• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ராஜன் விஷ்வா

சுமே அக்காவின்ட கல்லா பெட்டியில காணாமற் போனது எவ்வளவு ???

Recommended Posts

எப்பவும் போல சுமே அக்காவின்ட கடையில பீர் களவாடுற கோதாரி இன்டைக்கு காலமே நல்லா பட்டைய போட்டுட்டு வந்து நல்ல பிள்ளையா 200 ரூபாய்க்கு சாமான் வாங்கிட்டு வடிவா 1000 ரூபாய எடுத்து நீட்டினான், நடக்குறத பாத்து அதிர்ச்சியான சுமே அக்கா பேச்சும் மூச்சும் வராம வாங்கி சில்லறைய தேடுனா, பத்து காசு கூட இல்ல பெட்டியில...

அட கடவுளே இவன் கிட்ட சில்லற கொடுக்கலனா அவன் இஷ்டத்துக்கு பின்னாடி வந்து பீர் எடுப்பானே என்டு வருத்தமாக, அந்த நேரம் பாத்து நம்ம வெள்ளக்கார காடு வெட்டி கத்தையா காசு எண்ணிட்டு போறத பார்த்த சுமே அக்கா, அவன் கிட்ட எட்ட நின்னபடியே சில்லற காச மாத்திட்டு வந்து அந்த பீர்பாய் கிட்ட பொருளுக்கு காசு போக மிச்சத்த நாலு தரம் எண்ணி கொடுக்க, அவன் காச வாங்கிட்டு ஹெவ் அ நைஸ் டே ஆன்ரி என்டு சொல்லிட்டு நடைய கட்ட இங்கின ஆனந்த கண்ணீர் வழிய ஆரம்பிச்சிட்டது.

அப்படா ஒருவழியா இனி பீர் களவு இருக்காது என்டு சந்தோச படக்குல்ல, கடையில காத பொழக்கற காண்டாமிருக சத்தம். யாரு நம்ம காடுவெட்டி ஜான்சன் தான். "யார ஏமாத்தர உன் ஆயரம் ரூவா கள்ள நோட்டுனு" திரும்ப கத்த, சுமே அக்கா வேகமா வீட்டுகுள்ள ஒடி கடுகு டப்பாவில தீபாவளி பலகார சீட்டுக்கு யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்த ஆயிரம் ருபாய எடுத்த அவனுக்கு கொடுக்க, அவனும் போயிட்டான். அந்த கள்ள நோட்ட திருப்பி திருப்பி பாக்க கண்ணுல ஆனந்த கண்ணீர் அருவியா கொட்டுது.

சரி நமக்கு சனி பெயர்ச்சி நல்ல இல்ல போல, தமிழ் சிறியிட்ட ஒருக்கா ராசிபலன் பார்த்தா சரியா போகுமென்டு மனசுக்க நெனசிட்டு கணக்கு பார்த்த இன்டைக்கு எவ்வளவு காசு நட்டம்னு மண்டையை உடைச்சாலும் கணக்கு பிடிபடல, வெளிய போன மனுசன் இரவைக்கு வாரகுள்ள கல்லாவில காணம போனத கண்டுபிடிக்கனும்.

எவ்வளவு நட்டமென்டு கண்டுபிடிச்சு சொல்லி சுமே அக்காவை காப்பாத்துங்கோ சாமியோவ் :D

Edited by ராஜன் விஷ்வா
  • Like 12

Share this post


Link to post
Share on other sites

translation please? :D

Share this post


Link to post
Share on other sites

2200 

Share this post


Link to post
Share on other sites

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

Share this post


Link to post
Share on other sites

1800

Share this post


Link to post
Share on other sites

1000

Share this post


Link to post
Share on other sites

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம்  கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

அவவுக்கு 200 பவுன்ட்ஸ் சாமான்தான் நட்டம்...!  அந்தக் கள்ளநோட்டை  நேற்று நடந்த கல்யாணத்துக்கு கவர்ல போட்டு மொய் எழுதிட்டா...!! :)

Share this post


Link to post
Share on other sites

1200

Share this post


Link to post
Share on other sites

ரொம்பத்தான்  குழம்புகிறார்கள்..... :lol:  :D

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

800 மீதிக்காசு கொடுத்தது

200 ஈரோக்கள் பொருட்கள்(விற்பனைவிலை)

 

மொத்தம் - 1000 ஈரோக்கள்...

 

ஈரோக்கள் என எழுதிவிட்டேன்

1000 பவுன்ட்ஸ் என வரணும்..

Share this post


Link to post
Share on other sites

நன்னா அடிச்சு மல்லு கட்டுங்கோ, நான் நாளைக்கு சொல்லுறன் :)

(சுமே அக்காவிடம் இருந்தும் காப்பாத்துங்கோ அப்படியே)

Share this post


Link to post
Share on other sites

20,000 பவுண்ட்ஸ்

Share this post


Link to post
Share on other sites

இது  தொழில் நிறுவனங்களில் அடிக்கடி நடப்பது தான்..

 

கடையை  ஆரம்பித்த புதிதில் இவ்வாறு சிலர் திரிவார்கள்

இடம் கொடுத்தால்

ஏமாந்தால் தொடர்வார்கள்

இல்லாது விட்டால் தமக்கு சிக்கலாகிவிடும் என்பதால் வரவே மாட்டார்கள்

 

இங்கு நடக்கும் ஒருவகை திருட்டு..

ஒருவர் வருவார்

இன்னொருவர் வெளியில் நிற்பார்

உதாரணமாக

5 ஈரோக்கு ஒரு பொருளை வாங்குவார்

50 ஈரோ தாளைத்தருவார்

நாம் மிகுதிப்பணம் 45 ஈரோக்களை கொடுத்ததும்

அதை கையில் எடுத்துவிட்டு

என்னிடம் 5 ஈரோக்கள் சில்லறை இருக்கு

மறந்துவிட்டேன்

இந்தா 5 ஈரோ

எனது 50 ஈரோவைத்தா என்பார்

நாம் 50 ஈரோவை வெளியில் எடுத்துவிட்டால்

5 ஈரோவைத்தந்து 50 ஈரோவை வாங்கிவிடுவார்

அதற்குள் நாம் மீதி கொடுத்த 45 ஈரோக்களை மறைத்துவிடுவார்

நமக்கும் மறந்துவிடும்

வெளியில் நின்ற நண்பர் எமக்கு வேறு ஒன்றுக்கு விலை கேட்டபடி

இவரை அவசரப்படுத்துவார்

வெளியேறி விடுவார்கள்..

இப்போ எமக்கு எவ்வளவு நட்டம்.....??

 

ஒருமுறை அண்ணரின் மகன் கடையில் நின்றான்

இவ்வாறு நடந்தது

ஆனால் தான் ஏமாறியது போல் தெரியவில்லை

ஆனால் முடிவாகத்தெரியவுமில்லை என்றான்..

சரி

இன்னொருநாள் வருவார் தானே என காத்திருந்தோம்

நாங்கள் 3 பேர் நிற்கும் போது வந்தார்கள்

மகன் எம்மை உசார்ப்படுத்தினான்

இவனாகத்தான் இருக்கவேண்டும் என..

கதவடியில் அண்ணரின் மகனும்

அவருக்கு பக்கத்தில் நானும்

கல்லாப்பட்டியில் மற்றவருமாக ஆயுத்தமானோம்

தொடங்கினார்

50 ஐக்கொடுத்து

45 வாங்கி 

மீண்டும் சில்லறை தேடும் போது

45 யை உள்ளே வைத்தார்

5 ஈரோவைக்கொடுத்து எனது 50 ஐ தா என்றார்

நான் கல்லாப்பட்டியில் உள்ளவரிடம் சொன்னேன்

50 ஐ  கொடு

45ஐ கேள் என...

அது எனது 50 என்றவர்  

50 ஐ  புடுங்கிக்கொண்டு ஓட ஆயுத்தமானார்...

மேசையில் கையூன்றி எழும்பி நெஞ்சில் காலால் ஒரு உதை..

வெளியில் நின்றவர் எட்டிப்பார்க்க

அவருக்கு மூஞ்சியில ஒன்றுவிழ

ஓடிட்டார்

 

இவருக்கு வெளி  இரும்புக்கதவை சாத்திவிட்டு

ஆறுதலாக வெளிக்காயம் வராதபடி பாடம் எடுக்க

காய்க்கு விளங்கிட்டுது

இவர்கள் இதில டாக்டர் பட்டம் எடுத்தவர்கள் என்று...

3 பேருடைய கால்களையும் மாறிமாறிபிடித்து கும்பிட்டு அழத்தொடங்கிட்டுது..

சூரவேட்டை முடித்து

95 ஈரோக்களையும் புடுங்கிவிட்டு

ஆளை இருவர்  தூக்கிப்பிடித்து வெளியில் விட்டு

இனிமேல் என்ர கடையில இல்லை

இந்த ஏரியாக்கடை எதிலாவது கண்டன் ....

இப்ப  நடந்தது வெறும் சாம்பிள் தான் என அனுப்பி வைத்தது

அதுக்கு பிறகு

அவர் மட்டுமல்ல வேறு ஆட்களும் வாறதில்லை... :rolleyes:

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

கடையின் பொருள் விலை - 200
பீர்பாய்க்கு கொடுத்த மீதிக்காசு.- 800
வெள்ளைக்கார காடு வெட்டி கந்தையாவுக்கு 2´ம் தரம் கொடுத்த, ஒரிஜினல் காசு 1000.
மொத்தம் 2000 பவுண்ட்ஸ் ----> அதே தான்

விளையாட்டுக்கு எண்டாலும் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்ககூடாது என்று பிரார்த்திப்போம்

 

Share this post


Link to post
Share on other sites

பீர்பாய் முதல் குடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 2000

 

காடு வெட்டி திரும்ப கொடுத்தது கள்ள நோட்டாக இருந்தால் - 3000

Share this post


Link to post
Share on other sites

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.
அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்
சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம் ... செந்தில் கவுண்டமணி
வாழைப்பழ கணக்கு போல
நீண்டு போகுதே இந்த பிணக்கு

Share this post


Link to post
Share on other sites

காசு காணாமல் போகவேயில்லை.... :D

Share this post


Link to post
Share on other sites

200 யூரோ பொருளுக்குக் காசு முதலில் கல்லாவில் சேர்ந்து விட்டது.

அந்த  200 ஐயும்  சேர்த்து இன்னும் 800 உடன் 1000 ஐக் கொடுத்தால்

சுமேரியருக்கு 1000 மட்டும் தானே நஸ்டம். :(:lol:

 

வெள்ளைக்கார துரையிடம் கள்ள நோட்டு 1000 கொடுத்து மாற்றிய காசு, தான்... அந்த 200

மிகுதி 800 ஐ பாவிப்பயல் கொண்டு போய் விட்டான்.

 

நம்ம வெள்ளைக்கார துரை... அது கள்ள நோட்டுன்னு, லேட்டாக தான் கண்டு பிடித்தார்.

அவருக்கு... இப்ப, நல்ல நோட்டு கொடுத்தே ஆகணும்.

 

மொத்தத்திலை பீர்பாய் கள்ள நோட்டை கொடுத்து..... 200 க்கு பொருளும், 800´ம் கொண்டு போய் விட்டான்.

இப்ப வெள்ளைக்கார துரைக்கு, 1000 நல்ல நோட்டு, கொடுத்தே ஆகணும்.

நட்டம்.... 2000 பவுண்ஸ். :D

Share this post


Link to post
Share on other sites

சுமோவின், கல்லா பெட்டிக்குள் காசு இருந்து....
அதனை அவ, நேரடியாக மாற்றிக் கொடுத்திருந்தால் மட்டுமே.... 1000 நட்டம்.
இப்ப, வெள்ளைக்காரனுக்கும் சேர்த்து...1000 கொடுக்க வேண்டி வந்திட்டுது. :lol:

Share this post


Link to post
Share on other sites

ஐயோ சிரிச்சே வயிறு நொந்து போச்சு விஷ்வா.

 

கணக்கு சரியாத்தானே போட்டேன். :unsure: அங்க போட்டதுக்கு இங்க ........ இருந்தாலும் உங்கள் குறும்புத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை. :D:lol::icon_idea:

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.