Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0


Recommended Posts

வணக்கம்,

கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 15 டிசம்பர் 2014 ஞாயிறு முதல் (15.12.2014 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதும், பதிவர்கள் மீதும் மட்டுறுத்துதலும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


அ) உறுப்பினர்கள்

1. உறுப்பினர் பெயர்

  • யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் இரண்டு வகைப் பெயர்களைத் தெரிவு செய்துகொள்ளலாம்.
    • பயனர் பெயர் (username): இது யாழ் கருத்துக்களத்தில் கள உறுப்புரிமைப் பதிவிற்கான பெயர்.
    • புனைபெயர் (nickname): இது கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் தன்னை அடையாளப்படுத்துவதற்கான பெயர்.
  • இவை இரண்டும் கற்பனைப் பெயர்களாகவோ அல்லது உண்மைப் பெயர்களாகவோ இருக்கலாம்.
  • பயனர் பெயராக மின்னஞ்சல் முகவரியை அல்லது புனைபெயரைப் பாவிக்கலாம். பயனர் பெயர் கள உறுப்பினருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
  • கள உறுப்பினர் ஒருவர் யாழ் கருத்துக்களத்தில் உள்நுழைவதற்குப் பயனர் பெயரினையும் கடவுச் சொல்லையும் பாவிக்கவேண்டும்.
  • பெயர்கள் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படலாம். (சில தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக நீளமான பெயர்களை தமிழில் எழுத முடியாதுள்ளது).
  • பின்வரும் பெயர்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் பெயர்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • பண்பற்ற பெயர்கள்/பிறரை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் சொற்கள் (எ.கா.: சொறிநாய்).
  • பின்வரும் முறையில் பெயர்கள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • இலக்கங்கள் (எ.கா.: 12345678)
    • குறியீடுகள் (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , . )

2. உறுப்பினர் படம்

  • யாழ் களத்தில் இரண்டு வகைப் படங்களை உங்கள் படமாக இணைக்கலாம்.
    • பயனர் படம் (profile photo): யாழ் கருத்துக்களத்தில் உங்கள் "எனது அகம்" (profile) பக்கத்தில் இந்தப்படம் காண்பிக்கப்படும்.
    • அவதாரம் (avatar): யாழ் கருத்துக்களத்தில் எழுதும் உங்கள் கருத்துக்களோடு இந்தப்படம் காண்பிக்கப்படும்.
  • இவை இரண்டும் கள உறுப்பினர்களின் உண்மையான படமாகவோ அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட படங்களாகவோ இருக்கலாம்.
  • படங்களின் அளவு பின்வருமாறு இருக்க வேண்டும்:
    • பயனர் படம்: 90px * 90px
    • அவதாரம்: 80px * 80px
  • பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது:
    • உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள்.
    • குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள்.
    • தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் படங்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்).
    • மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்).
    • பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள்.

3. கையொப்பம்
யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் கையொப்பம் தொடர்பான விதிகள்:

  • கையொப்பம் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • கையொப்பத்தில் பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான தளங்களுக்கும், வன்முறைகளைத் தூண்டும் தளங்களிற்கும், தகவல் திருட்டுக்களில் ஈடுபடும் தளங்களிற்கும், வக்கிரமான பாலியல் தளங்களிற்கும் இணைப்புக்கள் கொடுப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • விரும்பிய நிறங்களைப் பயன்படுத்தமுடியும். எனினும் "சாதாரண அளவு" எழுத்தில் கையொப்பம் இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • கையொப்பத்தின் உயரம் அதிகமாக இருந்தால் கருத்துக்களை வாசிப்பதில் இடையூறுகள் உண்டாகலாம். எனவே இணைக்கப்படும் படங்களின் அளவு "உயரம்: 80px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் விரும்பப்படுகின்றது.
  • இணைக்கப்படும் படங்களின், அசைபடம் (animation) அடங்கலாக, கோப்பு அளவு (file size) அதிகமாக இருப்பது யாழ் கருத்துக்களத்தின் வேகத்தைக் குறைக்கலாம். எனவே இயலுமானவரை கோப்பு அளவு குறைந்த படங்களைப் பாவிப்பது விரும்பப்படுகின்றது.
  • சீண்டும் வகையிலும், பிறரை இழிவுபடுத்தும் அல்லது அவதூறு செய்யும் வகையிலும் கையொப்ப வசனங்கள் இருத்தல் ஆகாது.

4. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது).
  • சக கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்த்தல் வேண்டும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.
  • யாழ் கருத்துக்களத்தை விளம்பர நோக்கில் வெறும் செய்திகளையும் ஆக்கங்களையும் இணைக்கும் தளமாக மட்டும் பாவித்தல் தவிர்க்கப்படவேண்டும்.
  • கருத்தாடலைத் திசை திருப்பும் வகையிலும் தலைப்புக்கு தொடர்பில்லாத விதத்திலும், வீண் விதண்டாவாதங்களாகவும் எழுதுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும் கூடாது.
  • யாழ் கருத்துக்களத்தினைக் குப்பைக்கூடமாகவும், மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தக்கூடாது.

5. தனிமடற் சேவை

  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களோடு தனிப்பட நட்புப் பாராட்ட தனிமடற் சேவையினைப் பயன்படுத்தலாம்.
  • தனிமடற் சேவையினை தவறான முறையில் பயன்படுத்தல் ஆகாது. (அப்படி ஏதாவது நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாகத்துக்கு அறியத்தரலாம்).
  • தனிமடற் சேவையினை நிறுவனங்களுக்கான விளம்பரங்களுக்கு பயன்படுத்தல் ஆகாது.
  • ஒருவரின் தனிமடலை நிர்வாகப் பிரிவில் இருப்பவர்கள் தவிர்ந்த இன்னொருவருக்கு அனுப்புவதும், யாழ் கருத்துக்களத்தில் அல்லது பிற தளங்களில் பகிரங்கப்படுத்துவதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இவ்விதி நிர்வாகத்தில் உள்ளவர்களால் அனுப்பப்படும் தனிமடல்களுக்கும், நிர்வாக நடவடிக்கைகள் சம்பந்தமான தொடர்பாடல்களுக்கும் பொருந்தும்.
  • கள உறவுகளுக்கிடையில் ஆபாசமாகவோ அல்லது வக்கிரமாகவோ தனிமடல் பிரயோகம் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

6. உறுப்பினர் குழுமங்கள்
யாழ் கருத்துக்களத்தில் பின்வரும் உறுப்பினர் குழுமங்கள் உள்ளன.



 

விண்ணப்பித்தோர்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களெனினும் யாழ் களத்தினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் உள்ள இணைப்பைச் சொடுக்கி அவர்தம் மின்னஞ்சல் முகவரிகளை உறுதிப்படுத்தாதோர் ஆவர்.

எனவே இக்குழுமத்தில் உள்ளவர்களால் அவர்தம் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தி புதிய உறுப்பினர்கள் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படும்வரை யாழ் கருத்துக்களத்தில் பதிவுகள் எதனையும் மேற்கொள்ளமுடியாது.

புதிய உறுப்பினர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்கள் யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் கருத்துக்கள் பதியலாம். ஆயினும் யாழ் அரிச்சுவடி பகுதியில் மட்டுமே புதிய தலைப்புகளை அவர் தம்மை அறிமுகப்படுத்தவும் உதவிகளை நாடவும் திறக்கலாம்.

கருத்துக்கள உறுப்பினர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு.

ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை தமிழில் பதிந்த புதிய உறுப்பினர்கள் “கருத்துக்கள உறுப்பினர்கள்” எனும் நிலைக்கு மாற்றப்படுவார்கள். எனினும் கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் இந்நிலைக்கு அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே “கருத்துக்கள உறுப்பினர்கள்” குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்படும். குறிப்பாகத் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறுப்பினர்களுடன் பண்போடும், நட்போடும் பழகுகின்றார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும்.

 

ஆ) வடிவம்

1. எழுத்து

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் எழுதப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள் அனைத்தும் "சாதாரண அளவு" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகளுக்கு மட்டும் "அளவு 2" இனைப் பயன்படுத்தலாம்.
  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு "மொத்த(bold) – சரிந்த(italic) – அடிக்கோடிட்ட(underline)" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.
  • தலைப்புக்களில் (Topic Title) வடிவமைப்புக்களை இணைக்க முடியாது என்பதால் தலைப்புக்கள் அனைத்தும் வடிவமைப்புகள் இன்றியே இணைக்கப்பட வேண்டும்.

2. நிறம்

  • வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்கள் பயன்படுத்தப்படல் வேண்டும்.

3. படம்

  • இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

 

இ) பதிவுகள்

1. கருத்து/விமர்சனம்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்கள், பின்னூட்டங்கள் விமர்சனங்கள் சம்பந்தமான விதிகள்:

  • கருத்துக்கள், பின்னூட்டங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்கள் இயலுமானவரை தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு துணைபுரியும் நோக்கில் வைக்கப்படும் கருத்துக்களுக்கு இவ்விதியில் தளர்வுப்போக்கு காட்டப்படும்.
  • தனிநபர்களைத் தாக்குதல், சக கள உறுப்பினர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல், சீண்டுதல், இழிவுபடுத்தல், அவதூறு செய்தல் போன்ற கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களையும் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்கள் அவதூறுகளைத் தவிர்த்து, ஆக்கபூர்வமான முறையில் ஆதாரங்களை இயன்றவரை குறிப்பிட்டு விமர்சிக்கவேண்டும்.
  • நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிரதேசவாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் கருத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • வன்முறைகளைத் தூண்டுதல், ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • இணையத்தினூடாக தனிப்பட்டவர்களின் பெறுமதியான தரவுகளையும், வங்கி அட்டைகள் போன்றவற்றையும் திருடும் வழிமுறைகள் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். மாறாக இணையப் பாதுகாப்பு பற்றிய அறிவூட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படும்.

2. தலைப்பு
யாழ் கருத்துக்களத்தில் ஆரம்பிக்கப்படும் தலைப்புகள் பற்றிய பொதுவான விதிகள்:

  • ஆரம்பிக்கப்படும் திரிகளின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும்.
  • தலைப்புகள் சுருக்கமானதாகவும், பொருள்பொதிந்ததாகவும் எழுதப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது.
  • வன்முறைகளையும், பாலியல் உணர்வுகளையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடப்படல் கூடாது.
  • பின்வரும் முறையில் தலைப்புகள் எழுதப்படல் ஆகாது:
    • இணையத்தள முகவரிகள் (எ.கா.: www.yarl.com)
    • மின்னஞ்சல் முகவரிகள் (எ.கா.: valainjan@yarl.com)
    • குறியீடுகள்: (எ.கா.: _ / + * # : - $ § & % ( ] ) = } { ? \ " ! < > , .)

3. மொழி

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். தமிழில் எழுதப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
    • விண்டோஸ் இயங்குதளத்தில் அமைந்த கணினி:
      • இகலப்பை. காணொளி விளக்கம்:
      • Keyman - தமிழ் சுரதா பாமுனி. கட்டணமற்றது. விண்டோஸ் 8 எனில் அதில் உள்ள Short-Cut வசதியைப் பாவித்து தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாற்றிக் கொள்ள முடியும்
      • Keyman Tavultesoft * கட்டணம் செலுத்தவேண்டும்.
    • iOS இயங்குதளத்தில் அமைந்த iPad வரைபட்டிகை (tablet), iPhone திறன்பேசி (smartphone):
      • தமிங்கில விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Anjal
      • தமிழ்99 விசைப்பலகை முறை: Settings >> Keyboard >> Keyboards >> Tamil >> Tamil 99
    • Android இயங்குதளத்தில் அமைந்த வரைபட்டிகை (tablet), திறன்பேசி (smartphone):
  • கொச்சைத் தமிழிலும் தமிங்கிலத்திலும் எழுதுவது இயன்றவரையில் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • பிறமொழி ஆக்கங்களாக இருப்பின்:
    • மிகவும் முக்கியமானதும் நிகழ்காலத்துக்குரியதுமான ஆங்கில அல்லது பிறமொழிச் செய்தியினது அல்லது அரசியல் ஆய்வுக்கட்டுரையினது உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை சுருக்கமாகத் தமிழில் தந்துவிட்டு நேரடி மூலத்துடன் முழுமையாக மூலமொழியில் இணைத்தல் வேண்டும்.
    • உள்ளடக்கத்தை மாற்றாது இயலுமானவரை தமிழில் மொழிபெயர்த்து இணைத்தல் வேண்டும்.
    • பிறமொழிப் பகுதியான யாழ் திரைகடலோடிப் பிரிவில் மட்டும் பதியப்படல் வேண்டும்.

4. உரையாடல்

  • "நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • "நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் சக கள உறுப்பினர்களை விளித்தல், அழைத்தல், குறிப்பிடுதல் ஆகாது.
  • துரோகி, பச்சோந்தி, பன்னாடை, நாதாரி, வாந்தி, புண்ணாக்கு, மொக்குக் கூட்டம் போன்ற மலினமான தூற்றுதலுக்குரிய பதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • சோனி, காக்கா, தொப்பி பிரட்டி, பயங்கரவாதி, காட்டுமிராண்டி போன்ற பதங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்
  • க ற் ப ழி ப் பு (பாலியல் வல்லுறவு/வன்புணர்வு), விபச்சாரி (பாலியல் தொழிலாளி), விபச்சாரம் (பாலியல் தொழில்), அலி (திருநங்கை) போன்ற பிற்போக்கான பதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். பதிலாக அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டுள்ள பதங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • சாதிப்பெயர்களாலும், இழிவான வசைச் சொற்களாலும் சுட்டுதல், திட்டுதல், தூற்றுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகளைத் தூற்றுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.

5. அரட்டை

  • யாழ் கருத்துக்களம் அரட்டைக்களம் அல்ல - எனவே, அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு தலைப்பில் அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள், அரட்டைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அதே போன்று வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றிப் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியிலும் யாழ் உறவுகள் பகுதியில் உள்ள யாழ் நாற்சந்தி பிரிவிலும், திண்ணையிலும் இவ்விதிமுறை தளர்த்தப்படுகிறது.
  • எனினும் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய ஆக்கங்களை இணைப்போர், அதில் அரட்டையடிப்பதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பின் அரட்டை அடித்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களம் உறுப்பினர்கள் அல்லாத பார்வையாளர்களுக்கும் பொதுவானது என்பதால் கள உறுப்பினர்களுக்கு மட்டுமான திண்ணையில் அரட்டை அடிப்பது போன்று கருத்துக்களத்தில் அரட்டை அடிப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
  • தனியே முகக்குறிகளால் மட்டும் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்தல் வேண்டும். எனினும் திண்ணையில் மாத்திரம் இவ்விதிமுறை தளர்த்தப்படுகின்றது.

6. செய்திகள்/ஆக்கங்கள்/பதிவுகள்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள், ஆக்கங்கள், பிற பதிவுகள் சம்பந்தமான பொதுவான விதிகள்:

  • செய்திகள், ஆக்கங்கள், பிற பதிவுகள் அவற்றுக்குரிய பிரிவுகளில் இணைக்கப்படல் வேண்டும்.
  • காப்புரிமை காரணமாகப் பகிர்வதற்குத் தடை உள்ளவற்றை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகள், ஆக்கங்கள், பதிவுகள் முழுமையாக இணைக்கப்படல் வேண்டும். விளம்பரக் கட்டணம் செலுத்திப் பதியப்படும் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • இணைக்கப்படுபவை யாழ் கள உறுப்பினர்களின் சுயமான பதிவு இல்லையாயின் மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
  • சிறுவர் துஷ்பிரயோகம், பெண்ணடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை ஊக்குவிக்கும் பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • அப்பட்டமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வக்கிரமான ஆக்கங்கள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள், சாமியார்கள் வழிபாடு சம்பந்தமான பதிவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். தீவிர நம்பிக்கையை ஊக்கப்படுத்தாமல் பொழுதுபோக்காக அமையும் பதிவுகளுக்கு இவ்விதி தளர்த்தப்படுகின்றது.
  • மானுடம், மக்கள் நலன், நன்நெறி, பண்பாடு, சீர்திருத்தங்கள், தனிமனித ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்து மக்களை நெறிப்படுத்தும் மெய்யியல்/இறையியல் சம்பந்தமான பதிவுகள் ஊக்குவிக்கப்படுகின்றது. எனினும் மதப் பிரச்சாரம் செய்யும் வகையிலான பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.
  • யாழ் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகளை நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலம் அறியத்தருவது விரும்பப்படுகின்றது. இது கருத்துக்களத்தின் தரத்தினைப் பேண உதவும்.

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் செய்திகள் சம்பந்தமான விதிகள்:

  • செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.
  • யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.
  • செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.
  • பார்வையாளர்களைக் கவரும் வகையில் இணைக்கப்படும் செய்திகளின் தலைப்பை மாற்றுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஆர்வத்தைத் தூண்டும் வினோதச் செய்திகள் செய்தித் திரட்டி பிரிவில் இணைக்கப்படல் வேண்டும். எனினும் வக்கிரமான செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் ஆக்கங்கள் சம்பந்தமான விதிகள்:

  • யாழ் கள உறுப்பினர்கள் சுயமான ஆக்கங்களை பதிவது விரும்பப்படுகின்றது.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்கள், படைப்புக்களிற்கு சக கள உறுப்பினர்கள் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஆதரவு கொடுத்து ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது.
  • பிற தளங்களில் இருந்து இணைக்கப்படும் ஆக்கங்களின் உள்ளடக்கம் யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

7. சமூகவலைத்தள இணைப்புக்கள்
சமூகவலைத் தளங்களில் (முகநூல், டுவிட்டர் போன்றவை) இருந்து இணைக்கப்படும் பதிவுகள் தொடர்பான விதிகள்:

  • சமூகவலைத் தளத்தில் இருந்து இணைக்கப்படும் பதிவுகள் அவ்வலைத் தளங்களின் உறுப்புரிமை இல்லாதவர்களாலும் பார்க்கக் கூடியதாக இருத்தல்வேண்டும்.
  • இணைக்கப்படும் பதிவுகளை உறுதிப்படுத்த அப்பதிவுகளுக்கு நேரடி இணைப்புக் கொடுக்கப்படல் வேண்டும்.
  • சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
  • தனிப்பட்டவர்களின் சமூகவலை தளங்களின் நிலைத் தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும். இத்தகைய அனுமதிகளை சமூகவலைத் தளங்களினூடாகப் முன்கூட்டியே பெற்று வைத்திருப்பது விரும்பத்தக்கது.
  • தனிப்பட்டவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விழாக்களின் போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள், அவர்களது தனிப்பட்ட விபரங்கள் என்பனவற்றை இணைப்பதும் பகிர்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மக்கள் போராட்டம் மற்றும் கவனியீர்ப்பு போன்ற விடயங்களையும் நிகழ்வுகளையும் யாழ் இணையத்தின் பொதுவான கள விதிகளுக்கு ஏற்ப இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: உதாரணமாக மாணவர் போராட்டங்கள், நினைவு தின ஒன்றுகூடல்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள், மாவீரர்களின் முக்கிய நிகழ்வுகள் போன்றன.
  • சமூக வலைத்தளங்களில் இணைக்கப்படும் ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைக்கப்படுபவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். பார்க்க: விதி எண் இ) 8.
  • மத வழிபாட்டுக்குரிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றை இணைப்பது அனுமதிக்கப்படுகின்றது. எ.கா: கோயில்/தேவாலயத் திருவிழாக்களின் புகைப்படங்கள், காணொளிகள், மதங்களின் நன்நெறிக் குறிப்புகள் போன்றவை.
  • யாழ் கள உறுப்பினர் ஒருவர் தனது சமூகவலைத் தளத்தில் பகிர்வதை யாழ் கருத்துக்களத்திலும் பகிர விரும்பின் அவை யாழ் களவிதிகளுக்கு உட்பட்டதாக இருப்பின் அனுமதிக்கப்படும். எனினும் இவ்வாறு பகிர்வதன் மூலம் ஏற்படும் விளைவுகளுக்கு யாழ் களம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் உள்ள ஆக்கங்களையும் கருத்துக்களையும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் இணைத்து யாழ் களத்தின் வளர்ச்சிக்கு உதவுவது விரும்பப்படுகின்றது. எனினும் நாற்சந்திப் பகுதி கள உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கக்கூடியவாறு உள்ளதால் இப்பகுதியில் உள்ள பதிவுகளை சமூகவலைத் தளங்களில் பகிர்வது கூடாது.

8. படங்கள்/காணொளிகள்
யாழ் கருத்துக்களத்தில் பதியப்படும் கருத்துக்களோடும் ஆக்கங்களோடும் இணைக்கப்படும் படங்கள்/காணொளிகள் தொடர்பான விதிகள்:

  • காப்புரிமை காரணமாக பகிர்வதற்குத் தடை உள்ள படங்கள்/காணொளிகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட அடையாளங்களைக் காட்டும் படங்களையும், காணொளிகளையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களினதும் நண்பர்களினதும் படங்களையும், காணொளிகளையும் இணைப்பதைக் இயலுமானவரை தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கள உறுப்பினர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் என்பனவற்றை அவர்களின் எழுத்துமூல முன் அனுமதி இன்றி பிரசுரித்தல் ஆகாது.
  • கள உறுப்பினர்களுக்குச் சொந்தமற்ற படங்கள்/காணொளிகள் இணைக்கப்படும்போது அவற்றைப் பகிர்வதற்கு அனுமதி உள்ளதா என்று சரிபார்க்கப்படல் வேண்டும். இவ்விதி அரசியல், சினிமா மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் படங்கள், காணொளிகளுக்கு தளர்த்தப்படுகின்றது.
  • குழந்தைகள், சிறுவர்களது படங்கள்/காணொளிகள் இணைப்பதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்று சரி பார்க்கவேண்டும்.
  • அப்பட்டமாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • வக்கிரங்களையும், வன்முறையையும் தூண்டும் படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது.
  • சடலங்களிலும் காயமடைந்து இருக்கும் உடல்களிலும் பாலுறுப்புகள் மறைக்கப்பட்டே படங்கள்/காணொளிகள் இணைக்கப்படல் வேண்டும். இவ்விதி பிற தளங்களில் இருந்து எடுத்து ஒட்டப்படும் படங்களுக்கும், காணொளிகளுக்கும் பொருந்தும்.
  • சிறுவர்கள் மற்றும் குழந்தைகளினது நிர்வாணப் படங்களும், காணொளிகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • செய்திகளோடு தொடர்புடையதாக இணைக்கப்படும் படங்களில் சடலங்கள், இரத்தம் போன்றன இடம்பெற்றிருந்தால் - தலைப்பில் அது பின்வருமாறு குறிப்பிடப்படல் வேண்டும்:
    • எ.கா.: [எச்சரிக்கை!] சுனாமியும் அதன் வடுக்களும்
  • படங்களினதும் காணொளிகளினதும் மூலம் குறிப்பிடப்படல் வேண்டும். (பார்க்க: மூலம்)
  • காணொளிச் செய்திகள் இணைக்கப்படும்போது அச்செய்தியின் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கத்தை இயன்றவரை சுருக்கமாகக் குறிப்பிடுதல் வேண்டும்.

9. மூலம்

  • யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகள், பதிவுகள், ஆக்கங்கள் வேறு இடத்திலிருந்து பெறப்பட்டதாயின் மூலம் கண்டிப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்.
    • அது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
    • நேரடி மூல இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.
  • மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது இணைப்பவரது சொந்த ஆக்கம் இல்லை என்று குறிப்பிடல் வேண்டும்.
  • அதேபோல், யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:
    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்தை எழுதிய கருத்துக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

10. பொறுப்பு

  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு யாழ் இணையம் பொறுப்பேற்காது.
  • யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவற்றை எழுதும் உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும், விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  • யாழ் களத்தில் கள உறுப்பினர்களால் அறியத்தரப்படும் மற்றும் யாழில் விளம்பரம் செய்யப்படும் அமைப்புகள், நிதி நிறுவனங்கள் / மனித நேய அமைப்புகள் என்பனவற்றுடனான கள உறுப்பினர்களின் தனிப்பட்ட தொடர்புகளுக்கும் அவர்களுக்கிடையான கள உறுப்பினர்களின் தொடர்பாடலின் விளைவுகளுக்கும் அவரவரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

 

ஈ) திருத்தங்கள்

1. கருத்துகளை திருத்துதல்

  • கள உறுப்பினர்கள் தமது பதிவில் கருத்துகளில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மற்றும் தவறான மூலம் என்பனவற்றை மட்டுமே திருத்தலாம்.
  • சக கள உறுப்பினர்கள் பதில் கருத்துக்களை வைத்தபின்னர் தாம் எழுதிய கருத்துகளை நீக்குவதும் அல்லது பிரதான கருத்தில் மாற்றத்தைச் செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கள உறுப்பினர்கள் நிர்வாகத்தின் அனுமதி இன்றி திரியில் எழுதியவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்குதல் கூடாது.
  • கள உறுப்பினர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றை பூட்ட வேண்டுமாயின் மட்டுறுத்தினர்களுக்கு தனிமடலில் அறியத் தருதல் வேண்டும். மட்டுறுத்தினர்களின் இறுதி முடிவே செயல்படுத்தப்படும்.

2. மட்டுறுத்தப்பட்ட கருத்துகள்:

  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக திரிகளில் கருத்துக்கள் பதிவது தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஏதாவது ஒரு நியாயமான காரணத்திற்காக ஒருவரின் சுயபடைப்பு திருத்தப்படவோ அல்லது சில பகுதிகள் நீக்கப்படவோ வேண்டி ஏற்படின், அப் படைப்பை எழுதியவரிடமே அதற்கான பொறுப்பு வழங்கப்படும். அவ்வாறு படைப்பாளி அதனை திருத்தும் வரைக்கும் அப்படைப்பு நிர்வாகத்தினரைத் தவிர வேறு எவரும் பார்க்க முடியாத பகுதிக்கு நகர்த்தப்பட்டு, படைப்பாளி திருத்தம் செய்து அனுப்பிய பின்னர் மூன்று நாட்களுக்குள் மீண்டும் வழமையான இடத்தில் இணைக்கப்படும்.
  • மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாக முரண்பாடுகள் இருப்பின் மட்டுறுத்தினர்களிடம் முறைப்பாட்டு முறை மூலமாக அல்லது தனி மடலில் விளக்கம் கோரலாம்.
  • மேற்கூறிய விடயத்துக்கு மட்டுறுத்தினர்கள் பொதுவாக 12 இல் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிப்பர். அவ்வாறு பதில் அளிக்கவில்லையாயின் அதனையும் குறிப்பிட்டு நாற்சந்திப் பகுதியில் மட்டும் தனித் திரி திறந்து மட்டுறுத்தியதற்கான காரணங்களை தெளிவுபடுத்தக் கேட்கலாம்.

 

உ) திண்ணை
யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்:

  • திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும்.
  • தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை யாழ் களத்திற்கு வெளியே கொண்டு செல்வது, பரப்புவது, பிரதியிடுவது போன்றன முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுதலும் ஆகாது.
  • திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் உரையாடும் சக கள உறுப்பினரின் அடையாளங்களை கோருவதும் (பெயர் / பால் / முகவரி / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • ஒரு திரியில் எழுதிய விடயத்தை அப்படியே கொண்டு வந்து திண்ணையில் இடுவது தவிர்க்கப்படல் வேண்டும். இதற்குப் பதிலாக எழுதிய விடயம் உள்ள திரியின் இணைப்பைக் குறிப்பிடலாம்.
  • யாழ் கருத்துக்களத்தில் இருந்து நீக்கப்பட்ட எந்தக் கருத்தையும் / பதிவையும் கண்டிப்பாகத் திண்ணையில் இடுதல் கூடாது.
  • நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக நிர்வாகத்தினரைத் தவிர ஏனையோருடன் திண்ணையில் வைத்து உரையாடுவதும் கலந்தாலோசிப்பதும் தவிர்க்கப்படல் வேண்டும். பார்க்க: விதி எண் ஈ) 2.
  • கள உறுப்பினர் ஒருவர் திண்ணை விதிகளை மீறியது அவதானிக்கப்பட்டால் அல்லது நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டால் பின்வருமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்.
    • முதலாவது மீறல்: திண்ணை தொடர்பான விதிகளை அறிவுறுத்தும்/நினைவூட்டும் வகையில் நிர்வாகத்தால் குறிப்பிட்ட கள உறுப்பினருக்கு தனிமடல் மூலம் எச்சரிக்கை வழங்கப்படும் .
    • இரண்டாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் ஒரு மாதம் தடை செய்யப்படுவார்.
    • மூன்றாவது மீறல்: குறிப்பிட்ட கள உறுப்பினர் திண்ணையில் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.

 

ஊ) நடவடிக்கைகள்

கள உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் சந்தர்ப்பங்களும் முறைகளும் பற்றிய விதிகள்:

  • மீறப்படும் கள விதியின் அடிப்படையில் ஒருவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். அவரது கருத்துக்கள நடத்தையில் முன்னேற்றங்கள் இருக்குமிடத்து எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் எட்டுக்கு மேற்பட்ட (8+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அவர் உடனடியாகத் தானியங்கி மூலமாகவோ அல்லது மட்டுறுத்தினர் மூலமாகவோ நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • கள உறுப்பினர் ஒருவர் ஐந்திற்கு மேற்பட்ட (5+) எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றால் அன்றிலிருந்து ஒரு மாதத் தடை வழங்கப்படும்.
  • சக கள உறவுகளை மிரட்டினாலோ, ஆபாசமாக தனிமடல் அனுப்பினாலோ அல்லது யாழின் விதிகளை அப்பட்டமாக மீறினாலோ உடனடியாக குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • சக கள உறுப்பினர்களை யாழுக்கு எதிராக இயங்குமாறு கருத்துக்களத்தில் நேரடியாகவோ, தனிமடல் மூலமாகவோ கோரினாலோ அல்லது பிற சமூகவலைத் தளங்கள், தொடர்பாடல் சேவைகள் மூலம் கோரினாலோ உடனடியாகக் குறிப்பிட்ட உறுப்பினர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.
  • குடும்ப உறவுகளை இழுத்து இழிவாகக் கருத்து எழுதுகின்றவருக்கு அன்றிலிருந்து உடனடியாக ஒரு மாதத் தடை வழங்கப்படும். மீண்டும் ஒரு முறை மீறினால் நிரந்தரமான தடை வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் வசைச் சொற்கள் (தூஷண வார்த்தைகள்), இழிவான கெட்ட வார்த்தைகள், பாலியல் ரீதியிலான வசைகள் போன்றவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதினால் உடனடியாக ஒரு மாதம் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டு வரப்படுவார். இரண்டாவது முறை மீறினால் ஒரு மாதத் தடையும், மூன்றாவது முறை மீறினால் நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • வெறுமனே சீண்டுவதற்காக தொடர்ந்து எழுதுகின்றவர்கள் மீதும், ஒருவர் ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை வைக்கும்போது பதிலுக்கு களவிதிகளை மீறும் கருத்துக்களை வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் எச்சரிக்கைப் புள்ளிகளும், பின் மட்டுறுத்துனரின் பார்வைக்குள் உட்படுத்தப்படுவதும், அதன் பின் தடைகளும் வழங்கப்படும். இவற்றில் எத்தகைய நடவடிக்கை முதலில் எடுக்கப்படும் என்பது மட்டுறுத்துனரின் முடிவுக்குட்பட்டது.
  • நிர்வாகத்தின் வேண்டுகோள்களையும், அறிவுறுத்தல்களையும் தொடர்ச்சியாக மீறுபவர்கள் மீதும் ஒரு மாதத் தடையும், மீண்டும் ஒரு முறை மீறுபவர்களுக்கு நிரந்தரமான தடையும் வழங்கப்படும்.
  • கள உறுப்பினர் ஒருவர் தனது கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி நீக்கினால் அல்லது நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்ட தனிமடல் அல்லது நடவடிக்கை சார்ந்த விடயங்களைப் பகிரங்கப்படுத்தினால் அவர் தடை செய்வதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தவராகக் கருதப்பட்டு தடை செய்யப்படுவார்.
  • பிறரின் ஆக்கங்களை தன் சொந்த ஆக்கமாக பிரசுரித்தால் முதலில் எச்சரிக்கை வழங்கப்படும். மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அவர் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார்.

எச்சரிக்கைப் புள்ளிகள் நீக்குவது தொடர்பான நடைமுறை:

  • எச்சரிக்கைப் புள்ளிகள் எடுத்தவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து மூன்றாவது மாதத்தின் பின்னரிலிருந்து ஒவ்வொரு எச்சரிக்கைப் புள்ளி குறைக்கப்படும்.
  • ஆறு மாதத்திற்குள் எதுவித எச்சரிக்கைப் புள்ளிகளும் எடுக்காதவிடத்து அனைத்து எச்சரிக்கைப் புள்ளிகளும் நீக்கப்படும். இந்நடைமுறை ஒவ்வொரு உறுப்பினரதும் நடத்தைகளில் உள்ள முன்னேற்றங்கள் நிர்வாகத்தால் ஆராயப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும்.
  • நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாகத் திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.
  • இதேபோன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் யாழ் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

மேற்கூறிய அனைத்து விதிகளின் எல்லைகள் எவை என்பது மட்டுறுத்தினரின் முடிவாகவே இருக்கும். களவிதிகளை மீறும் கருத்தொன்றை எப்படித் தணிக்கை செய்வது (திருத்துவது/ஒரு பகுதியை நீக்கி *** இடுவது/முற்றாக நீக்குவது) என்பதனையும் மட்டுறுத்தினரே தீர்மானிப்பர். மட்டுறுத்தினரின் முடிவே இறுதியானது ஆகும். மேலும் களவிதிகளை மீறும் கள உறுப்பினர் ஒருவர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதனை நிர்வாகத்தினர் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பர்.

நாமார்க்கும் குடியல்லோம்

நன்றி,
யாழ் இணையம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.
    • சென்னையை இறுதி வரை திணற வைத்த குஜராத் பேட்டர்கள்: அசால்டாக வெற்றி பெற்ற டைட்டன்ஸ் பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER 31 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விஜய் சங்கர், ரஷீத் கான், ராகுல் தெவாதியா என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் சென்னை வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.   கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளாசத் தொடங்கியது. சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசனில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER   படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியபோது முகமது ஷமியின் 100வது விக்கெட் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரில் விக்கெட் எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார். முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது. டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது விக்கெட்டை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆறாவது ஓவர் முடிவில் ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசினார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது ஓவரில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார். நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 கேன் வில்லியம்சன் காயம் பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான். ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார். 13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ரன்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள். அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது ஓவரில் 92 ரன்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே ஓவரில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார். கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ரன் கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பேட்டிங்கை நிறைவு செய்தது. பட மூலாதாரம்,ANI இம்பாக்ட் ப்ளேயர்கள் இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கினர். 179 ரன்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார். மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது ஓவரில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது ஓவரில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது. பத்தாவது ஓவரில் குஜராத் அணிக்கான அடுத்த விக்கெட் விழுந்தது. நான்காவது ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது விக்கெட்டை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான விக்கெட்டாகவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER ஷுப்மன் கில் அதிரடி அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஷுப்மன் கில் 11வது ஓவரில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தொடங்கினார். தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது ஓவரில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். “சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் குறித்துக் குறிப்பிட்டனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது. தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது ஓவரில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது. தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்தார். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான் அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் பேட்டிங் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது. 15 ஓவர் இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. தீபக் சாஹர் 17வது ஓவரில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது. இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது ஓவரில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER மூன்றாவது பந்தில் ஒரேயொரு ரன்னை கொடுத்து ரன் ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக வி்ஜய் சங்கர் குறைத்தார். ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா. இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது ஓவரில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் விக்கெட்டை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பெரியளவு ரன் எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது ஓவரில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c3g5998v5g1o
    • வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு Published By: T. SARANYA 01 APR, 2023 | 09:55 AM வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான  கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால்  பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள்  வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/151878
    • "இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.   சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர். ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார். விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'31 மார்ச் 2023 விடுதலை படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் - தமிழகத்தில் நடந்த உண்மைக் கதையா?31 மார்ச் 2023 சென்னை அணிக்கு தண்ணி காட்டிய சுப்மன் கில் - சொதப்பிய சிஎஸ்கே இம்பாக்ட் ப்ளேயர்2 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் கதை என்ன? அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது. அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி. உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை. அரசியல் தலைவர்கள் பாராட்டு பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார். அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,ALPHONSE PUTHREN/TWITTER "இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார். குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார். “நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,BARADWAJ RANGAN/TWITTER விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். “நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c7290955njlo
    • ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம் Published By: Nanthini 01 Apr, 2023 | 11:11 AM (எஸ்.றொசேரியன் லெம்பேட்)  இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார். மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இந்த போராளி, தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார். 1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார். ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால்  எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது.  இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார்.  இவர் தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் மகனுக்கு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்.  மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார். தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும்.  வாழ்வாதார உதவிகளை வழங்க விரும்பாவிடினும், தனது மகன் பார்வை பெறுவதற்கான சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளையாவது யாரேனும் வழங்க முன்வாருங்கள் என தமிழ் கீதன் கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.         https://www.virakesari.lk/article/151879
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.