• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • இவர்களுடைய  முதலீடே  இனவாதம். அப்போ எப்படி இனவாதம் பேசாமல் அரசியல்  செய்வார்கள்? உங்களுக்கு வாக்களிக்க எமக்கு விருப்பம் இருந்தாலும் உங்கள் கடந்த கால செயட்பாடுகள் எம்மை தடுக்கின்றன. வடக்கு கிழக்கை பிரித்தது , தமிழ் மக்கள் கோதாவால் கொலை செய்யப்படும்போது  அதட்கு அனுமதியளித்தது etc etc . நீங்களும் அப்படியான ஒரு அரசியலை , இனவாத அரசியலை செய்து பாருங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கிறார்களா என்று? 
  • எம்மீதான அழிவினை நாமே வலிந்து எம்மீது போர்த்திக்கொண்டதான கோபம் இருக்கிறது எனக்கு. இன்று இக்கேள்வியைக் கேட்கும்நான்கூட, 2005 இல், “பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று காலத்தைக் கடத்தாமல், உடனேயே சண்டையைத் தொடங்கி அடிச்சு முடிக்கவேணும் “ என்று பேசியதும் எழுதியதும் நினைவிலிருக்கு.  புலிகளின் பலம் மீதான எமது அதீத நம்பிக்கைகளும்,  போர் தொடங்கிய சிறு காலத்திலேயே புலிகள் ராணுவத்தை துவசம் செய்துவிடுவார்கள் என்கிற நப்பாசையும் தலைக்கேறி, போர் மமதையில் நாம் இருக்கச் சிங்களமும் சர்வதேசமும் போட்ட கணக்குகள் எதுவுமே எமது எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டிருந்தால் இன்று கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்களும் இருந்திருப்பார்கள், கூடவே புலிகளும் இருந்திருப்பார்கள்.  வெறுமனே, “எமது அவலங்களைச் சர்வதேசத்தின் கண்களுக்குக் காட்டத்தான்” புலிகள் சுயவழிப்புத்தனமான இந்த முடிவை எடுத்து எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்தார்கள் என்று சமாதானம் செய்வதைச் சகிக்க முடியவில்லை. விட்ட இந்தத் தவறினைத் திருத்தமுடியாது. அனல், இனிமேலாவது மக்களைச் சுதந்திரமாக முடிவெடுக்க விடவேண்டும். பார்க்கலாம்.
  • தத்துவ அளவில் இவை உண்மையானாலும் இந்த பதிவுகளின் தாக்கம் ஒப்பீட்டளவில் நிராகரிக்க கூடிய மிகவும் சிறிய அளவிலானது. இங்கு நாம் ஒப்பிடுவது, ஜனாதிபதியாக வரக்கூடிய இருவருக்கிடையிலான கொள்கை, கடும்போக்கு, இனவாதம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளும், இவர்களின் தெரிவில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உள்ள பல்லாயிரம் தமிழரது வாக்குகளும் ஆகும். இவற்றின் பெறுமதி மேற்படி பதிவுகளிலும் பார்க்க மிகவும் அதிகமானது. விடுதலைப்புலிகள் போன்ற வெற்றிகரமான அமைப்புகள் தோல்வியடைவது பல தவறான முடிவுகள் அடுத்தடுத்து எடுக்கப்படுவதாலும் அந்த முடிவுகளின் தாக்கங்கள் மீள முடியாதவகையில் அழுத்தி மூழ்கடிக்க செய்வதாலுமே இடம் பெறுகிறது. மேலே காட்டப்பட்ட முடிவும் இவற்றுள் ஒன்று. இப்படியாக நானும் எழுதி இருக்கிறேன், ஆனால் இது தவறான சிந்தனை. நல்லதொரு தலைமை வேண்டும். சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல, சீனாவுக்கு கிடைத்த டெங் சா பெங் போல, தென் ஆபிரிக்காவின் மண்டேலா போல ஒருவர் வர வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம். வெற்றிடம் இருக்கிறது. வெற்றிடங்கள் நிலைப்பதில்லை. தனி நாடு என்பதிலும் பார்க்க மக்கள் நிம்மதியாக வாழும் நாடு என்று எதிர்பார்ப்பதே பயனுள்ளதும், சாத்தியமானதும் ஆகும்.
  • சரியோ பிழையோ எனக்குத்தெரியாது,  ஆனால்  ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை.  நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது,  கூறியபடி உள்ளது.   மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம்.   நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு,  தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள்.   இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ?