• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)

Recommended Posts

nice+guy+kdrama+2012+still+%EC%84%B8%EC%

ஊரில் இருந்து இப்ப தான் ஸ்ருடன் என்று லண்டனுக்கு வந்தவள்.. லண்டனில்.. எங்கட ஆக்கள்.. அகதி என்று வந்து வாழுற ஆடம்பர வாழ்க்கையை பார்த்திட்டு.. ஸ்ருடன்ரா இருந்து.. சீரழிவு தான்.. நானும் அகதி ஆவம் என்று.. லோயர் சொல்லிக் கொடுத்த பொய்களோடு அகதி அந்தஸ்துக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் (ஹோம் ஆபிசில்) ஒப்புவித்த பொய்கள் வெற்றி பெறும் என்ற ஒரே நம்பிக்கையில்... பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா.

அப்போது... ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அவசரஅவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு கிண்டி.. ஒருவாறு போனை வெளியே எடுத்தவள்.. வந்திருந்த மெசேச்சை பார்த்ததுமே.. அட இந்த நாயா.. இவன் தொல்லை தாங்க முடியல்லையே.. இவனை எப்படி கட் பண்ணுறது.. ஊரில இருக்கேக்க தான் இவன் தொல்லைன்னா.. இங்க வந்துமா. ஒரே ஹாட் சிமைலியா கலர் கலரா அனுப்புறானே.. இவனுக்கு என்றே தினமும் அப்டேட் செய்து விடுறாங்களோ... வரிசையா அடிக்கிட்டே போறானே... கறுமம் பிடிச்சவன்.. என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே.. தனக்கு உடனவே விசா கிடைப்பது போலவும்... தன் வருங்கால லண்டன் வாலிபன் தன்னை காதலிக்க வருவது போலவும்.... அவர் எப்படி எல்லாம் இருக்கனும் என்றும்.. கனவில் மூழ்கத்தொடங்கினாள்.. ஜீவிதா.

ஜீவிதா.. அழகு என்றாலும்.. சினிமாப் பைத்தியமும் கூட. சினிமா நடிகைகள் போல அலங்கரிப்பதில் அவளுக்கு அலாதிப் பிரியம். அலங்கரிப்பது மட்டுமன்றி.. சினிமா நடிகர்களோடு தன் போட்டோவை இணைத்து வைத்து.. சோடிப் பொருத்தம் பார்ப்பதில் இருந்து அவளுக்கு எல்லாமே சினிமா தான்.

சூரியா.. விஜய் மாதிரி இல்லை என்றாலும்.. சிவகார்த்திகேயன் ரேஞ்சில ஒருத்தன். ஆறடி உயரம்.. சிக்ஸ் பக் வைச்ச சிக்கான உடம்பு.. அப்பப்ப 5 நட்சத்திர விடுதியில்.. தண்ணி அடிக்கிற.. பார்ட்டி. நல்ல கார்.. அழகான வீடு.. என்று கற்பனைக் குதிரையை தாறுமாறாக ஓட்டிக் கொண்டே போனவள்..

மீண்டும் ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அந்த நாயாத்தான் இருக்குமோ... சனியன் தொலைஞ்சு போகுதில்லையே என்று திட்டிக்கொண்டே மெசேச்சை பார்த்தவள்..ஹோம் ஆபிஸ் அவளை அகதி விண்ணப்பம் தொடர்பில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் தேதியை குறிப்பிட்டு அனுப்பி இருந்த மெசேச் என்று கண்டதும்... என்ன இவ்வளவு கெதியா செய்யுறாங்கள்.. விசா உடன தரப்போறாங்களோ.. என்ற எண்ணிக் கொண்டே.. தனது லோயருக்கு விசயத்தை போன் போட்டுச் சொல்லி முடித்தவள்...

மீண்டும்.. போனை எடுத்து அவனுக்கு ஒரு ரெக்ஸ் போட்டாள். இத்தோடு என்னை தொந்தரவு செய்வதை விட்டிடு. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நீ.. ஊரில இருந்து எவளை என்றாலும் மேய். எனக்கு கவலை இல்லை. என்னை விட்டிடு. எனக்கு உன்னில காதலும் இல்லை.. கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லி அவளைப் பொறுத்த வரையில் அவனுக்கான இறுதி மெசேச்சை அனுப்பிய திருப்தியில் போனை கைப்பையில் போட்டாள்.

சிறிது நேரத்தில் போன் வைபர்.. சிணுங்கத் தொடங்கியது. யார்.. அவனாத்தான் இருக்கும். எடுத்துக் குடுக்கிற குடுவையில.. எனி இஞ்சால பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டான்.. என்று போனை.. பையில் இருந்து ஆத்திரத்தோடு வெளியே இழுத்து எடுத்தவள்.. வைபரின் பொத்தானை அழுத்தி.. ஹலோ என்றதும்..

என்னடி.. லண்டனுக்கு போனதும்.. உனக்கு பெரிய மகாராணி என்ற நினைப்போ. இங்க ஊருக்க இருக்கேக்க.. நீதானேடி வந்து ஐ லவ் யு சொல்லி.. என் வாழ்க்கையே நாசம் பண்ணினனீ. இப்ப என்னடி பெரிய பத்தினி வேசம் வேண்டிக் கிடக்கு உனக்கு. கடைசியும் முதலுமா ஒன்று சொல்லுறன் கேள்.. உனக்கு காதல்.. கலியாணம்.. இதெல்லாம் பொழுதுபோக்காக இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன். ஏன் இந்த உலகத்தில..மரம் செடி கொடியை காதலிக்கிறவன் இல்லையா. அப்படி உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன். ஆனால்.. அதுக்காக.. ஏதோ உனக்குப் பின்னாடி வழிஞ்சு கொண்டு வருவன் என்று மட்டும் நினைக்காதே. நீயும் உன்ர லண்டனும்..அழகும்.. திமிரும் உன்னோட. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்ல. நான் ஊரேட இருந்தாலும்.. நானா வந்து உன்னைக் காதலிக்கல்ல. நீயா வந்தா... நீயா போறா. அதுக்குள்ள என்னடி.. ரெக்ஸ்.. வேண்டிக் கிடக்கு ரெக்ஸு. லண்டனுக்கு போனதும்.. ஊரில இருந்தது மறந்து போச்சோ. உனக்கொரு காலம் வந்தா.. எனக்கும் ஒரு காலம் வரும்டி. அப்ப தெரியும்.. என்று அவளை பேசவிடாமலே முழங்கித் தள்ளியவன்.. தானே வைபரை கட் பண்ணியும் கொண்டான்.

அட.. இதைத்தானே நானும் எதிர்பார்த்தான். போடா நாயே. யாருக்கு வேணும் எனி உன்ர காதலும்.. கத்தரிக்காயும்... என்று அவன் மீதான வெறுப்பை இன்னும் வளர்த்துக் கொண்டு அவனை விட்டு மனதளவில்... தூர விலகி இருக்க முனைந்தாள் ஜீவிதா.

இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்...

ஜீவிதா.. ஜி பி இடம்.. மருத்துவ அறிக்கைக்காக வந்திருந்தாள். ஜி பி மருத்துவ அறிக்கையை கையளிக்க அவளை உள்ள கூப்பிட்டிட்டு.. நீங்கள் இப்ப 3 மாத கர்ப்பிணியா இருக்கிறீங்க... ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமானதா எங்கட பதிவில இல்லை. இதைப் பற்றி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா என்றார்...?! ஜி பியும் தமிழ் என்பதால் அவள் மீது கூடுதல் அக்கறை காட்டி விசயத்தை அக்கறையோடு அணுகினார்.

அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப.

இதைக் கேட்டு ஜி பி அவளைத் தேற்றியபடி.. இப்ப இந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி தான் நீங்கள் யோசிக்கனும். எனி கருவை கலைக்க எல்லாம் முடியாது. அது றிஸ்க். நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறதால உங்களை ஊருக்கு பிடிச்சும் அனுப்ப ஏலாது... அந்த விசயத்தில நீங்கள் லக்கி.

இல்லை டொக்டர். விசா நிராகரிக்கப்பட்டிருந்தாலும்.... என்ர லோயர் அப்பீல் பண்ணி இருக்கிறார். கேஸ் கோட்டுக்கு வரப் போகுது. அதுக்கு சப்போட்டா இந்த மருத்துவ அறிக்கை உதவும் என்று தான் எடுக்க வந்தனான். லோயரைட்டும் விசயத்தைச் சொல்லி இருக்கிறன். அவர் விசா அலுவலை முதல்ல பார்ப்பம். பிறகு மற்றதைக் கவனிப்பம் என்று சொல்லி இருக்கிறார். என்ர அவசரத்தால சொந்தக்காரரும் என்னோட அவ்வளவு நல்லமில்லை. இருந்தாலும்.. அப்பா அம்மாவுக்காக சமாளிக்கினம்... என்று தன் மனப்பாரத்தை டொக்டரிடம் கொட்டித் தீர்த்தவள்.. கண்களால் வழிந்த கண்ணீரைத் துடைத்தப்படி.. ஜிபியிடம் இருந்து விடைபெற்றாள்.

அப்போது.. நீண்ட காலத்தின் பின்.. வைபர் ஒலித்தது. ஆச்சரியத்துடன் அதன் பொத்தானை அழுத்தி காதில் வைத்த போது.. அவன்.. தான் ஊரில் இருந்து லண்டனுக்கு வந்திருப்பதை ஜீவிதாவிடம் சொன்னான். வசதி என்றால் வந்து நேரே சந்திச்சு கதைப்பதாகவும் சொன்னான். ஜீவிதா மறுமுனையில் மெளனமாக.. பேச்சின்றி.. ம் ம்.. ங்களால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவள்.. ஒரு கட்டத்தில்.. கதறி அழுதாள்.

அவளின் அழுகுரல் கேட்டவன்.. என்னாச்சு ஜீவிதா. என்ன பிரச்சனை. ஏன் அழுகிறீங்க. நீங்க போட்ட ரெக்ஸில கோபத்தில தான் அப்ப திட்டிட்டு போயிட்டன். பிறகு யோசிச்சு பார்த்தனான். நான் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சு கொண்டன். சும்மா ரெக்ஸில வைபரில் சொறி சொல்லி சரிவராது. உங்களுக்கு அதிர்ச்சி தர லண்டனுக்கே வந்து.. நேரில சந்திச்சு.. விசயத்தை கதைக்கனும்.. என்று முயற்சி செய்து தான் இப்ப அதில வெற்றி பெற்றிருக்கிறன். இப்ப போய் ஏன் அழுகிறீங்க என்றான்.. கவலை தோய்ந்த குரலில்.

அதுக்கு ஜீவிதா.. எல்லாம் முடிஞ்சி போச்சு வசந்த். நான் இப்ப முன்னைய ஜீவிதாவா இல்ல. நீங்க காதலிச்ச ஜீவிதாவாவும் இல்லை. என்னை மறந்திடுங்க.. என்று விம்பி விம்பி அழுதுகொண்டே சொல்லி முடித்து.... போனை கட் பண்ணினாள் ஜீவிதா.

(எம்மவர் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றைத் தழுவிய கற்பனைப் பாத்திரங்கள் நிறைந்த கதை.)

Share this post


Link to post
Share on other sites

ஐயோ கலாச்சாரம் அழியுதே..... :D பாதுகாக்க ஒடிவாங்கோ.....நெடுக்ஸ் நீங்கள் அவனில்லை தானே :D

Share this post


Link to post
Share on other sites
அதெப்படி? "காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)" ...! வயித்திலை குட்டி வந்தால் காதலுக்கு மரியாதையில்லாமல் போய்விடும் என்று குட்டிக்கதைதான் எழுதமுடியும்!. பெரியகதை எழுதமுடியாது!. "நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன்." என்ற வசந்த் போன்ற உண்மைக் காதலர்களின் காதலுக்குக் காதலே மரியாதைசெய்யும்.  "உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன்" என்பவன், அவள் வயிற்றில் குழந்தை என்று அறிந்தாலும் வாழ்வுகொடுக்கத் தயங்கமாட்டான். நம்பலாம்.  :wub:  :rolleyes:
 

Share this post


Link to post
Share on other sites

ஐயோ கலாச்சாரம் அழியுதே..... :D பாதுகாக்க ஒடிவாங்கோ.....நெடுக்ஸ் நீங்கள் அவனில்லை தானே :D

 

கலா (சாரம்) கட்டுவதை கிணற்றடியில் இருந்து பாத்ரூமுக்கு குளிக்க இடம்பெயர்ந்ததோடு கைவிட்டாச்சு..! :lol:

 

அவனா இருக்காமல்.. தப்பிட்டமில்ல. நாங்க சுழியன்கள். :lol::icon_idea:

 

அதெப்படி? "காதலுக்கு மரியாதையில்லை. (குட்டிக்கதை)" ...! வயித்திலை குட்டி வந்தால் காதலுக்கு மரியாதையில்லாமல் போய்விடும் என்று குட்டிக்கதைதான் எழுதமுடியும்!. பெரியகதை எழுதமுடியாது!. "நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன்." என்ற வசந்த் போன்ற உண்மைக் காதலர்களின் காதலுக்குக் காதலே மரியாதைசெய்யும்.  "உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன்" என்பவன், அவள் வயிற்றில் குழந்தை என்று அறிந்தாலும் வாழ்வுகொடுக்கத் தயங்கமாட்டான். நம்பலாம்.  :wub:  :rolleyes:

 

 

யாரோ.. பார்த்துப் பார்த்து..தோட்டம் வைக்க.. எவனோ.. நாற்று நடுறது.... இன்னொருவன்.. அறுவடை செய்யுறது.. என்ற கதையாக் கிடக்கு.. காதலுக்கு காதல் செய்யும் மரியாதை..!!!

 

அதிலும் காதலுக்கு மரியாதை இல்லை என்பது மேல்.. பாஞ்ச் அண்ணா. :D:lol:

Share this post


Link to post
Share on other sites

கீரோவின் கதாப்பாத்திரம் நெடுக்கை மாதிரிக் கதைக்குதே................ அது நெடுக்கர் இல்லைத்தானே :lol:

Share this post


Link to post
Share on other sites

அட இது நானும் அறிஞ்ச கதைதான். நல்லாருக்கு நெடுக்ஸ் எழுதினவிதம். ஆனைக்கொருகாலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமெண்டு ஊரிலை சொல்லுவாங்கள். முடிவை சொல்லாமல் சட்டுபுட்டெண்டு முடிச்சதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :D அப்புறம் ஜீவிதாவுக்கு என்னாச்சுப்பா? :D

Share this post


Link to post
Share on other sites

இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அரைச்சதையே திரும்ப,திரும்ப அரைச்சுக் கொண்டு:D...ஏமாத்தினவளை இன்னொருத்தன் ஏமாத்துவான்...கமான் மான் மூவோன்:D:lol:

Share this post


Link to post
Share on other sites

ஹாங்க் என்றால் என்ன நெடுக்ஸ் ?

 

Gang ?

 

 

Share this post


Link to post
Share on other sites

கீரோவின் கதாப்பாத்திரம் நெடுக்கை மாதிரிக் கதைக்குதே................ அது நெடுக்கர் இல்லைத்தானே :lol:

 

இதில் இருந்து தெரிவது என்ன.. நெடுக்கு எங்கட சமூகத்தில நடக்கிறதை தான் கதைக்கிறார்.. என்பது. :):lol:

 

அட இது நானும் அறிஞ்ச கதைதான். நல்லாருக்கு நெடுக்ஸ் எழுதினவிதம். ஆனைக்கொருகாலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமெண்டு ஊரிலை சொல்லுவாங்கள். முடிவை சொல்லாமல் சட்டுபுட்டெண்டு முடிச்சதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :D அப்புறம் ஜீவிதாவுக்கு என்னாச்சுப்பா? :D

 

காதலுக்கு மரியாதை இல்லை எனும் வரை கதையைச் சொல்லிட்டமில்ல. எனி ஜீவிதா எக்கேடு கெட்டாலும்.. அவனுக்கு என்ன..??! கதையைச் சொன்ன நமக்குத்தான் என்ன. :lol:

இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் அரைச்சதையே திரும்ப,திரும்ப அரைச்சுக் கொண்டு :D...ஏமாத்தினவளை இன்னொருத்தன் ஏமாத்துவான்...கமான் மான் மூவோன் :D:lol:

 

காலம் காலமாக மா என்னவோ.. கோதுமையில இருந்து தான் வருகுது. அதுவே.. கலவையில வித்தியாசமாகி.. இப்போ.. வெவேறு திண்படங்கள் ஆகல்ல. அதுபோல.. நிகழ்கால அம்சங்களை கலந்து வரும் புதிய இளைய சமூகத்தின் நடப்பை பிரதிபலிச்சிருக்குது.. குட்டிக்கதை. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஹாங்க் என்றால் என்ன நெடுக்ஸ் ?

 

Gang ?

 

அதே. :)

Share this post


Link to post
Share on other sites

எனக்கெண்டால் சந்தேகம் ..... சீச்சீ நெடுக்கா இருக்கவே முடியாது :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

நெடுக்கரின்ர வயசுக்கு இறங்கிக் கதையைப் படிச்சுப் பார்த்தேன்!

 

 கதை நல்லாயிருக்கு ! :lol:

Share this post


Link to post
Share on other sites
அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப.

 

 
ஆடுமாடு கோழி நாய்பூனை எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டே கொஞ்சநேரம் சிற்றின்பத்திலை இருக்குதுகள்?   :icon_idea:
 
அதுமாதிரி ஜீவிதாவை அனுபவித்தவனும் நெடுக்கரை மாதிரி பேய்காய்... :D
 
 ஜீவிதாவை மாதிரி ஆயிரம் ஃபிருகள் வரும் போகும்..... அப்பப்ப அனுபவிக்கணும்...அப்பிடியே...அடுத்த ஃபிகரை செட்டப்பண்ணணும். :lol:
அதுக்கு...அந்த விசயத்துக்கும் போய் கலியாணம் கட்டுவாங்களா என்ன????  :icon_idea:

கதை நல்லாக இருக்கின்றது.  :)

Share this post


Link to post
Share on other sites

ஜீவிதா வெள்ளையா கருப்பா ஸார்?

Share this post


Link to post
Share on other sites

ஜீவிதா இனிமேல் குழந்தை வளர்ப்பு நிதி (child care) என்று அப்பாக்காதலனிடம் வாங்கி லண்டனில் வாழலாம்.. :unsure: எல்லாம் திட்டப்படிதான் நடந்திருக்கு.. :lol:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்...


மற்றவனையும் ஏமாற்றவில்லை, நல்லபிள்ளை

Share this post


Link to post
Share on other sites

எனக்கெண்டால் சந்தேகம் ..... சீச்சீ நெடுக்கா இருக்கவே முடியாது :lol: :lol:

 

நாங்க எல்லாம் ஆழம் அறிஞ்சு காலை விடுற காளைங்க. இப்படி சீப்பான கேஸிட்ட எல்லாம் மாட்டமில்ல. :lol::icon_idea:

நெடுக்கரின்ர வயசுக்கு இறங்கிக் கதையைப் படிச்சுப் பார்த்தேன்!

 

 கதை நல்லாயிருக்கு ! :lol:

 

ரைம் மிசினில போயா புங்கையண்ணா.. இறங்கினனீங்க. :lol:

 

நன்றி அண்ணா.

 

 

 
 
ஆடுமாடு கோழி நாய்பூனை எல்லாம் கலியாணம் கட்டிக்கொண்டே கொஞ்சநேரம் சிற்றின்பத்திலை இருக்குதுகள்?  
 
அதுமாதிரி ஜீவிதாவை அனுபவித்தவனும் நெடுக்கரை மாதிரி பேய்காய்... :D
 
 ஜீவிதாவை மாதிரி ஆயிரம் ஃபிருகள் வரும் போகும்..... அப்பப்ப அனுபவிக்கணும்...அப்பிடியே...அடுத்த ஃபிகரை செட்டப்பண்ணணும்.
அதுக்கு...அந்த விசயத்துக்கும் போய் கலியாணம் கட்டுவாங்களா என்ன????  :icon_idea:

கதை நல்லாக இருக்கின்றது.  :)

 

 

பார்ரா.. கலாய்க்கிறாராமில்ல. :)

 

நன்றி கு.சாண்ணே.

 

Share this post


Link to post
Share on other sites

ஜீவிதா வெள்ளையா கருப்பா ஸார்?

 

இரண்டும் கலந்த கலவை ஸார். நீங்க நிறத்தில தான் குறியா இருக்கீங்க. :lol:

ஜீவிதா இனிமேல் குழந்தை வளர்ப்பு நிதி (child care) என்று அப்பாக்காதலனிடம் வாங்கி லண்டனில் வாழலாம்.. :unsure: எல்லாம் திட்டப்படிதான் நடந்திருக்கு.. :lol:

 

அதுமட்டுமில்ல..

 

சிங்கிள் மதர் என்றாலும் நல்லா காசு கொடுப்பாங்க.

 

பிள்ளை லண்டனில பிறந்திட்டா.. அசைலம் பெயிலானாலும்.. லேசில திருப்பி அனுப்ப மாட்டாங்க.

 

அதுக்கு மேல பிள்ளை வளர்ப்பு அரச உதவி திட்டம் சும்மா வந்து சேரும்.

 

இதில ஜீவிதா போட்ட கணக்குப் பெரிசு. இடையில பகடைக்காய் ஆனது இரண்டு ஆண்கள்..!! அதில இரண்டாமவன்.. ஆள் சுழியன். குறைஞ்ச பட்சம் சந்தர்ப்பத்தை சரியா பாவிச்சிட்டான். லண்டன் பையனில்ல...சும்மாவா. :lol::icon_idea:

தொடருங்கள்...

மற்றவனையும் ஏமாற்றவில்லை, நல்லபிள்ளை

 

இப்படி அப்பாவியா இருந்து தான் நாங்களும் ஒரு காலத்தில நம்பிக் கெட்டது (பெண்ணுருவில் உள்ளதுங்க எல்லாமே நல்லதுங்கன்னு தான் நம்பினது.)... நீங்களுமா..?!

 

மற்றவனையும் ஏமாற்றல்லைன்னு சொல்ல முடியாது. சரியா பாவிச்சிட்டாங்க... எனி அவன் கூட இருந்தால் என்ன விட்டால் என்ன..! :lol:

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு கதை, நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது. எனக்கு தெரிந்த பெண்னும் இவ்வாறு விசாவிற்காக திருமணம் செய்தவர்

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு கதை, நிஜ வாழ்க்கையில் நடக்கின்றது. எனக்கு தெரிந்த பெண்னும் இவ்வாறு விசாவிற்காக திருமணம் செய்தவர்

 

ஒத்திசைவுக்கு நன்றி கொழும்ஸ். :)

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ்.... இது லண்டனில இப்ப பரவலா நடக்கிற சம்பவம். காதலிக்க முன் ஒரு லட்சம் தடவைகூட யோசிக்கலாம். ஆனால் காதலிச்சா பிறகு ஒரு தடவை கூட" நாம் தெரிவு செய்தது சரியா தவறா?" என யோசிக்கக் கூடாது. ஆனால் பெண்களின் அல்லாடும்  மனது அப்படித்தானே யோசிக்குது.  என்ன பண்ணுறது??? சிலருக்கு காலம் கடந்துதான் புரிகிறது.

 

கிட்டத்தட்ட....நான் எழுதிய "விற்றுத்தீர்ந்த காதல் கதை"யின் முடிவினை உங்கள் கதையில் சொல்லிவிட்டீர்கள்.

 

நன்றி நெடுக்ஸ்...! :)

Share this post


Link to post
Share on other sites

நாட்டு நடப்பை.. சரியாச் சொன்னீங்க கவிதையார். நன்றி உங்கள் வரவுக்கு. :)

Share this post


Link to post
Share on other sites

நாட்டு நடப்பை.. சரியாச் சொன்னீங்க கவிதையார். நன்றி உங்கள் வரவுக்கு. :)

 

நாட்டு நடப்பை மாற்றும் சக்தி எழுத்திற்கும், ஊடகத்திற்கும் கூட இருப்பதாகச் சொல்கிறார்களே...!

Share this post


Link to post
Share on other sites

நாட்டு நடப்பை மாற்றும் சக்தி எழுத்திற்கும், ஊடகத்திற்கும் கூட இருப்பதாகச் சொல்கிறார்களே...!

 

எம்மவர்களின் கடந்த 40 வருட நாடோடி வாழ்க்கை பல அரிய மனித இயல்புகளை எம்மவர்கள் மறக்கவும்.. இழக்கவும்.. சுயநலத்தை.. சுகபோகத்தை எப்படியாவது அடையனும் என்று குறுகிய.. இலகுவான வழிமுறையில்.. சிந்திக்கும்.. மனநிலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

 

அண்மையில் எமக்காக போராடப் போனதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு போராளிக் குடும்பத்தை சந்தித்து கதைக்கிடைத்த போது.. அங்கும்.. இதே தான்.. நிலவுகிறது.

 

ஒரு தலைவனால் மட்டும் தான் இந்தளவாவது எமது இனதுக்காகச் செய்ய முடிந்துள்ளது என்பதைத் தவிர.. வேறெதும் இப்ப தோணுதில்ல.

 

இப்படியே.. இந்தச் சமூகம் திக்கற்று போய் எங்க போய் சேரப் போகுதோ...?????! :icon_idea::rolleyes::(

Share this post


Link to post
Share on other sites

மனம் ஒரு குரங்கு..

அது இவ்வாறு ஓடி ஆடி 

அடிபட்டு வதைபட்டுத்தான் சரியான வழிக்கு வருகிறது....

 

யாரிலும் தப்பு இருப்பதாக தெரியவில்லை

சந்தர்ப்ப சூழ்நிலைக்கைதிகளை  நாம் வெறுப்பதா?

அதற்கான சூழலை நம் சமூகம் தந்திருப்பதை வெறுப்பதா...?

 

எப்படியோ

நல்லதொரு அனுபவக்கதை..

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites