Jump to content

வலைப்பூக்கள்...!


Recommended Posts


வலைப்பூவெனும் வலையால்,
இணையத்தின் துணையால்,
கடலலைபோல் எழுந்தேகி...
எண்ணக்கடலின் கரை தேடலாம்!

வண்ண வண்ண வடிவங்களாய்...
எண்ணமெல்லாம் வடிக்கலாம்!
சின்னச் சின்னச் சித்திரமாய்...
எழுத்துக்களைச் செதுக்கலாம்!

காகிதத்தில் எழுதி,
கடிதங்களாய் அனுப்பி,
காத்திருந்து காத்திருந்து...
பார்த்திருக்கத் தேவையில்லை!

இணையச் சுவரில் கிறுக்கிட...
வலைப்பதிவொன்று போதுமே!
உலகமெல்லாம் பகிர்ந்திட...
வலைப்பூவுலகும் விரிந்திடுமே!

விசைப்பலகை  தடவி விரலால்,
வலைப்பூவில் தூவி வினாடிகளில்...
உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள்
எண்ணங்கள் வண்ணங்களாய்...!

எண்ணங்களை எழுத்துக்களாய்...
படைப்பவனும் பிரம்மன்தான் !
வண்ணம் தரும் வார்த்தைகளை...
வடிப்பவனும் ரவிவர்மன்தான் !!

வலைப்பூவை உருவாக்கி
எண்ணங்களை வலையாக்கி
எழுத்துக்களைத் துணையாக்கி
ஆக்கங்கள் படைத்திடுவோம்!
எம் தாய்த்தமிழை வளர்த்திடுவோம் !!


********   ********   ********    ********    ********

உங்கள் எண்ணத்துக்கு:

தமக்குத்  தோன்றும் எண்ணங்களை, உணர்வுகளை , அனுபவங்களை  கதையாய்,கவிதையாய்,  கட்டுரையாய் , ஏனைய எழுத்துக்களாய்  வடிக்கும்போது அதுவே  எழுத்தாக்கங்கள், படைப்புக்கள் ஆகிறது.
அப்படி எழுதும் படைப்புக்களை பலர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. காகிதங்களில் எழுத்தப்படும் அவை  பெரும்பாலும்  வெறும் கிறுக்கல்களாகவே கிழிந்து பின் யாருமறியாமல் அழிந்து போய்விடுகின்றன. ஆனால் அவை ஒரு காலத்தின் அடையாளங்கள்  என்பதனையும்   அவற்றின் மதிப்பையும் அப்போது உணராமல் விடுவதே அதற்குக் காரணமாகும்.
 

தற்காலத்தில்......இணையத்தின் உயரிய வளர்ச்சி எமக்கு பல இலவச வசதிகளை வழங்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று... 'வலைப்பதிவு' அல்லது 'வலைப்பூ' என அழைக்கப்படும்  "Blog" வசதியாகும்.
இலவசமாக ஒரு வலைப்பக்கத்தினை உருவாக்கி அதில் உங்கள் எண்ணங்களை எழுத்துக்களாய் பகிர்வதன்மூலம் உலகமெங்கும் உங்கள் எழுத்துக்களை மிளிரச் செய்யலாம்.

 

உங்கள் எழுத்துக்கள் வெறும் கிறுக்கல்களாக காகிதங்களில் கிழிந்து அழிந்துபோகாமல் உலகமெல்லாம் பரவ வலைப்பூவெனும் வலைப்பக்கங்கள் உங்களுக்கு கைகொடுக்கும்!
தமிழ் வளர்ப்போம்... தமிழனாய் தலை நிமிர்வோம்!
- ஒருவன் (கவிதை) -

 

அவுஸ்ரேலியா .....    விக்டோரியா மாநில கேஸி தமிழ்மன்றத்தினால் இங்குள்ள தமிழ் இளையோருக்காக வெளியிடப்படும்  "இளவேனில்" தமிழ் சஞ்சிகைக்காக  பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய  கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கவிதை. வலைப்பூவினால் எத்தனையோ பேரின் எழுத்தாற்றல் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புத்தக வாசிப்பு அலாதியான சுகம்... இருந்தாலும் மாற்றத்தை ஏற்று கொண்ட கவிதை எம்மையும் மறுப்பின்றி ஏற்று கொள்ள வைக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.