Jump to content

இதை பாவித்ததுண்டா..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

96f9c5bdf225fcc3f8e5ad610dbfaf0f_1024.jp

இதை தெரிந்தவர்கள் என்னவென்று கூறுங்கள் பாப்போ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமா விளங்குதே இல்லையே. உங்களுக்கே என்ன என்று தெரியாதோ ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோர்சிங் - நாமுழவு அல்லது முகச்சங்கு  

பல்லு இடுக்கில் கடித்துக்கொண்டு இயக்கப்படும் ஒரு இசை கருவி போல தெரிகிறதே !

Link to comment
Share on other sites

இதன் பெயர் டில்காஃபோ.
 
கிறேக்கர்கள் குளிர்காலத்தில் உறைந்த எண்ணெய் வகைகளை விறாண்டி எடுப்பதற்குப் பாவிப்பார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது கொத்துரொட்டி கொத்துற தட்டு எண்டு நினைக்கிறன்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96f9c5bdf225fcc3f8e5ad610dbfaf0f_1024.jp

இதை தெரிந்தவர்கள் என்னவென்று கூறுங்கள் பாப்போ ...

இதை நான் மிகச் சிறுவனாக இருக்கும்பொழுது, எங்கள் கிராமத்து கடைகளில் வாங்கி விளையாடியிருக்கிறேன்.. :icon_idea:

பெயர் மறந்து போச்சு..

ஆள்காட்டி விரல் மேல் அந்த வளைந்த கீழ்த்தகட்டை வைத்து பிடித்துக்கொண்டு, மேலேயுள்ள தட்டையான தகட்டை கட்டை விரலால் கீழே அழுத்தியும், பின் அழுத்தத்தை விடுவித்தால், "டிக்" என  ஒலி எழுப்பும். இப்படி பலமுறை தொடர்ச்சியாக விட்டு விட்டு அழுத்தினால், 'டிக்.. டிகி.. டிக்.. டிகி' வினோதமான ஒலிகள் கிட்டும்.

5 பைசாவிற்கு அப்பொழுது கடைகளில் கிடைக்கும்.  காலியாகும் எண்ணை டின்களின் இரும்புத் தகடுகளை வெட்டி, இதனை தயாரிப்பார்கள்.

கூட்டாளிகளுடன் குறூப்பாக விளையாடி, தெருவை இந்த ஒலிகளால் அதிர வைப்பது வழக்கம். யாராவது பெருசுகள், தெருத் திண்ணைகளில் ஓய்வாக இருக்கும்பொழுது / தூங்கும்பொழுது இந்த சத்தங்களை பொறுக்காது "டேய்" என தோள் துண்டால் அடிக்க வருவார்கள்.. "போங்க, தாத்தா.." என ஒழுங்கு காட்டிவிட்டு ஒரே ஓட்டம் தான்..!

எம் நினைவில் இப்படி சின்ன்ச் சின்ன அழியாத கோலங்கள்..! 

மறந்தே போய்விட்ட சிறுவயது நினைவுகளை புன்முறுவலுடன் இரைமீட்ட உதவியதற்கு நன்றி..! :)

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன்.. ராசவன்னியர் 20 வயதுகளில் இதை வாங்கிப் பாவித்திருப்பார்... இப்போது கௌரவம் கருதி தான் மிகச் சிறிதாக இருக்கும் போது பாவித்ததாகச்  சொல்கிறார் என...  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34ceylon2.jpg

நல்லூர் திருவிழா நேரம், வீதிகளில் போடும் கடைகளில்...
இந்த... டிக்கி, டிக்கியை.... வங்கி விளையாடிய அனுபவம் உண்டு.
ரொம்பக் காலத்துக்கு, முந்தி வாங்கி விளையாடியது என்றாலும் அதன் விலை 10 சதம் என்பது, இன்னும் ஞாபகம் உள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்சிஸ், அரோக்கியசாமி எனும் அன்பான அப்பாவுக்கு மாத்தளைப்பக்கத்தில் ஒரு தேய்லைத்தோட்டத்தில் பிறந்து சிறுவயதிலேயே பஞ்சம் பிழைக்க வீட்டு வேலைக்காரனாக எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வந்துசேர்ந்தவன், நல்லூர்த்திருவிழகாலத்தில் அவனுக்குக் கிடைத்த பத்துச்சதத்தில் இதைத்தான் வாங்கிவந்து அடுத்த நாள் முழுவதும் ஒழுங்கையால போகவரேக்க டிக் டிக் டிக் என்டு அடிச்சுக்கொண்டேயிருப்பான்.

நானும் ஆசைப்பட்டு அவனிடம் வாங்கி ஒரு நாலைஞ்சு தடவை அடிச்சிருப்பன்.................... காத்துக்கூட வரவில்லை  உடைஞ்சுபோட்டுது, அவணோ எனக்குப் புதுசா வாங்கித் தா அல்லது திருத்தித் தா என அழிச்சாட்டியம் பண்ணுறான் அனால் நான் வாங்கிக் கொடுத்ததாக ஞாபகமில்லை. அரோக்கியசாமி, சிறிமா சாஸ்திரி ஒப்பந்த்ததின்பிரகாரம் குடும்பத்தோட இந்தியாவுக்கு போய்விட்டார். இப்போது இதைப்பார்த்ததும் பிரான்ஸ்ஸிஸ்நினைவு வந்தது. சிறுவயதில் மிகவும் நட்பாகப்பழகிய நண்பன்.

பிரான்ஸ்சிஸ், அரோக்கியசாமி எனும் அன்பான அப்பாவுக்கு மாத்தளைப்பக்கத்தில் ஒரு தேய்லைத்தோட்டத்தில் பிறந்து சிறுவயதிலேயே பஞ்சம் பிழைக்க வீட்டு வேலைக்காரனாக எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வந்துசேர்ந்தவன், நல்லூர்த்திருவிழகாலத்தில் அவனுக்குக் கிடைத்த பத்துச்சதத்தில் இதைத்தான் வாங்கிவந்து அடுத்த நாள் முழுவதும் ஒழுங்கையால போகவரேக்க டிக் டிக் டிக் என்டு அடிச்சுக்கொண்டேயிருப்பான்.

நானும் ஆசைப்பட்டு அவனிடம் வாங்கி ஒரு நாலைஞ்சு தடவை அடிச்சிருப்பன்.................... காத்துக்கூட வரவில்லை  உடைஞ்சுபோட்டுது, அவணோ எனக்குப் புதுசா வாங்கித் தா அல்லது திருத்தித் தா என அழிச்சாட்டியம் பண்ணுறான் அனால் நான் வாங்கிக் கொடுத்ததாக ஞாபகமில்லை. அரோக்கியசாமி, சிறிமா சாஸ்திரி ஒப்பந்த்ததின்பிரகாரம் குடும்பத்தோட இந்தியாவுக்கு போய்விட்டார். இப்போது இதைப்பார்த்ததும் பிரான்ஸ்ஸிஸ்நினைவு வந்தது. சிறுவயதில் மிகவும் நட்பாகப்பழகிய நண்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. ராசவன்னியர் 20 வயதுகளில் இதை வாங்கிப் பாவித்திருப்பார்... இப்போது கௌரவம் கருதி தான் மிகச் சிறிதாக இருக்கும் போது பாவித்ததாகச்  சொல்கிறார் என...  :D

எழுபதுகளில் இவை கிடைத்ததாக ஞாபகம் இல்லை! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவிழாக் காலங்களில் ..விர்க்கப்பட்டதுதான் எனக்கும்ஞாபகம் ,,,டிக்கி டிக்கி தான் இது நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்போது லண்டன் டு கொழும்பு ஒரு நிமிச கால் சார்ஜ் 1p யிலிருந்து 4p உள்ள தான். skype எண்டால் அதுவும் இல்லை.
 
ஆனால் வந்த புதிதில் இது ஒரு நிமிடத்துக்கு £2.30. படு பாவிகள். யாரிடமாவது இப்ப, அந்த சோகக் கதை சொன்னாலும்... என்னது என்று வாயை பிளப்பார்கள்.
 
கால் அடிச்சுப் போட்டு, வீட்டைக் காலி பண்ணி போய் விடுவோம் எண்டு, எதுக்கு வம்பு எண்டு, வீட்டு ஒனெர்கள், இன்டர்நேஷனல் கால் வசதி வைத்திருக்க மாட்டார்கள். 
 
அவசரத்துக்கு தெரு ஓர பப்ளிக் பூத்துகள் தான். படு பாவிகள் அதில் £2.50 வரை அடிப்பார்கள். 
 
சோமாலி லிங்க் ஒன்று கிடைத்தது. ஒரு பவுண்ட் குத்தியில் கரை ஓரமாக ஓட்டை போட்டு, அறுந்து போகாத நய்லோன் நூல் கட்டி, காசை உள்ள போட்டு, லைன் கிடைத்ததும், நூலைப் பிடித்து இழுத்து, மீண்டும், மீண்டும் போட்டு,கிரெடிட் விழ வைக்க நண்பர் ரெடி ஆக இருப்பார்.
 
சோமாலி லிங்க் கிடைக்கும் வரை, குத்தியின் நடுவில் ஓட்டை போட்டு, பெயில் ஆகி இருந்தோம்.
 
கதைத்து முடிந்ததும் ஓட்டை பவுண்ட் காசு , அடுத்த நபரின் ரவுண்டுக்கு ரெடியாக பத்திரமாகும்.
 
அது ஊரில் இது போன்ற நம்ம விளையாடுகளை ஞாபகப் படுத்திய காலம். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னைக்கு தான் இதையே பார்க்க முடிகிறது. நன்றி ராஜவன்னியன் அண்ணா மற்றும் மீள் அறிமுகப்படுத்திய அன்புத்தம்பி. :):rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.