• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கவிதை

வலைப்பூக்கள்...!

Recommended Posts


வலைப்பூவெனும் வலையால்,
இணையத்தின் துணையால்,
கடலலைபோல் எழுந்தேகி...
எண்ணக்கடலின் கரை தேடலாம்!

வண்ண வண்ண வடிவங்களாய்...
எண்ணமெல்லாம் வடிக்கலாம்!
சின்னச் சின்னச் சித்திரமாய்...
எழுத்துக்களைச் செதுக்கலாம்!

காகிதத்தில் எழுதி,
கடிதங்களாய் அனுப்பி,
காத்திருந்து காத்திருந்து...
பார்த்திருக்கத் தேவையில்லை!

இணையச் சுவரில் கிறுக்கிட...
வலைப்பதிவொன்று போதுமே!
உலகமெல்லாம் பகிர்ந்திட...
வலைப்பூவுலகும் விரிந்திடுமே!

விசைப்பலகை  தடவி விரலால்,
வலைப்பூவில் தூவி வினாடிகளில்...
உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள்
எண்ணங்கள் வண்ணங்களாய்...!

எண்ணங்களை எழுத்துக்களாய்...
படைப்பவனும் பிரம்மன்தான் !
வண்ணம் தரும் வார்த்தைகளை...
வடிப்பவனும் ரவிவர்மன்தான் !!

வலைப்பூவை உருவாக்கி
எண்ணங்களை வலையாக்கி
எழுத்துக்களைத் துணையாக்கி
ஆக்கங்கள் படைத்திடுவோம்!
எம் தாய்த்தமிழை வளர்த்திடுவோம் !!


********   ********   ********    ********    ********

உங்கள் எண்ணத்துக்கு:

தமக்குத்  தோன்றும் எண்ணங்களை, உணர்வுகளை , அனுபவங்களை  கதையாய்,கவிதையாய்,  கட்டுரையாய் , ஏனைய எழுத்துக்களாய்  வடிக்கும்போது அதுவே  எழுத்தாக்கங்கள், படைப்புக்கள் ஆகிறது.
அப்படி எழுதும் படைப்புக்களை பலர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. காகிதங்களில் எழுத்தப்படும் அவை  பெரும்பாலும்  வெறும் கிறுக்கல்களாகவே கிழிந்து பின் யாருமறியாமல் அழிந்து போய்விடுகின்றன. ஆனால் அவை ஒரு காலத்தின் அடையாளங்கள்  என்பதனையும்   அவற்றின் மதிப்பையும் அப்போது உணராமல் விடுவதே அதற்குக் காரணமாகும்.
 

தற்காலத்தில்......இணையத்தின் உயரிய வளர்ச்சி எமக்கு பல இலவச வசதிகளை வழங்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று... 'வலைப்பதிவு' அல்லது 'வலைப்பூ' என அழைக்கப்படும்  "Blog" வசதியாகும்.
இலவசமாக ஒரு வலைப்பக்கத்தினை உருவாக்கி அதில் உங்கள் எண்ணங்களை எழுத்துக்களாய் பகிர்வதன்மூலம் உலகமெங்கும் உங்கள் எழுத்துக்களை மிளிரச் செய்யலாம்.

 

உங்கள் எழுத்துக்கள் வெறும் கிறுக்கல்களாக காகிதங்களில் கிழிந்து அழிந்துபோகாமல் உலகமெல்லாம் பரவ வலைப்பூவெனும் வலைப்பக்கங்கள் உங்களுக்கு கைகொடுக்கும்!
தமிழ் வளர்ப்போம்... தமிழனாய் தலை நிமிர்வோம்!
- ஒருவன் (கவிதை) -

 

அவுஸ்ரேலியா .....    விக்டோரியா மாநில கேஸி தமிழ்மன்றத்தினால் இங்குள்ள தமிழ் இளையோருக்காக வெளியிடப்படும்  "இளவேனில்" தமிழ் சஞ்சிகைக்காக  பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய  கவிதை

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான் கவிதை. வலைப்பூவினால் எத்தனையோ பேரின் எழுத்தாற்றல் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

புத்தக வாசிப்பு அலாதியான சுகம்... இருந்தாலும் மாற்றத்தை ஏற்று கொண்ட கவிதை எம்மையும் மறுப்பின்றி ஏற்று கொள்ள வைக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • முதலில் அடிமைகள் மாற்று இனத்தவருக்கு, இப்ப அடிமை எம்மினத்துகே, விடுதலை மக்கள் எழுச்சியில்தான் 
  • சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான்கூட மூன்றாம்நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்கிறார்கள். ஆனால் ஐந்தாம் நிலையில் இருந்த சுமந்திரன் ஒரே இரவில் இரண்டாவது நிலைக்கு வந்து அற்புதம் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இது எப்படி நிகழ்ந்தது என்று சசிகலா ரவிராஜ் மட்டுமல்ல சுமந்திரனின் ஆதரவாளர்கள்கூட திகைத்து நிற்கிறார்கள். இங்கு வேடிக்கை என்னவெனில் “சுமந்திரன் நேர்மையானவர். அவர் மோசடி செய்யவில்லை” என்று அவரின் விசுவாசிகளால்கூட கூற முடியவில்லை. மாறாக, இலங்கை தேர்தல் திணைக்களம் நேர்மையானது. அதில் மோசடி செய்ய முடியாது என்றே கூற முற்படுகிறார்கள்.  
  • வாழனும் என்று நினைத்து விட்டால் வாழும் இடத்தை பற்றி கவலை கொள்ளாதே..
  • தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் சாலை நல்ல கடந்து வாடி  
  • கேரளா விமான விபத்து: சிகிச்சைபெற்று வருபவர்களில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்   வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.     விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   நேற்றிரவு முதல் இன்று காலை அதிகாலை வரை நடந்த மீட்புப் பணிகளை அடுத்து தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.   இந்த நிலையில், விமான விபத்து விசாரணை பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி என்றழைக்கப்படும் டிஜிட்டல் பிளைட் ரெக்கார்டரை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/08172129/Kerala-plane-crash-In-those-receiving-treatment-The.vpf