Jump to content

ஆண்டாளின் திருப்பாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாளின் திருப்பாவை

வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

 

பொய்கையாழ்வார்

நம்மாழ்வார்

ஆண்டாள்

 பூதத்தாழ்வார்

மதுரகவியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

 பேயாழ்வார்

 குலசேகர ஆழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமழிசையாழ்வார்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

 

இவர்கள் மொத்தம் 4,000 பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்:

 

திருப்பல்லாண்டு

அமலனாதிபிரான்

நான்முகன் திருவந்தாதி

பெரியாழ்வார் திருமொழி

கண்ணிநுண்சிறுத்தாம்பு

 திருவிருத்தம்

 திருப்பாவை

பெரிய திருமொழி

திருவாசிரியம்

 நாச்சியார் திருமொழி

திருக்குறுந்தாண்டகம்

பெரிய திருவந்தாதி

பெருமாள் திருமொழி

திருநெடுந்தாண்டகம்

திருஎழுகூற்றிருக்கை

திருச்சந்தவிருத்தம்

 முதல் திருவந்தாதி

சிறிய திருமடல்

திருமாலை

இரண்டாம் திருவந்தாதி

பெரிய திருமடல்

திருப்பள்ளி எழுச்சி

மூன்றாம் திருவந்தாதி

இராமானுச நூற்றந்தாதி

 

திவ்வியப்பிரபந்தங்களைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார்.

 

ஆண்டாளின் திருப்பாவை மார்கழி மாதத்தில் வைணவர்களாற் பாடப்படுகின்றது.  மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் சிவனின் பெருமைகளைக் கூறிச் சிவ பக்தைகள் தம் தோழியர்களைச் சிவபூசைக்குக் கூட்டிச் செல்லத் துயிலெழுப்புவது போன்றே திருப்பாவையிலும் கிருஷ்ணனின் புகழ்கூறிக் கிருஷ்ண பக்தைகள் தம் தோழிமார்களைத் துயிலெழுப்புகிறார்கள். அதற்காக முதலில்  ஆற்றிற்குச்சென்று நீராடுவதற்காக அவர்களை அழைக்கும்பாடல்:  

    'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்   (நேரிழை, ஆயிழை)
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை ,ளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்'       என்று தொடங்குகின்றது.

மார்கழி மாதம் முழுநிலவு நாளின்று! சிறந்த நகைகளை அணிந்தவர்களே! நீராட வாருங்கள்! செல்வச் சீர் மல்கும் திருவாய்ப்பாடியின் செல்லச் சிறுமியர்களே! கூரிய வேலைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் நந்தகோபனின் (வளர்ப்புத்தந்தை) திருக்குமரன் (வசுதேவர்- தந்தை, தேவகி - தாய்) நீண்ட அழகிய கண்களை உடைய யசோதையின் (வளர்ப்புத்தாய்) இளஞ்சிங்கம், கரிய திருமேனியும் சிவந்த கண்களும் கொண்ட, சூரியனையும் சந்திரனையும் ஒத்த திருமுகத்தான், நாராயணனே நமக்கு வேண்டியதெல்லாம் தருவான்! உலகத்தவர் புகழ நீராடுவோம்!  

என்பது அந்தப் பாடலின் கருத்தாகும்.  இதற்கு அடுத்த பாடல் தமிழ் உலகில் சிறு சர்ச்சையை ஏற்படுத்திய பாடலாகும். அந்தப் பாடல்:

     
'வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமா(று) எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.'  என்ற பாடலாகும்.

உலகத்தில் வாழ்பவர்களே! நாங்கள் எங்கள் பாவை நோன்பிற்காகச் செய்யப் போகும் செயல்களைக் கேளுங்கள்!

பாற்கடலுள் ஓய்வாகப் படுத்திருக்கும் பரமனின் திருவடிகளைப் பாடுவோம்! நெய் உண்ண மாட்டோம்! பால் உண்ண மாட்டோம்! அதிகாலையில் நீராடுவோம்! கண்களுக்கு மை இட்டு அழகு செய்ய மாட்டோம்! மலர்களைக் கூந்தலில் சூடி முடிய மாட்டோம்! செயயத் தகாதவற்றைச் செய்ய மாட்டோம்! தீய குறளை ஓதமாட்டோம் மாணவர்களுக்கும் (பிரம்மசாரிகளுக்கும்), இரப்பவர்களையும்; பிச்சையெடுப்போரையும் கையசைத்துக் கூப்பிட்டு  வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனமுவந்து தருவோம்! நாம் உய்யும் வழியறிந்து உவப்புடன் இருப்போம்!  

என்பதாக அதன் கருத்தைக் கூறுகின்றனர். இங்கே தீக்குறளைச் சென்றோதோம் என்பதற்கு தீயதான கோளைக் காவித் திரியமாட்டோமென்றே பலர் தற்போது பொருள் கூறுகின்றனர்.

ஆனால் காஞசிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்  இந்தப் பாடலில் வரும் 'தீக்குறளைச் சென்றோதோம்' என்ற வரிகளுக்கு திருக்குறளைக்கூடப் படிக்கமாட்டோமென்ற விளக்கத்தையே கொடுத்திருக்கிறார். இதனால் திருப்பாவையின்மேல் சைவத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பேற்படக்கூடிய நிலைமையுருவாகியது.

மேற்படி கூற்று அவரால் 1963 ஜுன்மாதம் மதுரையில் அவர் திருக்குறள் பற்றிப் பேசியபோது வெளிப்படுத்தப்பட்டது. (http://aggraharam.blogspot.co.uk/2013/01/blog-post_21.html -18/10/13-11.55pm).  அவரது அந்தக் கூற்றுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் மாத இதழ் தனது சோதி16 ஒளி12 இல் தலையங்கம் தீட்டிக் கண்டனத்தை வெளியிட்டது. 21-11-1963 குமுதம் இதழும் தனது தலையங்கத்தில் திருக்குறளுக்கு எதிரானதாகத் திருப்பாவையைச் சிலாகித்த பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும் வருத்தத்தையும் தெரிவித்தது.   

காஞ்சிப் பெரியவர் தனது கூற்றைத் தவறானதாக ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் 5-12-63 குமுதத்தில் அவர் கொடுத்த விளக்கத்தில்: தான் 'தீக்குறiளை' என்ற சொல்லை (தீந்தமிழ், தீஞ்சுவை என்பது போல) இனிய குறளை என்ற அர்த்தத்திலேயே எடுத்தாண்டதாகவும், அந்த இனிய குறளையும் ஓதமாட்டோமென்று திருப்பாவை குறளைப் பெருமைப்படுத்துவதாகவே கருதுவதாகவும் கூறிச்சமாளித்தார். இதனை ஒருவகைச் சப்பைக்கட்டாக எடுத்த அறிஞர்கள் இனிய குறளெனக் கொள்வதாயின் 'தீங்குறள்' என்றே திருப்பாவை கூறியிருக்கவேண்டும். ஆனால் 'தீக்குறளைச் சென்றோதோம்' என்பதால் அந்த வாக்கியத்திலுள்ள 'ச்' ஐ எடுத்துவிடும்போது தீக்குறளை – அதாவது தீயதான கோள்களைக் காவித்திரியமாட்டோமென்ற அர்த்தமேயுள்ளதென்றும்,  ஆகவே ஆண்டாள் அந்த அர்த்தத்திலேயே பாடியிருக்கவேண்டுமென்றும் கூறி திருப்பாவை  குறளை இழிவு செய்யவில்லையென்று சமாதானஞ் செய்துகொண்டனர்.

மொத்தத்தில் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல தெய்வத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த காஞ்சிப் பெரியவாளின் கூற்றிலும் தவறு நேர்ந்ததா அல்லது  நாச்சியார் தன் திருப்பாவையில் குறளை இழிவு செய்தாரா என்பது தெளிவற்றதாகவேயுள்ளது.  இத்தகைய விடயங்களுக்கு திருப்பாவையை எழுதிய நாச்சியாராலன்றி வேறு யாராலும் விடைகூறமுடியாது.  ஒருவேளை திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனி போன்றவர்கள் அல்லது அதனை அச்சுக்குக் கொண்டு வந்தவர்கள் தங்களுக்கிருந்த வைஷ்ணவ வெறியினாலும் திருக்குறள் விரோதப் போக்கினாலும் இத்தகைய அபத்தங்களுக்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.  எதையும் ஆராயாமல் முடிவெடுப்பது தவறானதாகையால், 'தீக்குறளைச் சென்றோதோம்' என்னும் வாக்கியம் தீயதான கோளைக் காவுவதைச் செய்யோமென்ற அர்த்தத்தையே கொடுக்கிறது என எடுத்துக்கொள்வதே சிறப்பானதாகும்.

இருப்பினும் திருக்குறளை நன்கறிந்தவராய் இருந்திருக்கக்கூடிய தமிழறிவாளரான ஆண்டாள் இத்தகைய குழப்பநிலை பிற்காலத்தில் ஏற்படக்கூடுமென்று கருதியாவது அப்பாடலில் வரும் தீக்குறளை என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகின்றது.
 

Link to comment
Share on other sites

நம்ம யாழ்.கொம் நாதமுனியர் என்ன விளக்கம் குடுக்கிறார் பார்ப்போம்.
 
அதுவரை..
 
https://www.youtube.com/watch?v=9YpJIxhhHFs
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்ம யாழ்.கொம் நாதமுனியர் என்ன விளக்கம் குடுக்கிறார் பார்ப்போம்.
 
அதுவரை..

 

வை திஸ் கொலைவெறி?  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.