Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தாய்வானில் ஸ்மார்ட் போன்களில் இருந்து திருடப்படும் டேட்டாக்கள்! - அதிர்ச்சி தகவல்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
smartphones-061214-200-seithy-world.jpg

தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

  

இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த 12 நிறுவனங்களுக்கும் மொத்தமாக 6.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்றும், அந்த நிறுவனங்களுக்கு தாய்வானில் தங்கள் போன்களை விற்பதற்க்கு தடை விதிக்கப்படும் என்றும் துணிச்சலாக அறிவித்திருக்கிறது.

அந்த முதல்தர 12 நிறுவனங்களில் உலகின் புகழ்பெற்ற நிறுவங்களான சாம்சங், ஆப்பிள், ஹெச்டிசி, ஜியாமி ஆகியவைகளூம் அடக்கம். இந்த பட்டியலில் ஹெச்டிசி, அசூஸ் ஆகிய நிறுவனங்களும் உண்டு என்பது கவனிக்க வேண்டிய விஷயம் நம் இந்தியாவின் விமானப்படை, ஜியாமி போன்கள் தகவல்களை சீனாவிற்கு கடத்துகிறது என்று ஆணித்தரமாக குறிப்பிட்ட பின்பும் கூட மத்திய அரசோ, மாநில அரசோ அதன் மீது எந்த தடையோ, அபராதமோ, நடவடிக்கையோ எடுக்கவிலை என்பது வேதனையிலும் வேதனை.

http://seithy.com/breifNews.php?newsID=122140&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தாய்வானுக்கு மட்டுமான் செய்தியல்ல... குறிப்பிட்ட நிறுவனங்களின் தொலைபேசிகளை பாவிக்கும் அனைவருக்கும்  (அனைத்து  நாட்டுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்....! 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கோத்தாதான் தலைமை நீதிபதி, கோத்தா  வைத்ததுதான் சட்டம் தீர்ப்பு, இனி இதுதான் இலங்கையின் ஏதிர்காலம் களனி ஆற்றில் இனியும் இரத்த ஆறு ஓட வேண்டாமே, தமிழருக்கு செய்த அத்தனை அட்டூழியங்களும் தம்மினத்துக்கே செய்த காடையர்கள்தான் இந்த சிங்கள இனம். எந்த எல்லைக்கும் போக க் கூடிய ஒரு கீழான இனம். இவர்களின் பெளத்த பிக்குகளை பார்க்க தெரியவில்லையா  
  • ந‌ல்லூர் வீதி சொல்லுன் அண்ண‌ன் திலீப‌னின் தியாக‌த்தை புக‌ழை  , அகிம்சைக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏
  • அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..?  முடியாது மகனே..  ஏன் முடியாது..?  வந்தால் கொன்று விடுவார்கள்  ஏன் கொன்று விடுவார்கள்...?  நான் என் மக்களுக்காகப் பேசினேன்  ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?  பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,  ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?  சமமாக வாழ நினைத்தபோது  ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?  நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை  ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?  அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,  அவர்கள் பிழைத்தார்களா..?  பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..?  இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..  சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?  இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..  ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?  ஆம்  மகனே ஒவ்வொரு மகனும் உன் போலவே  ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..  விடை கிடைக்குமா அப்பா..?  என்ன சொல்ல மகனே..!  விடுதலைப் போராட்டம் நெடிது தான் ஆயினும்  என்னுடைய பிராத்தனை என்னவெனில்  உன்னுடைய காலத்திலும்  எங்கோ ஓர் மூலைக்குள்  என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க  உன் மகனும்  விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்  வளர்ந்து விடக்கூடாது என்பதே..     திரு.திருக்குமரன்       
  • பாறுக் ஷிஹான் ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமற்றிவதாக மனைவி என தெரிவித்து இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.   உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த சர்மிலா குணரட்னம் (வயது-35) என்ற பெண் இன்று(26) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது   கடந்த 2010 ஆண்டு காலப்பகுதியில் ஈழவர் ஜனநாயக முன்னணி தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் ராஜநாதன் பிரபாகரன் என்னை சந்தித்து தேர்தலில் நிற்குமாறு கேட்டிருந்தார்.இதற்கமைய நானும் உடன்பட்டு தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டேன்.     இதனை தொடர்ந்து அவருடன் 18 வயது வித்தியசாமுள்ள என்னை திருமணம் முடிக்குமாறு வற்புறுத்தினார்.1966.01.14 அன்று பிறந்த இவர் எப்படி என்னை திருமணம் செய்யலாம் என நான் விவாதம் செய்திருந்தேன்.     ஆனால் என்னை பலவந்தமாக அழைத்தச்சென்று முதலாவது திருமணத்தினை மறைத்து மற்றுமொரு பதிவுத்திருமணம் ஒன்றினை செய்தார்.இதற்கமைய 2010.01.20 அன்று பதிவுத்திருமணம் நடைபெற்றது.   1984.08.29 அன்று பிறந்த மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த என்னை திருமணம் செய்த நிலையில் 2011.04.22 அன்று யெலின் அக்சயா என்ற பெண் குழந்தை எமக்கு பிறந்தது.இதன் பின்னர் தான் என்னை அவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார்.இதனால் அவரை விட்டு நீங்குவதற்காக விவாகரத்து கோரி விண்ணப்பித்த நிலையில் மாதம் மாதம் 15 ஆயிரம் ரூபா தாபரிப்புபணம் அவரால் எனக்கு செலுத்தப்பட்டது.     ஆனால் தற்போது குறித்த தாபரிப்பு பணம் சீராக கிடைப்பதில்லை.அதனை கேட்பதற்காக எனது மகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்கின்ற போது கொழும்பில் இருந்து ஆட்களை அனுப்பி உனது தாயை கொல்வதாக மகளிடம் கூறி இருக்கின்றார்.   இது தவிர எனது மகள்(வயது 9) கல்வி கற்கின்ற மட்டக்களப்பு சென் ஜோசப் வாஸ் வித்தியாலயத்திற்கு சென்று மகளை சந்தித்த தாயை தான் கொல்லப்போவதாகவும் தன்னுடன் வந்துவிடுமாறு கூறி வருகின்றார்.இந்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பில் குறித்த இளம் பெண்ணுடன் வருகை தந்த மகளும் கருத்துக்களை தெரிவித்த போது உறுதிப்படுத்தினார்.   தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் தனக்கு முன்னால் சப்பாத்து காலால் உதைத்து கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இதனால் தாயும் நானும் நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.   ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்)கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக கூறி இளைஞர் யுவதிகளை மாயவலையில் வீழ்த்தவதுடன் பணம் கற்புகளை கொள்ளையடிப்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டினை முன்வைத்த குறித்த இளஞ்யுவதி தன்னை போன்ற பெண்களை மயக்கி திருமண ஆசை கூறி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போன்று நடிக்கின்றார்.     ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மறுசீரமைப்பு விடயத்தில் அக்கறை காட்டாது ஈரோஸ் அமைப்பின் பெயரால் பல மோசடியில் ஈடுபட்டுள்ளார்.இம்மோசடிகள் இயக்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன.     எனவே தமிழ்பேசும் மக்கள் இவ்விடயத்தில் மோசடிக்காரரான இவர் போன்றவர்களுக்கு இடமளிக்கமாலும் அவரிடம் ஏமாந்துபோகாமலும் இருக்கவேண்டும்.அத்துடன் பணமோசடி பெண்களுடன் தகாத உறவு வைத்திருத்தல் போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என மன்றாட்டமாக கேட்டுக்கொண்டார்.   https://www.madawalaenews.com/2020/09/blog-post_895.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.