Jump to content

5000 பதிவுகளை இட்ட பெரும் அன்பிற்குரிய அண்ணன் மருதங்கேணியை வாழ்த்துவோம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மருதங்கேணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மேலும் பல்லாயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள்...உண்மையைச் சொன்னால் உங்கள் எழுத்துக்களை வாசிக்கிறது எனக்கு சரியான கஸ்டமாயிருக்கிறது[எனக்கு அறிவு இல்லை என்டது வேற விசயம் :D.].கொஞ்சம் எனக்கும் விளங்க கூடின மாதிரி எழுதினால் நல்லது.அடுத்தது தயவு செய்து ஆட்டைப் பற்றி எழுதச் சொன்னால் ஆட்டைப் பற்றி மட்டும் எழுதவும். தேசியம் வளக்கிறேன் அது,இது என்று உண்மையை தெரிந்து கொண்ட நீங்கள் அதற்கு புறம்பாக எழுத வேண்டாம்.அது உங்களை நீங்களே ஏமாத்திறத்திற்கு சமன்.நன்றி

எமக்கு தெரிந்ததைதான் எழுதமுடியும் 
தமிழில் எழுதுவது சோமாலியர்களுக்கு புரியவில்லை என்பதற்காக இனி நாடு நாடக நான் மொழிகள் கற்றுக்கொண்டு திரிந்தால் எனது வாழ்வை யாரு பார்ப்பது? 
ஆட்டை விட்டால் ஆட்டை பற்றி எழுதலாம்....
ஆடு மாதிரி ஒன்றை விட்டால் ஆடிக்கொண்டுதான் எழுதமுடியும்.
அப்படி இருக்கும் இடங்களில் அதை சுட்டி காட்டினால்தான் அதை பற்றி பேசமுடியும்.
ஆட்டு பன்னைகாறார் மாதிரி எந்த சம்மந்தமும் இல்லாமல் இந்த திரியில் கொண்டுவந்து ஒரு ஆட்டை விட்டு விட்டு போனால் நான் என்ன செய்யமுடியும்?
 
தேசியம் வளர்கிறேன் என்று நீங்கள் எழுதியதை வசித்தும் ஒரே புல்லரிப்பு.
எங்கே நாட்டுக்கு உதவாமல் இப்படியே இறந்து விடுவோமா எனும் ஒரு கவலை எப்போதும் இருக்கும். இனி இல்லை. 
 
எனக்கு உரு  கொடுத்த  வாழ்வளித்த தேசங்கள் மீது அளவுகடந்த காதல் இருக்கிறது. அந்த தேசங்கள் வானுயர வளர வேண்டும் எனும் ஆசை இருக்கிறது.
தாயை விடமும் தாய்மொழியை கூடதலக நேசிக்கிறேன். அதற்கு யாரும் களங்கம் ஏற்படுத்தினால் அப்படியே விட்டு விட்டு போக முடிவதில்லை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் புரபைலை பார்த்த போது ஒன்பதரை வருடங்களாக யாழில் வெற்றி நடை போடுகிறீர்கள் என்பது தெரிந்தது. இது ஒரு நீண்டகாலம். அதற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 
 
உங்கள் அரசியல் தெளிவின் ரசிகன் நான். புலிப் பயங்கர வாதிகள் என்ற என் நினைப்பையே மாற்றியிருக்கிறீர்கள். அவர்களை என்னால் போராளிகளாகப் பார்க்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் தான்.
 
மிக மிக ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாகச் சொல்லி விடுவீர்கள். அண்மையில் கூட உலகத்தில் உள்ள உயிர்கள் ஒன்றை ஒன்று பிடித்துச் சாப்பிடுவதே இயற்கை என்று பதிந்திருந்தீர்கள். எத்தைகைய ஒரு தத்துவம் அது. அருமையிலும் அருமை. அதை நச்சென்று ஒரு வரியில் சொல்லியது அதைவிட அருமை. உங்கள் பதிவுகளை வாசித்து என் அறிவை வளர்த்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.
 
ஏறக்குறைய ஐந்து வருடங்களிற்கு முன்பு நீங்கள் இங்கு சொல்லிய ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தாங்கள் பண்ணைப்பால மதகின் கீழ் இந்திய ராணுவத்துடன் மோதல் ஆரம்பித்த போது ஒழிந்திருந்து வெறும்  லெமன் பஃப் விஸுக்கோத்துகளுடனேயே நாட்களைக் கழித்ததாக எழுதியிருந்தீர்கள். அன்று அதை நான் வசித்த போது எனக்குத் தானே நான் சொல்லிக் கொண்டது.. "மகனே ! ஈழப் போராட்ட வரலாற்றை இவர் போன்ற ஒரு  தியாகியிடம் இருந்து தான் அணு அணுவாகக் கற்றுக் கொள்ளவேண்டும்!"
 
தங்கள் புகழ் பாடி ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற லட்சியம் என்னிடம் இருக்கிறது.
 
நிச்சியமாக..!!! அது ஒரு நாள் நிறைவேறும்.

உங்களின் உள்மன வெள்ளை பாலா? கள்ளா? தெரியவில்லை.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
 
பண்ணை பலம்பற்றி எழுதியது ....
அது 1990இல் நடந்தது. அது ஒரு முஸ்லீம் நண்பர் எமது நட்பை தங்கள் துரோகத்திற்கு பாவித்திருந்தார். அவருடைய நண்பர்களுக்கும் கோட்டை இராணுவத்திற்கும் வோக்கி தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
இராணுவம் புலிகள் என்றுதான் எம்மை தொடராக தாக்கி கொண்டே இருந்தார்கள் சினைப்பர் அடித்துக்கொண்டே இருந்தார்கள். மற்ற கரையில் கற்று திசை என்பதால் தண்ணீர் மட்டம் கூடி அலையும் அடித்துக்கொண்டு இருந்தது பாசி தன்மை என்பதால் சறுக்கி கொண்டே இருந்தது.
புலிகள் பிடித்து சென்றபோதுதான் முஸ்லீம் நண்பர் அவர்களுக்கு வேறு கதை சொல்ல தொடங்கினார். 
(நான் கூட விடயம் இவளவு பாரதுரமாக இருக்குமென்று அப்போது எண்ணவில்லை)
புலிகளுக்கு நல்ல ஒரு தரவு அது ஏனோ தானோ என்று விட்டுவிட்டார்கள். அல்லது முளையிலேயே கிள்ளி இருக்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பையன்
தமிழரசு
தமிழ்சூரியன்
புங்கைஊரான் 
ஆதவன் 
நிலாமதிக்கா
பெருமாள் 
இசைகலைஞன் 
யாயினி
நீல பறவை
ஈசன்
ஈழபிரியன்
தமிழ் சிறியண்ணா
கறுப்பி 
வாத்தியார்
ராசவன்னியன் 
சுமேரியக்கா 
விசுகண்ணா
சுவி
அன்புத்தம்பி
தமிழினி
ராதியக்க
உடையார்
சுவைப்ரியன்
 
எலோருக்கும் எனது நன்றிகள்!
தொடர்ந்தும் பயணிப்போம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மருதங்கேணியில் பிடித்தது என்னவென்றால் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பட்டென்று சொல்லும் குணம்தான். இதில் இடம், பொருள், ஏவல், சேவல் எல்லாம் பார்ப்பதில்லை. தேசியவாதி என்ற நடிப்பும் இல்லை.

போராட்ட காலங்களில் அணிலளவு கூட உதவி செய்யாமல், அவலங்களைக் காணாமல் இருக்கும் தேசியச் செயற்பாட்டார்களோடு ஒப்பிடுகையில் மருதங்கேணியின் அனுபவம் அவருக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளது. மக்களுக்காக மரணித்தவர்களை கேலியாக்கக்கூடாது என்று ஒத்துக்கொள்கின்றேன். அதே நேரத்தில் தமிழர்களின் தோல்விக்கான அரசியலை விமர்சிக்காமல் விடுவது மீண்டும் மீண்டும் அதே தவறுகளை விடுபவர்களை அத் தவறுகளை எதுவித தயக்கமுமின்றித் தொடர அனுமதிப்பது போலாகும். இதில் சிலவேளை வித்தியாசமான பார்வை இருக்கலாம்.

இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துக்கள். :)

விமர்சனங்கள் நிச்சயம் வேண்டும்.
 
கடவுளை நம்புவோர் இந்த உலகில் எத்தனை கோடிபேர் இருக்கிறார்கள்? தனது கடவுள்தான் உண்மை உனது பொய் என்று அப்பப்ப தங்களுக்குள் அடிபட்டும் கொள்கிறார்கள்.
எனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை.....
ஆனாலும் பைபிள் படிக்கிறேன்  கீதை படிக்கிறேன் இஸ்லாம்பற்றி படிக்கிறேன்.
அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் எனபது ரொம்ப முக்கியம்.
 
தற்போதைய புலிகள் பற்றிய விமர்சனங்கள்.
ஏற்கனவே முடிவு எடுத்தவர்கள் ..... புலிகளுக்கு எதிரானவர்கள். என்ற முடிவில் இருந்துகொண்டு .... தமது நிலைபாட்டை திரும்ப திரும்ப நிஜாய படுத்த முயற்சி செய்கிறார்களே தவிர. உண்மையில் விமர்சனம் என்று அதை எப்படி கொள்வது?
 
புலிகள் போல் இன்னொரு ஆயுத போர் சாத்தியமில்லாத போது. பாரிய ஆயுத போருக்கு முகம்கொடுத்த புலிகளின் பிழைகளை பற்றி கண்டறிந்து சரியாக நடக்கபோகிறோம் என்பது வெறும் பம்மாத்து.
புலிகள் அரசியல் செய்யவில்லை ........... என்று முதல் வரியில் சொல்லிக்கொண்டு 
இரண்டாம் வரியில் விட்ட பிழைகளை திருத்துகிறோம் ... என்றால்?
 
உங்களின் பாதை அரசியல் பாதை.
புலிகளின் பாதை ஆயுத பாதை ..
உங்களின் நோக்கம்தான் என்ன?  (நீங்கள் இல்லை விமர்சனம் என்று விளக்கு பிடிப்போர்).
Link to comment
Share on other sites

உங்களின் உள்மன வெள்ளை பாலா? கள்ளா? தெரியவில்லை.

கள்ளு பாதி..
பால் பாதி ..
கலந்து செய்த கலவை..
 
உண்மையில் இரண்டாவது பதிவு பகிடிக்குத்தான் எழுதினான் மருதங்கேணி. ஆனால் அதை நீங்கள் எடுத்துக் கொண்ட விதம் மனதைத் தொடுகிறது.  :(
 
இயேசு மீது மிகுந்த மதிப்பு எனக்கு இருக்கிறது. மனித குலம் கண்ட அற்புதமான ஒருவர் என்ற  மதிப்பு அவர் மேல் இருக்கிறது. அதே நேரம் நான் அவரை என் கடவுளாக ஏற்றுக் கொள்ள வில்லை. நான் வணங்கும் சிவன் கூட ஒரு மனிதர் தான். எனக்கும் சிவனுக்கும் உள்ள உறவு தனிப்பட்டது. அவரை மற்றவர்கள் கடவுளாக நினைக்க வேண்டும் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை.
 
இயேசுவை நிந்திக்க மனம் வந்ததில்லை. வரவும் மாட்டாது. அப்படியும் வருவதாயிருந்தால் என் இறைவனை நிந்தித்ததால் ஏற்பட்ட கடுங்கோபத்தின் விளைவாகவே இருக்கும். ஆனால் இதற்காக‌ மனம் பிற்பாடு மிகவும் வருந்தும்.
 
இன்று கூட அலுவலகத்தில் பைபிளைப் பற்றி கதைத்தேன். ஒரு கிறீஸ்தவ தேவலய அமைப்பைச் சேர்ந்த் ஒரு வெள்ளைக்காரர் என்னுடன் வேலை செய்கிறார். இதில் சொல்ல வேண்டிய விசயம் பைபிளைப் பற்றி எனக்குத் தெரிந்திருப்பது தான். இயேசு பிறந்த போது வந்த மூன்று பேர்கள் ( Three wise men ) தெற்கில் இருந்த வந்த தாகச் சொன்னார். நான் சொன்னது அவர்கள் கிழக்கில் இருந்து வந்ததாக. அவர் தன் மேசை லாச்சியில் இருந்த பைபிளைப் எடுத்து வாசித்தார். அதில் அவர்கள் கிழக்கில் இருந்து வந்ததாக இருந்தது.
 
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவர் அவர் விருப்பம். யாரைக் கடவுள் என்று வணங்குவதும் அவர் அவர் விருப்பம். என்னுடையது சரி உன்னுடையது பிழை என்னும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. 
 
கடவுள் என்ற தத்துவத்தில் சரி பிழை என்பது கிடையாது.

எனது மதம் இந்துமதம் ......... அதை திருத்தவேண்டும் எனும் எண்ணம் என்னிடம் இருப்பதால்.
தவறுகளை வெளிபடுத்தி எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
 
எல்லா மதமும் இப்போதைய உலகில் அடுத்தவனை எய்த்து பிழைக்கவே இருக்கிறது.
சவூதி அட்டுளீயத்திட்கும் மதத்திற்கும் ஏதும் சம்மந்தம் இருக்கிறதா??
எளிமையை கற்று கொடுத்த ஜேசுவின் கால் தூசு தனிலும் வத்திகானில் இருக்கிறதா??
இந்தியாவில் கோவிலும் பிராமணரும் உயர்கிறார்கள் ... மதத்தால் யாரவது ஒரு ஏழை வளர முடிகிறதா?
 
இந்துமதம் நேரிடையாக என்னை எனது குடும்பத்தை எனது சமூகத்தை பாதிக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து நாங்கள் மீள வேண்டும் என்பதே எனது அவா.
 
இதில் ஒரு சோகமான விடயம். எமது மதம் கற்று கொடுத்த எவளவோ அரிய விடயங்கள் இந்த பித்தலாட்டத்தால் காணாமல் போகின்றது என்பதாகும். 
Link to comment
Share on other sites

உலகத் தமிழ்ச் சனத்தொகையில் 90% க்கு மேலானவர்கள் இந்து சமயத்தவர்கள். நாங்கள் கடவுள் நம்பிக்கை மிக்கவர்கள்.
 
யாழ் தமிழர்களுடைய ஊடகம். யாழை வசிப்பவர்களில் 90% க்கு மேலானவர்கள் இந்துக்கள். இந்த 90% ஆன‌ வாசகர்களை (இந்துக்களை) புண்படுத்திக் கொண்டு யாழ் நிலைக்கப் போவதில்லை. 
 
இந்து சமயத்தை அவதூறு செய்யும், இந்துக்களைப் புண்படுத்தும் பதிவுகளை யாழ் அனுமதிக்குமாயின் வாசகர்கள் யாழுக்கு வந்து துன்பப்பட்டுக்கொண்டு போக வேண்டிய தேவை என்ன ?
 
இது சம்பந்தமாக நிர்வாகத்துடன் நேரம் வரும் போது கதைப்பேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இண்டைக்குத்தான் இந்தத்திரி என்ரை கண்ணிலை பட்டுது!!!!!!
 
வாழ்த்துக்கள் மருதங்கேணி.

photo-thumb-1409.jpg?_r=1392257341

இவ ஆர் ஆள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதருக்கு வாழ்த்துக்கள்! யாழில் நான் இணைந்த காலத்தில் winter wonderland எனப்படும் அமெரிக்க மாநிலத்தில் வாழ்ந்தேன். அண்மையில் ஒரு நாள் மருதரின் கருத்தொன்றைப் பார்த்த பின்னர் தான் அவரும் அதே மாநிலத்தில் (சில சமயம் நான் இருந்த நகரத்தில்!) இருக்கிறார் என அறிந்தேன். சில சமயம் 2009 இல் நகரத்தில் நடந்த ஒரு சில கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் மருதருடன் நான் தோள் உரசியிருக்கக் கூடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.