்பாணத்தில் மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலங்களை இயக்கங்கள் பின்னால் நின்று நடத்தத் தொடங்கிவிட்டன. “ஈழமே ஒரே தீர்வு” “ஈழப் போராட்டமா –பந்தாட்டமா?” “வேண்டாம்-வேண்டாம், பேச்சு வார்த்தை வேண்டாம்” 02.07.85 அன்று யாழ்நகரில் அந்த ஊர்வலம் நடைபெற்றது. “தமிழ் ஈழத்திற்கு குறைந்த எதற்கும் சரணடையோம்” என்ற தலைப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிட்டார்கள் புலிகள். ஆனால், பிரசுரத்தின் இறுதியில் ‘தமிழ் மக்கள்’ என்று மட்டும் குறிப்பிடபட்டிருந்தது. யாழ்பாணம் நெல்லியடியில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி வீதியால் இழுத்துச் செல்லப்பட்டு கொளுத்தப்பட்டது. கூட்டணிக்கு கண்டனம் இலங்கையில் ஓரிரு பத்திரிகைகள் மூலம் பேச்சுவார்த்தையில் தாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூட்டணி காட்டிக்கொண்டதாக கூறியிருந்தேன் அல்லவா? அதனால் இயக்கங்களுக்கு கோபம் வந்துவிட்டது. சென்னையில் கூடிய நான்கு இயக்க கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. ‘உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகளில் ‘தீவிரவாதிகளுக்கு’ தலைமை தாங்கவும், வழிகாட்டவும் தம்மைதாமே அரசியல் தலைமையாக நியமித்துக் கொண்டிருக்கும் த.வி.கூட்டணியின் நிலையை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லை. ஈழ மக்களின் சகல நம்பிக்கையையும், நாணயத்தையும் இழந்துவிட்ட கூட்டணியினர் இனியும் தம்மை ஈழமக்களின் சட்ட ரீதியான பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்றவர்கள். பகைமை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஈழத்தில் எமது மக்களுக்கு ஆயுதப் படைகள் இழைத்துவரும் கொடுமைகளையிட்டு கூட்டணி வாய்மூடி மௌனியாக இருப்பதும் எமது முடிவை உறுதிப்படுத்துகிறது.” தமிழ்நாட்டு பத்திரிகைகளில் அந்த அறிக்கைசுடச்சுட வெளியாகியது. அமிர்தலிங்கம் திகைத்துப் போனார். கூட்டணியின் பிரபலம் தேடும் முயற்சிக்கு மற்றொரு அடி கொடுக்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது. யாழபாணத்தில் உள்ள கூட்டணிப் பிரமுகர்களை ‘மண்டையில் போடுமாறு’ ஒரு இயக்கத் தலைவர் சென்னையிலிருந்து உத்தரவிட்டார். ‘யாரைப் போடலாம்?’ என்று யோசித்தார்கள். தொடரும்..(அரசியல் தொடர்…எழுதுவது அற்புதன்) http://ilakkiyainfo.com/சென்-ஜோன்ஸ்-கல்லூரி-அதிப/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted October 7, 2015 கூட்டணி தலைவர்கள் ‘ஆலாலசுந்தரம், தர்மலிங்கம்’ ஆகியோரை சுட்டது யாா??: (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-46) பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது. இயக்கங்கள் மட்டுமெ பேச்சிலே கலந்துகொண்டால் தமிழர் தரப்பிலிருந்து தீவிரமான நிலைப்பாடுதான் பேச்சு மேசையில் போடப்படும். மிதவாத தலைமையும் கலந்துகொண்டால் சூடு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் விவகாரத்தில் ‘தீவிரவாத இயக்கங்கள் ‘மட்டுமே தனித்துச் செல்வாக்கு செலுத்துவதையும் இந்திய அரசு அவ்வளவாக விரும்பியிருக்கவில்லை. என்றாலும்கூட, ஜே.ஆர். அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த கூட்டணியால் ஒருபோதும் முடியாது என்பதும் இந்தியாவுக்கு தெரிந்தே இருந்தது. j.r.jevarthana. இயக்கங்களுக்கு ஆயதமும், பயிற்சியும் வழங்கியதை இந்திய மறுத்துக்கொண்டிருந்தமை ஒரு இராஜதந்திரமே தவிர, பரமரகசியமல்ல. எனவே- இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதுபோது,ஜே.ஆர். இந்தியாவிடம் வந்தேயாக வேண்டும். ‘அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்று கேட்டேயாக வேண்டும் என்று இந்தியா கணக்குப் போட்டிருந்தது. கணக்குப் பொய்க்கவில்லை. தனித்து நின்றோ, இந்தியாவோடு முரண்டு பிடித்தோ இயக்கங்களின் நடவடிக்கைகளை அடக்கிவிட முடியாது என்பதை ஜே. ஆர். புரிந்து கொண்டார். எனவே –இந்திய பிரதமர் ராஜீவோடு நட்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். உள்நாட்டு பிரச்சனை என்ற நிலையில் இருந்து, வெளிநாட்டு மத்தியஸ்தத்தோடு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்றளவுக்கு இனப்பிரச்சனை தீவிரமானதை ஜே.ஆர். எற்கவேண்டியதாகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்திய தலைநகரில் இருநாட்டு தலைவர்களும் நடத்திய உச்சிமாநாடு. அதனைத் தொடர்ந்துதான் பூட்டானில் திம்பு பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டது. அமிர் உத்தரவு இக்காலகட்டதில் சென்னையிலிருந்து அமிர்தலிங்கம் யாழ்பாணப்பாணத்தில் இருந்து கூட்டணித் தவைர்களோடு தொடர்பு கொண்டார். பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன. வடக்கு-கிழக்கில் உள்ள கூட்டணித் தலைவர்கள் மௌனமாக இருந்தால், பேச்சுவார்த்தையில் கூட்டணியின் பங்கு சிறு அளவில் மட்டுமே என்று மக்கள் நினைத்து விடுவார்கள். அரசியல் பேச்சுவார்த்தையில் வல்லவர்கள் என்ற எண்ணமும் அடிபட்டுப் போய்விடும். ஆங்கிலப் புலமையில் கெட்டிக்காரர்கள். பேச்சுவார்த்தைகளில் சாணக்கியர்கள். அனுபவசாலிகள் என்று தம்மைப்பற்றி மக்களிடம் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருந்தவர்கள் கூட்டணி தலைவர்கள். போராளி இயக்கங்கள் இலங்கை இனப்பிரச்சனையில் தீவிரமானதும், தீர்க்கமானதுமான பங்கை வகித்தபோதும், “பேச்சுவார்த்தைக்கு கூட்டணி, போருக்கு இயக்கங்கள்” என்று ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கவே செய்தது. திம்பு பேச்சில் இயக்கங்கள் தமது அரசியல் வெளிப்பாட்டையும் காட்டிவிட்டால், தமக்குள்ள ஒரேபிடியும் போய்விடும் என்று கூட்டணித் தலையினர் கவலை கொண்டனர். யாழ்பாணத்தில் இருந்த கோப்பாய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரம், மானிப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகிய இருவரையுயும் உடனே கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் அமிர்தலிங்கம். ஆலாலாசுந்தரம் ஊழலுக்குப் பேர்போனவர். ஆனால், அவர்தான் அப்போது கூட்டணியின் நிர்வாகச் செயலாளர். தாமலிங்கம் நேர்மையானவர். சோஷலிசக் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவர். கூட்டணித் தலைவர்கள் மத்தியலேயே சோவியத் யூனியனுக்கு சார்பான போக்கை கொண்டிருந்தவரும் அவர்தான். பொதுத்தேர்தல் வந்தால் தமது தொகுதிக்கு செல்லாமலேயே வெற்றி பெறக்கூடியவர்களில் ஒருவர் தர்மலிங்கம். இருவரும் கொழும்பு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தார்கள். ஆலாலசுந்தரம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தத்தை அரசு சரவர அமுல் நடத்தும் நம்புவதாகக் கூறிக் கொண்டிருந்தார். கூட்டணி மட்டுமே தமிழர் தரப்பில் இருந்து அக் காலகட்டத்தில் போர்நிறுத்தத்தை விரும்பிய ஒரே ஒரு அமைப்பாகும். போர்நிறுத்தம் வெற்றியளித்தால் ஆயுதப் போராட்டம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுவிடும். அதன்பின்னர் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர தடைகள் இருக்காது என்பது கூட்டணியினரது நினைப்பு. ஆனால், சம்பவங்கள் அவர்களது நினைப்புக்கு மாறாகவே நடந்துகொண்டிருந்தன. நேரடி எச்சரிக்கை திம்பு பேச்சுவார்த்தையில் கூட்டணியினர் கலந்துகொள்வதை தடுக்கமுடியவில்லை என்பதால், மாற்று நடவடிக்கை பற்றி நான்கு இயக்க் கூட்டமைப்பு கூட்டத்தில் ஆராயப்பட்டது. நான்கு இயக்கங்களும் திம்பு பேச்சுவார்த்தையில் தமது நிலைப்பாட்டை முன்வைப்பது என்றும், முடிவு செய்யப்பட்டது. திம்பு பேச்சில் கலந்துகொள்ள அமிர்தலிங்கம் புறப்பட்டு சென்றுவிட்டார். யாழ்பாண தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சென்னையில் இருந்தார். அவரை நேரில் அழைத்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முடிவெடுக்கப்பட்டவுடன் ரெலோ தலைவர் சிறீ சபாரத்னம், “யோகேஸ்வரனை இப்போதே அழைத்து எமது நிலைப்பாட்டை சொல்லிவிடலாம். கூப்பிடுங்கள்” என்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிரபாகரனும் அதனை வலியுறுத்தினார். ஈரோஸ் பாலகுமார் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு யோகேஸ்வரனுடன் பேசினார். “.இங்கே பிரபா,சிறீ,பத்மநாபா எல்லோரும் இருக்கிறார்கள். உங்களை உடனடியாக சந்திக்கவேண்டும் வாருங்கள்” என்று கூட்டமைப்பு அலுவலக முகவரியை சொன்னார். தனியாக வர யோகேஸ்வரனுக்கு ஒரு தயக்கம். “திரு.தங்கத்துரையும் என்னோடு இருக்கிறார். அவரையும் அழைத்து வரலாமா?” என்று கேட்டார் யோகேஸ். “சரி”என்றுவிட்டார் பாலகுமார். ” அவர்கள் வந்ததும் தம்பி முறை சொல்லி அழைத்து சமாளிக்க பார்பார்கள். அதற்கெல்லாம் இடம் வைக்காமல் எமது முடிவை கண்டிப்பான’ குரலில் கூறிவிடவேண்டும்”என்று அனைவரையும் உஷார் படுத்தினார் சிறிசபாரத்னம்.. ” பாலசிங்கம் அண்ணர் எமது கருத்தைச் சொல்லட்டும.நாம் எதுவம் பேசாமல் சீரியஸாக இருப்போம்” என்றார் பிரபாகரன். அரைமணி நேரத்தில் ஓட்டோ ஒன்றின் மூலம் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் யோகேஸ்வரனும், தங்கத்துரையும். எதிர்பார்த்தது போலவே இருவரும் வாய்கொள்ளாத சிரிப்போடு தோன்றினார்கள். “லேட்டாகப் போச்சோ? முகவரியை கண்டுபிடித்துவர தாமதமாகிவிட்டது”என்றார் யோகேஸ். இயக்கத் தலைவர்கள் யாவரும் வாய்திறக்கவில்லை அன்ரன் பாலசிங்கம் மட்டுமே கூட்டமைப்பின் கருத்தை விளக்கினார். ” நாங்கள் தீவிரவாத குழுக்கள் அல்ல. அரசியல், இராணுவ இயக்கங்களாக இருக்கிறோம். போரில் மட்டுமல்ல, பேச்சுக்களிலும் நாம் வல்லவர்கள்.எங்களுக்காக யாரும் பேசத்தேவையில்லை” என்று தனது பேச்சை ஆரம்பித்தார் அன்ரன் பாலசிங்கம், ” நான்கு அடிப்படை அம்சங்களை நாங்கள் திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கபபோகிறோம்.அதற்கு மாறாக வேறு எத்தத் திட்டத்தையும் முன்வைக்க வேண்டாம். என்று அமுதருக்கு தெரிவித்து விடுங்கள்” என்று தனது நீண்ட விளக்கத்தின் இறுதியில் கூறினார் பாலசிங்கம். மாறாக பேசினால்….? அப்போது சிறி சபாரத்தினம் கண்டிப்பான குரலில் கூறியது இது… ” எங்களுக்கு மாறாக திம்புவில் அமுதர் பேசுவதாக இருந்தால், திரும்பிவரும் யோசனையை விட்டுவிடச் சொல்லுங்கள். வேண்டுமானால் அவர் திம்புவிலேயே இருந்துகொள்ளட்டும்” யோகேஸ்வரன் ஆடிப்போனார். “அமிர் அண்ணா ஒருநாளும் உங்களுக்கு விரோதமாகச் செல்லமாட்டார். உங்கள் முடிவுதான் கூட்டணியின் முடிவும். அமிர் நீங்கள் நான் சொல்வதை நூறுவீதம் நம்பலாம்” என்று சொன்னார் யோகேஸ்வரன். “நம்புவதும் நம்பாமலிருப்பதும் அமுதர் திம்புவில் நடந்து கொள்வதைப் பொறுத்தது. நீங்கள் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு, நாங்கள் சொன்னதைத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பிரபா. இயக்கத் தலைவாகளை சமாதனபடுத்திவிட்டு யோகேஸ்வரனும், தங்கத்துரையும் சென்றனர். யோகேஸ்வரன் இன்றில்லை. திரு தங்கத்துரை திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். எச்சரிக்கை வாய் மூலமாக மட்டும் தெரிவித்ததோடு நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை சிறி சபாரத்தினம். உரிமை கோராத அரசியல் படுகொலைகள் ‘யாழ்பாணத்தில் உள்ள கூட்டணி முக்கியஸ்தர்கள் இருவரை தீர்த்துக்கடடினால்தான் கூட்டணி ஒழுங்காக நடந்துகொள்ளும்’என்று அவர் நினைத்திருக்கவேண்டும். ‘எனவே, ரெண்டு பேரை போடுங்கள் என்று யாழ்பாணத்துக்கு கட்டளை பறந்தது’ ‘யாரை போடலாம்’ என்று யாழ்பாண ரெலோ பொறுப்பாளர் தேடினார். மறுபடியும் அரசியல் களத்தில் குதிதிருந்த ஆலாலசுந்தரமும், தர்மலிங்கமும் தான் கண்ணில் பட்டனர் இரவோடு இரவாக ரெலோவின் இரு குழுவினர் புறப்பட்டனர். ஒரே நேரத்தில் இருவரையும் கடத்திச் சென்றார்கள். “பேச வேண்டியிருக்கிறது எம்மோடு வாருங்கள்”என்று சொல்லி அழைத்துப் போனார்கள். மறுநாள் இருவரும் பிணமாக வீதியில் கிடந்தார்கள். யார் காரணம்? கொலைக்கு யார் என்று எவருக்குமே தெரியவில்லை. புலிகள் இயக்கத்தினர் செய்திருக்கலாம் என்றே பொதுவாக நம்பப்பட்டது. சென்னையில் கூட்டமைப்பு கூட்டம் நடக்கும்போது ஈரோஸ் பாலகுமார் பிரபாவிடம் கேட்டார் “நீங்கள்தான் போட்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையோ?” அதற்கு பிரபா சிரித்துக் கொண்டே சொன்னார், ” சிறியின் பொடியள்தான் செய்தது என்றும் ஒரு கதை“ சிறியும் அப்போது கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அவரும் சிரித்துக்கோண்டே “நாங்கள் செய்யவில்லை” என்று கூறிவிட்டார். ரெலோ இயக்கத்தை தவிர, ஈ.பி.ஆர். எல்.எஃ, ஈரோஸ் இரண்டுமே புலிகள் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ரெலோ செய்திருக்கும் என்று புலிகளைத்தவிர, யாருமே சந்தேகப்படவில்லை. ரெலோ இயக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்த தாஸின் தலைமையில்தான் இருவரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஆலால் பற்றி யாருமே அலட்டிக்கொள்ளவில்லை. தர்மலிங்கம் கொல்லப்பட்டது குறித்தே பரவலான கவிலை தெரிவிக்கப்பட்டது. அமரர் தர்மலிங்கம் புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார் என்பது குறிப்பிடதக்கது. இந்திய தலையீடும் பிரபகரனின் நிலைப்பாடும். இதற்கிடையே கூட்டணியினர் மேற்கொண்ட மற்றொரு நிலைப்பாட்டையும் குறிப்பிட்டாயாகவேண்டும். “இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய இராணுவத்தை உடனே அனுப்ப வேண்டும்” என்று கலைஞர் கருணாநிதி திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த அமிர்தலிங்கம் ஒரு பேட்டியில், இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என்று தனது பங்குக்கு கூறிவைத்தார். பேட்டியைக் கண்ட புலிகள் இயக்கத்திற்குப் பொறுக்க முடியவில்லை. உடனடியாக பிரபாகரன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் ஒரு பகுதி… “எமது பழைய பாராளுமன்ற தலைமை-எதிரியைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அரசியல் ஞானமும் அற்றதாக இருந்ததுதான் எமக்கு இந்த துர்க்கதி ஏற்படக் காரணமாகும். அரச பயங்கரவதாம் கூர்மையடைந்து இனவாதப் பூதம் தமிழனத்தை அழிக்க கிளம்பிய போதும், இவர்கள் பாராளுமன்ற ஆசனங்களையும் பதவிகளையும் கட்டிப் பிடித்தபடி அரச தலைவர்களுக்கு துதிபாடிக்கொண்டிருந்தார்கள். கூட்டணி தலைவர்கள் புரிந்த மாபெரும் தவறு என்னவென்றால், தமிழ் புரட்சியவாத இளைஞர் பரம்பரயை அந்நியப்படுத்தி வந்தமையாகும். தேசிய சுதந்திரத்துக்காக நாம் வரித்துக்கொண்ட புரட்சிகர ஆயதப் போராட்ட வரலாற்றுக் கட்டாயத்தையும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் கூட்டணி புரிந்து கொள்ளவில்லை. எம்மை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று வர்ணித்தனர். இவர்கள் செய்தது எல்லாம் எமது ஆயதப் போராட்டத்தை ஒரு அரசியல் அழுத்தமாக பிரயோகித்து அரசிடம் சலுகைகளை வேண்டி சமரசப் பேச்சுகள் நடத்தியதுதான். இந்திய ஆதரவு நாமே போராடி நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற தன் நம்பிக்கை இவர்களிடம் இல்லை. இதனால்தான் இந்திய இராணுவப் படையெடுப்புக்கு இவாகள் அழைப்பு விடுக்கிறார்கள். எமக்கு இந்தியாவின் உதவி அவசியம்.இந்தியாவின் ஆதரவும் அவசியம். இந்தியாவின் நல்லெண்ணம் அவசியம். நாம் முதலில் இந்தியவிடம் எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்த வேண்டும். தமிழீழ தனியரசே எமது பிரச்சனைக்கு திட்டவட்டமான தீர்வு என்பதை எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவின் நல்லாதரவைப் பெறுவதைவிட்டு, எமது பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு இந்தியாவிடம் கைநீட்டி நிற்பது அரசியற் சாணக்கியம் ஆகாது” அதுதான் பிரபா விடுத்த அறிக்கை. இந்தியா நேரடியாக படை அனுப்பினால் தமிழீழத்திற்கு குறைந்த தீர்வை எற்கவேண்டி வரலாம் என்பதை உணர்ந்து பிரபா முன்வைத்த நிலைப்பாடு, ‘ படை அனுப்ப வேண்டாம் உதவி செய்தால் போதும்’ பேச்சில் சிக்கல் திம்பு பேச்சுவார்த்தை பற்றி இலங்கைப் பத்திரிகைகள் உட்பட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் பல நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. அதே நேரம் திம்பு பேச்சை புத்திசாலித்தனமாக முறித்துக்கொள்ளக்கூடிய ஒரு தருணத்துக்காக இயக்கங்கள் காத்திருந்தன. தொடர்ந்து வரும்.. http://ilakkiyainfo.com/ Share this post Link to post Share on other sites
Maruthankerny 1,429 Report post Posted October 10, 2015 ஆலாலசுந்தரம் தர்மலிங்கத்தை போட்டது தாஸ் அண்ணை தான்தான் என்று பயிற்சி முகாமிலேயே சொன்னார். வடமரச்சியை பொருத்தவரை அது எல்லோருக்கும் தெளிவாக தெரிந்து இருந்தது.இப்போதும் புலிகள்தான் ஆலாசுந்தரம் போன்றவர்களையே சுட்டவர்கள் புலிகள் ... என்று வீணை வாசிப்போர் இன்றும் உண்டு. 1 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted October 17, 2015 நாடுகடத்த கைது செய்யப்பட்ட அன்ரன்பாலசிங்கம்!! (அல்பிரட்துரையப்பா முதல் காமினிவரை-47) திம்புவில் நான்கு கோரிக்கைகள்… திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை (ENLF ) முன்னணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும். அக்கோரிக்கைகளை நான்கு இயக்க்கூட்டமைப்பு தயாரித்திருந்தபோதும், தமிழர் விடுதலைக் கூட்டணியும், புளொட் இயக்கமும் அவற்றை ஏற்றுக்கொண்டன. அதனால் திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புகளது குரல் ஒரேவிதமாக ஒலிக்கக்கூடிய சூழ்நிலை உருவானது. அதேசமயம் அக்கோரிக்கைகளை தெளிவாக ஆராய்ந்தால் ஒரு விடயம் புலப்படும். தமிழீழக் கோரிக்கை கைவிடப் போவதில்லை என்று கூறமுடியாத நிலையில், தமிழீழ கோரிக்கையை ஒத்ததாகவே அக்கோரிக்கைகள் அமைந்திருந்தன. திம்பு பேச்சில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் இவைதான். 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்று அங்கீகரிப்பது. 2. தமிழ் மக்களது பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிப்பது. 3. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. 4. மலையகத் தமிழ் மக்களது குடியுரிமையை அங்கீகரிப்பது. மலையகத் தமிழ் மக்களது பிரச்சனையையும் இனப் பிரச்சனைத் தீர்விற்கான பேச்சுவார்த்தையில் முன்வைத்தமை அதுவே முதல் முறையாகும். மூன்று நிலைப்பாடுகள். இந்த இடத்தில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக வடக்கு- கிழக்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் காணப்பட்ட மூன்று நிலைப்பாடுகளை குறிப்பிட்டேயாக வேண்டும். முதலாவது நிலைப்பாடு- தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டதாகும். மலையகத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு- கிழக்கில் வந்து குடியேற வேண்டும் என்று சொன்னது கூட்டணி. இரண்டாவது நிலைப்பாடு- ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல். எஃப். இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது. ஈழம் என்பதில் மலையகமும் அடங்கும். ஈழப் புரசிக்கு மலையகப் பாட்டாளிகளே தலைமைச் சக்திகள் என்று அவை கூறிக்கொண்டிருந்தன. பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அந்த முடிவை மாற்றிக்கொண்டது. மூன்றாவது நிலைப்பாடு மலையக மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராட வேண்டும். மலையகத்தில் போராடும் அமைப்புகளுக்கு ஈழப்போராளிகள் உதவி செய்யலாம். இந்த மூன்றாவது நிலைப்பாட்டை புலிகள் இயக்கமும் கடைப்பிடித்தது. முதல் இரண்டு நிலைப்பாடுகளும் வெறும் கற்பனைகளாக இன்று ஏற்கப்பட்டுவிட்டன. இனித் திம்பு பேச்சுக்கு செல்லலாம். திம்புவில் பேச்சுவார்த்தையை இயக்கங்கள் குழப்பக்கூடும் என்று இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இயக்கங்களின் நோக்கமெல்லாம் பேச்சில் அல்ல, போரை தொடர்ந்து நடத்தி ஈழம்வரை செல்வதுதான் என்று இந்தியாவுக்கு தெரியும். எனவே இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இந்தியா திட்டமிட்டது. நாடு கடத்தும் திட்டம். 23.8.85 அன்று இரவு புலிகள் இயக்க ஆலேர்சகர் அன்ரன் பாலசிங்கத்தையும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனையும் கைது செய்தனர். தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக திம்புப் பேச்சில் கலந்துகொள்ள வந்திருந்தவர் சட்டத்தரணி சத்தியேந்திரா. தமது தரப்பில் திம்புவில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து அவரை இறக்குமதி செய்திருந்தது ரெலோ. (இப்போது அவர் புலிகளது ஆதரவாளராக இருக்கிறார்) அவரையும் கைதுசெய்து நாடுகடத்துவதற்காக இந்திய அதிகாரிகள் தேடுதல் நடத்தினார்கள். அவர் சென்னையில் தலைமறைவாகிவிட்டார். அன்ரன் பாலசிங்கத்தையும் சந்திரகாசனையும் சென்னையிலிருந்து இரவோடு இரவாக பம்பாய்க்கு கொண்டு சென்றார்கள் அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துப்போனார்கள். இருவரையும் நாடுகடத்தும் ஆயுத்தங்கள் துரிதகதியில் நடத்தப்பட்டன. அதேசமயம் சென்னையில் இருந்த நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூடி ஆராய்ந்தார்கள். அன்ரன் பாலசிங்கம் திரும்பிவராமல் பேச்சில் பங்குகொள்ள முடியாது என்று பிரபாகரன் தெரிவித்துவிட்டார். பேச்சில் கலந்து கொள்வதானால் அன்ரன்பாலசிங்கம் வரவேண்டும். பேச்சுவார்த்தையில் அவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று நான்கு இயக்கக் கூட்டமைப்பு முடிவு செய்தது. அந்த முடிவு இந்திய அரசுக்கும் அறிவிக்கப்பட்டது. மாறிய முடிவு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், ஈழப்போராளி அமைப்புகளுக்குச் சார்பான தமிழ்நாட்டு அமைப்புகளும் கடுமையாக கண்டிக்கத் தொடங்கிவிட்டன. நிலமையைக் கவனித்த இந்திய அரசு அன்ரன் பாலசிங்கத்தையும், சந்திரகாசனையும் நாடுகடத்தும் திட்டத்தை கைவிட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட இருந்த தடை நீக்கப்பட்டது, ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஒருவகையில் நாடுகடத்தும் உதவிகரமாக அமைந்தது என்றே கூறவேண்டும். ஈழப்போராளிகள் விடயத்தில் கண்டிப்பாகவே நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ள அது உதவியது. தான் ஒரு நியாயமான மத்தியஸ்தர் என்று இலங்கை அரசுக்கும், வெளியுலகுக்கும் முன்பாக இந்தியா செய்த பிரகடனம் என்று அதனைக்குறிப்பிடலாம். ஒரு கூத்து திம்பு பேச்சுவார்த்தை ஆரம்பமான முதல்நாள் ஒரு கூத்து நடந்தது. இயக்கங்களும், கூட்டணியும் பொதுவான நிலைப்பாட்டையே முன்வைப்பது என்று, பேச்சுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதல்லவா?? அதன்படி பேச்சு மேசையில் நான்னு அம்சதிட்டம் முன்வைக்கப்பட்டது. அதே நேரம் ஈரோஸ் சார்பாக கலந்துகொண்ட சங்கர்ராஜீ தனியாக ஒரு திட்டத்தை விநியோகித்துவிட்டார். ஏனைய இயக்க பிரதிநிதிகளுக்கு நெத்தியடியான அதிர்ச்சி. கூட்டணிதான் ஏதாவது கோளாறு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமிர்தலிங்கம் இயக்கங்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டார். நான் இயக்கக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருந்துகொண்டு ஈரோஸ் இயக்கம் அப்படிக் குறுக்கால் ஒரு ஓட்டம் ஓடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனை ஒரு திட்டமாக முன்வைக்கவில்லை. விவாதத்திற்காகவே முன்வைப்பதாக சங்காஜீ விளக்கம் சொன்னார். திம்புவில் இருந்து தொலைபேசி மூலம் சென்னையில் இருந்த தலைவர்களுகுச் செய்தி வந்தது. பாலகுமார் சென்னையில் நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் சங்கர்ஜியின் நடவடிக்கை தொடர்பாக பிரச்சனை எழுந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரோஸ் பாலகுமாரிடம் ஏனைய மூன்று இயக்கத் தலைவாகளும் கேள்விக் கணைகள் தொடுத்தனர். பாலகுமார் திணறிப்போனார். “சங்கர்ராஜீ இப்படி செய்வார் என்று எனக்கு தெரியாது. அது பிழைதான். ஈரோஸ் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சங்கர்ராஜீ முன்வைத்த யோசனை திரும்பப் பெறப்படும்” என்று கூறினார். பிரபா சொன்னது ஈரோஸின் முடிவில்லாமல் சங்கர்ராஜி செயற்பட்டிருக்க முடியாது என்றே ஏனைய இயக்கத் தலைவாகள் கருதினார்கள். கூட்டமைப்புக் கூட்டம் முடிந்தபின் ஈ.பி.ஆர்.எல். எஃப் தலைவர் பத்மநாபாவிடம் பிரபாகரன் சொன்னது இது,.. “ஈரோஸ் இப்படி செய்யுமென்று எனக்கு தெரியும்.ஈரோசையோ, ரெலோவையோ நம்பி நாம் கூட்டமைப்பில் நாம் சேரவில்லை. உங்களை நம்பிதான் சேர்ந்திருக்கிறோம்” என்றார் பிரபாகரன். இந்த இடத்தில் மேலும் ஒரு சம்பவம் : ஒருமுறை பத்மநாபா தனது T :V :S .50 மோட்டார் சைக்கிளில் சென்னை அடையாறில் உள்ள புலிகளது அலுவலகத்திற்குச் சென்றார். அவர் தனியாக வந்ததைக் கண்டதும் பிரபாகரன் கேட்டார்,”பாதுகாப்பில்லாமல் இப்படி வருகிறீர்களே?” அதற்கு பத்மநாபா சொன்ன பதில் : ” நாங்கள் மக்கள் இயக்கம். மக்கள் எங்குமிருப்பதால் அதுதான் பாதுகாப்பு” அதைக் கேட்டு பிரபாவின் பதில் ஒரு சிரிப்பு மட்டுமே. திம்புவில் சர்ச்சை திம்பு பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரிதான் முக்கிய பாத்திரம் வகித்தார். ரொமேஷ் பண்டாரியை இயக்கங்களுக்கு பிடிக்காது. இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்வார் ரொமேஷ் பண்டாரி. அவரை ஜே.ஆர். தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டார் என்று இயக்கங்களுக்குச் சந்தேகம். ரொமேஷ் பண்டாரிக்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலாளர்களாக இருந்தவாகள் இயக்கத் தலைவர்களோடு நல்ல உறவுகளை வைத்திருந்தனர். திம்பு பேச்சில் சூடான ஒரு கட்டத்தில் ரொமேஷ் பண்டாரி இயக்கப் பிரதிநிகளை நோக்கிச் சொன்ன வார்த்தை இது : ‘BLOODY BOYS’ (கெட்ட பையன்கள்) இயக்கப் பிரதிநிதிகள் கொதித்துப் போனார்கள். பிரச்சனை பெரிதாகும் என்று உணர்ந்து கொண்ட ரொமேஷ் பண்டாரி இறுதியில் மன்னிப்பு கேட்டார். அதேசமயம் திம்பு பேச்சில் கலந்துகொண்ட இலங்கை அரசுப் பிரதிநிதிகளின் பார்வையில் ஒருபடி உயர்ந்தும் விட்டார். ஜே.ஆர்.உறுதி திம்புவில் பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது கொழும்பில் தனத கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜே.ஆர்.சொன்ன உறுதிமொழி இதுதான் : “திம்புவில் சமரசப் பேச்சு நடந்தாலென்ன, நடக்காவிட்டால் என்ன தீவிரவாதிகளின் முகாம்களைத் தேடிக்கண்டுபிடித்து அழிப்பதில் முப்படைகளும் ஈடுபடும். இலங்கைத் தீவில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தமது மரபுவழித்தாயகம் என்று தமிழர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதை எனது அரசோ, ஏற்கமாட்டோம்.” இதேவேளை யூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது. இந்திய அரசின் தலையீட்டால் அக்டோபர் மாதம் 12ம் திகதி முதல் போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டபோது, போர்நிறுத்த மீறல்களைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது. போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதில் தனது அரசு நியாயமாக நடந்து கொள்கிறது என்று நிரூபிக்க ஜே.ஆர். செய்த தந்திரமே கண்காணிப்புக் குழுவாகும். கார்டியனின் கணிப்பு இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் 19.06.1985இல் டேவிட் பலிஸ்டர் என்பவா எழுதிய கட்டுரை ஒன்று முக்கியமானது. டேவிட் பலிஸ்டர் தளபதி பிரிகேடியர் நளின் செனிவரத்னாவை பேட்டி கண்டார். அப்போது நளின் செனிவிரத்னா பின்வருமாறு சொன்னாராம்; “தமிழீழ விடுததைப் புலிகளது கொரில்லாப் போரை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எமது முகாம்களை மூடியுள்ள மணல் மூட்டைகளைக் கடந்து எமது ஆணை செல்லாது.” டேவிட் பலிஸ்டர் யூ.என்.பியின் மூத்த அமைச்சர் ஒருவரையும் சந்தித்தார். அந்த அமைச்சர் பின்வருமாறு கூறியிருந்தார். “ஜயவர்த்தனா பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு 43 ஆண்டுகாலம் காத்திருந்தார். தமிழர் பிரச்சனையைத் தீர்க்கவும் ஒரு கால அட்டவணையை வைத்திருந்தார். ஆனால் இப்போது அவரிடம் பிடிஇல்லாமல் போய்விட்டது. அவர் கொஞ்சம் குழம்பிப்போய் இருக்கிறார். கடந்த காலங்களில் ஒவ்வொரு தடவையும் நாமே தமிழர்களைத் தாக்கியிருக்றோம். அவர்கள் ஓடினார்கள், இப்போது அவர்கள் எம்மைத் திருப்பித் தாக்குகிறார்கள். அவர்கள் மீது நாம் மரியாதை கொண்டுள்ளோம். கூடிய சலுகைகளை நாம் கொடுத்தேயாக வேண்டும்.” இவற்றையெல்லாம் வெளியிட்ட கார்டியன், இறுதியில் தனது கணிப்பைச் சொல்லியிருந்தது. “பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று கூறிவிடமுடியாது.” அதுதான் கார்டியன் வெளியிட்ட கணிப்பு. அந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் காரியங்கள் அரங்கேற ஆரம்பித்தன. (அரசியல் தொடர்… எழுதுவது அற்புதன்)தொடர்ந்து வரும்.. http://ilakkiyainfo.com/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 1, 2015 மூன்று தடவைகள் செய்யப்பட்ட ‘சுதந்திர ஈழப் பிரகடனம்’ : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-48 “போர் நிறுத்தம்” மேலும் நீடிக்கப்பட்டது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் நிறுவப்பட்டது. போர் நிறுத்த மீறல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன. பலவீனமடைந்துவிட்ட இயங்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருதார் அத்துலத் முதலி. ஜே.ஆரின் பேட்டி ‘இந்திய டூடே ‘ சஞ்சிகைக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது. “தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தான் தீர்வு காணப்படவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான காலெக்கெடு டிசம்பர் மாதம் அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை தொடரமாட்டோம். இந்தியா 24 மணி நேரத்தில் சிறிலங்காவை கைப்பற்றி என்னைக் கைது செய்துவிடலாம். அப்படி நடந்தால் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழர்கள் பிரச்சனைக்குள்ளாக நேரிடும்” யாழ்பாணத்தை கட்டுப்படுத்துவது கஷ்டமல்ல. அதற்கு முன்னர் மற்றப் பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். யாழபாணக் குடாநாட்டுக்கு உணவு விநியோகத்தை தடை செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளை அழித்தொழித்து விடலாம்.” என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் ஜே.ஆர். இயக்கங்களின் திட்டம் போர் நிறுத்தக் காலதோடு படையினரை முகாம்களுக்குள் முடக்கிவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் திட்டம் என்று முன்னரே கூறியிருந்தேன். ஆனால், யாழ் குடாநாட்டை தவிர ஏனைய பகுதிகளில் படையினர் திடீர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தனர். சோதனை நடிவடிக்கைகளும் அடிக்கடி நடைபெற்றன. படையினரின் போர் நிறுத்த மீறல்களை இயக்கங்கள் கண்டித்த போதும். போர் நிறுத்த மீறல்கள் நடைபெறுவதை அவை ஒருவகையில் விரும்பவும் செய்தன. அப்படியானால்தான் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரலாம். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சமாதானத்தைத் தீர்வுக்கு எப்போதும் முன்வரக்கூடியவரல்ல என்பதை இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு எப்படியாவது புரியவைத்துவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. சுருக்கமாகச் சொல்வதானால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுமானால், அது இயக்கங்களுக்கு செய்தியாகிவிடும். அதனால்தான், போர் நிறுத்தத்தை தாங்கள் சரியாக கடைப்பிடிப்பதாகவும், படைகள் அதனை மீறிவருவதாகவும் சகல இயக்கங்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. குறிப்பாக இந்தியாவில் இருந்த இயக்கத் தலைமைகள் அதனைத் திறம்பட செய்துகொண்டிருந்தன. இதேவேளை 1985 யூலை 8ம் திகதி திம்புவில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்திய அரசின் முயற்சியால் திம்புவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. 1985 ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இலங்கை அரசின் சார்பில் சமர்பிக்கப்பட்ட யோசனைகள் மாவட்ட சபைகள், மாகாண சபைகள் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நின்றுகொண்டிருந்தன. வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதையோ அரசு தரப்பு ஒரேயடியாக நிராகரித்தது. இந்தியாவை மீறி பேச்சுவார்த்தையை புறக்கணிப்பது எப்படி என்பதுதான் பிரச்சனை. போர் நிறுத்தமும் -படையினரின் முற்றுகையும் திடீர் முற்றுகை வவுனியா நகரில் இருந்து 10மைல் தொலைவில் உள்ள இறம்பைக்குளம், தோணிக்கல், சூசைப்பிள்ளையார் குளம், கூடாமங்களம், மூன்று முறிப்பு ஆகியகிராமங்கள் சந்தடிகள் அடங்கித் தூங்கத் தயாராகிக் கொண்டிருந்தன. திடீரென்று பல வாகனங்கள் வரும் இரைச்சல், நாய்கள் குரைக்கத் தொடங்கின. சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் திகைத்துப் போனார்கள். 50க்கு மேற்பட்ட ட்ரக்குகளிலும், ஜீப்புககளிலும், கவச வாகங்களிலும் 400க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கிரமங்களுக்குள் புகுந்தனர். வேட்டுச் சந்தங்கள் விண்ணைக் கிழித்தன. அவற்றையும்மீறி அவலச் சந்தங்கள் எங்கும் ஒலித்தன. வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு 50க்கு மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காடுகளுக்குள்ளும், பற்றைகளுக்குள்ளும் ஓடிப் பதுங்கிக் கொண்டவர்கள் போக, வீடகளில் இருந்தவர்கள் வேட்டுகளுக்குப் பலியானார்கள். குடிசைகள் பல எரிக்கப்பட்டன. இரண்டு நாட்களாக ஒரே அமளி. மூன்றாம் நாள் படையினர் வெளியேறினார்கள். 40 உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டன. ஏறக்குறைய 120 பேர்வரை கொல்லப்பட்டனர்.10வயதிற்குட்பட்ட எட்டுக் குழந்தைகளும் பலியானவர்களில் அடக்கம். வவுனியாவில் சர்வோதய இயக்கத்திற்குப் பொறுப்பாக இருந்தவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி,மகள், தாய், தந்தை ஆகியோரும் விட்டுவைக்கப்படவில்லை. அனைவரும் கொல்லப்பட்டனர். திருமலையில்… திருக்கோணமலையிலும் படையினரின் நடவடிக்கைகள் விசுவரூபமெடுத்தன. பன்குளம்,இறணைக்கேணி,சாம்பல்தீவு ஆகிய இடங்களில் சாதாரணமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். குடியிருப்புக்களும் தாக்கப்பட்டன. சாம்பல் தீவில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் வீதிகளுக்கு கொண்டுவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பன்குளம் என்னும் ஊரில் ஊர்காவல் படையினர் கத்தி,வாள் போன்ற ஆயுதங்களோடு தமிழ் மக்களின் வீட்டுகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். திருமலை மாவட்டத்தில் மட்டும் இரண்டு நாட்களில் நூறுபேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் அகதிகளானார்கள். சென்னையில் நான்கு இயக்க் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) தலைவாகள் கூடி ஆராய்ந்தனர். திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாக வெளியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்தையிலிருந்து வெளியேறும் முடிவை புளொட் அமைப்பும் ஏற்றுக்கொண்டது. கூட்டணியும் உடன்பட்டது. உடனடியாக வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்று திம்புப் பேச்சில் கலந்து கொண்ட இந்திய அரசு பிரதிநிதிகள் இயக்கப்பிரதிகளிடம் வலியுறுத்தினார்கள், அதனை சென்னையில் உள்ள தமது தலைவர்களுக்கு தெரிவித்தனர் இயக்க பிரதிநிதிகள். “தலைமையின் உத்தரவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுத் திரும்பி வாருங்கள். அங்கு தொடர்ந்து நிற்கவேண்டாம்” என்று சென்னையில் இருந்த தலைவாகள் கண்டிப்பாகக் கூறிவிட்டனர். வரதராஜப்பெருமாள் முதல் முறிவு சகல பிரதிநிதிகளும் மூட்டை முடிச்சுக்களோடு திரும்ப ஆயத்தமானார்கள். ஒரே ஒருவர் மட்டும் சற்றுபின்னடித்தார். அவாதான் வரதராஜப்பெருமாள். ஈ.பி.ஆர் எல்.எஃப் பிரதிநிதிகளும் வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன் ஆகியோர் திம்பு பேச்சில் கலந்துகொண்டிருந்தனர். இந்திய பிரதிநிதிகள் கூறும்போது முகத்தை முறித்துக்கொண்டு உடனே திரும்புவது முறையல்ல என்பதே வரதராஜப் பெருமாளின் வாதம் பத்மநாபா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதராஜப்பெருமாளை உடனடியாக திரும்புமாறு கூறிவிட்டார் எப்படியோ ஈழப்போராளி அமைப்புக்கள் முதன்முதலாக இலங்கை அரசோடு நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்தது. திம்புப் பேச்சுத்தீர்வுக்கான பாதையைத் திறக்கும் என்று ஆரூடம் சொன்னவர்களும், வரவேற்றவர்களும் வாயடைத்துப்போனார்கள். திம்பு பேச்சுவார்த்தை முறிந்தபின்னர் விடுதலைப் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். பேச்சுவார்த்தைக்கு ஏன் தாம் உடன்பட்டோம் என்பதை அவர் விளக்கியிருந்தார். அந்த அறிக்கையிலிருந்து ஒரு பகுதி இது. “புதிய பாரதபிரதமரின் நேர்மையான நல்லெண்ண முயற்சிகளுக்கு நாம் எவ்வகையிலும் குந்தகமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனா அரசின் சாவாதிகாரக் கொடுங்கோன்மை ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவதோடு, தமிழர் பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசுக்கு எவ்வித விருப்பமம் இருக்கவில்லை. என்பதை பகிரங்கப்படுத்தவும் எமக்கு ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆகவே நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கினோம். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம். நாம் தீர்க்க தரிசனத்துடன் அனுமானித்தபடி தமிழீழ மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தழுவிய எந்தவொரு உருப்படியான தீர்வுத்திட்டமும் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை என்ற வலைவிரிப்பில் எம்மை சிக்கவைத்து, சுதந்திர வீரர்களான எம்மை அடிமைகளாக்கி அழித்தொழிப்பதுதான் ஜெயவர்்த்தனாவின் சூத்திரதாரத் திட்டம். இந்த பொறிகிடங்கில் விழுந்துவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை. பேச்சுவார்தை என்ற நாடகத்தில் போலி வேடம் புனைந்துகொண்டு, அதே சமயம் தமிழீழத்தில் பயங்கரமான இனக்கொலையை கட்டவிழ்த்து விட்டது சிறீலங்கா அரசு.” என்று குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன். ராஜீவுக்கு பாராட்டு தனது அறிக்கையில் இந்திய ராஜீவ் காந்திக்கும் புகழாரம் சூட்டியிருந்தார். பிரபாகரன். அது இதுதான். “ஜெயவர்த்தனா ஒரு சூத்திரதார அரசியல் வாதி என்பதையும் நம்பமுடியாத ஏமாற்றுப் பேர்வழி என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டவர் முன்னாள் பாரதப்பிரதமர் திருமதி காந்தி. புதிய பாராதப் பிரதமர் (ராஜீவ் காந்தி) சமாதானப்பிரியர். தமிழரின் பிரச்சனையில் தனிப்பட்ட அக்கறைகொண்டவர். தமிழ் மக்கள் கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்று விரும்புபவர். அவரது நற்போக்கையும், நல்லெண்ண முயற்சிகளையும் ஆதரிப்பது போல ஜெயவர்த்தனா அரசு நடிக்கிறது. இந்திய அரசை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக முடிந்துவிடுவதல் ஈடுபடுகிறது. ஜெயவர்த்தனாவின் இந்த ராஜதந்திர சூழ்ச்சியை இந்திய அரசும் வெகுவிரைவில் புரிந்து கொள்ளும் என்பதே எமது நம்பிக்கை. தமிழீழ தனியரசே எமது அசைக்க முடியாத இலச்சியம். இந்த இலட்சியத்தை அடையவே நாம் உயிரை அர்ப்பணித்து போராடிவருகிறோம். வேறு எந்த மாற்றுத் திட்டமும் எமது மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையமாட்டாது என்பதே எமது கருத்து. உலகத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களை ஆதரித்துவரும் பாரதநாடு ஈழத் தமிழ்மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இந்திய மக்களின் அங்கீகாரம் எமக்கு கிட்ட காலம் பிடிக்கலாம். ஆயினும் நாம் அதற்காக போராடிக்கொண்டேயிருப்போம். அதுதான் பிரபாகரன் விடுத்த அறிக்கையின் முக்கிய பகுதிகள். எழுத்தாளர் எங்கே? போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த போது சென்னையில் ஒரு சம்பவம் நடந்தது. இலங்கையிலிருந்து வெளியேறி சென்னையில் தங்கியிருந்தவர் காவலூர் ஜெகநாதன். சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை மண்வாசனையோடு எழுதிப் பிரபலமானவர். காவலூர் என்பது யாழ்பாணத்திலுள்ள ஊர்காவத்துறையைக் குறிக்கும். ஜெகநாதனின் சொந்தஊர் அதுதான். சென்னையில் இருந்த காவலூர் ஜெகநாதனை இரவோடு இரவாக சில இளைஞர்கள் அழைத்துப் போனார்கள். அதன்பின்னர் காவலூர் ஜெகநாதன் வீடு திரும்பவில்லை. அவரது நண்பர்களும் உறவினர்களும் சென்னையில் உள்ள இயக்க அலுவலகங்கள் தோறும் விசாரித்துப் பார்த்தார்கள். பயனில்லை. நான்கு இயக்கக் கூட்டமைபுக் கூட்டத்தில் காவலூர் ஜெயகாந்தனை பற்றிப்பேச்சு எழுந்தது. ஈரோஸ் பாலகுமார் சொன்னது “அவர் மூலம்தான் சென்னையில் உள்ள இயக்கங்களின் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்குப்போவதாக நாம் அறிந்திருக்கிறோம். தனது எழுத்துலகத் தொடர்புகளை பயன்படுத்தி தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தார். சென்னையிலுள்ள இலங்கைத் தூரகம் மூலமாக பணமும் கிடைத்து வந்தது. அவர் ஒரு உளவாளிதான் ஆனால் நாம் அவரை கடத்தவில்லை.” அதுதான் ஈரோஸ் சார்பாக பாலகுமார் சொன்ன விளக்கம். பின்னர் உண்மை தெரியவந்தது. காவலுர்ர் ஜெகநாதனை பிடித்துச் சென்று காதும்,காதும் வைத்தது போலக் கதையை முடித்தது யார் தெரியுமா?? ஈரோஸ் இயக்கம்தான். பாலமும்-இயக்கமும் மற்றொரு சம்பவம் 1985 ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழீழ அரசு இயங்கத் தொடங்கும் என்று அறிவித்தது ஒரு குழு. அதன் பெயர், ஈழப் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர் பெயர் பாலசுப்பிரமணியம். ரோகன விஜயவீராவின் கூட்டாளியாக ஜே.வி.பி. அமைப்பில் இருந்த பாலசுப்பிரமணியத்திற்கு தானும் ஒரு தலைவராகும் ஆசைவந்துவிட்டது. தானும் ஒரு இயக்கம் என்று புறப்பட்டார். இயக்கம் என்றால் ஒரு தாக்குதலாவது நடத்தவேண்டுமல்லவா. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது.. தென்னிலங்கையில் ஒரு பாலம் பழுதடைந்து உடைந்துவிட்டது.(இடம் நினைவில்லை) பாலம் உடைந்த செய்தியை கேள்விப்பட்ட பாலசுப்பிரமணியம் எடுத்தர்ர் லெட்டர் ஹெட்டை ” பாலத்தை உடைத்து தகர்த்தவாகள் நாமே” என்று உரிமை கோரிவிட்டார். சில பத்திரிகைகளும் அதனை வெளியிட்டுத் தொலைத்ததுதான் வேடிக்கை. அந்தப் பாலசுப்பிரமணியம் தான் “1985 நவம்பரில் சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யப்படும். சுதந்திர ஈழ அரசு இயங்கும்” என்று அறிவித்திருந்தார். அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 1982 ஆண்டில் யாழ்பாணத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி முன்பாக தமிழீழ விடுதலை அணியும் தமிழீழ பிரகடனம் செய்திருந்தது. பாலசுப்பிரமணியத்தின் ஈழப்பிரகடனம் இரண்டாவதாகும். மூன்றாவது ஈழப்பிரகடனம் 1990 இல் ஈ.பி.ஆர். எல. எஃப் இயக்கத்தால் செய்யப்பட்டது. மூன்று ஈழப்பிரகடனங்களுமே புஸ்வாணமாகிப் போயின. உள்மோதல்கள் 1985 இன் பிற்பகுயில் ஈ.பி.ஆர். எல் எஃப்,புளொட், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுக்குள் உள்பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன. ஈ.பி.ஆர். எல் எஃப் அமைப்புக்குள் மத்திய குழுவுக்கும், இரண்டாம் கட்டத்தலைமைக்கும் இடையே விரிசல்கள் எழத்தொடங்கின. புளொட் அமைபிலும் இரண்டாம் கட்டத் தலைமை தமது தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தது. இந்த இரண்டு அமைப்புக்குள்ளும் இரண்டாம் கட்டத் தலைமையினர்தான் இயங்கும் சக்திகளாக இருந்தனர். அரசியல் பிரச்சாரம், இராணுவ வேலைகள் போன்றவை இரண்டாம் கட்டத் தலைமைகளாலேயே முன்வைக்கப்பட்டு வந்தன. புளொட்டை பொறுத்தவரை அதன் தலைவர் உமாமகேஸ்வரன் தாக்குதல் நடவடிக்கைகள் சிலவற்றில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தார். ஈ.பி.ஆர். எல் எஃப் தலைவர் பத்மநாபா இராணுவ நடவடிக்கைள் எதிலும் நேரடியாகப் பங்குகொள்ளாமலேயே அரசியல்-இராணுவ இயக்கத் தலைவராக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஈரோஸ் இயக்கத்தலைமையும் உத்தரவுகளை போடுவதோடு நின்று கொண்டது. இயக்க வேலைகளை முன்னெடுத்த இரண்டாம் கட்டத் தலைமைகள் தமது தலைவர்களின் வழிகாட்டும் திறமை குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள். புலிகளைத் தவிர, ஏனைய இயக்கங்கள் உட்கட்சி ஜெனநாயகம் பற்றி பேசிவந்தனர். அதே இயக்கங்களுக்குள் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்டபோது உட்கட்சி ஜனநாயகம் காற்றில் பறந்தது. புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் தமது இயக்க உறுப்பினர்களையே உளவு பார்க்க தனது உளவுப்பிரிவை பயன்படுத்தினார். இந்தியாவில் இருந்த பயிற்சி முகாம்களில் பல உறுப்பினர்கள் பிரச்சனைக்குரியவர்கள் என்று சந்தேகப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள். ஈரோஸ் இயக்கத்துக்குள்ளும், ஈ.பி.ஆர். எல் எஃப் இயக்கத்துக்குள்ளும் பிரச்சனை வேறு ஒரு கோணத்தில் தோன்றியிருந்தது. (தொடர்ந்து வரும்…-அரசியல் தொடர்.. எழுதுவது அற்புதன்-) http://ilakkiyainfo.com/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 7, 2015 சென்னையில்..அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைப்பு: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 49) உள் பிரச்சனைகள்: ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் 1985ம் ஆண்டின் மத்தியில் உள் இயக்கப் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. 1982ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் உள்பிரச்சனை ஏற்பட்டது. 1982இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் கொள்கைகளும், மக்கள் மத்தியிலான வேலைகளும் யாழ்-பிராந்திய கமிட்டியில் இருந்த உறுப்பினர்களால்தான் முக்கியமாக முன்னெடுக்கப்பட்டன. இயக்கத்தின் மத்திய குழு தலைமை என்றளவில் இருந்ததே தவிர, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தை தனித்துவமாக அடையாளப்படுத்திய அரசியல் பிரச்சார வேலைகளுக்கு வழிகாட்ட அதனால் முடியவில்லை. இதனால் மத்திய குழுவை கடுமையாக விமர்சித்த யாழ்-பிராந்திய கமிட்டி தனித்து இயங்குவதற்கு தீர்மானித்தது. மட்டக்களப்பு பிராந்திய கமிட்டி, வன்னிப் பிராந்தியக் கமிட்டி என்பவற்றின் ஆதரவோடு ஒரு தீாமானத்தையும் எடுத்தது. அப்போது இயக்கத்தின் உள் இயக்கத் தொடர்பாளராக இருந்தவர் குணசேகரன். அவரது முயற்சியின் காரணமாக 1982 இல் ஏற்படவிருந்த பிளவு தடுக்கப்பட்டது. அதனையடுத்து ஏற்பட்ட உள் பிரச்சனை 1985இன் மத்தியில்தான் தீவிரமடைந்தது. ஈழப்போராளிகள் அமைப்புக்குள் இரண்டாம் கட்ட தலைமைத்துவம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில்தான் பலமானதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் கட்சிக்குள் கருத்து மோதல்களை துணிச்சலாக நடத்தக்கூடியளவுக்கு உட்கட்சி ஜனநாயகமும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் தான் 1986 வரை உயிரோட்டமுள்ளதாகவும் இருந்தது. இரண்டாம் கட்ட தலைமையே இயக்க நடவடிக்கைகளுக்கு உண்மையான தலைமைபாத்திரம் வகித்தமையால் தலைமைக்கு தன்னிச்சையான போக்குகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் இயக்கத்தின் அரசியில்-பிரச்சார நிறுவனங்களும், கட்சியின் மக்கள் அமைப்புகளும் இரண்டாம் கட்ட தலைமையின் கையில் இருந்ததும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்திய அரசுடனான தொடர்பு, இந்திய புலனாய்வு அமைப்புக்களுடனான தொடர்பு என்பவற்றை பத்மநாபா தனது கையில் வைத்துக்கொண்டார். தலைமையில் பிளவு 1983க்குப் பின்னர் இயக்கத்தின் ஆட்பலம் பெருகிய நிலையில் ஏற்பட்ட புதிய சூழலுக்கு தலைமையால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்பலம் பெருகியதோடு தலைமை திருப்திப்பட்டுக்கொண்டிருந்ததே தவிர, இயக்கத்தை புரட்சிகர கட்சியாக மாற்றும் செயல்பாட்டுக்கு தலைமை வழங்க முடியாமல் இருந்தது. மத்திய குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்குரிய திறமையை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர் என்றொல்லாம், இயகத்தின் இரண்டாம் கட்டத் தலைமை விமர்சனங்களை முன்வைத்தது. மத்திய குழுவின உறுப்பினராகவும், மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதியாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா, மத்திய குழு உறுப்பினர் செழியன் ஆகியோர் இரண்டாம் கட்டத் தலைமையின் பக்கம் நின்றனர். அதனால், இயக்கத்தின் இராணுவ அமைப்பும் தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் என்ற நிலை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. “மத்திய குழுவை கூட்டி நிலமையை ஆராயலாம்” என்றார் பத்மநாபா “மத்திய குழுக் கூட்டத்தை தமிழ் நாட்டில் வைத்துக்கொண்டால் வரமுடியாது. மத்திய குழு உறுப்பினர்கள் ஈழத்துக்கு வரவேண்டும். இங்கு கூட்டத்தை நடத்தலாம். கலந்துகொள்கிறேன்” என்று சொல்லிவிட்டார் டக்களஸ் தேவானந்தா. இதற்கிடையே ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்திய பிராந்திய கமிட்டி தலைமைக்கு எதிரான விமர்சனங்களை ஒன்றுதிரட்டி உட்கட்சிப் போராட்ட ஆவணமாகத் தயாரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் சகலருமே தலைமைக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். ஈழச் செய்தி தொடர்பு நிலைய பொறுப்பாளர் பிரேம், இந்திய பயிற்சி முகாம்களுக்கான பொறுப்பாளர் தயாபரன், இந்திய கமிட்டிச் செயலாளர் டேவிற்சன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவின் தலைமைகுழுவைச் சேர்ந்தவரும், பிரச்சார வெளியீடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருமான ரமேஷ் , புதுடில்லியில் கட்சி வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த மகேஷ், கட்சியன் ஆங்கிலப் பத்திரிகையான ‘ஸ்போக்ஸ் மன்’ ஆசிரியர் மனோராஜசிங்கம் ஆகியோர் ஒரே குரலில் விமர்சனங்களை முன்வைத்தனர். மைகேல் எங்கே? இதே காலகட்டத்தில் ஈரோஸ் அமைப்புக்குக்குள்ளும் உட்கட்சி பிரச்சனையில் முன்னின்றவர்களில் ஒருவர் மைக்கேல். யாழ்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர். அவர் தீரென்று காணாமல் போனார். மைக்கேல் எங்கே என்று கேட்டால் தமிழ்நாட்டிலிருந்த ஈரோஸ் இயக்கத்தினர் மைகேல் ஈழத்துக்கு போய்விட்டார் என்றனர். இங்கு கேட்டால் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார்கள். மைக்கேல் உட்பட வேறு சிலரும் காதும் காதும் வைத்தாற்போல் மண்டையில் போடப்பட்டுவிட்டார்கள் என்று நம்பப்பட்டது. ஈரோஸ் இயக்கத் தலைமையின் இந்திய அரசுக்கு ஆதாரவான போக்குத் தொடர்பாகவும் உள்ளே பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கின. இயக்கங்களின் உள்பிரச்சனைகள் குறித்து இத்தோடு தற்காலிகமாக நிறுத்தின்கொண்டு மேலே தொடருவொம்… முஸ்லிம்களின் நிலைப்பாடு திம்புப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு காணமுடியாமல் போனதற்கு இரண்டு காரணங்களே முக்கியமாக கூறப்பட்டன. அரச படைகளின் போர்நிறுத்த மீறல்கள், வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதையோ, வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதையோ அரசாங்கம் ஏற்க மறுத்தமை என்பவையே முக்கிய காரணமாக கூறப்பட்டன. இதற்கு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி சொன்ன பதில் புத்திசாலித்தனமானது. “வடக்கு- கிழக்கு இணைந்திருக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்வது முஸ்லிம் மக்களுக்காகத்தான், அவர்களை அநாதரவாக்கிவிட முடியுமா? என்று தேனொழுகப் பேசினார் அத்துலத் முதலி. லலித் அத்துலத் சொன்னதிலிருந்து ஒரு பகுதி இது… “வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பது சாத்தியமானதல்ல. இலங்கை மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் அதனை ஆதரிக்கவில்லை. கிழக்கில் வாழும் 33வீதமான முஸ்லிம் மக்களை நாம் அநாதரவாக்கிவிடமுடியாது. எந்த இனமும் இந்த நாட்டில் பாதிக்கப்படாத வகையிலான அரசியல் தீர்வையே நாம் முன்வைப்போம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அபாயகரமான திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. வவுனியா, திருக்கோணமலை போன்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் உத்தேசித்திருப்பதாக தெரிய வருகிறது.” என்று கூறியிருந்தார் அத்துலத் முதலி. உண்மையில் அவ்வாறான ஒரு திட்டம் புலிகளிடம் அப்போது இருக்கவில்லை. வடக்கு- கிழக்கு இணைப்புக்கு உள்ள தடையாக முஸ்லிம் மக்களை கொண்டுவந்து நிறுத்துவதே லலித்தின் திட்டமாக இருந்தது. இதே லலித் அத்துலத் முதலிதான் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரை இலங்கைக்குள் கொண்டுவரக் காரணமாயிருந்தவர் என்பது மறக்க முடியாதது. முஸ்லிம் தூதுக்குழு “இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும் இடமளிக்க வேண்டும். தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்போகிறோம்” என்று அறிவித்திருந்தார் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத். சென்னையில் இருந்த தமிழ் அமைப்புத் தலைவர்களைச் சந்திக்க பதியுதீன் மஹ்மூத் தலைமையில் ஆறுபேரடங்கிய குழு ஒன்று புறப்பட்டுச் சென்றது. “வடக்கு- கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. மாகாண சுயாட்சி ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். அரசாங்கம் மாவட்ட சபை யோசனைகளை முன்வைத்தால் ஏற்கமாட்டோம்.” என்று பதியுதீன் மஹ்மூத் தெரிவித்தார். சிறிலகா சுதந்திரக் கட்சி ஆட்சியில் கல்வியமைச்சராக இருந்தவர் பதியுதீன் மஹ்மூத். புலிகள் இயக்கமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் ரெலோ ஆகிய இயக்கங்களும் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் சென்ற தூதுக்குழவை சந்திக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புகளோ சந்தித்து பேசியிருந்தன. மீண்டும் முயற்சி திம்பு பேச்சுகள் முறிவடைந்தபோதும் மீண்டும் பேசு்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைக்க இந்திய பிரதமர் ராஜீவ் விருப்பம் கொண்டிருந்தார். ஈழப் போராளி அமைப்புக்களின் தலைவாகளை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராஜீவ் காந்தியைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்க ஈழப் போராளி அமைப்புகளது தலைவர்களும் விருப்பம் கொண்டிருந்தனா. “போர் நிறுத்தத்தை மீறிய அரச படைகள் திருக்கோணமலையில் பொதுமக்களை வேட்டையாடிய காடசிகளை வீடியோ படமாக வைத்திருக்கிறோம். அதனை ராஜீவ் காந்தியிடம் காண்பிப்போம் ” என்று நான்கு இயக்க கூட்டமைப்பான ஈழத்தேசிய விடுதலை முன்னணி (E:N:L:F) கூறியது. ஆனால் திம்பு பேச்சு முறியும் கட்டலிருந்தபோது, போராளி அமைப்பின் தலைவர்களை ராஜீவ் காந்தியைச் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது. போராளி அமைப்பின் தலைவர்களை சந்திக்க ராஜீவ் காந்தி நேரமும் ஒதுக்கி வைத்திருந்தார். காத்திருந்த விமானமும் தலைமறைவான தலைவர்களும் சென்னையில் இருந்து அவாகளை புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விமானம் ஓன்றும் சென்னை விமான நிலையத்தில் மூன்று நாட்களாகக் காத்திருந்தது. ஆனால், போராளி அமைப்புகளது தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ராஜீவ் காந்தியை சந்தித்தால் திம்பு பேச்சைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்றே சந்திப்பை தவிர்த்துக் கொண்டார்கள். கருணாநிதியின் முடிவு திம்பு பேச்சுக்கள் முறிந்தது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் பி.ரி.ஐ செய்தி நிறுவனம் கருத்துக்கேட்டது. திரு.மு.கருணாநிதி சொன்னது இது.. “1947ல் இந்திய உபகண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டதைப் போன்று, இலங்கையும் இன அடிப்படையில் பிரிக்கப்படுதே ஒரேயொரு தீர்வாக அமையும்” திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் சி.வீரமணி ஒரு அறிக்கையில் பின்வருமாறு சொன்னார். ” இலஙகைத் தமிழ் மக்களின் இன்னல் தீர தனிநாடு ஒன்றுதான் சரியான தீர்வாகும். அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மீண்டும் இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து கலந்து கொள்ளும்படி தமிழர் பிரதிநிதிகளை வற்புறுத்தக்சூடாது”என்று தெரிவித்தார் சி.வீரமணி. அதனை மத்திய அரசுக்கு தெரிவித்து ஒரு தந்தியும் அடித்திருந்தார். சதி முயற்சி தமிழ்நாட்டில் போராளி அமைப்புக்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும், தமிழகத்தில் ஏற்பட்டு வந்த ஆதரவும் இலங்கை அரசுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. சென்னையில் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த திட்டம் தயாரானது. 23.12.85 அன்று அதிகாலை 5மணியளவில் சென்னையில் ஒரு குண்டு வெடிப்பு இடம் பெற்றது. குண்டுவெடிப்புக்கு இலக்கான வீடு புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தங்கியிருந்த வீடாகும். இலங்கை அரசின் கையாட்கள் செய்த சதி முயற்சி என்று விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம் சாட்டியது. குண்டை வைத்தவர் யார் என்றும் இனம் கண்டுவிட்டதாக புலிகள் கூறினார்கள். அவர்கள் குற்றம் சாட்டியது யாரைதெரியுமா?? கந்தசாமி நாயுடுவை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் அமைச்சர் தொண்டமானுக்கு நெருக்கமாக தற்போதிருப்பவர்தான் கந்தசாமி நாயுடு. புலிகள் ஏன் அவர் மீது குற்றம் சாட்டினார்கள்? அடுத்தவாரம் (எழுதுவது அற்புதன்..தொடர்ந்து வரும்.) http://ilakkiyainfo.com/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 18, 2015 “தமிழீழம் அமையத்தான் போகிறது”. பிரபாகரனின் தீர்க்கதரிசனம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-50) சென்னையில் புலிகள் அமைப்பின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைத்தது இலங்கை அரசின் உளவாளிகளும் மொசாட்டும் இணைந்து செய்த சதி என்றே புலிகள் உடனடியாக குற்றம் சாட்டியிருந்தார்கள். அதன் பின்னர்தான் கந்தசாமி நாயுடு மீத சந்தேகம் ஏற்பட்டது. கந்தசாமி நாயுடு பற்றிச் சில பின்னணி விபரங்கள் கூறவேண்டும. சிறுபான்மைத் தமிழர் கந்தசாமி நாயுடு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். யாழ்பாணத்தில் வசித்தவர். யாழ்பாணத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்புக்கு தலைவராக இருந்தவர் சி.சுப்பிரமணியம். ” ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை??” என்று காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தார். அதனை கூட்டணி மேடைகளில் பேச்சாளர்கள் மறந்துவிடாமல் பயன்படுத்துவார்கள். ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதி. அந்தப் பரம்பரை மீண்டும் ஆள வந்தால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் உதைக்கப்படுவார்கள் என்று சிறுபான்மை தமிழர் மகாசபை பீதியூட்டிக்கொண்டிருந்தது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையே சிறுபான்மை தமிழர் என்ற பதத்தால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அழைத்து வந்தன. சிறுபான்மைத் தமிழர்கள் மாகாணசபை என்பதும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுதான். அப்போது சிறிலங்கா சுதந்திரக் கடசியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தது. தமிழர்கள் மத்தியில் சிறுபான்மைத் தமிழர், பெரும்பான்மைத் தமிழர் என்ற பிரிவினை நிலவுவதை ஐக்கிய முன்னணி அரசாங்கம் விரும்பியிருந்தது. அதனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபைத் தலைவரான சி.சுப்பிரமணியத்திற்கு நியமன எம்.பி பதவி கொடுக்கப்பட்டது. சி.சுப்பிரமணியத்தோடு நெருக்கமாக இருந்த திரு.கந்தசாமி நாயுடுவுக்கு சுப்பிரமணியம் பொலிஸ் சேவையில் வேலை பெற்றுக்கொடுத்தார். அனுதாபியா?? கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு அதிகாரியாகவும் திரு.கந்தசாமி கடமையாற்றினார். அதன் பின்னர் இலங்கையின் தேசிய உளவுப் பிரிவான NIB க்கு மாற்றப்பட்டார். பின்னர் இலங்கைத் தொழிளாளர் காங்கிரஸ் தலைவர் திரு.தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரியாக கந்தசாமி நாயுடுவை நியமிக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டார். அதனால் NIB யிலிருந்து விடுவித்து, அமைச்சர் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரியாக திரு.கந்தசாமி நாயுடு நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டளவில் கந்தசாமி நாயுடு தமிழ் நாட்டுக்குச் சென்றார். சென்னையிலிருந்த ஈழப் போராளி அமைப்புகள் பலவற்றோடு திரு.கந்தசாமி நாயுடு தொடர்புகளை வைத்திருந்தார். இயக்கங்களின் அனுதாபி என்று கருதப்பட்டவர். சென்னையில் அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைக்கபட்டதையடுத்தே கந்தசாமி நாயுடு மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கந்தசாமி நாயுடு மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. சென்னையில் மதீனா கடற்கரையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வைத்து மேடையைத் தகர்க்க முனைந்தமை. அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டில் குண்டுவைத்தமை என்பவைதான் கந்தசாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாகும். திரு.கந்தசாமியின் டயறியை உளவுப்பிரிவினர் பார்வையிட்டபோது அவர் அடிக்கடி இரண்டு பேரை சந்தித்த விடயம் தெரியவந்தது. ஒருவர் மணவைத் தம்பி, மற்றவர் தற்போது சென்னையில் மதுரா ட்ராவல்ஸ் உரிமையாளராக உள்ள வி,கே.ரி.பாலன். இருவரும் இலங்கையிலிருந்து சென்று சென்னையில் குடியேறியவாகள். கந்தசாமியுடன் சேர்ந்து அந்த இருவரும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் கந்தசாமி நாயுடு செய்யப்பட்டார். மர்மம் கந்தசாமி நாயுடுவின் இந்திய விஜயமும், இயக்கங்களின் உறவைத் தேடுவதில் ஆர்வம் காட்டியதும் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மகன் ரவி ஜெயவர்த்தனாதான் சில காலம் ஜே. ஆரின் பாதுகாப்பு ஆலேசகராக இருந்தவர். இந்தியவிலுள்ள போராளி அமைப்புக்களைக் கண்காணிக்க கந்தசாமி நாயுடுவையும் அவரே அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் கந்தசாமி நாயுடு இலங்கை திரும்பியபோது கட்டநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கந்தசாமியின் நாயுடு தற்போது இலங்கைத் தொழிளாளார் காங்கிரசின் உபதலைவராக இருந்து வருகிறார். காலித்துறைமுக அபிவிருத்தி திட்டக் குத்தகை கந்தசாமி நாயுடு பிரதிநித்துவம் செய்யும் ‘பிரிட்டிஷ்-சைனீஸ் கொன்கோட்டியல்’ என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. சென்னையில் உளவு சென்னையில் இருந்தே ஈழப் போராளி அமைப்புகளின் தலைவர்கள் இயங்கியதால் இயங்கியதால் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவான NIBயும் அங்கு கவனம் செலுத்தி வந்தது. சென்னையில்லுள்ள இலங்கையின் உதவித்தூதரகத்தில் NIB தனது அதிகாரி ஒருவரை வைத்திருந்தது. 1972ம் ஆண்டு முதல் அவ்வாறு ஒரு உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படுவது தொடர்ந்தது. 1985ம், 86 ஆண்டுகளில் அப்துல் மஜீத் NIB அதிகாரியாக கடமையாற்றி வந்தார். (அப்துல் மஜீத்தான் கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே. கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டவர். பொலிஸ் சேவையில் இருந்து விலகியே போட்டியிட்டார்) சென்னையில் போராளி அமைப்புகளது நடமாட்டங்களை கவனிக்க இலங்கை உளவுத்துறையினர் செய்த முயற்சிகளில் சுவாரசியமான சம்பவங்களும் இருக்கின்றன. போராளி அமைப்புகளது உளவுப்பிரிவுகளும், அரசின் உளவுப்பிரிவினரை மோப்பம் பிடித்துத் திரிந்தன. ஈ.பி.ஆர்.எல.எஃப் இயக்கத்தின் மக்கள் ஆய்வுப் பிரிவு (உளவுப் பிரிவு) சென்னை விமான நிலையத்தில் தனது உறுப்பினர்களைப் போட்டு, கொழும்பில் இருந்து வருபவர்களை கவனித்து வந்தது. சென்னையில் சன நெருக்கம் மிகுந்த பகுதிகளில் உள்ள தங்குவிடுதிகளில்தான் உளவுத்துறையினர் தங்குவார்கள். அப்பகுதிகளிலுள்ள ரவுடிகளையும் பணம் கொடுத்து கைக்ககுள் போட்டு வைத்துக்கொள்வார்கள். தங்களை வியாபாரிகள் என்றுதான் அவர்களுக்கு சொல்லி வைத்திருப்பார்கள். இயக்க உறுப்பினர்கள் தம்மை பின்தொடர்வதாக தெரிந்தால் உடனே ரவுடிகளிடம் காட்டிவிடுவார்கள். இயக்க உறுப்பினர்களை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தம்மை தாக்க வருவதாகவும் ரவுடிகளிடம் சொல்லிவிட்டு உளவுத்துறையினர் நழுவிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு தம்மை விடுவித்துக்கொள்ள இயக்க உறுப்பினர்கள் தடுமாறிய சந்தர்ப்பங்களும் இருந்தன. டபுள் ஏஜன்ட் இதற்கிடையே ஈ.பி.ஆா.எல்.எஃப் இயக்கத்தில் இருந்த உறுப்பினர் ஒருவரை தேசிய புலனாய்வு பிரிவு தமது ஆளாக மாற்றிக்கொண்டது. அவ்வாறு மாற்றப்பட்டவரின் பெயர் மவூசூக். சென்னையில் இருந்து கொழும்பு வந்தபோது மவூசூக் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யவேண்டுமானால் தமக்கு தகவல் தருபவராக மாறவேண்டும் என்று புலனாய்வு பிரிவினர் நிபந்தனை போட்டார்கள். மவூசூக் உடன்பட்டார். விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது புதிய பாத்திரம் குறித்து ஈ.பி.ஆா.எல்.எஃப் தலைவர் பத்பநாபாவிடம் கூறிவிட்டார். இலங்கை உளவுப்பிரிவுக்கு தகவல் கொடுப்பதுபோல் நடித்துக்கொண்டு, உளவுப்பரிவுத் தகவல்களை தமக்கு தருமாறு பத்மநாபா யோசனை கூறினார். டபுள் ஏஜன்ட் மாதிரி மவுசூக் செயல்பட வேண்டும். தேசிய புலனாய்வுத் துறையின் ஆளாக இருந்துகொண்டு , ஈ.பி.ஆா.எல்.எஃப் இயக்க ஆளாகவும் நடந்துகொள்ளவேண்டும. பின்னதற்கே விசுவாசமாக இருக்கவேண்டும். என்று பத்மநாபா கூறியிருந்தார். எனினும் மவுசூப் பின்னர் நடந்துகொண்ட முறைகள் சந்தேகமாக இருந்தன. இறுதியில் அவர் தமிழ்நாட்டிலிருந்து தப்பி கொழும்புக்கு ஓடிவிட்டார். மவுசூக் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவுர். அவரை அப்துல் மஜீத்தான் பயன்படுத்தினார் என்று நம்பப்பட்டது. ராஜீவ் சந்திப்பு இப்போது பேச்சுவார்த்தைகளின் முயற்சிகளின் தொடர்ச்சியை கவனிக்கலாம். திம்புப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பினனர் 1985ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை நான்கு இயக்கக் கூட்டமைப்பின் தலைவாகள் சந்தித்தனர். பிரபாகரன், பத்மநாபா, சிறிசபாரத்தினம், பாலகுமார் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்த ராஜீவ் காந்தி, தீர்வுக்கான முதல் படியாக இடைக்கால ஏற்பாடொன்றுக்கு இயக்கங்கள் சம்மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “அவ்வாறான இடைக்காலத் தீாவை ஏற்றுக்கொண்டால் மக்கள் எம்மை நிராகரித்து விடுவார்கள்” என்று தலைவர்கள் கூறினார்கள். “எனினும் இந்தியாவின் சமசர முயற்சிகளுக்கு தடையாக இருக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்கள். அதன்பின்னர் இந்திய அதிகாரிகளுடன் புதுடில்லியில் வைத்து இயக்கத் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இலங்கை அரசு தனது புதிய யோசனை ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தது. இந்திய அதிகாரிகள் மூலமாக அந்தயோசனை இயக்கத் தலைவர்களிடம் முன்வைக்கப்பட்டது. புதிய யோசனை என்று சொல்லப்பட்ட போதும், திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்ட்ட யோசனைக்கும் அதற்கும் பெரிய வேறுபாடுகள் இருக்வில்லை. வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணதிற்கும் இரண்டு தனித்தனி சபைகள் அமையும். அது தவிர, கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை நகரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கும். மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் விரும்பினால் பிரிந்து மாவட்ட சபைகளாக செயல்படலாம். மாகாண சபைகளும், மாவட்ட சபைகளும் மத்திய அரசின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதுதான் புதிய யோசனையின் முக்கிய அம்சங்கள். நிரகரிப்பு நான்கு இயக்க கூட்டமைபான ஈழத் தேசிய விடுதலை முன்னணி ( ENLF) அந்த யோசனையை நிரகரித்தது. இலங்கை இரு தேசிய இனங்கள் உள்ளன. அவையிரண்டும் தனித் தனியாகப் பிரிந்து இரு நாடுகளாக அமையும் தகுதி கொண்டவை. அதன் அடிப்படையில் முன்வைக்கப்படும் யோசனைகள் பற்றியே எம்மால் விவாதிக்க முடியும். வேறு யோசனைகளை ஆராய முடியாது என்று நான்கு இயக்கக் கூட்டமைப்பு தலைவாகள் கூறிவிட்டனார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய யோசனைகளைக் குறித்து ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்தது. வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்தல், உள்ளுர் சட்டமும் ஒழுங்கும், நிலக்குடியேற்றம் தொடர்பான கருத்துக்களை கூறிய கூட்டணி மாநில சபை தொடர்பான விட்டுக் கொடுக்கமுடியாத கொள்கைகள் கொள்கைகள் சிலவற்றையும் குறிப்பிட்டிருந்தது. புளொட் அமைப்பு தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. புதிய யோசனைக்கு திருத்தங்கள்கூறி சுவிற்சர்லாந்து முறையிலான சமஷ்டித்திட்டத்தை சார்ந்த யோசனையை இந்தியாவிடம் சமர்ப்பித்தது. பகாமாஸ் மாநாடு தமிழர் விடுதலைக் கூட்டணியால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையைவிட ஏனைய இயக்கங்களின் நிலைப்பாடும், யோசனைகளும் கடுமையாக இருந்தன. அதேவேளை பொதுநலவாய நாடுகளின் மாநாடு பகாமாஸில் நடைபெறவிருந்தது. அம்மாநாட்டில் வைத்து ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ் காந்தி இலங்கை பிரச்சனை பற்றி பேசுவதாக இருந்தது. எனவே பகாமாஸ் மாநாட்டுக்கு கூட்டணியின் அறிக்கையையும், அதற்கான திருத்தத்தையும் ராஜீவ் காந்தி எடுத்துச்சொல்வார் என்று ரொமேஷ் பண்டாரி கூறினார். அரசின் யோசனைகளையோ கூட்டணியின் திருத்தைதையோ தாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான்கு இயக்க கூட்டமைப்புத் தலைவாகள் கூறிவிட்டார்கள். புலிகளின் அறிக்கை: “தமிழீழத்தை தற்கொலைக்கு ஒப்பானது” வெளிச்சக்திகளை நம்பி போராடவில்லை. புலிகள் வெளியிட்ட அறிக்கை பகாமாஸ் மாநாடு குறித்தும் இடைகால தீாவை ஏற்குமாறு இந்தியா வலியுறுத்தியது தொடர்பாகவும் புலிகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை. அதனைக் கீழே தருகிறேன். “நாம் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து இடைக்காலத் தீர்வை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் போராட்டத்தையும் தொடரலாம் என்று இந்தியா எமக்கு ஆலோசனை கூறலாம். இது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நாம் அறிவோம். தமிழீழப் போராட்டத்தை எம்மால் கைவிட முடியாது. ஆனால் இந்தியாவின் நல்லுறவை முறித்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. இடைக்காலத் தீர்வு என்ற பொறியிலிருந்து இந்தியாவின் நல்லுறவை முறிக்காமல் தப்பித்துக்கொள்வதே புத்திசாலித்தனம். பேச்சுவார்தைகளில் இருந்து ஒதுங்குவதே அறிவுடமை. அற்ப ஆசைககளுக்காக பெறியில் வீழ்பவர் விழட்டும். எமது இலட்சியத்துக்காக எந்த எதிர்விளைவு ஏற்பட்டபோதும் அதனைத் தாங்கி எமது வழியில் நடப்பதே சிறந்தது. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஊடுருவலையும், பேரினவாத சிறிலங்கா இந்தியாவின் தெற்கில் அதன் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கவும் தமிழீழ் உருவாகுவதே சிறந்ததாகும். இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டு இந்தியா எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும. அமையபோகும் தமிழீழம் இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டி அதற்கு உறுதுணையாக அமையும். அதன் பாதுகாப்புக்கு பலமாக அமையும். தமிழ் மக்களும், அவர்களது தமிழீழமும் இந்தியாவால் புறக்கணிக்க முடியாதவை. அது மாத்திமல்ல, ஒன்றிலிருந்து ஒன்று அவற்றின் நலன்கள் பிரிக்க முடிக்காதவை. இந்தியவின் நட்பு எமது போராட்டத்துடன் ஒன்றிப் போனது. ஆயினும் அந்த நட்பை இழந்து போயினும், நாம் நமது மக்களுக்காக, நமது மண்ணில் தொடர்ந்து போராடத்தான் போகிறோம். எமது தலைவர் பிரபாகரன் கூறியது போல, தமிழீழம் அமையத்தான் போகிறது. அதனை உலகத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. எந்த வெளிச் சக்திகளையும் நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது இலச்சியத்தை அடையும் வரை போராடிக்கொண்டே இருப்போம். (ஆதாரம்- விடுதலைப் புலிகள். ஜனவரி. 1986) இதுதான் தமது பத்திரிகை மூலமாக புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு தெரிவித்த செய்தியாகும், ராஜீவின் நிலைப்பாடு திம்புப் பேச்சுகள் முறிவடைந்தமை குறித்தும், இலங்கை அரசின் புதிய யோசனைகள் குறித்தும் இந்திய பிரதமர் ராஜீவ் தெரிவித்த கருத்துக்களும் முக்கியமானவை. குவைத் நாட்டிலிருந்து வெளிவரும் “அராப் டைம்ஸ்”, அல்பெசயாஷா பத்திரிகைகளுக்கு ராஜீவ் காந்தி ஒரு பேட்டி வழங்கியிருந்தார். அதில் தனது கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். அதன் விபரங்களை வரும் வாரம் தருகிறேன். தொடர்ந்து வரும்… -எழுதுவது அற்புதன்- http://ilakkiyainfo.com/ 1 Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted November 29, 2015 87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51) ராஜீவின் பேட்டி: குவைத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திஜியின் பேட்டி வெளியாகியிருந்து. அப்பேட்டியில் ராஜீவ் காந்தி இலங்கை அரசின் போக்கு மீதும் அதிதிருப்தி தெரிவித்திருந்தார். “பேட்டியின் விபரம் இதுதான். இலங்கையில் வன்செயல்கள் தமிழ் தீவிரவாதப் பிரிவினரால் தூண்டிவிடப்பட்டாலும், இலங்கை ஆயிதப்படையினரின் நம்பகமற்ற தன்மையே உண்மையான பிரச்சனையாக இருக்கிறது” என்றார் ராஜீவ். “ஆயுதப் படைகளின் வன்செயல்களை ஜே.ஆர். மறுத்திருக்கிறாரே? என்று குறுக்கிட்டுக் கேட்டார் நிருபர். அதற்கு ராஜிவ் சொன்னார்: “சில சம்பவங்களைதான் அவர் மறுத்திருக்கிறார். ஆனாலும் உலகம் பூராகவுள்ள வெகுஜன தொடர்பு சாதனங்கள் தெரிவிக்கும் செய்திகள் இலங்கை அரசு கூறுவது முற்றிலும் முரணாகவே உள்ளன. இத்தகைய நம்பிக்கையீன இடைவெளி நிச்சியமாக அகற்றப்படவேண்டும்” என்றார் ராஜீவ் ராஜீவ் காந்தி சொன்ன கருத்துக்களில் முக்கியமான பகுதிகள் இவை: ” இலங்கை ஜனாதிபதி புதுடெல்லிக்கு வந்திருந்து போது தீர்வு தொடர்பான அடிப்படையொன்றை வகுத்திருந்தோம். இது இலங்கை அரச தரப்பினரும் தமிழர் தரப்பினரும் சேர்ந்து பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்பதால் அவற்றை எழுத்தில் வடிக்காமல் விட்டோம். பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டுமானால் பேச்சுக்கு ஆரம்ப திட்டமாக அமைய கூடிய நகல் திட்டமொன்று அவசியம்.” இரண்டாவதாக, இலங்கை அரசின் ஆயுதபடைகளது நம்பகதன்மையை நிலைநிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும். இந்த இரண்டுமில்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது இதனை இலங்கை அரசின் தூதுக்குழுத் தலைவர் எச்.டபிள்யூ.ஜெயவர்தனாவிடம் நான் வலியுறுத்தியிருந்தினேன்” என்று கூறியிருந்தார் ராஜீவ். ” புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை ஏன் நாடு கடத்தினீர்கள்?” என்று ராஜீவ்விடம் கேட்கப்பட்டது. அதற்கு ராஜீவ் சொன்ன பதில்: இலங்கைப் பிரஜையாகவோ, இந்திய பிரஜையாகவே இல்லாத இருவர் தொடர்பாக நாம் பெரும் சர்ச்சைகளை எதிர்நோக்கினோம். அதனால் நடவடிக்கை அவசியம் எனக்கருதினோம்”. அன்ரன் பாலசிங்கம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். ரெலோ சார்பில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட சத்தியேந்திராவும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தவர். அதனால்தான் ராஜீவ் காந்தி அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தற்போது திரு.அன்ரன் பாலசிங்கமும், அவரது பாரியாரும் வெளிநாட்டுக் குடியுரிமையை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. “இலங்கை இனப்பிரச்சனையில் இரு தரப்புக்கும் கௌரவம் அளிக்கக்கூடிய வகையிலான தீர்வொன்றை காண்பதுதான் இந்தியாவின் நோக்கம். அதற்காகவே இந்தியா உழைத்துக் கொண்டிருக்கிறது” என்றும் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் ராஜீவ்காந்தி. வினோதமான விளம்பரம் இக் காலகட்டத்தில், அதாவது 1985 செப்படம்பர் மாதமளவில் ஒரு பத்திரிகை விளம்பரம் பலரது கவனத்தை இழுத்த்து. சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த அந்த விளம்பர வாசகம் இதுதான்: “எங்களுக்கு சில நல்லவர்கள் தேவை அவர்கள் விவேகம் மிக்கவர்களாகவும், திடகாத்திமுடையவர்களாகவும், தேசப்பற்று மற்றும் தலைமைத்துவ ஆற்றல் உடையவர்களாகவும் இருந்தால் வாருங்கள். எம்முடன் இணைய வாருங்கள்” விளம்பர வாசகத்தோடு இராணுவத்தினரின் சின்னமும் காணப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என்பதில் இலங்கை அரசும் நம்பிக்கை கொண்டிருந்தமைக்கு அந்த விளம்பரமும் ஒரு அத்தாட்சி. தமிழ் நாட்டில் கொந்தளிப்பு 1985 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற எழுச்சிகள் பற்றி குறிப்பிட்டேயாகவேண்டும் 1985 செப்டம்பர் 24ம் திகதி தமிழ்நாடு மாநிலத்திலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தமிழக மாநில அரசும், பாண்டிசேரி யூனியன் பிரதேச அரசும் முன்னின்று பூரண கர்த்தால் நடத்த ஒத்துழைத்தன. தமிழக முதலமைச்சர் எம.ஜி.ஆர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 2ஆயிரம் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனா. இந்திரா காங்கிரஸ் கட்சியினர் மெரினா கடற்கரையில் காந்தி சிலையருகே உண்ணாவிரதம் இருந்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஹர்த்தாலில் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க தலைமையில் செயல்பட்டுவந்த தமிழீழ ஆதரவாளர் அமைப்பு சற்றே தீவரமாக்கச் செயற்படத் தொடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் நடத்திய போராட்டம்தான் பூரண ஹர்த்தால். தி.மு.க.வை இலங்கைத் தமிழர் விடயத்தில் தன்னை மிஞ்சாத வகையில் வைத்துக்கொள்ளவே எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பியிருந்தார். எம.ஜி.ஆர். நடத்திய பூரண ஹர்த்தால் மாநில அரசே முன்னின்று நடத்திய காரியம். பஸ்கள் ஓடவில்லை. ரயில்கள் ஓடவில்லை, அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. சுருக்கமாக சொல்வதாயின் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் ஸ்தம்பித்தன. அதனைவிட பெரிய ஒரு போராட்டத்தை தி.மு.கவால் நடத்த முடியாது என்று எம.ஜி.ஆருக்கு தெரியும். எம.ஜி.ஆர் மேற்கொண்ட இன்னுமொரு நடவடிக்கையும் குறிப்பிடவேண்டியது. தமிழ்நாடு மாநில அரசின் ஊழியர்கள் இலங்கை தமிழர்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று கூறினார் எம.ஜி.ஆர். அதற்கு முன்னோடியாக தனது சார்பாக இரண்டாயிரம் ரூபாவை வழங்கி கொடி விற்பனைய ஆரம்பித்து வைத்தார். தமிழக தலைமை செயலகத்தில் பெரிய விழாவாக கொடி விற்பனை நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 10இலச்சம் தமிழக அரசு ஊழியர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை இலங்கை தமிழர்களுக்காக முன்வந்தனர். தமிழக அரசின் தலைமைச் செயளாளர் அந்த செய்தியை மேடையில் அறிவித்தபோது எம.ஜி.ஆர் உண்மையாகவே உணர்ச்சி வசப்பட்டார். தனது நாற்காலியைவிட்டு எழுந்து வந்து மைக்கைப் பிடித்த எம.ஜி.ஆர் ” அண்ணா நாமம் வாழ்க”என்று மூன்று தடவை கூறினார். 1985 செப்டம்பர் மாதம் 24ம் திகதி உண்ணாவிரதம் நடந்த்து என்று கூறினேன் அல்லவா?? சென்னையில் செங்கல்பட்டு என்ணும் பகுதியிலும் உண்ணாவிரதம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உண்ணவிரதத்திற்கு தலைமை தாங்கியவர் செல்வி ஜெயலலிதா. அப்போது அவர் அ.தி.மு.க கொள்கை பரப்பும் செயலாளர். தென்னிந்திய திரைப்பட நடிகர்களும் உண்ணாவிரதம் நடத்தினார்கள். இலச்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சென்னை நகரில் மட்டும் 65 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் நெஞ்சை உலுக்கக் கூடியது. முத்து என்னும் முதியவருக்கு 75வயது எட்டு பிள்ளைகள். மெரினா கடற்கரைக்கு சென்ற முத்து தனது உடலெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார். “தமிழக அரசே முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறிக்கொண்டே தன்னை பற்றவைத்து கொண்டார். வேறு சிலரும் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். யாழில் உண்ணாவிரதம் இதேவேளை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியே உண்ணாவிரத போராட்டம் வடக்கில் ஆரம்பித்தது. 1985 ஆகஸ்ட் 27ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். யாழ்.குடாநாட்டில் பல கிராமங்களில் பொதுமக்கள் பங்குகொள்ளும் உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டன. உண்ணாவிரப் போராட்டத்திற்கான கோரிக்கை இரத்தினச் சுருக்கமானது. ஆனால் உரமானது. அது இதுதான்: ” விசாரணை செய், அல்லது விடுதலை செய்” 18 மாத காலத்திற்கும் மேலாக தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில், விசாரணையில்லாமல் தடுத்துவைத்ததை கண்டித்தே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஜே.ஆர். அரசு உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்க தயாராக இருக்கவில்லை. ஆனாலும் சிறையில் உள்ள இளைஞர்களை அவர்களது பெற்றோர்கள் இருவாரங்களுக்கு ஒரு முறை பார்வையிடலாம் என்று அனுமதித்த்து. அப்போது வெளிகடைச் சிறையில் பெண்கள் உட்பட 197 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பேராசிரியர் சிவத்தம்பி அப்போது யாழ். பிரஜைகள் குழுவின் தலைவராக இருந்தார். யாழ்-பிரஜைகள் குழுவினர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகளை பார்வையிடவும் அரசு அனுமதி வழங்கியிருந்த்து. செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழ் நகரில் பல்கலைகழக மாணவர்கள் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். யாழ்பாண அரச செயலக கொடிக்கம்பத்தில் கறுப்புகொடி ஏற்றினார்கள். மழை,வானம் இடிந்த்துபோல் கொட்டியது. கொட்டும் மழையிலும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டம்மும் நடந்தன. செப்டம்பர் 26ம் திகதி முதல் யாழ்குடாநாட்டில் யாழ்பல்கலைகழக மாணவர்களால் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து எட்டு நாட்கள் கிராமம் கிரம்மாகச் சென்றனர். சிறையிலுள்ள இளைஞர்களை விடுதலை செய்யும் போராட்ட நடவடிக்கை என்ற போதிலும், அரசுக்கு எதிரான உணர்வுகளை வளர்த்துவிடும் வகையில் அந்தப்போராட்டங்கள் அமைந்தன. இரவில் தாம் தங்கியிருக்கும் கிராமங்களில் கவியரங்கு, வில்லுப்பாட்டு என்று பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினார்கள். சென்னையில் கடத்தல் காந்திய இயக்க தலைவராக இருந்தவர் ச.அ.டேவிட். புளொட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். பனாகொடை, வெலிக்கடை, மட்டக்களப்பு சிறைகளில் வைக்கப்பட்டிருந்தவர். மட்டகளப்பு சிறையுடைப்பின் பின்னர் சென்னை சென்றுவிட்டார் டேவிட். அவரை டேவிட் ஜயா என்றுதான் அழைப்பார்கள். சென்னையில் அண்ணா நகரில்தான் டேவிட் ஜயா குடியிருந்தார். 02-08-1985 அன்று இரவு பத்துமணிக்கு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த டேவிட் ஜயாவுக்கு குறுக்கே ஒரு வேன் வந்த்து நின்று வழிமறித்த்து. டேவிட் ஜயா சுதாகரிப்பதற்கிடையில் நான்கு இளைஞர்கள் அவரை குண்டாக தூக்கி வேனில் போட்டுக்கொண்டு பறந்தனர். பின்னர் வேனில் இருந்து ஒரு காருக்குள் மாற்றப்பட்டார். கார் சற்று தூரம் சென்றதும் கார் சாரதி ஆசனத்தில் இருந்தவர் கேட்டார். “யாரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்??” டேவிட் ஜயாவை அமுக்கி பிடித்திருந்தவர் சொன்னார் “டேவிட் ஜயாவை” சாரதி ஆசனத்தில் இருந்தவர் சொன்னார் “வசந்தனைத்தானே” பிடிக்கச் சொன்னது.மற்றவர் சொன்னார் வசந்தன் வரவில்லை. அதுதான் இவரைப் பிடித்தோம். சிறிது தூரம் சென்றதும் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் காரை நிறுத்தி டேவிட் ஜயாவை தள்ளிவிட்டு, கார் பறந்துவிட்டது. டேவிட் ஐயாவுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. டேவிட் ஐயாவை கடத்திச் சென்றது புளொட் அமைப்பினர். இது புளொட் உள் இயக்கமோதலின் ஒரு கட்டம். தோழர்.சந்ததியாரோடு டேவிட் ஐயா வசந்தன் என்று குறிப்பிடப்பட்டது சந்த்தியாரை.சந்த்தியாரும் டேவிட் ஐயாவும் நல்ல ஒட்டு. இருவரும் சேர்ந்து வருவார்கள். சந்ததியார் டேவிட் ஐயாவீட்டில் தங்கவரலாம் என்று காத்திருந்தனர். அவர் வரவில்லை. டேவிட் மாட்டினார். புளொட் அமைப்பில் முக்கியமானவராக இருந்த வசந்தனுக்கும்,புளொட் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் பிரச்சனை. பிரச்சனை வளர்ந்து சந்த்தியாரை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு தேடும் அளவுக்கு சென்றது. பின்னர் சந்த்தியார் புளெட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. சந்ததியார் தொடர்பாக முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். இளைஞர் பேரவையில் தீவிர உறுப்பினர். அல்பிரட் துரையப்பா கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டவர். இளைஞர் பேரவையின் தீவிரம் போதாது என்று. அதிலிருந்து பிரிந்து “தமிழ் இளைஞர் அணி”தலைவராக இருந்தவர். வவுனியாவில் காந்திய இயக்க வேலைகளில் ஈடுபட்டவர். அநுராவின் பேச்சு 1985 செப்டம்பரில் எதிர்க்கட்சி தலைவர் அநுரா பண்டாரநாயக்கா. முல்கிரிகலை என்னும் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றினார் அநுராபண்டாரநாயக்கா. பேசியதில் முக்கால்வீதம் இனவாத விஷசம். அந்த பேச்சிலிருந்து ஒரு பகுதி. ” ஜே.வி.பி.க்கு தடைவிதித்த அரசாங்கம் தமிழர்விடுதலைக் கூட்டனிக்கு ஏன் தடைவித்திக்கவில்லை? தமிழர்கள் இன்று இந்தியாவில் இருந்துகொண்டு, இந்த நாட்டை துண்ணடா திட்டமிடுகின்றனர். இன்று இந்த நாட்டின் முக்காற் பங்கை தமிழாகள் பிடித்துவிட்டனர். மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயல்கிறது. இன்று வடக்கில் தமிழர் ஆட்சியே நடைபெறுகிறது. கிழக்கில் மட்டுமென்ன, அங்கும் தமிழர் ஆட்சியே வேரூன்றி நிற்கிறது. 1977ம் ஆண்டு ஆட்சி ஒப்படைக்கப்படும்போது யாழ்பாணப் பகுதியில் 25 ஆயிரம் சிங்களவர்களும், மன்னர், வவுனியா பகுதிகளில் 40ஆயிரம் சிங்களவர்களும்,சேருவில், தெஹிவத்த பகுதிகளில் 20 ஆயிரம் சிங்களவரும் வாழந்து வந்தனர். எனினும், தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். கிளிநெச்சியில் குறி 1985 செப்படம்டபர் மாதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மீது மீண்டும் ஒரு முறைகுறிவைக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் வைத்த குறி தப்பியதையும், தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததையும் முன்னர் விபரித்திருந்தேன். இப்போது குறிவைத்த்து தமிழீழ இராணுவம்.(TEA) தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தலைமையில் ஒரு வித்தியாசமான திட்டம் தீட்டப்பட்டது. அதன்விபரங்களை வரும் வாரங்களில் தருகிறோன். (தொடர்ந்து வரும்.எழுதுவது அற்புதன்) http://ilakkiyainfo.com/ Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted December 10, 2015 (edited) லெறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 52) லெறியில் வெடிமருந்து: செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின. பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின. அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார். பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை. பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது. பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும். பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து. ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர். தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார். இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார் தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான். தயாரிப்புக்கு பாராட்டு கிளிநொச்சி தாக்குதல் படைத்தரப்பு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து. கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயளார் ஜெனரல் சிறில் ரணதுங்கா ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார். “ கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதலில் தீவிரவாதிகள் “நேபாம்” குண்டுகளைப் பாவித்துள்ளார்கள். இது ஜெனிவா சமாதான உடன்பாட்டுக்கு மாறானது” என்று குற்றம் சாட்டினார் அமைச்சர். தீப்பற்றும் இராசயன குண்டுதான் “நோம்” குண்டு என்றழைக்கப்படும். அவ்வாறான குண்டுகளை பாவித்த்தாக குற்றம் சாட்டியதன் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு வெளியுலகில் கண்டனம் ஏற்படும் என்று அமைச்சர் அத்துலத் முதலி நினைத்தார். “இந்து” மீது பாய்ச்சல் ஜே..ஆர். ஜெயவர்த்தனா அரசுக்கு எரிச்சலை கொடுத்த இன்னொரு விஷயம் வெளிநாட்டு பத்திரிகைள். சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தை அரசுக்கு இல்லாமல் செய்யுமளவுக்கு வெளிநாட்டு பத்திரிகைளில் இலங்கை நிலவரச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரி “இந்து” இலங்கையில் இருந்த தமிழ் இயக்கங்களிடையேயான புலிகள் அமைப்பை பலமாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தது “இந்து”. “இந்து” பத்திரிகையின் ஆசிரியரான ராம் போராளிகள் அமைப்புகளில் புலிகள் மட்டுமே சிறந்த கெரில்லா அமைப்பாகும் என்னும் கருத்தை கொண்டிருந்தார். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீத மதிப்பு கொண்டிருந்தார். நேரடியாகவும் பல தடவைகள் பிரபாகரனை சந்தித்து நெருக்கமான உறவையும் வைத்திருந்தார். “இந்து” பத்திரிகையின் நிலைப்பாட்டால் எரிச்சலடைந்த ஜே.ஆர்.தனது அதிதிருப்தியை வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார். ஜப்பான், இலங்கை நட்புறவுச் சங்கத்தின் மூன்று மாடி விகாரை கட்டித் திறப்பு விழவில் கலந்துகொண்டு ஜே.ஆர் உரையாற்றினார். அக் கூட்டத்தில் ஜே.ஆர் சொன்னது: “இலங்கை பிரச்சனை பற்றி அறிய வேண்டுமானால் என்னை கேளுங்கள். “இந்து” வை நம்பவேண்டாம். அதில் வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை” ஜே.ஆரின் கடும் எரிச்சலை அப்போது சந்தித்த “இந்து” தற்போது என்னசெய்துகொண்டிருக்கிறது? புலிகள் அமைப்பை கடுமையாக சாடிக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தின் பின்னர் “இந்து” தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ராம் “இந்து” ராம் தற்போது ‘புரன்லைன்’ ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கிறார். தீவிர புலி எதிர்ப்பாளர். ராஜீவ் கொலை விவகாரத்தில் ஒற்றைக் கண் சிவராசன் என்னும் பாக்கியசந்திரன் பற்றிய விபரங்களை முதலில் வெளியிட்டதும் புரன்லைன் சஞ்சிகைதான் என்பதும் குறிப்பிடதக்கது. வங்கிகள் நிலை யாழ்-குடநாட்டில் நிலவிய சூழலைக் காரணம் காட்டி அங்கு வங்கிகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தியது பாதுகாப்பு அமைச்சு. நகைகளை அடகு வைத்தோருக்கு மீளப்பெற முடியவில்லை. பாதுகாப்புக் கருதி நகைகள் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அதனையடுத்து நகைகளை அடகுவைத்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “அடகுவைத்த நகைகளை திருப்பி தா’ என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையையும், போராட்டத்தையும் கவனித்த பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நகை அடகுவைத்தோர் என்ற போர்வையில் இயக்கங்கள்தான் போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. வங்கிகள் திறக்கப்பட்டால் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டது பாதுகாப்பு அமைச்சு. பாதுகாப்பு அமைச்சால் ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது. அந்த அறிக்கை பின்வருமாறு கூறப்பட்டது. “நகைகள் அடகு வைக்காதோரும் அவற்றை திரும்பப் பெறக்கோரும் போராட்டத்தின் பின்னால் இருந்திருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளும் அதேவேளையில், நகைகளை யாழ்பாணத்துக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கத் தேவையான பாதுகாப்பை வங்கிகளுக்கு அரசாங்கம் வழங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது, நகைகளை திரும்ப வழங்கும் நடவடிக்கையில் இறுக்கமான பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதனால் வங்கிகளில் தமது நகைகளை அடகுவைக்க யாழ். குடாநாட்டு மக்கள் தயங்கினார்கள். தனியார் நகை அடகு கடைக்காரர்ளுக்கு அதனால் நல்ல சந்தோசம். இடம்பெயர்ந்தவர்கள் போர் நிறுத்தம் முடிவடைந்த அடுத்து 1012பேர் அகதிகளாக வந்து சேர்ந்தனர் என்று தமிழக அரசு அறிவித்த்து. 1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு செல்லும் அகதிகள் தொகை அதிகரித்த்து. அகதிகளை கொண்டுசென்று தமிழக கடலோரப் பகுதிகளில் இறக்கிவிடுவதற்காகவே படகுச்சேவைகள் நடத்தப்பட்டன. மீன்பிடிப் படகுகளிலும் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இங்கிருந்து நம்மூர் மீன்பிடிபடகில் சென்று, இந்திய கடல் எல்லையின் பின்னர் இந்திய மீன்பிடிப் படகுகளில் ஏற்றிச் செல்வதும் உண்டு. இந்திய மீனவர்களில் பலர் அனுதாப உணர்வோடு அகதிகளை ஏற்றிச்சென்றனர். அவர்களுக்கு துணிவகைகள், சவர்க்காரம் போன்ற பொருட்களை அகதிகள் கொடுப்பார்கள். ஒரு சில மீனவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்வதும் உண்டு. அகதிகள் தமது செலவுக்காக விற்பனை செய்யக்கொண்டு செல்லும் பொருட்களை கொள்ளையடித்த சம்பவங்களும் நடைபெற்றன. தமிழக மக்களை பொறுத்தவரை இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் மிகவும் வாஞ்சையுடன் நடந்துகொண்டார்கள். போராளி அமைப்புக்களது உறுப்பினர்களை மரியாதையோடு நோக்கினார்கள். 1983 யூலை முதல் 1985 செப்டம்பர் மாதம் வரை சுமார் 85ஆயிரம் அகதிகள் தமிழகம் வந்துசேர்ந்தனர். என்று புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன. கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படாமலும் மேலும் பல ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்குள் பிரவேசித்திருந்தனர். தீவிரவாதிகளின் கடும்போக்கும் இந்தியாவின் மனப்போக்கும் ராஜீவ் சொன்னது இலங்கையில் இனப்பிரச்சனை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை போன்றே அங்கு முக்கியத்துவம் பெற தொடங்கியிருந்த்து. தமிழக அரசியில்கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தில் குவிந்த அகதிகளின் எண்ணிக்கையும், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அரசு வெளிப்படையாக மத்தியஸ்த பாத்திரம் வகிக்க தொடங்கியமையும் இலங்கை பிரச்சனை இந்திய பிரச்சனைகளில் ஒன்று போல மாறிவிடக்காரணமாகியது. 1985 செப்டம்பர் 27ம் திகதி இந்திய ஜெனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உரையாற்றினார். “பஞ்சாப் உடன்படிக்கையை முன்ணுதாரணமாக கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதில் இலங்கையரசு அக்கறையுடன் செயற்படவேண்டும். இலங்கையின் இனப்பிரச்சனைக்கு குறுகியகால தீர்வொன்று பயன்தராது. நீண்டகால அடிப்படையில் இறுதியான இணக்கத்தீர்வு காணப்படவேண்டும். இது முற்றிலும் ஒரு அரசியல் பிரச்சனை இராணுவ மார்க்கங்கள் நாடப்பட்டால் நிலைமை சிக்கல்லடையும்” என்றார் ராஜீவ் காந்தி. ‘இந்து’ பத்திரிகை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. ‘இந்து’ பத்திரிகையின் பிரபல விமர்சகர் ஜி.கே.ரெட்டி. இந்திய அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த விமர்சகர். இலங்கை இனப்பிரச்சனையின் போக்கைப் படம்பிடித்து காட்டுவது போல ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இவை (தற்காலத்திற்கும் பொருத்தம்) ‘அரசியல், சமூக இலக்குகளை எய்துவதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம் ஒன்று முரணான சூழ்நிலைகளில் பலவந்தப்படுத்தப்பட்டாலன்றி, தனது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளில் நாட்டமோ விருப்பமோ கொள்வதில்லை. தமது இலட்சிய நோக்கத்தை அடைவதற்காக, பரந்த அடிப்படையில் தீர்க்கமாக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியை இடைநடுவில் கைவிடுவது அத் தீவிரவாத இயக்கத்தின் கருத்துப்படி புரட்சிகரப் பாதையை முற்றிலும் சரணாகதியாக்குவதாகவே கொள்ளப்படும். அத்தகைய ஜீவ மரண போராட்டத்தின் நடுவில் தளர்வது போன்று காணப்படும் தோற்றப்பாடு எதுவும் இயக்கத்தில் உள்ளவர்களின் உறுதிப்பாட்டையும், உட்சாகத்தையும் மிகவும் பயங்கரமான விளைவுகளுடன் இல்லாதொழிக்கவே வகைசெய்வதாக அமைந்துவிடும். இத்தகைய இக்கட்டான நிலையில்தான் ஈழம் குழுக்கள் இன்று இருக்கின்றன. சமனான சலுகை அடிப்படையிலான இணக்கத் தீர்வை காண்பது என்ற இந்திய அரசின் அழைப்புக்கு செவி மடுப்பதா? அல்லது பிரிவினைக்கான போராட்டத்தை மேலும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதா என்பதே இக் குழுக்களைக் குழப்பிக் கொண்டிருந்த்து. மிதவாத தலைவர்கள் இந்திய மண்ணில் இருந்து இக்குழுக்களின் தலைவாகள் இயங்குவதால் இந்தியாவின் கருத்துமிக்க ஆலோசனைகளை தமிழ் தீவிரவாதிகள் தட்டிக்கழித்து அசட்டை செய்துவிட முடியாது. இலங்கை அரசாங்கம் நம்பகதன்மையான யோசனை எதனையும் தெரிவிக்காத நிலையில் தமது இயக்கத்திற்குள் இருக்கும் தீவிரவாதிகளால் ‘கடதாசிப் புலிகள்’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு அபாயத்திலிருந்தும் தீவிரவாதத் தலைவர்கள் தப்பமுடியாது. தீவிரவாதிகளிலும் பார்க்க தேசப்பக்தியில் குறைந்தவர்களல்லாத தமிழ் மிதவாத தலைவாகள் (கூட்டணி தலைவாகள்) இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதால் எந்த ஆபத்தும் நிகழ்ந்து விடாது என்று கருதுகின்றனர். ஐக்கியப்பட்ட இலங்கை அரசியலமைப்புக்கு போதுமான அதிகாரப் பரவலாக்கரைலயும், பாதுகாப்பையும் வழங்கக்கூடிய தீர்வொன்றை, தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நியாயமான சுயாட்சி மூலம் பெறமுடியுமாயின் தமிழ் மக்களுக்கு அநாவசிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதப் போராட்டத்தை தொரடவேண்டிய அவசியமில்லை என்பது தமிழ் தலைவர்களின் எண்ணமாக உள்ளது. இந்திய நிலைப்பாடு பிரிவினைக்கு சமமான வகையில் அமையக்கூடிய முற்று முழுதான சுயாட்சிக்கு குறைந்த எதற்கும் இணங்குவதில்லை என்ற தீவிரவாதிகளின் அடம்பிடிப்பின் இலாப – நட்டங்களை தீவிரவாதிகளிடமே விட்டுவிட புதுடில்லியில் உள்ள சில வட்டாரங்கள் தயாராகவே உள்ளன. அடம்பிடித்த நிலையில், அரைமனதுடன் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இணங்கிக் கொண்ட வரையறுக்கப்பட்ட சுயாட்சித் தீர்வுக்கு அப்பால் அவர் வழங்குவதற்கு தயாராக இல்லாதவரை, தீவிரவாதிகளின் விடாப்பிடியான நிலை தொடர்வதை அனுமதிப்பதில் எதுவித ஆபத்தும், சங்கடங்களும் ஏற்படபோவதில்லை என்று அந்த வட்டாரங்கள் கருதுகின்றன. தனது ஆயுதப்படையை பலப்படுத்தி சீரமைக்கவும், இந்தியாவை சாந்தப்படுத்தவுமே ஜே.ஆர். மேற்படி சுயாட்சியை வழங்க உடன்பட்டார். தமிழர்களின் கிளர்ச்சியை கண்டிப்பதோ, அல்லது ஈழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை அடக்குமளவுக்கு நடவடிக்கை எடுப்பதோ இந்தியாவின் தற்போதைய கொள்கையல்ல. தமிழர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பூரணப்படுத்தக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ளாவிட்டால், ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் உரிமையைக் கைவிடத் தேவையில்லை என்ற அடிப்படையில், இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு சாத்தியமான முயற்சிகளை இந்தியா செய்கிறது. வீரபுருசர்கள் தமது இயலாமையை மறைப்பதற்காக வீர புருசர்கள் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டும் தீவிரவாதிகள் தொடர்பாக புதுடில்லி வட்டாரங்களில் பொறுமையின்மையும், கவலையும் காணப்படுகிறது. இலங்கை நெருக்கடிக்கு விரைவான திடீர் தீர்வொன்று சாத்தியமில்லை என்பது இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உணரப்பட்டுவருகிறது’ ஜி.கே.ரெட்டி தனது கட்டுரையில் கூறிய மேற்படி கருத்துக்கள் இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக விளக்கியிருந்தன. இந்திய அரசின் தவறுகள் பற்றியும் ஜி.கே.ரெட்டி குறிப்பிட்டிருந்தார். தற்போதும் பொருந்தக்கூடியவை அவை. தொடரும்..எழுதுவது அற்புதன் http://ilakkiyainfo.com/ Edited December 10, 2015 by பெருமாள் பிழை திருத்தல். Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted December 22, 2015 ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53) புதுடில்லியில் விளக்கம் இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். 1985 இல் எழுதப்பட்ட விமர்சனம் அது. அந்த விமர்சனத்தின் மறுபகுதியையும் கவனித்துவிட்டு நாம் தொடர்ந்து செல்லாம். அதற்குமுன் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 1985 இல் போர் நிறுத்தம் முடிவடைந்தபோது இலங்கை அரசுதான் அந்த முடிவுக்குக் காரணம் என்பதை வலியுறுத்துவதில் தமிழ் இயக்கங்கள் வெற்றி பெற்றன. இயக்கங்கள் மீது பழியைப் போட அரசு செய்த பிரசாரம் பயனளிக்கவில்லை. இயக்கங்களின் அரசியல் சாணக்கியத்துக்கு கிடைத்த வெற்றியே அது என்று கொள்ளலாம். இனி விமர்சனத்தைக் கவனிக்கலாம். இந்தியாவின் தவறுகளை பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார் ஜீ.கே. ரெட்டி: “புதுடில்லியில் தீவிரவாத இயக்கங்கள் நடாத்திய நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் இயக்கங்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதன் எதிர்விளைவாகத் தான் இலங்கை இராணுவம் பதிலடியில் இறங்குகின்றது என்னும் தப்பெண்ணத்தை நீக்கும் வகையில் தலைவர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர். ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும் இராணுவத்தினர் தமிழ் மக்களின் உடமைகளை எரித்து அவர்களை வீடுகளை எரித்து அவர்களை வீடுகளை விட்டு ஓடவைப்பதில் முனைந்து விடுகின்றனர் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டது. தமிழர்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்களைக் கொண்டுவந்து இலங்கை அரசாங்கம் குடியேற்றியது. இதற்கு முன்னர் இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதும் தீவிரவாதத் தலைவர்களால் புதுடில்லிக்கு எடுத்து விளக்கப்பட்டது. உதாரணமாக கேந்திர முக்கித்துவம் வாய்ந்த திருகோணமலையில் 1948 ஆண்டு 7,606 ஆக இருந்த சிங்கள மக்களின் தொகை, 1981 இல் 86,341 ஆக உயர்ந்துள்ளது. 1921 இல் திருகோணமலையில் 2.8 வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை 1971 இல் 28.8 வீதமாகி 1981 இல் 33.8 வீதமாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அங்குள்ள தமிழர்களின் தொகை 54 வீதத்திலிருந்து 36 சதவீதமாக இறங்கியுள்ளது. 1921 இல் 37 வீதமாக இருந்த தமிழ் பேசும் முஸ்லிம்களின் தொகை 1981 இல் 29 சதவீதமாக இறங்கியது. இன விகிதாசார சமத்துவத்தன்மையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தவறு மாறி மாறிவந்த இலங்கை அரசுகள் மேற்கொண்ட இந்த குடியேற்ற விவகாரத்திற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்கள் போதிய கவனம் கொடுக்கவில்லை. வடக்கையும், கிழக்கையும் இணைப்பது என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதோ அல்லது எல்லைகளை மீள வரைவதன் மூலம் தமிழ் பிரதேசங்களை வரையறுப்பதோ பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பது இலங்கையின் வாதம். இந்த வாதத்தோடு ஒத்துப்போக இந்தியா தயாராக இருப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணிக் குடியேற்றத் திட்டங்களை மேற்கொள்ள இலங்கை அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை கவனத்தில் எடுக்கத் தவறியமையாகும். உள்நாட்டில் (இந்தியாவில்) பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சிக்கலான வெளிநாட்டுப் பிரச்சினையைக் கையாள்வதில் நேர்மையான தரகரின் பங்குக்கும், அப்பாவி போன்று நடிக்கும் தீக்கோழிக்கும் இடையில் ஒரு சரியான வேறுபாடு வரையறுக்கப்படவேண்டும். தமிழ் தீவிரவாதிகள் மேலும் கோரிக்கைகளை தமது நிலைப்பாட்டின்பால் வற்புறுத்துவார்கள். ஆனால் மிதவாதிகள் தங்கள் நாட்டுப் பிரச்சினையை தீர்த்துவைக்க இந்தியாவே முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று முற்றிலும் விட்டுவிடுவார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்தியா பணியாற்றி வருவதால் இப்பிரச்சினையில் விரைவான தீர்வொன்று காணப்பட வேண்டும். ராஜீவ் எதிர்ப்பு அயல் நாடுகளுடன் உன்னத உறவுகளைளப் பேணுவது என்ற கொள்ளையை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பின்பற்றி வருகிறார். தமிழர்களின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கான தனது முற்று முழுதான எதிர்ப்பை எந்தவித இரகசியமுமின்றித் தெரிவித்துவிட்டார். சுதந்திர ஈழம் என்ற சிந்தனைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ராஜீவ், இலங்கையின் ஐக்கிய அமைப்பு வரையறைக்கு அப்பால் அமையக்கூடிய சமஷ்டி அமைப்பைக்கூட நிராகரித்துவிட்டார். திரு.காந்தியின் கருத்துப்படி இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளைப் பூரணப்படுத்துவதற்கு இந்தியாவின் மாநிலங்களில் உள்ள சுயாட்சி அமைப்பு போதுமானது. இந்தியாவின் பெருந்தன்மையான பலவந்தம், சிநேகித பூர்வமான வழிநடத்தல் என்பவற்றின் மூலமாக தமிழ் தீவிரவாதப் பிரிவினரும், மிதவாதத் தலைவர்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். அதன் மூலம் நிச்சயமற்ற தன்மை நீக்கப்படுவதற்கு திம்புப் பேச்சு மேடைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக இரு பிரிவினருக்கும் இடையிவான அணுகுமுறை வேறுபாடு தொடர்ந்தது. இலங்கை ஆயுதப்படைகளின் அட்டூழியங்கள் மீது கவனத்தை திசை திருப்பியது மூலம் திம்புப் பேச்சுவார்த்தையின் முறிவானது தமிழ் முகாமுக்குள் இருந்த பாரிய கருத்து வேறுபாடுகள் வெளியில் தெரியாமல் செய்ய உதவிவிட்டது. போர் நிறுத்தம் தற்போது செய்யக்கூடியது யாதெனில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் தமக்கிடையில் நம்பிக்கையை வளர்க்க முனையும்வரை பேச்சுவார்த்தைகளை தொடர வைப்பதே. யுத்த நிறுத்தம் என்பது வெறுமனே விரோத செயற்பாடுகளை நிறுத்துவது மட்டுமல்ல. மீண்டும் கூடிய சாதகமான நிலையில் இருந்து தாக்குதலைத் தொடுப்பதற்கு வசதியாக ஒவ்வொரு தரப்பும் தமது சக்தியையும் வளத்தையும் பெருக்காதிருப்பதுமாகும்.” இதுதான் ஜீ.கே. ரெட்டி எழுதிய விமர்சனத்தின் முக்கிய பகுதிகள்ஃ நீளமாக இருந்த போதும் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையின் மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தை தற்போதைய நிலையில் பலர் மறந்திருப்பர், வேறு பலர் தெரிந்திராது இருப்பர். இந்த அரசியல் தொடரைப் படித்துவரும் பல்லாயிரம் வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயம் அதுவாகும் என்பதால் நீளம் அதிகமானாலும் அந்த விமர்சனத்தை தரவேண்டியிருந்தது. எனினும் சில பகுதிகளை நீளம் கருதி சுருக்கியே தந்தேன். பிரபா பேட்டி இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘ஜென்டில்மென்’ பத்திரிகை நிருபர் ஜஸ்விந்தர்சிங், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். திம்பு பேச்சுவார்த்தை முறிவு, போர் நிறுத்த முறிவு பற்றிய கேள்விகளைத் தொடுத்தார். கேள்வி:- ஆயுதமேந்துமளவுக்கு உங்களை நிர்பந்தித்த காரணிகள் எவை?- பிரபா:- ஈழத்தமிழ் மக்கள் அடைந்து வரும் அவலநிலை தான் துப்பாக்கி ஏந்த வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது. எமது மக்கள் திட்டமிட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்தேன். எனவேதான் நமது மக்களைப் பாதுகாத்து, எமது நாட்டின் விடுதலையை மீட்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்னும் முடிவுக்கு வந்தேன். கேள்வி:- சுதந்திரமாக இயங்கும் பத்திரிகைகள் மூலமாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாகவும் உங்கள் குறைகளை எடுத்து விளக்கி நிவாரணம் கண்டிருக்கலாம் என்று நீங்கள் எண்ணியதில்லையா? பிரபா:- முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது குறைகளையும், கோரிக்கைகளையும் நாடாளுமன்றம் மூலம் எடுத்துக் கூறியாகிவிட்டது. சிறீலங்காவின் பாராளுமன்றம் என்பது பெரும்பான்மை இனத்தின் கொடுமைகளது மொத்த வடிவமாகவே இருக்கின்றது. பத்திரிகைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் எழுதுபவர்கள் தீவிர இனவாதிகளான சிங்கள பத்திரிகை ஆசிரியர்கள். பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் எமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையில் எதுவிதமான வாய்ப்பும் இல்லை. கேள்வி:- உங்கள் குடும்பப் பின்னணி என்ன? உங்கள் பெற்றோருடன் இன்னும் தொடர்புண்டா? பிரபா:- நான் மிகச் சாமானியக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை சிறீலங்கா அரச ஊழியராக இருந்தவர். எனது மூத்த இரு சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. சிறியவயதிலேயே போராட்டத்தில் இணைந்து தேடப்படுபவன் ஆகிவிட்டேன். 19 வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டேன் . அன்றிலிருந்து பெற்றோருக்கும் எனக்குமிருந்த தொடர்பு அறுந்துவிட்டது. கேள்வி:- தமிழீழ தீவிர வாதத்தின் அடையாளச் சின்னமாக நீங்கள் சித்தரித்துக் காட்டப்படுகின்றீர்கள். உங்கள் இயக்கமே உங்களை ஒரு பெரிய வீரனாக எடுத்துக் காட்டுகிறது. அழுத்தமான கொளகைப் பிடிப்பு உள்ளவர் என்ற முறையில் இந்தத் தனிநபர் வழிபாடு சரியான தென்று கூறுகிறீர்களா? பிரபா:- இதுமாதிரி என்னை மக்கள் உருவகப்படுத்துவதற்கும், அப்படி ஒரு வீரப்பாத்திரமாக என்னைக் கருதுவதற்கும் நான் என்ன செய்ய முடியும்? எனது மக்களுக்கு நான் கொண்டுள்ள இலட்சியப்பற்று நன்கு தெரியும். சரியான பாதையில் அவர்களை வழி நடத்திச் செல்வேன் என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் என் மீது கொண்டுள்ள பாசத்தின் எடுத்துக்காட்டே இம்மாதிரியான புகழ்ச்சி மொழிகள். கேள்வி:- இலங்கையின் இன்றைய நிலை பற்றி எவ்வாறு கணிக்கிறீர்கள்? பிரபா:- இன்றைய நிலை மிகவும் பயங்கரமானது. போர் நிறுத்தம் என்ற திரையின் பின்னால் சிறீலங்கா அரசு ஈவிரக்கமற்ற ஒடுக்கு முறைகள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஈடுபடுகின்றது. இன்றைய அரசுக்கு சமாதானப் பேச்சுக்கள் மூலம் நியாயமும், நீதியுமுள்ள தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் அக்கறை கிடையாது. இராணுவத் தீர்வையே சிறீலங்கா அரசு நம்பியுள்ளது. பேச்சு பயனற்றது கேள்வி:- தமிழர் பிரதிநிதிகளுக்கும், சிறீலங்கா அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையில் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து உங்கள் கருத்தென்ன? பிரபா:- சமாதானப் பேச்சுக்கள் என்பது ஒரு பயனற்ற முயற்சி. இது உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு ஜயவர்த்தனா ஆடிவரும் கபட நாடகம். ஜயவர்த்தனா தன்னை ஒரு சமாதானப்பிரியர் போலக் காட்டிக்கொண்டாலும், அவருக்கு சமாதானத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் உள்ளுர ஆர்வம் கிடையாது. எமது மக்களின் அபிலாசைகளைஈ டுசெய்யக் கூடிய எந்தவொரு ஆலோசனையையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை. கேள்வி:- போர்நிறுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஜயவர்த்தனா அரசு தமது இராணுவக் கட்டமைப்பை பலப்படுத்துவதாக நீங்கள் குற்றம் சாட்டி இருந்தீர்களே? பிரபா:- அது உண்மைதான். போர் நிறுத்த உடன்படிக்கை என்ற திரைமறைவில் ஜயவர்த்தனா அரசு மிகவும் திட்டமிட்ட இராணுவக் கட்டமைப்பு முயற்சியிலீடுபட்டது. தனது இராணுவ பலத்திதைப் பெருக்குவதற்கு சிறீலங்கா அரசு தனது பட்ஜெட்டில் பெருமளவு தொகையை ஒதுக்கியுள்ளது. எல்லாவகையான நவீனரக ஆயுதங்களும் பெருமளவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. முழுச் சிங்கள இனமும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டுக் கூலிப்படைகள் சிறீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கின்றன. இவாவறு இராணுவ மயப்படுத்தும் ஜயவர்த்தனாவின் போக்கு, சமாதானப் பேச்சு மூலம் உடன்படிக்கை காண்பதைவிட, இராணுவத் தீர்வு ஒன்றிலேயே அவர் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்பதை தெளிவாக்குகிறது. அதுதான் பிரபா வழங்கிய பேட்டி. தலைவர்களின் படங்களும் சுவாரிசியமான சில சர்ச்சைகளும் தனிநபர் வழிபாடு பிரபாவின் பேட்டியில் தனிநபர் வழிபாடு பற்றிய விடயமும் வந்திருக்கிறதல்லவா? இதுபற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் புலிகள் அமைப்புத்தான் தமது தலைவரது புகைப்படத்தை பத்திரிகை மூலமாக வெளிவரச் செய்தது. இந்திய ஆங்கில சஞ்சிகை ஒன்றில் ‘சண்டே’ இதழ் என்று நினைவு-பிரபாவின் புகைப்படம் முகப்பில் இடம்பெற்றிருந்தது. சப்-மெஷின்கன் துப்பாக்கியுடன் பிரபாகரன் தோன்றியிருந்தார். அதனைப் பார்த்து ஏனைய இயக்கத்தினர் கேலி செய்தனர். “பிரபா ஒரு நடிகராகி விட்டார்போஸ் கொடுத்திருக்கிறார்” என்றெல்லாம் விமர்சித்தனர். அதெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான். பின்னர் ஏனைய தலைவர்களுக்கும் தங்கள் முகங்களைக் காட்டும் ஆசை வநடதுவிட்டது. ரெலோ இயக்கம் சிறீசபாரெத்தினத்தின் புகைப்படத்தை வெளியிட்டது. ‘ரை’கட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் சிறீசபாரெத்தினம். புளொட தவைர் உமா மகேஸ்வரனின் படமும் வெளியானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்குள் மட்டும் படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டது. யாழ்-பிராந்தியக் கமிட்டி உறுப்பினர்கள் படம் வெளியிடப்படுவதை விரும்பவில்லை. “ஒரு தனிநபரை முக்கியப்படுத்துவது சரியல்ல, நாம் ஒரு புரட்சிகர அமைப்பினர்” என்று கூறிக் கொண்டிருந்தனர். எனினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அரசியல் பிரசார வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்த ரமேஷ் ‘செந்தணல்’ என்னும் பெண்கள் அமைப்புக்கான பத்திரிகையில் பத்மநாபாவின் பேட்டியை வெளியிட்டதோடு, பத்மநாபாவின் புகைப்படத்தையும் பிரசுரித்தார். அதுவரை தோழர் ரஞ்சன் என்றே இயக்க உறுப்பினர்களால் அழைக்கப்பட்டு வந்த பத்மநாபா, முதன் முதலில் தனது சொந்தப் பெயரில் அறிமுகமானார். ‘செந்தணல்’ சஞ்சிகை தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சஞ்சிகையினை விரித்துப் பார்த்தார்கள் யாழ்-பிராந்தியக் கமிட்டியினர். பொத்துக் கொண்டு வந்தது கோபம். ‘செந்தணலின்’ ஐயாயிரம் பிரதிகளையும் கொண்டுபோய் ஒரு குழிவெட்டிப் புதைத்து விட்டார்கள். தனிநபர் வழிபாடு உருவானால் கூட்டுத் தலைமைத்துவம் பாதிக்கப்படும் என்பதுதான் யாழ்-பிராந்தியக் கமிட்டியின் வாதம். யார் தலைவர் என்பதை மக்கள் அறிய விரும்புவார்கள். செயலாளர் நாயகத்தை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவரால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படாத வகையில் உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பது மறுதரப்பு வாதம். அதற்கே ஆதரவு கிடைத்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் தமது செயலாளர் நாயகத்தின் படத்தை வெளியிட ஆரம்பித்தது. எனினும் சகல புகைப்படங்களிலும் எளிமையாகவே தோன்றியிருந்தார் பத்மநாபா. 1984ம் ஆண்டு ஜுன் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் முதலாவது காங்கிரஸ் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடைபெற்றது. செயலாளர் நாயகத்தின் புகைப்படத்தை வெளியிடலாமா, கூடாதா என்பது பற்றியே ஒருநாள் பூராவும் விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உளவுப்பிரிவு அந்தக் காங்கிரசில் நீண்டநேர விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மற்றொரு விடயம் உளவுப் பிரிவு சம்பந்தமானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கு மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்னும் உளவுப் பிரிவு இருந்தது. பத்மநாபா, மணி, ரமேஷ், வெற்றி, ஜேம்ஸ் ஆகியோர் அதன் தலைமைக் குழுவில் இருந்தனர். இயக்கத்திற்குள்ளும் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இயக்க உறுப்பினர்களை உளவுப்பிரிவு கண்காணிக்கக் கூடாது என்று காங்கிரசில் கலந்து கொண்ட ஒரு சாரார் வலியுறுத்தினார்கள். செழியன், கண்ணன், கபூர் ஆகியோர் உளவுப் பிரிவு தொடர்பாக அச்சம் தெரிவித்தனர். உளவுப்பிரிவு தலைமைக் குழுவில் இருந்த ரமேஷால் ஒரு இரகசியக் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தலைமைக்கு விரோதமானமானவர்களை தீர்த்துக்கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்ட முயன்றனர். உளவுப்பிரிவு அவசியம். இயக்கத்திற்குள் கண்காணிப்பும் அவசியம் என்று காங்கிரசில் வாதிட்டவர்களில் ரமேஷ், யாழ் மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் தளபதி சுபத்திரன், தயாபரன், மட்டக்களப்பு மாவட்ட தளபதி சிவா ஆகியோர் முன்னனியில் நின்றனர். இறுதியில் அவர்களின் கருத்து காங்கிரசால் ஏற்கப்பட்டது. 1985 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. (தொடர்ந்து வரும்…….) எழுதுவது அற்புதன்.. பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-54 வவுனியாவில் பிரச்சனை 1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்த வவுனியாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம். வவுனியா 2ம் கட்டையில் ‘உதய அரிசி ஆலை’யில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவருக்கும் ஆலையின் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை கை கலப்பு நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. ‘உதய அரிசி ஆலை’ உரிமையாளர்களுக்கு புலிகள் அமைப்பினரோடு தொடர்பிருந்தது. அந்தத் துணிச்சலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினரை தாக்குமளவுக்குச் சென்றனர். தமது உறுப்பினரோடு ஏற்பட்ட பிரச்சனை பற்றி கேட்பதற்காக உதய அரிசி ஆலைக்கு ஒரு ஜீப் வண்டியில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள். அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து காடையர்கள் சிலரை உதவிக்கு அழைத்து வைத்திருந்தனர் ஆலை உரிமையாளர்கள். உதய அரிசி ஆலையின் மகன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இராணுவப் பயிற்சி எடுத்தவர். பின்னர் இயக்கத்தின் அனுமதி இல்லாமல் வீட்டுக்குச் சென்று தலமறைவாக இருந்தவர். ஜீப்பில் சென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் இறங்கியபோது அரிசி ஆலைக்காரர்கள் முந்திக் கொண்டார்கள். ஜீப்பை சுற்றிவளைத்து தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கத் தொடங்கி விட்டார்கள். ஜீப் நொருங்கிப் போனது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்குக் காயம். தாக்குதல் நடத்திய கோஷ்டியில் முன்னணியில் நின்றவர் அலை உரிமையாளரின் மகன.; ஈ.பி.ஆர்.எல்.எஃப் கொடுத்த பயிற்சியை திருப்பிக் கொடுத்து விட்டார். மாத்தையாவின் கசப்பு வவுனியாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதியாக இருந்தவர் றேகன். 1984ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (பி.எஃப்.எல்.பி) யிடம் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் றேகன். 1985 முதல் வவுனியா ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றார். சொந்தப் பெயர் நல்லதம்பி இன்பராசா. வன்னிப் பிராந்தியத்திற்கான புலிகளது தளபதியாக அப்போதிருந்தவர் மாத்தையா. வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த றேகன் மீது மாத்தையாவுக்கு புகைச்சல். பாலஸ்தீனில் பயிற்சி பெற்றவர் என்று றேகனுக்கு மதிப்பிருப்பதை மாத்தையாவால் சகிக்க முடியவில்லை. றேகனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மாத்தையாவுக்கு உதய அரிச ஆலை பிரச்சனை ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது. அதனால் பிரச்சனையை பெரிதுபடுத்த பின்னணியில் நின்று தூண்டி விட்டார்கள் புலிகள் அமைப்பினர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மில் உரிமையாளரினால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், உதய அரிசி ஆலைக்கு ஆயுதபாணிகளாக சௌறார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள். அவர்கள் அங்கு வரப்போகும் செய்தி எப்படியோ ஆலை உரிமையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார்கள். ஆயுதங்களோடு இரண்டு பேரை அனுப்பி வைத்தார் மாத்தையா. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அரிசி ஆலையின் முன்பாக சென்று இறங்கியபோது, அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களும் திருப்பிச் சுட்டார்கள். சண்டை முடிந்த போது அரிசி ஆலை உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரும் பலியானார். கிட்டு-மாத்தையா அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதி டகளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்தார். யாழ் மாவட்ட புலிகளின் தளபதி கிட்டுவையும், யாழ் மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபனையும் சந்தித்து வவுனியா பிரச்சனை பற்றிப் பேசினார் டக்ளஸ் தேவானந்தா. அந்தக் காலத்தில் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பனிப் போர் நடந்து கொண்டிருந்தது. கிட்டுவைவிட மாத்தையா இயக்கத்தில் மூத்தவர். ஆனாலும் கிட்டு மளமளவென்று பிரபலம் பெற்றுவிட்டார். கிட்டு தலைமைதாங்கி நடத்திய தாக்குதல்கள் வெற்றியாக முடிந்தமையால் புலிகள் இயக்கத்திற்குள்ளும் கிட்டுவுக்கு தனிச் செல்வாக்கு ஏற்படத் தொடங்கியிருந்தது. இந்திய அரசு வழங்கும் ஆயுதங்களை பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பார். அவற்றில் தரமான ஆயுதங்களையும், யாழ்ப்பாணத்திற்கு என்று கூடிய எண்ணிக்கையிலும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, மீதியை ஏனைய பிராந்தியங்களுக்கு கிட்டு பகிர்ந்து கொடுத்துவிடுவார். அதனால் ஏனைய பிராந்தியங்களுக்கு போதிய ஆயுதங்கள் கிடைப்பதில்லை என்று மாத்தையா அணியினர் சொல்லிக் கொண்டிருந்தனர். யாழ்-பிராந்தியம் பூரண கட்டுப்பாட்டில் இருந்தமையால் ஏனைய பிராந்தியங்களைவிட அதிக நிதி திரட்டக்கூடிய வசதி கிட்டுவுக்கு இருந்தது. நிதியில் ஒரு பகுதியை கேட்டுப் பார்த்தார் மாத்தையா. கிட்டு கொடுப்பதாக இல்லை. உடனே காரியத்தில் இறங்கினார் மாத்தையா. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று பொருட்களோடு திரும்பும் யாழ்ப்பாண வர்த்தகர்களது லொறிகள் வன்னிப் பகுதியில் வைத்து மாத்தையா அணியினரால் தடுக்கப்பட்டன. பணம் தந்தால்தான் லொறிகள் மேற்கொண்டு செல்ல முடியும் என்று கூறி விட்டார்கள். “நாங்கள் யாழ்ப்பாணத்தில் உங்கள் இயக்கத்திற்கு நிதி கொடுத்திருக்கிறோம்” என்று லொறி உரிமையாளர்கள் சொல்லுவார்கள். “அதைக் கிட்டரிடம் பேசிக் கொள்ளுங்கள். இது வன்னிப் பகுதி. பணம் தராவிட்டால் லொறியை விடமாட்டோம்” என்று சொல்லி விடுவார்கள் மாத்தையா அணியினர். ஒரே இயக்கத்திடம் இரண்டு பகுதிகளில் பணம் கொடுக்க வேண்டிய நிலமை லொறி உரிமையாளர்களுக்கு. இவ்வாறு யாழ்ப்பாண பிராந்திய, வன்னிப் பிராந்திய புலிகள் அணிகளுக்கடையே திரைமறைவுப் பூசல்கள் நடந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் வன்னிப் பகுதியில் மோதல் வெடிக்கத் தொடங்கியிருந்தது. பிரபாவின் உத்தரவு வன்னிப் பிரச்சனை பற்றி டக்ளஸ் தேவானந்தா கூறிய போது “வன்னிப் பிரச்சனையை தலைவர்தான் தீர்க்க முடியும். நாம் சொன்னால் அங்கு கேட்கமாட்டார்கள். இந்தப் பிரச்சனையை சென்னையில் பேசித் தீர்ப்பதுதான் நல்லது.” என்று சொல்லி விட்டார் கிட்டு. இது தொடர்பாக சென்னையில் இருந்த பத்மநாபாவுக்கு அறிவித்தார் டக்ளஸ் தேவானந்தா. இதற்கிடையே, வவுனியாவில் நடந்த பிரச்சனையை வவுனியாவிலேயே தீர்த்துக் கொள்ளலாம். இன்னும், சந்தித்துப் பேச்சு நடத்தலாம் என்றும் மாத்தையாவிடமிருந்து றேகனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. பேச்சு நடத்துவதற்கு றேகன் உட்பட 16 ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மாத்தையாவை சந்திக்கச் சென்றனர். பேச்சு நடத்தச் சென்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 16 பேரும் மாத்தையா அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆயுதங்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இச் செய்தி உடனடியாக சென்னைக்கு அறிவிக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகம் பத்மநாபா அதனை உடனடியாக பிரபாகரனுக்கு தெரிவித்திருந்தார். “ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிய பிரபா 16 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு மாத்தையாவுக்கு தகவல் அனுப்பினார். பிரபாவின் செய்தி கிடைத்ததும் மாத்தையா தனது உறுப்பினர்களுக்கு சொன்னது இது: றேகனை தட்டிவிடுங்கள். ஏனையோரை விடுதலை செய்துவிடுங்கள்.” றேகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்தது 23.11.85இல். இச் செய்தி சென்னையிலிருந்த பிரபாகனுக்கும் அதிர்ச்சிதான். அதிருப்திகள் யாழ்-பிராந்திய புலிகள் அமைப்பு இராணுவத்தளபதி கிட்டு, திலீபன் ஆகியோரும் மாத்தையாவின் நடவடிக்கையையிட்டு அதிருப்தி கொள்ளவே செய்தனர். அப்போது கிட்டுவுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் யாழ்ப்பாண பிராந்தியத்தில் நல்லுறவு நிலவியது. ஏனைய இயக்கங்களைவிட புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்; சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும் நல்ல நெருக்கமாகவே இருந்தன. அதனைப் பயன்படுத்தி பிரச்சனையை நெளிவு சுழிவாக கையாண்டிருந்தால் முரண்பாடு முற்றாமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் காணப்பட்ட பூசல் காரணமாக பிரச்சனையை கையாள்வதில் நிதானமின்மை வெளிப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் பிரசாரப் பணிகளில் வரதராஜப்பெருமாளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தார் பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் அதுவரை கால பிரசார வேலைகளை ரமேஷ், டேவிற்சன் ஆகியோர்தான் இந்தியாவில் முன்னெடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் பத்மநாபாவின் தலைமைத்துவம் தொடர்பாக விமர்சனம் எழுப்பிய உறுப்பினர்களோடு இணைந்து நின்றமையால், மெல்ல மெல்ல அவர்களை முக்கியத்துவம் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இருந்து இரகசிய வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அது தொடர்பாக இந்திய பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டிக்குக் கூட விளக்கம் கொடுக்கப்படவில்லை. வரதராஜப் பெருமாள் அப்போது இந்திய பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்தார். அவருக்குப் பொறுப்பாளராக இருந்தவர் டேவிற்சன். டேவிற்சனுக்குத் தெரியாமல் வரதராஜப் பெருமாளுக்கு இரகசிய வானொலி பிரசாரப் பொறுப்பை வழங்கினார் பத்மநாபா. பாசிசக்காளி றேகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் வரதராஜப் பெருமாள் தனது பிரசாரத் திறமையைக் காட்ட நினைத்தார். பாசிசக் காளி என்றொரு கவிதையை எழுதி யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தார்கள். அக்கவிதையை எழுதியவர் சம-கண்ணண் அவர் யாழ்பிராந்திய கமிட்டி உறுப்பினர். பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் றேகனுக்கு வீரவணக்கம் எனும் முன்னுரையோடு, அந்தக் கவிதையை தனது குரலில் வாசித்தார் வரதராஜப் பெருமாள். முதன் முதலில் புலிகள் அமைப்பினரை பாசிசப் புலிகள் என்று தமிழ் அமைப்பொன்று அழைக்கத் தொடங்கியது அன்றுதான். வானொலியைக் கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியப் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி. புலிகள் பாசிஸ்டுகள் என்ற முடிவுக்கு நாம் வந்தால், அவர்களோடு நான்கு இயக்கக் கூட்டமைப்பில் இருக்க முடியாது. பாசிஸ்டுகளோடு ஐக்கிய முன்னணியில் இணைந்து செயற்படுவது என்பது கேலிக்குரிய அரசியல் தந்திரமாகும். றேகன் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. ஆனால், அந்த நடவடிக்கைக்காக ஒட்டு மொத்தமாகவே புலிகளை பாசிஸ்டுகள் என்று குற்றம் காட்டலாமா? ஆம், எனில் புலிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அர்த்தமாகிறது. புலிகளை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது நாம் வெளியேற வேண்டும் என்று இந்தியக் கமிட்டியினர் வாதிட்டனர். பத்மநாபாவால் பதில் சொல்ல முடியவில்லை. விரிசல் அதேவேளையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வானொலியில் தம்மை பாசிஸ்டுகள் என்று கூறப்பட்டதை செவிமடுத்தார் பிரபாகரன். தமது வானொலியில் பாசிஸ்டுகள் என்று அறிவித்துவிட்டு, கூட்டமைப்புக் கூட்டத்தில் வைத்து வன்னிப் பிரச்சனையை கிளப்பிது ஈ.பி.ஆர்.எல்.எஃப் “றேகன் கொள்ளையடிக்கப் போனார், அதனால் மரணதண்டனை வழங்கப்பட்டது” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகளுக’கும் கூட்டமைப்பில் இருந்த நெருக்கம் விரிசலானது. அந்த விரிசலை பயன்படுத்தத் தொடங்கினார் ஈரோஸ் பாலகுமார். புலிகள் அமைப்பை கூட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கே அதிக விருப்பம் இல்லாதிருந்தவர் பாலகுமார். புலிகளுக்கு, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் நெருக்கமாக இருப்பதாகக் கூறி, ரெலோ சிறீசபாரெத்தினத்தை கைக்குள் போட்டுக் கொண்டு, புளொட் அமைப்பை கூட்டமைபுபுக்குள் கொண்டுவர திட்டமிட்டவர் பாலகுமார். புளொட்டையும் கூட்டமைப்புக்குள் கொண்டுவந்தால், புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பும் அடக்கிவைக்கப்படலாம் என்று தந்திரக் கணக்கு போட்டிருந்தவர் பாலகுமார்.. றேகனின் பிரச்சனையும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதனைக் கையாண்ட முறையும் இப்போது ஈரோசுக்கு வாய்ப்பாகிவிட்டது. இரு அமைப்புக்களையும் சமரசம் செய்து, கூட்டமைப்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்கும் நடுநிலையாளர் பாத்திரத்தை பாலகுமார் தனது கையில் எடுத்துக் கொண்டார். மெல்ல, மெல்ல புலிகள் அமைப்போடு நெருங்கத் தொடங்கியது ஈரோஸ். பின் நாட்களில் ஈரோசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கத்திற்கும், தற்போது பாலகுமார் புலிகளின் பிரமுகராக மாறியிருப்பதற்கும் ‘றேகன்’ பிரச்சனைதான் பிள்ளையார் சுழி போட்டது. ‘பாசிசக்காளி’ என்னும் கவிதையை எழுதியவர் சம-கண்ணன் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். புலிகள் அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே நல்லுறவு நிலவியது. டக்ளஸ் தேவானந்தா, கிட்டு ஆகியோரின் அணுகுமுறையே பிரச்சனைகள் ஏற்படாமல் உறவு தொடரக் காரணமாக இருந்தது. தாக்குதல் 9.10.95 அன்று அதிகாலை வவுனியா பொலிஸ் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த மின்மாற்றி முதலில் தகர்க்கப்பட்டது. பொலிஸ் நிலையம் இருளில் மூழ்கியது. கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் மூலம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸார் பின்வாங்கிச் சென்றதால் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. கான்ஸ்டபிள் தோமஸ் (வயது 40) என்பவர் பலியானார். சிலர் காயமடைந்தனர். பொலிஸ் நிலையக் கட்டங்கள் சேதமடைந்தன. தாக்குதல் ஒரு மணி நேரம் நீடித்தது. இத்தாக்குதல் நடவடிக்கை ரெலோ இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. “யுத்த நிறுத்தம் ஒரு நாடகம்” ஸ்ண்டே இதழு ற்கு பிரபா பேட்டி யுத்த நிறுத்தம் இந்தியாவில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘ஸன்டே’ ஆங்கில வார இதழுக்கு பிரபா அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி. கேள்வி:- யுத்த நிறுத்தம் குறித்து உங்கள் தளபதிகளின் அபிப்பிராயம் என்ன? பிரபா- யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து. இதனுள் மறைந்து கொண்டு இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிராக வன்செயல்களைக் கடடவிழ்த்து விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் நான் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து என்பதை எமது தளபதிகள் நன்கறிவர். கேள்வி:- திரு. பாலசிங்கத்தின் நாடு கடத்தலின் பின்னர் தலைமறைவான நீங்கள் மீண்டும் வெளிவந்தது ஏன்? பிரபா: பல காரணங்கள் உண்டு. நான் தலைமறைவாக இருந்தமையால் எமக்கு எதிரான தீயசக்திகள் எம்மை ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும், பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்துக் காட்ட முற்பட்டன. சில பத்திரிகைகளும் வாந்திகளைக் கிளப்பின. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை (தர்மலிங்கம், ஆலால சுந்தரம்) கொலை செய்த பழியையும் எம்மீது சுமத்தினர்” பிரபா கூறியது போல, தர்மலிங்கம். ஆலாலசுந்தரம் ஆகியோரை புலிகள் கொலை செய்ததாக ரெலோவும் நசூக்காகக் கூறி வந்தது. தம்மீது சந்தேகம் வராதிருக்க ரெலோ செய்த தந்திரம் அது. தர்மரையும், ஆலாலையும் ‘ரெலோ’ இயக்கமே கொலை செய்தது என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன். (தொடர்ந்து வரும்………..) -எழுதுவது அற்புதன்- Share this post Link to post Share on other sites
பெருமாள் 1,533 Report post Posted December 25, 2015 புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார். பெரும் சித்தனாருக்கு தமிழ் மீது மட்டற்ற காதல். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் பலவாமை வேண்டும் என்று கூறி வந்தவர். கூறியதோடு நிற்காமல், தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதும் தூய தமிழில்தான் பேசுவார். வீட்டுச் சென்றால் விருந்து போடுவார். உணவு தயாரானதும் நண்பர்களிடம் “உண்ண ஏகலாமா?” என்றுதான் கேட்பார். பெரும் சித்தனார் வெளியிட்ட பிரசுரமொன்றில் “கமுக்கக் காவலர்கள் துமுக்கியால் சுட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது. பழந் தமிழ் அகராதியின் உதவியோடு அந்தத் தழிழை மொழி பெயர்த்துப் பார்த்துத்தான் பலரும் அர்த்தத்தை புரிந்து கொண்டனர். தூய தமிழும் – உளன்றி வதையும் கமுக்கம்= இரகசியம், துமுக்கம் = துப்பாக்கி. “இரகசியப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்”என்பதுதான் பொருள். பெரும்சித்தனாரின் நட்பு உமாமகேஸ்வரனுக்கு பிடித்தமாகிவிட்டது. அவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். புளொட் அமைப்பினர் வெளியிட்ட பிரசுரங்களிலும் தூயதமிழ் சொற்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தன. புளொட் அமைப்பினர் சென்னையில் ஆரம்பித்த அச்சகமும் பெரும் சித்தனாரின் மேற்பார்வையில்தான் இயங்கிவந்தது. தூயதமிழ் சொற்களை பிரசுரங்களில் மட்டுமல்ல, இயக்கக் தண்டனைக் கூட்டத்திலும் உமாமகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார். இதில் ஒன்றுதான் உழன்றி. உழன்றி என்றால் கப்பி. கிணற்றில் தண்ணீர் அள்ள பயன்படுத்தப்படும் கப்பி. உழன்றி வதை ஆளை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு கப்பியின் உதவியால் உயர்த்தியும், இறக்கியும் வேடிக்கை காட்டலாம். கீழே நெருப்பு எரியும். அல்லது ஆளை பதியச் செய்து உருட்டுக் கட்டைகளால் அடித்துவிட்டு மீண்டும் உயரத்தில் தொங்கச் செய்யலாம். மிகப் பழமையான சித்திரவதை முறை அது. அதனால் தூய தமிழில் பெயர் சூட்டிவிட்டார் உமாமகேஸ்வரன். உமாமகேஸ்வரனின் கட்டளைப்படி புளொட் இயக்க பயிற்சி முகாமகளில் சித்திரவதைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் பரந்தன் ராஜன், வாமதேவன், சங்கிலி எனறழைக்கப்படும் கந்தசாமி ஆகியோராவார். ஒவ்வொரு இயக்கத்திலும் தமது தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கும் முறை வெவ்வேறாக இருக்கும். புலிகள் அமைப்பினர் பிரபாகரனை தம்பி என்று குறிப்பிடுவார்கள். தற்போது தலைவர் என்று குறிப்பிடுகிறார்கள். அண்ணை என்றும் சொல்லிக் கொள்வதுண்டு. புளொட் அமைப்பில் உமாமகேஸ்வரன் பெரியவர் என்று அழைக்கப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் பத்மநாபாவை ‘தோழர் எஸ்.ஜி.’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘எஸ்.ஜி’ என்பது செயலாளர் நாயகத்தின் சுருக்கம். ஈரோசில் யார் தலைவர் என்பதே முதலில் குழப்பமாக இருந்தது. பொதுவாக தோழர் என்று தலைமையில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டார்கள். ரெலோவில் சிறிசபாரத்தினம் சிறி அண்ணா என்று அழைக்கப்பட்டார். தலைமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெயின்;’ என்றும் ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொள்வார்கள். போஷகர்கள் ஈழப் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கென்று ஒவ்வொரு போஷகர்களைக் கொண்டிருந்தன. புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் நெடுமாறன். இவர் முதலில் இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். காமராஜரும் இந்திராகாந்தியும் பிரச்சனைப்பட்டுக் கொண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது காமராஜரோடு இருந்தவர். காமராஜர் மறைவுக்குப் பின்னர் இரண்டு காங்கிரசும் இணைந்துவிட்டன. நெடுமாறன் அதிலிருந்து விலகி காமராஜர் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தவர். சொல்லிக் கொள்ளக்கூடிய அரசியல் செல்வாக்கு எதுவும் அவருக்குக் கிடையாது. இலங்கைப் பிரச்சனையால் அடிக்கடி சிறை சென்று பிரபலம் பெற்றுக் கொள்ள முடிகிறது. ரெலோவுக்கு கலைஞர் கருணாநிதிதான் ஆரம்பகால போஷகர். (தற்போதல்ல) ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு கும்பகோணம் ஸ்டாலின்தான் போஷகர். இவா தந்தை பெரியாரின் தீவிரமான தொண்டர். திராவிக் கழக மாணவரணியில் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகத் தலைவரானார் கி.வீரமணி. “இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும்” என்று வீரமணியிடம் சொன்னார் ஸ்டாலின். அதற்கு வீரமணி சொன்னார், “அது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாச்சே. நாம் தலையிடவேண்டாம்.” திராவிடர் கழகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டார் ஸ்டாலின். அதே வீரமணி பின்னர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். திராவிடர் கழகம் மூலமாக புலிகளுக்கு நிதி திரட்டல் நடந்தது. திரட்டிய நிதியில் திராவிடர் கழகத்துக்காக ஒர குறிப்பிட்ட வீதம் எடுக்கப்படும் என்று முன்நிபந்தனையோடுதான் நிதி திரட்டப்பட்டது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கோடி கோடியாக நிதி வைத்திருக்கும் கட்சிகள்.எம்.ஜி.ஆரின் உதவி எம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியிலிருந்தும் புலிகளுக்கு உதவியிருக்கிறார். எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவி செய்தது பற்றிய ஒரு சம்பவம் பரவலாக பேசப்பட்டது. எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கத்தை வைத்தே பல கோடிகள் சம்பாதித்தவர் ஒரு தொழிலதிபர். ஒரு தடவை தனக்கு வியாபாரம் ஒன்றில் கிடைத்த லாபத்தை எம்.ஜி.ஆரிடம் குறைத்துச் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர். எப்படியோ மணந்து பிடித்து விட்டார். அந்தத் தொழிலதிபரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை கொண்டுவருமாறு கூறினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் கட்டளையை மீற முடியுமா? பெட்டியில் வந்தது பல லட்சங்கள். பெட்டியை வாங்கிக் கொண்டது பிரபாகரனின் ஆள். கும்பகோணம் ஸ்டாலின் தனது சொத்துக்களை விற்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்காக உதவியவர். விளம்பரம் விரும்பாத மனிதர். கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கால்வைக்க முன்னர் ஒரு அம்பாசிடர் கார், இரண்டு பெரிய பேக்கரிகள், சொந்த வீடு எல்லாம் இருந்தது. இப்போது கால் நடையாகத்தான் திரிகிறார் ஸ்டாலின். புளொட் அமைப்புக்கு போஷகராக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்தபோது புளொட்டுக்கு நல்ல பயன் கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் எம்.ஜி.ஆரோடு பிரச்சனைப்பட்டுக் கொண்டு வெளியேறினார். ‘நமது கழகம்’ என்று தனிக்கட்சி ஆரம்பித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வி. மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்பினார். இப்போது எஸ்.டி. சோமசுந்தரத்திற்கு ஜெயலலிதா ஆதிபராசக்தியாக தெரிகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போது எஸ்.டி. சோமசுந்தரம் வாயே திறப்பதில்லை. பொதுவான பெயர் 1985 காலப்பகுதியில் இலங்கையின் புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் தமிழகப் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன. சகல ஈழப் போராளி அமைப்புக்களையும் பொதுவாக விடுதலைப் புலிகள் என்றே தமிழக மக்கள் அழைத்து வந்தனர். ரெலோ நடத்திய தாக்குதலாக இருந்தாலும் புலிகள் தாக்கிவிட்டார்களாம் என்றே தமிழக மக்கள் பேசிக் கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ, ஈரோஸ், புளொட் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதைவிட புலிகள் என்று பொதுவாகக் குறிப்பிடுவதே அவர்களுக்கு வசதியாக இருந்தது. ஈழப் போராளி இயக்கத் தலைவர்கள் மத்தியிலும் பிரபாகரனும், உமாமகேஸ்வரனுமே தமிழக மக்களிடம் அறியப்பட்ட பெயர்களாக இருந்தன. உமாமகேஸ்வரனை முகுந்தன் என்று சொன்னால்தான் தெரியும். பாண்டிபஜாரில் புளொட்டுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பிரபாகரனையும், முகுந்தனையும் பிரபலம் செய்திருந்தது. சாதாரண மக்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மத்தியில் கூட ஈழப் போராளி அமைப்புக்களின் பிரிவுகள் குறித்து தெளிவு இருக்கவில்லை. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரையில் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். கண்காட்சியை முன்னிட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை மேயர் பழனிவேல்ராஜன் (பெயர் சரியாக நினைவில்லை) அழைக்கப்பட்டிருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சார்பாக டேவிற்சன் அவரை வரவேற்றார். மதுரை மேயர் கேட்ட முதல் கேள்வி: “உங்க தலைவர் பிரபாகரன் செயக்கியங்களா?” அவருக்கு நீண்ட நேரமாக எல்லா விளக்கம் கொடுத்தார் டேவிற்சன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்திலும் உரையாற்றி முடித்துவிட்டு, விடைபெறும் போது டேவிற்சனிடம் சொன்னார் மதுரை மேயர்: “பிரபாகரனிடம் நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.” டேவிற்சன் முகத்தில் ஈயாடவில்லை.உமாவின் விளக்கம் ஈழப் போராளி அமைப்புக்கள் தமது பிரிவுகள் வேறுபாடுகள் பற்றிச் சொன்ன விளக்கங்கள் தமிழக மக்களுக்கு புரியவில்லை. பொதுவாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பார்கள். “நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றுபடக்கூடாது?” “புலிகள்தானே தாக்குதல் நடத்துகிறார்கள்? யார் பெரிய இயக்கம்?” நான்கு இயக்க கூட்டமைப்பு உருவான பின்னர் புளொட் அமைப்புதான் வெளியே நின்றது. எனவே, மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் புளொட்தான் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. 1985 மே மாதம் 16ம் திகதி பெங்க@ரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார் உமாமகேஸ்வரன். ஏன் பரவலான தாக்குதல்களை புளொட் அமைப்பு நடத்தவில்லை என்பதற்கு உமா சொன்ன விளக்கம் இது: “பொதுவாக கொரில்லா போர் முறை எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுவிடாது. இலங்கையைப் பொறுத்தவரை பூகோள அமைப்பு முறையை வைத்து கணித்தால் இங்கு கொரில்லா போர் வெற்றி பெற வழியில்லை. ஆகவேதான் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களைத் திரட்டி மக்கள் யுத்தம் நடத்த வேண்டும் என்கிறோம். யாழ்ப்பாணத்திற்குள் தாக்குதல் நடத்துவது கூடாது. ஒரு சிறிய வெற்றிக்காக பெரிய இழப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது சரி இல்லை. இதில் தான் புலிகளோடு நாங்கள் வேறுபடுகிறோம்.” என்றார் உமாமகேஸ்வரன். புளொட் அமைப்புத்தான் பெரியது என்று சொல்லவும் அவர் மறக்கவில்லை. “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 6 ஆயிரம் பேர் கொண்ட படை வைத்திருக்கிறது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் 4ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை இருக்கிறது” என்று சொல்லியிருந்தார் உமாமகேஸ்வரன். அதாவது எனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்தால்கூட புளொட் அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டவும் வரமுடியாது என்று மறை முகமாகச் சொல்லிவிட்டார். உண்மையில் அப்போது ஏனைய இயக்கங்களைவிட (தனித்தனியாக) புளொட் அமைப்பில்தான் உறுப்பினர்கள் தொகை அதிகம். ஆனால் அது உமா சொன்ன கணக்கல்ல. புளொட் மட்டுமல்ல சகல அமைப்புக்களுமே போட்டி காரணமாக தமது ஆட் பலத்தை மிகைப்படுத்தியே கூறி வந்தன.