• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

ஆச்சரியமான நாய் நண்பர்கள்! - 3 நாட்கள் காவலிருந்து காப்பாற்றிய நாய்

Recommended Posts

38 தடவைகள் ஈய குண்டுகளைக் கொண்ட துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்காக போராடிய தனது நண்பனான நாயை 3 நாட்கள் அதனருகே காவலிருந்து மற்றொரு நாய் காப்பாற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கிரேக்கத்தீவான ஸகின் தோஸில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு சாக்கடை கால்வாயொன்றில் போடப்பட்டிருந்த 4 வயதான ஆண் நாயைக் கண்ட 2 வயதான பெண் நாய் அதனருகே 3 நாட்களாக எந்தவித உணவும் உண்ணாது காவலிருந்ததுடன் அந்நாயை காப்பாற்ற அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் மூலம் குரைத்துக் கொண்டிருந்துள்ளது.

  
இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் அந்நாய்க்கு உதவ முன் வந்ததையடுத்து அந்நாய்கள் மீட்கப்பட்டு கிரேக்க மிருக மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் காயமடைந்த ஆண் நாய்க்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சிகிச்சையளித்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். அவையிரண்டும் தெரு நாய்கள் என நம்பப்படுகின்றன.

தற்போது ரோமியோ ஜூலியட் என அழைக்கப்படும் அந்நாய்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டு மேற்கு சசக்ஸிலுள்ள ஹோல்புறூக் மிருக மீட்பு நிலையத்தின் பராமரிப்பு நிலையத்தில் வாழ்கின்றன. மேற்படி ஆண் நாயின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது கண்டறியப்படவில்லை.

 

 

http://seithy.com/briefPuthinam.php?newsID=122367&category=Puthinam&language=tamil

Share this post


Link to post
Share on other sites