Jump to content

தமிழ் வித்தகர் தில்லைச்சிவன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் "வேலணை வாழ் வித்தகரே'  என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு...  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன.  

 

சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர்.

 

இலக்கியத்தைச் சுவைத்தல், படிக்க வைத்தல், அவைபற்றி பேசுதல், விமர்சித்தல் போன்றவற்றின் ஊடாக ஒரு எழுத்தாளர் பரம்பரையை வேலணை, சரவணை, புங்குடுதீவு போன்றவற்றில் உருவாக்க உழைத்தார்.  சமூகத்தை நிறுவனமயப்படுத்தியே மேம்பாடு அடையச் செய்யலாம் என்ற மெய்மையின் அடிப்படையில் கிராம மட்டங்களில் பல சனசமூக நிலையங்களை, நூலகங்களை உருவாக்கினார்.

 

தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கருத்துக்கள், விமர்சன உரைகள் என்பவற்றை ஒழுங்கமைத்து அக்காலத்தில் எம் போன்றவர்களை இலக்கிய ஆர்வலர்களாக உருவாக்கினார். நான், சட்டநாதன், முகிலன், சரவணையூர் மணிசேகரன், மாறன் போன்றோர் இவர் வழிவந்தவர்கள் எனக் குறித்துரைக்கத்தக்கவர்கள்.

 

மறுமலர்ச்சிக் கழகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி சில சமூகப் பணிகள் ஆற்றியமையும் நினைவுக்கு வருகின்றது. இவ்வமைப்புகளில் இவர் தலைவராக, மற்றையோர் செயலாளர், பொருளாளராக பணியாற்றியிருக்கின்றோம். புங்குடுதீவில் மு.தளையசிங்கம், மு.பொன்னம்பலம், வில்வரத்தினம் போன்றோர்களுடன் இணைந்து இலக்கியப்பணி புரிந்துள்ளார். அவர்களுடன் எம்மையும் அறிமுகப்படுத்தியவர் இவரே.

 

 கவிஞர் தில்லைச்சிவன் வேலணை வாழ் மக்கள் பலரின் வாழ்க்கைச் சுவடுகளை கவிதையாக்கி வரலாறாக்கியவர். எம் ஊரில் உள்ள அனைத்துக் கோவில்கள் பற்றியும், அத்தெய்வங்களின் புகழ் பற்றியும் கவிதை புனைந்துள்ளார். தமிழ்த் தேசியவாதியாக கடைசிவரை வாழ்ந்த கவிஞர் இடதுசாரிச் சிந்தனை கொண்டோருடனும் நட்புறவைப் பேணியவர். முக்கியமாக டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் இவரது நண்பர்கள். ஜீவாவின் வேண்டுகோளுக்கமைய மல்லிகையில் இவர் எழுதியுள்ளார். அக்காலத்தில் "பட்டனத்து மச்சினி' என்ற இவரது கவிதை விமர்சகர் கனக செந்தில் நாதனால் வியந்து பாராட்டப்பட்டது.

 

பல கவிதைகளைப் படைத்தளித்த இவரது கவிதைகளில் சில நூல்களாக வெளிவந்துள்ளன. "அந்தக் காலத்துக் கதைகள்' எனும் நாட்டில் நிலவிய மரபுவழிக் கதைகளை இலக்கியமாக்கிய இவரது பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு என்றால் மிகையாகாது. இக்கதைகளில் நாட்டின் வரலாறு, மக்களின் நம்பிக்கைகள், நாட்டின் வளம், மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்திய விதம் என்பன கதைகள் ஊடாகத் தரிசனமாகின்றன.

 

இது நாட்டுப்புற இலக்கியமென தற்போது தமிழ்நாட்டில் புகழ்ந்து பேசப்படும் இலக்கிய வகைக்கு முன்னோடியாக விளங்கியதெனத் துணிந்து கூறமுடியும். இக்கதைகள் ஊடாக எமது ஊரை முழுமையாகத் தரிசிக்க முடிகிறது.

 

வெளிவந்த தில்லைச்சிவன் அவர்களின் நூல்கள் வருமாறு :

கனவுக்கன்னி (1961),

தாய் (1969),

ஐயனார் அருள்வேட்டலும் திருவூஞ்சலும் (1972),

தில்லை மேடைத்திருப்பாட்டு (1974),

பாப்பாப் பாட்டுக்கள் (1985), நான் (1993),

வேலணைத் தீவுப்புலவர்கள் வரலாறு (1996),

தாழம்பூ (1996), அந்தக்காலக் கதைகள் (1997),

நாவலர் வெண்பா (1997),

பூஞ்சிட்டு (பாப்பா பாட்டு) (1998),

தில்லைச்சிவன் கவிதைகள (1998),

வேலணைப் பெரியார் கா.பொ.இரத்தினம் (2000),

ஆசிரியை ஆகினேன் (2000),

காவல் வேலி (2003),

தந்தை செல்வா காவியம் (2004).

 

சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட இவர் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டதோடு, மக்கள் ஆதரவுபெற்ற அரசியலாளர்களுக்கு ஒத்துழைத்து மக்கள் நலன்பெறப் பாடுபட்டார். வேலணைஅராலியை இணைத்துப் பாலம் அமைக்கவேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தார். அது எமது பிரதேசத்தின் பொருளாதார, சமூக, கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்குமென அவர் நம்பினார். அவர் கனவு ஈடேற காலம் கனியவேண்டும்.  தில்லைச்சிவன் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, சமூக சேவையாளராக, சமயப்பணி புரிந்தவராக, கிராமியக் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்தவராக விளங்கியதோடு சமூகத்தை நிறுவனமயப்படுத்தி சமூக மேம்பாட்டைக் காணவேண்டுமென்ற சிந்தனையையும் எம்மிடம் விட்டுச்சென்றுள்ளார்.

 

அவரது கல்வி, இலக்கிய, சமூக, சமயப் பணிகள் ஆவணப்படுத்தப்பட்டு இவ்வகையான உதாரண புருஷர்களைப் பின்பற்றி எதிர்கால சந்ததியினர் உயர்வடைய வழிசமைக்க வேண்டும். ஆனந்தகுமாரசாமியின் "சிவநடனம்' நூல் தரும் தத்துவ விளக்கங்கள்"தில்லைச்சிவன்' பெயரை உச்சரிக்கும் போது என் கவிப்புலச் சிந்தனையில் ஒளிவிடுகின்றன. சிவசாமி  தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் 

 

 http://www.thinakkural.lk/article.php?article/qtrxljh5kr79135527eaab8716351srwpia00dbe1614481ef174f285qjfsa#sthash.zwPW2QuO.dpuf

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமரர் சிவசாமி மாஸ்ரர் , தில்லைச்சிவன் ஆகி தமிழ் சமூகத்திற்கு அளித்தவை அழியாச் செல்வங்கள். அவற்றைப் பேணிப் போற்றுவோம். இவரது நினைவு தினம் இன்றாகும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் வந்ததோ  நண்பரே... நண்பரே...

வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள்.  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர்.  அமரர் சிவசாமி மாஸ்ரர் , (தில்லைச்சிவன்)கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள். எம்.பி. திரு செ இராசதுரை அவர்களின் பேச்சும் ஞாபகம் வருகிறது... அந்தநாள் ஞாபகம் வந்ததோ  நண்பரே... நண்பரே...

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தில்லைச்சிவன் (சிவசாமி மாஸ்டர்) அவர்களுடன் பழகி இருக்கிறேன் . தமிழில் நல்ல ஆளுமை மிக்கவர்.வாழ்க அவர்புகழ்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலவர் பழைய ஆள்போல இருக்கு:) ,நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனா ஆளைத்தெரியாது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தில்லைச்சிவன் மாஸ்ரர் அவர்கள் அன்பானவர், பண்பானவர் , அமைதியானவர், . தெளிந்த தூயசிந்தனையுள்ள நல்ல இதயம் கொண்டவர்,
பழக இனிமையானவர். அவர் சயிக்கிளின் முன்பக்கம் ஒரு கூடை இருக்கும் அதற்குள் பத்திகை இருக்கும்.  பல நாள் அவரின சயிக்கிள் கரியலில் இருந்து அவருடன் உரையாடியபடி பிரயாணம் செய்த நினைவு இப்போதும் மகிழ்வைத் தருகிறது. அவரைப் பற்றி இங்கு  குறிபிடுவதில் மகிழ்சியடைகிறேன். அவரின் புகழ் ஓங்குக.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பழைய ஆள் இல்லை அவரின் மகனுடன் படித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பழக்கம். தூரத்து உறவும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த கெளரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் கூட சாதாரண மக்களையே அதிகம் பாதிப்பதால்தான் என்பதால்தான் குடும்ப வன்முறைகள் தொடங்கி ஆணவக்கொலைகள் வரை நடக்கிறது..  இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவம் என்பது இருந்தால் இப்படி இருக்கமாட்டார்கள், உதாரனம்:- எங்கள் தமிழ் அரசியல்வாதிகள், அவர்களுக்கு வால்பிடிக்கும் மனிதர்கள்.. சரி அப்படித்தான் இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவப்பிரச்சனை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான அதிகாரமும் அவரகளிடம் உள்ளது. அதை சந்திரிகா தொடங்கி எல்லா அரசியல்வாதிகளும் பயன்படுத்துகிறார்கள்.. இரண்டாவது, மன உளைச்சல்/மன அழுத்தங்கள் - இந்த சந்திரிக்காவை பாதிக்கலாம், இவரைப்போன்ற அரசியல்வாதிகளை பாதிக்கலாம் ஏனெனில் அவரது தொழில் அரசியல் அதில் எப்பொழுதும் நிலையற்றதன்மை இருப்பதால், ஆனாலும் அதைக்கூட அவர்களால் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.. அத்துடன், இந்த அழுத்தங்களால், சாதாரன மனிதர்கள் படும்பாடு அளவிற்கதிகமானது, தற்கொலைவரை செல்கிறது..  என்னைப்பொறுத்தவரை, very simple, சந்திரிக்காவும், இவரைப்போன்று பாவங்களை செய்தவர்களுக்கும் தண்டனை வரும் பொழுது, இவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார்கள்.. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைத்திருக்காது… இன்று இவர் போன்ற அரசியல்வாதிகள் தொடங்கி Jeffrey Epstein, John McAfee போன்ற அரசியல்பலம் பணபலம் படைத்தவர்கள் எல்லாம் தண்டனைகள் கிடைக்கும் வரை நன்றாகவே, நினைத்ததை சாதித்து, அனுபவித்து கடைசியில் பகடைகாய்களாகி உயிரை இழந்தார்கள்.. இவர்களைப்போன்றவர்களில், நாளைக்கு இன்னமும் யார்யாரெல்லாம் வருவார்களோ தெரியாது, ஆனால் அதுவரை அவர்கள் தாம் நினைத்ததை சாதித்து, அனுபவித்து சுதந்திரமாகவே இருப்பார்கள்.. அதனால், இந்த பாவம்/புண்ணியம் கூட சாதாரன மனிதர்களுக்கு மாத்திரமே.. இதனால்தான், இவைகளை நம்புவதும் கேள்விக்குறியாக உள்ளது.. அவ்வளவுதான்
  • என்ன பிரச்சினை என்றால் நான் இதற்குள் வந்து 12 வருடம் என்று நினைக்கிறேன்..சோ காலம் தாழ்த்தி Grand Master 🔽 எழுுுதத முுடய விிிலல..😄👋
  • தகவலுக்கு… நன்றி, கோசான். 🙏🏽
  • சென்ற வருடம் நல்ல குத்து பாட்டு ஒன்று வந்தது  பல சிங்கள குழந்தைகள் (பேபீஸ்) அதற்கு அந்த மாதிரி ஆடி  பல வீடியோக்கள் யூடியூபில் இருந்தது நான் அடிக்கடி பார்ப்பேன்  இப்போ மறந்துவிட்டேன் ... நினைவில் வரும் போது பதிகிறேன்  மண்ட ..... என்று தொடங்கும்  மண்ட  பாம .... இதுக்கு என்ன அர்த்தம்?  அந்த பாடலை பார்க்கும்போதுதான்  வேலுப்பிள்ளையின் கடைசியில் கெட்ட கோவம் வரும்  எங்களுக்கு அருகில் எவ்வளவு வளங்கள் குவிந்து கிடந்தும்  எதுவும் கைக்கு எட்டாது எங்களை நாட்டை விட்டே ஓடும்படி  செய்துவிட்டானே கிறுக்குப்பயல் என்றுதான் எண்ண தோன்றிச்சு 
  • வடுகர் ஆக்களின்ரை பாட்டு போல கிடக்கு உடையார் 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.